Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!! வெளிவரும் உண்மைகள்!!

Featured Replies

IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!!

எப்படி மாறினாள்?

ஏன் மாறினாள்?

பின்னணியில் இருப்பது யார்?

https://www.ibctamil.com/srilanka/80/119070?ref=home-imp-parsely

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!! வெளிவரும் உண்மைகள்!!

  • தொடங்கியவர்

தாய் சிரமப்பட்டு படிக்க வைக்க, தான்தோன்றித் தனமாக நடந்து, கடத்தப்பட்டு, திருமணம் முடிக்கப்பட்டு, காலதாமதமாக தவறுகளை உணரும் போது, வெளிவரமுடியாத முஸ்லீம் பயங்கரவாதிகளின் வலையில் சிக்கிய பெண்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வழமை போல பலிக்கடா.

இந்த முஸ்லீம் இஸ்லாமிய மதவெறிக் கூட்டம்.. தமிழர்களுக்கு எதிராக சிங்களவனை விட மோசமாக நடந்து கொண்டமைக்கு இவை சில வெளிப்படை உதாரணங்கள் மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித் தான் போன வருடமும் தமிழ் பெற்றோரிடம் இருந்து ஒரு பொம்பிளை பிள்ளையை முஸ்லீம் வாத்திமார் கடத்திக் கொண்டு போனவை...அந்த பெண் எங்கே போய் வெடிக்கப் போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இப்படித் தான் போன வருடமும் தமிழ் பெற்றோரிடம் இருந்து ஒரு பொம்பிளை பிள்ளையை முஸ்லீம் வாத்திமார் கடத்திக் கொண்டு போனவை...அந்த பெண் எங்கே போய் வெடிக்கப் போகுதோ?

மதம் மாறிப்போனதெல்லாம் பற்றி கவலை வேண்டாம் அவைகள்  பிணம்தான் 

ஏன் தமிழ்பேசும் சைவர்கள் / இந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என நாம் சற்று சிந்தித்து பார்க்கலாம்.
காரணம் #1: வறுமை
காரணம் #2: தமிழ் சாதியம்
காரணம் #3: அரசியல் நிலைமை

காரணம் #4: வேறு

ஒரு அசியல் தீர்வு இல்லாமல் தொடந்து ஒரு நிலையற்ற எதிர்காலமே !

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ampanai said:

ஏன் தமிழ்பேசும் சைவர்கள் / இந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என நாம் சற்று சிந்தித்து பார்க்கலாம்.
காரணம் #1: வறுமை
காரணம் #2: தமிழ் சாதியம்
காரணம் #3: அரசியல் நிலைமை

காரணம் #4: வேறு

ஒரு அசியல் தீர்வு இல்லாமல் தொடந்து ஒரு நிலையற்ற எதிர்காலமே !

தோழர் , "லவ் ஜிகாத்" விடுப்பட்டுள்ளது  என நினைக்கிறன் ..🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, ampanai said:

ஏன் தமிழ்பேசும் சைவர்கள் / இந்துக்கள் மதம் மாறுகிறார்கள் என நாம் சற்று சிந்தித்து பார்க்கலாம்.
காரணம் #1: வறுமை
காரணம் #2: தமிழ் சாதியம்
காரணம் #3: அரசியல் நிலைமை

காரணம் #4: வேறு

ஒரு அசியல் தீர்வு இல்லாமல் தொடந்து ஒரு நிலையற்ற எதிர்காலமே !

வெளிநாடுகளுக்கு வந்து மதம் மாறுபவர்களுக்கு என்னபிரச்சனை?

வறுமையா?

சாதிப்பிரச்சனையா?

அரசியலா?

வேறு பிரச்சனையாயின் அது கொழுப்பு கூடிவிட்டதா? 😃

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

இப்படித் தான் போன வருடமும் தமிழ் பெற்றோரிடம் இருந்து ஒரு பொம்பிளை பிள்ளையை முஸ்லீம் வாத்திமார் கடத்திக் கொண்டு போனவை...அந்த பெண் எங்கே போய் வெடிக்கப் போகுதோ?

பெரும் பணத்துடன், ஏழை தமிழ் குடும்பங்களை இலக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்த இரு ஆசிரியர்களும் பயங்கரவாதிகள் தான். அவர்கள் விசாரிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வெளிநாடுகளுக்கு வந்து மதம் மாறுபவர்களுக்கு என்னபிரச்சனை?

வறுமையா?

சாதிப்பிரச்சனையா?

