Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பாஉ வியாளேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஆனார் என டெயிலி மிரர் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த நீங்களே இப்படி தவறாக கூறுவது வேடிக்கையாக இருக்குது. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் அது உண்மையாகாது

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. கிழக்கிலங்கை பத்திரியாளர் சங்கம், கிழக்கு பல்கலைகழக சமூகம் மற்றும் சில கிழக்கு புத்திசீவிகளால் உருவாக்கப்பட்டது தான் த.தே.கூ.

முதன்முதலில் த.தே.கூ தேர்தலில் போட்டியும் போது புலிகள் அவர்களுக்கு வாக்களிக்குமாறு கூட மக்களை கேட்டிருக்கவில்லை. வேட்பாளர்கள் கூட முழுக்க முழுக்க அரசியல் கட்சிகளால் தெரிவு செய்யப்பட்டது

ஆனால் பின்னாளில் புலிகள் த.தே.கூ இனை தம் தேவைகளுக்காக பயன்படுத்த தொடங்கி அவர்களின் உத்தியோகப்பற்றற்ற அரசியல் கட்சி போல ஆக்கியிருந்தனர்.

அண்மையில் இராசதுரை ஐயா கிழக்கு வந்த போது நடந்த சில சம்பவங்களை சொன்னவர்  ஆனால் புலிகள் புராணம் பாடப்பட்டு  வாக்கு சேகரிக்க சென்ற போது அது புலிகள் வளர்த்த கட்சி போல வாக்கு கேட்டு சேகரித்து பின்னாளில் அதை மறுத்தார் அதன் தலைவர் சம்பந்தர் ஐயாவே 

வீடியோ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறன்

  • Replies 51
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் போல் தனியவே தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியல்ல என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல இன்று காத்தான்குடி ஜொலிக்கும் அழகுக்கு மட்டக்களப்பும் நகரும் அந்தளவுக்கு இல்லை காரணம் அரசியலில் பின் தங்கியும் அபிவிருத்தியற்றதாகவே இன்றுவரை காணப்படுகிறது இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி  ஒரு கரண்டு கம்பத்துக்கு லைட்டு போட கூட முடியலை  

அமைச்சு பதவி பெற்றுக்கொள்ளும் முஸ்லீம்களை பற்றி சிந்தித்தால் கிழக்கு ஏன் அபிவிருத்தியடையவில்லை என்பதை நீங்கள் ஊகித்துக்கொள்வீர்கள் :90_wave: 

எது எப்படியிருப்பினும் வியாளேந்திரனின் புதிய அரசியல் மாற்றம் மக்களுக்கு நல்லது பகிர்ந்தால் சந்தோசமே!
முன்னையவர் அமைச்சர் இராசதுரை மாதிரி அல்லாமல்.......:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எது எப்படியிருப்பினும் வியாளேந்திரனின் புதிய அரசியல் மாற்றம் மக்களுக்கு நல்லது பகிர்ந்தால் சந்தோசமே!
முன்னையவர் அமைச்சர் இராசதுரை மாதிரி அல்லாமல்.......:grin:

அந்த ராசதுரையும் தந்திரத்தால் ( ஒரு சிலரின்) வீழ்த்தப்பட்டவரே நாங்கள் அந்த பெரிய அபிவிருத்திகளை விரும்பல கிழக்கில் அடாத்தாக ப்பிடிபடும் நிலங்களை போய் தடுத்தாலே போதும் அது அரசு சார்ப்பானவர் இருந்தால் சட்டம் வளைகிறது அவ்வளவுதால் இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நாளில் கிழக்கு என்பது வேற மாதிரி ஆகிடும் :104_point_left:

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த ராசதுரையும் தந்திரத்தால் ( ஒரு சிலரின்) வீழ்த்தப்பட்டவரே நாங்கள் அந்த பெரிய அபிவிருத்திகளை விரும்பல கிழக்கில் அடாத்தாக ப்பிடிபடும் நிலங்களை போய் தடுத்தாலே போதும் அது அரசு சார்ப்பானவர் இருந்தால் சட்டம் வளைகிறது அவ்வளவுதால் இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நாளில் கிழக்கு என்பது வேற மாதிரி ஆகிடும் :104_point_left:

