Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியாந்தாவின் தனிநாடு

Featured Replies

Epstien ஐ கூகிளில் தேடவும், விடை கிடைக்கும். 

  • Replies 82
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனிக்கொடி, தனி கடவுச்சீட்டு – ‘கைலாசா இந்து’ நாட்டினை உருவாக்கினார் நித்யானந்தா!

சாமியார் நித்யானந்தா தனிக்கொடி, தனி கடவுச் சீட்டு என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயற்பட்டு வருகின்றன.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, ‘கைலாஷ்’ என்ற பெயரில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, சுத்த இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசேஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nati

தனிநாடு இணையத்தளத்தில், இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நாட்டுக்கென்று கடவுச்சீட்டு, மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார்.

நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப் போல் உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.

கைலாசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது.

தங்களுடைய நாடு இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐ.நா.வை நாடவுள்ளார்.

கடவுச்சீட்டு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nati

 

 

http://athavannews.com/தனிக்கொடி-தனி-கடவுச்சீட/

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

4 hours ago, தமிழ் சிறி said:

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

அனைத்து நாட்டு பணமும் பாவனையில் இருக்கும். உள்ளே கொண்டுவர 100% வரிவிலக்கு. வெளியே எடுக்க  அந்த 100 வீதத்தை  வரியாக கட்டினால் போதும். பெண்களுக்கு எப்போதும்  விசா, அழகான பெண்களுக்கு உடனடி விசா மற்றும்  நிரந்தர குடியுரிமை. இவ்வாறு பல விடயங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

 Picture2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உஸ் ......நித்தியர்  ஒரு சித்தர். எந்நேரமும் சித்தி களின் இதயத்தை தியானித்து பக்தர்களின் பாவங்களைப் போக்குபவர்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ - கொடி, துறைகளும் அறிவிப்பு

வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பெங்களூரு நீதிமன்றத்துக்கு செல்லும் நித்தியானந்தா.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பெங்களூரு நீதிமன்றத்துக்கு செல்லும் நித்தியானந்தா (கோப்பு படம்)

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்.

நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டைப் பற்றிய குறிப்பு என்ற இடத்திலோ 100 மில்லியன் ஆதி சைவர்கள், 2 பில்லியன் இந்துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், சனாதன இந்து தர்மமே தங்கள் மதம் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நித்தியானந்தர் அமர்ந்த நிலையில் இருக்க, அருகே நத்தி இடம் பெற்றிருக்கிற ரிஷபக் கொடியே தங்கள் கொடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, கல்வி, கருவூலம், வணிகம், வீட்டுவசதி என்பது உள்ளிட்ட துறைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இணைப்புப் பக்கங்களில் பல பதவிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு துறைக்கான பக்கத்திலும் அத்துறையில் பணியாற்ற விண்ணப்பிப்பதற்கு ஒரு இணைப்பும் தரப்பட்டுள்ளது.

யார் இந்த நித்யானந்தா?

தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.

நித்தியானந்தாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநித்தியானந்தா - கோப்பு படம்.

பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றன.

பார்த்து 22 மாதமாகிறது

நித்தியானந்தாவின் சீடராக நீண்ட நாள்கள் இருப்பவரும், அவருடை சொந்த ஊரான திருவண்ணாமலையை சேர்ந்தவருமான நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு இந்த புது நாடு குறித்து கேட்டது பிபிசி தமிழ்.

தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு அவர் பேசினார்.

"இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இதெல்லாம் அவர் சத் சங்கம் மூலம் முன்பே அறிவித்தவைதான். இந்தக் கொடி, இலச்சினை எல்லாமும் கூட அவர் முன்பே அறிவித்தவைதான். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் தப்பித்து வெளிநாடு சென்றுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஒருவேளை அவர் இந்தியாவிலேயே கூட இருக்கலாம். அவரது காணொளிகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. அரசாங்கம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவேண்டியதுதானே" என்றார் அவர்.

