Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கினியம தாக்குதல் ; களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

60037849_2249634735122846_8012760149275967488_n.jpg?_nc_cat=106&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent-atl3-1.xx&oh=46309e8a0922d98454352da34a579946&oe=5D75F8A7

வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் நேற்று இரவு (2019/05/12) காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால்
 
1) மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்)
 
2) மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா)
 
3) மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா)
 
போன்ற பள்ளிவாயில்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 
மஸ்ஜிதுத் தக்வா பெரிய பள்ளிவாயிலில் தொடங்கிய தாக்குதல் பின்பு படிப்படியாக தக்கியா பள்ளிகளை நோக்கி நகர்ந்தன. இதன்போது பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல இலட்சக்கணக்கான சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
 
புனித அல் குர்ஆன் பிரதிகள் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் பலவும் தீ வைக்கப்பட்டுள்ளதுடன், பாரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் உள்ளன. அத்தோடு பல தளபாடங்கள், மின் உபகரணங்கள் என்பனவும் தீ வைக்கப்பட்டுள்ளன.
 
பள்ளி வாயில்களின் அனைத்து கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளதுடன், பள்ளிவாயிலில் இயங்கிவந்த கிராமத்தின் அனைத்து இனமக்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் பாரிய நீர்த்தாங்கிகள் உடைத்துச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
 
நேற்று நல்லிரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 3.30  மணிவரை இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இத்தாக்குதலை நடாத்த காடையர்கள் 300 க்கும் மேற்ப்பட்டோர். ஆயுதங்களுடனும் கல் வீச்சுத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான கற்கள் சிறிய ரக லொறியோன்றில் கொண்டுவரப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட பலர் தெரிவித்தனர்.
 
கிராமத்து மக்கள் கிராமத்தைச் சூழவுள்ள மாற்று மத மக்களுடன் பல்லாண்டு காலமாக அன்னியோன்யமாக பழகும் குணமுடையவர்கள் தொழில், கொடுக்கல் வாங்கல்கள், சமய, கலாசார நிகழ்வுகளில் இரு தரப்பினரும் பரஸ்பர ஒற்றுமையுடன் சகவாழ்வுடனேயே வாழ்ந்து வருவதோடு நல்லிரவு திடீரென இடம்பெற்ற இச் சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 
கிராமத்தின் பாதுகாப்புக் கருதி 24 மணிநேரம் பொலிஸ் பாதுகாப்பு கிராமத்தின் நாட்சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், போலீசார் கடமையில் இருக்கும் நேரமே இக் காடையர் கூட்டம் தாக்குதல் நடாத்த சாரை சாரையாக வந்து குவிந்துள்ளனர்.
 
இவ்வாறு வந்த தாக்குதல்தாரிகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியபோதும் பாதுகாப்புப் பிரிவின் வருகையைத் தொடர்ந்தே இப் பாரதூரமான இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இரும்புக் குழாய்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் ஊர் முஸ்லிம் மக்கள் சிலரை நிராயுதபாணிகளாக்கி அச்சமூட்டப்பட்ட நிலையில் காடையர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் ஊரடங்குச் சட்டத்தின் பின்பே தாக்குதல் உக்கிரம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 
மேலும், ஒரு சில வீடுகளின் கண்ணாடிகள், இரண்டு ஹோட்டல்களின் கண்ணாடிகள் பள்ளிவாயில்களில் புதிதாய் அமைத்த ஈட்டி வடிவ வேளிக்கட்டைகள், துவம்சம் செய்யப்பட்டுள்ளதுடன், அயல் கிராமங்களில் பள்ளிவாயில்கள், வியாபார நிலையங்களும் இத்தொடர் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன.
 
     “ ரமழான் பொறுமையுடைய மாதம், எமக்கு அல்லாஹ் மட்டுமே போதுமானவன்.
 
      தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் இறைவைடத்தில் உதவி தேடுவோம்.
 
      நிச்சயமாக பொறுமையாளர்களுடனேயே அல்லாஹ் இருக்கிறான்.
 