அமிரால் வேண்டும் என்றே வீழ்த்தப்பட்டவர். அமிர் தனக்கு போட்டியாக ராஜதுரை வந்துவிடக் கூடாது என்பதால் செய்த வேலை அது. கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்தது போன்று தான் அமிரும் செயல்பட்டார் இந்த விடயத்தில் என்று கேள்விபட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

அமிரால் வேண்டும் என்றே வீழ்த்தப்பட்டவர். அமிர் தனக்கு போட்டியாக ராஜதுரை வந்துவிடக் கூடாது என்பதால் செய்த வேலை அது. கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்தது போன்று தான் அமிரும் செயல்பட்டார் இந்த விடயத்தில் என்று கேள்விபட்டேன்

யதார்த்தம் அதுவே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாண வர்த்தகர்களை விரட்டியடித்த கருணா  அதற்கு முன்பே பல கடைகள் முஸ்லீம்களுக்கு  விற்கப்பட்டு விட்டது ஒரு சில கடைகள் தான் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்தது அப்படி கருணா வெளியேற சொன்ன போது முஸ்லீம்களுக்கு ஏன் விற்க வேண்டும் கடைக்காரர்கள் ?? தமிழர்களுக்கு ஏன் விற்கவில்லை?

தமிழர்கள் வாங்க முன்வரவில்லையென்றால் இழுத்து அடைத்துவிட்டு சென்றிருக்க வேண்டும் நீங்கள் கூறியது போல கர்ணா போக சொன்னதும்  ஒட்டு மொத்த யாழ் வர்த்த்க தமிழர்கள் விட்டு செல்லவில்லை கடைகளை 

எப்ப  பாரு வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவல்ல கட்சி புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று வாக்கு போட்டு  ஏமாந்ததுதான் மிச்சம் 

ஒரு மின்குமிழை கூட போட முடியாமல் , ஒரு அபிவிருத்தியை கூட பார்க்க முடியாது போகுமிடத்து ஒரு மாற்று இன எம்பியால் முடியுமாக இருந்தால் அவரை மாலைபோட்டும் , பண்ட் வாத்திய குழு அமைத்தும் வர்வேற்பதில் என்ன தவறு  ஹிஸ்புல்லாவால் அரச காரியங்களுக்கு சில நன்மைகள் தேடி சென்ற போது அவரால் அரச எம்பியால் கைகூடும் போது அவரை வரவேற்பதில் என்ன தவறு 

ஆனால் அபிவிருத்திய விரும்பாத நம்ம சனங்கள் மக்கள் உரிமையையும், வட கிழக்கு இணைப்பும் விரும்பிய மக்கள் அது இல்லையென்று ஜனாதிபதியே கூறிய பின்பு கூட்டமைப்புக்கு வால் பிடிக்காமல் விலகுவது என்னை பொறுத்தவரைக்கும் நல்லது 

கிழக்கு மாகாணமக்கள் தனித்து தமது அபிவிருத்தியையும் தமிழ்மொழியையும் முன்னேற்ற வேண்டும் ,அதே போன்று வடமாகாணமும் செய்ய வேண்டும் .....சிறிலங்கா இப்ப ஒரு தனிநாடு அல்ல அதன் பிரதமர்,ஜனாதிபதியை கூட அந்த மக்களால் தெரிவு செய்ய முடியாத நிலையில் தான் இருக்கின்றார்கள் ....அந்த நாடே  அபிவிருத்திக்கும் ,அரசியல் தலமைக்கும் சர்வதேசத்தை நம்பியிருக்கும் பொழுது நாம் மட்டும் ஏன் வீரவசனம் பேசி எம்மை அழிப்பவர்களுக்கு  துணை போவான்....

சிறிலங்கா பெயரளவில் அங்கிகரிக்கப்பட்ட நாடு ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் இலகுவாக தலையீடு செய்யும் என்பது சக‌லரும் அறிந்த விடயம்...

