Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்குப் பெயர் பக்தியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ampanai said:

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம்.

நீங்கள் சொல்வது நூற்றுக்குநூறு வீதம் சரியான கருத்து. உலகில் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது பௌத்தர்களாக இருந்தாலும் சரி மொழி மற்றும் நிறம்/நாடு பேதங்களை மறந்து  தாம் ஒரே மதத்தவர் என்ற ரீதியில் ஒன்றுபடுகின்றார்கள்.

  • Replies 186
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, tulpen said:

நாட்டை  உருவாக்க முடியவில்லை. மொழியை காப்பாற்ற முடியவில்லை. மூடத்தனத்தை மட்டும்  எதிர்காலசந்ததியிடம் திணிப்போம்.  இது தான் எம் முன்னோர் எமக்கு காட்டிய வழி. அவர்இகளைம் அதையே எமக்கு செய்தார்கள். 

எங்களைப்போன்றவர்களை விட.....
உங்களைப்போன்றவர்களை விட....
இன்று  துளிர்விட்டுக்கொண்டிருக்கும் நாளைய சமுதாயம் ஒரு தீர்க்கதர்சனத்துடன் வாழ ஆரம்பிக்கின்றார்கள்.நிறைய சிந்திக்கின்றார்கள். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கின்றார்கள்.நன்மை தீமைகளை இலகுவாக அறிந்து கொள்கின்றார்கள்.
நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கவலை கொள்ளாமல் அமைதியாக தூங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, tulpen said:

இவ்வாறான விடயங்கள் பொது வெளிக்கு வரும்  போது நாம் அனைவரும் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டியது இதை போல் எம்மால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து மூடப்பழக்கங்களையும் பற்றி என்பது எனது அபிப்பிராயம். இவை மூடத்தனம் என்று இங்கு கருத்தெழுதும் அனைவரின் மனச்சாட்சிக்கு மட்டுமல்ல  தமிழர்களிலும் பலரின்   மனச்சாட்சிக்கும. நன்கு தெரியும். இருப்பினும் ஈகோ காரணமாக எல்லா  மூடத்தனத்துக்குள்ளும் ஏதோ அறிவியல் கலந்துள்ளதாக தம்மை தாமே  ஏமாற்றி அதற்கு வக்காலத்து வாங்கி மக்களை மட்டுமல்ல தம்மையும் ஏமாற்றி வருகிறார்கள். . 

எங்கோ பல மில்லியன் கிலோ மீற்றருக்கு அப்பால் சுற்றும்  Saturn planet மற்றும்  Jupiter planet    தன்னை பிடித்துவிடும் என்று அஞ்சுவதும் அதற்கு எண்ணெய் எரித்து பரிகாரம் தேடுவதும் மிக மோசமான அறிவீனத்தின் வெளிப்பாடு. இவை போன்ற எண்ணற்ற மூடத்தனத்தை மக்கள்  மனதில் விதைத்து அவர்களை நிரந்தரமாக அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமது வாழ்வை பெருக்கிக்கொள்ளலாம் என்பதே இவற்றை பரப்பிய அயோக்கியர்களின் நோக்கமாகும் 

இதை உணர்ந்து இப்படியான மூடத்தனத்தை களை எடுப்பது  எமது தமிழ் சமுதாயம் முன்னேற மிக முக்கியமான செயற்பாடு என்பது எனது கருத்து. 

தேவாலயங்களில் மெழுகுதிரியேற்றி ஏசுவும் மேரிமாதாவும் தங்களை ரட்சிப்பார் என்றுதானே அவர்களும் வழிபடுகிறார்கள். அது உங்களுக்கு மூடத்தனமாக தோன்றவில்லையா??

46 minutes ago, Eppothum Thamizhan said:

தேவாலயங்களில் மெழுகுதிரியேற்றி ஏசுவும் மேரிமாதாவும் தங்களை ரட்சிப்பார் என்றுதானே அவர்களும் வழிபடுகிறார்கள். அது உங்களுக்கு மூடத்தனமாக தோன்றவில்லையா??

எனக்கு அது மூடத்தனமாக தெரிகிறதா என்பது என்து எழுத்துக்களை வாசித்து சரியாக கிரகித்தீர்களாலால்  உங்களால் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு அது மூடத்தனமாக தெரிந்தால் எனக்கு மிக மகிழ்சசி. ஏனென்றால் அதை தான் நான் எப்போதும்  கூறுகிறேன். ஆனால் மூடத்தனங்களை  ஆதரிக்கும் நீங்களே இவை மூடத்தனங்கள் தான்  என்று பொது வெளியில்  சுட்டிக்காட்டி இருப்பது நல்ல முன்னேற்றம் தான். 

ஆனால் சிவனுக்கு தீபாராதனை செய்வதைப்பற்றி நீங்கள் கோடிட்ட பந்தியில் நான்  கூறியிருக்கவில்லை என்பதை மீண்டும்  அதை வாசித்து புரிந்து கொள்ளுங்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இந்து சமயத்தில் பிள்ளைகளுக்கு அலகு குத்துவதை பற்றியது. இங்கே அதை மட்டுமே விவாதிக்காமல், கருத்து சொல்லுபவரில் ஒருவர் வேதக்காரர் என்று ஊகித்தபடி, ஏன் கிறிஸ்தவத்தில் அப்படி இல்லையா, முசுலீம் இப்படிச் செய்யவில்யா என்பது குழு மனோ நிலையே அன்றி வேறில்லை.

