Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார்

Featured Replies

இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, பிரபாகரன் இறந்துவிட்டார் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்தமை அங்கிருந்த கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஆனந்தராசா மீது கடுமையான விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.tamilwin.com/politics/01/181514?ref=imp-news

Edited by நவீனன்

அப்போ தேசிய தலைவர் சுமந்திரன் .?

  • தொடங்கியவர்
  • தலை­வர் பிர­பா­க­ரன் இறந்­து ­விட்­டார்- தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் அறி­விப்பு!!
 
 

தலை­வர் பிர­பா­க­ரன் இறந்­து ­விட்­டார்- தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் அறி­விப்பு!!

தம்பி பிர­பா­க­ரன் இப்­போது இறந்து விட்­டார். அவர் விட்­டுச் சென்ற கொள்­கை­களைக் கடைப்­பி­டித்து வரு­கின்ற எமது மாம­னி­தர் குமார் பொன்­னம்­ப­லத்­தின் மகன் கஜேந்­தி­ர­கு­மார் தலை­மை­யில் எமது இனம் ஒன்­று­பட்­டுத் திரண்டு போரா­டு­வ­தன் மூலம்­தான் எமது இழந்த உரி­மை­களை பெற்­றெ­டுக்க முடி­யும். இவ்­வாறு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ஆனந்­த­ராசா தெரி­வித்­தார்.

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் (அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ்) ஏற்­பாட்­டில் தொழி­லா­ளர் தினக் கூட்­டம் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

இந்த நிகழ்­வில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் உறுப்­பி­ன­ரான சட்­டத்­த­ரணி க.சுகாஸ், காலம் சில தலை­வர்­களை இனம் காட்­டும். 1940ஆம் ஆண்­டு­க­ளில் இனங்­காட்­டிய தலை­வன்­தான் ஜி.ஜி.பொன்­னம்­ப­லம். அதற்­குப் பின்­னர் காலம் தந்தை செல்­வ­நா­ய­கம் என்ற தலை­வனை இனம்­காட்­டி­யது.

அதற்க்­குப் பின்­னர் இரண்டு தலை­வர்­களை காட்­டிய காலம் அதற்கு பின்­னர் தமிழ் தேசி­யத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு ஒரு கட­வு­ளைக் காட்­டி­யது. அது தான் தேசி­யத் தலை­வர் மேதகு வேலுப்­பிள்ளை பிரா­ப­க­ரன். அந்த இறை­வ­னுக்­குப் பின்­னர் கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல், காலம் காட்­டிய தலை­வன்­தான் மாம­னி­த­னு­டைய புதல்­வன் அண்­ணன் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம்.

இவர்­தான் தமிழ்த் தேசத்­தின் கடை­சித் தலை­வன். இந்த தேசத்தை மீட்க இந்­தத் தலை­வனை நாம் தவற விடு­மே­யா­னால் தமிழ்த் தேசம் சிங்­கள தேச­மா­கும். சிங்­க­ளத்­தின் கனவு நன­வா­கும். ஒரு நாடு ஒரு தேசம் என்­பது நிரூ­பிக்­கப்­ப­டும்.அதை தடுக்க வேண்­டு­மாக இருந்­தால் தமி­ழர் தாய­கத்தை மீட்க வேண்­டு­மாக இருந்­தால் எமது அபி­லா­சை­கள் கிடைக்க வேண்­டும் என்­றால் கேட்டு கேள்வி இல்­லா­மல் இந்­தத் தலை­வ­னின் பின்­னால் தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பின்­னால் அணி திரள்­வ­து­தான் நாம் செய்­யும் கடப்­பாடு – என்­றார்.

Elam-261-300x200.jpg

http://newuthayan.com/story/89827.html

  • கருத்துக்கள உறவுகள்

இதை யாழ் கள கஜேந்திரகுமாரின் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு விடடார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

இதை யாழ் கள கஜேந்திரகுமாரின் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு விடடார்களா ?

ஏற்கனவே உங்கட துரோகி அண்ணர் சொல்லிவிட்டார்......

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

ஏற்கனவே உங்கட துரோகி அண்ணர் சொல்லிவிட்டார்......

 


என்ட அண்ணா சொன்னதைக் கேட்டு தலைவர் இல்லையென்று நம்பிட்டியங்களா?...இப்ப இவர் சொல்றார் நீங்கள் எப்படி எடுத்துகிறீங்கள்?...தலைவர் இறந்துட்டாரா?... இவரை உங்கட தலைவரா ஏற்றுக் கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ தொடங்கிட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

 


என்ட அண்ணா சொன்னதைக் கேட்டு தலைவர் இல்லையென்று நம்பிட்டியங்களா?...இப்ப இவர் சொல்றார் நீங்கள் எப்படி எடுத்துகிறீங்கள்?...தலைவர் இறந்துட்டாரா?... இவரை உங்கட தலைவரா ஏற்றுக் கொள்கிறீர்களா?

அவர் துரோகி தானே அவர் சொன்னதை மக்கள் ஏன் கேட்க வேண்டும், அவரும் ஏன் மக்களுக்கு சொல்ல வேண்டும்

 

  • தொடங்கியவர்
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன கதை
 

  யாழ்ப்பாணத்தில் இம்முறை, மே தினப் பேரணிகள் களைகட்டியிருந்தன. அத்தகைய மே தினப் பேரணியொன்றில், வெளியிடப்பட்ட கருத்து, சமூக ஊடகங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கிறது.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய, அந்தக் கட்சியின் இரண்டு முக்கிய பிரமுகர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளன.  2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், த.தே.ம.மு, நடத்திய மே தினப் பேரணிகளில் ஒப்பீட்டளவில் இது பெரியது.   

த.தே.ம.மு, இதற்கு முன்னர் கரவெட்டியில் நடத்தி வந்த மே தினப் பேரணியை, இம்முறை நல்லூருக்கு நகர்த்தியிருந்தது. காரணம், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். நகரம், நல்லூர்ப் பகுதிகளில் அதற்கு செல்வாக்கு இருப்பது உறுதியாகியிருந்தது. அதைவிட நகரத்தின் மையப் பகுதியை அண்டி, இத்தகைய பேரணிகளை நடத்தும் போதுதான், அது பெரியளவில் பொதுமக்களினதும், ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும்.  