களத்தில் இருந்து - ரி. ஹமீட்
45 minutes ago, colomban said:

காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால்

1983இல் காடையர்களால் கொழும்பில் தமிழர் மீதும் தமிழர் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்ல!  

1983இல் கொழும்பில் மட்டும் தமிழரின் பலகோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழரின் பலகோடி சொத்துக்கள் எரிக்கப்பட்டன. தமிழரின் 5000 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. தமிழரின் 8000 க்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. 2000க்கு மேற்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டனர். 150000 க்கு மேற்பட்ட தமிழர் அகதிகள் ஆயினர். சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் காடையர்களால் செய்யப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் நேற்றிரவு நடந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்லை! 

1983இல் கொழும்பில் மிலேச்ச தாக்குதல்களை செய்த சிங்கள, முஸ்லீம் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படேல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

புனித குர்ஆன் -  ஸூரத்துத் தவ்பா(மனம் வருந்தி மன்னிப்பு தேடுதல்) -

தமிழாக்கம்.

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

9:5 فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُـرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍ‌ ۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

முஷ்ரிக்குகள் - .இணைவைத்து வணங்குவோர்

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

1983இல் கொழும்பில் மிலேச்ச தாக்குதல்களை செய்த சிங்கள, முஸ்லீம் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படேல்லையே!

83 கலவரத்தில் முஸ்லீம்கள் தமிழரை தாக்கினார்களா? விட்டுச்சென்ற தமிழர் உடைமையை கையாடினர், சிலர் அறாவிலைக்கு வாங்கினர் எண்டு கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தாக்கியதாக இன்றுதான் கேள்விப் படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, goshan_che said:

83 கலவரத்தில் முஸ்லீம்கள் தமிழரை தாக்கினார்களா? விட்டுச்சென்ற தமிழர் உடைமையை கையாடினர், சிலர் அறாவிலைக்கு வாங்கினர் எண்டு கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தாக்கியதாக இன்றுதான் கேள்விப் படுகிறேன்.

83கலவரத்தின் போது பல இடங்களில் முஸ்லீம்கள் சிங்களவர்களாக மாறியிருந்தார்கள் என கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்... ஏனெண்டால், 81 லைபிரரி எரிப்பு பற்றிய “மீண்டும் யாழ்பாணம் எரிகிறது” முதல், 2017 அளவில் ராஜன் கூல் ஆங்கிலத்தில் எழுதியது வரை, ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், புலிகளின் குரல் என்று பல இடங்களில் 83 கலவரம் பற்றி கட்டுரைகள், ஆய்வுகள் படித்துள்ளேன். ஆனால் எங்கும் இப்படி ஒரு விடயம் ஆவணப் படுத்த பட்டதாக நினைவில்லை. 

கிழக்கில் கிராமங்களுக்கு இடையே வந்த தனிதனி கொலைகளை தவிர, 1990 வரை தமிழ்-முஸ்லீம் பரஸ்பரம் வன்முறை இருக்கவில்லை என்பதே நான் இதுவரை நம்பியது.

இந்த செய்தி வேறு எங்கேணும் ஆவணப் படுத்த பட்டுளதா?

இது ஒரு முக்கியமான கேள்வி, இந்த கலவரம், ஒரு கலவரமே இல்லை. அது ஒரு திட்டமிட்ட அரச ஆதரவு வன்முறை. இதில் முஸ்லீம்களை கோர்த்து விட்டு, இதை ஒரு இனங்களுக்கிடயான கலவரம் என்று முடித்துவிட, தம்மை தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டு அரசுக்கு சேவை செய்யும் ஒரு சாரார் முயலக்கூடமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

1983இல் காடையர்களால் கொழும்பில் தமிழர் மீதும் தமிழர் சொத்துக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்ல!  