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் அந்த பெரிய அபிவிருத்திகளை விரும்பல கிழக்கில் அடாத்தாக ப்பிடிபடும் நிலங்களை போய் தடுத்தாலே போதும் அது அரசு சார்ப்பானவர் இருந்தால் சட்டம் வளைகிறது அவ்வளவுதால் இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நாளில் கிழக்கு என்பது வேற மாதிரி ஆகிடும் :104_point_left:

வியாழேந்திரனால் அடாத்தாக பிடிபடும் நிலங்களை தடுக்கமுடியாது. கருணா அம்மான் அவரது மதிப்புக்குரிய தலைவர் மகிந்த மூலம் செய்யமுடிந்தால்தான் உண்டு.!

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2018 at 6:33 PM, தனிக்காட்டு ராஜா said:

அண்மையில் இராசதுரை ஐயா கிழக்கு வந்த போது நடந்த சில சம்பவங்களை சொன்னவர்  ஆனால் புலிகள் புராணம் பாடப்பட்டு  வாக்கு சேகரிக்க சென்ற போது அது புலிகள் வளர்த்த கட்சி போல வாக்கு கேட்டு சேகரித்து பின்னாளில் அதை மறுத்தார் அதன் தலைவர் சம்பந்தர் ஐயாவே 

வீடியோ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறன்

கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு என ஒரு தலமையை உருவாக்கி (கட்சி) அதன் மூலம் பாராளுமன்றம் சென்று பின்பு அமைச்சு பதவியை பெற்று தமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் ...ஒவ்வொரு தடவையும் கட்சி தாவி அமைச்சர் பதவி பெற்று கிழக்கு மாகாண த‌மிழ் மக்களை ஏமாற்றுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் .....வியாழேந்திரன் ,அடுத்த தடவை தேர்தலில் தனித்து கிழக்குமாகாண தமிழர்களுக்காக தேர்தலில் நின்று வெற்றியடைந்து கிழக்குமாகாண‌ தமிழ்பிராந்திய பேரம் பேசும் சக்தியாக வளர வேண்டும் ....தொண்டமான்,மனோகணேசன், போன்று இவர்களும் செயற்பட வேண்டும்...

******

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிலிம்களை எதிர்பதற்காகவாது நிறைய தமிழ் அமைச்சர்களும்,எம்பிக்களும் வட,கிழக்கிற்கு வேண்டும்...முக்கியமாய் கிழக்கிற்கு வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

2015 தேர்தலுக்கு முன்.. மகிந்த இனப்படுகொலையாளி. 2018 ஒக்ரோபரில்.. இனத்தைக் காத்த புனிதர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை.. தமது தேவைக்காகப் பயன்படுத்தினர்.. என்ற விளக்கங்களையும் பார்க்கிறம்.

கனவு காண்பது அவரவர் உரிமை. கடைசியில்..

நல்லாட்சின்னு.. கூவி வாக்குக் கேட்டு.. இப்ப குப்புறக்கிடக்கிற மாதிரி.. மகிந்த பின்னாடி மீண்டும் ஓடி.. படுகுழியில் மீண்டும் விழுந்து கிடக்காட்டில் சரி.

ஆனால்.. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடிவுக்கு தமிழர்களே எப்பவும் முதலில் தடை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

ஆண்ட தமிழினம்.. எனி ஆள்வதென்பது.. வெறும் பகற்கனவு மட்டுமே. இப்படி அடிமைச் சலுகைகளுக்குப் பின் ஓடி சுயநலத்தை தற்காத்துக் கொள்வதே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாகிவிட்டது. ?

வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!

தற்போதைய அரசியல் சூறாவளியை தனது மெகா துரோகத்தின் மூலம் தொடக்கிவைத்த மைத்திரியின் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி மட்ட துரோகங்களும் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளில் வழக்கமாக முஸ்லிம் தரப்பிலிருந்துதான் கட்சித்தாவல்கள் இடம்பெறும். "தொப்பி பிரட்டி விட்டார்கள்", "விலைபோய்விட்டார்கள்" என்று ஆங்காங்கே வசைபாடல்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நூல் கட்டிவிட்டதுபோல "முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் பக்கம்தான்" என்று ஒரேபிடியாக இருந்துகொண்டிருக்க, தமிழ்த்தரப்பிலிருந்து 'முதலாவது வீரர்' தனது சாகசத்தை காண்பித்திருக்கிறார்.

