Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி

Featured Replies

முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின்  பிரதானி

(ரொபட் அன்டனி)

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய  உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய  ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே  அவர்களுக்கு   இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து  நான் கவலையடைகின்றேன்.  என்று  கூட்டுப்படைகளின்  பிரதானி  ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். 

ravi.jpg

அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  முயற்சி  எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு   கருத்து  வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல.  எனவே  எமது அனுகுமுறை  வித்தியாசமாக இருக்கும். தற்போது   அவசரகால நிலையின் கீழ்  இந்த விடயத்தில்    தலையிட எமக்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அதன் கீழ் நாங்கள்  குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி  மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாதவகையில்    நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்  வைத்திருப்போம்.    தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே   நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை  கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன்  எமக்கு வழங்கிய  ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம்.  முஸ்லிம் மக்களின்   மொழி அறிவு எமக்கு  பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம் எனவே அவர்களின் நிலைமை தொடர்பில்    நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/31374

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. எங்கள் முன்னோர்கள் இதை இந்த காட்டி கொடுப்பை அழகாக சொல்வார்கள் .............

  • கருத்துக்கள உறவுகள்

இனச் சுத்திகரிப்பு என்று சத்தம் போடுகிற எங்கடை இனமானச் சிங்கங்களுக்கு இது சமர்ப்பணம்........தலைவ்ர்  தவறான முடிவு எட்ப்பவரல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Ahasthiyan said:

அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. எங்கள் முன்னோர்கள் இதை இந்த காட்டி கொடுப்பை அழகாக சொல்வார்கள் .............

4 hours ago, alvayan said:

இனச் சுத்திகரிப்பு என்று சத்தம் போடுகிற எங்கடை இனமானச் சிங்கங்களுக்கு இது சமர்ப்பணம்........தலைவ்ர்  தவறான முடிவு எட்ப்பவரல்ல.....

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

முஸ்லீம் மக்களுக்கு, சிங்களவன் அடிக்கிறான்... என்று கவலைப் படும் தமிழர்களை நாம் என்னவென்று சொல்வது?
நாம் எரியும்... நெருப்பில்,  எண்ணை ஊற்றா  விட்டாலும்.... பார்வையாளர்களாக இருப்பதே சிறந்தது.  
என்றோ... ஒருநாள், அவர்கள் பட்டுத்  தெளிந்தால் தான்... புத்தி வரும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழு முஸ்லிம்களை பாராட்ட இன்னோரு குழு இனவாத பிரச்சாரம் செய்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பாரியளவில் அழிக்கப்பட்டபோது பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த முட்டாள் முஸ்லீம் மக்கள் போல் நாமும் சிந்தித்தால் மீண்டும் எமக்கு இதே மாதிரியான ஒருநடவடிக்கையை பெரும்பான்மை இனம் செய்யாதா? நாங்கள் எதற்காக இப்படி முட்டாள்தனமாக சிந்த்திக்க வேண்டும்? நாம் முஸ்லீம் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்க வேண்டும் அது எமது சுயநலமும்தான்,நாம் பழசை மறக்க முடியாதா? எப்படி எங்களால் இவ்வளவு பாதிக்கப்பட்டபின்பும் மற்றவர்கள் அவலம் புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இன்று  சொல்வதை அன்று எம்தலைவர் அறிந்து வைத்ததால்த்தான் அவர்கள்  செய்யும் துரோகத்தை சொல்லியே  வெளியேற்றம் நடந்தது. அது எங்களுக்குத் தெரியும். இவர் இப்ப இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? அவர்கள் செய்த நன்மையை சிங்களவருக்கு தெரியபடுத்துகிறாரா? அல்லது தமிழர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லுகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

 இவர் இப்ப இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? அவர்கள் செய்த நன்மையை சிங்களவருக்கு தெரியபடுத்துகிறாரா? அல்லது தமிழர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லுகிறாரா?

