Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல்

Featured Replies

  • அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல்
 
IMG-20180227-WA0018-480x430.jpg

அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல்

 

 

அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு பதற்ற நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பாக சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அம்பாறை தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.

 

IMG-20180227-WA0002.jpgIMG-20180227-WA0003.jpgIMG-20180227-WA0004.jpgIMG-20180227-WA0005.jpgIMG-20180227-WA0007.jpgIMG-20180227-WA0008.jpgIMG-20180227-WA0009.jpgIMG-20180227-WA0010.jpgIMG-20180227-WA0011.jpgIMG-20180227-WA0012.jpgIMG-20180227-WA0013.jpgIMG-20180227-WA0014.jpgIMG-20180227-WA0015.jpgIMG-20180227-WA0016.jpgIMG-20180227-WA0017.jpgIMG-20180227-WA0018-1.jpg  IMG-20180227-WA0020.jpgIMG-20180227-WA0021.jpg

http://newuthayan.com/story/71767.html

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

இது தொடர்பாக சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அம்பாறை தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.

 

இனிமேலும் கைது செய்யப்படமாற்றார்கள்.....கண்டிக்கப்பட் வேண்டிய செயல்.....

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கண்முண்ணே நடந்த கலவரத்தை வேடிக்கைப் பார்த்த பொலீசார்..!! முஸ்லிம்களுக்கு எதிரான காக்கிகளின் வேடிக்கை பார்ப்பு போராட்டம் தொடர்கிறது

 

அம்பாறையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவத்தின் போது பொலிசார் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

 

 

 

நகரில் பதற்ற நிலை ஆரம்பிக்கும் நேரம் வரை ரோந்து கடமையில் இருந்த பொலிசார் கலவரக்காரர்கள் பேரூந்துகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அணிவகுத்து வந்து வர்த்தக நிலையங்களைத் தாக்கத் தொடங்கியதும் தலைமறைவாகியுள்ளனர்.

 

 

 

அத்துடன் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளான போது அவ்விடத்திலிருந்து பார்வைக்குத் தென்படும் தூரத்தில் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதும் பொலிசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தவிர தடுக்க முற்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

Image result for ampara muslim attacked

 

 

 

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்து அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ராணுவ கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டு இராணுவத்தினரையும் களத்தில் இறக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் கண்டிப்பான உத்தரவு விடுத்துள்ளார். அதன் பின்னரே பொலிசார் களத்தில் இறங்கி பதற்றத்தைத் தணிக்க முயற்சித்துள்ளனர்.

 

Image result for ampara muslim attacked

 

அதற்குள் கலவரக்காரர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையும், வாகனங்களையும் தாக்கி தீயிட்டும், சேதப்படுத்தியும் இருந்தனர். அத்துடன் பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்டு அங்கு தங்கியிருந்தோரும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.

 

Ampara-attack-against-Muslims-2-300x225.

 

சட்டம், ஒழுங்கு அமைச்சை தன் கைவசம் வைத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதுடன், பராமுகமாக இருந்த பொலிசார் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://puttalamtoday.com

“முடியுமானால் அல்லாஹ்வை வந்து காப்பற்றச்சொல்..!! இரண்டு பஸ்களில் வந்த காடையர்கள் சொல்லியே அடித்தார்கள் – அதனை பொலீஸ் குண்டர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

 

அம்பாறை ஜும்மா1f54c.pngபள்ளிவாசல் இனவாதிகளால் நேற்றிரவு தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு மக்களிடம் ஒரு சில பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

த்தாக்குதல் தொடர்பாகா அப்பிரதேச வாசியொருவர் கூறுகையில் அவர்கள் இரண்டு பஸ்களில் வந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் பள்ளிவாசலின் சுற்றுமதிலை தள்ளி உடைத்தார்கள். நாங்கள் பள்ளிவாசலில் தங்கிருந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்த வாகனங்கள்மீதும் எங்கள்மீதும் தாக்கினார்கள். பின்னர் பள்ளிவாசலில் இருந்த சில குர்ஆண்களுக்கு தீ வைத்தார்கள்.

இறுதியில் முடியுமானால் உங்கள் அல்லாஹ்வை காப்பாற்றச்சொல் என்று சவால் விட்டு சென்றுவிட்டார்கள்….

 

மேலும் இப்பகுதியில் மூன்று முஸ்லிம் ஹோட்டல்கள்மீதும் அவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள் . இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள். இதில் அவர்கள் தாக்கும் போது #எங்கடமக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்றுகூறிய நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.

 

1f449.pngஅம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதலின் சேதங்கள். ..

மூன்று உணவகம் ( ஹோட்டல் )

 

பள்ளிவாசலில் தரித்துவைக்கப்பட்ட வாகனங்கள். அம்பாறை பெரிய ஜும்மா பள்ளிவாசல். …

 

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
Varipathanchenai

  • தொடங்கியவர்

அம்பாறை சம்பவம் : பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம்

 

அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். 

1001089_1967496663463025_666430291941759

சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

“சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை - பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்லாட்சி அரசிலும் இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.  

