Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன? மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

1.மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளை விற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னைஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா ஆகியோரோடு ஒருஉரையாடலை மேற்கொண்டு. ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு,அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2. இவ்வாறு இருக்க,சமயநல்லிணக்கத்திற்குஎதிராக03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள்,ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு,மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனிதலூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு. புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும்,நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தகுழுவினருக்கும் இடை யேபிரச்சனை ஏற்பட்டது. இதன் போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டது.

3. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்க வில்லை. இவை அனைத்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்த படியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனைஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க,செய்தி அறிந்தவுடன் சிலஅருட்பணியாளர்கள் சம்பவம் நடை பெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வேளையில் அங்கு வந்த பொலிசார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும்,தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.

4. தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணிதொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்றதிரு. நீலகண்டன், திரு. ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்கிலே காணிஎல்லை,திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ்அலங்காரவளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும்,அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாத வாறுஅவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்களோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்தகத்தோலிக்கமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸ்சார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

7. கத்தோலிக்கத்திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமயநல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2019/115091/

  • Replies 54
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் இல்ல அறிக்கை உண்மையாகத்தானே இருக்கவேண்டும். தற்காலிக வளைவை நிரந்தரமாக்க முயன்றவர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். இவர்கள் சிவசேனைக்காரர்களா?🥺

53068901_2506007606094096_7977887231035572224_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent-bom1-1.xx&oh=63cc4ab144e40d237f5b8270840d3522&oe=5D1C9918

பல வருடங்களாக இருக்கும் அலங்கார வளைவு!

(ஆயர் இல்லத்தின் போலிகள், புரட்டுகள், பொய்கள் நிறைந்த அறிக்கைக்கும் திருட்டு தனத்துக்கும் ஆதாரம்.)

53669212_2506040422757481_72551931029802

53908281_2506040456090811_55384867634392

On 3/5/2019 at 4:43 AM, கிருபன் said:

ஆயர் இல்ல அறிக்கை உண்மையாகத்தானே இருக்கவேண்டும். தற்காலிக வளைவை நிரந்தரமாக்க முயன்றவர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். இவர்கள் சிவசேனைக்காரர்களா?

ஆயர் இல்ல அறிக்கை நடந்த காடைத்தனத்தை நியாப்படுத்துவதாகவே இருக்கிறது.
எனவே இதை வெளியிட்ட ஆயர் இல்லம்  தற்போது காடையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது.

எனவே காடையர்கள் சூட்டான் / காஸெக் ஆடைகளை அணிந்தாலும் அவர்கள் காடையர்களே!

மிகவும் அருமையான மாமனிதரும் உன்னத உத்தமருமான முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கட்டியெழுப்பிய நற்சூழலை தற்போதைய ஆயர் இல்லத்துக் காடையர்கள் சில நிமிடங்களில் நொறுக்கியுள்ளனர். 

இந்தக் காடையர்கள் அப்புறப்படுத்தப்படுவதை ஆயர் இல்லம் தூய்மைப்படுத்தப்படுவதை எமது தமிழ் கத்தோலிக்க மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

Edited by போல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

பல வருடங்களாக இருக்கும் அலங்கார வளைவு!

(ஆயர் இல்லத்தின் போலிகள், புரட்டுகள், பொய்கள் நிறைந்த அறிக்கைக்கும் திருட்டு தனத்துக்கும் ஆதாரம்.)

53669212_2506040422757481_72551931029802

53908281_2506040456090811_55384867634392

ஆயர் இல்ல அறிக்கை நடந்த காடைத்தனத்தை நியாப்படுத்துவதாகவே இருக்கிறது.
எனவே இதை வெளியிட்ட ஆயர் இல்லம்  தற்போது காடையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது.

எனவே காடையர்கள் சூட்டான் / காஸெக் ஆடைகளை அணிந்தாலும் அவர்கள் காடையர்களே!

