Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R_Sampanthan-1.jpg

சஜித் தோல்வியடைந்தால், அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசவை ஆதாித்து நல்லுாா் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று (புதன்கிழமை) நடத்திய பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், “எமக்கு தொிந்த ஒருவரும் தோ்தலில் போட்டியிடுகிறாா். நான் சாவகச்சோியில் வைத்து அவாிடம் பகிரங்க கோாிக்கை விடுத்திருந்தேன். அதாவது தமிழ் மக்களுடைய எதிா்கால நலன்களுக்காக அவா் தோ்தலிலிருந்து விலகவேண்டும்.

சிவாஜிலிங்கத்திற்கு 10 ஆயிரம் வாக்குகள் கிடைத்து, மறுபக்கம் சஜித் பிரேமதாச மிக குறைந்த வாக்குகளால் தோற்றால் அதற்கு சிவாஜிலிங்கமே காரணம். அதனால் தமிழா்களுக்கு வரும் தீங்குகளுக்கும் சிவாஜிலிங்கமே பொறுப்பு.

எனவே தமிழ் மக்கள் ஒருமித்து வாக்களித்தால் தீங்கை தவிர்ப்பதற்கு சாத்தியம் உள்ளது. எங்களுடைய வாக்குகள் பிாிந்தால் நாங்கள் பலவீனப்படுவோம். எனவே தமிழ் மக்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்ககூடாது” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சஜித்-தோல்வியடைந்தால்-அத/

சஜித் தோல்வியடைந்து தமிழ் மக்களுக்கு பாதிப்பு இருக்குமாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அதுவும் அவர் பெரும் வாக்குகளை வைத்தே தீர்மானிக்கலாம்.

சிவாஜி என்ன காரணத்துக்காக போட்டியிடுகிறாரோ , அவருக்கு என்ன பிரச்சினையோ எல்லாமே பிரச்சினைதான். நிச்சயமாக இவருக்கு தெரியும் தான் வெல்லப்போவதில்லை என்று.

இருந்தாலும் ராஜபக்ஷேக்கள் இவருடைய இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அப்படியானால் இவர் போட்டியிடுவதின் நோக்கத்தை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம். இதிலே ஆனந்தி , ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும்  பங்கு (?) உண்டு.

5 hours ago, தமிழ் சிறி said:

அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனவும் அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக தமிழினத் துரோகியாக இருந்துவரும் சம்பந்தனா இதை செல்றது?
சம்பந்தனுக்கு என்ன தகுதி இருக்கு விளைவுகளை பற்றி கதைக்க?

ஐக்கிய தேய்சிய கட்சிக்கு 5 வருஷமா முண்டு கொடுத்து ஏற்பட்ட விளைவுகளுக்கு, பாதிப்புகளுக்கு  யார் பொறுப்பு?

சம்பந்தன் இப்பிடி பொங்கியெழுந்து சொல்றதால சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழின இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனத் தான் எடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

F50838-C3-0178-457-D-9-A1-F-75076-C7-D7-

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன எந்த  நரி தோத்தால் என்ன .

மகிந்த கொடுத்த மாளிகையில் இருந்து கொண்டு கிழட்டு கோட்டான் அலறுவது போல் மகிந்தவுக்கு எதிரா அலறுகிராறம்  அதை நாங்கள் நம்பனுமாம் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன நரி தோத்தால் என்ன .

அதே....

2 hours ago, பெருமாள் said:

யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன எந்த  நரி தோத்தால் என்ன .

சஜித் வந்தால் 100 பேர் பாதிக்கப்பட்டால் கோத்தா வந்தால் 1000 பேர் பாதிக்கப்படுவார்கள். கோத்தா வந்தால் மகிந்த & கோ இலங்கையை தமது முழு கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார்கள். கொஞ்சமுள்ள சுதந்திரமும் இல்லாமல் போகும்.

எனவே மக்கள் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து தமது வாக்குகளை விரயமாக்காமல் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும்.

Edited by Lara

55 minutes ago, Lara said:

சஜித் வந்தால் 100 பேர் பாதிக்கப்பட்டால் கோத்தா வந்தால் 1000 பேர் பாதிக்கப்படுவார்கள்.