அம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும். வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

28377838_1967496463463045_16329971966220

எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிரான விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் வாழ்வதற்கான - வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இன்று காலை நான் அவருக்கு அனுப்பி வைத்த அவசர கடிதத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம். - என்றார். 

http://www.virakesari.lk/article/31060

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் தெரிந்தும் தெரியாமலும் இனி  மொத்து விழும். பாவம் நீங்கள்.... உதவ தமிழனும் வரமாட்டான்.
சிங்களவனின் கண்ணை உறுத்துமளவிற்கு வளர்ந்தால்  விடுவானா, போதாக்குறைக்கு இனப்பெருக்க வீதம் வேறு 15 % என்று அவன் வயிற்றில் புளியை கரைத்தால் என்னசெய்வான்  இனித்தான் ஆட்டம் சூடுபிடிக்க போகுது 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

மேலும் இப்பகுதியில் மூன்று முஸ்லிம் ஹோட்டல்கள்மீதும் அவர் தாக்கி நாசம் செய்துள்ளார்கள் . இது தொடர்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணை மேட்கொண்டும் வருகின்றார்கள். இதில் அவர்கள் தாக்கும் போது #எங்கடமக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்கு உணவு போட்டா கொடுக்கின்றீர்கள் என்றுகூறிய நிலையில் அவர்கள் தாக்கியதாகவும் கூறினார்.

அட பாவிகளா இது வேறை நடக்குதா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தமிழ் மக்களின் இனவிருத்தியை தடை செய்யும் மருந்தை இவர் உணவில் கலந்ததாலேயே கலவரம் உண்டானதாக கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்படித்தான் தெரிந்தும் தெரியாமலும் இனி  மொத்து விழும். பாவம் நீங்கள்.... உதவ தமிழனும் வரமாட்டான்.

தனக்கு தானே உதவ முடியாத தமிழன் எப்படி மற்றவர்களுக்கு உதவுவான்?

சிங்களவனின் கண்ணை உறுத்துமளவிற்கு வளர்ந்தால்  விடுவானா, போதாக்குறைக்கு இனப்பெருக்க வீதம் வேறு 15 % என்று அவன் வயிற்றில் புளியை கரைத்தால் என்னசெய்வான்  இனித்தான் ஆட்டம் சூடுபிடிக்க போகுது 

எழுபதுகளில் இருந்து இரேண்டாயிரத்து ஒன்பது வரை ஆட்டம் பார்த்து மகிழ்ந்து வேறு சந்தர்ப்பம் இல்லாமல் இருந்த உங்களுக்கு இது கிடைத்து இருக்கிறது. அனுபவியுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

தனக்கு தானே உதவ முடியாத தமிழன் எப்படி மற்றவர்களுக்கு உதவுவான்?

எழுபதுகளில் இருந்து இரேண்டாயிரத்து ஒன்பது வரை ஆட்டம் பார்த்து மகிழ்ந்து வேறு சந்தர்ப்பம் இல்லாமல் இருந்த உங்களுக்கு இது கிடைத்து இருக்கிறது. அனுபவியுங்கள்.

 

 

ஓ அப்படியா ...வெளிநாடுகளில் இருந்து எழுதாமல் இங்கே வந்து உங்களின் முஸ்லிம் சகோதர்களுக்கு உதவலாமே, ஒரு முன்னுதாரணமாக சிங்களவர்களின் அராஜகத்தை கண்டித்து நீங்கள் ஒரு  போராட்டத்தையும் உங்கள் தலைமையில் முன்னெடுக்கலாம். அதற்க்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக தமிழர்கள் வீதியில் இறங்கினர் என்று ஒரு பஞ்ச் டயலாக்கையும் போட்டு சிங்களவனின் கையால் மீண்டும் தர்ம அடி வாங்கலாம் 
எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ...என்ன வருகிறீர்களா ...?

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழர்களும், தமிழ் அரசியல்கட்சிகளும் வடக்கு கிழக்கை இணைக்க முயற்சி செய்து முஸ்லீம்களுக்கு தீங்கு விளைவிக்கப்பார்க்கிறார்கள், உயிரே போனாலும் சிங்களவர்களையும் எங்களையும் பிரிக்கும் சதிக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்ற ரீதியில் கூவிய, முஸ்லீம் அரசியல்வாதிகளின் இந்த சம்பவம் பற்றிய கருத்தை அறிய ஆவல்!

கால்நூற்றாண்டுக்கு முன்னான வடக்கிலிருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றம் என்ற ஒன்றை வைத்து  இன்றுவரை ,தமிழர்களால் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பில்லை என்று,உலகநாடுகளிலும்,உள்ளூரிலும் கூறிகூறியே வன்மம் வளர்க்கும் இவர்களிடம்,

நேற்று காலி,தம்புள்ள, இன்று அம்பாறை என்று இவர்களை விடாமல் துரத்தும் சிங்களத்துடன் சேர்ந்துவாழும் கொள்கை எந்த அளவிற்கு இனிக்கிறது என்றும் அறிய ஆவல்!

இலங்கைத்தீவிலிருக்கும் அத்தனை முசுலிம்களும் (தென் இலங்கையில் இருந்து கொண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு ஆதரவு தெரிவித்த கூட்டங்கள் அடங்கலாக) சிறிலங்கா தமக்குப் பாதுகாப்பில்லை என மாவனல்லயில நிகழ்ந்த நிகழ்வுக்குப் பின்னர் உணாரத்தலைப்பட்டதால் தென் தமிழீழத்தை வல்வளைப்புச் செய்து அதனை தனி முசுலிம் அலகாக்கி தமக்கான பாதுகாப்பு அரணை அம்பாறையை நடுவமாக வைத்துச் செயற்பட முனைந்துவருகிறார்கள்.