மிகவும் அருமையான மாமனிதரும் உன்னத உத்தமருமான முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கட்டியெழுப்பிய நற்சூழலை தற்போதைய ஆயர் இல்லத்துக் காடையர்கள் சில நிமிடங்களில் நொறுக்கியுள்ளனர். 

இந்தக் காடையர்கள் அப்புறப்படுத்தப்படுவதை ஆயர் இல்லம் தூய்மைப்படுத்தப்படுவதை எமது தமிழ் கத்தோலிக்க மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேற்ச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்).
ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.
கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.

யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை,   எனது ஆதங்கம். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்).
ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.
கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.

யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை,   எனது ஆதங்கம். 

3 hours ago, paandiyan said:

கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

யாரப்பா சாத்தான்கள்?

கிறிஸ்தவர்களா, இந்துக்களா, பவுத்தர்களா அல்லது முஸ்லிம்களா?

இதில் யார் சாத்தான்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்த அக்கிரமத்தை மறைக்கும் முயற்சி. கேதீஸ்வரத்துக்கான வளைவு அவர்களது தேவாலயத்திற்கு எப்படி இடைஞ்சலாக மாறும்? இரண்டும் வேறு வேறு தெருக்களில் இருக்க, இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகத் தெரிவது எப்படி?

கத்தோலிக்க மதவெறிக் காட்டுமிராண்டிகள். தமிழின ஒற்றுமையைக் குழப்ப முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

யாரப்பா சாத்தான்கள்?

கிறிஸ்தவர்களா, இந்துக்களா, பவுத்தர்களா அல்லது முஸ்லிம்களா?

இதில் யார் சாத்தான்கள்?

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

Edited by தனிக்காட்டு ராஜா

10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாந்தை நாற்சந்தியில் அமைந்திருக்கும் மடு மாதா தேவாலயத்தின் வாசலை கடந்துதான் பக்தர்கள் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு செல்லவேண்டும். அதேசமயம் கிறிஸ்தவர்கள் மடுமாதா கோவிலுக்கு செல்ல இந்துக் கோவிலின் அலங்கார வழைவுகளை தாண்டி செல்லவேண்டிய அவசியம் கிடையாது.

கேதீஸ்வரத்துக்கு செல்லும் அதே வழியில் ஒரு புத்தவிகாரையும் (Mathota Raja Maha Viharaya) அமைந்திருக்கிறது அல்லது புதிதாக அமைக்கப்பட்டிருப்பதையும் கூகிள் வரைபடம் காட்டுகிறது. புத்த விகாரைக்குச் செல்ல இந்த வழியில் உள்ள வழைவுகளைத்தாண்டித்தான் செல்லவேண்டும்.  இப்போது உறவுகளுக்கு புரியும் இந்த விடையத்தில் உண்மையான பின்னணி யாரென்பது.

தமிழர்கள்  சமய பேதங்களால் தமக்குள் அடிபட்டு சாக அதில்  எப்போதுமே இலாபம் பெறுவது பொளத்த சிங்களவர். மொத்தத்தில் தமிழன் ஒரு பேமாளி.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

 ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

இது மிகத் தவறு.

பிழை என்று மாறவில்லை.

மாறிய எல்லோருமே ஒருவித பிழைப்புக்கும் சலுகைகளுக்குமாகவே மாறினார்கள்.

1 hour ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

55 minutes ago, ஈழப்பிரியன் said:

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

நான் பதிலையும் எழுதி இருக்கிறேனே? மீண்டும் படித்து பாருங்கள். சைவம் தமிழரின் மதம் அல்ல. தமிழர் ஒரு காலத்தில் சைவர்கள் ஆனார்கள். அதற்கு முதல் அவர்கள் சைவர்கள் அல்ல. நான் தந்த கேள்விகளை நீங்களும் கேட்டால் சைவம் தமிழரின் ஆதி மதம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கருதி இந்த கேள்விகளை நீங்களும் கேட்க வேண்டும் என்றே அவை இங்கு தரப்பட்டுள்ளன. கேளுங்கள் கேள்விகளை - பதில்களை கண்டடைவீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

