Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!

October 10, 2018

1 Min Read

chinmayi-vairamuththu.jpg?zoom=3&resize=

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார்.

அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இது என்றும் இவற்றை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் காலம் இதற்கு பதில் சொல்லும் என்றும் வைரமுத்து கூறியுள்ளார்.

இந்த விடயம் இணையத்தளங்கள், தமிழக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என பல்வேறு ஊடக தளங்களிலும் திசைமாறிய விவாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்களை பகிர்ந்து பெண்களு்ககு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்க கொண்ட சமூக வலைத்தள செயற்பாடு, தமிழ் சூழலில் வைரமுத்து – சின்மயி ஆதரவு தரப்புக்களின் மோதலாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களின் இவ் விடயம் தொடர்பான போக்கை அவதானிக்கும்போது, எதற்காக இச் செயற்பாடு தொடங்கப்பட்டது என்பதையே மறக்க வைத்து தவறான பொழுதுபோக்கு ஊக்குவிப்பாக மாறியுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்மயிக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?: வைரமுத்து விளக்கம்!

October 10, 2018
Chinmayi-calls-him-liar-696x464.jpg

கவிப்பேரரசு வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி சுமத்திய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டையடுத்து, இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், பாலியல் புகார் விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து, முதல் முறையாக பேசியிருக்கிறார்.

வைரமுத்து தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.

http://www.pagetamil.com/18490/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு, கவிஞர் வைரமுத்து மறுப்பு..

வà¯à®°à®®à¯à®¤à¯à®¤à¯

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார்.

பிரபலமாகும் ஹாஷ்டாக்

#metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக  பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார். 

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும்  இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

à®à®¿à®©à¯à®®à®¯à®¿

எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்

சின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.

Chinmayi

இது தொடர்பாக ஊடகத்தினர் வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்து அது முடியாத நிலையில், புதன் கிழமையன்று வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். 

ஆனால், வைரமுத்து பொய் சொல்வதாக சின்மயி மீண்டும் தெரிவித்திருக்கிறார். 

Chinmayi

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலிருந்து வெளியாகும் பெரும்பாலான ஊடகங்கள் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் சின்மயி விமர்சனம் செய்திருக்கிறார். 

"வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துய்ப்பவர். இதை சாகும்வரை சொல்வேன். இது தொடர்பாக ஒரு டிக்கரைக்கூட வெளியிடாத தமிழ் செய்தி சானல்கள், தில்லி செய்திச் சானல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டதும் என்னிடம் 'பைட்' கேட்கிறார்கள். முடியாது" என்று கூறியிருக்கிறார். 

சின்மயிக்கு நடிகர் சித்தார்த், இயக்குனர் சி.எஸ். அமுதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

https://www.bbc.com/tamil/india-45808123

இந்தியா ருடே வின் யுரியூப் பதிவின் கீழ் இருந்த கருத்துக்களில் சில.  
 
Quote

This vairamuthu is a wolf in a sheep skin. Earlier too, he stoked a controversy by using derogatory language on Andal,the Hindu Goddess.This fellow must be sued and punished.Shame on him.
----
This vairamuthu talking about Goddess Andal, shame on you man
------
Feeling ashamed of viramuththu... H.raja correct ah dhaan thittiyirukkan...
----
what kind of title is that "Chinmayi Sripaada opens up about being sexually harassed by Vairamuthu"?. she told that incident happened in 2004. Why she kept silent over 14 years?. Most importantly, In 2010, At her wedding ceremony, she got a blessing on his foot. I don't think any girls like getting a blessing who had tried before. Apart from that, she had no proof regarding her speculation. If she has, she should have gone to file a police complaint Instead of speaking in media. Finally, all I can say that vairamuthu sir has been the political target over the past years for trivial gain for the particular party which never done any good for us. Ok, Let's watch the game.