யாழ்ப்பாணத்தில் இம்முறை நடத்தப்பட்ட மேதினப் பேரணிகளில், நல்லூர், சங்கிலியன் பூங்காவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய மே தினக் கூட்டத்தில் தான், அதிகளவிலான மக்கள் திரண்டிருந்தனர் போலத் தென்படுகிறது.  

அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசாவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸும் வெளியிட்ட கருத்துகள், பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருக்கின்றன.  

இதில், அ.த.கா தலைவர் ஆனந்தராசா உரையாற்றிய போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் என்றும், இனிமேல் தமது கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் தலைமையில், தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு, தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.  

அடுத்து, த.தே.ம.மு இன் பேச்சாளர் சுகாஸ் உரையாற்றிய போது, இரண்டு ஒப்பற்ற தலைவர்களுக்குப் பிறகு, காலம் உருவாக்கிய தலைவர் என்று பிரபாகரனையும், அவருக்குப் பின்னர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் காலம் வெளிப்படுத்தியுள்ள தலைவர்தான் கஜேந்திரகுமார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இவரே தமிழ்த் தேசத்தின் கடைசித் தலைவன் என்றும், இந்தத் தலைவனின் பின்னால், அணி திரள வேண்டும் என்றும் சுகாஸ் கோரியிருந்தார்.  

இந்த இருவரினதும் கருத்துகளும்  கடுமையான விமர்சனங்களுக்கும் எதிர்வினைகளுக்கும் உள்ளாகியிருக்கின்றன. இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமான, முதலாவது விடயம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மரணம் பற்றியது. இரண்டாவது, அவருக்கு நிகரான தலைவராக கஜேந்திரகுமாரை முன்னிறுத்த முற்பட்டது.  

2009 மே மாதம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைக்குள், தமிழர்களை வைத்திருக்கப் பலரும் முயன்று வந்திருக்கிறார்கள்.  அப்போது, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியவர்கள், தமிழினத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும், அதே நிலைக்குள் தான், தமிழ் மக்களை வைத்திருக்கப் பலரும் முனைகின்றனர். இது முற்றிலும், சுயநல அரசியல் நோக்கிலானது என்பதில் சந்தேகமில்லை.  

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான ஒரு பொறியாக, விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணத்தைப் பயன்படுத்துவதற்குத் தமிழர் தரப்புத் தவறி விட்டது.   
ஒன்பது ஆண்டுகளாக, அதுபற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. பிரபாகரன் பற்றிய கற்பனாவாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் பலருக்கும், இப்போது உண்மை தெரியும். ஆனால், அதை வெளிப்படுத்தும் தைரியம் யாருக்கும் இல்லை.  

இப்படியான நிலையில், மே தின மேடையில், எதற்காகப் பிரபாகரனை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இழுத்தது?    

இது சூட்சுமான விடயம். தமிழ் மக்களின் தலைவராக, பிரபாகரன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அவர் இல்லை என்பதை வெளிப்படுத்தினால் தான், இன்னொருவரை அந்த இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.  
அதாவது, கஜேந்திரகுமாரை அந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டுமாயின், பிரபாகரனின் சகாப்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதைத்தான் மே தின மேடையில், செய்ய முயன்றிருக்கிறார்கள். தேர்தல் மேடையில் இதைக் கூறினால் வாக்குகள் விழாது என்பதால், மே தின மேடையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  

தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பேரவை என்று மாறிமாறி வெவ்வேறு பெயர்களில், ‘ஒளித்து விளையாடும்’ தரப்புகள் என்னவோ, ஒன்றுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம்தான்.  

த.கா தலைவர் ஆனந்தராசா, பிரபாகரனின் மரணம் பற்றிக் கூறியதும், அதற்கு எதிர்வினைகள் வரத் தொடங்கியதும், அவரது தனிப்பட்ட கருத்து அது என்று நழுவத் தொடங்கியிருக்கிறது மக்கள் முன்னணி.  
இதுபற்றி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், ஆனந்தராசாவின் கருத்துகளைப் பற்றி மட்டும்தான் கூறியிருக்கிறாரே தவிர, தமது கட்சியின் பேச்சாளரான சுகாஸின் கருத்துகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம், தனியே பிரபாகரனின் மரணம் பற்றிய கருத்தை வெளியிட்டதால் மாத்திரம், பூதாகாரமாகவில்லை.   

பிரபாகரனுக்குப் பிந்திய ஒப்பற்ற தலைவனாக, காலம் தந்த கடைசித் தலைவனாக, கஜேந்திரகுமாரைப் பிரகடனப்படுத்த முற்பட்டதுதான் அதிகம் சர்ச்சையை உருவாகியது. அதுவும், உள்ளூராட்சித் தேர்தல் மூலம், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்த முற்பட்டிருந்தார் சுகாஸ்.  

ஒரு கட்சி, தனது தலைவனை ஒப்பற்ற தலைவனாகச் சித்திரிப்பது வழக்கம். அவ்வாறான நிலையில் தான், மே தினக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வர்ணிக்கப்பட்டாரா என்று பார்க்க வேண்டியுள்ளது.  
நிச்சயமாக அவ்வாறு இல்லை. தமிழினத்தின் கடைசித் தலைவனாக, ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோருக்குப் பின்னர், காலம் தந்த தலைவனாக, அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.  

ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர்கள், ஒவ்வொரு காலகட்டத்தில், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தவர்கள். 

ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, ஆகியோருடன் கஜேந்திரகுமார் ஒப்பீடு செய்யப்படுவதையிட்டு, யாரும் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.  

ஆனால், பிரபாகரனுடன் அவரை ஒப்பீடு செய்து, அவருக்கு நிகரான தலைவராக, அவருக்குப் பிந்திய தலைவராகப் பிரகடனம் செய்ய முற்பட்டதுதான், கடுமையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியுள்ளது.  
மாற்றுத் தலைமையை உருவாக்கும் தகுதி, தமக்கு மாத்திரமே உள்ளது என்று கூறி வந்துள்ள த.தே.ம. மு, இந்த இலக்கை முன்வைத்துத் தான், அத்தகைய கருத்தை வெளியிட்டதா என்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.  

