Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து அதிபர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவின் அதிபர், பிள்ளை ஒருவரை பாடசாலையில் சேர்க்க 1 லட்சம் கையூட்டு பெற்றதாக கூறி கைதாகியுள்ளார்.

http://www.hirunews.lk/224658/jaffna-hindu-college-principal-who-accepted-a-bribe-arrested 

  • கருத்துக்கள உறவுகள்

விசாரித்துக் கொண்டிருந்தார்கள் என்று செய்தி வந்தது, பிடித்து விட்டார்கள் போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போனதடவை யாழ் போயிருந்த போது இப்போது யாழின் முதல்தர இந்து ஆண்பாடசாலை கொக்குவில் இந்து என்றே பேசிக்கொண்டார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

போனதடவை யாழ் போயிருந்த போது இப்போது யாழின் முதல்தர இந்து ஆண்பாடசாலை கொக்குவில் இந்து என்றே பேசிக்கொண்டார்கள்.

 

 யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... கடவுளே...  யாழ். இந்துக் கல்லுரிக்கு  வந்த அவமானம். 😥
அந்த அதிபரின்... பெயரையும், படத்தையும்... பார்த்து,  🥶
காறித் துப்ப... வேண்டும் போல் உள்ளது. 🤬

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையூட்டு அல்லது நன்கொடை என்ற பெயரில் கன இடங்களில் நடக்கின்றது. இவர் பிடிபட்டு விட்டார்.அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இந்தியாவுக்கு நிகராக சளைக்காமல் வளர்ந்திருக்கிறோம்.

எல்லா வகையிலும்....🙄

நேற்றுவரைக்கும் காதும் காதும் வச்சமாதிரி நடந்த சங்கதிகள் இன்று இயல்பாக நடக்கிறது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வறுமை இருந்தது அதே நேரம் நேர்மையும் இருந்தது. நாடு என்று ஆசையாக சென்ற பகுதிகளில் எல்லாம் ஊழல்கள் பல வடிவங்களில் நேர்மைக்கு வாழ்வில்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்னர் மனதில் வெறுப்பு மண்டுவதை தவிர்க்கமுடியவில்லை.

கல்வியும் ஒரு வியாபாரமே. ஐம்பதினாயிரம் கொடுத்து தமது பிள்ளையை இந்த கல்லூரியில் சேர்க்க விரும்பியது பெற்றோரின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றது. தமது பிள்ளை இங்கே படித்தால் சிறப்பு என்பது அவர்களின் ஆசையாக இருந்துள்ளது.   

ஆனால், நன்கொடை என்பது நீண்ட காலமாக உள்ள ஒன்று. 

இந்த கைதை தடுக்கவும் இவரை  பாதுகாக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. யாழில் இல்லாமல் பருத்தித்துறையில் தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இப்படியான விடயத்தில் இந்த அதிபர்  கைதானது ஒரு பாடமாக அமையட்டும். இவ்வாறான நிலமை வேறு தமிழ் பாடசாலைகளில் நடக்காமல் இருந்தால்  மகிழ்ச்சியே!

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

இப்போது இந்தியாவுக்கு நிகராக சளைக்காமல் வளர்ந்திருக்கிறோம்.

எல்லா வகையிலும்....🙄

நேற்றுவரைக்கும் காதும் காதும் வச்சமாதிரி நடந்த சங்கதிகள் இன்று இயல்பாக நடக்கிறது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் வறுமை இருந்தது அதே நேரம் நேர்மையும் இருந்தது. நாடு என்று ஆசையாக சென்ற பகுதிகளில் எல்லாம் ஊழல்கள் பல வடிவங்களில் நேர்மைக்கு வாழ்வில்லை என்பதை கண்கூடாக பார்த்தபின்னர் மனதில் வெறுப்பு மண்டுவதை தவிர்க்கமுடியவில்லை.

புலிகள் காலத்திலும் குறுக்கு வழியில் பாஸ் எடுக்க லஞ்சம் இருந்தது,தட்டுப்பாடான பொருட்களை தமிழர்களிடமிருந்தே தமிழர்கள் குறுக்கு வழியில் பெற லஞ்சம் இருந்தது, லஞ்சமும் நேர்மையும் குறைந்த அளவில் இருந்தது என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.

புலிகள் காலத்தின் முன் இருந்த சீர்கேடு இப்போது புலிகள் காலத்தின் பின்னர் எழுந்துவந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.

மற்றும்படி எம்மினத்துக்கோ அயல் இனத்துக்கோ முன்ன பின்ன தெரியாத ஒன்று இப்போது புதிதாய் முளைத்து வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.இந்துக்கல்லூரி அதிபர் விளக்கமறியலில்

September 20, 2019

மயூரப்பிரியன்

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலனை ஊழல் குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில்  முற்படுத்தி வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் உத்தரவு பெறப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நீதிமன்றம் அனுமதியளித்தது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்று ஊழலில் ஈடுபட்டார் என்று அந்தக் கல்லூரியின் அதிபர் சதா நிர்மலன் இன்று நண்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சாட்டுதல்களை புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு அதிகாரிகள், இன்று மாலை பருத்தித்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்துவதால் அதிபருக்கு சாதகமான நிலை ஏற்படும். என்ற காரணத்தால் சிறப்பு அனுமதியின் கீழ் பருத்தித்துறை காவல்துறையினர்  ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சதா நிர்மலன் முற்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #யாழ் #இந்துக்கல்லூரி #அதிபர் #விளக்கமறியல்

 

http://globaltamilnews.net/2019/130861/

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, valavan said:

எம்மினத்துக்கோ அயல் இனத்துக்கோ முன்ன பின்ன தெரியாத ஒன்று இப்போது புதிதாய் முளைத்து வரவில்லை.

