Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்": சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
சி.வி.விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமை Getty Images Image caption சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்' வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு இணைப்பை ஏன் கோருகின்றோம்?

"வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள்.

ஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும். வடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும்.

1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள்.தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.சிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள்.

முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பல் தார மணங்கள் அம்மதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் விக்னேஸ்வரன்.

அவர் மேலும் கூறுகையில், "ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது. முஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும். போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது. முஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது.

ஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.

முன்னர் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர் இப்பொழுதெங்கே? என் வாழ்நாளிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளார்கள். சிங்களம் வந்ததும் அவர்கள் நாட்டை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. அவர்தம் மதமே அவர்களுக்கு முக்கியம்.

வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில் முஸ்லீம் சகோதரர்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது கவனமாகவே இருக்கின்றார்கள். அதே நேரம் வட கிழக்கு இணைந்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு" என்றும் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன்.

"மட்டக்களப்பில் ஒரு பகுதியையும், ஊவா மாகாணத்தில் இருந்த பதியத்தலாவ, மகா ஓயா போன்றவற்றின் நிலப்பரப்பையும் உள்ளடக்கியே 1956ல் அம்பாறை என்ற ஒரு மாவட்டம் நடைமுறைக்கு வந்தது. கிழக்கினுள் சிங்கள மக்களை உள்நுழைக்க இது உதவியது. இதனால் கிழக்கின் சிங்கள மக்களின் செறிவு கூடுதலாக்கப்பட்டது.

சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இணைப்பை சாதகமாகப் பார்ப்பது போல் தெரியவில்லை. அவர்கள் இணைப்பு வேண்டாம் என்பதால் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களை மற்றவர்களிடம் தூக்கிக் கொடுத்து விடமுடியாது.

வட கிழக்கில் சிங்கள எகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்டும் நாங்கள் கண் மூடிக் கொண்டு இருக்க முடியாது.

அதைவிட தமது மதத்தில் கூறியபடி "பல்கிப் பெருகிட வேண்டும்" என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் எமது சகோதர இனப் பெருக்கத்தையும் நாம் அசட்டை செய்ய முடியாது.

இங்கு கூறப்படும் அனைத்தையுமே மனதில் கொண்டால் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைப்பைக் கேட்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.

வடகிழக்கை எவ்வாறு இணைக்கலாம்?

"நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும். முஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும்.

இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம். அம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும்.

அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும்.

இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம். அதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI Image caption கோப்புப்படம்

இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்தை வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம்.

கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. "தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்" என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே. இணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம்.

நான் நண்பர் அஷ்ராவுடன் இது பற்றி எல்லாம் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கருத்துக்கள் பரிமாறியுள்ளேன்.

அவ்வாறான ஏற்பாடுகள் சிங்களவருக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும். கிழக்கில் தமிழர்களும் பாதுகாக்கப்படுவர்.

ஆகவே வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது.

வடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்" என விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46959215

  • Replies 77
  • Views 5.6k
  • Created
  • Last Reply

இந்த விக்கியாரின் உளறல்கள்தான், பெரும்பாலான சிங்களவர்களை இனவாத சகதிக்குள் மென்மேலும் கொண்டு செல்ல உதவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, thulasie said:

இந்த விக்கியாரின் உளறல்கள்தான், பெரும்பாலான சிங்களவர்களை இனவாத சகதிக்குள் மென்மேலும் கொண்டு செல்ல உதவுகிறது.

அப்போ மேற் கூறிய கூற்று உண்மை இல்லையா??
உண்மையை சொன்னால் எப்படி இனவாதமாகும்??
கிஸ்புல்லா சொன்னால் இனவாதமாகாது. விமல் சொன்னால் இனவாதமாகாது.தேரர்கள் சொன்னால் இனவாதமாகாது. ஆக எமது பிரச்சனையை சொன்னால் மட்டும் இனவாதமாகும்??

விக்கியார் சொன்னதை,  சிங்கள பத்திரிகைகளில் போட்டால், சிங்கள மக்களின் மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

விக்கியாரின் உளறல்களை, தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகளே மதிப்பதில்லை.

தமிழ் கூட்டமைப்பினர்தான், தமிழ் மக்களின் விடிவிற்கு உழைப்பவர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் எப்போ திருந்தி எப்போ தமிழர்களுக்கு உரிமை தரப்போகிறார்கள்?

