Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல்! தமிழ் தாயொருவர் ஆவேசம்

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சென்ற வாகனத்தின் மீது செருப்பு தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற வேளையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயொருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்த நிலையில் இரா.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் வெளியேறியிருந்தனர்.

இதன் போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு பொலிஸார் மூலம் வாகத்தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த பொலிஸார் மடக்கி பிடித்தனர்.

பொலிஸாரினால் தடுக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட குறித்த பெண், தமிழ் அரசியல்வாதிகளை கடுமையாக தீட்டித் தீர்த்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/230294?ref=home-feed

  • Replies 53
  • Views 5.1k
  • Created
  • Last Reply

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

கூட்டமைப்பின் மீது வெறுப்பு உண்டு; ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, அதை பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்களை தோல்வி அடைய செய்யலாம்.

  • தொடங்கியவர்
4 minutes ago, Dash said:

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

2 hours ago, போல் said:

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

தமிழின அழிப்பு என்கிறீர்கள்;அப்படியானால் அவை என்னவென்பதையும் குறிப்பிடுங்கள்....!!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

மிகவும் தவறான கருத்து!

திட்டமிட்ட சதியில் இறங்கிய சம்மந்தன், சுமந்திரனின் கேடித்தனங்களுக்கும், தமிழின அழிப்புக்கு ரணிலுக்கு முண்டு கொடுத்துவந்த கும்பலுக்கும் விழுந்த செருப்படி!

தமிழ் மக்களின் ஆதரவை  இழந்த கூட்டம் இனி தேர்தலில் தில்லுமுல்லு பண்ண வெளிக்கிடுவினம் . நல்லகாலம் செருப்பு காட்டுவதுடன் நின்று விட்டது இனியும் சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் திருந்தாவிட்டால் தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போகும் .முக்கியமா தீர்வு இல்லையேல் வீடு போவன் என்று சொல்லிவிட்டு ஒட்டிக்கொண்டு நிக்கும் சுமத்திரன் இன்னும் வேண்டிகட்ட இடமுண்டு .

3 minutes ago, Dash said:

தமிழின அழிப்பு என்கிறீர்கள்;அப்படியானால் அவை என்னவென்பதையும் குறிப்பிடுங்கள்....!!!

விடிய விடிய ராமாயணம் விடிந்த பின் ராமன் சீதைக்கு என்ன முறையுங்க ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

தமிழ் மக்களின் ஆதரவை  இழந்த கூட்டம் இனி தேர்தலில் தில்லுமுல்லு பண்ண வெளிக்கிடுவினம் . நல்லகாலம் செருப்பு காட்டுவதுடன் நின்று விட்டது இனியும் சம்பந்தன் சுமத்திரன் கூட்டம் திருந்தாவிட்டால் தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போகும் .

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே?

70களில் இப்படி தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போய் தான் இந்திய RAW வுக்கு பலியாக தமிழீழ ஆயுத போராட்டம் தொடங்கியது. அப்படியான நிலமை மீண்டும் வரும் என்று  நீங்கள் சொல்வதை பார்த்தால், கோத்தபாயாவே அதை தடுக்க பொருத்தமான ஜனாதிபதி என்று சிங்கள சனத்தை உசுப்பி விடும் உங்கள் திட்டம் தெரிகிறது. வரதராஜ பெருமாள் உங்கள் உறவினரா? கொள்கை ஒன்றாக இருக்கிறதே?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே?

70களில் இப்படி தமிழ் சனத்தை கட்டுபடுத்த முடியாது போய் தான் இந்திய RAW வுக்கு பலியாக தமிழீழ ஆயுத போராட்டம் தொடங்கியது. அப்படியான நிலமை மீண்டும் வரும் என்று  நீங்கள் சொல்வதை பார்த்தால், கோத்தபாயாவே அதை தடுக்க பொருத்தமான ஜனாதிபதி என்று சிங்கள சனத்தை உசுப்பி விடும் உங்கள் திட்டம் தெரிகிறது. வரதராஜ பெருமாள் உங்கள் உறவினரா? கொள்கை ஒன்றாக இருக்கிறதே?

உங்கள் மனதும் கண்ணும் மக்கர் பண்ணுது போல் கிடக்கு தகுந்த மாட்டு வைத்தியரை நாடவும் .

பெருமாள் எனும் புனைபெயர் கொண்டவர்கள் எல்லாம் வரதராஜபெருமாளுக்கு சொந்தம் எனும் உங்கள் மகா கண்டுபிடிப்பு என்னை வியக்க வைக்குது புல்லரிக்க வைக்குது .

