Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-3bd2891c7ff0c9f93319025e1597f07c

 

இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி, இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய, அண்மையில் இந்தியா வந்துள்ளதானது, வெறுமனே இந்தியாவை ஏமாற்றும் வேலை என்றும், ஆனால் பின்புலத்தில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவினால் அன்பளிப்பாக இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சதீவுகளில் அணு உலை ஒன்றை நிறுவுவதன் மூலம் முழுப் பிராந்தியத்தையுமே அணுவாயுத மோதல் ஒன்றிற்குள் இழுத்துவிடும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான ஆதாரங்களைக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்த இணையத்தளம் மேலும் இதுபற்றிக் கூறுகையில், கோத்தாபய சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு அமைவாக கச்சதீவில் நிறுவப்படவிருக்கும் இந்த அணு உலையானது வர்த்தக நோக்கங்களுக்காக அல்லாமல், ராணுவ உபயோகத்திற்காக மட்டுமே அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கொழும்பில் போர்ட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் இன்னும் 400 ஹெக்டேயர் கடல்ப் பரப்பினை நிரவுவதற்கு சீனாவிற்கு அனுமதியளித்துள்ளதாகவும் இந்த போர்ட் சிட்டி திட்டமே சீனாவின் கைகளுக்குள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், விரிவாக்கப்படவிருக்கும் மேலதிக பகுதிகளும் சீனாவின் கைகளுக்குள் போகப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவின் அரச அணு மின் நிலைய அதிகாரிகளும், சீன கம்மியூனிச கட்சியின் அதிகாரிகளும், இலங்கை அரச தரப்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஜயசுந்தரவும் இன்னும் பல கடற்படை அதிகாரிகளும் கச்சைதீவில் அமைக்கப்படவிருக்கும் இந்த அணுமின் நிலையத்திற்கான இடத்தினைப் பார்வையிடுவதற்கு கடந்த 21 ஆம் திகதி உலங்குவானூர்தியொன்றில் வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கச்சைதீவில் எவருமே இன்று வாழாத நிலையில், வருடந்தோறும் இடம்பெறும் புனித அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கு தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் பக்தர்கள் வந்துபோகும் நிலையில், அணு மின்னிலையம் அமைக்கப்படுமிடத்து, இனிமேல் எவருமே அங்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவுடனான தமது ரகசிய உடன்பாடு பற்றி தகவல்கள் வெளிவருவதைத்தொடர்ந்து, கோத்தாபாயவின் அரசு சீனாவுடன் சேர்ந்து தாம் சாதாரண அணு மின் நிலையம் ஒன்றினை மட்டுமே நிறுவ எத்தனிப்பதாக முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கிறது.

தனது சீனாவுடனான ரகசிய அணுமின் நிலைய உடன்படிக்கையை மறைக்கும்பொருட்டு, இந்தியா சென்றுள்ள கோத்தா, தான் இந்தியாவிற்குச் சார்பானவர் என்று காட்டுவதற்காக ஏற்கனவே சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மீளப்பெறப்போவதாகப் பாசாங்கு செய்திருக்கிறார்.

இவ்வாறு இந்தியாவின் தென்புறத்தில் சீனாவினால் அமைக்கப்படவிருக்கும் உள்நாட்டுப் பாவனைக்கான அணு மின் நிலையம் என்கிற பெயரில் இடம்பெறப்போகும் சீனாவின் அணு மின் நிலைய நடவடிக்கை நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுருத்தல் ஒன்றினை ஏற்படுத்தப்போவதோடு, கொழும்பில் போர்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படவிருக்கும் சீனாவின் புதிய 400 ஹெக்டேயர் நிலமும், இப்பிராந்தியத்தில் சீனாவின் பலத்தை அதிகரிக்கப்போகிறது. கோத்தாபாயவின் இந்த அபாயகரமான விபரீத விளையாட்டு இப்பிராந்தியத்தின் பாதுகாப்பினை கடுமையான அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், இலங்கை நாட்டையும் சர்வதேச நாடுகளின் பலப்பரீட்சைக் களமாகவும் மாற்றிவருகிறது.