1983இல் கொழும்பில் மட்டும் தமிழரின் பலகோடி சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழரின் பலகோடி சொத்துக்கள் எரிக்கப்பட்டன. தமிழரின் 5000 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. தமிழரின் 8000 க்கு மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. 2000க்கு மேற்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டனர். 150000 க்கு மேற்பட்ட தமிழர் அகதிகள் ஆயினர். சிங்களவர்களுடன் சேர்ந்து முஸ்லீம் காடையர்களால் செய்யப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுடன் ஒப்பிடுகையில் நேற்றிரவு நடந்த சம்பவங்கள் ஒன்டுமே இல்லை! 

1983இல் கொழும்பில் மிலேச்ச தாக்குதல்களை செய்த சிங்கள, முஸ்லீம் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படேல்லையே!

983 யூலை 23 இனக்கலவரம் அகோர தாண்டவமாடத்தொடங்கிய நாள். எனது அண்ணரின் கூட்டாளிகளில் இசுலாத்தை தழுவியவர்கள் ஒரு சிலரில் அண்ணரின் தோளில் கை போட்டு கதைக்கும் அளவுக்கு நண்பர் ஒருவர். அன்றும் அவ்வாறே சிரித்துப்பேசியபடி இருப்பதை பார்க்கின்றேன்.

1983 யூலை 25 அண்ணரின் கடை முன் பக்கத்தால் எரியூட்டப்பட மொட்டை மாடியிலிருந்த நாம் (5ம்மாடி) கீழிறங்கி முதலாம் மாடிக்கு வந்தால் பக்கத்திலிருக்கும் வீடுகளின் கூரைகளில் ஏறமுடியும்.

உடுத்த சறத்துடன் நானும் ஒரு பெட்டியுடன் எனது மைத்துணரும் (பெட்டியை கொண்டு சென்றால் தமிழரென்று அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்பதால் நான் எதையும் எடுத்து வரவில்லை)
அந்த கூரைகளின் மீது நடக்கின்றோம். சிறிது தூரத்தில் இறங்கக்கூடிய ஒரு இடம் வருகிறது. அது ஒரு வீட்டின் முற்றம். இறங்குவதற்காக காலை கீழே நீட்டுகின்றேன்.

டேய் இறங்கினா வெட்டுவன் என்ற குரல் வருகிறது கத்தி தேடி ஓடுவதும் தெரிகிறது. அவன் வேறு யாருமல்ல எனது அண்ணருடன் நேற்றுவரை தோளில் கை போட்டு பழகிய அதே இசுலாமிய நண்பன் தான்.

மீண்டும் சில தூரம் கூரைகளின் மீது நடந்து இருவரும் பிரிந்து நான் சிங்கள மகாவித்தியாலய மதிலின் ஊடாக உள்ளே இறங்கி சிங்களவன் போல் சறக்கட்டை மாற்றி அவர்களுடனேயே கலந்து கொச்சிக்கடையை அடைந்தேன்.

இன்றுவரை எனக்குப்புரியாத விடயம்
இவர்களுக்கு எங்களோட என்ன பகை???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

83 கலவரத்தில் முஸ்லீம்கள் தமிழரை தாக்கினார்களா? விட்டுச்சென்ற தமிழர் உடைமையை கையாடினர், சிலர் அறாவிலைக்கு வாங்கினர் எண்டு கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் தாக்கியதாக இன்றுதான் கேள்விப் படுகிறேன்.

யாராவது கிழக்கு பக்கம் தெரிந்தவர்கள் இருந்தால் ஒரு கோல் எடுத்து கேட்கலாம் 83 கலவரம் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள் 

அம்பாறை ஹிங்குராணை சீனி தொழிற்ச்சாலைக்கு  , திராய்க்கேணி, அட்டப்பள்ளம், ஆலங்குளம் அக்கறைப்பற்று. கல்முனை, காரைதீவு, போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு போய்வந்தவர்கள் இன்றுவரைக்கும் வீடு திரும்பல 

உங்களுக்கு அவர்களை யாழிலிருந்து விரட்டியதுதான் கஸ்ரமா இருந்திருக்கும் என நான் நினைக்கிறன் அது மட்டுமன்றி இலங்கை யென்றால் வடக்கு மட்டும்தான் நினைவில் இருக்கு போல கிழக்கை அவர்கள் மெதுவாக பிரிக்க உதவினாலும் கிழக்கில் அவர்கள் செய்தவை , படுகொலைகள் இப்பவும் தமிழ் மக்கள் மனதில் இருக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தகவல்களை பதிந்ததற்கு நன்றி. விசுகு மற்றும் தனி.