  • கருத்துக்கள உறவுகள்

லைம் லைட்டில் இல்லையென்றால் சனம் மறந்து விடுவினம் கண்டியளோ நல்லதோ கெட்டதோ சனம் பேசிக்கொண்டே இருக்க வேணும் ..முன்னர் இப்படி தான்  இட ஒதுக்கீடு விவகாரத்தில் முகநூலில்   அலப்பறை செய்து சாதி ரீதியாக தான் சார்ந்த அப்போதைய முதல்வர் ஜெ வை துணைக்கு  அழைத்து திருப்பத்தூர் சார்ந்த அரசு உத்தியோகத்தர் ஒருவரை களி தின்ன வைத்தவை.. யார் கண்டது இரண்டும் சொல்லி வைத்து கொண்டு கூட லைம் லைட்டுக்கு வந்திருக்கலாம் . இது பிரியாமல் ஆரியம் / திராவிடம் , பெண்ணியம் /ஆணியம் என புடுங்கு படுறவை பேக்கியமாகவும் இருக்கலாம் . வேறு முக்கிய விடயத்தை மறக்கடிக்க முயற்சியாகவும் இருக்கலாம் யார் கண்டது அவயாளுக்கு தான் உண்மை வெளிச்சம் .

டிஸ்கி:

"எப்பொருள் யாரார் வாய் கேட்பினும் காலநேரத்தை கருத்தில் கொள்க"  ?

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

AE13_E27_D-1_A05-46_E0-_B7_E8-0_F2_D1_F0

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணி இப்ப பலநாளுக்கு பிறகு அம்மா சொன்னா எண்டுது !! 

  • கருத்துக்கள உறவுகள்

இது சிம்யி தனது மீரூ இயக்கத்திற்கு கொடுக்கும் விளம்பரமாகும்.

ஒருவேளை வைரமுத்து சின்னப்பொண்ணுன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருக்கலாம்.. அதை எல்லாம் பாலியல் துன்புறத்தல் என்ற கோணத்தில் பார்ப்பதற்கு தனி விசாரணையும் தீர்ப்பும் வரணும்.

இப்ப எல்லாம்.. சுதந்திரப் போராளிகளையே பயங்கரவாதம் என்று சொல்லிக் கொள்ளும் உலகில்........ சிம்யீ.. தனது ருவிட்டருக்கும்.. சமூக வலைக் கணக்குகளுக்கும் பார்வையாளர்களை இழுக்கச் செய்யும் ஒரு தந்திரமே இது. 

பலிக்கடா.. வைரமுத்து. ?

இதுதான் சொல்லுறது அவளைத் தொடுவானேன்.. அவஸ்தைப் படுவானோன். எப்பவுமே ஆண் என்பவன் பிற மனிதர்களிடம் இருந்து ஒரு சில அடிகள் தள்ளி இருப்பது அவனுக்கும் பாதுகாப்பு.. அவனின் சுயத்துக்கும் செக்கியூரிட்டி. 

இப்ப எல்லாம் ஒரு பெண்ணை தொட்டுப் பேசினாலும்.. பாலியல் துன்புறுத்தல்..

குழந்தையை தொட்டா.. சிறுவர் துன்புறுத்தல்..

ஒரு நண்பனை தொட்டா.. கேய்.. 

இப்படி மனித சமூகம் தனது சமூக வாழ்வியல் நடத்தையை ஒழுக்கத்தை இழந்து தொடர்வது.. சீக்கிரம் மனித இனம் அழிவை சந்திக்கப் போகிறது.. என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம். அதற்கு தீனி போடுது.. சமூக ஊடகங்கள் என்ற பெயரில் நச்சுக்களை விதைக்கும் வியாபார தந்திரங்களே ஆகும். 

குற்றங்களுக்கும்.. நடத்தைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து செல்வதை ஊடகங்கள் சிலவும் தவறான நடத்தை உள்ள மனிதர்களும் தம்மை நியாயப்படுத்த இதை இப்போ கையில் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே.

ஒழுக்கமா உள்ள மனிதர்கள் ஒழுக்கமா கம்முன்னு தானும் தம் பாடுமுன்னு போய்க்கிட்டே இருக்கார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, meme and text

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

கண்களால் பேசியிருப்பான்....கவிஞன்,

ஐயோ...என்னை அழைக்கிறானே...,

என்று அழுது புலம்புகிறாள்..சின்மயி !

உன்னைத் தொட்டானா.....இல்லை,

உனது புடவையாவது களைந்தானா என்றால்..,

இல்லைவே....இல்லை!

காலம் கடந்து விட்டது,

இப்போது நினைவில்லை..என்கிறாள்!

ஆரியம்......,

சீதையைக் காட்டடித் தானே....,

இராவணனை அழித்தது!

அடியே...இலக்குவன் கீறிய கோட்டை,

எதற்காகத் தாண்டினாய் என்றால்...,

ஐயோ...ஐயோ....நினைவில்லை என்றாள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

என்ன பாலியல் துன்புறுத்தல் செய்தாராம் வைரமுத்து?! அது குறித்து ஏதாவது தகவல் உண்டா?! ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இதைப் படித்துப் பார்க்கையில்,

1) வைரமுத்து இவரை தொட்டதில்லை.