பிரதி அமைச்சுப்பதவி ஒன்றை தூக்கி எறிய, பாய்ந்து பிடித்துள்ள வியாழேந்திரனை அழைத்துக்கொண்டுபோய் ISIS தீவிரவாதிகள் கழுத்து வெட்டிக்கொலை செய்வதற்கு முன்னர் படம் எடுத்து வெளியிடுவதுபோல மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் நடுவில் வைத்து படமெடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். "தமிழனை நாங்கள் வளைத்துவிட்டோம்", "அவர்களின் ஒற்றுமையை நாங்கள் உடைத்துவிட்டோம்" - என்ற ஏளனச்சிரிப்பு மைத்திரியிலும் மகிந்தவிலும் தேனாக வடிய, நடுவில் நாக்கை தொங்கப்போட்ட வண்ணம் நின்றுகொண்டிருக்கிறார் வியாழேந்திரன். 

வியாழேந்திரனின் அரசியல் போக்கு பல மாதங்களாகவே கட்சிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்கின்றன கட்சி வட்டாரங்கள். அண்மையில் கொழும்பு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி, வெளிநாட்டு விஜயங்களில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் சகலதுமே அவர் பாய்வதற்கு தயாராக சண்டிக்கட்டோடுதான் அலைந்துகொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.  கட்சிக்கூட்டங்களுக்கு வராமல் தனது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் கட்சி முடிவுகளுக்கு முரண்டுபிடிப்பவராகவும் அவர் போர்க்கொடி தூக்கிக்கொண்டு நிற்பதை பார்த்து அவ்வப்போது சித்தார்த்தனிடம் சம்பந்தர் நலம் விசாரிப்பது வழக்கம். "ச்சீ....ச்சீ...அவன் எங்கட பெடியன் ஐயா" - என்று சித்தரும் சமாளித்துக்கொள்வார். ஆனால், அவர் கொடுத்து வந்த சேர்டிபிக்கெட் வெள்ளி மாலையோடு காலாவதியாகியிருக்கிறது.

வியாழேந்திரன் தனது கட்சித்தாவலுக்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் கட்சி தாவியதாக சொன்னால், அதைப்போல ஒரு நகைச்சுவை வேறெதுவுமில்லை. ஏனெனில், வியாழேந்திரன் விரும்புவதைப்போல மகிந்த ஆட்சிக்கு வந்தால், கிழக்கில் பிள்ளையான் - கருணாவின் ஆட்சிதான் கொடிகட்டிப்பறக்கும். கருணா இப்போதே "நாளை நமதே" என்று பாடிக்கொண்டு எம்.ஜீ.ஆர் போல வீதியில் திரிகிறார். இந்த சீத்துவத்தில் வியாழேந்திரன் போய் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கூடவே, தான் இவ்வளவு காலமும் போட்ட போலித்தேசிய வேஷத்தை உரிந்துவிட்டு தனது வாக்களர்களின் மத்தியில் எந்த முகத்தோடு போய் நிற்கப்போகிறார் என்பதும் அவர் கணக்கும்போட்டு பார்க்கவேண்டிய இன்னொரு விடயம். 

இது இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்க - 

கூட்டமைப்பிலுள்ள இன்னொரு பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நடைபெறப்போகும் பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். 

அதேவேளை, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் ஆகியோரும்கூட நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நடுநிலமை வகிக்கப்போவதாக குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பந்தர் உரிய வகையில் பதில் கொடுத்திருப்பதாக தெரியவருகிறது. 

ஆட்சியை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் வேட்டையில் மகிந்த தரப்பு தொடர்ந்தும் மும்முரமாக வேலை செய்துகொண்டேயிருக்கிறது. 113 பேரை பையில் போட்டுக்கொண்டுதான் நாடாளுமன்றம் ஏறவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த ராஜபக்ஷக்களும் இவ்வளவு காலமும் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் இறக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. 2009 போரில் எத்தனையோ நாடுகளுக்கே தண்ணியைக்காட்டிய - டீல்களின் "பிதாமகன்" - பசில் ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி பட்டரி உருகி காதுபக்கத்தால் வழிந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லையாம். அவ்வளவுக்கு deal மேல் deal. Double Deal, Triple Deal என்று போய்க்கொண்டிருக்கிறதாம்.

