Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்…

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, Jude said:

விகாரையை பற்றி பேசத்தொடங்கினோம். முதலில் அதை முடித்து விட்டு உங்கள் கேள்விக்கு வரலாம். நல்லூர் வீதியில் விகாரை கட்ட நீங்கள் சம்மதமா இல்லையா?

அவசியமில்லை.

  • Replies 63
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 6:56 PM, Jude said:

தமிழரின் வெளிநாட்டு பணத்தினால் தென்பகுதியில் நிலம் விலையேறி விட்ட நிலையில் வடக்குக்கு அவர்கள் வந்து குடியேற வேண்டிய தேவையும் அதனால் அவர்கள் வழிபட விகாரைகளும் தேவையாக உள்ளன.

வடக்கில் நிலம் என்ன சும்மாவா கொடுக்கிறார்கள்?

ஒப்பீட்டளவில் அனைத்து வசதிகளும் கொண்ட கொழும்பின் வாழ்விடங்களுக்கு உள்ள விலையைவிட... அனைத்து வசதிகளும் குறை நிரம்பலாகவே உள்ள வடபகுதியில் வாழ்விடங்கள் வியாபார நிலையங்களின் கொள்விலை மிக அதிகம்...

ஏதேதோ சொல்லி சமாளிக்க முயற்சிக்கிறீர்கள்...உங்கள் விளக்கம் ஏற்புடையதா என்று மீண்டும் சரி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

ஒப்பீட்டளவில் அனைத்து வசதிகளும் கொண்ட கொழும்பின் வாழ்விடங்களுக்கு உள்ள விலையைவிட... அனைத்து வசதிகளும் குறை நிரம்பலாகவே உள்ள வடபகுதியில் வாழ்விடங்கள் வியாபார நிலையங்களின் கொள்விலை மிக அதிகம்...

கொழும்பிலும் பார்க்க வடக்கில் வாழ்விடங்கள் விலை கூடவாக இருக்கிறது என்றால் வடக்கு கொழும்பிலும் பார்க்க பணம் செழித்த பிரதேசமாக இருக்கிறது - பாதிக்க பட்ட பிரதேசமாக தெரியவில்லை. பணம் செழித்த பிரதேசத்துக்கு பணம் தேடும் ஏழை சிங்கள மக்கள் வருவது நியாயம் தானே? தமிழ் மக்களும் இப்படி தானே சிங்கள பகுதிகளுக்கு போனார்கள்?

On 5/9/2018 at 10:58 PM, குமாரசாமி said:

சகல வளங்களும் இருக்கும் தென் பூமியை விட்டு வரட்சியை நோக்கி வரும் வடபகுதிக்கு உங்கள் சிங்கள உறவுகள் வர துடிப்பதன் காரணம் என்ன?

On 5/9/2018 at 11:50 PM, குமாரசாமி said:

நான் கேட்ட தமிழர் பிரச்சனைக்கு பதிலேதுமில்லாமல் புத்தவிகாரை கட்டுவதிலேயே நிற்கின்றீர்கள்.

On 5/9/2018 at 11:32 PM, Jude said:

நல்லூர் கோவிலுக்கு பார்க்கும் தூரத்தில் விகாரை கட்ட சிங்களவருக்கு இல்லாத உரிமை தமிழருக்கு தலதா மாளிகைக்கு பார்க்கும் தூரத்தில் சைவ கோவில் கட்ட இருக்கிறதே?

வெளிநாட்டு பணத்துடன் தமிழர் முண்டியடித்து தென் பகுதியை ஆக்கிரமிப்பதால் வெளிநாட்டு பணமில்லாத ஏழை சிங்களவர் வரட்டு வடக்குக்கு வந்து காடுகளை கடும் உழைப்பால் களனியாக்கி வாழ விரும்புகிறார்கள். நீங்களோ என்றால் வரட்டு வடக்கும் எனக்கு தான் வேண்டும், வளம் மிக்க தெற்கையும் வாங்கி சைவ கோவில் கட்டுவேன் என்று நிற்கிறீர்கள். துட்ட கைமுனு சரியாக தான் சொன்னான் "தெற்கில் பெரும் கடல், வடக்கில் கெட்ட தமிழன், நாம் எங்கே போக முடியும்?" என்று.

