Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபய ஜனாதிபதியானால் தமிழருக்கு தீமையில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

4 hours ago, ampanai said:

உலகில் அப்படி ஒரு நாடும் இதுவரை இல்லை. கோத்தபாய அண்ட் கோ அவர்களின் அதிஷ்டம் அப்படி நீடிக்கும் என நம்புவது கடினம்.

இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதனால் தான் பல நாடுகளும் இலங்கையுடன் தொடர்புகளை பேணுவதில் ஆர்வம் காட்டுகின்றன. போர்க்காலத்திலும் இந்நாடுகளின் உதவியை இலங்கை பெற்றது.

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் 3 நாடுகளுடனும் தனது தொடர்புகளை பேணும். கடந்த காலங்களில் சீனாவுக்கு ஒரு அபிவிருத்தி திட்டம் கொடுத்தால் இந்தியாவுக்கு ஒரு அபிவிருத்தி திட்டம் கொடுத்தது கூட இச்சமநிலையை பேணுவதற்கு தான். அதே போல் அமெரிக்காவுடனும் நட்பை பேணி வருகிறது.

ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த சீனாவுடனும் கோத்தா அமெரிக்காவுடனும் பசில் இந்தியாவுடனும் தமது தொடர்புகளை பேணி வருபவர்கள். தனிப்பட்ட ரீதியிலும் கோத்தாவுக்கு 3 நாடுகளின் ஆதரவும் உள்ளது. 

தவிர கோத்தா அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகளை பேணி வருபவர் என்பதால் எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவம் இலங்கைக்குள் கால் பதிக்க கோத்தா அனுமதிக்கலாம். 

2007 இல் மகிந்த ஆட்சியின் போது அமெரிக்காவுடனான ACSA உடன்படிக்கையில் கோத்தா கையெழுத்திட்டவர் என்பதை மறந்து விட கூடாது.

Edited by Lara

  • Replies 67
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அணிசேரா கொள்கையில் இருந்து இலங்கை வெளியேறி பல ஆண்டுகளாகி விட்டன.

 

அணிசேராக் கொள்கை இறந்தே இரண்டு தசாப்தங்கள் ஆகிவிட்டன 😂.

இலங்கை முதன்முதலாக 87 இல் தொடங்கி, பின் ரணில் பிரதமர் ஆகி பின் கதிர்காமர் வெளிநாட்டமைச்சர் ஆன 92-94 காலப்பகுதியில் பளிங்கமாகிய தமக்கென தனியான, Sri Lanka centric வெளி நாட்டு கொள்கையையே பின்பற்றுகிறது. 

மூவருக்கும் நண்பன், ஒருவருக்கும் எதிரி இல்லை. இதுதான் இந்த கொள்கையின் சாராம்சம். 

  • தொடங்கியவர்
39 minutes ago, Lara said:

இலங்கை என்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதனால் தான் பல நாடுகளும் இலங்கை அரசுடன் தொடர்புகளை பேணுவதில் ஆர்வம் காட்டுகின்றன. போர்க்காலத்திலும் இந்நாடுகளின் உதவியை இலங்கை பெற்றது.

இந்த நாடு ஒரு முக்கியமான இடத்தில் இருக்கின்றது. ஆனால். 'அந்த இடம் இல்லாவிட்டால் ... " என்ற நிலை இல்லை.  போர்க்கால உதவிக்கும் இந்த அமைவிடத்திற்கும் தொடர்பில்லை. 

மூன்று நாடுகளுடனும் " நட்பை பேணி " நீண்ட காலம் பயணிக்க முடியாது. காரணம், நீண்ட காலம் என்ற போர்வையில் சீன அரசு காலை கடன் கொடுத்து ஊன்றி வருகின்றது. அமேரிக்கா அதற்கு மாற்று வழி தேடிவருகின்றது. 

41 minutes ago, goshan_che said:

மூவருக்கும் நண்பன், ஒருவருக்கும் எதிரி இல்லை. இதுதான் இந்த கொள்கையின் சாராம்சம். 