முசுலிம்களின் மத அடிப்படைவாதச் சிந்தனை தமிழ்த்தேசியமாக அவர்கள் இணைவதைத் தடுகின்றது. தமிழர்களின் இந்துத்துவ மடைமையும் மெய்யான தமிழ்த்தேசியத்தை பன்முக சிந்தனைத் தளத்துடன் கட்டியமைப்பதில் தடையாகவுள்ளது. முசுலிம்கள் சிந்திக்க வேண்டிய காலம்

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத  சிங்களவர்கள் சிறுபான்மை இனத்தை தலை தூக்க விடமாட்டார்கள் என்பதற்கு இத்தாக்குதலும் ஒரு உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்குரணை  செய்திகள் என்ன சொல்ல போகிறார்கள்   என அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்படித்தான் தெரிந்தும் தெரியாமலும் இனி  மொத்து விழும். பாவம் நீங்கள்.... உதவ தமிழனும் வரமாட்டான்.

ஏதோ அவர்கள் தமிழனின் உதவியில் தங்கி இருப்பது போல நீங்கள் தான் எழுதினீர்கள். 

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓ அப்படியா ...வெளிநாடுகளில் இருந்து எழுதாமல் இங்கே வந்து உங்களின் முஸ்லிம் சகோதர்களுக்கு உதவலாமே, 

உங்களுக்கு முஸ்லிம்கள் சகோதரமா? அதனாலா அவர்கள் உங்கள் உதவியில் தங்கி இருப்பதாக நினைத்தீர்கள்?

உங்கள் சகோதரங்கள் எல்லாம் எனக்கு எப்படி சகோதரங்கள் ஆகும்?  நாங்கள் வெளிநாடுகளில் இருப்பதே உங்கள் சகோதர சண்டையில் மாட்டுப் படாமல் இருக்க தானே?

  • தொடங்கியவர்

சம்பந்தப்பட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்: அமைச்சரவை கூட்டத்தில் ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்தல்

01-bb3cbed23522af20a3c967d71bf42af486570398.jpg

 

(ஆர்.யசி)

அம்பாறையில் இனவாத வன் முறையில் ஈடுபட்டவர்களை உடன டியாக கைதுசெய்து, இறுக்கமான சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அமைச்சரவையில் காரசாரமாக தெரிவித்துள்ளனர்.   

நாடு முழுவதும் இனக்கலவரத்தை உருவாக்கும் பின்னணியில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சம்பவமெனவும், முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்கட்டியுள்ளனர்.

அம்பாறை பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையம் ஆகியன தாக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கூடிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில்

நள்ளிரவு நேரத்தில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் தீவைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு கலவரங்கள் நடைபெற்று முடியும் வரையில் பொலிஸார் தலையிடாமல் இருந்தது ஏன். இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். உளவுப்பிரிவுக்கு தெரியாமல் இந்த விடயங்கள் நடந்திருக்காது. ஆனால், உளவுப்பிரிவும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்த தவறியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைதுசெய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்படுபவர்கள் மீது பிணை வழங்குவதில் இறுக்கமான நிலைப்பாட்டைக்கொண்டுள்ள "சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை" (International Convention Civil and Political Rights) சட்டத்தின் கீழ், உயர் நீதிமன்றத்தில் ஏ தர வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று அம்பாறையிலுள்ள முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரை உணவில் கலந்துகொடுப்பதாக குற்றம்சாட்டி, வற்புறுத்தி, தாக்கி துன்புறுத்தி நிர்ப்பந்திருப்பது காணொளி மூலம் தெரியவருகிறது.

அத்துடன் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி தங்களது வஞ்சகங்களை தீர்த்துள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். நாடு முழுவதும் இனக்கலவரத்தை உருவாக்கும் பின்னணியும் இதில் இருக்கிறது. தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், வர்த்தக நிலையம் போன்றவை அரச செலவில் புனரமைக்கப்பட வேண்டும். அத்துடன் எரியூட்டப்பட்ட வாகனங்களுக்கும் நஷ்டயீடு வழங்கப்படவேண்டும். அமைச்சர் சுவாமிநாதன் இழப்பீட்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து பெற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கி அரச செலவில் இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பவேண்டும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் வலியுறுத்தினார்.

அதேபோல் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சம்பவம் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் காரசாரமாக கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிடுகையில்

அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இது ஒரு திட்டமிட்ட முஸ்லிம்களுக்கெதிரான சதி நடவடிக்கையென்பது தெளிவாக தெரிகின்றது. பொலிசார் நினைத்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம், அவர்கள் அசமந்தப் போக்குடனேயே இருந்துள்ளனர். அத்துடன் அவர்கள் முன்னிலையிலேயே மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன . இவ்வாறன சம்பவங்கள் மூலமாக இனவாதிகள் மீண்டும் எதனையோ இலக்காகக் கொண்டு இந்தக் காரியத்தை தொடங்கியுள்ளனர். இதனை அவர்கள் ஆரம்பமாகவே கருதிச் செயற்பட்டுள்ளனர் என்று சந்தேகம் எழுகின்றது. சேதத்திற்குள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல், அதனோடு ஒட்டியிருந்த கடைகள் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதேபோல் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என அவர் அமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமரிடம் வலியுறுத்தினார்.

அம்­பாறை தாக்­குதல் சம்­பவம் குறித்து உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்

 

அமைச்­ச­ர­வையில் விவ­காரம் எழுப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து ஜனா­தி­பதி உறுதி

(நமது நிருபர்)

அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்குதல் நடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்பட்டு உடன் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அம்­பா­றையில் நேற்று முன்­தினம் இரவு பெரும்­பான்­மை­யின குழு­வொன்­றினால் பள்­ளி­வாசல் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­குதல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது.  

சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன், ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­ச­ரான தயா கமகே ஆகியோர் இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் கருத்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

இங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் அம்­பா­றையில் நடை­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்­திற்கு பொலி­ஸாரின் அச­மந்­தப்­போக்கே கார­ண­மாக அமைந்­துள்­ளது. திட்­ட­மிட்­ட­வ­கையில் தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது. பொலிஸ் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு இந்த விடயம் தொடர்பில் முன்­ன­தா­கவே தகவல் கிடைத்­தி­ருக்கும். ஆனால் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. எனவே இத்­த­கைய சம்­ப­வத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இதே­போன்றே அமைச்சர் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோரும் தாக்­குதல் சம்­பவம் குறித்து கண்­டனம் தெரி­வித்­த­துடன் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

200க்கும் மேற்பட்டவர்கள் படையெடுத்து வரும் வரை பொலிஸார் என்ன செய்தனர்? : கேள்வி எழுப்புகிறது தவ்ஹீத் ஜமாஅத்

 

(நமது நிருபர்)

நள்ளிரவு 12 மணிக்கு நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் களிலும் ஒரு பஸ் வண்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படை யெடுத்து வரும் வரை இலங்கை காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவம் நடந்த இடத்திற்கும் அம்பாறை பொலிஸுக்கும் இடையில் தொலைவு சுமார் 500 மீட்டர் மாத்திரம் இருக்கும் நிலையில் எல்லா அடாவடித்தனங்களும் அரங்கேற்றப் பட்டு முடிந்த பின்னர் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் அங்கே வருகை தந்துள்ளனர் என்று தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ஙளதாவது

அம்பாறை நகரில் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட வர்த்தக நிலையங்கள் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டு வீதியில் கிடந்த பல வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அம்பாறை நகரில் உள்ள முஸ்லிம் உணவகம் ஒன்றில் உணவருந்த வந்த பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தகராறை தொடர்ந்து ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் குழுமி வந்த சிலர் பள்ளிவாசல் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த பல வாகனங்களுக்கும் கடைகளுக்கும் தாக்கி சென்றுள்ளனர். தீ வைத்து எரித்துள்ளனர். முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் திருக்குர்ஆன் பிரதிகளையும் தீ வைத்துக் கொழுத்தி முடிந்தால் உங்கள் அல்லாஹ்வை வந்து காப்பாற்றச் சொல் என்று கடும் இனவாத்த்தை கக்கிச் சென்றுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளருடன் நடந்த தகராறு அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலை தாக்கும் அளவிற்கு ஏன் சென்றது? குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அளவிற்கு ஏன் சென்றது? ஹோட்டல் பிரச்சனையை ஹோட்டலுடன் நிறுத்திக் கொள்ளாமல் அப்பகுதியைச் சேர்ந்த அனைவர் மீதும் அனைத்தும் மீதும் தாக்குதல் நடத்தும் அளவிற்கு ஏன் சென்றது? ஹோட்டல் உரிமையாளர் குற்றவாளியாகவே இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர பிரச்சனை இந்த அளவு விசாலமாக்குவதற்கு எந்த தேவையுமில்லை. இது தெளிவான இனவாதமேயாகும். இவ்வாறு தான் எல்லா இனவாத தாக்குதல்களுக்கும் ஏதோ ஒன்றை காரணமாக்கி அளுத்கமை, கின்தொட்டை, அம்பாறை என பட்டியல் நீடிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஹோட்டல் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனையும் அடிப்படையற்ற ஒரு பிரச்சனயாகும். உணவில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தும் சிலர் கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் தேடியுள்ளனர். சாப்பிடும் உணவில் மருந்து மாத்திரை மூலமோ, உள்ளாடைகளில் ஜெல்களை பயன்படுத்துவதன் மூலமோ வேறு விதமான வழிகளின் மூலமோ இவ்வாறு கருத்தடை ஏற்படுத்த முடியாது என்று பேராதனை பல்கலைக்கழக விசேட குழந்தை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆரியசேன யூ. கமகே பகிரங்கமாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிளும் தெளிவாக அறிவித்துள்ளார்.

 எனவே உணவில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி சிங்கள பெரும்பான்மை மக்களை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது பொய்யான அடிப்படையில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். இப்பிரச்சனையை கிளப்பி முஸ்லிம்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பதும் குறித்த சம்பவம் தெள்ளத் தெளிவாக நிரூபித்து காட்டியுள்ளது.

அடுத்ததாக, நள்ளிரவு 12 மணிக்கு நூற்றுக் கணக்கான மோட்டார் சைக்கிள்களிலும் ஒரு பஸ் வண்டியிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படையெடுத்து வரும் வரை இலங்கை காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவம் நடந்த இடத்திற்கும் அம்பாறை பொலிஸுக்கும் இடையில் தொலைவு சுமார் 500 மீட்டர் மாத்திரம் இருக்கும் நிலையில் எல்லா அடாவடித்தனங்களும் அரங்கேற்றப் பட்டு முடிந்த பின்னர் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் அங்கே வருகை தந்துள்ளனர்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக நேற்று முன்தினம் தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரீபால சிரிசேன பதவியேற்றுள்ளார்கள். இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடத்துள்ளதை நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இருவரும் கண்டிக்க வேண்டும் என்றும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.

இது போன்ற இனவாத தாக்குதல்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு ஏற்பாடுகள் செய்தாலும் அதற்கான நிரந்தர தீர்வு முறைப்படி எடுக்காத காரணத்தினால் தான் மீண்டும் மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. எனவே நல்லாட்சி அரசு தற்காலிக் தீர்வுகளை நாடாமல் முறையான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும் என்வும் குறித்த சம்பவத்தின் சூத்திர தாரிகளை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் அரசை வலியுறுத்துகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-28#page-1

  • தொடங்கியவர்

அம்பாறையில் இடம்பெற்றது என்ன ? முழுமையான விபரங்கள் இதோ !