அதே ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

இவர் இன்று  சொல்வதை அன்று எம்தலைவர் அறிந்து வைத்ததால்த்தான் அவர்கள்  செய்யும் துரோகத்தை சொல்லியே  வெளியேற்றம் நடந்தது. அது எங்களுக்குத் தெரியும். இவர் இப்ப இதைச் சொல்வதன் நோக்கம் என்ன? அவர்கள் செய்த நன்மையை சிங்களவருக்கு தெரியபடுத்துகிறாரா? அல்லது தமிழர்கள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காமல் வேடிக்கை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லுகிறாரா?

oBYW1-Kx_G0cBfWHWN5FbI2hctboGgK9CqPVZ-yqAvK6UdB1qttQz_yIeCq1LGQfvE3Fcg=s85

12 hours ago, vasee said:

தமிழர்கள் பாரியளவில் அழிக்கப்பட்டபோது பட்டாசு கொளுத்தி மகிழ்ந்த முட்டாள் முஸ்லீம் மக்கள் போல் நாமும் சிந்தித்தால் மீண்டும் எமக்கு இதே மாதிரியான ஒருநடவடிக்கையை பெரும்பான்மை இனம் செய்யாதா? நாங்கள் எதற்காக இப்படி முட்டாள்தனமாக சிந்த்திக்க வேண்டும்? நாம் முஸ்லீம் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்க வேண்டும் அது எமது சுயநலமும்தான்,நாம் பழசை மறக்க முடியாதா? எப்படி எங்களால் இவ்வளவு பாதிக்கப்பட்டபின்பும் மற்றவர்கள் அவலம் புரியவில்லை?

எனக்கு தெரிந்து எந்த முஸ்லீம் தலைவர்களும் (றிசாட், ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, காபிர் காசிம்...) முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தமிழர்களுடன்' இணைந்து அல்லது சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து பேரினவாதத்தை முறியடிப்போம் என்று இந்த கலவரங்களின் பின்பும் இதுவரைக்கும் வெளிப்படையாக கூறவில்லை / கூற விரும்பவில்லை.

உலகின் வல்லாதிக்கங்கள் பெரும்பான்மை இனத்துடன் தான் கை கோர்க்கும்; இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அல்ல என்பதை பேரழிவுகுள்ளாகி நாம் கற்ற பாடம். அறம் / தர்மம் /... நீதி என்பன எல்லாம் பலமுள்ள பக்கம் மட்டும் தான் எடுபடும். இதை தான் முஸ்லீம் தலைவர்களும் உணர்ந்து நடக்கின்றனர். உலகம் முழுக்க எத்தனை இஸ்லாமிய நாடுகள் இருப்பினும் ரோஹிங்கியா மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

உலகம் இப்படி இருக்கும் பொது வீணாக நாம் பெரும்பான்மை இனத்துடன் மல்லுக்கட்டி அவர்களுக்கு எதிராக வீர வசனம் பேசி மீண்டும் மீண்டும் அவல வாழ்வை 30 வருட போரால் சிதைக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க போகின்றமா?

நான் அண்மைக்காலங்களில் அதிகமாக 'வணக்கம் தாய் நாடு' மற்றும் 'ஊர் முற்றம்' ஆகிய நிகழ்சிகளை பார்த்து வருகின்றேன். இவற்றில் எம் கிராமங்களதும் சிற்றூர்களதும் இன்றைய நிலையை விவரணங்களாக காட்டுகின்றனர். போர் மிக மோசமாக சப்பி துப்பிய அவல வாழ்வை வாழும் மக்களின் நிலையை காட்டுகின்றனர். எம்மால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்கள் நிறைந்த வாழ்வு அவை. 2009 இன் இப்பதான் இப்படியான சில இடங்களுக்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் சிறு சிறு உதவிகளையும் செயற் திட்டங்களையும் செய்ய தொடங்கியுள்ளனர். மெதுவாக மிக மெதுவாக வாழ்வு அங்கு துளிர் விடுகின்றது. இதை ஏன் கெடுப்பான்.

என் நண்பன் நகு குறிப்பிட்ட மாதிரி நாம் survival mode இல் இருக்க வேண்டியவர்கள். அடிப்படை கட்டுமானம் எல்லாம் சிதைக்கப்பட்டு வாழ்வாதாரம் எல்லாம் அழிக்கப்பட்டு கடை நிலை யில் இருக்கும் எம் பொருளாதாரத்தை மீள கட்டியமைக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள். இந்த நேரத்தில் நாம் எவர் பக்கமும் சாயாமல் சுளித்து வாழ்வது ஒன்று மட்டுமே எம்மை ஓரளவுக்கேனும் தற்காத்து கொள்ளும்.

இந்த உலகம் அறம் எனும் அச்சாணியில் அல்ல பலம் என்ற அச்சாணியில் தான் இயங்குகின்றது.

-------------------

இன்று காலையில் என் முக நூலில் எழுதியது

13 minutes ago, நிழலி said:

உலகின் வல்லாதிக்கங்கள் பெரும்பான்மை இனத்துடன் தான் கை கோர்க்கும்; இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அல்ல என்பதை பேரழிவுகுள்ளாகி நாம் கற்ற பாடம்.