சுன்னத் - STD நோய்கள் தொற்றபாயம் குறைவு, கழுவாமல் இருப்போர்க்கு ஆரோக்கியம் என பல வலுவான காரணக்கள் இருப்பினும், தீர்மானிக்க முடியாத (16) வயதுக்குட்பட்டோர் மீது, மத காரணதுக்காக இதை செய்வது வன்முறையே. 16 வயதுக்குப் பின் முக்காலை நீக்கினால் என்ன, முழுவதும் நீக்கினால் என்ன. அது அவரவர் விருப்பம்.

குழந்தைகள் மனதில், உடலில் நீண்ட நாள் வடுக்களை ஏற்படுத்த கூடிய எந்த முடிவையும், அவர்கள் சுயமுடிவு எடுக்கும் பராயம் வர முன்னம், பெற்றோர் எடுப்பது, ஆடு, மாடுகளை போல், குழந்தைகளையும் கால்நடை, அசையும் சொத்தாக பார்க்கும் மனோநிலையே.

எனது மனைவியை நான் அடிப்பேன் நீ யார் கேட்பது என்பதற்க்கும், எனது நம்பிக்கைகாக என் பிள்ளை மேல் அலகு குத்துவேன் நீயார் கேட்பது என்பதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

நம்பிக்கை அடிப்படையில் பிள்ளைகளை நரபலி கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

முதலாமதில் கொன்றே விடுகிறார்கள், இதில் சிற்றவதை செய்கிறார்கள். ஆனால் அடிப்படைத் தர்க்கம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

On 8/10/2019 at 9:06 AM, ampanai said:

வளர்ந்த மேலைத்தேய நாடுகள் உட்பட உலகத்தின் பெரும்பான்மையான நாடுகளில் பெற்றோர்கள் தான் பிள்ளைகள் ( 16 இல்லை 18 வயது வரை) விடயத்தில் முடிவு எடுக்கும் உரிமை கொண்டவர்கள். அந்தந்த நாடுகளின் சட்டத்தை மீறினால் மட்டுமே அரச சட்டங்கள் நடவடிக்கை எடுக்கலாம். 

பெற்றோரை செருப்பால் அடித்தால், அடித்தவர் மீது அநேகமான நாடுகளில் சட்டம் பாயலாம். 

எங்களுக்கு (இந்த படத்தில் உள்ள) பெற்றோர்கள் செய்வது பிழையாக தெரிந்தால், அது பற்றி உள்ளூர் சட்ட ஒழுங்கை கவனிக்கும் துறைசார் வல்லுநர்களுக்கு தெரிவிப்பதே சமூக சாராளம்.

நான் சைவ மதத்தை சேர்ந்தவன்.எனக்கு அதில் உள்ள நல்லது கெட்டதை தீர்மானிக்கும் சக்தியை எனது சமூகம் தந்து வளர்ந்துள்ளது. நான் நான் வாழும் நாட்டின் சமூகத்தையும்  மதிக்கத்தெரிந்தவன்.  

பொதுவாக இந்து மதத்தில் முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகியோர் இத்தொழிலை செய்வதாக முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள். 

இதில் அதிகமான மனிதர்கள் செய்வது, 'அழித்ததல். கொஞ்சம் படைத்தல் இல்லை காத்தல் திரிகளிலும் உங்கள் வாதங்களை வைத்துப்பாருங்கள் அதில் உள்ள கடினங்கள் தெரியும். 

8 minutes ago, tulpen said:

நீங்கள் காப்பாற்ற நினைக்கும் மூடத்தனங்கள் அறிவியல் பால் பட்டவை என்றால் அவற்றை நிருபியுங்கள். சரி ஒவ்வொன்றாக வருவோம் 

  நிருபியுங்கள்.  ( புரட்டு புராண விளக்கங்கள் வேண்டாம். அறிவுடை மனிதர்களாக நிரூபியுங்கள்) 

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சந்திரனில் நீர் இல்லை என்றார்கள். பின்னர் துருவத்தில் பனிக்கட்டி இருப்பதாகக் கூறினார்ள்.  இது சந்திரனின் கோளாறா அல்லது விஞ்ஞானத்தின் தவறா?

சனிக் கிரகம் கண்டுபிடிக்கப்படும் முன் அந்தக் கிரகமே இருக்கவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையே. 

இதிலிருந்து நாம் புரியவேண்டியது என்ன? விஞ்ஞான, அறிவியல் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஏதோ சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது. சராசரியாக 80 வயது ஆயுட்காலமேயான மனிதனைவிட இந்தப் பிரபஞ்சம் வல்லமை கூடியது. மனிதன் தோற்றுவித்த விஞ்ஞான ஆராய்ச்சி முறை முழுமையான ஓர் கருவி அல்ல; இன்னும் ஆரம்பப் படி நிலையில் தான் உள்ளது. அதனால் அறிவியல்/விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. இது அறிவியல். விஞ்ஞானத்தின் குறையே தவிர எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள் அல்ல. மூடநம்பிக்கைகளும் உண்டு; ஆனால் இந்து மதம் நீங்கள் கூறுவது போல் மூடநம்பிக்கைகள் மட்டுமே நிறைந்ததல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

இப்போ யார்யாருக்கு குத்துவதென்பதே.

11 minutes ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

இப்போ யார்யாருக்கு குத்துவதென்பதே.

சரி தான் அண்ணா, இவ்வாறு நிறைய நல்ல விஷயங்களை ஆராய்ந்து பார்த்து தெளிவுபெறுவதே புத்திசாலித்தனம், இல்லையா அண்ணா? இதை விடுத்து வீண் விவாதங்களால் என்ன பயன்.