சீனாவுடனான தனது ரகசிய உடன்படிக்கைகளை கோத்தாபாய உள்நாட்டு மற்றும் இந்திய ஊடகங்களிலிருந்து மறைக்க எத்தனித்தாலும் கூட, ஐரோப்பிய உளவுநிறுவனங்கள் இந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொண்டுள்ளதாகவும், இதன் காரணத்தினாலேயே கோத்தாபாய பதவியில் அமர்வதை இந்நாடுகள் ஆரம்பத்திலிருந்து எதிர்த்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற பிரச்சினைகளை குறைப்பதற்கு பதில் மென்மேலும் சிக்கலகளை உருவாக்குவதே நோக்கமாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையான செய்தியாக இருந்தால் இதுவே தமிழீழத்திற்கான அடிக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உண்மையான செய்தியாக இருந்தால் இதுவே தமிழீழத்திற்கான அடிக்கல்.

எப்படி என்று விளக்குங்கள் ஈழப்பிரியன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

எப்படி என்று விளக்குங்கள் ஈழப்பிரியன் அண்ணா

தமிழீழம் தமிழருக்கு தேவையில்லாது விட்டாலும் இந்தியா,அமெரிக்காவுக்கு தேவை என்றால் நிச்சயம் பிறக்கும்.

32 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி,

இந்த lankaenews காரங்கள் தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணம் என போலி ஆவணத்தை வெளியிட்டது.

இதன் செய்தியை வேறு ஊடகங்கள் உறுதிப்படுத்தாவிட்டால் நம்ப முடியாது.

"ஐரோப்பிய உளவுநிறுவனங்கள் இந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொண்டுள்ளதாகவும்,... "

இந்திய உளவு நிறுவனத்தை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Lara said:

இந்த lankaenews காரங்கள் தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணம் என போலி ஆவணத்தை வெளியிட்டது.

இதன் செய்தியை வேறு ஊடகங்கள் உறுதிப்படுத்தாவிட்டால் நம்ப முடியாது.

வேறு ஊடகங்களில் இதுபற்றி நான் காணவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். 

34 minutes ago, பெருமாள் said:

இதன் மூலம் இதுதானேங்கhttps://www.lankaenews.com/news/218/ta

இதுவேதான்

25 minutes ago, Lara said:

இந்த lankaenews காரங்கள் தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணம் என போலி ஆவணத்தை வெளியிட்டது.

இதன் செய்தியை வேறு ஊடகங்கள் உறுதிப்படுத்தாவிட்டால் நம்ப முடியாது.

இலங்கை 2030 ஆண்டளவில் சுமார் 1 கிகா வட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய அணுமின் நிலையத்தை நிறுவ உத்தேசித்துள்ளதாக ராயிட்டர் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், யார் உதவுகிறார்கள், எங்கே அமைக்கப்படவிருக்கிறது என்பதுபற்றி தகவல்கள் வெளிவிடப்படவில்லை. 

 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தத் திட்டத்திற்காக சீனா கொடுக்கப்போகிறதென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது சீனாவின் திட்டம்தான் என்பது வெளிப்படை. இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்யும் சீனா, தானே இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தப்போகிறதென்பது சீனா இலங்கையில் மேற்கொண்டுவந்துள்ள ஏனைய திட்டங்களிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்தானே? 

https://in.reuters.com/article/srilanka-nuclear/sri-lanka-to-build-1-gw-nuclear-power-plant-by-2030-idINSGE68J0E620100920

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உண்மையான செய்தியாக இருந்தால் இதுவே தமிழீழத்திற்கான அடிக்கல்.

அதே...