இல்லை நிழலி! "பெரும்பான்மை", "பலம்" என்பதற்கு பதிலாக அவர்களது சுயநலம் தான் முக்கியம் என்பது வரலாறு. உதாரணமாக, ஈராக், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பான்மை இனத்துடன் கைகோர்க்கவில்லை. இன்னும் பலவற்றை கூறலாம்.

மேலும் "மனோ-பலம்", குறிப்பாக "உறுதி" கொண்ட சிறுபான்மை இனம் ஈற்றில் சர்வதேச ஆதரவை பெறுவது சாத்தியம் என்பதுவும் வரலாறு.

"பலமே வாழ்வு, பலவீனமே மரணம்" என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல சகல உயிரினங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்! இதில் பெரும்பான்மை, சிறுபான்மை அவ்வளவு முக்கியத்துவம் அற்றது.

தமிழர் தம் மனோபலத்தை அதிகரித்து, தமது தளம்பலற்ற உறுதியை நிரூபிக்கவேண்டும் என்பது எனது எண்ணம்.

மேலும் நீங்கள் கூறியபடி அறம் / தர்மம் /... நீதி என்பன எல்லாம் கூட மனோ-பலம் பெருகினால் மட்டுமே சாத்தியம் ஆகும். இதில் மாற்றுக் கருத்தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எனக்கு தெரிந்து எந்த முஸ்லீம் தலைவர்களும் (றிசாட், ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, காபிர் காசிம்...) முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தமிழர்களுடன்' இணைந்து அல்லது சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து பேரினவாதத்தை முறியடிப்போம் என்று இந்த கலவரங்களின் பின்பும் இதுவரைக்கும் வெளிப்படையாக கூறவில்லை / கூற விரும்பவில்லை

அப்படி நடக்க சாத்தியம் குறைவு ஆனாலும் முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒருவேளை கூறினால் கொடி பிடிக்கும்  நம்மாட்களின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று நினைத்த போது .................:14_relaxed:

முக்கியமான இருவரும் தெறிச்சு ஓடுவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

எனக்கு தெரிந்து எந்த முஸ்லீம் தலைவர்களும் (றிசாட், ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, காபிர் காசிம்...) முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தமிழர்களுடன்' இணைந்து அல்லது சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து பேரினவாதத்தை முறியடிப்போம் என்று இந்த கலவரங்களின் பின்பும் இதுவரைக்கும் வெளிப்படையாக கூறவில்லை / கூற விரும்பவில்லை.

உலகின் வல்லாதிக்கங்கள் பெரும்பான்மை இனத்துடன் தான் கை கோர்க்கும்; இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அல்ல என்பதை பேரழிவுகுள்ளாகி நாம் கற்ற பாடம். அறம் / தர்மம் /... நீதி என்பன எல்லாம் பலமுள்ள பக்கம் மட்டும் தான் எடுபடும். இதை தான் முஸ்லீம் தலைவர்களும் உணர்ந்து நடக்கின்றனர். உலகம் முழுக்க எத்தனை இஸ்லாமிய நாடுகள் இருப்பினும் ரோஹிங்கியா மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

உலகம் இப்படி இருக்கும் பொது வீணாக நாம் பெரும்பான்மை இனத்துடன் மல்லுக்கட்டி அவர்களுக்கு எதிராக வீர வசனம் பேசி மீண்டும் மீண்டும் அவல வாழ்வை 30 வருட போரால் சிதைக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க போகின்றமா?

நான் அண்மைக்காலங்களில் அதிகமாக 'வணக்கம் தாய் நாடு' மற்றும் 'ஊர் முற்றம்' ஆகிய நிகழ்சிகளை பார்த்து வருகின்றேன். இவற்றில் எம் கிராமங்களதும் சிற்றூர்களதும் இன்றைய நிலையை விவரணங்களாக காட்டுகின்றனர். போர் மிக மோசமாக சப்பி துப்பிய அவல வாழ்வை வாழும் மக்களின் நிலையை காட்டுகின்றனர். எம்மால் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத கஷ்டங்கள் நிறைந்த வாழ்வு அவை. 2009 இன் இப்பதான் இப்படியான சில இடங்களுக்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் சிறு சிறு உதவிகளையும் செயற் திட்டங்களையும் செய்ய தொடங்கியுள்ளனர். மெதுவாக மிக மெதுவாக வாழ்வு அங்கு துளிர் விடுகின்றது. இதை ஏன் கெடுப்பான்.