ஆனால், இங்கு நடைபெறும் ஒட்டுமொத்த கட்சிதாவல் படலத்திலும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ரணில் தரப்பிலிருந்துதான் மகிந்த தரப்புக்கு கட்சிதாவல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே தவிர, மகிந்த தரப்பிலிருந்து ஒரு குருவிகூட ரணில் பக்கம் வரவே இல்லை. 

"மகிந்த சிந்தனை" தொடர்கிறது.

ப. தெய்வீகன் (முகனூல்)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும்... எப்படியோ ஆளும் கட் சிக்குத்தான்... செம்பு தூக்கப்  போகின்றார்.
அவர்  தலைமையில் உள்ள  கட்சி.... இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யாமல் கேலிக்  கூத்து  அரசியல் செய்தது தான்... மிச்சம். 
வியாழேந்திரன் நேரடியாகவே  கட்சி மாறி மக்களுக்கு, உருப்படியாக செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

C2-D2149-C-B3-EB-40-F7-A17-A-CF6917-BC3-

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

C2-D2149-C-B3-EB-40-F7-A17-A-CF6917-BC3-

போற போக்கிலை  இன்னும், கன  மீன் மாட்டும் போல் உள்ளது. :grin:
மகிந்த...  மீன்  பிடித்துப் போடுகின்ற கூடை தான்....  சிறியதாக உள்ளது. ?

  • கருத்துக்கள உறவுகள்

“வியாளேந்திரனின் திடீர் அரசியல் தீர்மானம் எம்மையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது”

November 2, 2018

1 Min Read

dplf.jpg?zoom=3&resize=335%2C210

கடந்த சில தினங்களாக வெளிநாடுகளுக்கு விஐயத்தினை மேற்கொண்டு இன்று அதிகாலை தாயகம் திரும்பும் வரை, கட்சியின் தலைமையுடன் தொடர்புகளை கொண்டிருந்த ச.வியாளேந்திரன், நாடு திரும்பியதும் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகள் எம்மால் புரிந்துகொள்ள முடியாதவையாகவுள்ளன. இன்று கட்சியின் சார்பில் அவருடன் தொடர்புகொள்ள தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் எவையும் பயனளித்திருக்கவில்லை.

இன்று நடந்த விடயங்கள் யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அதன் தொடராகவே நடந்தேறியவை என்பதை எம்மால் நம்பமுடியாமல் உள்ளது. அண்மைய நாட்களில் அவரின் செவ்விகள், கலந்துரையாடல்களை அவதானித்தோருக்கும் அவரது இன்றைய தீர்மானம் மிகுந்த அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.

வியாளேந்திரன் அவர்கள் எமது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட போதிலும்கூட, அவரது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் எவற்றிலும் கட்சி இற்றைவரையிலும் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததில்லை. மாறாக அவரை உற்சாகப்படுத்தியும் பூரண சுதந்திரம் வழங்கியுமே வந்திருக்கின்றது.

எமது கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் வியாளேந்திரன் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகவே அவரது இன்றைய நடவடிக்கைகளை நாம் காண்கின்றோம்.

கட்சியின் கட்டுக்கோப்பையும் தீர்மானத்தையும் மீறியதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முரணான வகையில் செயற்பட்டிருக்கும் பா.உ ச.வியாளேந்திரன்மீது விரைவில் கட்சியின் மத்தியகுழுவினூடாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அத்தீர்மானத்தை தமிழரசுக் கட்சியின் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.

மேலும், எவரும் எதிர்பார்த்திராத வகையில் அமைந்த அவரது செயற்பாடு, கட்சியின் அங்கத்தவர்களும் அவரைத் தேர்ந்தெடுத்த மக்களும், அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மீது பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றோம்.

ம.பத்மநாதன்,
நிர்வாகச் செயலாளர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
02.11.2018.

DPLF

http://globaltamilnews.net/2018/101836/

  • கருத்துக்கள உறவுகள்

இதில தமிழரசு கட்சிக்கு என்ன வந்தது....??????? ஓ... நீங்க கூட்டமைப்பை சொல்றீங்களா????? ???

