Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியாந்தாவின் தனிநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

Legend 😎

என்ன மீன் பிடிக்கப் போகிறாரோ?

4 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

சட்டி சூடாக இருக்கும் போது டக்கென்று சுட்டுவிடுகிறது தானே?

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

  • Replies 82
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

பக்தகோடிகளின் 'வேண்டுகோளுக்கிணங்க' அரசமொழியாம் தமிழில் கடவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாம்..!

passport1.jpg

அட்றா சக்கை.... நித்தியானந்த சுவாமிகளின்   தமிழ் பற்றுக்கு தலை வணங்குகின்றேன்.
இதற்காகத் தன்னும்... ஐக்கிய  நாடுகள் சபை,  இந்த நாட்டை  ஏற்றுக் கொள்ள வேண்டும்.:)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வல்வை சகாறா said:

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and outdoor

இது... யாரப்பா......  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஓம் நித்தியானந்தம்...
விஐபி றூமிலை இருந்து குமாரசாமி ஸ்பீக்கிங் 😎
பக்தைகளும் சிஷ்யைகளும் எனக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்🧷
ஓவர்...ஓவர்....🔈

அட நமக்கு முன்னமே கன சனம் பாய் போட்டு படுத்திருக்கினும் போல தெரிகிறது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

11 hours ago, வல்வை சகாறா said:

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

இப்ப வெளியில் சொல்லாதீங்க வீட்டுக்காரி விரசிப்போடும் பிறகு சாப்பாடும் இல்ல 

10 hours ago, குமாரசாமி said:

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

அதான் வகுத்தெரிச்சலில் மொத்தமா கருகிடுச்சே பிறகு என்ன ஓவர் ஓவர்

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஓசோ போல இந்தியா போகவும் வழியில்லாமல் 
இடையிலே மாட்ட போகிறார்.

இவருக்கு இப்போ எதிரியாகப்போவதே இவரிடம் இருக்கும் பவுனும் பணமுமுத்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

Résultat de recherche d'images pour "indian woman house cleaning""

அது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்.......!   🥵

மிஸ்ஸிஸ் முனி  வித்  விளக்குமாறு.....!   😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, standing and outdoor

இது... யாரப்பா......  :grin:

இது நித்தியானந்தி.😎

நீ....வாடா  என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்படாதை🥰

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ... மீண்டும் தனது ஆச்சிரமத்தை திறக்க உள்ளதாக...
இரகசிய தகவல், கசிந்து உள்ளது.  :grin:

போஸ்டர் அடிச்சு ஒட்டல்ல அதுக்குள்ள கதை வெளியாகிட்டுது  போல  பேசிட்டு சொல்கிறன் பரிவாரங்கள் தயாராக இருக்கவும் ஒரு நாள் மட்டுமே கலாசத்தில் எலவுட்

7 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "indian woman house cleaning""

அது யாரது, வரட்டும் வாசலிலேயே வைத்து செய்யிறன்.......!   🥵

மிஸ்ஸிஸ் முனி  வித்  விளக்குமாறு.....!   😡

அவாக்கு நம்ம பழைய பெயர் தெரியாது என்ற படியால் விசாரித்த பின்னரே அடி விழ வாய்ப்புண்டு அதற்குள் நான் வந்து காப்பாற்றுவேன் டோன்ற் வெறி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் அந்தரங்க உண்மைகளை உடைக்கிறாா் ஜான்சிராணி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தைகளை கூட விட்டு வைக்கல- நித்தியின் களியாட்டம் ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களை இப்படித்தான் வசியம் செய்கிறார் நித்தி! Part 2..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறம்போக்கு நித்தி... 

பணம் இருந்தால் யாரும் ஒரு தீவை வாங்கலாம். இங்கே சென்று உங்கள் கையில் பணத்திற்கு ஏற்ப ஒன்றை வாங்கலாம். அங்கு வாங்கியவர் அதை ஆளலாம். அங்கு அரைசியல்  செய்யலாம் இல்லை ஆத்துமோகம் செய்யலாம் 🙂 

https://www.privateislandsonline.com/

  • கருத்துக்கள உறவுகள்

எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். 

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-

சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான்.

நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.

இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:-

இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.

உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/71000

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

0.jpg

“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டதார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/71015

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

அதனால்  தான்  கேடிகளும்

கேடிச்சாமிகளும்  இந்தியாவில் அதிகம்  உருவாகிறார்கள்

அதற்கு  வெள்ளைகளும்  தோள் கொடுக்கின்றன.

(பயமா இருக்கு எழுத. இங்கையும்  சீடர்கள்  இருக்கலாம்)😥

மகள் : சாமிகள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா ?
அப்பா: நல்லவர்கள். ஆசா பாசங்களை துறந்தர்வகள்.  அறம் செய்ய விரும்புவார்கள் !

மகள் : நித்தியானந்தா சாமி நல்லவரா இல்லை கெட்டவரா ?
அப்பா:🙄

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆண் ஒரு பெண்= ஆனந்தம்
ஒரு ஆண் இரு பெண் = பேரானந்தம்
ஒரு ஆண் மூன்று பெண்= மகானந்தம்

ஒரு ஆண் நான்கு பெண் = பரமானந்தம்
ஒரு ஆண் பல பெண் = நித்தியானந்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 11:20 PM, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

தலைவா நீங்க வேற லெவல் 🤪🤦‍♂️

On 12/4/2019 at 10:31 PM, Dash said:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

வட போச்சே

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:

எனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா ! எதற்காக இலக்குவைத்துள்ளார் ?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என  சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார். 

Bildergebnis für நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் 

Ähnliches Foto

நித்தியானந்தா சுவாமி,  அவர்களே...
ப்ளீஸ்... நீங்கள்,  👉🏿 நல்லூர்  ஆதீனம் பக்கம், வந்துடாதீங்க. :shocked:

ஏனென்றால்... அங்கு உள்ளவர்கள், சரியான கோவக் காரர்கள் 😡
ஓட்ட, நறுக்கி... விட்டு, விடுவார்கள். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

நகைச்சுவைக்கு அப்பால், இவரை உண்மையாகவே தனி நாடு எடுத்திட்டார் என நம்பும் ஆட்களையும் சமூக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருக்கு. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இதில் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டும் பலர் மீம்ஸ்களையும், துணுக்குகளையும் பரப்பி வருகின்றனர்.

மலைக் குகைகளுக்குள்ளும், நிலக்கீழ் அறைகளிலும் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளையே தேடி அழிக்க கூடிய வசதிகள் உலகிற்கு வந்த பின்னரும் கூட இப்படியான கேடிகள் தப்பி வாழ்தற்கும் தப்பி செல்வதற்குமான சூழ் நிலைகளை இந்தியாவால் மட்டுமே கொடுக்க முடியும்.

நிழலி... இந்தியாவில் மட்டுமல்ல,  
ஸ்ரீலங்கவிலும், புத்த பிக்குகள் அதனைத் தான்.... செய்கிறார்கள். 
இரண்டும்...  ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

மதத்தை நம்பியே.. அரசியல் செய்யும் நாடுகளில்,  
இதனை.. எதிர் கொள்ளத் தான் வேண்டும்.

இதற்கு... விடிவு, கிடைக்காது.... என்றே நினைக்கின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.