என் நண்பன் நகு குறிப்பிட்ட மாதிரி நாம் survival mode இல் இருக்க வேண்டியவர்கள். அடிப்படை கட்டுமானம் எல்லாம் சிதைக்கப்பட்டு வாழ்வாதாரம் எல்லாம் அழிக்கப்பட்டு கடை நிலை யில் இருக்கும் எம் பொருளாதாரத்தை மீள கட்டியமைக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள். இந்த நேரத்தில் நாம் எவர் பக்கமும் சாயாமல் சுளித்து வாழ்வது ஒன்று மட்டுமே எம்மை ஓரளவுக்கேனும் தற்காத்து கொள்ளும்.

இந்த உலகம் அறம் எனும் அச்சாணியில் அல்ல பலம் என்ற அச்சாணியில் தான் இயங்குகின்றது.

-------------------

இன்று காலையில் என் முக நூலில் எழுதியது

எனக்கு தெரிந்து எந்த முஸ்லீம் தலைவர்களும் (றிசாட், ஹக்கீம், அதாவுல்லா, ஹிஸ்புல்லா, காபிர் காசிம்...) முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் 'தமிழர்களுடன்' இணைந்து அல்லது சிறுபான்மை இனங்கள் ஒன்றிணைந்து பேரினவாதத்தை முறியடிப்போம் என்று இந்த கலவரங்களின் பின்பும் இதுவரைக்கும் வெளிப்படையாக கூறவில்லை / கூற விரும்பவில்லை.

இவர்களில், ஹக்கீம் தவிர்ந்த ஏனையோர், அதிதீவிர போக்கு கொண்டவர்கள். இவர்களின் சவூதி, மத்திய கிழக்கு தொடர்புகள், அதன் மூலம் உள்ளே வந்த, வரும் பணம்... தமிழ் பேசினாலும், அதனையும் சிங்களத்தினையும் புறக்கணித்து, அரபியும், ஆங்கிலமும், மத்திய கிழக்கு தொடர்பினால் எழுப்பப்படும் கட்டுமானங்களில், உருவாக்கப்படும் சிறு நகரங்களில் பாவிக்கப் படுவது முக்கிய உளவு நிறுவனங்களின் பார்வையில் தப்பவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 

உலகின் வல்லாதிக்கங்கள் பெரும்பான்மை இனத்துடன் தான் கை கோர்க்கும்; இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அல்ல என்பதை பேரழிவுகுள்ளாகி நாம் கற்ற பாடம். அறம் / தர்மம் /... நீதி என்பன எல்லாம் பலமுள்ள பக்கம் மட்டும் தான் எடுபடும். இதை தான் முஸ்லீம் தலைவர்களும் உணர்ந்து நடக்கின்றனர். உலகம் முழுக்க எத்தனை இஸ்லாமிய நாடுகள் இருப்பினும் ரோஹிங்கியா மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

அப்படியாயின் சிரியாவின் அவலத்துக்கு காரணம் என்ன நிழலி?

உலகின் புதிய நாடுகள் உருவாவதன் காரணம்.... பெரும் வல்லரசுகளுக்கிடையேயான போட்டியே அன்றி வேறு அல்ல. இதே சிங்கள பெரும்பான்மையை கிறித்தவ சிங்களவர், பௌத்த சிங்களவர், கண்டி சிங்களவர், கரையோர சிங்களவர் என பிரித்து மோத விடவும் இந்த வல்லரசுகளுக்கு தெரியும்.

இதற்கு உதாரணம், சிங்களவர், அஷ்ரபினை வைத்து, தமிழர்களை மத ரீதியாய, முஸ்லிம்கள், தமிழர்கள் என பிரித்து மோதியது.

உலகம் இப்படி இருக்கும் பொது வீணாக நாம் பெரும்பான்மை இனத்துடன் மல்லுக்கட்டி அவர்களுக்கு எதிராக வீர வசனம் பேசி மீண்டும் மீண்டும் அவல வாழ்வை 30 வருட போரால் சிதைக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க போகின்றமா?

அவர்கள் உரிமையை தரமறுத்தால், அடங்கிப் போவதா? 30 வருட சீரழிவு என்பதற்க்காக, சிந்திய ரத்தம், போராட்டத்தினை, வீண் என்று சொல்லி, உரிமையே வேண்டாம் என அடங்கிப் போவதா? அகிம்சை வழியிலாவது போராட வேண்டாமா? 

