Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள்

Featured Replies

வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள்

வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ்  இளைஞரின் சடலம் மீட்பு…

Kili-body2.jpg?resize=800%2C600

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில்  காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அதிக வேகத்தில் உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் வேககட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் விழுந்து இறந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Kili-body.jpg?resize=800%2C600Kili-body1.jpg?resize=800%2C600  Kili-body3.jpg?resize=800%2C600Kili-body4.jpg?resize=800%2C600Kili-body5.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/61532/

வடக்கில், கிழக்கில் கட்டுப்பாடற்ற வேகத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை மாதாந்தம் அதிகரித்தே செல்கிறது!

கடந்த 10 நாட்களில் தினமும் குறைந்தது 2 இழப்புகள் வட-கிழக்கில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் இதையும் சிங்கள அரசின் தூண்டுதலாலெயே இளைஞர்கள் வேகமாக பைக் ஓட்டுகின்றார்கள் என்கின்றார்கள்.

11 minutes ago, colomban said:

சிலர் இதையும் சிங்கள அரசின் தூண்டுதலாலெயே இளைஞர்கள் வேகமாக பைக் ஓட்டுகின்றார்கள் என்கின்றார்கள்.

இதில் இறப்பது தமிழர்களும், முஸ்லிம்களுமாக இருப்பதால் உங்கள் கருத்து உண்மையாக இருக்கலாம். அல்லது இரண்டு சமூகமும் கட்டுப்பாடற்ற / பொறுப்பற்ற / ஒழுக்கமற்ற சமூகமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ காவல்த்துறை நவீன வேக கட்டுப்பாட்டு ஒளிப்பதிவு கருவியுடன் அதிக விபத்துக்கள் நடக்கும் பிரதேசங்களில் நின்று வேக கட்டுபாட்டை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும்போது மதிப்பு குடுக்காமால் நம்மவர்கள் விட்ட சேட்டைகள் நினைவுக்கு வருது . இப்ப மாற்றான் ஆட்சியில் நீங்கள் இறப்பது அவனுக்கு பேரானந்தம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சிலர் இதையும் சிங்கள அரசின் தூண்டுதலாலெயே இளைஞர்கள் வேகமாக பைக் ஓட்டுகின்றார்கள் என்கின்றார்கள்.

இதில்  சொறீலங்கா சிங்கள காலல்துறையின் சிவில் சேவை அமைப்புக்களின் இயலாமையும்.. அசிங்கங்களும்.. ஊழல்களும்.. லஞ்சங்களும்.. மாற்றாந்தாய் மனப்பான்மையும் செல்வாக்குச் செய்யவே செய்கின்றன.

ஒரு சம்பவம்.. விபத்தாகலாம். அதுவே தொடர் நிகழ்வு என்றால்.. அது விபத்தல்ல.. திட்டமிட்டு.. நிகழ அனுமதிக்கப்படுகிறது என்று பொருளாகும்.

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பணம்.. இளைஞர்களுக்கு வேகத்தின் விளைவுகளை வலியுறுத்திப் புரிய வைக்க முடியாத சொறீலங்காவின் போக்குவரத்துக் கல்வியின் பலவீனம்.. மேலும் வேகக் கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றதை வீதிகளில் அமுல்படுத்த முடியாத சொறீலங்காவின் காவல்துறை.. மற்றும் எம் சமூகத்தின் தற்கால இளைய சமூகம் மீதான அக்கறையின்மைகள்..

எல்லாம் கூட்டாக இந்தப் பலியிடல்களுக்கு காரணமாகின்றன. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியும் சொல்லலாம் இப்படியும் சொல்லலாம்....புலம் பெயர்ந்தவர்கள் பணம் அனுப்புவதால் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் வாங்கி ஒடுகிறார்கள் என்று:rolleyes:

2 hours ago, colomban said:

சிலர் இதையும் சிங்கள அரசின் தூண்டுதலாலெயே இளைஞர்கள் வேகமாக பைக் ஓட்டுகின்றார்கள் என்கின்றார்கள்.

 

  • தொடங்கியவர்

வீதி விபத்துகளை தடுக்க மாற்று நடவடிக்கை?

