Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

  • Replies 50
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?

ஏனென்றால் எமது வரலாற்றை அடுத்த சமுதாயத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும் என இங்கு ஒரு  பலர் கூறுகின்றார்கள்.

அப்படியாயின் வரலாறு என்று வரும் போது  அது சம்பந்தப்பட்ட பண்பாடும் தொடர்ந்து நிற்கும் அல்லவா?

10 hours ago, குமாரசாமி said:

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?

நிச்சயமாக.

மேற்கத்தைய பண்பாடுகளில் இருந்து நாம் கற்பதற்கு ஏராளமானவை உள்ளன. அதே வேளை இற்றுப் போன எமது பழக்கவழக்கங்களில் பலவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசிய தேவை எமக்கு நிறையவே உள்ளது. 

நாம் அவற்றை செய்யாவிடின் எமது அடுத்த தலைமுறை(பெரும்பாலும் புலத்து தலைமுறை) எமது கலாச்சாரத்தை முற்று முழுதாக தூக்கி எறியும் நிலையே ஏற்படும். 

அதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக் கட்டுரையாளரின் ஆதங்கமும் அதுவாகவே தென்படுகின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, manimaran said:

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 10:59 PM, nedukkalapoovan said:

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

அது தனியானதொரு கட்டுரையாகவேண்டியது. அதுதான் இதில் சேர்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 3:19 PM, Justin said:

முதலில் நீங்கள் தமிழர் எனப்படும் இனத்தினரிடம் எதிர் பார்க்கும் பண்புகள் விழுமியங்கள் எவை என வரையறை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரை, கல்வியில் ஆர்வம் என்பதைத் தவிர தமிழர்களின் பண்புகளாகக் கொள்ளப் படும் பல விடயங்கள் பிற்போக்கானவை. உதாரணமாக, எவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு,  மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது தமிழரின் பண்பு - இது களையப் பட வேண்டிய ஒரு பண்பு. என்னைப் பொறுத்த வரை, சுதந்திரமாக இருக்கவே புலம் பெயர்ந்த இடத்தில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஒரு இனக் கலாச்சாரத்தைக் காக்கும் நோக்கில் வாழ இஷ்டமில்லை! 

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

On 12/28/2018 at 6:32 PM, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

புதிதாகப் பெறுபவை எமக்கு நன்மை பயக்கும் என்றால் யாரும் கவலைகொள்ளப் போவதில்லை.
ஆனால் எமது அடையாளத்திலொன்றான பண்பாடு வழக்கொழிந்தால் இனமே அற்றுப்போகுமே.

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 7:42 AM, tulpen said:

மிகச்சரியான பார்வை. எம்மிடையே கடைப்பிடிக்கப் படும் மிக பிற்போக்கான பழக்கங்களை எம்து பிள்ளைகளுக்கும் பழக்குவது எந்த வித்த்தில் நியாயம். அறிவுக்கு சற்றும் பொருந்தாகத விடயங்களை எமது கலாச்சாரம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒருவகை காட்டுமிராண்டித்தனம் தான். 

எம்மிடையே முற்போக்கான விடயங்கள் எத்தனையோ உள்ளனவே. அவற்றைக்கூட எமது எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தாது தேவையற்ற விடயங்களை மட்டும் தானே பலரும் பிள்ளைகளுக்கு முன்னால் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 2:58 AM, சண்டமாருதன் said:

எமது மனமும் தளமும் அடிப்படையில் பரந்துபட்டதாக மாறுவது புதிய தலமுறைகளுக்கு நல்லது. ஈழத்தமிழர் இப்போது கனடா தமிழர் இங்கிலாந்து தமிழர் என்று பல பிரிவுகளாக விரிவடைகின்றார்கள்.. பிரெஞ்சு டொச்சு ஜெர்மன் என்று பல அடயாளப் பின்புலங்களோடு இணைகின்றார்கள். தாய்த்தமிழகம் உட்பட உலகின் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரு பொது தன்மைக்குள் வருவதும் உறவுகள் ஏற்படுவதும் இந்த ஆக்கம் வெளிப்படுத்தும் எதிர்கால தலமுறைகள் குறித்த ஐயத்திற்கு தீர்வாக அமையலாம். 