கோத்தா வந்தால் மகிந்த & கோ இலங்கையை தமது முழு கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பார்கள். கொஞ்சமுள்ள சுதந்திரமும் இல்லாமல் போகும்.

யார் வந்தாலும் குறைந்தது  ஒரு நூறு பேராவது  பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறீர்கள் 🙂 

இந்த கருத்து பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இப்படி மட்டும்தான் நடக்கும் என்ற ஆதாரம் இல்லை, ஊகம் மட்டுமே 😇 

26 minutes ago, ampanai said:

யார் வந்தாலும் குறைந்தது  ஒரு நூறு பேராவது  பாதிக்கப்படத்தான் போகிறார்கள் என்கிறீர்கள் 🙂 

இந்த கருத்து பழைய நிகழ்வுகளின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றது. இப்படி மட்டும்தான் நடக்கும் என்ற ஆதாரம் இல்லை, ஊகம் மட்டுமே 😇 

யார் வந்தாலும் தமிழர்களுக்கு பாதிப்பு தொடரும் என முன்பிலிருந்தே கூறி தானே வருகிறேன். ஆனால் கோத்தா வருவதனால் ஏற்படும் பாதிப்பளவு சஜித் வருவதால் ஏற்படாது.

உங்களுக்கு ஆதாரம் தருவதற்காக இன்னும் சனம் செத்துக்கொண்டிருக்க முடியாது. எதற்கும் இதை வாசியுங்கள்.

Edited by Lara

ஒருசிலர் தான் குளத்துல குதிச்சு சாகமாட்டன், ஆனா கடல்ல  குதிச்சு தான் சாவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Gowin said:

ஒருசிலர் தான் குளத்துல குதிச்சு சாகமாட்டன், ஆனா கடல்ல  குதிச்சு தான் சாவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியினம்.

நந்திக்கடல் இன்னமும் இருக்கிறது. சிவாஜிலிங்கம் கோத்தாவை கொண்டுவருவது மட்டும் தான் மீதமுள்ளவர்களையும் முடிக்க தேவையாக உள்ளது. அழிவோம் என்று அடம்பிடிப்பவர்களை காப்பாற்றுவதுதான் அநியாயம். இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

38 minutes ago, Jude said:

இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

இது தவறு!
இலங்கைத் தமிழரிடம் இல்லை, இலங்கையரிடம் என்பதே அந்த ஆய்வின் முடிவு!

அது ஒருபுறமிருக்கு இலங்கைத் தமிழர்கள் பலரிடம் இருக்கும் மனப்பான்மைகளின் அடிப்படையில் அவர்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம்

ஒன்று
(அ) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று என்ன துன்பங்கள் வந்தாலும் உறுதியாக இருப்பவர்கள்
(ஆ) சொந்த உழைப்பில் வாழ்வதை, பல சிரமங்கள் ஏற்பட்டாலும், பெருமையாக கருதுபவர்கள்
(இ) உழைப்பதில் ஒரு கணிசமான பகுதியை சேமித்து சொத்துக்கள், வளங்களை வாங்கி குவிப்பார்கள்
(ஈ) என்ன சிக்கல்கள் வந்தாலும் கவுரவம் பார்த்து வருந்துவார்கள்
(உ) தமிழ் மொழி, மத நம்பிக்கைகளில் அதீத பற்றுடையவர்கள்   
(ஊ) உரிமைகளுக்கு குரல் கொடுத்து போராடக் கூடியவர்கள்
(எ) புலம் பெயர்ந்தாலும் புலத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழி மீது, தாய்மண் மீது, தமிழர்களின் உரிமை மீட்பின் மீது கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்
(ஏ) தமிழர்களின் உரிமை மீட்புக்காக தியாகம் செய்தவர்களை உள்ளத்தில் நிலைநிறுத்தி போற்றுபவர்கள்