முதலில் எங்களை மறுத்தான் பண்ணுவதை விட்டு உங்கடை ஆட்களுக்கு நல்ல புத்திமதி சொல்லுங்கஅங்கு எஞ்சியுள்ள தமிழ் சனமாவது நிம்மதியாய் இருக்கும்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

நன்கு திட்டமிட்ட முறையில் கோத்தா தரப்பு இதை அரங்கேற்றி வருகிறது, கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு என்றவுடன் கூட்டமைப்புக்கு மேல் தமிழ் மக்களுக்கு வெறுப்பை அதிகரிக்க செய்து அவர்களுடைய தெரிவான சஜித்துக்கு விழ போகும் வாக்குகளை கிடைக்காமல் செய்து கோத்தாவை வெல்ல வைக்கும் தந்திரமே இது....!!!!

கூட்டமைப்பின் மீது வெறுப்பு உண்டு; ஆனால் அதை காட்டும் தருணம் இதுவல்ல, அதை பாராளுமன்ற தேர்தல் வரும் போது அவர்களை தோல்வி அடைய செய்யலாம்.

இந்த நிலைக்கு யார் காரணம்?
கூத்தமைப்பு இதுவரை என்ன புடுங்கியது?

கருணாதியை கதிரையில் வைத்து தள்ளிக்கொண்டு திரிந்த கேவலமான நிலையில் 
இன்று சம்மந்தரை வைத்து தள்ளிக்கொண்டு திரியும் நிலையில் ஈழ தமிழினம். 

இந்த கேடு கெட்டவர்கள் விட்டுவிட்டு வீட்டுக்கு போனாலே அடுத்தவன் எதையாவது செய்வான்.

இந்த கூத்தமைப்பை விட கோத்தா எவ்வளவோ மேல் ... அவன் நேர் எதிரி அடிப்பான் என்று தெரியும் 
ஒரு தற்காப்பு நிலையில் எம்மை பாதுகாத்து கொள்ளலாம்.  இந்த கேடு கெட்ட கூட்டம் எப்பபோது முதுகில் குத்தும் என்றே தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

எங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

Edited by Maharajah
சொற்பிழை

1 minute ago, Maharajah said:

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

உங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

சிறந்த கருத்து....எனது மனதில் கருத்தை அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செருப்படியிலிருந்து, தப்பினாரா... சம்பந்தன்?
ஓடிச்சென்ற கூட்டமைப்பும்,  பாதுகாப்பு கொடுத்த காவல்துறையும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

எல்லோரும் துரோகிகள்,  எல்லோரும் சாதிக்காரர்,  எல்லோரும் விலை போனவர்கள்.  

அப்படியானால் நாங்கள் யாரை முன்னிறுத்துவது,  யாரை வழிநடத்த கோருவது   ????  எங்கள் நோக்கு என்ன,  அதட்கான வழிமுறைகள் என்ன ????  எங்கள் திட்டங்கள்தான் என்ன?  

எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கோபம் நியாயமானதுதான். அதட்காக எந்த திட்டமும்,  எந்த நோக்கமும்  இன்றி, நடைமுறை சாத்தியங்கள் பற்றி ஆராயாமல் வாய்க்கு வந்தபடி ஏச  முடியாது.  

எங்கள் யாராலும் என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ கூறமுடியுமா? 

நாங்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.  முக்கியமாக  புலத்திலுள்ளோர். 

உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்குங்கள் சுமத்திரன் சேர்த்த காசு இன்னும் காணாதோ ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

உங்களால் முடியவில்லை என்றால் ஒதுங்குங்கள் சுமத்திரன் சேர்த்த காசு இன்னும் காணாதோ ?

 ஐயா,  என்னை இவர்களுடன் முடிச்சுப்போட வேண்டாம்.  நான் கூறுவது எமது சக்தி அனைத்தும் இவர்களை ஏசுவதிலேயே விரயமாகிறது. சக்தியை  பிரயோசனப்படுத்தலாமே. 

11 hours ago, தமிழ் சிறி said:

இதில் 1 ஆவது நிமிடத்திலிருந்து கேட்டால், சிங்களவர்களின் பிரதிநிதிகளாக இவர்களை (கூட்டமைப்பினரை) கருதி இத்தேர்தலில் இவர்கள் கூறும் கருத்துகளை ஏற்காமல் இவர்களை நிராகரிக்க வேணும் என கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விமர்சனம் உள்ளது சரி. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தா கோத்தாவா என்பதையே நோக்க வேண்டும்.

இத்தேர்தலில் இவர்கள் சொல்லும் கருத்துகளை ஏற்க கூடாது என்றால் சஜித்துக்கு வாக்களிக்குமாறு கூறுவதை ஏற்க வேண்டாம் என்கிறார்.

அதே நேரம் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்குமாறு பதாகை வைத்திருக்கிறார்கள். 

EILOjdrWsAA5Eip?format=jpg&name=large

சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து உலகத்துக்கு எதையாவது காட்டி என்ன நடக்கப்போகிறது? கோத்தா வெல்வதை தவிர எதுவும் நடக்காது.