அரசியலா?

வேறு பிரச்சனையாயின் அது கொழுப்பு கூடிவிட்டதா? 😃

நியாயமான கேள்வி... குமாரசாமி அண்ணை. 
வெள்ளைக்காரனுடன்... கோட், சூட் போட்டுக் கொண்டு நிக்கிற ஆசையில்,
வெளிநாட்டில் உள்ளவர்கள்  மதம் மாறுகிறார்களோ... என்ற சந்தேகம் எனக்கு  இருக்கு. 🤠

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலால் நாம் வறுமையில் நிற்கிறம் முஸ்லீம்கள் அமைச்சர்களாகி அந்தந்த துறையில் இருக்கும் அனைத்து வேலைகளையும் சாதாரண ஊழியர் முதல் அவர்களையே நியமித்தால் தமிழர்கள் எங்கே போவது எதிர்கட்சியில் இருந்து ஈ மட்டுமே அடிக்கமுடிகிறது 

ஹக்கிமிடம் உள்ள நீர் வழங்கல் வடிகால் அமைச்சு சபையில் எத்தனை பேர் வேலைக்குக்கு இருக்கிறார்கள் அதில்  எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் கணக்கு புரியும் இதை சொன்னால் நான் எதிரி  கூட்டமைப்பு செம்புகளுக்கு

2 hours ago, குமாரசாமி said:

வெளிநாடுகளுக்கு வந்து மதம் மாறுபவர்களுக்கு என்னபிரச்சனை?

வறுமையா?

சாதிப்பிரச்சனையா?

அரசியலா?

வேறு பிரச்சனையாயின் அது கொழுப்பு கூடிவிட்டதா? 😃

அந்த நாட்டு வதிவிட உரிமைதானே நீங்க சொல்லுறது  

7 hours ago, குமாரசாமி said:

வெளிநாடுகளுக்கு வந்து மதம் மாறுபவர்களுக்கு என்னபிரச்சனை?

வறுமையா?

சாதிப்பிரச்சனையா?

அரசியலா?

வேறு பிரச்சனையாயின் அது கொழுப்பு கூடிவிட்டதா? 😃

சமயம் என்ற சொல் சமையல் என்ற வினையடியில் இருந்து தோற்றம் பெற்றதாகும். சமயமும். மனிதர்களை வாழ்வதற்குப் பக்குவப்படுத்தல் அல்லது பதப்படுத்தல் என்ற பணியைச் செய்வதற்காக படைக்கப்பட்டதே சமயமாகும்.

சமயத்தின் மீது வெறிபிடித்தவர்கள், சமயத்தின் நோக்கத்தை மறந்து அல்லது கைவிட்டு மதம் கொண்டு மானிடத்தை அழிக்கின்ற கொடும்செயலைச் செய்கின்றனர். இவ்வாறான மதமாற்றம் என்பது மிக மோசமான அக்கிரமச் செயலாகும். 

இதைவிடுத்து சமயம் மாறுதல்; திருமணத்தினூடு சமயத்தை மாற்றுதல்; நம்பவைத்து ஏமாற்றுதல் என்ற கொடூரத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரும்போதுதான் எல்லாம் நன்மையாக அமையும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

நியாயமான கேள்வி... குமாரசாமி அண்ணை. 
வெள்ளைக்காரனுடன்... கோட், சூட் போட்டுக் கொண்டு நிக்கிற ஆசையில்,
வெளிநாட்டில் உள்ளவர்கள்  மதம் மாறுகிறார்களோ... என்ற சந்தேகம் எனக்கு  இருக்கு. 🤠

சிறித்தம்பி!

எங்கடை சைவசமயத்திலை இருந்துதான் கனபேர் மதம் மாறீனம் எண்டதுக்காக சொல்லுறன்.

சைவம் எதிலையும் மற்றவன்ரை சோலி சுரட்டுக்கு போனதில்லை. மற்ற மதங்களை நக்கலடிச்சதில்லை. கூடாமல் பார்த்ததுமில்லை.  மற்ற மதங்களைபேய் மதம் பிசாசு மதம் எண்டு வர்ணிச்சதுமில்லை....இயற்கை உனக்கு கடவுள் என்று போதிச்ச மதம்.மூட்டைப்பூச்சி தொடக்கம் எந்த உயிரையும் கொல்லாதே என்று சொல்லும் மதம்.புலால் உண்ணாதே என்று சொல்லும் மதம்.