இன்றைய உலக அரசியலில் வேறு ஏதாவது நாடு இவ்வாறான வெளிவிவகார கொள்கையை வெற்றிக்கரமாக முன்னெடுத்து வருகின்றதா? இல்லை "முள்ளிவாய்க்கால் வெற்றி போன்று" உலக நாடுகள் சிங்கள அரசிடம் பாடம்தான் எடுக்கின்றனவா? இல்லை. 

21 minutes ago, ampanai said:

இந்த நாடு ஒரு முக்கியமான இடத்தில் இருக்கின்றது. ஆனால். 'அந்த இடம் இல்லாவிட்டால் ... " என்ற நிலை இல்லை.  போர்க்கால உதவிக்கும் இந்த அமைவிடத்திற்கும் தொடர்பில்லை. 

மூன்று நாடுகளுடனும் " நட்பை பேணி " நீண்ட காலம் பயணிக்க முடியாது. காரணம், நீண்ட காலம் என்ற போர்வையில் சீன அரசு காலை கடன் கொடுத்து ஊன்றி வருகின்றது. அமேரிக்கா அதற்கு மாற்று வழி தேடிவருகின்றது. 

போர்க்கால உதவிக்கும் அமைவிடத்திற்கும் தொடர்புள்ளது என நான் கூற வரவில்லை. ஆனால் அதற்கும் தொடர்புள்ளது. இலங்கையின் அமைவிடம் காரணமாக பல நாடுகளும் இலங்கையில் கவனம் செலுத்தும் போது அதை இலங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்நாடுகளிடம் உதவிகளை பெற்றது.

சீனா இலங்கையில் காலை ஊன்றும் அதேவேளை அமெரிக்காவும் இலங்கையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இன்னொரு வழியில் இலங்கையை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறது.

2007 இல் 7 பக்கமாக இருந்த ACSA உடன்படிக்கை 2017 இல் 83 பக்கமாக நீட்டிக்கப்பட்டது. இப்பொழுது SOFA ஒப்பந்தத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. 

கோத்தா அமெரிக்காவின் நண்பன், அமெரிக்க இராணுவத்துக்கும் நண்பன், ட்ரம்பின் ரசிகரும் கூட.

எனவே கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பப்போவது கிடையாது.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ampanai said:

இந்த நாடு ஒரு முக்கியமான இடத்தில் இருக்கின்றது. ஆனால். 'அந்த இடம் இல்லாவிட்டால் ... " என்ற நிலை இல்லை.  போர்க்கால உதவிக்கும் இந்த அமைவிடத்திற்கும் தொடர்பில்லை. 

மூன்று நாடுகளுடனும் " நட்பை பேணி " நீண்ட காலம் பயணிக்க முடியாது. காரணம், நீண்ட காலம் என்ற போர்வையில் சீன அரசு காலை கடன் கொடுத்து ஊன்றி வருகின்றது. அமேரிக்கா அதற்கு மாற்று வழி தேடிவருகின்றது. 

இன்றைய உலக அரசியலில் வேறு ஏதாவது நாடு இவ்வாறான வெளிவிவகார கொள்கையை வெற்றிக்கரமாக முன்னெடுத்து வருகின்றதா? இல்லை "முள்ளிவாய்க்கால் வெற்றி போன்று" உலக நாடுகள் சிங்கள அரசிடம் பாடம்தான் எடுக்கின்றனவா? இல்லை. 

எனக்கான உங்கள் கேள்விக்கான பதில்.

1. ஆம். ஈயூ உறுப்பினராக இருந்தபடியே ரஸ்யாவுடன் நெருங்கிய வர்த்தக உறவை பேணும் பின்லாந்து. சீனா, மலேசியா, இந்தோனேசியா, அமெரிக்கா இடையே  இலங்கைக்கு ஒத்த கொள்கையை பின்பற்றும் சிங்கப்பூர். ரஸ்யா-துருக்கி இடையே சம உறவை வைதுள்ள சிரியாவின் அசாட். இஸ்ரேல், ஹிஸ்புல்லா, சன்னி அரபு தேசங்ளுடனான லெபனானின் உறவு. இப்படி பல நாடுகள் இப்படிபட்ட வெளிநாட்டு கொள்கையை கொண்டுளன.

