Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

100 வீதம் சித்தியடைந்த- வேம்படி மாணவிகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 100 வீதமான சித்தை எய்தியுள்ளனர்.

50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும், 18 மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர். 49 பேர் 8ஏ தரச் சித்தியினையும், 34 மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியையும் பெற்றுள்ளனர்.

பாடசாயில் மொத்தமாக 231 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்கள் 157 பேர் தமிழ்மொழி மூலமும், 74 பேர் ஆங்கில மொழியிலும் பரீட்சை எழுதியிருந்தனர். அதனடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை 100 வீதம் சித்தியடைந்துள்ளது.

https://newuthayan.com/story/16/100-வீதம்-சித்தியடைந்த-வேம்.html

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படி பெட்டையள் எப்பவும் எல்லாவிதத்திலும் பெயர் போனவர்களே.
வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

வேம்படி பெட்டையள் எப்பவும் எல்லாவிதத்திலும் பெயர் போனவர்களே.
வாழ்த்துக்கள்.

வேம்படி மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்....சகல பாடசாலைகளும் கல்வியில் முன்னுக்கு வரவேண்டும், மீண்டும் எம்மவர்களின் அழிக்க முடியாத  செல்வமாகிய கல்வி  பல்கிப் பெருக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வேம்படி பெட்டையள் எப்பவும் எல்லாவிதத்திலும் பெயர் போனவர்களே.
வாழ்த்துக்கள்.

அதென்ன பெட்டையள்??????. பெண்கள் என்று சொல்லுங்கள்🙄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன பெட்டையள்??????. பெண்கள் என்று சொல்லுங்கள்🙄

நீங்கள் பெடியங்கள் எண்டலாம்....நாங்கள் பெட்டையள் எண்டு சொல்லக்கூடாதோ? :cool:

வாழ்த்துக்கள்!

யாழ்/ஹார்ட்லி கல்லூரியில் பரீட்சை எழுதிய 143 மாணவர்களில், 16 மாணவர்கள் ஒன்பது A தரச் சித்திகளையும் 13 மாணவர்கள் எட்டு A தரச் சித்திகளையும் பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் சற்று முன்னர் கூறினார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன பெட்டையள்??????. பெண்கள் என்று சொல்லுங்கள்🙄

பெட்டைகள் — Girls

பெண்கள்—- Women 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் 2018

9A பெற்றவர்கள் – 35
8A பெற்றவர்கள் – 42

9A பெற்றவர்கள்
1. த.ஆருத்திரன்
2. பே.கஜதீபன்
3. ச.மதுஜன்
4. யூட்.மிஷல்பிரவீனன்
5. அ.நிரோஜன்
6. ம.சந்தோஷ;
7. ர.சிந்துஜன்
8. வா.தர்சிகன்
9. சு.ஆஞ்சிகன்
10. யோ.பவீகரன்
11. சே.டுசாந்
12. ஸ்ரீ.பிரதீப்
13. ஜெ.ரங்கயன்
14. ஜெ.சங்கீதன்
15. மு.கவிராசன்
16. வே.ரிஷhன்
17. ஜெ.துளசிகன்
18. எ.கயத்திரன்
19. எஸ்.குருசேன்
20. ஏ.அச்சுதன்
21. பி.அபிராம்
22. ஏ.ஹர்சன்
23. ஆர்.ஜனாங்கனன்
24. ரி.ஜெயகீதசர்மா
25. கே.கீர்த்திகன்
26. ல.லவன்
27. ர.பரிஷpத்
28. எஸ்.பிரசாத்
29. சி.சிவாம்சன்
30. ந.சிவமைந்தன்
31. எம்.ஸ்ரீராம்
32. எஸ்.திலுக்ஷன்
33. தே.அபிராம்
34. வை.அச்சுதன்
35. ரி.தேஜஸ்வீனன்

http://www.jhc.lk/

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

வேம்படி எப்பவும் எல்லாவிதத்திலும் பெயர் போனவர்களே.
வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரல் கொலிஜ் மாணவர்கள் என்ன மாதிரி .....!   🤨