ஆமா உங்கடை கேள்விக்குத்தானே விடை அளித்துள்ளார். இதுவும் புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2018 at 3:19 AM, Jude said:

தலதா மாளிகையில் நின்று பார்த்தால் உயர்ந்த கோபுரத்துடன் சைவ கோயில் நடை தூரத்தில் இருக்கிறதே? மகாநாயக்கே தேரர்கள் இந்த கோயிலை அகற்றுமாறு கேட்டார்களா அல்லது எதிர்த்தார்களா? நல்லூர் கந்தனுக்கு மட்டும் ஏன் விகாரைக்கு எதிர்ப்பு?

தற்போது புதிது  புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகளுக்கு நிகராக தெற்கில் பிள்ளையார் சிலைகளை நிறுவ  இனவாத சிங்கள மக்களோ, அரசோ விடுமா??

பிள்ளையார் இப்ப எல்லா புத்த கோவிலிலும் சங்கமம். பிள்ளையார் கனவில நினைக்காத இடத்திலையே குந்தி இருக்கிறார். பிள்ளையார் எப்படி புத்த கோவிலில குந்தினார் என்று முதலில் ஆராய்வோம் அப்புறமா நாம எங்க பிள்ளையாரை வைக்கலாம் என்று பட்டிமன்றம் வைப்போம். ☺️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஜீவன் சிவா said:

ஆமா உங்கடை கேள்விக்குத்தானே விடை அளித்துள்ளார். இதுவும் புரியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்யலாம்.

சைவக்கோவில்கள் தமிழர்களால் சிங்களப்பிரதேசங்களில் திணிக்கப்படவில்லை என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேயில்லை.....விளங்கிக்கொள்ளும் பக்குவமும் உங்களிடமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஜீவன் சிவா said:

பிள்ளையார் இப்ப எல்லா புத்த கோவிலிலும் சங்கமம். பிள்ளையார் கனவில நினைக்காத இடத்திலையே குந்தி இருக்கிறார். பிள்ளையார் எப்படி புத்த கோவிலில குந்தினார் என்று முதலில் ஆராய்வோம் அப்புறமா நாம எங்க பிள்ளையாரை வைக்கலாம் என்று பட்டிமன்றம் வைப்போம். ☺️

சிங்கள மக்களுக்கு பிள்ளையாரையும் முருகனையும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு....ஆனால் தமிழ்மக்களுக்கு புத்தரை பிடிக்கவில்லையே..... 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்களுக்கு பிள்ளையாரையும் முருகனையும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு....ஆனால் தமிழ்மக்களுக்கு புத்தரை பிடிக்கவில்லையே..... 

இதில் இரண்டு இனத்தவர் மீதும் தப்பு உண்டு.....
சிங்களவர்கள் புத்தர் தங்க‌ளுடைய தெய்வம் என்று அடையாளப்ப்டுத்தி அதன்மூலம் தமிழரை அடக்க முய‌ன்றமை,
புத்தரை கும்பிடுகிறவ‌ர்கள் எல்லாம் சிங்களவர் என தமிழர்கள் நினைத்து புத்தர் மீது வெறுப்பை ஏற்படுத்தியமை....
புத்தமதம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அழிந்து போனமை.
தமிழ்நாட்டில் பெளத்தம் நிலைத்திருந்திருந்தால் இன்று ஈழத்தமிழர்களில் கனிசமான‌ தொகையினர் பெளத்த் மதத்தை பின்ப‌பற்றியிருப்பார்கள் ...சிறிலங்கா சரித்திரமும் வெறு மாதிரி இருந்திருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

நாகர்கள் ஸ்பானிஸ் பேசி கொண்டு இருந்தார்கள் ......
பின்பு தமிழர்கள் அவர்களை ஆக்கிரமித்து ....
அவர்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்தார்கள்.