விசுகு,

உங்கள் அனுபவம் மோசமானது. ஆனால் இது ஒரு தனிமனித விரோதமாக இருக்கலாம் அல்லவா? சிரித்துப் பேசி, சமயம் பார்த்து கழுத்தறுப்பவர்கள் எல்லா குழுக்களிலும் இருப்பரே?

உங்களுக்கு அந்த குரோதம் விளங்காவிட்டாலும், அந்த நபர் நெஞ்சில் ஒரு வஞ்சம் இருந்திருக்கலாம். 

இந்த ஒரு சோறு, பானைக்குப் பதமாகுமா? எனக்குத் தெரியவில்லை.

தனி,

ஹிங்குராண தொழில்சாலைக்கு போனோரை கொன்றது முஸ்லீம்களா? இல்லை சிங்கள குடியேற்ற வாசிகளா?

நீங்கள் இந்த தகவலை எதை வைத்து சொல்கிறீர்கள்? உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் நாம் ஊறிக் கிடந்த விசயங்களை, நாம் உறைந்து கிடந்த ஊரில் நடந்தவற்றை புதிதாக கேள்விப்படும் போது எழும் இயற்கையான ஐயமே இது. 

இது முஸ்லீம்களால் நடத்தப் பட்ட கொலைகள் என எங்கேயும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளதா?

இது எனது சந்தேகம் யாழ் மைய வாத சிந்தனையால் எழுந்திருக்கும் என எடுத்தவாக்கில் நீங்கள் சுலபமாக சொல்லிச் சென்ற விடயம் பற்றி நான் ஆழமாக யோசித்தேன்.

அப்படி இருக்க காரணமில்லை காரணம் 83 கலவரத்தின்  நானும் மட்டக்களப்பில்தான் இருந்திருக்கிறேன், ஆனால் வயது காரணமாக சில விடயங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.

முஸ்லீம்களின் யாழ் வெளியேற்றம் தேவையற்றது என்பதுக் நான் சொல்லும் ஒரே காரணம், யாழில் எப்போதும் 10% புலி எதிர்பாளர்கள் தமிழரில் இருந்தார்கள். டெலோவை புலிகள் தடை செய்தபோது, பொன்னாலை பாலத்தை தாண்டி காரைநகருக்குள் புலிகளால் செல்ல முடியாமல், முழு ஊரும் திரண்டு தடுத்தது. பின் டெலோ பெடியள் நேவியிடம் சரண்டர் ஆகினர்.

ஆனால் இதற்காக ஒட்டு மொத்தமாக, காரைநகரை புலி இடம்பெயர்கவில்லை. முஸ்லீம்களில் காட்டி கொடுப்பாளர் இருந்தார்கள் என மருது போன்றவர்களுக்கு இன்னும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அதற்க்காக முழுப்பேரையும் அனுப்பியது தவறு என்பதே நான் பலகாலமாக சொல்வது.

தவிர கிழக்கில் 90 க்கு பின் நடந்த படுகொலைகளை பற்றிய அறிவு எனக்கு நல்லாகவே இருக்கிறது. ஏனென்றால் அது நானும் அனுபவித்த விடயம்.

பிகு: உங்களுக்கும் தெரிந்திருக்கும், தமிழரும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தோம், 78ம் ஆண்டு புயலுக்கு உதவ என வந்த யாழ் இளைஞர்களே இந்த பிரிப்பை தூண்டினர் என்ற ஒரு பேச்சு இன்று வரை உண்டு. 

இது எந்தளவுக்கு உண்மை? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Rajesh said:

1983இல் கொழும்பில் மிலேச்ச தாக்குதல்களை செய்த சிங்கள, முஸ்லீம் குற்றவாளிகள் இன்று வரை தண்டிக்கப்படேல்லையே!