ஹாஹா இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை பிழையென்று மாறினார்களா அல்லது பிழைப்புக்கு மாறீனார்களா என்று விசாரித்தால் கொஞ்சம் உன்மை உங்களுக்கு விளங்கலாம் 

எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

மரம் ஒன்றுதான் அதில் கூடு கட்டும் பறவைகள் பல ஆனால் மரத்தை ஒவ்வொரு பறவைகளும் தங்களுடையது என்று கொண்டாடுவதுதான் சிரிப்பு சிரிப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

கம்போடியாவில் இருக்கிறது சைவ கோவில்கள்  அதையும்மறந்து விட்டீர்கள் , எப்படி வந்தது தானாக முளைத்ததா என்றெல்லாம் உங்களிடம் ஆராய்ச்சி பண்ண கேட்கவில்லை அதுபோக இந்துனேசியாவின் வரலாறை படியுங்கள் என்ன நடந்தது என்று தெரிய வாய்புள்ளது  

1 hour ago, ஈழப்பிரியன் said:

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

வெள்ளைகாரன் இலங்கையில் ஆட்சி செய்த போது அவன் ஆரம்பித்த பாடசாலைகள் இப்பவரை இருக்கின்றன அந்தக்காலத்தில் பிற மததினருக்கு படிக்க இடம் கொடுக்கவும் இல்லை அவர்களை மதிக்கவும் இல்லை  அவர்கள் மதத்துக்கு மாறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களுக்கு படிப்பில் இருந்து சகல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்ததால் மாறியதாகவும் உன்மையான கிறிஸ்தவர்கள் மட்டக்களப்பிலிருப்பவர்கள் இப்பவும் சொல்லுவார்கள் ஆனால் இதை இப்ப சீனிக்கும் , காசுக்கும் , வீடுக்கும் , அல்வா பேச்சுக்களுக்கும் மதத்தை விற்று மாறியவர்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை:)

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கம்போடியாவில் இருக்கிறது சைவ கோவில்கள்  அதையும்மறந்து விட்டீர்கள் , எப்படி வந்தது தானாக முளைத்ததா என்றெல்லாம் உங்களிடம் ஆராய்ச்சி பண்ண கேட்கவில்லை அதுபோக இந்துனேசியாவின் வரலாறை படியுங்கள் என்ன நடந்தது என்று தெரிய வாய்புள்ளது  

அந்த. வரலாற்றை. வெளிப்படையாகவெ சொல்ல வெட்கமாக   இருக்கிறதா?  மற்றவர்களுக்கும் வரலாற்று உண்மைகள் தெரியட்டுமே?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

மதம் பற்றிய  விவாதத்தில்.  அது.  பற்றி. எழுதாமல்.  தமிழ். மொழியின் பழமை. பற்றியும்.  வெள்ளைக்காரரன் பற்றியும்.  மிட்டாய்க்காரர்.  பற்றியும்.  நீங்கள். சம்பந்தம்.  இல்லாமல்.  எழுதி.  இருப்பதை.  பார்த்தால்.  .....   
....   தெளிவு.  வந்த.  பின்.  எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மதம் தமிழனுக்கு இல்லை. ஆதித்தமிழன் இயற்கையோடு ஒன்றி இயற்கையை வழிபட்டு வாழ்ந்ததாக  சில ஆராச்சிகளும் தெரிவிக்கின்றன. தமிழனிடம் மதம் இடையில் நயமாகவும், ஏமாற்றியும், அடிமைகொண்டும் புகுத்தப்பட்டதாகவும் அவை தெரிவிக்கின்றன. 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை பிழையென்று மாறினார்களா அல்லது பிழைப்புக்கு மாறீனார்களா என்று விசாரித்தால் கொஞ்சம் உன்மை உங்களுக்கு விளங்கலாம் 

 எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

மரம் ஒன்றுதான் அதில் கூடு கட்டும் பறவைகள் பல ஆனால் மரத்தை ஒவ்வொரு பறவைகளும் தங்களுடையது என்று கொண்டாடுவதுதான் சிரிப்பு சிரிப்பு 

ஒரு கொள்கையில் இருந்து, இன்னொன்றுக்கு மாறியது பிழைப்புக்குத்தான் என்றால், மாறிய மதத்தில் அவன் அப்படியே நிலைத்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

கிறிஸ்தவர்களாக மாறினால்தான், கிறிஸ்தவர்களின் பள்ளிக்கூடங்களில் தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்கலாம் என்று மாறியவர்களும் இருக்கிறார்கள்.