1 hour ago, ரஞ்சித் said:

அத்துடன், கொழும்பில் போர்ட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் இன்னும் 400 ஹெக்டேயர் கடல்ப் பரப்பினை நிரவுவதற்கு சீனாவிற்கு அனுமதியளித்துள்ளதாகவும் இந்த போர்ட் சிட்டி திட்டமே சீனாவின் கைகளுக்குள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், விரிவாக்கப்படவிருக்கும் மேலதிக பகுதிகளும் சீனாவின் கைகளுக்குள் போகப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Port City அபிவிருத்தி இன்னும் முடியவில்லை. அது நீண்டகால திட்டம். 2041 இல் தான் முடியும். முடியும் போது அது 15 பில்லியன் டொலர் திட்டமாக முடியும்.

இப்பொழுது 269 ஹெக்டேயரில் சீனாவுக்கு 116 ஹெக்டேயரை 99 வருட குத்தகைக்கு வழங்கியிருந்தார்கள். அபிவிருத்தி தொடர்கிறது. அதை சீன நிறுவனம் தான் செய்து வருகிறது.

மேலதிக நிலம் தேவைப்படுமா என தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை இருக்கிற நிலத்தில் தான் அபிவிருத்தி தொடர்கிறது.

இது ஒரு விபரீத விளையாட்டு.தெய்வம் நின்று கொல்லப்போகின்றது

எங்கள் பங்கிற்கு இந்த இணைப்பை சமூகவலைத்தளங்களில் தரவேற்றம் செய்துவிடலாம்.

43 minutes ago, ரஞ்சித் said:

இலங்கை 2030 ஆண்டளவில் சுமார் 1 கிகா வட் மின்சாரத்தைத் தயாரிக்கக் கூடிய அணுமின் நிலையத்தை நிறுவ உத்தேசித்துள்ளதாக ராயிட்டர் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், யார் உதவுகிறார்கள், எங்கே அமைக்கப்படவிருக்கிறது என்பதுபற்றி தகவல்கள் வெளிவிடப்படவில்லை. 

இது 2010 செய்தி. சீனாவின் உதவி நிச்சயம் இருக்கும். ஆனால் கச்சதீவில் அமைக்கப்படுமா என்பது கேள்வி.

45 minutes ago, ரஞ்சித் said:

1.3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தத் திட்டத்திற்காக சீனா கொடுக்கப்போகிறதென்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது சீனாவின் திட்டம்தான் என்பது வெளிப்படை. இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்யும் சீனா, தானே இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தப்போகிறதென்பது சீனா இலங்கையில் மேற்கொண்டுவந்துள்ள ஏனைய திட்டங்களிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்தானே? 

https://in.reuters.com/article/srilanka-nuclear/sri-lanka-to-build-1-gw-nuclear-power-plant-by-2030-idINSGE68J0E620100920

“The $42-billion economy, which currently depends 60 percent on diesel power and 40 percent on hydro power, is in the process of building a 900-MW coal power plant with a loan of more than $1.3 billion from China and a 500 MW coal power plant with an Indian loan.”

இது நுரைச்சோலை அனல் மின் நிலையம் பற்றியது.

லங்கா நியூஸ் போலியான செய்தியாகவே இருக்க 99 வீத வாய்ப்புகள் உள்ளன. கோத்தாவும் சரி, சிங்கள புத்திசீவிகளும் சரி தம் தலையில் தாமே மண்ணை போடக் கூடியவர்கள் அல்ல.  அத்துடன் கச்ச தீவு போன்ற நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவில் அணுமின் நிலையம் போன்ற அமைக்கும் அளவுக்கு சீனாவும் முட்டாள் கிடையாது என்றே நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Lara said:

The $42-billion economy, which currently depends 60 percent on diesel power and 40 percent on hydro power, is in the process of building a 900-MW coal power plant with a loan of more than $1.3 billion from China and a 500 MW coal power plant with an Indian loan.”

இது நுரைச்சோலை அனல் மின் நிலையம் பற்றியது.

சரியான தகவல்தான்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Lara said:

Port City அபிவிருத்தி இன்னும் முடியவில்லை. அது நீண்டகால திட்டம். 2041 இல் தான் முடியும். முடியும் போது அது 15 பில்லியன் டொலர் திட்டமாக முடியும்.