On ‎8‎/‎10‎/‎2019 at 8:50 AM, வல்வை சகாறா said:

67893616_502485330506305_618697783673828

1. திரியில் இணைக்கப்பட்ட படம். இது எங்கிருந்து இணைக்கப்பட்டுள்ளது? முகநூல் பக்கம் ஒன்றில் இருந்து 

2. அது இணைக்கப்பட்ட மூலம் தரப்பட்தா? இல்லை 

3. அவ்வாறானால், அதன் ஆரம்பம், தொடர் மற்றும் முடிவு பற்றிய முழுத்தகவலும் எங்களுக்கு முன்னால் உள்ளதா? இல்லை  

4. அவ்வாறான நிலையில் எதை வைத்து கருத்தாடல் செய்வது ?

அ) இணைக்கப்பட்ட படம். இதைபார்த்து ஆயிரம் கதை சொல்லலாம். ஆனால், அவை அனைத்தும் அதைப்பார்ப்பவரின் கண்ணில் இருந்தே வரும். ஒருவர் அந்த குழந்தைகளை இல்லை அவர்கள் பெற்றோர்களை இந்தப்படம் போட்டவர்கள் கேடடார்களா என்கிறார்.  இன்னொருவர் அந்த குழந்தைகளை அவர்கள் கண்ணில் இருக்கும் பயத்தை கண்டார். இன்னொருவர், இதில் உள்ள இந்து மத மூடத்தன்மை என்கிறார். 

எந்த நாட்டில், எப்பொழுது, என்ன நிகழ்வில் இது நடந்தது என்று தகவல் இருப்பதாக தெரியவில்லை.

ஆ) இணைக்கப்பட்ட தமிழ் வசனம்: 'பக்தி என்ற பெயரில் இதுபோல குழந்தைகளை கொடுமைப்படுத்தும் பெற்றோரை செருப்பால் அடிக்கவேண்டும்'

இங்கே இந்த சொற்களை இணைத்தவரின் நோக்கம் என்ன? குழந்தைகள் மேல் கொண்ட மனிதாபிமானம்? இல்லை இது போன்று மேலும் நடக்க கூடாது என்ற சமூக உணர்வு? இல்லை பக்தி என பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்?

மேற்கொண்ட எண்ணங்களுடன் எழுத நினைத்தால், அதை பெரும்பான்மையான மக்கள் ஏற்று கொண்டு இருப்பார்கள். ஆனால், மேலும் எழுதிய, "செருப்பால் அடிக்க வேண்டும்' என்ற வரிகள் இதை எழுதியவரின் நோக்கம் இவை அனைத்தும் இல்லை என்பதை காட்டுகின்றது.

ஒன்றில் இவர் தனது முகநூல் பக்கத்தை கவரும் நோக்கில் எழுதி இருக்கலாம் இல்லை இன்று சமூக வலைத்தளங்களில் இது போன்று ஒருவித குறிப்பிட்ட சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்படுவையாக இருக்கலாம்.

46 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கூறும் அறிவியல் / விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிகளில் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் ஏன் பின்னர் விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டன என்று புரிந்துகொள்ள முடியுமா?

சந்திரனில் நீர் இல்லை என்றார்கள். பின்னர் துருவத்தில் பனிக்கட்டி இருப்பதாகக் கூறினார்ள்.  இது சந்திரனின் கோளாறா அல்லது விஞ்ஞானத்தின் தவறா?

சனிக் கிரகம் கண்டுபிடிக்கப்படும் முன் அந்தக் கிரகமே இருக்கவில்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? இல்லையே. 

இதிலிருந்து நாம் புரியவேண்டியது என்ன? விஞ்ஞான, அறிவியல் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட ஏதோ சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது. சராசரியாக 80 வயது ஆயுட்காலமேயான மனிதனைவிட இந்தப் பிரபஞ்சம் வல்லமை கூடியது. மனிதன் தோற்றுவித்த விஞ்ஞான ஆராய்ச்சி முறை முழுமையான ஓர் கருவி அல்ல; இன்னும் ஆரம்பப் படி நிலையில் தான் உள்ளது. அதனால் அறிவியல்/விஞ்ஞானத்தால் எல்லாவற்றையும் நிரூபிக்க முடியாது. இது அறிவியல். விஞ்ஞானத்தின் குறையே தவிர எல்லா நம்பிக்கைகளும் மூடநம்பிக்கைகள் அல்ல. மூடநம்பிக்கைகளும் உண்டு; ஆனால் இந்து மதம் நீங்கள் கூறுவது போல் மூடநம்பிக்கைகள் மட்டுமே நிறைந்ததல்ல. 

அறிவியல்  என்றுமே தன்னை update செய்து வருகிறது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்கிறது.  அதன் பின்னர் தனது முதல் ஆய்வில்  தவறு உண்டானால்  அந்த தவறை ஒப்புக்கொள்ளவோ அதை திருத்திக்கொள்ளவோ அறிவியல்  என்றும் தயங்கியதில்லை. விடாப்பிடியாக  தனது முன்னைய கண்டுபிடிப்பில்  தொங்கிக்கொண்டு நிற்பதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

 முன்னர் தவறுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை பின்னர் அறிவியல் வளர்ச்சியின்  பின்னர் நிராகரிப்பது தான் சரியானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். அதை தான் நானும் கூறுகிறேன் அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கு முன்னைய  முன்னோரின் அறிவின்மையால் பழக்கப்படுத்தப்பட்ட மூடப்பழக்கங்கள் இன்றைய அறிவியல்  சமுதாயத்தால் நிராகரிக்கப்படல் வேண்டும். அதுவே நியாயமானது. ஆனால் கோசானுடனான கருத்தாடலில் பெண்பிள்ளைகளை மாதம் மூன்று நாள் வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கத்தை இன்நறைய நிலையில்  நடைமுறைப்படுத்த முடிந்தால் அதை கடைப்பிடிப்பது சரியானது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஏன் இந்த முரண்பாடு? 