 

 

அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது பெரும்­பான்­மை­யின குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­ய­துடன் வாக­னங்­க­ளையும் தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ளனர். இதனால் அம்­பாறை நகர பகு­தியில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளது. 

ampara.jpg

அம்­பாறை - டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் உள்ள ஜும் ஆப்பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் காரி­யா­லயம், தங்­கு­மிடம், அதனை அண்­மித்து அமையப் பெற்­றுள்ள முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று உண­வ­கங்கள், ஒரு பல­ச­ரக்குக் கடை ஆகி­ய­வற்றின் மீதே பெரும்­பான்மை இனக் குழு­வொன்று தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­துடன் அங்­கி­ருந்த முஸ்­லிம்கள் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­ப­வத்­தினால் அம்­பாறை நகரில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு முதல் நேற்று காலை வரை பெரும் பதற்­ற­மான சூழல் நில­வி­ய­துடன், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் மேல­திக பொலிஸ் படை­ய­ணி­யி­னரின் பாது­காப்­புடன் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 எனினும் கல­வரம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­பதால் நேற்றும் முழு­மை­யாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் பாது­காப்பு அம்­பாறை நக­ருக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குறித்த தாக்­குதல் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

' நிலை­மையை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ளோம். தற்­போது பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். தேவை ஏற்­ப­டு­மாயின் இரா­ணு­வத்தை அழைக்­கவும் தயங்­க­மாட்டோம். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

 நடந்­தது என்ன?

நேற்று முன் தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் அம்­பாறை, டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் அமைந்­துள்ள நியூ காசிம் உண­வ­கத்­துக்கு சில பெரும்­பா­ன்மை இன இளை­ஞர்கள் சாப்­பி­டு­வ­தற்­காக சென்­றுள்­ளனர். இதன்­போது அவர்கள் சாப்­பிட கொத்து ரொட்டி, பராட்டா கோரி­யுள்ள நிலையில் அவை தயார் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போது பரி­மா­றப்­பட்ட உணவில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்­தமை தொடர்பில் சுட்­டிக்­காட்டி, கருத்­தடை அல்­லது இன விருத்­தியை தடுக்கும் வண்­ண­மான பதார்த்தம் கொத்து ரொட்­டியில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த இளை­ஞர்கள் குழு கடும் வாக்கு வாதத்தில் ஈடு­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்த குழு­வினர் உண­வ­கத்தின் காசாளர் கதி­ரையில் இருந்த இளை­ஞ­ருடன் இது தொடர்பில் கடும் தொனியில் வாக்கு வாதப்­பட்டு, அவர் பேசு­வதை வீடி­யோவும் எடுத்­துள்­ளனர்.

கருத் தடை மருந்து போட்­டீர்­களா?

இதன்­போது அந்த இளைஞர் குழு, நீங்கள் உண­வுக்கு கருத்­தடை மாத்­திரை போடு­கின்­றீர்கள் தானே என தொடர்ச்­சி­யாக உரத்த குரலில் கேட்­ட­போது அதற்கு காசாளர் முதலில் இல்லை என்றும் பின்னர் அச்­சு­றுத்தும் பாணியில் கேட்­கப்­படும் போது ஆம் எனவும் பதி­ல­ளிக்கும் வீடியோ பதிவு செய்­யப்­பட்டு அது சமூக வலை­த்­த­ளங்­க­ளிலும் பரப்­பப்பட்­டுள்­ளன. எனினும் தன்னை கட்­டா­யப்­ப­டுத்­தியே, சிங்­கள மொழி சரி­யாக தெரி­யாத நிலையில் அந்த வீடி­யோவை அவர்கள் எடுத்­துள்­ள­தாக காசாளர் தரப்­பினர் தெரி­வித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது

பஸ்­ஸிலும், மோட்டார் சைக்­கி­ளிலும் வந்த குழு­வினர்

 இந் நிலையில் நள்­ளி­ரவு 12.00 மணி அளவில் பஸ் வண்­டி­யொன்­றிலும், 50 வரை­யி­லான மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் பெரும்­பா­ன்மை இன குழு­வினர் குறித்த உண­வகம் அமைந்­துள்ள இடத்­துக்கு வந்­துள்­ளனர். அங்கு வந்­த­வர்கள் அரா­ஜ­க­மான முறையில் நடந்­து­கொண்­டுள்­ள­துடன் உண­வகம் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

பள்­ளி­வாசல், முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல்:

இந் நிலையில் அந்த உண­வகம் மீது மட்­டு­மல்­லாமல் அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மேலும் இரு உண­வ­கங்கள், பல­ச­ரக்கு கடை ஆகி­ய­வற்றின் மீதும் தாக்­குதல் நடாத்­தி­யுள்ள அந்த குழு­வினர் அத­னுடன் நிற்­காது பள்­ளி­வாசல் மீதும் அத்து மீறி­யுள்­ளனர்.