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

சென்ரல் கொலிஜ் மாணவர்கள் என்ன மாதிரி .....!   🤨

முன்புபோல் மதிலேறிப் பாயமுடியாமல் மதிலை உயர்த்திக் கட்டிவிட்டார்களாம். 😲

07_06_10_jaffna_central_college_03_87934_445.jpg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

முன்புபோல் மதிலேறிப் பாயமுடியாமல் மதிலை உயர்த்திக் கட்டிவிட்டார்களாம். 😲

07_06_10_jaffna_central_college_03_87934_445.jpg

இது வேம்படி மதிலா அல்லது சென்ரல் காலேஜ் மதிலா? பார்த்தால் 6 அல்லது 7 அடியாவது இருக்கும் போலுள்ளது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Paanch said:

முன்புபோல் மதிலேறிப் பாயமுடியாமல் மதிலை உயர்த்திக் கட்டிவிட்டார்களாம். 😲

07_06_10_jaffna_central_college_03_87934_445.jpg

46 minutes ago, நீர்வேலியான் said:

இது வேம்படி மதிலா அல்லது சென்ரல் காலேஜ் மதிலா? பார்த்தால் 6 அல்லது 7 அடியாவது இருக்கும் போலுள்ளது 

சொன்னால் நம்பமாட்டியள் உந்த பனையளவு உயர மதிலை பாய்ஞ்ச யாழ்கள உறுப்பினர்மார் இஞ்சையிருக்கினம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த பனையளவு உயர மதிலை பாய்ஞ்ச யாழ்கள உறுப்பினர்மார் இஞ்சையிருக்கினம்.😎

அண்ணை,
யார் என்று சொன்னீர்கள் என்றால் என்போன்ற புது உறுப்பினர்கள் அறிந்துகொள்ளக்ககூடியாதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை,
யார் என்று சொன்னீர்கள் என்றால் என்போன்ற புது உறுப்பினர்கள் அறிந்துகொள்ளக்ககூடியாதாக இருக்கும். 

நான் இஞ்சை நிம்மதியாய் இருக்கிறது உங்களுக்கு விருப்பமில்லை போலை கிடக்கு....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த பனையளவு உயர மதிலை பாய்ஞ்ச யாழ்கள உறுப்பினர்மார் இஞ்சையிருக்கினம்.😎

சென்ரலில் படித்தவர்கள் கையைத் தூக்குங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

அது பொடியளின் பாதுகாப்பிற்காக பெண்கள் பாயாமல் கட்டினது என்று நினைக்கிறன்......!  🙂

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ரீதியாக வடமாகாணம் 
கிட்டதட்ட இறுதி இடத்தில் இருக்கிறதே ?

கடந்த பத்து வருடமாக போர் இல்லை 
ஏழ்மை காரணமாக இருக்குமா?
அல்லது சிங்கள அரசு சதியாக இருக்குமா?

மாத்தறை கொழும்பையும் மிஞ்சி நிற்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

அகப்பை பிடித்தவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?

தற்போது சோதனைப் பேப்பர் திருத்திறவை என் ஞாபகத்திற்கு வந்தது. 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இலங்கை ரீதியாக வடமாகாணம் 
கிட்டதட்ட இறுதி இடத்தில் இருக்கிறதே ?

கடந்த பத்து வருடமாக போர் இல்லை 
ஏழ்மை காரணமாக இருக்குமா?
அல்லது சிங்கள அரசு சதியாக இருக்குமா?

மாத்தறை கொழும்பையும் மிஞ்சி நிற்கிறது 

நீங்கள் சொல்லுவதும் ஒரு காரணம். ஞாபகத்தை வைத்து சொல்லுறேன், நாங்கள் படித்த 80 கடைசியிலும் 90 களிலும் , யாழ்ப்பாணம், மாத்தறை, கொழும்பு இந்த மூன்று மாவட்டங்களும்  முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இப்பொழுது யாழ்ப்பாணம் கடைசி இடத்துக்கு அடிபடுகிறார்கள். வன்னி குறைவாக இருந்தாலும் இவ்வளவு மோசமாக இருந்ததாக நினைவில்லை. போர் நடந்த அந்த காலத்திலும் ஒரு ஒழுங்குமுறை இருந்தது. மாணவர்களை, ரவுடிகளை,பார்த்து பயப்படும் நிலை ஆசிரியர்களுக்கு இருக்கவில்லை. போதைவஸ்து, லஞ்சம் , விதம்விதமான groupபுகள் இருக்கவில்லை. பயமில்லாமல் பல விடங்களை அணுக முடிந்தது. மற்றவனின் பின்புலத்தை பற்றி யோசிக்காமல், பயப்படாமல் அப்போதைய பொலிஸிக்கு முறைப்பாடு செய்ய  முடிந்தது. நாங்களும் வெறும் யாம் போதல் விளக்கில் போட்டிகளுக்கு மத்தியில் நன்றாக படித்தோம்.