2. முள்ளிவாய்க்கால் ஒன்றை இப்போது சவுதி யேமெனில் நடத்தி கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கு பயங்கரவாத எதிர்பு பாடமும் நடத்திவருகிறது. 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனதில் தோன்றியது:

யாழில் கோட்ட அல்லது சஜித் என்ற தெரிவில், எமது மக்களின் நல்வாழ்வுக்கு யார் வெல்வது ஒப்பீட்டளவில்  நல்லம் என பெரும் பாலானோர் நினைக்கிறார்கள்?

தனியே வாசித்துப் போகாமால், தங்கள் தெரிவை ஒரு வரியில் சொல்லிப்போவார்களேயாயின், குறைந்த பட்சம், புலம்பெயர் மக்களின் எண்ணவோட்டம் பற்றி ஒரு non scientific    க்ளூவாவ்து கிடைக்கும்.

இப்போதைக்கு;

சஜித் வென்றால் நல்லம் - கோஷான், பொயட், ஜஸ்ரின்

கோட்ட அபய வென்றால் நல்லம் - அம்பனை

 

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் படியுங்கள்.

சஜித்தின் வேட்பாளர் தேர்வை வரவேற்கும் விக்கி.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=211378 

  • கருத்துக்கள உறவுகள்

71291332_2342669169194841_40537162513844

71649418_2342669165861508_71502590246450

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் சக்தியை ஒன்றுதிரட்ட முடியாத நிலை.

 

பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டவேண்டிய இக்கட்டுக்குள்தான் தமிழர்

12 hours ago, ampanai said:

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்.

இவ்வாறான சிந்தனைகள் காலாகாலமாக இருந்துவருகின்றது. சிங்களம் ஒரு நாட்டுடன் ஐக்கியமாகப்போனால் அதற்கு எதிரான நாடு தமிழர்களுக்கு உதவி செய்யும் என்ற கணக்கு. காலாகாலமாக இவ்வாறான கணக்குகளுக்கு மரண அடி விழுந்துகொண்டுதான் இருக்கின்றது இருந்தும் பலவீனமான இனத்தின் இயலாமையின் வெளிப்பாடாக  இதை எடுத்துக்கொள்ளலாம். 

பேரினவாதிகள் யார் வென்றாலும் தமிழர்களுக்கு ஒன்றுதான். கோத்த வென்றால் தமிழர்கள் சார்பாக ஒரு வெள்ளை வானை கடந்த கால ஞாபகர்த்தமாக பரிசளிக்கலாம். . அதை விட வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. 

 

  • தொடங்கியவர்
3 hours ago, Lara said:

எனவே கோத்தா ஜனாதிபதியாக வந்தால் அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக திரும்பப்போவது கிடையாது.

நடக்கும் என்பார்கள் நடக்காது. நடக்கும் என்பார்கள் நடக்காது. 


இதையே இன்றைய ட்ரம்ப் அமெரிக்காவில் காண்கின்றோம். 

அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் வெல்லும் சாத்தியங்களும் உள்ளன. தேர்தலுக்கு முன்னராக அவரை (ட்ரம்ப்பை)  போட்டியில் இருந்தும் நீக்கப்படும் சாத்தியங்களும் உள்ளன. 

ஆசியாவே உலக அரசியல் அரங்கின் மையாமாக மாறிவரும் இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

71568222_2453728088044101_78445716909808

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தெளிவாகத்தான் இருக்கின்றான். தமிழ் அரசியல்வாதிகள்  தான்... அரசியலில், 
இன்னும் கனக்க, படிக்க வேண்டி இருக்கு. 

சஜித் அல்லது கோட்டா இவர்கள் இருவரும் தமிழருக்கு எதுவும் தரமாட்டார்கள். சிங்கள பேரினவாதம் அதற்கு இடமளிக்காது. 