தமிழ் கூட்டமைப்பு  எப்படி மக்களின் செல்வாக்கை இழந்து  டக்ளசுடனும், கஜேந்திரனுடனும் கூட்டமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்லார்கள். இதனை அவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சிங்களவர்கள் கோவிப்பார்கள் என்பதற்காக நாம் எமது உரிமைகளை சொல்லாமல் விடுதல் கடைந்தெடுத்த அடிமைத்தனம். 
30 வருடம் போராடிய புலிகளிடம் இருந்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, thulasie said:

சிங்கள மக்களின் மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு மிக சிறிய பகுதி சிங்களவர்களை தவிர்த்து, ஏனையஸ் அனைத்து பகுதி சிங்களர்வர்களின் மனநிலை தமிழர்களோடு நிலப்பரப்பையும், அதிகாரத்தையும், சனநாயக அடிப்படையில் கூட பகிர்வதத்திற்கு விருப்பமிலை என்பதை விட, வெறுக்கிறார்கள் என்பதையும் விட, demala சிங்களவர்கள் விதித்த  படியே இருக்கவேண்டும் என்பதே எண்ணம்.

 

26 minutes ago, nunavilan said:

சிங்கள மக்கள் எப்போ திருந்தி எப்போ தமிழர்களுக்கு உரிமை தரப்போகிறார்கள்?

 

சிங்கள மக்கள் திருந்தினாலும், தமிழர்களின் மனோநிலையை ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

பிற நாடுகளின் தலையீடு, அழுத்தம் போன்றவற்றால், தமிழர்களின் உரிமைகள் மேலெழும்பலாமேயொழிய, சிங்களவர் திருந்த வேண்டும் என்று பகல் கனவு காண்பது வீண்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

தமிழ் கூட்டமைப்பினர்தான், தமிழ் மக்களின் விடிவிற்கு உழைப்பவர்களாக இருக்கிறார்கள்.

மன்னிக்கவும் அவர்களுக்காய் உழைக்கிறார்கள் என்று சத்தமா சொல்லுங்க  தமிழ் மக்களுக்காய் உழைக்கிறார்கள்  என்று ஊர்பக்கம் வந்து சொல்லிடாதீங்க குறிப்பா கிழக்கில் :grin:

 

விக்கியருக்கு சுடலை ஞானம் அரசிலுக்கு வர எத்தனிக்க பிறந்திருக்கு  முதலமைச்சரா இருந்தப்போ என்னத்தை கிழிச்சவர் கிழக்கை இணைக்க சொல்லி 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

விக்கியருக்கு சுடலை ஞானம் அரசிலுக்கு வர எத்தனிக்க பிறந்திருக்கு  முதலமைச்சரா இருந்தப்போ என்னத்தை கிழிச்சவர் கிழக்கை இணைக்க சொல்லி 

விக்கியர், சிங்கள அரசின் ஓர் ஊதுகுழல் என்று சிங்கள மக்கள் சொல்கிறார்கள்.

 

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னிக்கவும் அவர்களுக்காய் உழைக்கிறார்கள் என்று சத்தமா சொல்லுங்க  தமிழ் மக்களுக்காய் உழைக்கிறார்கள்  என்று ஊர்பக்கம் வந்து சொல்லிடாதீங்க குறிப்பா கிழக்கில் :grin:

 

 

ஒருமித்த நாடு, சமஷ்டி, இணைப்பு போன்றவை எல்லாம், தமிழ் மக்களுக்கான உழைப்புதான் 

8 hours ago, thulasie said:

ஒருமித்த நாடு, சமஷ்டி, இணைப்பு போன்றவை எல்லாம், தமிழ் மக்களுக்கான உழைப்புதான் 

உங்களின் கொமடிக்கு அளவே இல்லையா . ரணிலின் பேச்சு கேட்க்க வில்லை போல .... என்னது சமஸ்டி யா ? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாத்து பொன்முட்டை இடுமா....? வாத்தை வெட்டிப் பார்த்துவிடலாமா….? என்று துடிப்பவர்களையும் தன்னுள்கொண்டே தமிழினம் வாழத்துடிப்பதை, இந்தத் திரியில் வெளிப்பட்ட சில கருத்துக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, thulasie said:

தமிழ் கூட்டமைப்பினர்தான், தமிழ் மக்களின் விடிவிற்கு உழைப்பவர்களாக இருக்கிறார்கள்.

அந்த விடிவெள்ளிகள் யார்  யாரென்று  என்னென்ன செய்தவையெண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விக்கியருக்கு சுடலை ஞானம் அரசிலுக்கு வர எத்தனிக்க பிறந்திருக்கு  முதலமைச்சரா இருந்தப்போ என்னத்தை கிழிச்சவர் கிழக்கை இணைக்க சொல்லி

விக்கி அவர்கள் இதற்காகவே, உத்தியோகப்பற்றற்ற முறையில் அதிகாரங்களை, மிகவும் முக்கியமாக நிதி அதிகாரங்களை, முதலமைச்சர் நிதியம் என்பதன் மூலம் பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தார்.

முதலமைசார் நிதியம், முதலமைச்சர் அலுவலகம் நிதியை எங்கு செலவிடுவுது என்பததை தீர்மானிக்கலாம்.