சிறுத்தையை வேகத்துக்கு, பலத்துக்கு ஈடு இல்லை. ஆகவே ஓடாமல் நின்று இரையாவோம் என்று, மான் ஓடாமல் இருக்க முடியுமா? 

நாம் survival mode இல் இருக்க வேண்டியவர்கள். அடிப்படை கட்டுமானம் எல்லாம் சிதைக்கப்பட்டு வாழ்வாதாரம் எல்லாம் அழிக்கப்பட்டு கடை நிலை யில் இருக்கும் எம் பொருளாதாரத்தை மீள கட்டியமைக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள். இந்த நேரத்தில் நாம் எவர் பக்கமும் சாயாமல் சுளித்து வாழ்வது ஒன்று மட்டுமே எம்மை ஓரளவுக்கேனும் தற்காத்து கொள்ளும்.

வேகமாக ஓடிவரும் சிறுத்தை யின் அதிகப்படியான தூரம் 100 மீட்டர். அதற்கு மேலும் அதே வேகத்தில் ஓடினால், மூளைக்கு இரத்தம் போவது தடையாகி வீழ்ந்து மடியும். இதுவே மானுக்கு இறைவன் தந்த வரம். வேகமாக வரும் சிறுத்தை செய்ய முடியாத குறுக்கும், நெடுக்குமாக, திசை மாறுதல் மூலம் அந்த 100 மீட்டர் தூரத்ததினை கடந்து விட்டால் மான் தப்பித் பிழைக்கும். தன்னை ஆசுவாசப் படுத்திக்க கொண்டு அடுத்த ஓட்டத்துக்கு தயாராகும்.

இடையே சிலவேளை மானின் கொம்பு தாக்கி மரணிக்கும் சிறுத்தைகளும் உண்டே.

அதே போல தமிழர்கள் தமக்குரிய காலம் வரும் வரை போராடவே வேண்டும். இலங்கைத் தீவில் சிங்களவர்கள், தமிழர்கள் மோதல் என்பது நாம் வாழும் காலப் பகுதியில் நடக்கும் ஒன்றல்ல. 

ஐரோப்பியர்களுக்கு முன்னர், சோழர் படையெடுப்புக்கள், பாண்டியர் படையெடுப்புகள் நிகழ்த்துள்ளன. 

2000 வருடங்களுக்கு முன்னர் எல்லாளன், துடடகெமுனு சண்டையும் நடந்துள்ளதே.

ஆகவே இன்றுள்ளது sruvival mode அல்ல. வரலாறில் இருந்து கிடைக்கும் படிப்பினை என்ன என்றால், தமிழர்களுக்கும, எந்த ஐரோப்பியர்களினால் சுதந்திரம் பறிக்கப் பட்டு, சிங்களவர்கள் கையில் கொடுக்கப் பட்டதோ அதே ஐரோப்பிய, அமெரிக்க நலன்களுக்காகவே அது திருப்பி கிடைக்கும்.

400 ஆண்டுகள் ரோமர்களின் கிடுக்குப் பிடியில் இங்கிலாந்தும், வேல்சும் இருந்த போது சுதந்திரமாக இருந்தது ஸ்காட்லாந்ந்து. பின்னர் 1400 வருடங்களின் பின்னர் உலகின் மிகப் பெரும் பேரரசை, ஸ்காட்லாந்த்துடன் சேர்ந்து நிறுவியது.

இன்று ஸ்காட்லாந்த்து பிரிந்து போக நினைக்கின்றது - ஜனநாயக வழியில்.

அதே ஜனநாயக வழியில், அகிம்சை மூலம் தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கலாம் அல்லவா...

மாறும் உலகில் மாறாத ஒரே விடயம், நிரந்தரமின்மை...

ஓடமும் வண்டியில் ஏறும்... வண்டியும் ஒரு நாள் ஓடமேறும்.

Edited by Nathamuni

போல் / நாதமுனி,

நான் எழுதியது முஸ்லிம்களுக்காக சிங்கள மக்களை எதிர்த்து குரல் கொடுப்பது என்ற context இல். அதனால் தான் ' வீணாக நாம் பெரும்பான்மை இனத்துடன் மல்லுக்கட்டி..' என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். சரணாகதி அரசியலை செய்ய வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நாம் இன்று இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்காக ஆதரவு கொடுக்க போய் மேலும் மேலும் பெரும்பான்மையினத்துடன் மோத வேண்டிய தேவையில்லை. எமக்கான உரிமையை பெறுவதற்குரிய அரசியல் / பொருளாதார / அறிவு சார் பலம் எதுவும் இன்றி இருக்கும் நாங்கள் எப்பவும் எம்மை தன் இன்னொரு எதிரியாக பார்க்கும் இனத்துக்காக குரல் கொடுத்து புண்ணாக வேண்டியதில்லை.