சமூக ஊடகங்களில் வெளியான காட்டமான எதிர்ப்புகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆடிப்போய் விட்டது. இதனால் தான், உடனடியாகவே, கட்சியின் செயலாளர் கஜேந்திரன், அப்படியான எண்ணம் தமது கட்சியின் தலைவருக்கு இல்லை என்றும், தமிழினத்தின் தலைவராகத் தன்னை யாரும் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

இந்த மறுப்பை, ஏன் அதே மேடையில் அவர்கள் வெளியிடவில்லை; உடனடியாகவே வெளியிட்டிருக்கலாமே என்று, பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். அதில் நியாயமும் உள்ளது.  
அதேவேளை, பிரபாகரனின் மரணம், பிரபாகரனுக்குப் பிந்திய தலைவனாக கஜேந்திரகுமாரைப் பிரகடனம் செய்வதற்கான ஒரு வெள்ளோட்டமாகத் தான், இந்த அறிவிப்பை அந்தக் கட்சி வெளியிட்டது என்று கருதுவோரும் உளர்.  

அது உண்மையாயின், ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிப் போன’ கதையாகத்தான் முடிந்திருக்கிறது.  ஏனென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்போது எதிர்வினைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிலைக்கு வந்திருக்கிறது. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிள்ளையார்-பிடிக்கப்-போய்-குரங்காகிப்-போன-கதை/91-215393

  • கருத்துக்கள உறவுகள்

31899664_1895899073787512_28909697041453

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2018 at 3:03 PM, பகலவன் said:

அப்போ தேசிய தலைவர் சுமந்திரன் .?

சம்பந்தனை... வாழும், தேசியத் தலைவராக, கனடாவில் உள்ள, 
ஏதோ... அமைப்பு ஒன்று அறிவித்த செய்தியை.... யாழ். களத்தில்  தான் வாசித்தேன்.
சம்பந்தனை  தாண்டி.... சுமந்திரன் வந்தால்... சம்பந்தன் கோவிக்க  மாட்டாரா... பகலவன். ?

4 hours ago, nunavilan said:

31899664_1895899073787512_28909697041453

இவர்களை, தேசியத் தலைவராக..... ஒரு கோஸ்ட்டி  அறிவிக்க,
சம்பந்தன்...  வேறை ஆளை... தேசியத் தலைவராக அறிவித்து, ?
தனது அரசியல் ... "சாநக்கியத்திதை" காட்டியமைக்கு என்ன பரிசு கொடுக்கலாம்... என்று தான் தெரியவில்லை. ?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

அவர் துரோகி தானே அவர் சொன்னதை மக்கள் ஏன் கேட்க வேண்டும், அவரும் ஏன் மக்களுக்கு சொல்ல வேண்டும்

 

மீரா,நீங்கள் முதல் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லி விடடேன்....நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் முதல்  நேர்மையாக பதில் சொல்லுங்கள் பார்ப்பம்  தைரியம் இருந்தால் அதன் பிறகு நான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ.. தமிழின தேசிய தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை யாரும் எப்போதும் பிரதிநிதிப்படுத்த முடியாது. அவர் ஒருவர் தான்.

காந்தியை எப்படி ஹிந்தியாவில் யாரும் பிரதிநிதிப்படுத்த முடியாதோ..லிங்கன்.. லெனின்.. கால்ர்மாக்ஸை யாரும் பிரதிநிதிப்படுத்த முடியாதோ.. அதே தான்.. தேசிய தலைவர் விடயத்திலும்.

முடிந்தவர்கள்.. தலைவரின் கொள்கைகளை மக்களோடு இணைந்து முன்னெடுத்துச் செல்லுங்கள். நீங்கள் மக்களுக்கான வழிகாட்டிகளாக.. முன்னோடிகளாக.. இருக்க முடியுமே தவிர.. தேசிய தலைவராக இருக்க முடியாது. ??

  • கருத்துக்கள உறவுகள்

தேவைற்ற செய்தியை... "தமிழ்வின் இணையத்தளம்"   ஊதிப்  பெருப்பிக்கிறது கண்டிக்கப் பட வேண்டியது.

மருந்து... கசப்புத்தான்.  நோய்... மாற, அதனை குடிக்கத் தான் வேண்டும்.

சில.. எதிர் பார்க்காத விடயங்களை...  எமது தனிப் பட்ட  வாழ்க்கையில், கேள்விப்  படும்  போது... துவண்டு போகின்றோம். அதனால்... அந்தக் குடும்பமே...  நிலை குலைகின்ற சம்பவங்கள் கேள்விப்  பட்டிருப்பீர்கள் 

அதே...போல்,  தமிழீழ தேசியத் தலைவரின் மரணத்தை... மனதளவில் நான் உட்பட எவராலும் ஏற்றுக் கொள்ள  முடியாது என்றாலும், நிகழ்காலத்திற்கு  எம்மை தயார் படுத்திக்  கொள்வதே சரியான... அணுகு முறையாக இருக்கும்.

கடந்த... ஒன்பது வருடங்களாக.....
வருவாரா...வரமாட்டாரா? ,   இருக்கிறாரா..... இல்லையா?..... என்ற  தலைப்பில்  வாதிடுவது அர்த்தமற்றது.

தேசியத் தலைவர் பிரபாகரன்,  எம் உள்ளத்தில் வாழ்கின்றார்.  அவர் தம் இறுதி உரையில் கூட.....
"புலம் பெயர் தமிழர்கள்.. ஈழப் போராட்டத்தை, முன் எடுப்பார்கள்." என்று கூறியுள்ளார்.

அதனை.... நீங்கள் எப்படி எடுப்பீர்களோ தெரியாது?
மனதளவில்... அவரின் மரணத்தை, நான் ஏற்றுக் கொண்டு விட்டேன்.

ஆயிரம்... ஆண்டுக்கு ஒரு முறை பிறக்கும்... சுத்தமான வீரத்  தமிழன் வரிசையில்...
முதல் ஆயிரம் ஆண்டு....  ராஜ ராஜ சோழனுக்கு சொந்தம்.  
இரண்டாயிரமாம்  ஆண்டு....  தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கே சொந்தம்.

சும்மா.... சம்பந்தன், சுமந்திரன் போன்ற...  லூஸுப் பயலுகளை....   தேசியத் தலைவர் என்று, இனி யாரும் சொன்னால்... எனக்கு, கெட்ட  கோவம் வந்துடும். 