Edited by tulpen

9 hours ago, tulpen said:

அறிவியல்  என்றுமே தன்னை update செய்து வருகிறது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவிக்கிறது.  அதன் பின்னர் தனது முதல் ஆய்வில்  தவறு உண்டானால்  அந்த தவறை ஒப்புக்கொள்ளவோ அதை திருத்திக்கொள்ளவோ அறிவியல்  என்றும் தயங்கியதில்லை. விடாப்பிடியாக  தனது முன்னைய கண்டுபிடிப்பில்  தொங்கிக்கொண்டு நிற்பதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

 முன்னர் தவறுதலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை பின்னர் அறிவியல் வளர்ச்சியின்  பின்னர் நிராகரிப்பது தான் சரியானது என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்ளுகின்றீர்கள். 

அறிவியல் வளர்கிறது தான். நான் மறுக்கவில்லை. அறிவியல் மட்டுமல்ல மருத்துவம், வணிகம், கட்டடக்கலை, உற்பத்தி எனப் பல துறைகளும் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. 

நான் இங்கே கூற வந்தது அதுவல்ல; முன்பு அறிவியல் முறைப்படி விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை பின்னர் அதே அறிவியல் முறை மூலம் பின்னர் வந்த விஞ்ஞானிகள் நிராகரித்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆகவே அறிவியல் முறை என்பது கூட முழுமையாக நம்பக்கூடிய ஒரு பொறிமுறை அல்ல என ஏற்றுக்கொள்கிறீர்களா? மதங்களும் மனிதனால் வகுக்கப்பட்டவை என்று சொல்கிறோம். அறிவியல் முறை என்பது கடவுள் படைத்ததா? அதுவும் மனிதன் தானே உருவாக்கியது. மனித குலம் வளர வளர அறிவியலும் வளரும் தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பல சூட்சுமங்களை அதனால் அறியமுடியாது. மனித வாழ்வே ஒரு 100 ஆண்டுகளுக்குள் மட்டுப்படப்பட்டிருக்கும் போது, மனிதனின் பிறப்பின் முன், இறப்பின் பின் என்ன நடக்கும் என உறுதியாக கணிக்க முடியாத போது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அறிவியல் முதலிய பொறிமுறைகள் மட்டும் எவ்வாறு அனைத்துக்கும் விடை சொல்லும் என நினைக்கிறீர்கள்?

10 hours ago, tulpen said:

ஆனால் கோசானுடனான கருத்தாடலில் பெண்பிள்ளைகளை மாதம் மூன்று நாள் வீட்டுக்கு வெளியில் விடும் பழக்கத்தை இன்நறைய நிலையில்  நடைமுறைப்படுத்த முடிந்தால் அதை கடைப்பிடிப்பது சரியானது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஏன் இந்த முரண்பாடு? 

மேலே நான் தந்த விளக்கத்துடன் இதையும் படியுங்கள்; முரண்பாடு எதுவும் இல்லை:

இவ்வாறு அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விடைகளையே தரும்போது, காலங்காலமாக நம்முன்னோர்கள் தங்கள் அனுபவங்கள் மூலமாகப் பெறப்பட்ட ஞானத்தை மதங்களாக நிறுவினர். என்னைப் பொறுத்தவரை மதம் என்பது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும், ஏன் அறிவியலையும் கூடக் கலந்தது தான். அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல! அறிவியலையும் தாண்டிய பல விடயங்களை முனிவர்கள்/ஞானிகள் மெய்ஞானம் என்றனர். (இங்கு போலிச் சாமியார்களுடன் போட்டுக் குழப்ப வேண்டாம்!)

அறிவியலையும் தாண்டி மனித உள்ளுணர்வு சில விடயங்களை வெளிப்படுத்தும். வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் ஏதோ ஒரு உணர்வு சில சம்பவங்களை நமக்கு அவ்வப்போது முன்கூட்டியே உணர்த்துகிறது. ஒருவரைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய குணவியவல்புகளை, ஏன் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைக் கூறும் சில மனிதர்களைக் கண்டிருப்போம்.

இவ்வாறு தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக சேர்க்கப்பட்ட ஆன்மீக அறிவு, கலாச்சாரம், அறிவியல் என்பன மதங்களாக வளர்ச்சி பெற்றன, இன்னும் வளர்கின்றன. 

அறிவியல் ஆராய்ச்சி மூலம் இவை எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். எனவே அவரவர் மத நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை, கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் மூலம் மட்டும் பார்த்து முடிவு செய்வது சரியல்ல. அதையும் தாண்டிய ஞானம் தேவை. 

மூன்று நாள் வெளியே விடும் பழக்கம் பற்றி நாம் முடிவு பண்ண முடியாது. அது அவர்கள் சம்பிரதாயம்.

ஆகவே அறிவியலை எல்லா இடத்திலும் பயன்படுத்துவதை விடுத்து ஆக்கபூர்வமான வழிகளில். பயன்படுத்துவோம். தற்போது அரசியல், வியாபார ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகமே நிகழ்கிறது. 