 

 

 

நாட்டில் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒரு விதத்தில் வாகனச் சாரதிகள் போக்குவரத்து விதிகளை ஒழுங்காகப் பின்பற்றத் தவறுவதாகவும், பெரும்பாலானோர் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்துப் பொலிஸ பிரிவு இதனைக் கட்டுப்படுத்த சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் வாகன விபத்துக்களால் ஏற்பட்ட மரணங்கள் முன்னைய வருடங்களை விடவும் கூடுதலானதாகும். இதற்கு பிரதான காரணம் நாட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரித்திருப்பது காரணமானாலும் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்றொரு காரணமாகும். முக்கியமாக முச்சக்கரவண்டிகளும், மோட்டார் சைக்கிள்களை பாவிப்போருமே கூடுதலாக போக்குவரத்து விதிகளை மீறுவோராக காணப்படுகின்றனர்.

பொலிஸார் அத்தகையவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுத்தபோதிலும் மீண்டும், மீண்டும் அதே தவறை செய்பவர்களாகவே இருக்கின்றனர். அன்று 100 ரூபா அபராதம் செலுத்தப்படும்போது காணப்பட்ட நிலை இன்று அபராதத் தொகை ரூபா ஆயிரத்தைத் தாண்டிய நிலையிலும் தவறு அதே அளவு நடந்துகொண்டே இருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டிய அவசியமும், அவசரமும் இன்று ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டில் வாகன விபத்துக்களால் நாளாந்தம் குறைந்தது 10 மரணங்கள் சம்பவிப்பதாக பொலிஸ் அறிக்கைகள் மூலம் தெரிய வருவதாகத் தெரிவித்திருக்கும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஆட்டத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாதெனக் குறிப்பிட்டிருக்கிறார். வாகனச் சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு மாதகால பயிற்சி செயலமர்வொன்றுக்கு கட்டாயப்படுத்தப்படவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் சாகலவின் இந்த யோசனை வரவேற்கப்படவேண்டியதொன்றாகவே நோக்கவேண்டும். ஏனெனில் பிரதான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது. போக்குவரத்து ஒழுங்கு விதிகளை பேணுவதில் வாகன ஓட்டுனர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். கூடுதலான விபத்துக்களுக்குக் காரணமாக வாகனத்தை செலுத்திக்கொண்டே மொபைல் போன்களில் பேசிக்கொண்டு செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஏலவே பொலிஸார் இப்படி கைத்தொலைபேசியை பாவித்தவாறு வாகனம் செலுத்துவதை தடை செய்துள்ளபோதிலும் அதனை மக்கள் பேணுவதாக தெரியவில்லையென கண்டறியப்பட்டுள்ளது.

வீதிகளில் வாகனம் செலுத்துவோர் போக்குவரத்து ஒழுக்க விதிகளை சரியான முறையில் கடைப்பிடித்தால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும். அல்லது குறைத்துக்கொள்ளவாவது முடியும். இந்த நிலையில் விபத்துக்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு புதிய நடைமுறையொன்று கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. மனித உயிர்கள் பறிக்கப்படக்கூடிய விபத்துக்கள் ஏற்படுமிடத்து சாரதிக்குரிய அல்லது அந்த வாகனத்தைச் செலுத்தியவரது சாரதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுவதோடு எதிர்காலத்தில் அவருக்கு எந்த விதத்திலும் மற்றொரு அனுமதிப்பத்திரம் வழங்கப்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோர் மீதான நடவடிக்கை மேலும் பலப்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க போக்குவரத்துப் பொலிஸாருக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற முதலுதவி வேலைத் திட்டத்தின்போது தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்டமாக கொழும்பு பிரதான வீதிகளிலும் சுற்றுப்புற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களில் ஒழுங்குவிதிகளை மீறுவோர் மீது புதியமுறையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவர்களுக்குரிய தண்டச் சீட்டு அல்லது அபராதச் சீட்டு அவர்களது வீடுகளுக்கே அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும்போது அதனை நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டு பிடிக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட சாரதி அல்லது வாகன உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு அவரது புகைப்படத்துடன் கூடியதாக தண்டச் சீட்டு அவர்களது முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் முடிந்தளவு வாகன விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க சட்டம் ஒழுங்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் வரவேற்கக் கூடியதே. ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் அல்லது சாதகமாக அமையும் என்பதை ஆராய்ந்துபார்க்க வேண்டியது முக்கியமானதாகும்.

