Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது.

அதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான்.

மனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன். அடுத்தநாள் வரச்சொல்லிப் போனால் அக்கா இன்னும் ஒன்று முடியவில்லை. ஒரு இரண்டு மணி நேரத்தில் வருகிறீர்களா என்று கேட்க,சரி என்றுவிட்டு வெளியே வந்தால் மணி 10.15. வெய்யில் தொடங்கிட்டுது. ஓட்டோவில திரும்பப் போட்டு வர வீணா 400 ரூபா. எதுக்கும் ஓட்டோவை அனுப்பிவிட்டு ஒரு படத்தைப்பார்த்துவிட்டு வருவம் என முடிவெடுத்து. காகில்சுக்கு விடுங்கோ தம்பி என்றேன்.

அங்கு சென்றால் அக்கா படம் பத்து நிமிடத்துக்கு முதல் தொடங்கீட்டுது. ஒண்டரைக்கு அடுத்தது தொடங்குது. ஒண்டரைக்கு வாறீங்களோ என்கிறான் தியேட்டர் காரன். படம் தொடங்கினாய் பரவாயில்லை. டிக்கற் தாங்கோ என்று வாங்கி உள்ளே சென்றால் இருந்தது ஒரு இருப்பது பேர் மட்டிலும் தான். எனது சீட் கடைசிவரிசைக்கு முதல் வரிசை. நல்லகாலம் எனக்கு இரண்டு பக்கமும் யாரும் இல்லை என நின்மதி பெருமூச்சு விட்டபடி இருந்தால் அப்பத்தான் எழுத்தோட்டம் அரைவாசி போகுது.

எனது பக்கத்து சீற்றுக்கு நேரே பின்னே ஒருவன். மற்றபடி யாரும் பின்னுக்கு இல்லை. படம் தொடங்கி ஒரு பத்து நிமிடம் போயிருக்கும். எனக்கு தூர பார்வை தெளிவில்லை என்பதால் படம் பார்க்கக், கார் ஓட எல்லாம் கண்ணாடிதான். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் என் கண்ணாடியில் ஒரே வெளிச்சம் திரையை வடிவாகப் பார்க்க முடியாமல். யாராவது லைட் அடிக்கிறார்களோ என்று பார்த்தால் உடனே வெளிச்சம் நிண்டிட்டுது. மீண்டும் சிறிது நேரத்தில் வெளிச்சம். இம்முறை தலையைத் திருப்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் இருக்கும் எருமையின் போனில் இருந்துதான் வெளிச்சம் வருகிறது என்று தெளிவானவுடன் ஏற்பட்ட எரிச்சலை ஒருவாறு அடக்கிக்கொண்டு மீண்டும் திரையில் கண்களை பதிக்கிறேன்.

மீண்டும் ஒரு ஐந்து நிமிடத்தில்  வெளிச்சம் வர, அண்ணை கண்ணுக்குள்ள குத்துது. உந்த லைற்ரை நிப்பாட்டுங்கோ எண்டன். நான் சொன்னதைக் கேட்டானோ இல்லையோ யாருடனோ அவன் கதைப்பது தெரிய, நான் தலையைத் திரைக்குத் திருப்பினன். கொஞ்ச நேரம் ஒன்றும் இல்லை. திரும்ப  வெளிச்சம் எரிய நான் திரும்பி அண்ணை  போனைக் கீழை வையுங்கோ. படம் பாக்க ஏலாமல் இருக்கு என்று கூறு வாயை மூடிக்கொண்டு படம் பார் என்கிறான். எனக்கு வந்த கோபத்தில் இனி வெளிச்சம் எரிஞ்சால் வெளியில போய் கெம்ப்ளெய்ன் பண்ணுவன் என்று கொஞ்சம் உறுக்கியே  சொன்னன். ஆனால் அவன் அசைஞ்சாத்தானே. திரும்ப போன் வர லையிற் பத்திக்கொண்டே இருக்குது.அவன் போனை எடுக்கவும் இல்லை நிப்பாட்டவும் இல்லை. உடனே நான் கோபத்தோட எழும்ப, எனக்குப் பக்கத்தில இருந்தவர் கொஞ்சம் அதட்டலாக அவர் பக்கம் திரும்பி போனை நிப்பாட்டுங்கோ அல்லது வெளியில போய்க் கதையுங்கோ என்றதும் லைற்றும் போனும் நிண்டிட்டுது.