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மூன்று நாள் விடயம் பற்றி ।।
பெண்களுடன் பிறந்து பெண்களுடன் வாழ்ந்து பெண்களை பெற்றவர்கட்கு தெரியும் அந்த மூன்று நாட்களில் அவர்கள் அனுபவிக்கும் வலிகளும் அசவ்கரியங்களும் ।   இன்றைய வாழ்க்கை     முறையில் விடுப்பு எடுப்பது முன்னரை மாதிரி இல்லை என்பதால் இதனை வேறு மாதிரியாக கையாள படுகிறது , ஆயினும் வசதிப்படுமென்றால் அவர்களை அந்த மூன்று நாட்களிலாவது ஓய்வாக இருக்க விடுவதே  முறை ।। இதிலெங்கே மூடத்தனமும் முட்டாள்தனமும் வந்தது

17 hours ago, goshan_che said:

சுன்னத் - STD நோய்கள் தொற்றபாயம் குறைவு, கழுவாமல் இருப்போர்க்கு ஆரோக்கியம் என பல வலுவான காரணக்கள் இருப்பினும், தீர்மானிக்க முடியாத (16) வயதுக்குட்பட்டோர் மீது, மத காரணதுக்காக இதை செய்வது வன்முறையே. 16 வயதுக்குப் பின் முக்காலை நீக்கினால் என்ன, முழுவதும் நீக்கினால் என்ன. அது அவரவர் விருப்பம்.

குழந்தைகள் மனதில், உடலில் நீண்ட நாள் வடுக்களை ஏற்படுத்த கூடிய எந்த முடிவையும், அவர்கள் சுயமுடிவு எடுக்கும் பராயம் வர முன்னம், பெற்றோர் எடுப்பது, ஆடு, மாடுகளை போல், குழந்தைகளையும் கால்நடை, அசையும் சொத்தாக பார்க்கும் மனோநிலையே.

நம்பிக்கை அடிப்படையில் பிள்ளைகளை நரபலி கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

முதலாமதில் கொன்றே விடுகிறார்கள், இதில் சிற்றவதை செய்கிறார்கள். ஆனால் அடிப்படைத் தர்க்கம் இரண்டுக்கும் ஒன்றுதான்.

நாங்கள் ஐந்து வயதிலே தான் கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு அனுப்புகிறோம் , வரட்டும் பதினாறு , அவர்களே முடிவு செய்யலாம் என்று விடுவதில்லை

உங்கள் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு காது குத்தும் வழக்கம் உண்டா , 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

இந்த மூன்று நாள் விடயம் பற்றி ।।
பெண்களுடன் பிறந்து பெண்களுடன் வாழ்ந்து பெண்களை பெற்றவர்கட்கு தெரியும் அந்த மூன்று நாட்களில் அவர்கள் அனுபவிக்கும் வலிகளும் அசவ்கரியங்களும் ।   இன்றைய வாழ்க்கை     முறையில் விடுப்பு எடுப்பது முன்னரை மாதிரி இல்லை என்பதால் இதனை வேறு மாதிரியாக கையாள படுகிறது , ஆயினும் வசதிப்படுமென்றால் அவர்களை அந்த மூன்று நாட்களிலாவது ஓய்வாக இருக்க விடுவதே  முறை ।। இதிலெங்கே மூடத்தனமும் முட்டாள்தனமும் வந்தது

நாங்கள் ஐந்து வயதிலே தான் கட்டாயப்படுத்தி பாடசாலைக்கு அனுப்புகிறோம் , வரட்டும் பதினாறு , அவர்களே முடிவு செய்யலாம் என்று விடுவதில்லை

உங்கள் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு காது குத்தும் வழக்கம் உண்டா , 

பீரியட் பெயினும், அந்த காலத்தில் வரும் எமோசனல் நிலையும் சகல பெண்களுக்கும் மிக கடுமையாக வருவது ல்லை. அந்த மூன்றுநாட்களிலும் கூட மாடாய் உழைக்க வேண்டிய நிலையில்தான் நம் சகோதரிகள் பலர் இன்னும் இருக்கிறாகள். மூன்று நாட்களுக்கு அவர்களை இளைப்பாற விடுவது வேறு, தீட்டு, சாமி அறைக்குள் வராதே, வீட்டுக்கு வெளியே ஓலைப்பாயில் படு, கையில் கரித்துண்டை வைத்துக்கொள், கிணத்தில் தண்ணி அள்ளாதே என இம்சிப்பது வேறு.

கல்வி ஒவ்வொரு குழந்தையினதும் அடிப்படை உரிமை. 16 வயதுவரை கல்வியை கொடுக்க வேண்டியது, குறைந்த பட்சம் பாடசாலைக்கு அனுப்புவது பெற்றாரின் கடமை. பெற்றார் தவறின், அரசு பிள்ளைகளை பொறுப்பேற்று இந்த கடமையை செய்யும்.

ஆனால், டாக்டர் ஆகவே வேண்டும், ஸ்கொலர்சிப்பில் பாஸ் பண்ணாவிட்டால் செத்தாய், இப்படியா குழந்தைகளின் குழந்தை பராயத்தை திருடி, அவர்களை படிக்கும் இயந்திரங்களாக மாற்றுவதும் குழந்தைகள் மீதான வன்முறையே.

படி என்று சொல்லலாம், ஒரு வரயறக்குள் வற்புறுத்தலாம், எடுத்துச் சொல்லலாம், ஆனால் படி, படி என்று சாவடிப்பது நிச்சயமாக உளவியல் வன்முறையே. மாக்ஸ் குறைந்தால் பெல்ட்டால் விளாசுவது எல்லாம் அடுத்த கட்டம்.