புலம்பெயர் மக்களிடம் இருந்து திறைசேரி தவிர்த்து, நேரடியாக முதலமைச்சர் நிதியத்தின் கட்டுப்பாட்டுக்குள் நிதி வரும்.

வடக்கையும் கிழக்கில் இருக்கும் மிகவும் நலிவடைந்த தமிழ், இஸ்லாமிய  சமூகத்தையும், யுத்த அழிவில் இருந்து மீட்டெடுத்தல் என்பது, பெரும்பாலும் வடக்கை சார்ந்த வளம் படைத்த புலம் பெயர் மக்களினதும், வடக்கு மக்களினதும் உதவிகளோடு கிழக்கு தமிழ் சாமூகம் நிமிரும் போது, நிச்சயமாக பிணைப்பு ஏற்றப்படுத்தும், அரசியல் இணைப்பு சுலபமாக வழி வகுக்கும்.  

புரிகிறதா இப்போது, விக்கி அவர்களின் தூர நோக்கு.

32 minutes ago, Kadancha said:

விக்கி அவர்கள் இதற்காகவே, உத்தியோகப்பற்றற்ற முறையில் அதிகாரங்களை, மிகவும் முக்கியமாக நிதி அதிகாரங்களை, முதலமைச்சர் நிதியம் என்பதன் மூலம் பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்தார். 

புரிகிறதா இப்போது, விக்கி அவர்களின் தூர நோக்கு.


அரசிடம் இருந்து வந்த நிதியையும், திருப்பி அனுப்பிய செம்மல் எல்லாம் தூரநோக்கு உள்ளவரா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, thulasie said:

ஒருமித்த நாடு, சமஷ்டி, இணைப்பு போன்றவை எல்லாம், தமிழ் மக்களுக்கான உழைப்புதான் 

 

17 minutes ago, thulasie said:


அரசிடம் இருந்து வந்த நிதியையும், திருப்பி அனுப்பிய செம்மல் எல்லாம் தூரநோக்கு உள்ளவரா?

சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு ஒரு சில சலுகைகளைக் கொடுத்து விட்டு
அதையே மேற்குலகிற்குப் படம் காட்டித் தங்கள் நலனைப் பேணிக் காத்துக் கொள்கின்றனர்.
இந்த விடயம் பலருக்கும் புரியாவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கின்றார்களா?
கேட்டது உரிமை கிடைப்பது சலுகைகள்
யாரை நோவது ?
சலுகைகளுக்காகத் தங்கள் உரிமைகளை  விட்டுக் கொடுப்பது அரசியல் வாதிகளின் செயல். இப்போது மக்களெல்லாம் அரசியல்வாதிகளாகிவிட்டதாகத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, thulasie said:

அரசிடம் இருந்து வந்த நிதியையும், திருப்பி அனுப்பிய செம்மல் எல்லாம் தூரநோக்கு உள்ளவரா?

அது வடக்கு மாகாணத்துக்குளேயே பாவிக்கலாம். 

அரசிடம் இருந்து வரும் நிதி, திறைசேரி மற்றும் ஆளுநர் அனுமதி இல்லமால் முதலமைச்சர் கைவைக்க முடியாது.

அரசின் நிதி முழு அளவிலான திட்ட நடைமுறைகள்ளுக்கு போதாது.

சந்திரிகா சொன்னது போலவே, எந்த அதிகாரத்தையும் விட நிதி அதிகாரத்தை ஒரு போதும் வழங்கமாட்டோம்.

சம்சுமின், ஒருமித்த நாடு யாப்பில் (நகல் கூட வராது) வரும் ஆனா வராது.

"நுணலும் தன் வாயால் கெடும் என்பர்!"

விக்னேஸ்வரன் அவர்கள் அதிகம் ஊடகங்களுடன் கதைத்து / அறிக்கைவிட்டு மகிழ்வதைக் குறைத்து காரியத்தில் கண்ணாயிருப்பது தான் அவசியம்!

4 hours ago, Kadancha said:

அது வடக்கு மாகாணத்துக்குளேயே பாவிக்கலாம். 

அரசிடம் இருந்து வரும் நிதி, திறைசேரி மற்றும் ஆளுநர் அனுமதி இல்லமால் முதலமைச்சர் கைவைக்க முடியாது.

அரசின் நிதி முழு அளவிலான திட்ட நடைமுறைகள்ளுக்கு போதாது.

 

 

முழு அளவிலான அபிவிருத்திக்கே போதாத நிலையில் வரும் நிதியை,   திருப்பி அனுப்புவதுதான்  தூர நோக்கா?