நீங்கள் சொல்வது உண்மையே. 1983 யூலையில்.. குறிப்பாக தொட்டிலங்க பகுதியில் தமிழ் - சிங்கள இனக்கலவரம் தொடங்க தூபமிட்டதே முஸ்லீம்கள் தான். சிங்களவர்கள் ஒருப்பக்கம் சூறையாட.. முஸ்லீம்கள் இன்னொரு பக்கம் சூறையாடினர். இதற்கான வாழும் சாட்சியங்ளாக இன்னும் பல உள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் தரப்பில் விடுதலை பெற நினைத்த   புலிகள் மீது சுலபமாக  சகல குற்றங்களையும்  சுமத்தியவர்களுக்கு.......இலங்கை முஸீம்களின்  உண்மை முகம் நம்பமுடியாமல் இருக்கின்றதாம்....... இப்போது மட்டும் என்றுமில்லாதவாறு "நடுநிலமை" என்ற கொம்பு முளைச்சிட்டுதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அடக்கியவர்கள் முஸ்லிம்களை அடக்க தருணம் பார்த்து இருந்து தாக்க தொடங்கியுள்ளார்கள். முஸ்லிம்களையும் அடக்கி விடலாம் என இனவெறி பெளத்தர்கள் நினைத்து, திட்டமிட்டு செயற்படுகிறார்கள்.
சிறுபான்மையினர் ஒற்றுமை படாமல் அடிவாங்கி இறக்க போகுன்றோமா அல்லது ஒற்றுமையாகி தாக்க போகிறோமா என்பதிலேயே சிறுபான்மையினரின் இருப்பு தங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் தரப்பில் விடுதலை பெற நினைத்த   புலிகள் மீது சுலபமாக  சகல குற்றங்களையும்  சுமத்தியவர்களுக்கு.......இலங்கை முஸீம்களின்  உண்மை முகம் நம்பமுடியாமல் இருக்கின்றதாம்....... இப்போது மட்டும் என்றுமில்லாதவாறு "நடுநிலமை" என்ற கொம்பு முளைச்சிட்டுதாக்கும்.

அண்ணர்,

என்னதான் சிலோ போல் போட்டாலும் நான் அடிக்கிறதா இல்லை 😂

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அண்ணர்,

என்னதான் சிலோ போல் போட்டாலும் நான் அடிக்கிறதா இல்லை 😂

அவங்கள் இல்லாத அருமையை    இப்பதான் கனபேர் உணர வெளிக்கிட்டினமாம்......

இதை நான் சொல்லேல்லை....

சிங்கள சிங்கங்களே பொன் வாயை திறந்து சொல்லிக்கொண்டிருக்கினமாம்...😎

அப்பிடியிருக்கேக்கை  நீங்கள் அடிச்சென்ன அடிக்கா விட்டாலென்னா சின்னா....🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தகவல்களை பதிந்ததற்கு நன்றி. விசுகு மற்றும் தனி.

விசுகு,

உங்கள் அனுபவம் மோசமானது. ஆனால் இது ஒரு தனிமனித விரோதமாக இருக்கலாம் அல்லவா? சிரித்துப் பேசி, சமயம் பார்த்து கழுத்தறுப்பவர்கள் எல்லா குழுக்களிலும் இருப்பரே?

உங்களுக்கு அந்த குரோதம் விளங்காவிட்டாலும், அந்த நபர் நெஞ்சில் ஒரு வஞ்சம் இருந்திருக்கலாம். 

இந்த ஒரு சோறு, பானைக்குப் பதமாகுமா? எனக்குத் தெரியவில்லை.

தனி,

ஹிங்குராண தொழில்சாலைக்கு போனோரை கொன்றது முஸ்லீம்களா? இல்லை சிங்கள குடியேற்ற வாசிகளா?