எவ்வாறாவது வீதி விபத்துக்களையும், அதனால் ஏற்படக்கூடிய மரணங்களையும் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு எந்த வழியிலாவது தீர்வு தேடப்படவேண்டியது மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. 

http://www.thinakaran.lk/2018/01/13/ஆசிரியர்-தலைப்பு/22069/வீதி-விபத்துகளை-தடுக்க-மாற்று-நடவடிக்கை

போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை இங்­குள்ள வாகனச் சார­தி­கள் அறவே மதிப்­ப­தில்லை. அத­னா­லேயே அதிக வாகன விபத்­துக்­க­ளும் உயி­ரி­ழப்­புக்­க­ளும் ஏற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

இங்­குள்ள வாக­னச் சார­தி­கள் உயி­ரி­ழப்­புக்­களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பொறுப்­பற்ற வித­மாக வாக­னங்­க­ளைச் செலுத்­து­கின்­ற­னர். அவர்­கள் விபத்­துக்­குள்­ளாகி தங்­கள் உயிர்­க­ளை­யும் மற்­றை­ய­வர்­க­ளின் உயிர்­க­ளை­யும் எடுக்­கின்­ற­னர்.

 
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்களும் அவர்கள் ஓட்டும் இரு சக்கர வாகனங்களும் ஒருவர் பேச்சும் கேட்காது,

அவர்கள் வயசும் வைத்திருக்கும் பைக்குகளினதும் வேகமும் அப்படி!

இருபதுகளில் எம்மில் எத்தனைபேர் சைக்கிளைகூட மெதுவாக ஓட்டியிருக்கிறோம்?

கிழமைக்கு ஒரு காயம் முழங்காலில் பரிசுப்பொருளாக வாங்கியிருக்கிறோம்!

தாயகத்தில் இருந்த காலத்தில் கையில் ஒரு இரவல் பைக் கிடைத்தாலே என்ன முறுக்கு முறுக்கியிருக்கிறோம் என்பது நினைவுக்கு வருகிறது.

இதற்கு அரசையும்,காவல்துறையையும்,சட்டங்களையும் குற்றம் சொல்லி பயன் இல்லை.

அம்மா அப்பாவின் சொல்பேச்சே கேட்காத வயசு அரசாங்கத்தின் பேச்சை கேட்குமா?

வாழ்க்கையை நினைச்சு பயம் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும் அந்த பக்குவமுள்ள யாராவது புத்திமதி சொன்னால், போடா பழசு என்று சொல்லிவிட்டு அதே மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை எடுத்து செல்வார்கள்!

வடக்கின் பல பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் செல்பவர்கள் அதிகம். அதை சிங்கள காவல்துறை பெரிதாக கண்டுகொள்வதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

இதற்கு அரசையும்,காவல்துறையையும்,சட்டங்களையும் குற்றம் சொல்லி பயன் இல்லை.

அம்மா அப்பாவின் சொல்பேச்சே கேட்காத வயசு அரசாங்கத்தின் பேச்சை கேட்குமா?

வெளிநாடுகளிலும் இளவயது பொடியள் நீங்கள் சொல்வது போல் ஆக்கும் :22_stuck_out_tongue_winking_eye:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வெளிநாடுகளிலும் இளவயது பொடியள் நீங்கள் சொல்வது போல் ஆக்கும் :22_stuck_out_tongue_winking_eye:

வெளிநாடுகளில் ‘திருப்பி அனுப்பிபோடுவாங்கள்’ என்ற பயமே எம்மவர்களை திருத்தி வைத்திருக்கிறது, மற்றும்படி அனைத்துநாடுகளிலும் மிகவும் இளவயதில் இருப்பவர்களில் பப்,பார் கிளப்களில் சண்டை ,பியர் போத்திலால் அடிச்சு மண்டை உடைக்கிறது ,பைக்,கார் ரேஸ்,பெண்ணுக்காக சண்டை ,கத்திக்குத்து,வெட்டு ,கஞ்சா என்று அட்டகாசங்கள் சாதாரணமாகவே நடப்பதுதான்! வெளிநாடுகளில் காரில் நீங்கள்போய் கொண்டிருக்கும்போது பைக்கில் இருபக்கமும் அதிவேகமாக வந்து   X வடிவில் கடந்து செல்வார்கள், அந்த அனுபவம் அவர்களுக்கு த்றில், காரில் போறவங்களுக்கு கலக்கும் ஒரு நிமிஷம்! சிறிது தூரம் பயணம் செய்தபின் பார்த்தால் கழுத்து முறிந்து செத்துபோய் கிடப்பார்கள், அதுவும் சம்மர் நேரம் தினமும் ஒரு அகாலமரணம் பார்க்கலாம்!  இதெல்லாம் எல்லாம் வல்ல எங்கள் பெருமாளுக்கு தெரியாத விஷயமல்ல<_<

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

வாழ்க்கையை நினைச்சு பயம் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும் அந்த பக்குவமுள்ள யாராவது புத்திமதி சொன்னால், போடா பழசு என்று சொல்லிவிட்டு அதே மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கை எடுத்து செல்வார்கள்!