அதெண்டால் உண்மைதான்...எனக்குத்தெரிய  சாவகச்சேரி பொலிசுக்கு சூடைக்கருவாடு  லஞ்சமாய் குடுத்ததை கண்ணாலை கண்டனான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கல்லூரியை வைச்சு எப்படி காசு பார்க்கலாம் என்பதான நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டிருந்தார்.

குறிப்பாக பழைய மாணவர் சங்கங்களை ஒருங்கிணைப்பதாகச் சொல்லிக் கொண்டு.. ஒரு அமைப்பின் ஊடாக மொத்த அன்பளிப்புக்களையும் சொந்தமாக்க முனைந்ததோடு..

பழைய மாணவர்கள் எல்லோரும் காசு கொடுத்து ஆயுட்கால உறுப்பினத்துவம் பெற வேண்டும் என்றும் காசு பார்க்கும் சட்டங்களை இயற்ற வெளிக்கிட்டிருந்தார்.

யாழ் இந்துக்கல்லூரியின் சிறப்புக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் உண்டு. இப்படியான சிலரும் யாழ் இந்து சார்ந்தோராக இருப்பது துரதிஷ்டம். இப்படிச் சிலர் காலத்துக்கு காலம் வந்து போகவே செய்கின்றனர். அது எமது சமூகத்தில் என்றில்லை உலகில் எங்குமே காணக்கூடிய பொதுக்காட்சியாகவே உள்ளது. 

பெற்றோரும் மாணவர்களும் பழைய மாணவர்களும் விழிப்புணர்வாக இருப்பதும்... அதிபர்களின் ஆசிரியர்கள் மாணவர்களின் சட்டத்துக்கு சமூகத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் கண்டு உடனடி நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் சமூக மட்டத்தில் எடுப்பதன் வாயிலாக மட்டுமே பாடசாலையின் நற்பெயர் அதிபர்கள் ஆசிரியர்கள் சில சண்டிக்கூட்ட மாணவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை எதிர்காலத்தில் உறுதி செய்து கொள்ள முடியும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 9/20/2019 at 6:40 PM, goshan_che said:

போனதடவை யாழ் போயிருந்த போது இப்போது யாழின் முதல்தர இந்து ஆண்பாடசாலை கொக்குவில் இந்து என்றே பேசிக்கொண்டார்கள்.

 

சிறு தகவல்  - கொக்குவில் இந்து கலவன் பாடசாலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, MEERA said:

சிறு தகவல்  - கொக்குவில் இந்து கலவன் பாடசாலை.

நினைவூட்டியதற்கு நன்றி. நான் இரண்டு 6ம் ஆண்டு மாணவர்களின் பெற்றாருடன் உரையாடியபோது, ஆண் பிள்ளைகளுக்கு இந்து சமய பாடசாலை ஒன்றில், ஒழுக்கம் பேணி நல்ல கல்வி என்றால் அதற்கு இப்போ கொக்குவில் இந்துதான் என இருவரும் கூறினர். இதில் ஒருவர் ஆசிரியர்.

இந்த் உரையாடலில் ஆண் பிள்ளைகள் யாழ் இந்துவிக்கு தோடு அணிந்து செல்வது முதல், யாழ் இந்துவின் ஒழுக்கம் எப்படி கிடுகிடு என வீழ்ந்தது என்பது பற்றி நீண்ட நேரம் கதைத்தோம். இதனால் ஏற்பட்ட பொருள் மயக்கம்தான் - கொக்குவில் இந்துவை நான் ஆண்கள் பாடசாலையாக மனதில் பதிந்து கொண்டது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண ஒரு லட்சம் பிடிபடுகிறது 10 லட்சம் அதிகமாக வாங்கும் பாடசாலைகளும் இருக்கு கொழும்பில் அதுகள் வெளிவருவதில்லை 

சிலர் பாடசாலைகளுக்கு தேவையான  அனைத்தையும் செய்து கணக்கு காண்பிக்கிறார்கள் சிலர் தனது சொந்த கணக்கை சரிபார்க்கையில் இந்த பிரச்சினை எழுகிறது 

ஒவ்வொரு நாளும் பாத்துறூமுக்கு பெரிண்ட் அடிக்க வேண்டும் காரணம் பொடியனுகள் சித்திரம் கீறி வைக்கிறானுகள் , அதுபோக தண்ணீர் குழாய்கள் , வாங்குகள் , கதிரைகள் மேசைகள் , இலவசமாக தயாரிக்கும் செயலட்டைகள் இவை அனைத்துக்கும் காசு தேவை ஆனால் அரசாங்கம் இவை அனைத்துக்கும் கொடுப்பதில்லை அப்படி தேவை என வலயக்கல்வி அதிகாரியிடம் சொன்னால் வந்து சேருவதற்கு அந்த தவணை முடிந்து விடும் 

 

இந்த ஊழல் பேர்வழி கொழும்பில் காணி வாங்கியுள்ளதாகவும் அதற்க்கு மாதாந்த தவனைப் பணம் கொடுக்க பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.