இப்போதைக்கு அவ்வளவுதான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

குமாராசாமி அண்ணா....
உங்களை பதிலில் உள்ள, கவலையை... அறியக் கூடியதாக உள்ளது.
முன்பு,  சில... காலங்களில், இந்தியா எமக்கு உதவி செய்யும், என்றும் யோசித்ததுண்டு. 
அவர்கள்...  இலங்கையில் வசிக்கும்,  சைவக்காரர்களுக்கு உதவி செய்ய மாட்டார்களாம்.
சிங்களனுக்கு... ஆயுத பயிற்சியும் கொடுத்து, ஆயுத கப்பல்களையும் கொடுத்து....
தமிழ் சைவனை... அழிக்க, துணை நிற்பார்களாம்.

இது, என்ன... நியாயம் என்று, எனக்கு புரியவில்லை. அன்பே... சிவம். :)

சாபம்: 
வல்லவனுக்கு... ஒருவன், வாய்ப்பான்.  
அன்று.... இந்தியா...  கதறும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி!

எங்கடை சைவசமயத்திலை இருந்துதான் கனபேர் மதம் மாறீனம் எண்டதுக்காக சொல்லுறன்.

சைவம் எதிலையும் மற்றவன்ரை சோலி சுரட்டுக்கு போனதில்லை. மற்ற மதங்களை நக்கலடிச்சதில்லை. கூடாமல் பார்த்ததுமில்லை.  மற்ற மதங்களைபேய் மதம் பிசாசு மதம் எண்டு வர்ணிச்சதுமில்லை....இயற்கை உனக்கு கடவுள் என்று போதிச்ச மதம்.மூட்டைப்பூச்சி தொடக்கம் எந்த உயிரையும் கொல்லாதே என்று சொல்லும் மதம்.புலால் உண்ணாதே என்று சொல்லும் மதம்.

இப்போதைக்கு அவ்வளவுதான்.:cool:

குசா,

மதவாதிகள் இல்லாத சமயமில்லை.

உதாரணத்திற்கு, எங்களின் இந்துமதத்தில் இருப்பவர்கள்தான் சிவசேனையும், ஜாதிய சேவக் சங்கம், விஷ்வ இந்துப் பரிசத், பாரதீய ஜனதா போன்றவர்களும். இந்தியாவில் இவர்களைப்போல் மதவாதத்தில் ஈடுபட்டு மற்றைய சிறுபான்மை மதங்களான முஸ்லீம்களையும் கிறீஸ்த்தவர்களையும் பாரியளவில் கஷ்ட்டப்படுத்தியவர்கள் வேறில்லை.

ஆகவே, நீங்கள் கூறும் இந்துமதம் என்பது ஈழத்துக்கு மட்டும்மெ பொருந்தும். வெளியுலகில் இருக்கும் இந்துமதம் வேறானது.

ஈழத்தில் இந்துமதம் மற்றைய மதங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஈழ இந்துக்கள்போல மத சமிப்புத்தன்மை கொண்டவர்கள் இலங்கையில் இல்லை. ஆனால், கிறீஸ்த்தவம் தமிழர்களுக்குள் பரவ ஆரம்பித்த நாட்களில் சைவர்கள் நடந்துகொண்ட விதத்திற்கு மடுக்கோயிலும் சங்கிலிய மன்னனும் சாட்சிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது, என்ன... நியாயம் என்று, எனக்கு புரியவில்லை. அன்பே... சிவம். :)

நாங்கள் இராவணனின வாரிசுகள்.

வட இந்தியர்கள் இராமனின் வாரிசுகள்.

1 hour ago, ரஞ்சித் said:

ஆகவே, நீங்கள் கூறும் இந்துமதம் என்பது ஈழத்துக்கு மட்டும்மெ பொருந்தும். வெளியுலகில் இருக்கும் இந்துமதம் வேறானது.

அவர்கள் இந்துமதத்தவர்கள்.
நாங்கள் சைவசமயத்தவர்கள்.
இரண்டுக்கும் நிறைய வேறுபாடு.

ஆங்கிலத்தில் பொதுவாக கின்டு என்பதால் நிறைய குழப்பங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

குசா,

மதவாதிகள் இல்லாத சமயமில்லை.