Edited by தமிழ் சிறி

15 hours ago, தமிழ் சிறி said:

சும்மா.... சம்பந்தன், சுமந்திரன் போன்ற...  லூஸுப் பயலுகளை....   தேசியத் தலைவர் என்று, இனி யாரும் சொன்னால்... எனக்கு, கெட்ட  கோவம் வந்துடும்

சரி சரி சும்மா கதைக்காம அடுத்த தேசியத்தலைவர் (லூசுப் பய ) விக்கியா இல்லை கஜேந்திரகுமாரா எண்டு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் தமிழ் தலைமைகளும் சும்மா பேசி கொண்டே காலம் கடத்துகிறார்கள் என்பதனால்தான் பிரபாகரன் போராடவே புறப்பட்டார்...

இன்று தமிழர்களும் தமிழ் தலைமைகளும் மறுபடியும் பேச தொடங்கி காலம் கடத்துகிறார்கள் என்றால்...

  பிரபாகரன் இல்லையென்றுதான் அர்த்தம்!

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தத்தில்
2002 பாதை திறந்த பிறகு 
யாழ்ப்பாணம் கண்ட ஒருவர், 

2006 மீண்டும் பிரச்சினை 
ஆரம்பித்த போது
எஸ்கேப் ஆகி,


பின் எல்லாம் 
எல்லாரும் முடிந்தபின்
 முடித்தவனுக்கு சார்பாக 
முக்கு முக்கென்று 
முக்கி
அரசியல் செய்த
ஒருவர்,
இன்றைக்கு
தமிழ் மக்களின் 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு

கட்சி அரசியல் சரிவராது

ஐனநாயக  வழிகளில் இவர்களால் செயற்பட முடியாது என்பதையே

இன்றைய  நிகழ்வுகளும் ஆளையாள்  குழிபறிக்கும்  சம்பவங்களும்   சுட்டிக்காட்டுகின்றன

எது  எப்படியோ

பிரபாகரன்   எப்பொழுதுமே எல்லோருக்குமே  தேவைப்படுபவராகி  வருகிறார்

அதன் மூலம்  அவரே  தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் என்பது 

மீண்டும் மீண்டும்  நிரூபணமாகி  வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

  பிரபாகரன் இல்லையென்றுதான் அர்த்தம்!

இருப்பரேயானால் அவருக்கு அரசியல் தீர்வில் துளியளவும் நம்பிக்கை இல்லை. அப்படி நம்பிக்கை இருக்குமாயின் அரசியல் தீர்வு  முயற்சிகளுக்கு பின்னணியில் அவரின் கட்டுப்பாடு இருப்பதை அடையாளம் காண கூடியதாக இருந்திருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

ஈழத்தமிழருக்கு

கட்சி அரசியல் சரிவராது

ஐனநாயக  வழிகளில் இவர்களால் செயற்பட முடியாது என்பதையே

இன்றைய  நிகழ்வுகளும் ஆளையாள்  குழிபறிக்கும்  சம்பவங்களும்   சுட்டிக்காட்டுகின்றன

எந்த நாட்டு ஜனநாயக வழிகளில் இந்த வகையான நிகழ்வுகளும் குழிபறிப்புகளும் இல்லை?

ஏன் ஈழத் தமிழர் இவற்றுக்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உங்களுக்கும் பலருக்கும் (எனக்கும் கூட) இந்த வழிகள் பிடிக்காமல் இருக்கலாம். 

ஆனால் உலகம் முழுவதும்  கட்சி அரசியலும், ஜனநாயகமும் இப்படியானவையே.

இன்று உலகின் மிகப்பெரிய (மிகச்சிறந்த என்று எடுக்காதீர்கள்) ஜனநாயக நாடாக இந்தியா கருதப்படுகிறது. 

கண்ணதாசன் எழுதிய ஒரு நடிகையின் சோகமான வரலாற்றுக்கு முன்னுரையில் 

"இந்தியாவுக்கு நல்லவனான ஒரு சர்வாதிகாரி தேவை." என்று எழுதியது நினைவுக்கு வருகிறது.

ஆங்கிலத்தில் இப்படியான சர்வாதிகாரியை Benevolent Dictator என்பார்கள்.

சிங்கப்பூரின் தந்தையான லீ குவான் யுவை விக்கிபீடியாவில் இந்த நல்லவனான சர்வாதிகாரிகளில் (Benevolent Dictator ) ஒருவராக குறிப்பிட்டு உள்ளார்கள்.

ஈழத்தமிழரும் தாம் இப்படியான ஒருவரை தேசிய தலைவரில் கண்டார்கள். லீ குவான் யு, உலகத் தலைவர்கள் தன்னை ஏற்று கொள்ள வைத்தது போல தேசிய தலைவரால் செய்ய முடியவில்லை. மிகவும் கவலையான அழிவுக்கு அது ஈழத்தமிழரை கொண்டு சென்று விட்டது. தேசிய தலைவரை லி குவான் யு வுக்கு நிகரானவர் என்று ஒப்பிடுவதை தனிப்பட்ட முறையில் லி குவான் யு ஆட்சேபித்து இருக்க மாட்டார். இருவருமே நல்லவனான சர்வாதிகாரிகள்  (Benevolent Dictators ).

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வைரவன் said:

யுத்த நிறுத்தத்தில்
2002 பாதை திறந்த பிறகு 
யாழ்ப்பாணம் கண்ட ஒருவர், 

2006 மீண்டும் பிரச்சினை 
ஆரம்பித்த போது
எஸ்கேப் ஆகி,


பின் எல்லாம் 
எல்லாரும் முடிந்தபின்
 முடித்தவனுக்கு சார்பாக 
முக்கு முக்கென்று 
முக்கி
அரசியல் செய்த
ஒருவர்,
இன்றைக்கு
தமிழ் மக்களின் 

யூ மீன் மிஸ்டர் சம்பந்தர்??

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஈழத்தமிழரும் தாம் இப்படியான ஒருவரை தேசிய தலைவரில் கண்டார்கள். லீ குவான் யு, உலகத் தலைவர்கள் தன்னை ஏற்று கொள்ள வைத்தது போல தேசிய தலைவரால் செய்ய முடியவில்லை. மிகவும் கவலையான அழிவுக்கு அது ஈழத்தமிழரை கொண்டு சென்று விட்டது. தேசிய தலைவரை லி குவான் யு வுக்கு நிகரானவர் என்று ஒப்பிடுவதை தனிப்பட்ட முறையில் லி குவான் யு ஆட்சேபித்து இருக்க மாட்டார். இருவருமே நல்லவனான சர்வாதிகாரிகள்  (Benevolent Dictators ).

லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

by மார்க்ஸ். அ. •  • 12 Comments

lee-kuan-yew-3-sizedநவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவரது இறுதி அஞ்சலி அமைந்தது.

தமிழகத்திலும் கூட ஆங்காங்கு தன்னிச்சையாக மக்கள் ஃப்லெக்ஸ் போர்டுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீவிரத் தமிழ்த் தேசியவாதியாகிய வைகோ கண்ணீர் ததும்ப அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். “நல் ஆளுகைக்கான” விளம்பர மாதிரியாக (poster boy of good governance) ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, ‘வால் ஸ்ட்ரீர் ஜர்னல்’ ஆகியவை லீயைப் புகழ்ந்தன.

அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுடனும், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே போன்ற குறை வளர்ச்சி நாடுகளுடனும் லீயின் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சியை ஒப்பாய்வு செய்தது ஒரு இதழ். சிங்கப்ப்பூரின் வளர்ச்சி அமெரிக்காவுடையதைக் காட்டிலும் விரைவானது, அதிகமானது எனத் தரவுகளுடன் நிறுவியது அந்த இதழ் (கிரகாம் ஆலிசன், ‘தி அட்லான்டிக்’, மார்ச் 30, 2015). கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிப்பு வீதம் 2 சதம் என்றால் சிங்கப்பூரின் வீதம் 6 சதம். உலகத் தொழிற் போட்டிக்கான குறியீட்டில் (Economic Forum’s Global Competitiveness Index) இரண்டாவதாகவும், உலக அளவில் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் வரிசையில் (Economist Intelligence Unit’s ranking) முதலாவதாகவும் லீயின் சிங்கப்பூர் இன்று மதிப்பிடப்படுகிறது. எல்லா Credit Rating நிறுவனங்களும் இன்று சிங்கப்பூருக்கு AAA அந்தஸ்து வழங்குகின்றன என்பவற்றை எல்லாம் இதழ்கள் எழுதி மாய்ந்தன.

பொருளதாரத்தில் மட்டுமா இந்த முன்னேற்றம். இல்லை மக்கள் நலம், ஊழலற்ற ஆளுகை, குற்றச் செயல்கள் இன்மை ஆகிய அம்சங்களிலும் இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள நாடு சிங்கப்பூர்.

1965ல் ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் (infant-mortality rate) 2003ல் வெறும் 2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவு. உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை (World’s healthiest country) முதன்மைப்படுத்துகிறது. குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ள வகையிலும் லீயின் சிங்கப்பூர் முன்னிற்கிறது. சிங்கப்பூரில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைக் காட்டிலும் 24 மடங்கு குறைவு. லீயின் மரணத்தை ஒட்டி இப்படி நிறையத் தரவுகள் விரிவான ஆதாரங்களோடு ஊடகங்களில் மிதந்தன. சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

***

இந்தப் பெருமைகள் அனைத்தும் லீ குவான் யூவையே சாரும் என்பதிலும் யாருக்கும் கருத்து மாறுபாடில்லை. 1950 – 60 களில், இரண்டாம் உலகப் போர் மற்றும் இனக் கலவரங்களால் நசிந்து கிடந்த இந்தப் பிரிட்டிஷ் காலனியை, வெறும் 718.3 சதுர கி.மீ பரப்பளவே உள்ள இந்தச் சின்னத் தீவை, வளர்ச்சியற்றிருந்த ஒரு துறைமுகக் கிராமத்தை, இப்படிப் பல அம்சங்களில் உலகத் தரத்தில் முதலான நகர அரசாகவும் (City state), உலகின் மிகச் சுறுசுறுப்பான துறைமுகங்களில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வந்து வழக்குரைஞராகப் பணி புரிந்து கொண்டிருந்த ஹாரி லீ குவான் யூ 1959 ல் தொடங்கிய பி.ஏ.பி (People’s Action Party – PAP) கட்சிதான் இன்று வரை தனிப் பெரும்பான்மையுடன் சிங்கப்பூரை ஆண்டு வருகிறது. சாகும் வரை அதன் தனிபெரும் தலைவராக் இருந்தவர் லீ. 30 ஆண்டு காலம் பிரதமர், 56 ஆண்டு காலம் சகல அதிகாரங்களும் கூடிய அமைச்சர், 60 ஆண்டு காலம் ஒரே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எனத் தொடர்ந்து சிங்கப்பூரைத் தன் சுண்டு விரல் இயக்கத்தில் வைத்திருந்தவர் அவர்.

1963 ல் சரவாக், வட போர்னியோ ஆகிய முன்னாள் பிரிட்டிஷ் காலனிகள் மலேசியத் தீபகற்பத்துடன் இணைந்து கூட்டாட்சி அமைத்த போது நீர், நிலம் முதலான மிக அடிப்படையான இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரை மலேசியக் கூட்டாட்சியில் இணைப்பது என்கிற முடிவை லீ எடுக்க வேண்டியதாயிற்று.

எனினும் சிங்கப்பூர் மாநில அரசுக்கும், மலேசிய மத்திய அரசுக்கும் பல பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. 1964ல் பெரும் இனக் கலவரம் ஒன்றும் உருப்பெற்றதை ஒட்டி மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து விலக்குவது என முடிவெடித்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் (120 எதிர் 0) இம்முடிவு எடுக்கப்பட்டது. உலக வரலாற்றில் இப்படி கட்டாயமாக விடுதலை அளிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் அமைந்தது. லீ இதைத் தேசிய ஊடகங்களில் அறிவித்த போது அழுதார் எனச் சொல்லப்படுகிறது.

இயற்கை வளங்கள் அற்ற இந்தச் சின்னஞ் சிறு நாட்டை தொழில் உற்பத்தியையும், வணிகத்தையும் மையமாகக் கொண்ட உலகத் தரமான நாடாக ஆக்குவதற்கு லீ தேர்ந்த அணுகல் முறையை விளக்க அரசியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் சொற்களில் முக்கியமானது Meritocracy – அதாவது திறமையை மையப்படுத்திய ஆளுகை. ஒரு கார்பொரேட் நிறுவனம் போல அது ஒவ்வொரு துறையிலும் சாதித்தாக வேண்டும். சாதனை, சாதனை ஒன்றுதான் எல்லாவற்றிலும் அளவு கோல்.