உலகமும் சேர்ந்து தான் புலிகளையும் மக்களையும் கொன்றது. அவர்களுக்கு தெரியாத ஒன்றையா சொல்லப்போகிறார்கள்?

D1Io6smUcAAwpJ0?format=jpg&name=medium

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maharajah said:

 ஐயா,  என்னை இவர்களுடன் முடிச்சுப்போட வேண்டாம்.  நான் கூறுவது எமது சக்தி அனைத்தும் இவர்களை ஏசுவதிலேயே விரயமாகிறது. சக்தியை  பிரயோசனப்படுத்தலாமே. 

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

2009க்கு பின்னர்  நடந்த முதலாவது தேர்தல்வரை கூட்டமைப்பை  மிகவும் நம்பியவன்

ஆதரித்தவன்

யாழில்  கூட பெரும்  எதிர்ப்புக்களுக்கு  முகம்  கொடுத்து ஆதரித்து  எழுதியவன்

ஆனால் சாணக்கியர் சம்பந்தர்  ஐயா அவர்களால்

கொடுக்கப்பட்ட வாக்குறுதி (கால எல்லை) முடிவடைந்ததும்

அதை  மீண்டும்  மீண்டும் கொடுத்ததும்

அவர்களுக்கான  ஆதரவை விலத்தி

புதியவர்கள்  வரணும்

அவர்கள் முன்னைநாள்  போராளிகளாகவோ

அல்லது  முன்னைநாள்  தலைவர்களாகவோ இருக்கவேண்டியதில்லை

மக்கள் முன் சென்று  சேவை  செய்யும் அடிப்படையில்  வரும்

எவரையாவது  முன்னுக்கு  கொண்டு வரணும்  என்பதே  எனது  நிலைப்பாடு

இன்றும்  அதுவே.

கூட்டமைப்பை  தொடர்ந்து  நம்புவதனூடாக

கிழக்கு  சிங்களத்திடம் போய்க்கொண்டிருக்கிறது

வடக்கும்  போய்விடப்போகிறது

அதற்கு  முன்னராவது??????

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த பின்னர் இங்கு யாழ் களத்தில் 
புலிவாந்தி என்ற காற்றோடடம் கூத்தமைப்பை நோக்கியே இருந்தது 

பின்பு பின்கதவால் சுமந்திரனை கொண்டுவந்து புலிகளோடு குலுக்கிய 
கைகளை சுமந்திரனின் ஜெபத்தினால் கூத்தமைப்பு கழுவி புனிதர்கள் ஆனபின்புதான் 
புலிவாந்தி காற்றோடடம் கூத்தமைப்பை அப்போப்போ புலிவாந்தி எடுத்ததால் ஆதரிக்க தொடங்கியது 
அல்லது ஒரு குழுவில் சேர்ந்தது .........

2009இல் இருந்து சேதம் இழுக்கும் சம்மந்தர் எதையாவது செய்வார் என்று காத்திருந்தோம் 
செய்த்தெல்லாம் சுமந்திரனை யூ என் அனுப்பி அங்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என்று சாடசி சொன்னதுதான் ...... பின்பு நேரில் வந்த வெள்ளைகளுக்கு சம்மந்தர் அரசம் இலை கொடுத்து அனுப்பியதுதான்.

இந்த சுயநல கிருமிகளை தமிழன் நம்ம என்ன இருக்கிறது? 

ஊரில், ஒரு சோடி செருப்பு என்ன விலை? ஒரு கோழி முட்டை என்ன விலை? 

மேற்குலகம் போன்று முட்டைகளை எறியலாமா இல்லையா என ஒரு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கூத்தமைப்புக்கு எதிராக கருத்துக்கள் வரும்போது நீங்கள் ஏன் தலையை குடுக்கிறிர்கள் அமைதியாக இருக்கலாமே 😀

பெருமாள்,  உங்கள் கருத்துக்களை நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.  வேறொன்றும் அல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

பெருமாள்,  உங்கள் கருத்துக்களை நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.  வேறொன்றும் அல்ல.  

உங்களுடைய ஆதங்கம் சரியானதுதான் நாகரீகமான கருத்துக்கள்தான் எதையாவது சாதிக்கலாம் உங்கள் எதிர்பார்ப்பு சரியானது. யால் களத்தில் இவற்றை எமக்குள்ளேயே பகிர்ந்துகொள்ளவதால் கொஞ்சம் வார்த்தை பிரோயகம் இருக்கிறது .. அதையும் தவிர்ப்பதால் நஷ்ட்டம் ஒன்றும் இல்லை.