முதலில் பள்­ளி­வாசல் மதிலை முற்­றாக உடைந்­தெ­றிந்­துள்ள அவர்கள், பின்னர் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள், ஜன்னல், கத­வு­களை உடைத்­துக்­கொண்டு பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் விளை­வித்­துள்­ள­துடன் அங்­கி­ருந்த புனித அல் குர் ஆன் பிர­திகள் உட்­பட சமய நூல்­களை தீயிட்டு எரித்­துள்­ளனர். அத்­துடன் பள்­ளி­வா­ச­லுடன் இணைந்­த­தாக அமைந்­துள்ள பள்­ளி­வாசல் நிர்­வாக காரி­யா­ல­யத்­தையும் அடித்­து­டைத்து, பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமைந்­துள்ள தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யிருந்­த­வர்கள் மீது தாக்­குதல் நடாத்தி அந்த கட்­டி­டங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது அந்த தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யி­ருந்­த­வர்கள் அங்­கி­ருந்து தப்பி பின்னால் உள்ள காட்­டுப்­ப­கு­திக்கும் ஏனைய பாது­காப்­பான இடங்­க­ளுக்கும் ஓடி தப்­பித்­துக்­கொண்­ட­தாக சம்­ப­வத்­துக்கு முகம் கொடுத்த நபர் ஒருவர் தெரி­வித்தார்.

தாம­த­மாக வந்த பொலிஸார்

இந்த வன்­மு­றைகள் இவ்­வாறு நடந்­தேறும் போது, பள்­ளி­வா­சலில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள்  ஸ்தலத்­திற்கு வர­வில்லை எனவும் அவர்கள் தாக்­கு­தல்­களும் சேதப்­ப­டுத்­தல்­களும் நிறை­வ­டைந்த பின்னர் ஸ்தலத்­திற்கு வந்­த­தா­கவும்  சம்­ப­வத்­துக்கு முகம்­கொ­டுத்த மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

சுமார் 3 நிமி­டங்­களில் சம்­பவ இடத்தை வந்­த­டைய கூடி­ய­தாக இருந்த போதிலும் தாக்­குதல் ஆரம்­பித்து ஒன்­றரை மணி நேரத்தின் பின்­னரே பொலிஸார் ஸ்தலத்­திற்கு வந்­த­தாக அவர்கள் கூறு­கின்­றனர்

இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ர­விடம் வின­விய போது, அது குறித்து கேசரி கேட்கும் வரை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும், அவ்­வா­றான முறைப்­பா­டுகள் இருப்பின் விரி­வான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்றும் அவர் கூறினார்.

சேத­மாக்­கப்­பட்ட வாக­னங்கள்:

இந்த வன்­மு­றை­களின் போது பள்­ளி­வாசல் வளா­கத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த  முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­னது எனக் கூறப்­படும்  வேன், லொறிகள் இரண்டு, 3 மோட்டார் சைக்­கிள்கள் உள்­ளிட்ட வாக­னங்கள் அடித்தும் தீவைத்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் வேனும் மோட்டார் சைக்­கிள்­களும் முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன.

பலப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு கட்­ட­மைப்பும், ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களும்

இந் நிலையில் ஸ்தலத்­திற்கு சென்­றுள்ள பொலிஸார் முதலில் பிர­தே­சத்தின் அமை­தியை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.  இதன்­போது பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் சம்­பவ இடத்­துக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர். நகரப் பகுதி முற்று முழு­தாக விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினமே வாக்கு மூலங்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்த பொலிஸார், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­க­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அம்­பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே.வெத­சிங்­கவின் மேற்­பார்­வையில் அம்­பாறை பொலிஸ் அத்­தி­யட்­சகர்  சமந்த டீ விஜே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசேட விசா­ர­ணைகளை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்த விசா­ர­ணை­களில் அம்­பாறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதி­கா­ரி­களும் அம்­பாறை பொலிஸ் நிலைய அதி­கா­ரி­களும் இணைக்­கப்­பட்­டுள்ள நிலையில், சி.சி.ரி.வி. காணொ­ளி­களை ஆராயும் நட­வ­டிக்­கைகள் நேற்று இரவு முதல் ஆரம்­ப­மா­னது.

ஸ்தலம் விரைந்த முஸ்லிம் பிர­தா­னி­களும் எதிர்ப்பு வெளி­யிட்ட பெரும்­பா­ன்மை மக்­களும்

 இந்த சம்­பவம் தொடர்­பி­லான விப­ரங்கள் பர­விய நிலையில், அம்­பாறை மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்கு நேற்று காலை­யி­லேயே விஜயம் செய்­தனர். விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் உள்­ளிட்டோர் அங்கு சென்று நிலை­மை­களை ஆராய்ந்­தனர்.

பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ், பள்­ளி­வாசல் அருகே சென்ற போது, பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள பாதையில் கூடி­யி­ருந்த பெரும்­பா­ன­்மை­யினர் அவ­ருக்கு பாரிய எதிர்ப்பை வெளி­யிட்­டனர். அங்கு அவர் கருத்துக் கூறக் கூடாது என அவர்கள் கூறி­ய­துடன் அவர் அங்கிருந்து வெளி­யேறும் வரை அங்கு பதற்­ற­மான சூழல் ஒன்­றினை உரு­வாக்கும் வித­மாக கோஷங்­களை எழுப்­பினர்.

சமா­தானக்கூட்டம்

இந் நிலையில் இந்த சம்­பவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று அம்­பாறை மாவட்ட செய­லாளர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. மாவட்ட செய­லாளர் துசித் பீ வணி­க­சூ­ரி­யவின் தலை­மையில், சமா­தான கூட்­ட­மாக இந்த கூட்டம் இடம்­பெற்­றது. எனினும் குறித்த கூட்டம் தொடர்பில் செய்தி சேக­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

 அந்த கூட்­டத்தில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெத­சிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்  சமந்த டி விஜே­சே­கர, பிர­தி­ய­மைச்­சர்­க­ளான ஹரீஸ், பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம்.மன்சூர், நஸீர் உள்­ளிட்­டோ­ருடன் முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்கள் சிலரும் கலந்­து­கொண்­டனர். 