பலர்  புத்த மதத்தில் இருந்து கிறிஸ்தவர்களாக மாறி, அவர்களின் பள்ளிகளில் படித்துவிட்டு, மீண்டும் பவுத்தர்களாக மாறியவர்களும் இருக்கிறார்கள்.

பிழைப்புக்கு மாறியவர்களும் இருக்கிறார்கள்.  எல்லாரும் அல்ல.

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:
16 hours ago, thulasie said:

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைகாரன் இலங்கையில் ஆட்சி செய்த போது அவன் ஆரம்பித்த பாடசாலைகள் இப்பவரை இருக்கின்றன அந்தக்காலத்தில் பிற மததினருக்கு படிக்க இடம் கொடுக்கவும் இல்லை அவர்களை மதிக்கவும் இல்லை  அவர்கள் மதத்துக்கு மாறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களுக்கு படிப்பில் இருந்து சகல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்ததால் மாறியதாகவும் உன்மையான கிறிஸ்தவர்கள் மட்டக்களப்பிலிருப்பவர்கள் இப்பவும் சொல்லுவார்கள் 

நீங்கள் சொல்வது உண்மைதான்!

இப்படி சைவ மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறி கல்வி கற்றதால்தான், இப்போது கல்வியில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

பவுத்த மத மக்களும் அப்படியே.

இன்னொரு தமிழ் பேசும் இனமான, இசுலாமியர்கள் எதற்கும் மாறவுமில்லை.

அதனால், பல தசாப்தங்களாக அவர்களின் அறிவு குன்றியதாக இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது.

இசுலாமிய மக்களை போல சைவ மக்களும் செயல்பட்டிருந்தால், சைவ மக்களின் அறிவு குன்றி இருக்கும்.

அவர்களின் மதமும் சைவமாகவே இன்றும் இருந்திருக்கும்.

Edited by thulasie

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

தமிழ் மொழி தோன்றல், கிட்டத்தட்ட 4000 வருடங்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்குமுன், தமிழினத்தின் மூதாதையர்கள் பிற இனங்களில் இருந்து பிற மொழிகளை பேசியவர்கள் என்று அறிய முடிகிறது.

2 hours ago, thulasie said:

தமிழ் மொழி தோன்றல், கிட்டத்தட்ட 4000 வருடங்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்குமுன், தமிழினத்தின் மூதாதையர்கள் பிற இனங்களில் இருந்து பிற மொழிகளை பேசியவர்கள் என்று அறிய முடிகிறது.

யார் சொன்னது , 40000 வருடங்கள் முதல் தோன்றிய தமிழ் எப்படி மற்ற மொழி பேச முடியும் ? 

7 minutes ago, பிரபாதாசன் said:

யார் சொன்னது , 40000 வருடங்கள் முதல் தோன்றிய தமிழ் எப்படி மற்ற மொழி பேச முடியும் ? 

40,000 வருடங்கள் தோன்றிய மொழிகள், இனங்கள் எல்லாம் மறைந்து விட்டன.

தமிழ் என்பது, வெறும் 4000 வருடங்கள் முற்பட்டவை - என்று சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, thulasie said:

40,000 வருடங்கள் தோன்றிய மொழிகள், இனங்கள் எல்லாம் மறைந்து விட்டன.

தமிழ் என்பது, வெறும் 4000 வருடங்கள் முற்பட்டவை - என்று சொல்கிறார்கள்.

புத்தகம் செய்திகள் பாக்கிற பழக்கம் இல்ல போல. 

முயலுக்கு பத்து கால் துளசி.

Edited by paandiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.