உங்கள் குழந்தைகளுக்கு திருநீறு பூசுவதை யாரும் கேட்கவில்லை. மொட்டை அடிப்பதை கூட யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் குழந்தைகளின் உடலில், கதற கதற கூரிய ஆயுதங்களால் தைப்பதை நிச்யம் மனிதநேயம் உள்ள எவரும் எதிர்ப்பர்.

காது குத்துவதும் வன்முறையே. பிள்ளைகள் எமது சொத்தல்ல. அவர்களை அழகு படுத்தி பார்க்க ஆயிரம் வழியுண்டு. நீண்டகால வடுக்களை அவர்கள் முடிவெடுக்கும் வரை ஏற்படுத்தாமல் இருப்பதே சிறப்பு.

அவர்களின் எதிர்கால முடிவுகளை, பெற்றுவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இப்போதே அவர்களிடம் இருந்து திருட முடியாது. கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

.

எனது மனைவியை நான் அடிப்பேன் நீ யார் கேட்பது என்பதற்க்கும், எனது நம்பிக்கைகாக என் பிள்ளை மேல் அலகு குத்துவேன் நீயார் கேட்பது என்பதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

சீனாக்காரன் அக்குபங்சர் முறையை கொஞ்ச காலத்துக்கு முதல் தான் கண்டுபிடித்தார்கள்.

நம்மவர்கள் எத்தனையோ நுhற்றாண்டுக்கு முதலே கண்டு பிடித்துவிட்டனர்.

அதல்லாம் எனக்கு சரிவராது.நான் நம்பமாட்டன். எனக்கு வெள்ளைக்காரன் சொல்லோணும்.கேம்பிரிஜ் யூனிவசிற்றி சொல்லோணும்.வெள்ளைக்கார அமெரிக்கன் சொல்லோணும். அப்பதான் நம்புவன்.😎
 
11 hours ago, மல்லிகை வாசம் said:

அறிவியல் வளர்கிறது தான். நான் மறுக்கவில்லை. அறிவியல் மட்டுமல்ல மருத்துவம், வணிகம், கட்டடக்கலை, உற்பத்தி எனப் பல துறைகளும் வளர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. 

நான் இங்கே கூற வந்தது அதுவல்ல; முன்பு அறிவியல் முறைப்படி விஞ்ஞானிகள் கண்டு பிடித்ததை பின்னர் அதே அறிவியல் முறை மூலம் பின்னர் வந்த விஞ்ஞானிகள் நிராகரித்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆகவே அறிவியல் முறை என்பது கூட முழுமையாக நம்பக்கூடிய ஒரு பொறிமுறை அல்ல என ஏற்றுக்கொள்கிறீர்களா? மதங்களும் மனிதனால் வகுக்கப்பட்டவை என்று சொல்கிறோம். அறிவியல் முறை என்பது கடவுள் படைத்ததா? அதுவும் மனிதன் தானே உருவாக்கியது. மனித குலம் வளர வளர அறிவியலும் வளரும் தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பல சூட்சுமங்களை அதனால் அறியமுடியாது. மனித வாழ்வே ஒரு 100 ஆண்டுகளுக்குள் மட்டுப்படப்பட்டிருக்கும் போது, மனிதனின் பிறப்பின் முன், இறப்பின் பின் என்ன நடக்கும் என உறுதியாக கணிக்க முடியாத போது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட அறிவியல் முதலிய பொறிமுறைகள் மட்டும் எவ்வாறு அனைத்துக்கும் விடை சொல்லும் என நினைக்கிறீர்கள்?

நான் சொன்னதை மறுத்து விட்டு கடைசியில் உங்களை அறியாமலே நான் கூறிய விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நன்றி. புதிய விடயங்களை கண்டு பிடித்த பின்னர் முன்னர் சரி  என்று நாம் கருதிய விடயங்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்ற உங்கள் புரிதலை வரவேற்கிறேன். 100 ஆண்டுகளுக்குள் வாழ்வு  மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மனிதன் புதிய பல கண்டு பிடிப்புகளை தனது ஆராய்சசிகளின் மூலம் நிறுவி அதை தனது  புதிய தலைமுறையிடம்  கையளிக்க  தலை முறை அதனை மேலும் துல்லியமாக ஆராய்ந்து அதை மேம்படுத்த வேண்டும். தனக்கு பழைய தலைமுறையால் வழகங்கப்பட்ட விடயங்களில் தவறு இருந்தால் அதை தயங்காமல் நிராகரிக்க வேண்டும். முன்னோர் தந்தது எல்லாம. சரியானது என்று முன்னோர் புராணம் பாடக்கூடாது. 

10 hours ago, மல்லிகை வாசம் said:

மேலே நான் தந்த விளக்கத்துடன் இதையும் படியுங்கள்; முரண்பாடு எதுவும் இல்லை:

இவ்வாறு அறிவியல் மட்டுப்படுத்தப்பட்ட விடைகளையே தரும்போது, காலங்காலமாக நம்முன்னோர்கள் தங்கள் அனுபவங்கள் மூலமாகப் பெறப்பட்ட ஞானத்தை மதங்களாக நிறுவினர். என்னைப் பொறுத்தவரை மதம் என்பது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும், ஏன் அறிவியலையும் கூடக் கலந்தது தான். அறிவியலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல! அறிவியலையும் தாண்டிய பல விடயங்களை முனிவர்கள்/ஞானிகள் மெய்ஞானம் என்றனர். (இங்கு போலிச் சாமியார்களுடன் போட்டுக் குழப்ப வேண்டாம்!)