"அவரை நான் சந்தித்து 22 மாதங்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-50655248

  • கருத்துக்கள உறவுகள்

அட, இங்கேதான் பதுங்கி இருந்தாரா..? பீலா விட்ட நித்யானந்தாவை பிடரியில் தட்டித்தூக்கக் கிளம்பிய போலீஸ்..!

nithyananda_1200x630xt.jpg

தனித்தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக உருவாக்கி விட்டதாக பீலா விட்டு வந்த நிதியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடம் தெரிந்து அவரை இந்திய காவல்துறையினர் கைது செய்ய தயராகி விட்டதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதனை தனி நாடாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.

போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நித்யானந்தா, அவ்வபோது இணையதளம் வாயிலாக வீடியோ வெளியிட்டு கிச்சுக்கிச்சு காட்டி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தற்போது வெளியிட்டுள்ள பிரசங்க வீடியோ ஒன்றில், திருவனந்தபுர நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திர கன்னியான பக்தி பிரியானந்தாவை நியமித்துள்ளதாகவும், நான் இல்லை என்றாலும் என்னுடைய ஆசிரமங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் நித்தியானந்தாவை தேடுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள் காவல்துறையினரை உசுப்பேற்றி இருக்கிறது.

இந்நிலையில் நித்யானந்தா, இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம்  செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.  நித்தியில் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைலாசா பிரதமராக பிரகடனப்படுத்தி பீலா விட்டு வந்த நித்யானந்தா இன்னும் சில தினங்களில் சிறைக்குள் களி உண்ணப்போகிறார். 

https://tamil.asianetnews.com/india/hey-was-that-hiding-here-bela-nithyananda-leaves-the-police-q1zhz6

டிஸ்கி

hqdefault.jpg

ஐயாம் புர்ரெக்டேட் பை கால பைரவா.. & லோர்ட் சிவா.. ☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறாமையாகத்தான்  இருக்கு

நம்மால  முடியாததை......??

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி இன்றுவரை உண்மை சொன்னதா

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

 

வன்மையான கண்டனங்கள்

😋

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

வன்மையான கண்டனங்கள்

😋

இப்படியே சொல்லி சொல்லி இருங்கள் இன்னொன்று வந்து ஓடர் கொடுத்து ஓரமா நிற்கிறது 

26907571-693536231034492-680607729442341

குறிப்பு :

படங்கள் அனுமதி பெற்ற பின்னரே இங்கு காண்பிக்கப்படுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியே சொல்லி சொல்லி இருங்கள் இன்னொன்று வந்து ஓடர் கொடுத்து ஓரமா நிற்கிறது 

26907571-693536231034492-680607729442341

குறிப்பு :

படங்கள் அனுமதி பெற்ற பின்னரே இங்கு காண்பிக்கப்படுகிறது 

இவற்றை  ஏற்கனவே  நான்  பார்த்தாச்சு😜

வேற

வேற.....???

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இவற்றை  ஏற்கனவே  நான்  பார்த்தாச்சு😜

வேற

வேற.....???

ஆஸ்ரமத்தில் எல்லோரும் பார்த்தவைகளே இருக்கின்றன  🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஸ்ரமத்தில் எல்லோரும் பார்த்தவைகளே இருக்கின்றன  🤣

வேற வழியில்லை

நாமே  நித்தியானந்தா  ஆகிவிடவேண்டியது தான்  ஒரே வழி😋😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வேற வழியில்லை

நாமே  நித்தியானந்தா  ஆகிவிடவேண்டியது தான்  ஒரே வழி😋😜

அந்தாள் லெவலுக்கு வராது

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Dash said:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

பக்தகோடிகளின் 'வேண்டுகோளுக்கிணங்க' அரசமொழியாம் தமிழில் கடவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாம்..!

passport1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

ஜெய் நித்தியானந்தா பவர்

ஓம் நித்தியானந்தம்...
விஐபி றூமிலை இருந்து குமாரசாமி ஸ்பீக்கிங் 😎
பக்தைகளும் சிஷ்யைகளும் எனக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்🧷
ஓவர்...ஓவர்....🔈

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

Legend 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.