ஆனாலும் மனதுக்குள் கொஞ்சம் பயம் தான். ஆளைப் பார்த்தால் கொஞ்சம் அப்பிடி இப்பிடி. தனியா வேற வந்திருக்கிறன். நண்பர்கள் யாரையும் கூப்பிட்டு ஏதும் செய்திடுவானோ என்று எண்ணிவிட்டு, தமிழர் தானே எல்லாரும் ஏன் பயப்பிடுவான் என எண்ணிக்கொண்டிருக்க இன்டெர்வல் விட்டிட்டிது.  அவன் எழுந்து செல்வது கடைக் கண்ணில் தெரிய நானும் எழுந்து சென்று எங்காவது தென்படுகிறானா என்று பார்த்தால் அவனைக் காணவில்லை. பெப்ஸியும் பொப்கோனும் வாங்கிக்கொண்டு வந்து கதிரையில் இருக்க படம் தொடங்கிவிட்டுது. படம் தொடங்கி கொஞ்ச நேரம் சென்ற பிறகுதான் அவன் வந்து இருக்க, நான் ஒருக்காத்  திரும்பி அவனின் முகத்தைப் பார்த்தேன். ஆனால் இருட்டுக்குள் முகம் தெரியவில்லை.

படம் முடியும் மட்டும் வேறு எந்த போனும் அவனுக்கு வரவில்லையோ அல்லது போனை நிப்பாட்டி வைத்திருந்தானோ சத்தம் எதுவும் கேட்கவில்லை. படம் முடிந்தவுடன் அவனின் முகத்தைப் பாக்கவே வேண்டும் என்னும் எண்ணத்துடன் விடுவிடுவென்று வெளியே வந்தால் அவன் வருவதாய்க் காணவில்லை. சரி பார்ப்போம் என்று லிப்ட் இருக்கும் இடம் வந்தால் இன்னும் இரண்டு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். லிப்ட் வந்ததும் நான் முன்னே சென்று பின் பக்கத்தில் சென்று திரும்பி வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, ஓடிவந்து தலை குனிந்தவாறு உள்ளே வருகிறான் அவன். நான் வடிவாக துணிவாக அவனைப் பார்க்க அவனோ பயந்தபடி குனிந்த தலையை நிமிர்த்தாமலே வெளியே செல்ல, அட அவனுக்கும் எதோ ஒரு பயம் ஏற்பட்டதனால்த்தான் தலையை நிமிர்த்தவே இல்லை என்று தோன்ற, நின்மதியாக வெளியே வருகிறேன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குர்தா வாங்கி விட்டீர்களா அல்லது அதை மறந்துட்டீங்களா .....நல்ல அனுபவம்....!   😁

அங்கு தைப்பவரிடம் எனக்கும் ஒரு அனுபவம்   கிடைத்தது .....!    

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவப் பகிர்வு.....அருமை...!
உங்களுக்குப் பயந்து போன...இரண்டாவது ஆண் மகன்...இவராகத் தான் இருக்கும்!😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணை கண்ணுக்குள்ள குத்துது. உந்த லைற்ரை நிப்பாட்டுங்கோ எண்டன். நான் சொன்னதைக் கேட்டானோ இல்லையோ யாருடனோ அவன் கதைப்பது தெரிய, நான் தலையைத் திரைக்குத் திருப்பினன். கொஞ்ச நேரம் ஒன்றும் இல்லை. திரும்ப  வெளிச்சம் எரிய நான் திரும்பி அண்ணை  போனைக் கீழை வையுங்கோ. படம் பாக்க ஏலாமல் இருக்கு என்று கூறு வாயை மூடிக்கொண்டு படம் பார் என்கிறான். எனக்கு வந்த கோபத்தில் இனி வெளிச்சம் எரிஞ்சால் வெளியில போய் கெம்ப்ளெய்ன் பண்ணுவன் என்று கொஞ்சம் உறுக்கியே  சொன்னன். ஆனால் அவன் அசைஞ்சாத்தானே.

இப்பதான் இரண்டு வாள்வெட்டு நியூஸ் வாசிச்சிட்டு வாறன்......அதுக்கிடையிலை  இது வேறை.....தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு நினைச்சு சந்தோசப்படுங்கோ......

அது சரி கொத்தார் சரியான கசவாரம் போலை கிடக்கு? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்கள் அச்சப்பட கூடாது, நியாயத்துக்கு கடைசி வரை போராடணும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
வாழ்த்துக்கள் அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வு.....அருமை...!
உங்களுக்குப் பயந்து போன...இரண்டாவது ஆண் மகன்...இவராகத் தான் இருக்கும்!😍

அக்கா, இரண்டாவது தரமும் தமிழில் தான் திட்டினவ. அதோட, இங்கீலிஸ் கதைச்ச அந்தாள் ஓப் ஆயிட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பி கதைப்பதற்கும் ஒரு துணிச்சல் வேணும்...அனுபவ பகிர்வுக்கு நன்றிகள்

Posted

திரையில் என்ன படம் ஓடியது என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் படம் பார்த்த அனுபவம் திகில் படம் பார்த்தது போலிருக்கும் என நினைக்கிறேன். நல்ல ஒரு அனுபவப் பகிர்வு. 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சைக்கிளிலும் கொண்டு திரிந்து // சத்தியமா நம்பிட்டன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, suvy said:

குர்தா வாங்கி விட்டீர்களா அல்லது அதை மறந்துட்டீங்களா .....நல்ல அனுபவம்....!   😁

அங்கு தைப்பவரிடம் எனக்கும் ஒரு அனுபவம்   கிடைத்தது .....!    