எதுவும் இதற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. மொழி, இனம் எந்தப் பிரச்சனையும் குறுக்கே வந்துவிடக் கூடாது. 5.5 மில்லியன் மக்கள் தொகையில் 75 சதம் பேர் சீனர்களாக இருந்த போதும் சீன மொழிதான் (மான்டரின்) ஆட்சி மொழி என அவர் அறிவிக்கவில்லை. மான்டரின், தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினார். ஆங்கிலம் பொதுமொழி. சீனம் அல்ல. பள்ளிகளில் தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்கும் வாய்ப்பு ஒவ்வொரு மொழியினருக்கும் அளிக்கப்பட்டது. இதற்கென லீ தனது சொந்த நிதியிலிருந்து 12 மில்லியன் டாலரை அளித்தார்.

30 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய லீ அந்தப் பொறுப்பை அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய கோ சோ டோங் கிடம் ஒப்படைத்தார். எனினும் அமைச்சரவையில் “மூத்த அமைச்சர்” (Senior Minister) எனும் பதவி ஒன்றை உருவாக்கி அதைத் தன் கைவசம் வைத்துக் கொண்டார்.

உரிய நேரம் வந்த போது (2004) மகன் லீ சைன் லூங் கிடம் பிரதமர் பொறுப்பை அளித்தார். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக லூங் தந்தையை ‘அமைச்சர்களின் ஆசான்” (Minister Mentor) என்கிற பதவியை உருவாக்கி அதில் அமர்த்தினார். அதிகார நுணுக்கங்களில் மகன் முழுமையாகத் தேறியவுடன் 2011 ல் லீ ஆசான் பதவியிலிருந்து இறங்கினார். எனினும் சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார்.

உலகத் தரமான பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நகரம், ஊழலற்ற ஆட்சி, அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்ற வாழ்க்கை வேறென்ன வேண்டும் குடி மக்களுக்கு என்பதுதான் ஆளுகை குறித்து லீ கொண்டிருந்த கருத்தாக இருந்தது.

லீயின் உடல் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற இல்லத்திலும், பிற பொது மையங்களிலும் 1.25 மில்லியன் மக்கள் தங்களின் முதல் பிரதமர் லீ குவான் யூ விற்கு அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கிறார் லீயின் மூத்த மகனும் இன்றைய பிரதமருமான லீ செய்ன் சூங் (ராய்டெர்ஸ், மார்ச் 29).

***

அமோஸ் யீ ஒரு 17 வயதுச் சிறுவன். அவனைச் சிங்கப்பூர் அரசு இரண்டு நாட்களுக்கு முன் (மார்ச் 29) கைது செய்துள்ளது. அவன் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை “லீ, ஒரு சகிக்க முடியாத ஆள்” (Lee, A horrible Person) எனச் சொன்னதுதான்.

சென்ற மார்ச் 27 அன்று, “கடைசியாக லீ செத்துத் தொலைந்தார்” (Lee Kuan Yew is finally dead!) என்கிற தலைப்பில் ஒரு காணொளியை யூ ட்யூபில் அமோஸ் லீ பதிவேற்றினான். அடுத்த இரண்டே நாட்களில் 686,000 பேர் அதைக் கண்டனர்.

“லீ எல்லோர் மனத்திலும் அச்சத்தை விதைத்திருந்தார். ஏதாவது சொன்னால் பிரச்சினை வந்து விடுமே என எல்லோரும் அஞ்சினர்… அதன் விளைவுதான் லீக்குக் கிடைத்துள்ள பெருமைகள்…” என அவன் கூறியது ஒரு இதழில் (The Independent) வெளிவந்தது. “ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்படவில்லை…” எனவும் சொன்னான்.

லீ செய்ன் லூங் அரசு சென்ற 29ம் தேதி அன்று அமோஸைக் கைது செய்தது. யூ ட்யூப் பதிவும் முடக்கப்பட்டது.. கருத்துச் சுதந்திரத்தில் சிங்கப்பூர் அரசின் அணுகல் முறையைப் புரிந்து கொள்ள இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என லீயை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சியில் லீ குவான் யூவைப் பாராட்டுகிறவர்கள் கூட கடைசியில் இப்படிச் சொல்லி முடிப்பது வழக்கம்:

“அரசை எதிர்த்த ஆர்பாட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் முதலான சிவில் உரிமைகளை முடக்கும் அரசு எனவும், அரசியல் எதிரிகள் மீது வழக்குகளைத் (libel suits) தொடரும் அரசு எனவும் லீயின் ஆளுகை விமர்சிக்கப்பட்டது. ஆனால், அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அவசியம் எனவும், இத்தகைய நடவடிக்கைகளுடன் ‘சட்டத்தின் ஆட்சியும்’ சேரும்போதுதான் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும் என்றும் அவர் வாதிட்டார்” – இப்படி முடிகிறது லீ குறித்த விக்கிபீடியா கட்டுரை.

சிங்கப்பூர் குறித்த விக்கி கட்டுரையில், “பத்திரிக்கைச் சுதந்திரம் உலகத்திலேயே மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அதிக பட்சமாக ஒடுக்கப்படுவதாலும் ஜனநாயக அளவுகோலைப் (Democratic index) பொருத்த மட்டில் ஆகக் கீழான நாடாக அது உள்ளது” என்கிற சொற்களைக் காணலாம்.

கலைஞர்களுக்கும் கூட அங்கு கருத்துரிமை இருந்ததில்லை. தமிழ் பேசும் உலகின் ஆகச் சிறந்த அரங்க இயக்குனரும் கலைஞருமான சிங்கை இளங்கோவன் மற்றும் அவர் மனைவி தேன்மொழி (‘அக்னிக் கூத்து’ அமைப்பின் தலைவர்) அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு (Laredo Morning Times, Oct 29, 2000).