கோட்டா  போரினை வெற்றி கொண்டதினால் இலங்கைத் தீவின் பொருளாரத்தை கட்டியெழுப்பும் நிர்வாக ஆற்றலும் இருக்கக் கூடும்

அது ஒன்று மட்டுமே தமிழருக்கு தற்போதைக்கு பயன்படக்கூடியது

எனவே கோட்டாவே எனது தெரிவு

5 hours ago, ampanai said:

நடக்கும் என்பார்கள் நடக்காது. நடக்கும் என்பார்கள் நடக்காது. 


இதையே இன்றைய ட்ரம்ப் அமெரிக்காவில் காண்கின்றோம். 

அமெரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் வெல்லும் சாத்தியங்களும் உள்ளன. தேர்தலுக்கு முன்னராக அவரை (ட்ரம்ப்பை)  போட்டியில் இருந்தும் நீக்கப்படும் சாத்தியங்களும் உள்ளன. 

ஆசியாவே உலக அரசியல் அரங்கின் மையாமாக மாறிவரும் இந்த காலத்தில் எதுவும் நடக்கலாம். 

அமெரிக்காவில் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்ற கேள்வி போலல்ல இலங்கை விடயம்.

1) தமிழர்களுக்கு சார்பான நடவடிக்கைகளை எடுத்து தான் இலங்கை அரசை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய நிலை அமெரிக்காவிற்கு இல்லை.

2) கோத்தா ஜனாதிபதியாக வந்தால் கோத்தா தானாக தமிழர்களுக்கு தீர்வு தர நினைத்தால் சரி, மற்றும்படி அமெரிக்காவோ ஆட்டுக்குட்டியோ சொல்லி தீர்வு தரமாட்டார்.

3) கோத்தா அமெரிக்காவின் நண்பனாக இருப்பதால் அமெரிக்காவுடன் இரகசியமாகவோ வெளிப்படையாகவோ உடன்படிக்கைகளை மேற்கொண்டு அமெரிக்க தேவைகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் உள்ள போது அமெரிக்கா கோத்தாவுக்கு எதிராக போக வேண்டிய தேவை இல்லை. ஏற்கனவே பொதுஜன பெரமுன சார்பில் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார் அமெரிக்காவுடன் SOFA, MCC உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவது தொடர்பாக தமது அரசாங்கத்தின் கீழ் பரிசீலிக்க தயார் என்று.

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவன் தெளிவாகத்தான் இருக்கின்றான். தமிழ் அரசியல்வாதிகள்  தான்... அரசியலில், 
இன்னும் கனக்க, படிக்க வேண்டி இருக்கு. 

வெள்ளம் கழுத்துக்கு கிட்ட வந்திட்டுது......இனியென்ன கோதாரிக்கு உதுகள் அரசியல் படிக்க வேணும்? வேறை அரசியல் சிந்தனை உள்ள இளையசமுதாயம் ஆரும் வந்தால்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

 

இந்த 3 நாட்டையும், கோட்டவோ, ரணிலோ, சஜித்தோ ஒரு போதும் பகைக்கவும் போவதில்லை.

இந்தியாவுக்கு வடக்கும்
சீனாவுக்கு தெற்கும் /மேற்க்கு
அமெரிக்காவுக்கு கிழக்கும்   

புகுந்து விளையாடுங்கோ என சொல்லிவிட்டு அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள்......சிறிலங்காவில் இராணுவ ஆட்சி வந்தால் மேற்குறிப்பிட்டவற்றில் மாற்றங்கள் நிகழலாம்.....இல்லை என்றால் ஜனநாயகவாதிகளில் காட்டில் மழை

  • கருத்துக்கள உறவுகள்

நிலையானதுபோல நீழுது இரவு. எனினும் நாம் விடியலை நெருங்கியபடி.

  • தொடங்கியவர்
11 hours ago, nunavilan said:

 

71568222_2453728088044101_78445716909808

தமிழர் தரப்பு பலமாகவும் இல்லை, ஒற்றுமையாகவும் இல்லை, இன்னொரு (நாட்டின்) தரப்பின் ஆதரவும் இல்லை.