உதாரணத்திற்கு, எங்களின் இந்துமதத்தில் இருப்பவர்கள்தான் சிவசேனையும், ஜாதிய சேவக் சங்கம், விஷ்வ இந்துப் பரிசத், பாரதீய ஜனதா போன்றவர்களும். இந்தியாவில் இவர்களைப்போல் மதவாதத்தில் ஈடுபட்டு மற்றைய சிறுபான்மை மதங்களான முஸ்லீம்களையும் கிறீஸ்த்தவர்களையும் பாரியளவில் கஷ்ட்டப்படுத்தியவர்கள் வேறில்லை.

ஆகவே, நீங்கள் கூறும் இந்துமதம் என்பது ஈழத்துக்கு மட்டும்மெ பொருந்தும். வெளியுலகில் இருக்கும் இந்துமதம் வேறானது.

ஈழத்தில் இந்துமதம் மற்றைய மதங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஈழ இந்துக்கள்போல மத சமிப்புத்தன்மை கொண்டவர்கள் இலங்கையில் இல்லை. ஆனால், கிறீஸ்த்தவம் தமிழர்களுக்குள் பரவ ஆரம்பித்த நாட்களில் சைவர்கள் நடந்துகொண்ட விதத்திற்கு மடுக்கோயிலும் சங்கிலிய மன்னனும் சாட்சிகள்.

ரஞ்சித், எரியும்....  நெருப்பில், எண்ணை, ஊத்துகிறாரா?
அவர்,  ஏதோ... விசயம்  தெரிந்த ஆள் என நினைத்தேன்

அதிக...  மேதாவித்தனம், இனத்துக்கே.... ஆபத்தானது.
நாம் .... இருக்கும் சூழ் நிலையில்... எதிரிக்கு, போட்டுக் கொடுக்கிறார்.
இப்ப... இதுவா... முக்கியம்? நடக்கின்ற... அலுவலை பாருங்கப்பு.

எமது விரல்களாலேயே.... எமது கண்களை குத்தும், இனம் இது.
அதற்காகத்தான்.... நாடு, இல்லாமல் அலையும் கூட்டம்,

நீங்கள் தயவு செய்து.... சரித்திர, தரித்திரங்களை.... ஒதுக்கி வைத்து விட்டு,
நாளைய, தமிழ்  தலைமுறையை பற்றி... சிந்தியுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

உங்களின் கருத்துக்கு நன்றி. நான் விசயம் தெரிந்த ஆள் கிடையாது. சும்மா எழுதிக்கொண்டிருக்கிறேன்.

குசா எழுதிய ஈழத்துச் சைவர்களின் மத சகிப்புத்தன்மை தொடர்பான கருத்தை ஆதரித்தே எழுதினேன். எழுதும்பொழுது, பழைய சரித்திரம் ஒன்றும் நினைவில் வந்தது. அதனால்த்தான் அதையும் சேர்த்தேன். நிச்சயமாக எமது நிலையினை பலவீனபடுத்தும் நோக்கமில்லை.

சிறி, இங்கே பகிரப்படும் விடயங்கள் வெளியே பலருக்குத் தெரிந்தவைதான். நாம் பேசாதுவிடுவதால் மட்டும் மறைக்கப்பட்டு விட முடியாதவை.

என்னை விசயம் தெரிந்த ஆள் என்று உங்களை நம்பவைத்ததையிட்டு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரஞ்சித் said:

Ãhnliches Foto  Bildergebnis für யாழà¯à®ªà¯à®ªà®¾à®£  à®à®à¯à®à®¿à®²à®¿à®¯ மனà¯à®©à®©à¯ 

ரஞ்சித்.... எங்கள், கருத்துக் பகிர்வு.... 
இஸ்லாமியாமிய பயங்கரவாதிகளின்,   குண்டு வெடிப்புக்கு அப்பால்,
சும்மா... இருந்த சங்கிலிய மன்னனையும், அன்னை மடு  மாதாதாவையும்,
தயவு செய்து.... கோத்து  விட வேண்டாம். 

ஆரம்பித்தது.... நீங்கள்....  
ஏன்  இதற்குள்.... சங்கிலிய மன்னனை...இழுத்தீர்கள்?

பொல்லை... குடுத்து, அடிவாங்குவதில்.... ஈழத்தமிழருக்கு, எவரும்  நிகரில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மடுத் தேவாலயத்திற்கும் சங்கிலிய மன்னனிற்கும் உள்ளதொடர்புபற்றி இனி நான் பேசவில்லை. 

நான் பொல்லைக்கொடுத்து உங்களிடம் அடிவாங்கியதாகவும் நினைக்கவில்லை.