தெலுங்கு ... கன்னடம் .... மலையாளம் மூன்றும் 
தமிழின் கிளைகள். இதற்கு முன்பே தமிழர்கள் இலங்கையில் 
வாழ்கின்றார்கள்.

புத்தனுக்கே மூலம் தமிழனின் சமண சமயம்தான் 
புத்தனுக்கே மதம் கிடையாது. புத்தத்தை மதமாக்கியவர்களே தமிழர்கள்தான் 
சைவமதத்திக்கு முன்னைய காலம் .... தமிழர்களின் மதம் புத்தமும் சமணமும் மட்டுமே. 

On 5/10/2018 at 1:56 AM, Jude said:

தமிழரின் வெளிநாட்டு பணத்தினால் தென்பகுதியில் நிலம் விலையேறி விட்ட நிலையில் 

நான் இங்கு விகாரை கட்டுவதைப்பற்றி கதைக்க வரவில்லை.

ஆனால் ஒட்டுமொத்தமாக தென்பகுதியில் நிலம் விலை கூடிவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை. ஆனால் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை சொய்ஸ்ப்புர மற்றும் கொட்டஹீனா போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகமாக வீடு காணி வாங்க விரும்புவதால், நிலத்தின் விலை மற்றும் வீட்டின் விலை மிகவும் (more than 200% increased within last 8 years) அதிகரித்துள்ளது. ஆனால் விலை கூடியதுக்கு மேலும் பல காரணிகள் உள்ளன. இதனால் பல சிங்கள மக்கள், இந்தப் பகுதியில் உள்ள தமது காணிகளை வித்துவிட்டு வேறு இடங்களுக்கு (பெரும்பாலும் மொரட்டுவ, Polgasowita, பன்னிப்பிட்டிய மற்றும் ஹோமாகம போன்ற உள்பிரதேசங்களுக்கு) மலிவான விலையில் காணி  வாங்கி வீடு கட்டி சென்றுவிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெரும் தொகை பணத்தை வங்கியில் சேமிக்க முடிகிறது அல்லது வேறு இடங்களில் முதலீடு செய்ய முடிகிறது மற்றும் அந்த இடங்களில் கொழும்புடன் ஒப்பிடும்போது வாழ்க்கை செலவும் குறைவு

ஒப்பீட்டளவில், யாழ்ப்பாணத்தில் ஒரு பரப்பு காணியின் விலையைவிட தென் பகுதியில் காணி விலை குறைவு. இப்படியான மலிவான காணிகளை வாங்க உள்பிரதேசங்களுக்கு செல்லவேண்டும். அந்த இடங்களில் தமிழ்மக்களின் அளவு புறக்கணிக்ககூடியதாக இருக்கிறது. அத்துடன் தமிழ் மக்கள் இப்படியான இடத்தில காணி வாங்கவோ அல்லது குடியிருக்கவோ முனைப்பு காட்டுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலான வெளிநாட்டு அல்லது வெளிநாடு பணஉதவி பெறும் தமிழர்களில் இலக்கு வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை சொய்ஸ்ப்புர மற்றும் கொட்டஹீனா பகுதிகளில் ஏதுவாது ஒரு இடத்தில வீடு வாங்குவதுதான். இதற்கு அடுத்ததாக அவர்களின் தெரிவு யாழ் நகரப்பகுதியில் அல்லது வவுனியா நகர பகுதியில் காணி அல்லது வீடு வாங்குவதுதான். இதன்மூலம் யாழ் மற்றும் வவுனியா நகரப்பகுதியில் காணி விலை மிகவும் அதிகரித்துள்ளதுவெளிநாடு பண உதவி இல்லாத தமிழ் குடும்பங்கள் கொழும்புக்கு நிதாந்தரமாக குடிபெயர விரும்புவதில்லை (சில விதிவிலக்குகளும் உண்டு)