இப்பொழுது, யாழ் இந்து போண்ற பிரபல பாடசாலைகளுக்கு முன்னாள் சர்வ சாதாரணமாக போதை வஸ்துக்கள் விற்கிறார்கள். யாழ் இந்துவை சேர்ந்தவர்கள் ரவுடி கும்பல்களுக்கு தலைமை தாங்குகிறார்கள். ரவுடி குரூப்களுக்கு backup பண்ண போலீஸ் இராணுவம் போன்றவர்கள்  இருக்கும்வரை இவற்றை மீறி வருவது கடினம். எல்லோருக்கும் பயம். இவை மாத்திரம் காரணம் என்று சொல்லி கடந்து போக முடியாது. பயனற்ற தலைமைத்துவம, ஏழ்மை, படித்தவர்கள் தொடர்ந்தும் வெளியேறுவது, பெற்றோர்களின் கவனமின்மை எல்லாம் சேர்ந்து இதற்கு ஏரியூட்டுறது என்று நினைக்கிறன்.

இப்பொழுது எமக்கு தேவை ஒரு சிறந்த தலைமை. இருக்கும் தலைமைகளில் ஒன்று நிர்வாக திறமையற்றவர்களாக, அரசியல் நுணுக்கங்கள் போதவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள்  தங்களை தமிழர்களின் பிரதிநிதிகளாகவே  கருதுவதில்லை, அல்லது அப்பிடி கருதும் படியான முயற்சிகள் இதுவரை ஈடுபட்டதில்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நீர்வேலியான் said:

தேவைக்கு அதிகமான வெளிநாட்டு பணம் தான் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

தேவைக்கு அதிகமான வெளிநாட்டு பணம் தான் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு காரணம்.

இதுவும் ஒரு காரணம் என்று ஏற்றுக்கொள்ளலாம், இதுதான் main காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வளவுக்கு இல்லாவிட்டாலும் அப்பொழுதும் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம்  வந்துகொண்டுதான் இருந்தது. எனக்கு அம்மா அப்பாவின் பென்ஷன் பணத்திற்கு அதிகமாக அண்ணாவிடம் இருந்து வரும். ஆனால் அப்போதைய சூழல் என்னை அப்படியான விடயங்களுக்கு தள்ளவில்லை. ஒழுங்கு சரியாக இருந்தது. தலைமைத்துவம் சரியாக இருந்து சட்ட ஒழுங்கு சரியாக போலீசால் பேணப்பட்டால், வெளிநாட்டுப் பணத்தையும் மீறி இவை ஒரு ஒழுங்குக்குள் வரும் என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பெற்றோர்களின் கவனமின்மை எல்லாம் சேர்ந்து இதற்கு ஏரியூட்டுறது என்று நினைக்கிறன்.

On 3/30/2019 at 4:26 AM, ஈழப்பிரியன் said:

இதுவும் ஒரு முக்கிய காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது மாணவ‌ர்களின் எண்ணிக்கை அதிகம் என நினைக்கிறேன். நான் படிக்கின்ற காலத்தில் மானிப்பாய் இந்துக்கல்லுரிக்கு ,சண்டிலிப்பாய்,சங்கானை,பண்டத்தரிப்பு,இணுவில் ,நவாலி போன்ற பகுதியிலிருந்து உயதரம் கற்க மாணவர்கள் வருவார்கள் ஆனால் இப்பொழுது இணுவில்,ச‌ண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களில் உயர்தரப்பாடசாலைகள் உருவாகிவிட்டது...
மானிப்பாயில் மட்டுமே மூன்று உயர்தர பாடசாலைகள் உண்டு....

இன்று உயர்தரம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.