ஆனால் இனி வேறு வழியில்லை எமக்கு இல்லை என்ற பொய் பேதத்தில் கூத்தமைப்பை 
பிடித்துக்கொண்டு தொங்கபோனால்  ........ நாம் தமிழகம் போன்று மாறிவிடுவோம்.
எமக்கு உழைக்காத எந்த அரசியல் வாதியையும் ரோட்டில் வைத்து செருப்பால் எறியும் ஒரு சமூகமாக 
மாறினால்தான் வழிபிறக்கும். 

இங்கு பலர் சொந்த மக்களின் பிரச்னையை ஓரம் கட்டிவிட்டு 
தாம் தேர்ந்து எடுத்த ஜனாதிபதி வேட்ப்பாளரின் வாக்குகளை பாதிக்காத வண்ணம்தான் 
கருத்துக்களை பிரதி பலிக்கிறார்கள் ...... சுமந்திரனே சொந்தவாயால் சொல்லி இருக்கிறார் இரண்டும் பேய் என்று ....   சும்மா கோத்தாவை வைத்து பயமுறுத்துவது ஒருமுறைக்கு இருக்கிறதே தவிர எதிராக்காலம் எப்படி இருக்கும் என்று அறைகூவ முடியாது ..... அதுக்காக தமிழர்கள் அவரை ஆதரிக்கவும் கூடாது.

அங்கு எந்த பேய் வந்தாலும் வெட்டி ஓடலாம் ...
எம்மோடு சேர்ந்திருக்கும் இந்த கூத்தமைப்பு பேய் விலகினால்தான் மோட்ஷம் 
அது அகல  நாம் குழை அடித்துதான் ஆகவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, zuma said:

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

பூடகமாக கூறாமல்  நீராடியாகக் கூறுங்கள்.  நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள் ?  ஏன் ?  காரண காரியத்துடன் விளக்குங்கள் (தயவு செய்து )

பொதுவாக அரசியல்வாதிகளுக்கு போய் சொல்லுவது இலகுவான ஒரு விடயம். அப்படி சொல்லி மக்களை ஏமாற்றுவதும் வழமை. அப்படி ஏமாற்றும் அரசியவாதிகளை ஏமார்ந்த மக்கள் அடுத்த தேர்தலில் நிராகரிக்க தரப்படும் உரிமை சனநாயகத்தின் பண்பு. 

தமிழர்களை பொறுத்தவரையில், ஏமாற்றும் தலைவர்களை நிராகரிக்க முடியாத நிலை. காரணம், ஒரு மாற்றுத்(அரசியல்) தலைமை இன்னும் கிடைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

யார் யார் எப்படி குத்தி முறிசாலும், எவன்  எவன் கூலிக்கு  மாரடிச்சாலும் மக்கள்  நிதானமாக தான் இருகிக்கிறார்கள். நவ 16 இல்  அவர்கள் எடுக்கும்  முடிவு, பலருக்கு மீண்டும் அதிர்ச்சியாக தான் இருக்கபோகின்றது.

இது ஒரு தவறான பார்வையும் எதிர்பார்ப்பும் 
மக்கள் ஒருபோதும் எந்த நாட்டிலும் நிதானமாக வாக்களிக்கப்போவதில்லை 
எங்கேனும் இதுவரையிலும் நடந்ததில்லை .... இனிமேலும் நடக்க சாத்தியமும் இல்லை.

சுவிஸ் நாட்டில் மக்கள் தான் எல்லாவற்றையும் முடிவெடுப்பது (டெரெக்ட் டெமோகிரிஷி ) 
ஆனால் 50 வீதமான முடிவுகள் சரியாக இருப்பதில்லை காரணம் எல்லா மக்களுக்கும் 
எல்லாவிதமான அறிவும் இல்லை. உள்ளூர் அரசியல்  .... பிராந்திய அரசியல் ..... உலக போக்கும் அதன் 
மாற்றங்களும் .... உள்ளூர்  வெளியூர் பொருளாதார நிலைமைகள். சொந்த நாட்டின் பொருளாதாரம் 
என்று எல்லாவற்றையும் மக்களால் புரிந்துகொள்ள முடியாது ...
அதை தவிர ஊடக பிரச்சாரம் என்பது பல மக்களின் மனதில் மாறுதல் உண்டுபன்னியே ஆகிறது.
கோத்தாவை பொறுத்தவரை தமது வெற்றி நிற்சயம் என்பதுபோலவே நடந்து வருகிறார் 
இது ஒரு பிரச்சார யுத்திதான் ... சிங்களவரின் வாக்குகள் சிதறாமல் அது பார்த்துக்கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பெரும்பாலும் வடக்கில் சஜித்திற்கே வாக்களிப்பார்கள், நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் சஜித்திற்கே தனது அலுவலக நண்பர்கள் வாக்களித்ததாக தம்பி கூறினார்.
நான் 1 சஜித்
           2 சிவாஜி
           3 சிறிதுங்க ஜெயசூரிய
வாக்கு போட எண்ணியுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.