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

On 12/27/2018 at 8:40 PM, ரதி said:

யாழில் எழுதுபவர்கள்,வேறு இடத்து எழுதும் போது விரும்பினால் அதை தாங்களே யாழில் வந்து இணைப்பார்கள் தானே!...கிருபனுக்கு ஏன் வேண்டாத வேலை😟

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

மொழி கலாச்சாரம் பண்பாடு என்ற அடிப்படையில் எங்கும் ஒற்றுமையுடன் தமிழர்கள் இல்லை. கலாச்சரம் பண்பாடு என்பது எந்த வரையறைக்கும் உட்பட்டதும் இல்லை. பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு இடையிலாக ஏற்படும் தொடர்பு எதிர்கால புலம்பெயர் தலமுறைக்கு தமது அடயாளங்களை உணர்ந்துகொள்ள உதவும் என்பதே எழுதப்பட்ட கருத்து. நீங்கள் மொழி கலாச்சாரம் பண்பாட்டை தக்கவைத்தால் தான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் வரும் என்று புரிந்துகொள்கின்றீர்கள் நான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் தான் எதிர்காலத் தலமுறைக்கு மொழியையும் தமது இன அடயாளங்களையும் தக்கவைக்க உதவும் என்கின்றறேன். 

உதாரணமாக றியுனியன் தீவில் உள்ள தமிழர்களுக்கும் தாய்த்தமிழகத்துக்குமிடைலான தொடர்பு அவர்கள் அடயாளங்களை தக்க வைக்க உதவும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு உதவியாக இருக்கும். றியூனியன் தீவில் உள்ள மக்கள் தமது மொழி கலாச்சாரம் பண்பாட்டைத் அழித்தொழித்தவிட்டால் எங்கிருந்து இது வரும் என்பது புரிதல் அல்ல. வேறு வேறு இனங்கள் வாழும் தேசத்திற்கு புலம்பெயர்ந்துவிட்டால் தலமுறைகள் தாண்டும் போது எமது இன அடயாளங்கள் காணாமல் போவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அவற்றை எவ்வாறு தக்கவைப்பது என்பது தான் இங்கு முன்வைக்க முயலும் கருத்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

தமிழராக இருந்தால் இதெல்லாம் புலத்தில் நடக்காது என்ற மாயையை முதலில் விடுங்கள். தாயத்திலேயே இதெல்லாம் நடந்தது நடக்கிறது. எங்கள் கண் முன் இல்லாமல் மறைவாக. இங்கே இவற்றை வெளிப்படையாகச் செய்கிறார்கள், அவ்வளவே வித்தியாசம். சிலர் வெள்ளைக் காரனில் தான் கள்ளக் காதலும், தன்னினச் சேர்க்கையும், பல தார/மறு மணமும் இருப்பதாக அதிர்ச்சியடைவதே ஒரு பெரிய நடிப்பு என்கிறேன் நான்! இதெல்லாம் சரியா என்றால், அது அவரவர் வாழ்வைப் பொறுத்தது! தடுக்க எவ்வளோ வழிகள் உண்டு: சுய மரியாதையை ஊக்குவியுங்கள், குறுகிய வாழ்வில் சாதிக்க நிறைய உண்டு என்ற ஒரு அவசரத்தை ஊட்டுங்கள், கல்வியைக் கட்டாயமாக்குங்கள், ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர வையுங்கள்! இவையெல்லாம் மனவியல் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட வழிகள். தமிழ் கலாச்சாரம் இல்லாமலே இதையெல்லாம் செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

On 12/29/2018 at 10:06 PM, குமாரசாமி said:

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே எம்மை சிந்திக் கலாச்சாரரீதியாக தடையாக இருக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். 

தற்போதைய மேற்கத்தைய சமூக நாகரீக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி நாம் உட்பட உலகின் பெரும்பாலானோரை பொறாமைப்பட வைக்கும் ஒன்றாகும். (சிலசமயம் எமது ஈகோ அதனை ஏற்க மறுக்கக்கூடும்)

இந்த வளர்ச்சிக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் அதனடிப்படியில் பிறந்த சிந்தனையோட்டம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
எமக்கு இப்படியான ஒரு வளர்ச்சியை நோக்கி நகரும் விருப்பு இருப்பின் அவர்களது வழியினைப் பின்பற்றுவது எமக்கு பாதகமாக அமையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, manimaran said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

சபேஸ், நீங்கள் எப்படி மாற வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென எதிர் பார்க்கிறீர்களா அல்லது இது rhetoric ஒரு கேள்வியா? முதல் கேசாக இருந்தால், உங்களுடைய வாழ்க்கைக்கு உவப்பான விளைவுகளைத் தரக் கூடிய மாற்றங்கள் தேவையா என்று நீங்கள் மட்டும் தான் முடிவெடுக்கலாம்! மணிமாறன் உட்பட யாரும் உங்களுக்குப் பட்டியல் தர இயலாது!  தமிழர் கலாச்சாரத்தில் எங்கள் சந்ததிக்கு வளர்ச்சித் தடையாக இருக்கும் ஏதாவது இருந்தால் அதை நாம் அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது தான் இங்கே அடிக்கருத்து! இது concept, இதில் இருந்து செயல்முறையைத் திட்டமிடுவது ஆளுக்காள் மாறுபடும்! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