வேறு எந்த மாகாண முதலமைச்சரும், தமக்கு வரும் நிதியை திருப்பி அனுப்பியதாக சரித்திரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, thulasie said:

 

முழு அளவிலான அபிவிருத்திக்கே போதாத நிலையில் வரும் நிதியை,   திருப்பி அனுப்புவதுதான்  தூர நோக்கா?

வேறு எந்த மாகாண முதலமைச்சரும், தமக்கு வரும் நிதியை திருப்பி அனுப்பியதாக சரித்திரம் இல்லை.

எப்படித் திருப்பி அனுப்புவார்கள்?
எதோ ஒரு வகையில் கண்துடைப்பு வேலைகளை செய்துவிட்டு மொத்தமாகப் பிரித்துத்   தங்கள் பைகளில் போட்டுவிடுவார்கள்
விக்கி ஐயா .........   அப்பிடிப் பிழைக்கத் தெரியாதவர்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, thulasie said:

 

முழு அளவிலான அபிவிருத்திக்கே போதாத நிலையில் வரும் நிதியை,   திருப்பி அனுப்புவதுதான்  தூர நோக்கா?

வேறு எந்த மாகாண முதலமைச்சரும், தமக்கு வரும் நிதியை திருப்பி அனுப்பியதாக சரித்திரம் இல்லை.

வட மாகாண அபிவிருத்தி நிதி ஒரு சதம் கூட திரும்பவில்லை- விக்னேஸ்வரன்

By
Kannan
-
September 10, 2018
 
 
 
 

vikki-todayjaffna-300x178.jpgஉள்ளூர் செய்திகள்:வட மாகாண அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட திருப்பியனுப்பப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறீர்களா என முதலமைச்சரிடம் வினவப்பட்டமைக்கு, சிரமமான சூழ்நிலையில் முடியுமான அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாகவும் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 minutes ago, வாத்தியார் said:

எப்படித் திருப்பி அனுப்புவார்கள்?
எதோ ஒரு வகையில் கண்துடைப்பு வேலைகளை செய்துவிட்டு மொத்தமாகப் பிரித்துத்   தங்கள் பைகளில் போட்டுவிடுவார்கள்
விக்கி ஐயா .........   அப்பிடிப் பிழைக்கத் தெரியாதவர்


 

நிதி வருவது, கண்துடைப்பு வேலைக்கு அல்ல.

மக்களின் அபிவிருத்திக்குத்தான், நிதி.

வரும் நிதியைக்கூட, பயன்படுத்தத் தெரியவில்லை.  

திருப்பி அனுப்ப மட்டும் தெரிகிறது.

தான் ஏற்கனவே ஒரு செல்லாக் காசு என்பதை நிரூபிக்க ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/22/2019 at 6:35 PM, nunavilan said:

சிங்கள மக்கள் எப்போ திருந்தி எப்போ தமிழர்களுக்கு உரிமை தரப்போகிறார்கள்?

என்னது????? tw_open_mouth:

சிங்கள மக்கள்  திருந்த வேண்டுமா? அவர்கள் எப்போது கெட்டவர்களாக மாறினார்கள்? 
ஒரு இனத்தின் சுய குணம் எப்படி திருந்தும்? ஐ மீன் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

ஒரு அசரீதி:- சம்சும் கொம்பனியால் முடியும் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்னது????? tw_open_mouth:

சிங்கள மக்கள்  திருந்த வேண்டுமா? அவர்கள் எப்போது கெட்டவர்களாக மாறினார்கள்? 
ஒரு இனத்தின் சுய குணம் எப்படி திருந்தும்? ஐ மீன் நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

ஒரு அசரீதி:- சம்சும் கொம்பனியால் முடியும் :grin:

2 ..பி.எம் டபிள்யு கார் கொடுத்தால்....அல்லது நல்ல ஆப்பம் சாப்பிடக்கொடுத்தால்..

10 hours ago, thulasie said:


 

நிதி வருவது, கண்துடைப்பு வேலைக்கு அல்ல.

மக்களின் அபிவிருத்திக்குத்தான், நிதி.

வரும் நிதியைக்கூட, பயன்படுத்தத் தெரியவில்லை.  

திருப்பி அனுப்ப மட்டும் தெரிகிறது.

தான் ஏற்கனவே ஒரு செல்லாக் காசு என்பதை நிரூபிக்க ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார்.

எந்த நிதியையும் அவர் திருப்பி அனுப்பவில்லை , ஆதாரம் இல்லாமல் சொல்ல கூடாது .
முதலில் மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலுடன் சேர்ந்து சுமந்திரன் செய்த சதிகள் தெரியாததா ?
மக்கள் முன் கெட்ட பெயரினை உருவாக்கி அவரினை அரசியலில் இருந்து எறிவது சுமந்திரனின் இலக்கு ,
சிங்களவர்களுடன் சேர்ந்து செய்த துரோகங்களை வெளிக்கொணர்ந்தவர் விக்கி ஐயா அவர்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.