“எனது எல்லா நடவடிக்கைகளையும் சரி என நான் சொல்லவில்லை. முறையான விசாரணை இல்லாமல் நான் கைதுகளைச் செய்தது உண்மைதான்” – என அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம் லீ-யே ஒரு முறை வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன்னுடையது “சட்டத்தின் ஆட்சி, முற்றிலும் திறமையை அடிப்படையாகக் கொண்டது” என அவர் சொல்லிக் கொண்டாலும் நடைமுறை அப்படி இல்லை. 30 ஆண்டு காலப் பிரதமர் பதவிக்குப் பின் தனக்கு மிகவும் விசுவாசமான ஒருவரைப் பதவியில் அமர்த்திய போதிலும் அவரை முழுமையாக நம்பாமல் அமைச்சரவைப் பதவி ஒன்றை உருவாக்கி அமர்ந்து கொண்டவர் லீ. இராணுவத்தில் அவர் மகன் மிக வேகமாகப் பதவி உயர்வுகளைப் பெற்றார். அவர் பிரதமராகத் தகுதி பெறுவதற்கு அது தேவையாக இருந்தது. மருமகளின் கட்டுப்பாட்டில் ஒரு “தேசிய முதலீட்டு நிதியம்” செயல்படுகிறது. பல பில்லியன் டாலர்கள் அளவிலான மக்களின் பணம் எந்த வெளிப்படைத் தன்மையும் இன்றி அவரால் கையாளப்படுகிரது.

வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான பல கட்சி ஆட்சி முறை என்று சொல்லிக் கொண்ட போதிலும் கடந்த 60 ஆண்டுகளாக அங்கு லீயின் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைத் தொடர்ந்து கடுமையான அபராதம் விதித்து ஓட்டாண்டி ஆக்குவதோடு மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாதவாறும் செய்யப்பட்டது. கடந்த தேர்தலில் எதிர்க் கட்சிகள் 40 சத வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் நாடாளுமன்றத்தில் 10 சத இடங்களைத்தான் பெற முடிந்தது.

ஊழல்கள் இல்லைதான். ஆனால் ஊழலை ஒழிப்பது என்கிற பெயரில் அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அளிக்கப்படும் அபரிமிதமான ஊதியம் கடும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் இங்கு முதலீடு செய்யப்படும் வெளி நாட்டுப் பணங்கள் பெரும்பாலும் தவறான வழிகளில் சம்பாதிக்கப்பட்டவை என்பதையும் மறந்துவிட இயலாது.

ஒன்றை இங்கு அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, வங்க தேசம் முதலான நாடுகளிலிருந்து சென்று அங்கு கட்டுமானத் தொழிலிலும், இதர கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளிகளின் பங்கு இன்றியமையாதது.

2013ம் ஆண்டுக் கணக்குப்படி அங்கு இன்று 1.3 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 760,000 பேர் பயிற்சியற்ற (unskilled) ஆண் தொழிலாளிகள். 210,000 பேர் வீட்டு வேலைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பெண் தொழிலாளிகள் (The Straits Times, Dec 22, 2013).

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பணி செய்து கொண்டிருந்த போதும் லீ இறுதிவரை ‘புலம் பெயர்ந்த தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கான’ ஐ.நா உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. அதிக அளவில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளை அனுப்புகிற நாடுகளுடன் இரு நாட்டு ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை.

வேலை அளிக்கும் நிறுவனங்கள் மூலமாகப் பெறும் விசாக்களுடன் (employer sponsored visas) வரும் தொழிலாளிகள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முதலாளிகள் அளவற்ற அதிகாரத்துடன் சுரண்டிக் கொழுக்க இது வழி வகுக்கிறது. ஊதியம் வழங்க மறுப்பது, இடைவெளி இன்றி நீண்ட பணி நேரம், ஆபத்து விளைவிக்கக் கூடிய வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துதல், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளை ஏற்க மறுத்தல், ஊதிய பாக்கிகளைக் கணக்கிட்டுக் கொடுக்காமலே கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றல் (forced repatriation), வசதிகளற்ற தங்குமிடங்களில் திணித்து அடைத்தல் என இத் தொழிலாளிகள் படும் துயரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்ற 2013 டிசம்பர் 8 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி விபத்தொன்றில் இறக்க நேர்ந்ததை ஒட்டி சுமார் இரண்டு மணி நேரம் 400 தொழிலாளிகள், பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வங்க தேசத்தவர், காவலர்களையும், காவல் வாகனங்களையும் தாக்கிச் சேதம் விளைவித்தபோது சிங்கப்பூர் அரசு அதிர்ச்சி அடைந்தது. வரலாறு காணாத இந்த எதிர்ப்பைக் கண்டு துணுக்குற்றது.

தேங்கிக் கிடந்த வேதனை இப்படி வெடித்துச் சிதறியது. பின்னணியாக உள்ள நியாயமான காரணங்களைக் காண மறுத்த சிங்கப்பூர் அரசு அதை ஒரு குடிகாரர்களின் வெறியாட்டமாகக் கொச்சைப் படுத்தியது. சுமார் 22 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 57 பேர்கள் கட்டாயமாக அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். இனி அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்ப இயலாது. 200 பேர்களுக்கும் மேற்பட்டோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். தொழிலாளிகள் மீது இவ்வளவு கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கப்பூர் அரசு இந்தத் தொழிலாளிகள் வசிக்கும் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் மது விற்பனையை நிறுத்துவது, தொழிலாளர்களை அழைத்துச் செல்ல தனியார் வாகனங்கள் பயன்படுத்தப் படுவதை நிறுத்துவது முதலான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டது.

கடந்த 30 ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் கூலி குறைக்கப்பட்ட இந்தப் புலம் பெயர் தொழிலாளிகளின் உழைப்பு (subsidised labour) முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் பெருகிக் கொண்டுள்ள நிலையில் புலம் பெயர் தொழிலாளிகளின் வரத்து குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

***

லீ குவான் யூ வைப் பொருத்த மட்டில் ஜனநாயகம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான தடைக் கல். இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒரே நேரத்தில் சாத்தியம். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றின் ஆகக் கறை படிந்த காலமாகிய இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தை (1975- 77), “இந்தியாவில் ஒழுங்கை நிலை நாட்ட இந்திரா செய்த சரியான காரியம்…” எனப் பாராட்டியவர் லீ. “நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமை இல்லை. அது அரசின் கருணை” என இந்திரா அரசு அன்று சொல்லியது நினைவிருக்கலாம். அதே போல அருகிலுள்ள மியான்மரின் இராணுவ சர்வாதிகார ஆட்சியையும் ஆதரித்து வந்தவர்தான் லீ.

பி.பி.சி. நேர்காணல் ஒன்றில் ஹாங்காங் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) நிறுவனர் மார்டின் லீ சொன்னது போல, “லீ குவான் யூ சொந்த மக்களை என்றும் நம்பியதில்லை. அவரால் அம் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தைத் தரவே இயலாது… அங்கு ஜனநாயகம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் எப்போதும் அங்கு மக்கள் இழப்புகளை மட்டுமே சந்திக்க இயலும்…” (Quoted by Muhammed Cohen, Forbes India, April 30, 2015). நீதி மன்றங்களும் அவர்களது இழப்புகளை ஈடு செய்ததில்லை.