இப்பொழுது 269 ஹெக்டேயரில் சீனாவுக்கு 116 ஹெக்டேயரை 99 வருட குத்தகைக்கு வழங்கியிருந்தார்கள். அபிவிருத்தி தொடர்கிறது. அதை சீன நிறுவனம் தான் செய்து வருகிறது.

மேலதிக நிலம் தேவைப்படுமா என தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை இருக்கிற நிலத்தில் தான் அபிவிருத்தி தொடர்கிறது.

Port City 2 Mount Lavaniya ல் தொடரும் என ஒரு பேச்சு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவை சீனாவிலும் கையளித்து அங்கு அணுக்குண்டு தயாரிக்க மன்னிக்கவும் அணுமின் நிலையம் அமைக்க இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும்.  அதன் தொடர்ச்சியாக அணுமின் நிலையத்தை பராமரிக்க  சீனர்களை நெடுந்தீவு,  அனலை தீவு,  எழுவைதீவு போன்ற இன்னோரன்ன தீவுகளில் குடியேற்றி அத்தீவுகளையெல்லாம் இணைத்து சீனர் அணை என்கின்ற பெயரையும் இட்டு இந்தியாவின் கோரப்பிடியிலிருந்து இலங்கையை காக்க நாங்கள் எல்லோரும் இலங்கை அரசிற்கு வேண்டுகோள் வைக்கவேண்டும். 

இந்த யோசனைக்கு ஆதரவு தருவோர் எல்லாம் கையை தூக்குங்கோ  

Edited by Maharajah
சொற்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இந்த lankaenews காரங்கள் தான் கோத்தபாயவின் குடியுரிமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆவணம் என போலி ஆவணத்தை வெளியிட்டது.

இதன் செய்தியை வேறு ஊடகங்கள் உறுதிப்படுத்தாவிட்டால் நம்ப முடியாது.

இது சிங்களவர்களால் கோத்தவுக்கு எதிரானவர்களால் இயக்க[படுவது போல் காட்டுகிறார்கள் உண்மை போக போக தெரியும் .

"ஆனால் பின்புலத்தில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவினால் அன்பளிப்பாக இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சதீவுகளில் அணு உலை ஒன்றை நிறுவுவதன் மூலம் முழுப் பிராந்தியத்தையுமே அணுவாயுத மோதல் ஒன்றிற்குள் இழுத்துவிடும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான ஆதாரங்களைக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கிறது."

கச்சத்தீவை இந்தியா மீளப்பெறல் வேண்டும் !

 

"சீனாவின் அரச அணு மின் நிலைய அதிகாரிகளும், சீன கம்மியூனிச கட்சியின் அதிகாரிகளும், இலங்கை அரச தரப்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஜயசுந்தரவும் இன்னும் பல கடற்படை அதிகாரிகளும் கச்சைதீவில் அமைக்கப்படவிருக்கும் இந்த அணுமின் நிலையத்திற்கான இடத்தினைப் பார்வையிடுவதற்கு கடந்த 21 ஆம் திகதி உலங்குவானூர்தியொன்றில் வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "

இதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் இதன் நம்பக்கத்தன்மையை உறுதிப்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இந்தியா சென்றுள்ள கோத்தா, தான் இந்தியாவிற்குச் சார்பானவர் என்று காட்டுவதற்காக ஏற்கனவே சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மீளப்பெறப்போவதாகப் பாசாங்கு செய்திருக்கிறார்.

 

4 hours ago, ரஞ்சித் said:

கோத்தாபாய பதவியில் அமர்வதை இந்நாடுகள் ஆரம்பத்திலிருந்து எதிர்த்துவருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவை உண்மைகள்.

கோத்தாவின் கற்பனையில், இப்படி சீனாவின் பிரசன்னத்தை குறைப்பது என்ற பகடையை வைத்து, இனப்பிரச்சனை தீர்வு பற்றிய கதையை அமத்த முயற்சிப்பது. காங்கிரஸ் என்றால் அது பலித்திருக்கும், ஏனெனில், சீன கொடுத்த  பணத்தில் காங்கிரஸ் (சோனியா) இற்கும்  பாரிய வெட்டுக்கள் இருந்தன என்றும், shiv shankar menon இன் முக்கியமான ஓர் பணி அதை தரகு செய்ததும்  என்பது தெரிந்த விடயம்.