இரண்டு
(அ) சுயலாபத்துக்காக எத்தகைய குறுக்குவழிகளிலும் போகக்கூடியவர்கள்
(ஆ) போர் சூழ்நிலை இல்லாத போதும் தாய் மண்ணை விட்டு தப்பியோடும் மனப்பான்மை கொண்டவர்கள்
(இ) சுயநலனுக்காக திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொள்ளும் எவருக்கும் அடிமைச் சேவகம் செய்யக்கூடியவர்கள்
(ஈ)  புலம் பெயர்ந்தாலும் புலத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழி மீது, தாய்மண் மீது, தமிழர்களின் உரிமை மீட்பின் மீது அக்கறை அற்றவர்களாக இருப்பார்கள்
(உ) தீயசக்திகள் வழங்கும் அன்பளிப்புக்களை, பணத்தை தாமும் பெற்றுக்கொள்வதுடன் மற்றவர்களையும் அதற்கு இரையாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவர்
(ஊ) சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் மக்களை தவறாக வழிநடத்தும் சதித்திட்டங்களை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்
(எ) தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்து கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளை அனுபவிப்பவர்கள்  
(ஏ) தமிழர்களின் உரிமை மீட்புக்காக தியாகம் செய்தவர்களை ஏளனம் செய்து இன்பம் துய்ப்பவர்கள்

On 11/14/2019 at 10:39 AM, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மிஸ்டர் சம்பந்தன் இப்ப யார் பொறுப்பு எடுக்கோணும்?
உங்கடை கோஷ்டியா? சிவாஜிலிங்கமா?   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

மிஸ்டர் சம்பந்தன் இப்ப யார் பொறுப்பு எடுக்கோணும்?
உங்கடை கோஷ்டியா? சிவாஜிலிங்கமா?   

சம்பந்தனை.. ஒருத்தரும் பொறுப்பு  எடுக்க மாட்டார்கள்.
அனாதையாக... அலைய விடவேண்டியதுதான். :grin:

2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனை.. ஒருத்தரும் பொறுப்பு  எடுக்க மாட்டார்கள்.
அனாதையாக... அலைய விடவேண்டியதுதான். :grin:

திருகோணமலை நிலத்தடி முகாமுக்கு வெள்ளை வான் கடத்தினாலும் கடத்தும்! 🤣

தோல்விக்கான காரணம் இதோ..! | ரணிலை தாக்கி சம்பிக்க அதிரடி தகவல்

On 11/16/2019 at 8:53 AM, Jude said:

நந்திக்கடல் இன்னமும் இருக்கிறது. சிவாஜிலிங்கம் கோத்தாவை கொண்டுவருவது மட்டும் தான் மீதமுள்ளவர்களையும் முடிக்க தேவையாக உள்ளது. அழிவோம் என்று அடம்பிடிப்பவர்களை காப்பாற்றுவதுதான் அநியாயம். இலங்கைத்தமிழர்கள் தற்கொலை செய்யும் மனப்பான்மை கொண்ட இனங்களில் முதன்மையானவர்கள் என்று ஒரு சர்வதேச உளவியல் ஆய்வில் படித்த நினைவு.

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

"தாங்கள் அறிவிக்காமல் விட்டாலும் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கே தங்களின் வாக்குகளை வழங்குவர் என்பதை கூட்டமைப்பு நன்கு அறிந்திருந்தது."

"சஜித் பிரேமதாஸவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால், சிங்கள மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக் களிக்க மாட்டார்கள் என்ற உண்மையையும் கூட்டமைப்பு நன்கு தெரிந்து வைத்திருந்தது."

"சமபலத்துடன் இருந்த தேர்தல் களத்தை மூன்று நாட்களுக்குள் மாற்றியமைத்து சஜித் பிரேமதாஸவுக்கு நம்பிக்கைத் துரோகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து முடித்தது. கூடவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி சஜித்தை வஞ்சித்தார்."

http://valampurii.lk/valampurii/content.php?id=19865&ctype=news

On 11/14/2019 at 12:09 AM, தமிழ் சிறி said:

தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Gowin said:

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

எப்பவுமே குதர்க்கம் பேசுவது தான் உங்க வாடிக்கை என்று எல்லாருக்கும் தெரியுமே!

அந்த நவம்பர் 11 கடிதம் என்ன ஆச்சு?

1 hour ago, குமாரசாமி said:

உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...உஷ்...🤣

அந்த ஆவணம் பற்றிய திரியில் தொடர்புக்கான அமெரிக்க அதிகாரியின் பெயர், பதவி, இணையம், மின்னஞ்சல் எல்லாம் தந்திருக்கிறேன், பார்க்கவில்லையா? மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள் தானே? கிடைத்த பதிலை ஏன் எங்களுக்கு மறைக்கிறீர்கள்? உண்மையை மறைக்கலாமா?😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.