  • கருத்துக்கள உறவுகள்

‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’

Editorial / 2018 நவம்பர் 03 சனிக்கிழமை, பி.ப. 01:09 Comments - 0

image_8e748738b4.jpg

க.விஜயரெத்தினம்

கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார்.

கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்குத் தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்யவேண்டும்.

“தமிழ் மக்கள்மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான், நான் நாடாளுமன்றப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.

“மாறாக கதிரையை சுடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.

“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சுப்பதவியை பாரமெடுத்துள்ளேன்.

“பலர், இதைத் துரோகம் என்கிறார்களே. நான் எப்படி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது, தன்னம்தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

“இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிக்கப்பட்டுக்கொண்டே கொண்டிருக்கின்றது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.

“புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின்மூலம் அமைத்த போது, தனியாக நின்று, நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்? கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மெளனமானர்கள்?

“எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மெளனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே, நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான்தான் மகஜர் கொடுத்தேன்.

“இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.

“வரும் அரசாங்கத்தை எதிர்ப்பார்கள். ஆனால், வரவு – செலவுத் திட்டம், நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா?

“நான், அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.

“தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்பதே இல்லை. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு கிராமத்துக்கு ஒரு இலட்சம் , ஐம்பதினாயிரம் மட்டும்தான் ஒதுக்கமுடியும். ஏனைய சமூகத்துக்கு கோடிக் கணக்கில் அபிவிருத்திக்கு ஒதுக்கின்றார்கள்.

“இதற்காக நான் பல அமைச்சுக்களிடம் கை ஏந்தி அபிவிருத்திகள் செய்தேன். காரணம் தமிழ் மக்களின் தேவைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது. மாகாணசபை, நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன  தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத் துரோகமில்லையா? இதற்கெதிராக நான் மட்டும்தான் குரல் எழுப்பினேன்.

“படித்த தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லை. வேலை கொடுப்பதற்கு அரசியல் பலமில்லை. மாற்று சமூகத்தில் உள்ளவர்களிடம்தான் பணத்தை கொடுத்து வேலையைப் பெறவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

“கல்வித்தராதரம் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள், அரசியல் பலமின்மையால் தட்டிக்கழிக்கப்படுகின்றார்கள். திணைக்களங்களில் நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை தட்டி கேட்கவும், நியமிக்கவும் பலமில்லை.

“இதற்குத்தான் அமைச்சுப் பதவி தேவையாகவுள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்க்கட்சிப் பதவியில் இருப்பதை விட அமைச்சுப் பதவி எடுத்து வேலைத்திட்டங்களைச் செய்வது சிறப்பானதாகும்.

“நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் எதுவிதக் குழப்பமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை. நான் உங்களுக்கு நல்லதைச் செய்யவுள்ளேன்.

“வடக்கு மாகாணத்தில், இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாணத்தின் அரசியல் தலைமைகள் முன்னுதாரணமாக செயற்படுகின்றார்கள். அதேபோன்று, கிழக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் முனைப்புடன் செயற்படும் நம்பிக்கை உள்ளது” என்றார்.

image_bfe962b73f.jpg

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழ்-மக்களைப்-பாதுகாப்பதற்கே-அமைச்சுப்-பதவியை-ஏற்றேன்/73-224664

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு முஸ்லிம்களுக்கு அரபு நாடுகளின் பண, அரசியல்  உதவி  கிடைக்கிறது, சிங்களம் சீனாவின் காலை இறுக்கி பிடிக்கின்றது. இவர்கள் கட்சிகளாக பிரிந்து நின்றாலும் ஒரே வேலை திட்டத்தின் கீழ் செயல் படுகிறார்கள். இவர்கள் போடும் பிச்சையை எடுத்து எம் மக்களுக்கு எதாவது செய்தால்  ஒழிய, ( ஆடு, மாடு, கோழி பண்ணைகள்), இவர்களின் திட்டங்களை தடுக்க எம்மிடம் வலு இல்லை. அதாவது இரு கோடுகள் தத்துவம் தேவை. எம்மால் பெரிய கோடு கீற முடியவில்லை. நாங்கள் கிழக்கை பற்றி இப்ப விவாதிக்கின்றோம், இன்னும் சில வருடங்களில் திருகோணமலை தாண்டி முல்லைத்தீவு/ கிளிநொச்சியை பற்றி விவாதிக்க வேண்டி வரும். ஆண்டவன்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு ஆதரவும் இல்லை, ஆதாரமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