பெரும்­பான்­மை­யினர் தரப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விம­ல­வீர திஸா­நா­யக்க, பிர­தே­சத்தின் பிக்­குகள் உள்­ளிட்டோர் பங்­கேற்­றனர்

சம்­ப­வத்­துக்கு கண்­டிப்பும், சந்­தேக நபர்­களை கைது செய்ய வேண்டாம் என்ற கோரிக்­கையும்

 இதன்­போது கூட்­டத்தில்  கருத்­துக்­களை முன்­வைத்­துள்ள பிக்­குகள், பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தலை வன்­மை­யாக கண்­டித்­துள்­ளனர். எனினும் சம்­பவம் இடம்­பெற்று முடிந்­துள்ள நிலையில் அதனை தொடர இட­ம­ளிக்­காது  அமை­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக எவ­ரையும் கைது செய்­யாது சுமு­க­மாக பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்வோம் என கூறி­யுள்­ளனர்.

 பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் எதிர்ப்பு:

எனினும் இதன்­போது பிர­தி­ய­மைச்சர் ஹரீஸும் ஏனைய முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் பிக்­கு­களின் கோரிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

 இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்று முடிந்­த­வுடன், சுமுக தீர்­வுக்­காக குற்­ற­வா­ளி­களை தப்­பிக்கச் செய்ய முடி­யாது எனவும், உடன் சட்ட நட­வ­டிக்கை அவ­சியம் எனவும், எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தவே கலந்­து­ரை­யா­டல்கள் வேண்டும் எனவும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

 கைது செய்­வ­தாக உறுதி

இதன்­போது, சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டி­யது தமது கடமை என ஒப்­புக்­கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அம்­பாறை நகரில் இருந்து முஸ்­லிம்கள் இடம்­பெ­யர்வு:

அம்­பாறை நகரில் இடம்­பெற்ற இந்த வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக அம்­பாறை நகரில் தங்கி தொழில் செய்­து­வந்­த­வர்­களும் நகர பகு­தியில் வசித்த முஸ்லிம் குடும்­பங்கள் பலவும் அங்­கி­ருந்து தற்­கா­லி­க­மாக பாது­காப்பு கருதி இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நிலைமை கட்­டுப்­ப­ாட­்டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு அமைதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும், எந்த நேரத்­திலும் கல­வரம் ஒன்று ஏற்­பட வாய்ப்­புள்­ள­தா­கவும் அவர் இதன்­போது கூறினார்.

 நிரந்­தர இன­வி­ருத்­தியை தடை செய்ய முடி­யாது;  மருத்­து­வர்கள்:

இதனிடையே,  ஒருவரை நிரந்தரமாக இனவிருத்தியை தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எவ்வித இரசாயனங்களும் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும் உணவு, உடையில் கலந்து கருத்தடை, இன விருத்தி இல்லாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உலகில் இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் ஆரியசேன யூ.கமகே தெரிவித்தார்.

பின்னணி தொடர்பில் சந்தேகிக்கத்தக்க சம்பவம்:

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க சம்பவம் ஒன்று குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஒரு கட்சியால்  பள்ளிவாசல் மதிலில் போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அது ஒரு முஸ்லிம் இளைஞரால் கிழித்தெறி யப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி பள்ளிவாசல் மதில்  உடைக்கப்பட்டதா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/31101

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்றைய சிங்கள பத்திரிகைகள் கொத்து ரொட்டி விவகாரத்தைதான் முதன்மை படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.....இதை பார்க்கும் பொழுது எனக்கு 1977 இனக்கலவரத்தின் பொழுது நடந்த சம்பவம் தான் நினைவில் வருகின்றது.சிங்கள பல்கலைகழக மாண்வர்கள் தாங்களே உடைகளை கிழித்துவிட்டு தமிழர்கள் கிழித்து விட்டார்கள் என அனுராதபுரத்தில் சொன்னார்கள்.....அன்றும் இன்றும் என்றும் அவர்கள் சிறுபான்மையினர் மீது வன்முறையை கையாள்வதற்கு ஒரே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள்...வேறு பிரதேசங்களிலிருந்து சண்டியர்களை கொண்டுவருவது,பொலிசார் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது கலவரங்கள் முடிந்த பின்பு விசாரனை நடத்துவது.....இது ஒரு தொடர்கதை

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டியும் இங்கு முக்கியத்துவம் பெறுவதை காணலாம். முஸ்லீம்கள் கொத்து ரொட்டியினால் அடி வாங்குகின்றார்கள். புலம் பெயர் தமிழர் விழாக்களிலும் கொத்து முக்கியத்துவம் பெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தாளும் தந்திரத்தில் இப்போது சிங்களவர்கள் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்.

இதுவரை காலமும் முதலவாது சிறுபான்மையினரான தமிழரை அடக்க முஸ்லீம்களை அவர்கள் தமிழர்களிடமிருந்து பிரித்தெடுத்தார்கள். அரசியல், பொலீஸ் இராணுவம் என்று சகல துறைகளிலும் அவர்கள் உள்வாங்கப்பட்டார்கள். ஜே. ஆர், பிரேமதாசா, ரணில், சந்திரிக்காவென்று எல்லாச் சிங்களத் தலைவர்களுமே இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். 

ஹமீது, முகம்மத், பெளசி, அஸ்வர், அஷ்ரப், ஹக்கீம், ஹிஸ்பொல்லா, பஷீர் சேகுதாவூத், அதாவுள்ளா, பதுர்தீன் என்று இவர்களின் நீளும் அரசியல் செல்வக்கு தமிழர் மீதான முற்றுமுழ்தான சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிற்குத்துணைபோனது.