ஆக மொத்தத்தில் கொழும்பு மேற்கு பகுதியில் காணி விலை மிகவும் கூடியது என்னோவோ உண்மைதான். அதற்காக வெளிநாட்டு அல்லது வெளிநாடு பணஉதவி பெறும் தமிழர்களால் தென்னிலங்கையில் காணி விலை கூடிவிட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஜீவன் சிவா said:

பிள்ளையார் இப்ப எல்லா புத்த கோவிலிலும் சங்கமம். பிள்ளையார் கனவில நினைக்காத இடத்திலையே குந்தி இருக்கிறார். பிள்ளையார் எப்படி புத்த கோவிலில குந்தினார் என்று முதலில் ஆராய்வோம் அப்புறமா நாம எங்க பிள்ளையாரை வைக்கலாம் என்று பட்டிமன்றம் வைப்போம். ☺️

கேள்வி தெற்கில் நாம் விரும்பிய இடத்தில் வடகிழக்கில் புத்தர் சிலைகளை வைப்பது போல் வைக்க முடியுமா என்பது தான். அவ்வளவு சுதந்திரம் சிறிலங்காவில் உள்ளதா என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Shanthan_S said:

ஆக மொத்தத்தில் கொழும்பு மேற்கு பகுதியில் காணி விலை மிகவும் கூடியது என்னோவோ உண்மைதான். அதற்காக வெளிநாட்டு அல்லது வெளிநாடு பணஉதவி பெறும் தமிழர்களால் தென்னிலங்கையில் காணி விலை கூடிவிட்டது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து

சாந்தன், நீங்களே உங்கள் முடிவுக்கு மாறான தகவலை முவைத்து இருக்கிறீர்களே?

"ஆனால் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, ரத்மலானை சொய்ஸ்ப்புர மற்றும் கொட்டஹீனா போன்ற பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகமாக வீடு காணி வாங்க விரும்புவதால், நிலத்தின் விலை மற்றும் வீட்டின் விலை மிகவும் (more than 200% increased within last 8 years) அதிகரித்துள்ளது. ஆனால் விலை கூடியதுக்கு மேலும் பல காரணிகள் உள்ளன. இதனால் பல சிங்கள மக்கள், இந்தப் பகுதியில் உள்ள தமது காணிகளை வித்துவிட்டு வேறு இடங்களுக்கு (பெரும்பாலும் மொரட்டுவ, Polgasowita, பன்னிப்பிட்டிய மற்றும் ஹோமாகம போன்ற உள்பிரதேசங்களுக்கு) மலிவான விலையில் காணி  வாங்கி வீடு கட்டி சென்றுவிடுகிறார்கள்." 

ஆக, மொரட்டுவ, Polgasowita, பன்னிப்பிட்டிய மற்றும் ஹோமாகம போன்ற பிரதேசங்களில் காணிகளை விற்ற சிங்கள மக்கள் எங்கே போகிறார்கள்? அவர்கள் மலிவான வேறு பகுதிகளுக்கு சென்று காணி வாங்கி அங்கு விலையை ஏற்றுகிறார்கள். வடபகுதியில் குடியேறும் சிங்கள மக்கள் மலிவான அல்லது அரசின் வசமுள்ள தரிசு நிலங்களிலேயே குடியேறுகிறார்கள். இந்த சிங்கள மக்கள் தமிழ் பேச கூடியவர்கள். முன்னர் இந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு தென் பகுதியில் விலையேறும் காணிகளிலும் பார்க்க  வடபகுதியில் வறண்ட பகுதிகளில் உள்ள மலிவான காணிகள் வாங்க கூடியவையாக இருக்கின்றன. வடபகுதியில் வெளிநாட்டு பணம் உள்ளவர்களும் ஏன் உள்நாட்டு தமிழரும் விரும்பி  வாங்கும் காணிகளை  சிங்கள மக்கள் வாங்கும் நிலையில் இல்லை. 