நான் எழுதிய கருத்து குமாரசாமி எழுதிய சைவர்கள் தொடர்பான கருத்திற்கான பதில். இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி குமாரசாமியின் கருத்து இருக்கிறதா இல்லையா என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

இக்கருத்தில் இனி நான் எழுத ஏதுமில்லை.

12 hours ago, ரஞ்சித் said:

உதாரணத்திற்கு, எங்களின் இந்துமதத்தில் இருப்பவர்கள்தான் சிவசேனையும், ஜாதிய சேவக் சங்கம், விஷ்வ இந்துப் பரிசத், பாரதீய ஜனதா போன்றவர்களும். இந்தியாவில் இவர்களைப்போல் மதவாதத்தில் ஈடுபட்டு மற்றைய சிறுபான்மை மதங்களான முஸ்லீம்களையும் கிறீஸ்த்தவர்களையும் பாரியளவில் கஷ்ட்டப்படுத்தியவர்கள் வேறில்லை.

ஆகவே, நீங்கள் கூறும் இந்துமதம் என்பது ஈழத்துக்கு மட்டும்மெ பொருந்தும். வெளியுலகில் இருக்கும் இந்துமதம் வேறானது.

ரஞ்சித், சைவ நெறியும் இந்து மதத்தின் ஓர் உபபிரிவே. இது சிவனை முதன்மைக் கடவுளாக வழிபடும் நம்பிக்கையைக் கொண்டது. ஏனைய பிரிவுகள் சக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, சூரியன் இவர்களை முதன்மைக் கடவுளாக ஏற்றுக்கொண்டவை. 

இந்தியாவில் காணப்படும் இந்து மதவாதம் எவ்வாறு இவ்வளவு தூரம் எழுச்சி கண்டது என்ற வரலாறு எனக்குத் தெரியவில்லை. இதுவே சுவாரஸ்யமான ஓர் ஆராய்ச்சித் தலைப்பாக இருக்கலாம்!

எவ்வாறாயினும் இலங்கையில் பௌத்த மதத்தினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சிறுபான்மை தமிழரை / சைவம் உட்பட அவர்களின் மதங்களை அடக்கியாள்வது போல இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் ஏனைய சிறுபான்மை மதங்களை ஒடுக்க முனைகின்றனர். 

சுருங்கக் கூறினால் இந்தியாவின் இந்து மதவாதமும், இலங்கையின் சிங்கள-பௌத்தப் பேரினவாதமும் சிறுபான்மைப் பிரிவினரை ஒடுக்குதல் என்ற வகையில் ஒத்த இயல்பைக் கொண்டிருக்கலாம். 

ஈழத்தில் ஒடுக்கப்பட்ட சைவர்கள் ஏனைய மதத்தினரை மதிக்கும் சூட்சுமமும் இது தானோ தெரியவில்லை! 😊

  • கருத்துக்கள உறவுகள்

சைவர்கள்/இந்துக்களின் சாதிய ஏற்றத்தாழ்வுகளே மதமாற்றத்தின் பிரதான காரணம்.
தற்போது போரினால் ஏற்பட்ட வறுமையையும் ஏழ்மையையும் பயன்படுத்தி மதம்மாற்றுகின்றார்கள்.
எமது கிராமத்தில் கோவில் காணியில் பாடசாலை கட்ட வேண்டுகோள் விடுத்தபோது மறுக்கப்பட்டது (கூலித்தொழிலாளர் வசிக்கும் பகுதி), பின்னர் கத்தோலிக்க அருட்சகோதரி ஒருவரின் முயற்சியினால் நிலம் வாங்கி பாடசாலை கட்டப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

பெரும் பணத்துடன், ஏழை தமிழ் குடும்பங்களை இலக்கு வைத்திருக்கிறார்கள்.

இந்த இரு ஆசிரியர்களும் பயங்கரவாதிகள் தான். அவர்கள் விசாரிக்கப்படவேண்டும்.

உண்மை தான்...இனி மேலாவது இப்படியான ஆட்களை பிடித்து உள்ளுக்குள் போட வேண்டும் 

On ‎5‎/‎3‎/‎2019 at 2:09 AM, தனிக்காட்டு ராஜா said:

மதம் மாறிப்போனதெல்லாம் பற்றி கவலை வேண்டாம் அவைகள்  பிணம்தான் 

எப்படி கவலைப் படாமல் இருப்பது அவர்களும் எங்கட இனம் தானே😟

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ISIS தீவிரவாதியை மடக்கி சோதனையிட்டபோது......

59915417_2106574139461793_83009947946251

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.