அப்படியே உடன்படிக்கை செய்து பின்னர் பண்டாவை போன்று கிழித்தும் விடலாம்.

செல்வா மாதிரி கடவுளே  துணை என்று சொல்லவேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ampanai said:

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அது அபிப்பிராயம் தான். இல்லை பெரிதாக வளங்கள் இல்லை மார்சல் டீட்டொவின் யூகோசிலாவியாவும் உடைந்ததுதான்.

அதேவேளை பிரிந்த ஜெர்மனியும் இணைந்தது எல்லாமே நாம் கடந்து வந்த பாதைகளே.

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அதில் அணு ஆயுதங்கள் இருந்தும் மேற்குலம் உடைத்தது, யுத்தம் இல்லாமல் சத்தம் இல்லாமல். 

உங்கள் உதாரணங்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வகையில் இருக்கின்றன. ஈழ இலங்கைப் பிரச்சினை பனிப்போரில் சிக்குண்ட ஐரோப்பிய நாடுகளின் றேஞ்சில் இல்லை.

மேலும் கோஷான் சொன்னது போல, மில்லியனில் ஒன்று எனும் வாய்ப்புள்ள ஒரு எதிர்வுகூறலை வைத்துக் கொண்டு கோத்தாவுக்கு உயிர்களைப் பலி கொடுக்கும் படி பிரேரிக்க விக்னேஸ்வரன் ஐயாவுக்கோ யாருக்குமோ உரிமையில்லை!

அதை விட முக்கியமாக, இது நீங்கள் சிலாகிப்பது போல புதிய யோசனை அல்ல: 2005 இல் புலிகளின் தலைமை கடைப்பிடித்து அழியக் காரணமாக இருந்த யோசனை. 14 வருடங்களில் உலகம் மாறியிருக்கிறது, ஆனால் எமக்கு சாதகமாக அல்ல- எதிர் திசையில் நகர்ந்திருக்கிறது. அல் சிசியையும் டுவார்த்தேயையும் போற்றும் ட்ரம்ப் இன்னுமொரு 4 வருடம் இருக்கக் கூடும்! அவர் மகிந்த குழுவை தட்டிக் கேட்பார் என்பது சமகால நிலை புரியாத கற்பனாவாதிகளின் கதை! ட்ரம்புடன் போட்டி போட்டு சீனா எம்மை ஆதரிக்குமா என்பது சீனா ஆபிரிக்கா உட்பட பல பிரதேசங்களில் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தாலே புரிந்து விடும்! 

Follow the data, not fantasies!

இதை விட வேறொன்றும் சொல்ல இனி இல்லை. நன்றி!

  • தொடங்கியவர்
On ‎9‎/‎30‎/‎2019 at 6:19 AM, ampanai said:

கோத்தாபயவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் கோத்தாபயவே வெல்வார். கோத்தாபயவுக்கு எந்தத் தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார் என்று நான் முன்னர் கூறியுள்ளேன்.

24 minutes ago, Justin said:

மேலும் கோஷான் சொன்னது போல, மில்லியனில் ஒன்று எனும் வாய்ப்புள்ள ஒரு எதிர்வுகூறலை வைத்துக் கொண்டு கோத்தாவுக்கு உயிர்களைப் பலி கொடுக்கும் படி பிரேரிக்க விக்னேஸ்வரன் ஐயாவுக்கோ யாருக்குமோ உரிமையில்லை!

 

  • தொடங்கியவர்
35 minutes ago, Justin said:

உங்கள் உதாரணங்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட வகையில் இருக்கின்றன. ஈழ இலங்கைப் பிரச்சினை பனிப்போரில் சிக்குண்ட ஐரோப்பிய நாடுகளின் றேஞ்சில் இல்லை.

 

இன்றைய பனிப்போர் இந்த உலகில் நடப்பது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும். இந்த வர்த்தக போர் பற்றி வணிகப்பகுதியில் திறந்துள்ளேன்.