“நீங்கள் ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுங்கள். நான் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்…” என்பதுதான் லீ குவான் யூ அவரது மக்களிடம் மேற்கொண்ட பேரம் (bargain). மாற்று விருப்பிற்கு இடமில்லாமல் திணிக்கப்பட்ட கட்டாயமான பேரம் அது. மக்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொண்டதாகச் சொல்ல இயலாது. சராசரித் தனிநபர் வருமானம் மிக அதிகமாக இருந்தபோதும் மக்கள் அங்கு திருப்தியுடன் வாழ்வதாகச் சொல்ல முடியாது. வெளி நாட்டில் அகதிகளாக வாழும் சிங்கப்பூரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு வேளை மனிதர்கள் வாய், வயிறு, பிறப்புறுப்பு ஆகிய மூன்றுடன் மட்டும் பிறந்திருந்தால், லீ குவான் யூவின் பேரத்தை அவர்கள் விருப்புடன் ஏற்று வாழலாம். ஆனால் மனிதர்கள் அரசியல் மிருகமாயிற்றே.

இது ரொம்ப நாள் தாங்காது. சிறைப்பட்டுள்ள அமோஸ் லீயின் எதிர்க்குரல் இதற்கொரு நிரூபணம்.

http://vallinam.com.my/version2/?p=2062

  • கருத்துக்கள உறவுகள்
On ‎5‎/‎3‎/‎2018 at 8:52 AM, MEERA said:

ஏற்கனவே உங்கட துரோகி அண்ணர் சொல்லிவிட்டார்......

கஜேந்திரக்குமாரின்  வாலுகளுக்காக நான் இதை சொல்லியேயே ஆகணும்....தலைவரின்  பிணம் என்று ஒன்றைக் காட்டுவதற்கு கருணா போனவர் தான்.விரும்பி போயிருக்கலாம் அல்லது கடடாயத்தில் போயிருக்கலாம் அது அல்ல நான் சொல்ல வந்தது...பிரேதத்தை அடையாளம் காட்டிய பின்னர்  நான் தான் அடுத்த  தலைவர் என்று என் அண்ணன் சொன்னவரோ?{ அப்படி சொன்னாலும் அவர் பின்னால் மக்கள் போவார்களோ என கேட்க வேண்டாம். க.குமாருக்கு பின்னால் போவார்களா என்ன?}
யார் பதவிக்கும், படத்திற்கும் அலையினம் என்று இப்பவாவது விளங்கிக் கொள்ளுங்கோ 
நீங்கள் அவரை உசுப்பேத்தி அடுத்த தேசிய தலைவர் தான் என சொல்லும் படி வைத்திடாதீங்கோ
 

தலைவரின் இறப்பை தனி ஒரு நபரின் இறப்பாகவும் அவரை ஒரு அடயாளமாக மட்டும் அணுக முற்படும் அறியாமையை தவிர இதில் வேறு ஒன்றும் இல்லை. 

 
தலைவரின் இறப்பு ஒரு செயலின் இறப்பு. அச் செயலானது எமது சமூக அரசியல் வரலாற்றில் தலைவருக்கு முன்பும் பின்பும் அந்நியமானதும் வெறும் வாய்ப்பேச்சே வரலாறாகவும் இருந்தது. 
 
தலைவரின் இறப்பு தமிழீழ நிழல் அரசாங்கத்தின், நிர்வாகத்தின் இறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தளத்தின் இறப்பு. 
 
பல்வேறு படயணிகளும் நிர்வாகப்பிரிவுகளும் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்தியாகமும் தமிழீழம் எங்கும் காவலும் சண்டையும் என என்நேரமும் செயற்திறனுடன் மூன்று தாசாப்தத்துக்கும் மேலாக இயங்கிய புலிப்படையின் இறப்பு அல்லது முடிவு. 
 
காணாமல்ஆக்கப்பட்டோருக்காக ஆகக் குறைந்தது அந்த மக்களோடு சேர்ந்து ஒரு அறவழி அரசியல் போராட்டத்தை வீரியத்துடன் செய்யமுடியாத இந்த அரசியல் தலமைகள் அடுத்த பிரபாகரன் என்று கதைக்க முற்படுவது அபத்தமானது. 
 
எரியிற வீட்டில் புடுங்குவது வரை லாபம் என்பதே தற்போதைய ஈழத்தமிழர்களின் அரசியல் தலமைகளின் போக்கு. 
 
பிரபாகரன் இருக்கின்றார் என்பவர்களும் சரி இறந்துவிட்டார் என்பவர்களும் சரி அடுத்த தலைவர் என்பவர்களும் சரி ஒன்றை உணர்வது அவசியம் அதுவானது பிரபாகரன் தமிழர்களுக்காக இருந்த அரசியல் தளம், தமிழர்களுக்கான அரசியல், நிழல் அரசும் அது சார்ந்த நிர்வாகங்களும், அதற்கும் மேலாக முப்படைகளையும் கொண்ட படையணிகள். இறந்தது இவை எல்லாமும் தான். இவைகளின் இருந்து பிரபாகரனை பிரித்து அவருக்கு உயிர்கொடுப்பதோ இல்லை இறப்பிப்பதோ அறியாமை. 
 
கிளிநொச்சியில் சாராயக்கடை திறக்க கோரும் தமிழ் அரசியல் தலமைகளுக்கும் பிரபாகரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது வேறு இது வேறு. 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

இருப்பரேயானால் அவருக்கு அரசியல் தீர்வில் துளியளவும் நம்பிக்கை இல்லை. அப்படி நம்பிக்கை இருக்குமாயின் அரசியல் தீர்வு  முயற்சிகளுக்கு பின்னணியில் அவரின் கட்டுப்பாடு இருப்பதை அடையாளம் காண கூடியதாக இருந்திருக்கும்.

 

ஆம், சரியாக சொன்னீர்கள் துளியளவும் அரசியல் தீர்வில் நம்பிக்கையில்லாத பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இப்போது அரசியல் இல்லாததனால்தான், 

 பாலாறும் தேனாறும் ஓடும் எமக்கான அரசியல் தீர்வு கிடைச்சு ஏழெட்டு வருஷமாச்சு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.