11 hours ago, nunavilan said:

கேள்வி தெற்கில் நாம் விரும்பிய இடத்தில் வடகிழக்கில் புத்தர் சிலைகளை வைப்பது போல் வைக்க முடியுமா என்பது தான். அவ்வளவு சுதந்திரம் சிறிலங்காவில் உள்ளதா என்பதே.

வடகிழக்கில் புத்தர் சிலைகளை விரும்பிய இடத்தில் வைக்க முடியுமா? நல்லூர் கோவிலுக்கு முன்னால் அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்கரின் பெரிய கோவிலுக்கு முன்னால் ஆயுத முனையில் கூட புத்தர் சிலையை வைக்க முடியுமா? அவ்வளவு சுதந்திரம் இன்று சிங்கள இராணுவ தளபதிகளுக்கு கூட இல்லையே? எந்த இடத்திலும் சிலை வைக்க சுதந்திரம் எவருக்கும் பெரும்பாலான நாடுகளில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அப்போ வடக்கு கிழக்கில்  தமிழ் மக்கள் விரும்பிய இடத்திலா புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் ஒரு இடம் நீங்கள் சொல்லுங்கள். அங்கு ஒரு  பிள்ளையார் சிலை வைக்க முடியுமா என சொல்லுங்கள். யூட் உங்களை போல ஒரு நடிகனை இன்று வரை காணவில்லை.

200w.webp

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

கேள்வி தெற்கில் நாம் விரும்பிய இடத்தில் வடகிழக்கில் புத்தர் சிலைகளை வைப்பது போல் வைக்க முடியுமா என்பது தான். அவ்வளவு சுதந்திரம் சிறிலங்காவில் உள்ளதா என்பதே.

2 hours ago, nunavilan said:

அப்போ வடக்கு கிழக்கில்  தமிழ் மக்கள் விரும்பிய இடத்திலா புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் ஒரு இடம் நீங்கள் சொல்லுங்கள். அங்கு ஒரு  பிள்ளையார் சிலை வைக்க முடியுமா என சொல்லுங்கள்.

தமிழ் மக்கள் விரும்பிய இடத்தில் மட்டும்  தான் வட கிழக்கில் புத்தர் சிலைகளை வைக்க  வேண்டுமா?

வட கிழக்குக்கு வெளியே சிங்கள மக்கள் விரும்பிய இடத்தில் மட்டும்  தான் சைவ கோவில்கள் இருக்கலாம் என்றால் ஏற்று கொள்வீர்களா? எனக்கு அனுராதபுரத்தில் உள்ள சைவ கோவில்கள் பற்றி தெரியாது. ஆனால் கண்டியில் உள்ள சைவ கோவில் மற்றும் கொழும்பில் உள்ள சைவ கோவில்கள் பற்றி தெரியும். சிங்கள மக்கள் விரும்பாவிட்டால் இந்த கோவில்களை அகற்ற நீங்கள் சம்மதித்தால் வட கிழக்கிலும் அதே விதமாக தமிழ் மக்கள் விரும்பாத காரணத்தால் புத்தர் சிலைகளையும் அகற்றலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

எனக்கு அனுராதபுரத்தில் உள்ள சைவ கோவில்கள் பற்றி தெரியாது. ஆனால் கண்டியில் உள்ள சைவ கோவில் மற்றும் கொழும்பில் உள்ள சைவ கோவில்கள் பற்றி தெரியும். சிங்கள மக்கள் விரும்பாவிட்டால் இந்த கோவில்களை அகற்ற நீங்கள் சம்மதித்தால் வட கிழக்கிலும் அதே விதமாக தமிழ் மக்கள் விரும்பாத காரணத்தால் புத்தர் சிலைகளையும் அகற்றலாம். 