2) தொட்டுவிட ஒரு அழைப்பை விடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

இது Me Too இயக்கத்துக்கு போதுமானதல்ல. இளையோர்கள் let’s have a drink tonight என இன்றைய காலங்களில் அழைப்பதுகூட வில்லங்கம் ஆகிவிடுமே, இதன் அடிப்படையில் பார்த்தால்?!

இது உண்மையிலேயே பாலியல் துன்பத்துக்கு ஆளானவர்களின் முயற்சிகளை நீர்த்துப் போக செய்வதில் போய் முடியப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த maybe எல்லாம் நம்பிக்கை கிடையாது..  அதுவும் பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் விடயம்( ? )போக இங்க இவ்வளவு அமளி துமளி நடக்கு .. யாருப்பா ?

memees.php?w=240&img=b3RoZXJfY29tZWRpYW5

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

26 minutes ago, அபராஜிதன் said:

சின்மயியே பிஜேபிக்கு சொம்பு தூக்குது.. இது சின்மயிக்கு சொம்பு தூக்குது!! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

ஐயோ ஐயோ .... இந்த கொடுமையை கேட்க யாருமே இல்லையா?

இந்த பொண்ணு என்ன நிரூபிக்க போகிறா என்றால் இது வைரமுத்துவின் 
கவிதை என்று நிரூபிக்க போகிறாவாம்.
வைரமுத்துவின் கவிதையை நீங்க ... லாபகமாக சொருகுவதில்லை 
என்பதுக்கு என்ன ஆதாரம்?

முதல்ல பிரண்டுக்கு நடந்த கொடுமை என்று தொடங்கி ....
2 நிமிடம் பேசும்போதே எனக்கு நடந்த கொடுமை என்கிறது. 

ஊர் இல்லை பேர் இல்லை ... இதுக்கெல்லாம் வைரமுத்து பதில் சொல்ல வேண்டுமா? 

இந்த கூட்டத்தால் உண்மையாக பாதிக்கபடும் பெண்களுக்கும் நியாயம் தழுவ போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அபராஜிதன் said:

https://instaud.io/2NPD

கவிப்பேரரசு வைரமுத்து மீதான 10-வது பாலியல் குற்றச்சாட்டு. 

அடையாறு கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு விழாவின்போது தனக்கு பூங்கொடுத்து கொடுத்துவிட்டு ஆட்டோகிராப் கேட்ட ஒரு மாணவியிடம் அவரது போன் நம்பரை கேட்டு வாங்கினாராம் வைரமுத்து.

அன்றைய இரவிலேயே அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, அந்தப் பெண்ணை வர்ணித்து ஒரு காமக் கவிதையை வாசித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைரமுத்து இதனை மறுத்தால் தக்க ஆதாரத்துடன் தான் நிரூபிக்கப் போவதாகவும் அந்த மாணவியின் நண்பியான ஒரு பெண் இந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

"என் குரல் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மிகவும் பரிச்சயமானது" என்றும் கூறியுள்ளார்.

"வைரமுத்து இதனை மறுக்கவும் முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது.. ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது"ன்னு போல்டா பேசுதப்பா இந்தப் பொண்ணு..!

வைரமுத்து வாசித்த கவிதையின் ஹைலைட் :

"உன் இடுப்பு ஒரு உடுக்கை..!
உன் மார்பு ஒரு படுக்கை..!"
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

வைர முத்துவின் கள்ளிக்காட்டு இதிகாச நூல் வெளியீட்டிற்கு சென்ற எனது மாமிக்கும் இவ்வாறு நடந்தது 
நள்ளிரவில் போனில் தொடர்பு கொண்டு ஒரு கவிதை வாசித்தார் 
கவிதையின் ஹைலைட் :

ஒரு குச்சி ஒரு குல்பி ..!
நீ செருப்பு நான் பருப்பு ...!
#MeToo #MeTooIndia #MeTooMovement #Vairamuthu #Chinmayi #KavingarVairamuthu Chinmayi Sripada

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால,

குறுக்கு சிறுத்தவளே.....

உன் மார்புக்கு நடுவில செத்துவிட தோனுதடி எனக்கு..

என்று முதல்வன் படத்தில எனக்கு பாடினார் என்று மணிசா கொய்ரால வந்து #Metoo போடப்போகுது...

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.