இவ்வாறு தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக சேர்க்கப்பட்ட ஆன்மீக அறிவு, கலாச்சாரம், அறிவியல் என்பன மதங்களாக வளர்ச்சி பெற்றன, இன்னும் வளர்கின்றன. 

அறிவியல் ஆராய்ச்சி மூலம் இவை எல்லாவற்றையும் ஆராய வெளிக்கிட்டால் குழப்பம் தான் மிஞ்சும். எனவே அவரவர் மத நம்பிக்கைகளை, சம்பிரதாயங்களை, கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் மூலம் மட்டும் பார்த்து முடிவு செய்வது சரியல்ல. அதையும் தாண்டிய ஞானம் தேவை. 

மூன்று நாள் வெளியே விடும் பழக்கம் பற்றி நாம் முடிவு பண்ண முடியாது. அது அவர்கள் சம்பிரதாயம்.

தமது வாழ்வியலில் ரீதியாகவும் அரசியல  ரீதியாகவும் கிறிஸதவம் பரப்பிய மூடத்தனங்களை நம்பி  ஞானம் அது இது  என்று புலம்பிய காலத்தில் ஐரோப்பிய மக்களால் எந்த முன்னேற்றத்தையும. காண முடியவில்லை. மதங்களை வைத்து சண்டையிடதோடு பல நூற்றாண்டுகளை இழந்தனர். அதன் பின்னர் தமது தவறு உணர்ந்து  மதங்களை விட்டு வெளியே வந்து சிந்திக்க தொடங்கிய பின்னரே இன்று நீங்களும  நீனும் அனுபவிக்கும் பல வசதிகளை அறிவியல் வளர்சசி அளித்தது. 

இந்து  மதத்தைப்   பொறுத்தவரை கடவுள் என்ற concept தவிர மேலதிகமாக பரப்ப்பட்ட மூடப்பழக்கங்களும் மனிதரை தரவு நிரைப்படுத்தும் வருணாசிரம முறையை திணித்து ஒரு குறிப்பிட வர்க்கத்தின் அனுகூலங்களைப் பேணிப்பாதுகாக்க மட்டும் என மதத்தை பயன்படுத்திக்கொண்டனர். சீர் திருத்த நடவடிக்கைகள் தம்மை பாதிக்கும் என்பதால் அவர்கள் அதில்  அக்கறை காட்டாதது மட்டுமல்ல இது தொடர்பான கேள்விகள்  எழும்போது இப்படித்தான் முன்னோர ஆன்மீகம், ஞானம் என்று புலம்பல்கள் மூலம் மக்கள் மீது அறிவீனங்களை திணித்தனர். அதனால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏதும் இன்றி இருந்தனர். இவ்வாறு பலவீனமாக இருந்ததால் அன்னிய படையைடுப்புகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்நியரிடம் தோற்ற போதிலும் தம்மால் பரப்பப்பட்ட  மூடத்தனங்கள தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதில் கரிசனை செலுத்தினர்.  இன்றும் அதையே செய்கின்றனர். தாம் அறிவியலில  சிறந்து விளங்கியதாக ஏமாற்று பரப்புரைகளை செய்ய அறிவியல் சாதனங்களையே வெட்கமின்றி பயன்படுத்தி வருகின்றனர். உறுப்பு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கத்தையவர்கள் கண்டு பிடிக்க முதலே இந்து மதம் கண்டு பிடித்து விட்டதாக புலுடா விட்டு இதற்கு ஆதாரமாக விநாயகரை முன் வைத்து எள்ளி நகையாட வைத்தனர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

விசுகு ஐயா, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று விளங்கவில்லை. ஒருவரை ஒருவர் அடக்குமுறை செய்யமுடியாது என்பதுதான் நாகரீக உலக நியதி. தலிபான்கள்தான் பெண்களையும் தாடி வைக்காத ஆண்களையும் அடக்குமுறை செய்கின்றார்கள். அப்படியான தலிபான்களை இங்கு கருத்தெழுதும் யாரும் ஆதரிப்பதில்லை எனவே நினைக்கின்றேன்.

நிற்க, நீங்கள் சொன்ன விவாகரத்து விடயத்தை பார்த்தால் முதலில் ஒருவர் தானாகவே விவாகரத்து எடுக்கமுடியாது. இருவரின் சம்மதத்துடன்தான் விவாகரத்து வழங்கப்படும்.  விவாகரத்தானவர்கள் சட்டப்படி தனியன்களாக இருப்பதால் ஒருவர் இன்னொருவரை படுமோசமாக விமர்சனம் வைக்கமுடியாது. ஏதாவது மிரட்டல்களோ, துஷ்பிரயோகங்களோ செய்தால் உள்ளேபோகத்தான் வேண்டிவரும்.

அது சரி, ஏன் இதெல்லாம் பக்தி பற்றிய திரிக்குள் வருகின்றது?🤔🤔🤔

9 minutes ago, கிருபன் said:

அவர் சொல்ல வந்தது இந்து மதத்திலிருந்து விவாகரத்து பெற்று வேறு மதத்தை திருமணம் முடித்தவர்கள் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி என நினைக்கிறேன். 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

அவர் சொல்ல வந்தது இந்து மதத்திலிருந்து விவாகரத்து பெற்று வேறு மதத்தை திருமணம் முடித்தவர்கள் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி என நினைக்கிறேன். 😀

ஓஹோ! இப்போது மனிதர்களை மட்டுமல்ல மதங்களையும் திருமணம் புரியலாம், விவாகரத்தும் பெறலாம் என்ற நிலைமை வந்திருக்கா?😂🤣 அதைத்தான் விசுகு ஐயா சொல்லியுள்ளார் என்று விளங்கிக் பச்சையும் குத்தியிருக்கின்றீர்களாக்கும்.😜 

இந்தத் திரியில் மினக்கெடுவதை விட வீட்டுக் கார்டனுக்குள் வந்து கக்கா செய்யும் பூனையைப் பிடித்துச் சிரைக்கலாம். 🤓

டொட்.