இப்படியான அறிவாளிகளுக்கெல்லாம்  கனடாவில் எப்படி  குடியுரிமை கிடைக்கிறது. கனடா அவ்வளவு மட்டமான நாடா?

கோவில்கள் இருப்பது அங்கு இருக்கும் மக்களின் தொகையையும்  அவர்கள் அங்கிருக்கும் கால அளவையும் பொறுத்தது. வீம்பிற்கு  விகாரை  கட்டுவதையும் காலா காலமாக இருக்கும் கோவில்களையும் ஒப்பிடும் உங்கள் அறிவே அறிவு.

  • கருத்துக்கள உறவுகள்

காணி வாங்கி குடியேறுவதற்கும் அரசாங்கம் வில்லங்கமாக குடியேற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாத ஆக்கள் எங்கையாவது வடக்கு கிழக்கில் காணி வாங்கி குடியேறிய சிங்களவரை காட்டுங்கோ பார்ப்பம் அல்லது எத்தனை வீதமான சிங்களவர் காணி வாங்கிக் குடியேறியிருக்கினம்.

11 hours ago, Jude said:

வடகிழக்கில் புத்தர் சிலைகளை விரும்பிய இடத்தில் வைக்க முடியுமா? நல்லூர் கோவிலுக்கு முன்னால் அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்கரின் பெரிய கோவிலுக்கு முன்னால் ஆயுத முனையில் கூட புத்தர் சிலையை வைக்க முடியுமா? அவ்வளவு சுதந்திரம் இன்று சிங்கள இராணுவ தளபதிகளுக்கு கூட இல்லையே? எந்த இடத்திலும் சிலை வைக்க சுதந்திரம் எவருக்கும் பெரும்பாலான நாடுகளில் இல்லை.

பிக்குவை எங்கு தகனம் செய்தவர்கள் ? 

On 5/12/2018 at 11:18 PM, குமாரசாமி said:

சிங்கள மக்களுக்கு பிள்ளையாரையும் முருகனையும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு....ஆனால் தமிழ்மக்களுக்கு புத்தரை பிடிக்கவில்லையே..... 

புத்தர் அமைதியை அளவுக்கு அதிகமா போதித்துவிட்டு தமிழரை இனவழிப்பு செய்துவிட்டார் எனும் கோபம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Eppothum Thamizhan said:

இப்படியான அறிவாளிகளுக்கெல்லாம்  கனடாவில் எப்படி  குடியுரிமை கிடைக்கிறது. கனடா அவ்வளவு மட்டமான நாடா?

கோவில்கள் இருப்பது அங்கு இருக்கும் மக்களின் தொகையையும்  அவர்கள் அங்கிருக்கும் கால அளவையும் பொறுத்தது. வீம்பிற்கு  விகாரை  கட்டுவதையும் காலா காலமாக இருக்கும் கோவில்களையும் ஒப்பிடும் உங்கள் அறிவே அறிவு.

அட உந்த மனிசன் கனடா சிற்றிசனே? கோதாரிவிழ நான் பாக்கிஸ்தானோ ஆப்கானிஸ்தானோ எண்டெல்லே நினச்சுக்கொண்டிருக்கிறன்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

இப்படியான அறிவாளிகளுக்கெல்லாம்  கனடாவில் எப்படி  குடியுரிமை கிடைக்கிறது. கனடா அவ்வளவு மட்டமான நாடா?

1 hour ago, குமாரசாமி said:

அட உந்த மனிசன் கனடா சிற்றிசனே? கோதாரிவிழ நான் பாக்கிஸ்தானோ ஆப்கானிஸ்தானோ எண்டெல்லே நினச்சுக்கொண்டிருக்கிறன்..:grin:

எந்த கனேடிய அறிவாளி பற்றி இப்படி அல்லல் படுகிறீர்கள்? கனடா உள்ளே எடுத்து வைத்திருக்கும் போக்கிடமற்ற மக்கள் தொகையில் இருந்தே தெரியவில்லையா கனடா பற்றி? 