அனுபவம் தடுத்துக்கொண்டே இருக்கும். இளமை அதை முறியடித்துக்கொண்டே இருக்கும். பின்னாளில் தெரியும் அருமை. ஒரு  பழமொழி "முற்றிய நெற்கனியும்  மூத்தோர் பேச்சும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்." 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பணம்.. இளைஞர்களுக்கு வேகத்தின் விளைவுகளை வலியுறுத்திப் புரிய வைக்க முடியாத சொறீலங்காவின் போக்குவரத்துக் கல்வியின் பலவீனம்.. மேலும் வேகக் கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றதை வீதிகளில் அமுல்படுத்த முடியாத சொறீலங்காவின் காவல்துறை..

வேக கட்டுப்பாட்டை மீறி ஓடும் வாகனங்களை கைப்பற்றி, அவற்றை காவல் துறையினருக்கு மலிவு விலையில் அரசு கொடுத்தால் அல்லது இலவசமாக கொடுத்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு வரக்கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

வேக கட்டுப்பாட்டை மீறி ஓடும் வாகனங்களை கைப்பற்றி, அவற்றை காவல் துறையினருக்கு மலிவு விலையில் அரசு கொடுத்தால் அல்லது இலவசமாக கொடுத்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு வரக்கூடும். 

இப்படி எழுத உங்களால் தான் முடியும்.

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பணம்...........100% உண்மை

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, போல் said:

வடக்கின் பல பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் உந்துருளியில் செல்பவர்கள் அதிகம். அதை சிங்கள காவல்துறை பெரிதாக கண்டுகொள்வதில்லை! 

அவனுகள் பிடிச்சால் சிங்கள ராணுவம் தமிழர்களை குறிவைத்து காசு பறிக்கிறது என்பீர்கள் அதையே அவர்கள் கண்டு கொள்ள வில்லையாயின் சிங்கள காவல் துறை யின் என்பீர்களனுங்களுக்கு மட்டும் எப்படித்தான் சிந்திக்க தோன்றுகிறதே சிங்களவனும் இல்லாட்டாம் உங்களுக்கு கடும்கஸ்ரம் போல் இருக்கே 

 

1 hour ago, Quintes said:

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பணம்...........100% உண்மை

இந்த பைக் சுமார் 5 லட்சம் என நினைக்கிறன் லீசிங்கிற்கு வேற காசு இதை விட இன்னும் வேகம்கூடியத  இறக்கிறார்கள் சுமார் 9 லட்சம் ரூபா அகன்ற டயர் அதிக சத்தம் கொண்டது  ககொண்டா, யமகா எடுத்தவர்களின் பிள்ளைக்ளை பார்த்தால் கொஞ்சம் பெரிய இடம் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Quintes said:

இதில்.. புலம்பெயர் தமிழர்களின் பணம்...........100% உண்மை

புலம்பெயர் தமிழர்களின் பணம் இல்லையென்றால் வேகமாகவும் ஓட்டமாட்டார்கள் விபத்தும் ஏற்படாது, யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளே வந்திருக்காது இல்லையா?  யாழ்களத்தில் புகுந்து முதல் கருத்திலேயே மாறுபட்ட சிந்தனையுடன் வரும் உங்களை முதல் ஆளாக வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

புலம்பெயர் தமிழர்களின் பணம் இல்லையென்றால் வேகமாகவும் ஓட்டமாட்டார்கள் விபத்தும் ஏற்படாது, யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளே வந்திருக்காது இல்லையா?  யாழ்களத்தில் புகுந்து முதல் கருத்திலேயே மாறுபட்ட சிந்தனையுடன் வரும் உங்களை முதல் ஆளாக வரவேற்கிறேன்.

அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கு இன்று இளைய சமுதாயத்தினர் வெளியேற துடிப்பது வெளிநாடுகளுக்கு  சிலரின் வெளிநாட்டு வாழ் உறவுகளின் பணப்புழக்கம் என்பதையும் மறுக்க இயலாது  இருக்கு  ஆனாலும் இல்ல என்று சொல்ல முடியாத மூவ்மென்ற்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

வேக கட்டுப்பாட்டை மீறி ஓடும் வாகனங்களை கைப்பற்றி, அவற்றை காவல் துறையினருக்கு மலிவு விலையில் அரசு கொடுத்தால் அல்லது இலவசமாக கொடுத்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு வரக்கூடும். 