12 minutes ago, கிருபன் said:

ஓஹோ! இப்போது மனிதர்களை மட்டுமல்ல மதங்களையும் திருமணம் புரியலாம், விவாகரத்தும் பெறலாம் என்ற நிலைமை வந்திருக்கா?😂🤣 அதைத்தான் விசுகு ஐயா சொல்லியுள்ளார் என்று விளங்கிக் பச்சையும் குத்தியிருக்கின்றீர்களாக்கும்.😜 

விவாகரத்து என்றால் விலகுவது, திருமணம் என்றால் இணைவது. அதையும் நானா சொல்லித்தர வேணும்? 😂

இந்து மதத்திலிருந்து விலகி வேறு மதத்தில் இணைந்தவர் முதல் மதமான இந்து மதத்தை விமர்சிப்பது பற்றி. இனி வாசித்து பாருங்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????

அது முதல் மனவியின் எந்த செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகிறது என்பதைப் பொறுத்தது.

முதல் மனைவி தலை மயிருக்கு மஞ்சள் பெயிட்ன் அடிப்பதை, முன்னாள் கணவன், மட்டுமல்ல கல்யாணத்திலேயே நம்பிக்கை இல்லாத கட்டை பிரம்மசாரிகளும் விமர்சிக்க முடியாது, தேவையில்லை.

ஆனால் முதல் மனைவி ஒரு வாயில்லா பிராணியை நடுத்தெருவில் வைத்து சங்கிகியால் விளாசினால் - முன்னாள் கணவன், இன்நாள் காதலன், பக்கத்துவீட்டுக்காரன், பால்காரன், கலியாணமே பொய் என்பவன், எல்லாரும், இப்படி ஜீவகாருண்யம் உள்ள எவருமே அதை விமர்சிக்க, தட்டிக்கேட்க, முடிந்தால் தடுக்கவும், முடியும். 

1 hour ago, tulpen said:

நான் சொன்னதை மறுத்து விட்டு கடைசியில் உங்களை அறியாமலே நான் கூறிய விடயங்களை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நன்றி. புதிய விடயங்களை கண்டு பிடித்த பின்னர் முன்னர் சரி  என்று நாம் கருதிய விடயங்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்ற உங்கள் புரிதலை வரவேற்கிறேன். 100 ஆண்டுகளுக்குள் வாழ்வு  மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மனிதன் புதிய பல கண்டு பிடிப்புகளை தனது ஆராய்சசிகளின் மூலம் நிறுவி அதை தனது  புதிய தலைமுறையிடம்  கையளிக்க  தலை முறை அதனை மேலும் துல்லியமாக ஆராய்ந்து அதை மேம்படுத்த வேண்டும். தனக்கு பழைய தலைமுறையால் வழகங்கப்பட்ட விடயங்களில் தவறு இருந்தால் அதை தயங்காமல் நிராகரிக்க வேண்டும். முன்னோர் தந்தது எல்லாம. சரியானது என்று முன்னோர் புராணம் பாடக்கூடாது. 

அறிவியல் வளர்கிறது என்பதையும், புதுப்புது விடயங்களை update செய்து கொள்கின்றது என்பது நீங்கள் சொல்லித் தான் தெரிய.வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம். நான் மேலே சொன்ன விடயங்களை முழுமையாக வாசிக்காமல் அறிவியல் மட்டுமே எல்லாத்தையும் அளவிடும் நீங்கள் நான் ஒப்புக்கொண்டதாகக் கூத்தாடுகிறீர்கள்.

அறிவியலால் மட்டும் இந்து மத சம்பிரதாயங்கள் பற்றிய சரி பிழைத் தன்மையை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அதுவும் மனிதனால் வடிவமைக்கப்பட்ட பொறிமுறை. ஞானிகள் உணர்ந்த ஆன்மீக ஞானம் அறிவியலையும் தாண்டி ஆழமானது. அத்துடன் நமது கலாச்சார விழுமியங்களை அறிவியல் கண் கொண்டு பார்த்து கேவலப்படுத்த முடியாது. இவையே நான் கூற வந்தது.

இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமல் நீங்கள் நான் சொன்னதைத் திரித்து நமது இந்து மதத்தை விமர்சித்தால் உங்கள் இயலாமையை எண்ணி பரிதாபம் தான் கொள்ள முடியும்.

1 hour ago, tulpen said:

தமது வாழ்வியலில் ரீதியாகவும் அரசியல  ரீதியாகவும் கிறிஸதவம் பரப்பிய மூடத்தனங்களை நம்பி  ஞானம் அது இது  என்று புலம்பிய காலத்தில் ஐரோப்பிய மக்களால் எந்த முன்னேற்றத்தையும. காண முடியவில்லை. 

ஐரோப்பிய வருகைக்கு முன்னரும் நமது நாட்டு மக்கள் மகிழ்ச்சியான, தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இப்போது வசதிகள் இருக்கலாம். ஆனால் அன்றைய காலத்தில் சொகுசு வாழ்க்கை இல்லாமலும் தன்னிறைவான, சுதந்திர வாழ்க்கையை எமது மக்கள் வாழ்ந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.