அவையள் சொல்ல வாறது சாதி பிரச்சனையைத்தான்...... அந்த சாதிப்பிரச்சனை புலிகள் காலத்திலை இல்லயெண்டது  அவையளுக்கு தெரியாது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு இப்ப குய்யோ முய்யோ  எண்டு தொண்டை கிழிய கத்தீனம்....அதிலையும் ஒரு காமெடி என்னவெண்டால் உண்மையை ஒத்துக்கொள்ளுற பழக்கம்  அவையளுக்கு இன்னும் வரேல்லை :cool:

12 hours ago, குமாரசாமி said:

சாதியம் எம்மிடையே உள்ள மிகப் பிற்போக்குத்தனமான காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. 

சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் தமிழரின் தொகையுடன் ஒப்பிடுகையில் சாதியம் மற்றும் பிரதேச வாத பாகுபாட்டினால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழரின் தொகை அதிகமானது.

எமக்குள்ள பிரச்சணைகளுக்கு வெளிப்புறக் காரணிகளை குற்றம் சாட்டாது முதலில் எங்களால் எங்களுக்குள் வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான பிரச்சணைகளுக்கு தீர்வு காணலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, manimaran said:

பிறகென்ன ஒருமாதிரி சுத்திவளைச்சு விசயத்துக்கு வந்துட்டியள்.....:grin:
சரி!  எங்கடை சமூகத்திலை மோசமான சாதிப்பிரச்சனை இருக்குத்தான்....இல்லையெண்டில்லை.
இந்த சாதிப்பிரச்சனையை எங்கையிருந்து? எந்த சமூகத்திடமிருந்து? எப்படி அழித்தொழிக்கலாம் எண்டு ஏதாவது ஐடியா உங்களிட்டை இருக்கா?

அல்லது யார் திருந்தினால் சமூகமும் நாடும் முன்னேறும் என நினைக்கின்றீர்கள்?
அல்லது வெள்ளாளர் மட்டும் திருந்தினால் போதும் என நினக்கின்றீர்களா?:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2019 at 3:52 AM, குமாரசாமி said:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

எனக்கு தெரிய.....ஜேர்மனியில்  சாதி மாறி திருமணங்கள் பல நடந்துள்ளன. நானும் நேரில் சென்று பங்கேற்று வாழ்த்தியிருக்கின்றேன். அதில்......நாங்கள் மேல் சாதியில் சம்பந்தம் வைத்து விட்டோம் என்று மார்தட்டியதையும் நான் கவனிக்காமல் இல்லை.

நீங்களாக திருந்துங்கள் அல்லது தானாக திருந்த  விடுங்கள். சந்ததிகள் மாற கால அவகாசம் தேவை.

 புலம் பெயர்ந்து மதம் மாறிய ஜெகோவா தமிழரும் சாதி விடயத்தில் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 4:34 AM, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

ஒளித்தாலும் ஒளிரும் அழிக்க முடியாது மீண்டும் அனலாகவே இருக்கும் அந்த தீ நீங்கள் மேலைத்தேயத்தை ஒப்பிட்டாலும் ஈழத்தில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது அணைப்ப தென்பது ........................

 எங்க ஊரில் சந்தானத்துக்கு கோவில் முக்கியமானது பிரபலமானது அந்த சந்தானத்துக்காரர்கள் நாங்கள் ஆனால் இதுவரை நான் அந்த கோவில் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை  செல்வதும் இல்லை காரணம் மற்ற சமூகத்தை  உள்வாங்குவதில்லை ( மன்னிக்கவும்மற்ற சமூகம் என்றதை அப்படி நான் யாருடனும் நினைத்து பழகுவதும் இல்லை ) எல்லோரும் சக நண்பர்களே ஆனால் பெரியோர்கள் என்ற சிறு மனது உள்ளவர்களால் தீக்குச்சி எரிந்து கொண்டுதான் இருக்கிறது 

On 12/31/2018 at 4:55 AM, கிருபன் said:

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அபராஜிதன் said:

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

எங்க போய் முட்ட..:D, உங்களுக்கும் எனக்கும் என்ன காணி தகராறா? .நான் சந்தோசப்பட  இங்கு எதுவும் இல்லை... பகிடிய பகிடியா எடுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.