ஜப்பானில், தென்கொரியாவில், டியாக கார்சியாவில், அவுசில் இராணுவ முகாம்களை  அமெரிக்க வைத்துள்ளது. சீன நாடு தென் சீன கடலில் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இயற்கையாக நிலங்களை உருவாக்கி இராணுவ முகாம்களை அமைக்க முனைகின்றது.

ஒரு பொருளாதார கடல்வழி பாதையில் இலங்கை உள்ளதால் அது இரண்டு நாடுகளாலும் அவதானிக்கப்படுகின்றது.

இது தான் அந்த முடிச்சு. இதை அவிழ்க்கலாம் இல்லை அவிக்கலாம் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

"கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - விக்னேஸ்வரனின் கருத்து ஏற்புடையதா?

 
"இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - சி.வி.விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதை இந்தியா மற்றும் அமெரிக்கா விரும்பாது என விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிவரும் பட்சத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் கள்ள உறவு இருப்பதாக கூறப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு இருந்தாலும், அமெரிக்கா கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்த பார்க்கும் என கூறியுள்ள அவர், அது தமிழ் மக்களுக்கு சார்பாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கான செல்வாக்கு அமெரிக்காவில் அதிகரித்து காணப்படுகின்றமையினால், அது தமிழர்களுக்கு சாதகமாகவே காணப்படும் என சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்

சி.வி.விக்னேஸ்வரன்படத்தின் காப்புரிமை Getty Images

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பி.பி.சி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளை வேன்களில் பல கடத்தல்கள் இடம்பெற்றதாகவும், புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் வருகைத் தந்தவர்கள் தமிழர்களின் வாழ்க்கையை சீர்குலைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

"இலங்கை கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே" - சி.வி.விக்னேஸ்வரன்

அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நாட்டிற்கு வருகைத் தந்த சந்தர்ப்பங்களில் அவர்களின் தகவல்களை திரட்டி, அவர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும் அவர் கூறினார்.

கிறிஸ் பூதம் என்ற பெயரிலான அச்சுறுத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன போராளிகளின் மனைவிமார் கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரச படைகள் தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளமை, மக்களுக்கு பாரிய பிரச்சினையாக அமைந்திருந்ததாகவும் எஸ்.சிவமோகன் கூறினார்.

வன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

வன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.

சிவமோகனின் குற்றச்சாட்டுக்கள், பொதுஜன பெரமுன பதில்

தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையிலான எந்தவொரு பணிகளையும் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் செய்ததில்லை எனவும், மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழர்களை வாக்குகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அந்த கட்சியின் உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் தலையீட்டில் தமிழர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளில், வட மாகாணத்திற்கான தேர்தல் மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டு 26 வருடங்களின் பின்னரே நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனை அறிந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக வட மாகாணத் தேர்தலை நடத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தமிழர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49898419

  • தொடங்கியவர்
48 minutes ago, Justin said:

Follow the data, not fantasies!

We can agree to disagree. Since the idea here to have a healthy debate, not to dump or dismiss.  

  • தொடங்கியவர்
1 hour ago, பிழம்பு said:

வன்னியிலுள்ள மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தொடர்பில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு தெரியாது என கூறிய அவர், சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

வன்னியின் வரலாறு தெரியாத ஒருவர் வன்னி மக்கள் தொடர்பில் கருத்துரைக்க வேண்டிய அவசியம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குறிப்பிட்டிருந்தார்.

கூட்டமைப்பின் குறுகிய மனப்பான்மையும் அவர்களின் தோல்விக்கான காரணங்களால் ஒன்றாகி உள்ளது.

1 hour ago, பிழம்பு said:

தமிழர்களின் அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே பணியாற்ற வேண்டுமே தவிர, தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றக் கூடாது என டலஸ் அழகபெரும தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழ் கட்சிகளையும் இவ்வாறு கூறலாமா என சரியாக எனக்கு தெரியவில்லை. ஆனால், முக்கிய கட்சிகளில் பல இவ்வாறே செயல்படுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.