 

நான் ஒரு வாரத்துக்கு முன்பே தைக்கக் கொடுத்தது. அளவுக்கு அவர்களிடம் இருந்த சேர்ட் ஒன்றைக் காட்டிவிட்டு வந்தது. எடுக்கப் போனால் சிறிதாகத் தைத்திருந்தார்கள். அளவெடுத்த பெடியன் நீங்கள் இந்த அளவு தான் தந்தீர்கள் என்று அடம்பிடிக்க, எடும் அளவு காட்டிய சேர்ட்டை என்று எடுத்துப் பார்த்தால் நாலு அங்குலம் சிறிது. முதலாளி பெடிக்கு ஏசிவிட்டு உடனே வேறு துணி எடுத்துத் தைத்துத் தந்தார்கள். ஆனால் நல்ல தையல். மனிசனுக்கு வாயெல்லாம் பல்.😀

13 hours ago, புங்கையூரன் said:

அனுபவப் பகிர்வு.....அருமை...!
உங்களுக்குப் பயந்து போன...இரண்டாவது ஆண் மகன்...இவராகத் தான் இருக்கும்!😍

சீச்சீ நிறையப்பேர் இருக்கினம்😜

4 hours ago, ஏராளன் said:

பெண்கள் அச்சப்பட கூடாது, நியாயத்துக்கு கடைசி வரை போராடணும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
வாழ்த்துக்கள் அக்கா.

என்னைப்பற்றித் தெரியாமல் சொல்லுறியள்🤣😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, நந்தன் said:

சைக்கிளிலும் கொண்டு திரிந்து // சத்தியமா நம்பிட்டன்

அந்த நேரத்தில ஊருக்கு பயந்து செய்ய ஏலாததை, இப்ப போய் செய்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, குமாரசாமி said:

இப்பதான் இரண்டு வாள்வெட்டு நியூஸ் வாசிச்சிட்டு வாறன்......அதுக்கிடையிலை  இது வேறை.....தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு நினைச்சு சந்தோசப்படுங்கோ......

அது சரி கொத்தார் சரியான கசவாரம் போலை கிடக்கு? 😎

தனக்குத் தேவையானதுக்கு செலவழிப்பார். சிலநேரம் அடம்பிடிப்பார்.மொத்தத்தில கஞ்சன் தான்.

2 hours ago, Nathamuni said:

அக்கா, இரண்டாவது தரமும் தமிழில் தான் திட்டினவ. அதோட, இங்கீலிஸ் கதைச்ச அந்தாள் ஓப் ஆயிட்டார்.

 

தமிழிலே நல்ல வடிவாத் திட்டலாம். இன்னும் கொஞ்சம் திட்டேல்லை எண்டுதான் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னைப்பற்றித் தெரியாமல் சொல்லுறியள்🤣😁

பயத்த வெளியில காட்டாமல் இருக்கிறதுக்கு பெயர் தான் துணிச்சல்!😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, மல்லிகை வாசம் said:

திரையில் என்ன படம் ஓடியது என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் படம் பார்த்த அனுபவம் திகில் படம் பார்த்தது போலிருக்கும் என நினைக்கிறேன். நல்ல ஒரு அனுபவப் பகிர்வு. 😊

😎

26 minutes ago, நந்தன் said:

 

செக்கிளில அந்தாள்என்னைக் கொண்டு திரிந்ததெண்டு நீங்களா நினைச்சா நான் என்ன செய்யிறது??? அந்தாள் ஒரு சைக்கிள். எனக்கு ஒரு சைக்கிள்.😕

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

திரும்பி கதைப்பதற்கும் ஒரு துணிச்சல் வேணும்...அனுபவ பகிர்வுக்கு நன்றிகள்

🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😎

செக்கிளில அந்தாள்என்னைக் கொண்டு திரிந்ததெண்டு நீங்களா நினைச்சா நான் என்ன செய்யிறது??? அந்தாள் ஒரு சைக்கிள். எனக்கு ஒரு சைக்கிள்.😕

 

அப்பா... இப்பதான் நிம்மதியா இருக்கு.

பயந்தே போனன் ...