அமிரால் வேண்டும் என்றே வீழ்த்தப்பட்டவர். அமிர் தனக்கு போட்டியாக ராஜதுரை வந்துவிடக் கூடாது என்பதால் செய்த வேலை அது. கருணா பிரதேசவாதத்தை கையில் எடுத்தது போன்று தான் அமிரும் செயல்பட்டார் இந்த விடயத்தில் என்று கேள்விபட்டேன்

முற்றிலும் உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

வியாழேந்திரனால் அடாத்தாக பிடிபடும் நிலங்களை தடுக்கமுடியாது. கருணா அம்மான் அவரது மதிப்புக்குரிய தலைவர் மகிந்த மூலம் செய்யமுடிந்தால்தான் உண்டு.!

அதற்கு கர்ணாவுக்கு பதவி கொடுக்க வேண்டும் மகிந்தர் கொடுத்தால் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் ஆனால்கிழக்கில் பல கைகள் இணைய வேண்டும் அப்படி இணைந்தால் தான் சாத்தியம் 

12 hours ago, ரதி said:

முஸ்லிலிம்களை எதிர்பதற்காகவாது நிறைய தமிழ் அமைச்சர்களும்,எம்பிக்களும் வட,கிழக்கிற்கு வேண்டும்...முக்கியமாய் கிழக்கிற்கு வேண்டும் 

ம்ம் உண்மையும் அதே

2 hours ago, Ahasthiyan said:

கிழக்கு முஸ்லிம்களுக்கு அரபு நாடுகளின் பண, அரசியல்  உதவி  கிடைக்கிறது, சிங்களம் சீனாவின் காலை இறுக்கி பிடிக்கின்றது. இவர்கள் கட்சிகளாக பிரிந்து நின்றாலும் ஒரே வேலை திட்டத்தின் கீழ் செயல் படுகிறார்கள். இவர்கள் போடும் பிச்சையை எடுத்து எம் மக்களுக்கு எதாவது செய்தால்  ஒழிய, ( ஆடு, மாடு, கோழி பண்ணைகள்), இவர்களின் திட்டங்களை தடுக்க எம்மிடம் வலு இல்லை. அதாவது இரு கோடுகள் தத்துவம் தேவை. எம்மால் பெரிய கோடு கீற முடியவில்லை. நாங்கள் கிழக்கை பற்றி இப்ப விவாதிக்கின்றோம், இன்னும் சில வருடங்களில் திருகோணமலை தாண்டி முல்லைத்தீவு/ கிளிநொச்சியை பற்றி விவாதிக்க வேண்டி வரும். ஆண்டவன்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு ஆதரவும் இல்லை, ஆதாரமும் இல்லை.

இன்னும் பல வருடங்களுக்கு பிறகு வடக்கை நோக்கி நகரும் நன்றி அகஸ்தியன் 

15 hours ago, putthan said:

கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தமக்கு என ஒரு தலமையை உருவாக்கி (கட்சி) அதன் மூலம் பாராளுமன்றம் சென்று பின்பு அமைச்சு பதவியை பெற்று தமது பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் ...ஒவ்வொரு தடவையும் கட்சி தாவி அமைச்சர் பதவி பெற்று கிழக்கு மாகாண த‌மிழ் மக்களை ஏமாற்றுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் .....வியாழேந்திரன் ,அடுத்த தடவை தேர்தலில் தனித்து கிழக்குமாகாண தமிழர்களுக்காக தேர்தலில் நின்று வெற்றியடைந்து கிழக்குமாகாண‌ தமிழ்பிராந்திய பேரம் பேசும் சக்தியாக வளர வேண்டும் ....தொண்டமான்,மனோகணேசன், போன்று இவர்களும் செயற்பட வேண்டும்...