இவ்வாறே, நேரடியான இனவழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரச இயந்திரமான ராணுவத்தில் உயர் தரத்தில் பணியாற்றிய பல முஸ்லீம் அதிகாரிகள் தொடர்ச்சியான அடக்குமுறையில் ஈடுபட்டதும் வரலாறு. 1996 ஆம் ஆண்டு புலிகளால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்ட முல்லைத்திவு முகாமில் அகப்பட்டிருந்த இராணுவத்தை மீட்கவென தரையிறங்கிய ராணுவ விசேட கமாண்டோப் பிரிவிற்கு முஸ்லீம் தளபதியொருவரே தலமையேற்றிருந்ததும், இம்மோதலில் சில முஸ்லீம் அதிகாரிகள் கொல்லப்பட்டதும் நினைவிலிருக்கலாம்.

அவ்வாறே, நிலாம்டீன் போன்ற அரச பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரிகளின் தமிழர் மீதான காழ்ப்புணர்வும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இறுதியில், புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்து தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் இறுதி அத்தியாயத்தை எழுதிய நாடகத்தில்கூட ஒரு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் இருந்துள்ளார் என்பது தெரிந்ததே.
 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினங்கள் இரணடையும் பிரித்து மோதவிட்டு, இறுதியில் ஒருதரப்பை முற்றாக ஆக்கிரமித்த பேரினவாதம், இன்று இரண்டாவது சிறுபான்மையினம் மீது கை வைக்கிறது.

வடக்குக் கிழக்கு இணைந்த தாயகம் எனும் தமிழரது கனவை முஸ்லீம்களைக் கொண்டு அன்று சிதைத்த சிங்களம், இன்று முஸ்லீம்களின் இருப்பைக் கேள்வி கேட்கிறது.

தமிழர்களின் இனவழிப்பில் அன்று சிங்களத்திற்குத் துணைபோன முஸ்லீம்கள் இன்று தாம் வளர்த்துவிட்ட சிங்களப் பேரினவாதம் தம்மையே அழிக்கத் துடிப்பது கண்டு கலங்குகிறார்கள்.

களுத்தறை, தெகிவளை, மாவனல்லை, அம்பாறை என்று தொடரும் முஸ்லீம்கள் மீதான சிங்கள வன்முறையென்பது இவற்றுடன் நிற்கப்போவதில்லை. 

சர்வதேச இஸ்லாமியவாதம் எனும் போர்வைக்குள் தம்மைக் காத்துக்கொள்ள முடியும் என்று கனவு கண்டுகொண்டிருந்த இலங்கை முஸ்லீம்களுக்கு பர்மாவின் ரொகிங்கியா முஸ்லீம்களின் அவலம் ஒரு பாடமாக அமையட்டும். 

முற்பகல் விதைத்ததை பிற்பகலில் அறுவடை செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு   என்னநடந்தாலும்  நாம் இதற்குள் போவது நல்லதல்ல

அவர்கள்  எல்லாவற்றையும்   நாளையே  மறந்து  ஒன்றாகி நிற்பார்கள்

நாம்  இதற்கும் சேர்த்து இருபகுதியிடமும்வாங்கிக்கட்டவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ragunathan said:

முற்பகல் விதைத்ததை பிற்பகலில் அறுவடை செய்கிறார்கள். 

காலத்தின் கட்டாயம்.இது கடுகு.இன்னமும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/02/2018 at 12:33 AM, Jude said:

ஏதோ அவர்கள் தமிழனின் உதவியில் தங்கி இருப்பது போல நீங்கள் தான் எழுதினீர்கள். 

உங்களுக்கு முஸ்லிம்கள் சகோதரமா? அதனாலா அவர்கள் உங்கள் உதவியில் தங்கி இருப்பதாக நினைத்தீர்கள்?

உங்கள் சகோதரங்கள் எல்லாம் எனக்கு எப்படி சகோதரங்கள் ஆகும்?  நாங்கள் வெளிநாடுகளில் இருப்பதே உங்கள் சகோதர சண்டையில் மாட்டுப் படாமல் இருக்க தானே?

தமிழன் உதவ வரமாட்டான் என்று நாங்கள் குறிப்பிட்டது எங்கடை கூத்தமைப்பு சட்டாம்பிகளுக்கு முஸ்லீம் அமைச்சர்களுக்கு வலிக்கும் முன் வலித்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம்களுக்கு வால்பிடித்தால் என்ன நடக்கும் என்று கிழக்கு மாகாணம் தெளிவாகவே படிப்பித்திருக்கிறது.

இது தெரியாமல் போய்விட்டதே. இனி இங்குள்ளவர்களுக்கு பாடம் எடுக்காமல் வெளிநாட்டில் எதற்கு இருக்கிறீர்களோ 
அதை செய்வது நல்லது ...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

கொத்து ரொட்டியும் இங்கு முக்கியத்துவம் பெறுவதை காணலாம். முஸ்லீம்கள் கொத்து ரொட்டியினால் அடி வாங்குகின்றார்கள். புலம் பெயர் தமிழர் விழாக்களிலும் கொத்து முக்கியத்துவம் பெறுகின்றது.

கொழும்பான் இன்னுமே விடலைப் பையன்கள் மாதிரியே கருத்து எழுதுகிறார் ..பாவம் பொடியன்.
என்ன வா... நீங்க நல்லா தானே ஈந்திங்க...என்ன ஆச்சு ஒங்களுக்கு ...சொல்லுங்க வா... :11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.