அந்த சைக்கிள் கதியை நினைச்சு....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் எங்கு போனலும் ஏதாவது ஒரு பிரச்சினை உம்மா
அது போஸ்ட் ஒபீஸ் ஆனலும் சரி, டெயிலர் கடையாய் இருந்தாலும் சரி, தியேட்டராக இருந்தாலும் சரி எதாவது ஒரு பலாய். 

என்ன உம்மா நீங்க இப்படி பண்ணுறிங்களே உம்மா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Nathamuni said:

அப்பா... இப்பதான் நிம்மதியா இருக்கு.

பயந்தே போனன் ...

அந்த சைக்கிள் கதியை நினைச்சு....

🤓

4 minutes ago, colomban said:

நீங்கள் எங்கு போனலும் ஏதாவது ஒரு பிரச்சினை உம்மா
அது போஸ்ட் ஒபீஸ் ஆனலும் சரி, டெயிலர் கடையாய் இருந்தாலும் சரி, தியேட்டராக இருந்தாலும் சரி எதாவது ஒரு பலாய். 

என்ன உம்மா நீங்க இப்படி பண்ணுறிங்களே உம்மா

என்ன மவன் செய்யிரது? உம்மாட ராசி அப்டி

😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இம்முறை தலையைத் திருப்பிப் பார்த்தால் எனக்குப் பின்னால் இருக்கும் எருமையின் போனில் இருந்துதான் வெளிச்சம் வருகிறது என்று தெளிவானவுடன் ஏற்பட்ட எரிச்சலை ஒருவாறு அடக்கிக்கொண்டு மீண்டும் திரையில் கண்களை பதிக்கிறேன்.

அட இப்ப இலங்கையில் எருமையும் போன் கதைக்குதா?

நல்ல துணிச்சல்காரி நான் என்றால் வந்த இடத்தில் என்ன சனியனுக்கடா பிரச்சனை என்று பொத்திக் கொண்டிருந்திருப்பேன்.பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரெண்டு கிழமைக்குள் ஊருக்குள் நின்று இதெல்லாம் நடந்திருக்கா  என்ன?  அவன் தனிய வந்ததால அக்கா தப்பிச்சயல் என்று சொல்லலாம் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு கிழமைக்குள் ஊருக்குள் நின்று இதெல்லாம் நடந்திருக்கா  என்ன?  அவன் தனிய வந்ததால அக்கா தப்பிச்சயல் என்று சொல்லலாம் :)

அக்கா புத்தக வெளியீட்டுக்கு வந்திருக்காக .

நாலு எட்டு போயி அக்காவை பார்த்து வரலையே... என்ன தம்பி நீங்க... நீங்க மட்டும் அங்கே போயிருந்தா, அந்த பரதேசி... போனோட வெளில போய் இருப்பானா.... 

😨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு கிழமைக்குள் ஊருக்குள் நின்று இதெல்லாம் நடந்திருக்கா  என்ன?  அவன் தனிய வந்ததால அக்கா தப்பிச்சயல் என்று சொல்லலாம் :)

அக்கா தனிய போனதால அவன் தப்பினான்!😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

அக்கா தனிய போனதால அவன் தப்பினான்!😃

மனிசனுடன் பேயிருந்தா கதைச்சு அடி வாங்குறது அவர் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Nathamuni said:

அப்பா... இப்பதான் நிம்மதியா இருக்கு.

பயந்தே போனன் ...

அந்த சைக்கிள் கதியை நினைச்சு....

இதுதான் அந்த சைக்கிளோ எண்டொருக்கால் பாருங்கோ...:cool:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கட ஆக்கள் எல்லாத்திலேயும் வித்தியாசம் தான்.  ஒருக்கா யாழ் தேவியில் கொழும்புக்கு போன நேரம் ( என்ன ஒரு 30 , 35  வரியத்துக்கு முன்னர் ).  கோணர்   சீற் தான் எண்டு சொல்லத் தேவையில்லை ,  தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தால் காத்து பலமாக முகத்தில் அடித்துக் கொண்டிருக்கு.  எட்டி  யன்னலைச்  சாத்தினால் , எதிர்ப்பக்கமாக இருந்த பிரகிருதி ( என்னை விட ஒரு 4, 5 வயதெண்டாலும் கூட இருக்கும் , ஆளும்நல்ல வாடட  சாட்டம் ) சொல்லுறார் , யன்னலை சாத்த வேண்டாமாம் , காத்து வரேல்லையாம் எண்டு.   நான் சொன்னன்,  “அண்ணை அப்பிடியெண்டால் இங்க என்ர  இடத்தில வந்து இருங்கோவன் , நான் அங்கால மாறி இருக்கிறன்”  எண்டு.  காய் சொல்லுது “தம்பி அது சரி வராது உங்கால காத்து கூட வரும்”  எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.