ஏற்றுக்கொள்கிறேன் :104_point_left:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ரதி said:

முஸ்லிலிம்களை எதிர்பதற்காகவாது நிறைய தமிழ் அமைச்சர்களும்,எம்பிக்களும் வட,கிழக்கிற்கு வேண்டும்...முக்கியமாய் கிழக்கிற்கு வேண்டும் 

காசி ஆனந்தன் வந்தால் நல்லாயிருக்குமா? tw_glasses:

à®à®¾à®à®¿ à®à®©à®¨à¯à®¤à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாளேந்திரன் கேட்ட கேள்விகள் எல்லாம் உண்மையில் கிழக்கில் முஷ்லிம்களால் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள். அம்பாறையில் நாளுக்கு நாள் தமிழனின் நிலத்தை கள்ள உறுதி போட்டு எடுக்கிறான்  கேட்டால் கேட்பவன் கோர்ட் ஓடருடன் ஜெயிலுக்கு அனுப்பப் படுகிறான். இதெல்லாம் சம்பந்தனுக்கு தெரிந்த்துல் ஏன் ஒரு வார்த்தை பேசுறாரில்லை. கிழக்கில் தமிழனுக்குநடக்கும் ஒரு பிரச்சினையை இந்த கூட்டமைப்பு கேட்டிருக்குமா? இல்ல. தமிழ் தமிழெண்டு  கிழக்கில  தமிளனே இன்னும் கொன்ச நாளில இல்லாமல் போய்விடுவான்.
தமிழ் கூட்டமைப்பும் சம்பந்தனும் அவர் கூட்டமும் ஒண்டும் கிழிக்கப் போறயில்ல. வியாளேந்த்திரன் தமிழ் மக்களுக்கு உபத்திரம் குடுக்காமல் ஏதுல் நல்லதுநடந்தால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

2015 தேர்தலுக்கு முன்.. மகிந்த இனப்படுகொலையாளி. 2018 ஒக்ரோபரில்.. இனத்தைக் காத்த புனிதர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை.. தமது தேவைக்காகப் பயன்படுத்தினர்.. என்ற விளக்கங்களையும் பார்க்கிறம்.

கனவு காண்பது அவரவர் உரிமை. கடைசியில்..

நல்லாட்சின்னு.. கூவி வாக்குக் கேட்டு.. இப்ப குப்புறக்கிடக்கிற மாதிரி.. மகிந்த பின்னாடி மீண்டும் ஓடி.. படுகுழியில் மீண்டும் விழுந்து கிடக்காட்டில் சரி.

ஆனால்.. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடிவுக்கு தமிழர்களே எப்பவும் முதலில் தடை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

ஆண்ட தமிழினம்.. எனி ஆள்வதென்பது.. வெறும் பகற்கனவு மட்டுமே. இப்படி அடிமைச் சலுகைகளுக்குப் பின் ஓடி சுயநலத்தை தற்காத்துக் கொள்வதே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாகிவிட்டது. ?

வேறு வழி .....சிங்களவன் இந்தியாவிடமும் ,சீனாவிடமும் மண்டியிட தாயக மக்கள் சிங்களவரிடம் சரணாகதியடை நாடு(சர்வதேசத்தின் பொம்மை நாடு) முன்னேறும் ,நாங்கள்{புலம் பெயர்ந்த) சிறிலங்கா அப்பே ரட்ட என்று இன்வெஸ்ட் பண்ணி ஜாலியா இருக்கவேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

இதுரை கூட்டமைப்பு ஏதாவது உருப்படியாக செய்திருக்கா.எனது தனிப்பட்ட கருத்து அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிருத்தி நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.தமிழர்கள் இல்லாமல் தமிழ்த்தேசியம் மட்டும் இருந்து என்ன பயன்.தமிழர்களின் இருப்புக்கு அபிவிருத்திகள் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இதுரை கூட்டமைப்பு ஏதாவது உருப்படியாக செய்திருக்கா.எனது தனிப்பட்ட கருத்து அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிருத்தி நடவடிக்கைகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு.தமிழர்கள் இல்லாமல் தமிழ்த்தேசியம் மட்டும் இருந்து என்ன பயன்.தமிழர்களின் இருப்புக்கு அபிவிருத்திகள் முக்கியம்.

ம்ம் உண்மைதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.