பறிச்சு சொறிலங்கா காவல்துறைக்கு கொடுக்க வேண்டியதில்லை. பாடசாலைகளுக்கு.. இதர சமூக ஸ்தாபனங்களிடம் கையளிக்கலாம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் இருப்பது போல் "புள்ளி முறை" கொண்டு வரப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, MEERA said:

வெளிநாடுகளில் இருப்பது போல் "புள்ளி முறை" கொண்டு வரப்பட வேண்டும்.

அதுக்கு இன்னும் நூறுவருசம் தேள்வை..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

போரின்   பின்னான ஒரு தேசத்தில்

இவ்வாறான தவறுகளும் சட்ட மீறல்களும் 

வீரம் காட்டுதலும்  தவிர்க்கப்படணும்  என்றால்

சட்டமும் நீதித்துறையும் அரசும் 

பொறுப்புடனும்  சார்பற்றதாகவும் நடக்கணும்

அது  சிறீலங்காவில்  என்றைக்குமே வரப்போவதில்லை

மேலும்   பெறுமதி தெரியாத அதிக  அளவு நுளையும்  பணமும்  

இதற்கு  தூண்டுதலாக அமையும்

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

வெளிநாடுகளில் இருப்பது போல் "புள்ளி முறை" கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது தற்காலிக தடை வழங்கப்படுகிரது குடித்தால் 6 மாதம் வாகனம்  ஓட்டத்தடை

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம்,

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காரில் செல்லும் போது மாங்குளம் சந்திக்கு சற்று முன்னதாக (வேகமாக ஓட்டியதற்காக) போக்குவரத்து பொலிஸ் லைட் அடித்து காரை நிற்பாட்டினார்கள்.

" Good morning sir, over speed 101 ( கருவியை காட்டினார்) only highway 100 drive, give license" என்றார். லைசென்சை கொடுத்ததுடன் அவர் முகத்தில் சந்தோசம். வீதியை கடந்து மற்ற பொலிசிடம் லைசென்சை கொடுத்து விட்டு நடு வீதியில் நின்று கையிலிருந்த கருவியை மற்றய வாகனங்களை நோக்கி நீட்டி பிடித்தபடி நின்றார். (என்னை பின் தொடர்ந்த சகலன் " இன்றைக்கும் நாளைக்கும் லீவு, திங்கள் தான் காசு கட்டலாம்,அவங்களுடன் கதையுங்க" என்றபடி வந்தார்)

அவரிடமிருந்து லைசென்சை வாங்கியவர் "தண்டம்" எழுதும் புத்தகத்தை திறந்து அந்த பற்றுசீட்டில் திகதியையும் கையெழுத்தையும் ( பிள்ளையார் சுழி போல) மட்டும் போட்டார். பிறகு என்னை நிமிர்ந்து பார்த்தார்.

அன்று வெள்ளியும் சனியும் விடுமுறை ( முஸ்லிம்களின் பெருநாள்) திங்கள் தான் தபால்நிலையத்திற்கு சென்று தண்டப்பணத்தை கட்டலாம், ஞாயிறு மதியம் விமான பயணம், ரிக்கெட் மாற்ற வேண்டும் திங்கள் கட்டாயம் வேலையில் நிக்கவேண்டும்.

எல்லாவற்றையும் யோசித்து விட்டு " ஒரு சப்போட் தர முடியுமா" என்றேன் ஆங்கிலத்தில்,   " pay fine post office, collect license police station" என்று காவல் நிலையம் இருக்கும் திசையை காட்டி கூறினார். உடன் சகலன் " இன்றைக்கும் நாளைக்கும் லீவு திங்கள் தான் கட்டலாம்" என்றார் அரைகுறை சிங்களத்தில், அவரை தொடர்ந்து நான் "ஹெல்ப் பண்ண முடியுமா" என்றேன்

என்னை பார்த்து (சிறீலங்கா சட்டத்தில் இல்லாத).  "1,000 spot fine give" என்றார். உடனேயே சகலன் 1,000/= கொடுக்க லைசென்ஸ் மீண்டும் எமது கைவசம் ஆனது. 

£ 5 உடன் விடயம் முடிவிற்கு வந்தது, 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.