4 hours ago, spyder12uk said:

பிக்குவை எங்கு தகனம் செய்தவர்கள் ? 

தந்தை செல்வாவையும் முன்னாள் யாழ் மேயர் துரையப்பவையும் தகனம் செய்த பிரதேசத்தில்  அரசுக்கு சொந்தமான  நிலத்தில் யாழ் தமிழ் நீதிபதியின் அனுமதியுடன் யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் வாழ்ந்த இந்த பிக்கு தகனம் செய்யப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2018 at 3:18 PM, குமாரசாமி said:

சிங்கள மக்களுக்கு பிள்ளையாரையும் முருகனையும் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு....ஆனால் தமிழ்மக்களுக்கு புத்தரை பிடிக்கவில்லையே..... 

சிங்கள மக்களிலும் பார்க்க தமிழ் மக்களுக்கு இன மத துவேசம் அதிகம் ஆனால் இலங்கையில் தமிழர் பலம் குறைந்தவர்கள். இலங்கையில் தமிழர் எனபது வீதமாகவும் சிங்களவர் இருபது வீதமாகவும் இருந்து இருந்தால் இன்று நாகர்களை இரண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளுள் அடக்கி வைத்து இருப்பது போல சிங்களவர்களையும் அழித்து தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் அடக்கி வைத்து இருப்பார்கள். சில ஆய்வாளர்கள் குறிப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்மையில் முன்னாள் சிங்கள போர் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/12/2018 at 7:55 PM, nunavilan said:

தற்போது புதிது  புதிதாக முளைக்கும் புத்தர் சிலைகளுக்கு நிகராக தெற்கில் பிள்ளையார் சிலைகளை நிறுவ  இனவாத சிங்கள மக்களோ, அரசோ விடுமா??

 உந்தாள்! ஓம் விடுவினம் எண்டு சொல்லிப்போட்டு கப்பித்தாவத்தை பிள்ளையார் கோயிலை உதாரணம் சொன்னாலும் சொல்லக்கூடிய ஆள்....எதுக்கும் கவனம்...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

சிங்கள மக்களிலும் பார்க்க தமிழ் மக்களுக்கு இன மத துவேசம் அதிகம் ஆனால் இலங்கையில் தமிழர் பலம் குறைந்தவர்கள். இலங்கையில் தமிழர் எனபது வீதமாகவும் சிங்களவர் இருபது வீதமாகவும் இருந்து இருந்தால் இன்று நாகர்களை இரண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளுள் அடக்கி வைத்து இருப்பது போல சிங்களவர்களையும் அழித்து தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் அடக்கி வைத்து இருப்பார்கள். சில ஆய்வாளர்கள் குறிப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்மையில் முன்னாள் சிங்கள போர் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள். 

தமிழர்களுக்கு மற்றவர்களிடம் மொழியையோ மதத்தையோ பலவந்தமாக திணிக்கும் பழக்கம் கிடையாது . அப்படி அவர்கள் இருந்திருந்தால் உங்கள் இனத்தோன்றல்கள் வட கிழக்கில் இருந்திருக்காது தோழரே?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழர்களுக்கு மற்றவர்களிடம் மொழியையோ மதத்தையோ பலவந்தமாக திணிக்கும் பழக்கம் கிடையாது . அப்படி அவர்கள் இருந்திருந்தால் உங்கள் இனத்தோன்றல்கள் வட கிழக்கில் இருந்திருக்காது தோழரே?

மறுக்கமுடியாத உண்மை. ஆனால் மற்றவர்கள் திணிப்பதை எல்லாம் தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் வழிபாட்டு நிறைவுகளின்போது `இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க` என்று கூறி முடிக்கிறார்கள். 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.