நீங்கள் இந்த தகவலை எதை வைத்து சொல்கிறீர்கள்? உங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் நாம் ஊறிக் கிடந்த விசயங்களை, நாம் உறைந்து கிடந்த ஊரில் நடந்தவற்றை புதிதாக கேள்விப்படும் போது எழும் இயற்கையான ஐயமே இது. 

இது முஸ்லீம்களால் நடத்தப் பட்ட கொலைகள் என எங்கேயும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளதா?

இது எனது சந்தேகம் யாழ் மைய வாத சிந்தனையால் எழுந்திருக்கும் என எடுத்தவாக்கில் நீங்கள் சுலபமாக சொல்லிச் சென்ற விடயம் பற்றி நான் ஆழமாக யோசித்தேன்.

அப்படி இருக்க காரணமில்லை காரணம் 83 கலவரத்தின்  நானும் மட்டக்களப்பில்தான் இருந்திருக்கிறேன், ஆனால் வயது காரணமாக சில விடயங்கள் தெரியாமல் போயிருக்கலாம்.

முஸ்லீம்களின் யாழ் வெளியேற்றம் தேவையற்றது என்பதுக் நான் சொல்லும் ஒரே காரணம், யாழில் எப்போதும் 10% புலி எதிர்பாளர்கள் தமிழரில் இருந்தார்கள். டெலோவை புலிகள் தடை செய்தபோது, பொன்னாலை பாலத்தை தாண்டி காரைநகருக்குள் புலிகளால் செல்ல முடியாமல், முழு ஊரும் திரண்டு தடுத்தது. பின் டெலோ பெடியள் நேவியிடம் சரண்டர் ஆகினர்.

ஆனால் இதற்காக ஒட்டு மொத்தமாக, காரைநகரை புலி இடம்பெயர்கவில்லை. முஸ்லீம்களில் காட்டி கொடுப்பாளர் இருந்தார்கள் என மருது போன்றவர்களுக்கு இன்னும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் அதற்க்காக முழுப்பேரையும் அனுப்பியது தவறு என்பதே நான் பலகாலமாக சொல்வது.

தவிர கிழக்கில் 90 க்கு பின் நடந்த படுகொலைகளை பற்றிய அறிவு எனக்கு நல்லாகவே இருக்கிறது. ஏனென்றால் அது நானும் அனுபவித்த விடயம்.

பிகு: உங்களுக்கும் தெரிந்திருக்கும், தமிழரும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருந்தோம், 78ம் ஆண்டு புயலுக்கு உதவ என வந்த யாழ் இளைஞர்களே இந்த பிரிப்பை தூண்டினர் என்ற ஒரு பேச்சு இன்று வரை உண்டு. 

இது எந்தளவுக்கு உண்மை? 

அதைத்தான் நான் முதலிலே சொன்னேன் நீங்கள் நம்பப்போவதில்லை என  மேலும் எழுத விரும்பல  வேலைக்கு  போய் வந்தவர்கள் சில  பகுதிகளில் இருந்து இறக்கி எடுகப்பட்டார்கள் 

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாராவது கிழக்கு பக்கம் தெரிந்தவர்கள் இருந்தால் ஒரு கோல் எடுத்து கேட்கலாம் 83 கலவரம் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள் 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வணக்கமும் தனி.

குசா அண்ணர், டெட் போலே போட்டாலும் அடிக்கேலா😂

ஆனாலும் நீங்கள் சொல்லுமாப்போல் இனி வயசுக்கு வந்தா என்ன வரா என்ன என்பதும் யதார்தமான பேச்சுத்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 5/13/2019 at 6:17 PM, colomban said:

ஊர் முஸ்லிம் மக்கள் சிலரை நிராயுதபாணிகளாக்கி

ஊர்மக்கள் ஆயுதபாணியாக இருந்திருக்கினம் அதுதான் பொலிஸ்  மெளனமாக இருந்திருக்கோ?  அவையள் ஆயுதத்தை காட்ட அவங்கள் இவையளை நிராயுதபாணியாக்கி போட்டாங்களா......😄 ஆயுதங்கள் வைத்திருப்பதை எந்த ஒரு ஜனநாயக நாடும் அனுமதிக்காது  

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.