என்னை பொறுத்தவரைக்கும் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் அடிமட்ட நிலையில் இருந்து மேலே வர வேண்டும். அதற்கான கால அவகாசம் கொடுக்கப்படல் வேண்டும். அது வரைக்கும் சுளித்து ஓடத்தான் வேண்டும். வேகமாக ஓடும் சிறுத்தையின் முன் நேரடியாக மோதாமல் குறுக்கும், நெடுக்குமாக, திசை மாறுதல் மூலம் அதை களைப்படைய வைக்க வேண்டுமாயின் சுளித்துதான் ஓட வேண்டும். 

அப்படி ஓடித்தான் முஸ்லிம் இனம் இன்று இலங்கையில் போருக்கிடையிலும் வேரூன்றி தளைத்து இருக்கு. அதனால் தான் காசு கொடுத்து எம் நிலங்களை வாங்கி போடும் அளவுக்கு முன்னேறி இருக்கு. இப்ப் நாம் சுளித்து ஓட வேண்டிய நேரம்.

4 hours ago, பெருமாள் said:

முக்கியமான இருவரும் தெறிச்சு ஓடுவினம் .

சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் சில தமிழ் மனிதாபிமானிகள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என எழுதியதை பார்த்ததாலும் தான் என் பதிவை நான் எழுதினனான்.

27 minutes ago, நிழலி said:

என்னை பொறுத்தவரைக்கும் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் அடிமட்ட நிலையில் இருந்து மேலே வர வேண்டும். அதற்கான கால அவகாசம் கொடுக்கப்படல் வேண்டும். அது வரைக்கும் சுளித்து ஓடத்தான் வேண்டும். வேகமாக ஓடும் சிறுத்தையின் முன் நேரடியாக மோதாமல் குறுக்கும், நெடுக்குமாக, திசை மாறுதல் மூலம் அதை களைப்படைய வைக்க வேண்டுமாயின் சுளித்துதான் ஓட வேண்டும். 

உண்மை தான்!
பலமிழந்து அல்லது நிர்கதியாக இருப்பவர்களுக்கு இந்த வழி மிகவும் உதவும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதைத் தான் இராஜதந்திரம் அல்லது சமயோசிதம் என்பார்கள்!
இராஜதந்திரம் என்பது ஒரு மாயவித்தை அல்லது மாயமான். இந்த உண்மையை விளங்கி இராஜதந்திரத்தை விவேகத்துடன் பயன்படுத்தினால் வெற்றிக்கான சாத்தியங்கள் பலமடங்கு அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

என்னை பொறுத்தவரைக்கும் தாயக மக்கள் பொருளாதார ரீதியில் இன்றிருக்கும் அடிமட்ட நிலையில் இருந்து மேலே வர வேண்டும். அதற்கான கால அவகாசம் கொடுக்கப்படல் வேண்டும். அது வரைக்கும் சுளித்து ஓடத்தான் வேண்டும். வேகமாக ஓடும் சிறுத்தையின் முன் நேரடியாக மோதாமல் குறுக்கும், நெடுக்குமாக, திசை மாறுதல் மூலம் அதை களைப்படைய வைக்க வேண்டுமாயின் சுளித்துதான் ஓட வேண்டும்

எங்கே சுளித்து ஓடுவது ...அதை முஸ்லிம்களிடமிருந்து எங்கடை சட்டாம்பிகள் கற்க வேண்டும். 2009 இல் கண்ணிலேயே படாத இந்தக்கூட்டம் 
இப்ப முஸ்லிம் தலைவர்களுக்கு  முன்னமே கண்டிப்பு அறிக்கை விடுவினம் , அவன் எப்போது நம்மை சிங்களவனுடன் கோர்த்து விட்டு நாம் தப்பலாம் என்று அலையுறான். நேற்றும் ஊருக்கு நடுவே  இருக்கும் பெரிய கேஸ் குடவுன் ஒன்றை கொழுத்த நான்கு முஸ்லிம் காடைகள் முயன்றிருக்கிறார்கள் , நல்ல வேளை ரோந்து சென்ற பாதுகாப்புப்படை சத்தவெடி சுட்டதில்  ஓடிவிட்டினம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.