ஆனால், பிஜேபி, மோடி உடன் இது பலிக்குமா என்பதை பொறுத்து உள்ளது. ஆரம்ப அறிகுறிகள், மோடியும், bjp உம் கோத்தாவின் பேரத்திற்கு படியவில்லை போல இருக்கிறது. அதை அடுத்து, கோத்தாவின் வெள்ளை திரை போர்த்த உறுத்தலும், மிரட்டலுமான, வேறு எவரும் முதலீடாவிட்டால், சீனாவை  நாடுவதே ஒரே வழி என்பதும்.

இந்த செய்தி கோத்தா தரப்பு கசிய விட்டதாக கூட இருக்கலாம்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

ஆனால், பிஜேபி, மோடி உடன் இது பலிக்குமா என்பதை பொறுத்து உள்ளது. ஆரம்ப அறிகுறிகள், மோடியும், bjp உம் கோத்தாவின் பேரத்திற்கு படியவில்லை போல இருக்கிறது. அதை அடுத்து, கோத்தாவின் வெள்ளை திரை போர்த்த உறுத்தலும், மிரட்டலுமான, வேறு எவரும் முதலீடாவிட்டால், சீனாவை  நாடுவதே ஒரே வழி என்பதும்.

மோடியை சிலவேளைகளில் ஒரு குட்டி ரம்பாக பார்க்கிறார்கள்.

கோத்தாவும் அவர்கள் பாணியிலேயே (துவேசம்) போவார் போலிருக்கு.

அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெல்வதற்காக முழு சிங்களத்தையுமே உசுப்பிவிடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இச்செய்தி இந்தியாவை ஆழம்பார்க்கும் தந்திரமாக இருக்கும். சீனாவின் ராசதந்திரம் கடைசிவரை  மாற்றாரை குழப்பிக்கொண்டிருப்பதும் திசை திருப்புவதும்தான். . தனது நண்பர்களை எதிரியின் நண்பராக காய் நகர்த்துவார்கள். சீனா வடகிழக்கு மாகாணங்களில் வீதி, புகையிரத வீதி  கட்டிடங்கள் அமைப்பதைக்கூட அமரிக்காவும் இந்தியாவும் இதுவரை அனுமதிக்கவில்லை. இலங்கையில் சீன அணிக்கும்  அமரிக்கா சக இந்தியா அணிக்குமிடையில் தென்னிலங்கை என் ஏரியா,  வடகிழக்கு  உங்க ஏரியா என்பதுபோல ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு,   மோதல் தவிர்ப்பு செயற்பாடு  நிலவுகிறது. ஆதலால் கச்சதீஇல் சீன அணுமின் நிலையம்  செய்தியில் உண்மை இருக்க வாய்பெதுவும் இல்லை.

Edited by poet

4 hours ago, Maharajah said:

Port City 2 Mount Lavaniya ல் தொடரும் என ஒரு பேச்சு உண்டு. 

Port City ஐ Galle Face இலிருந்து Mount Lavinia வரை நீட்டிக்கும் எண்ணமிருப்பதாகவும் அதை இதனுடன் சேர்ந்து அல்லாமல் தனித்திட்டமாக முன்னெடுக்கவிருப்பதாகவும் முன்பு கூறப்பட்டது.

ஆனால் இது அது பற்றியது அல்ல என நினைக்கிறேன். அதை செயற்படுத்துவதானால் 400 ஹெக்டேயர் போதாது.

2 hours ago, Kadancha said:

கோத்தாவின் கற்பனையில், இப்படி சீனாவின் பிரசன்னத்தை குறைப்பது என்ற பகடையை வைத்து,

 

2 hours ago, Kadancha said:

அதை அடுத்து, கோத்தாவின் வெள்ளை திரை போர்த்த உறுத்தலும், மிரட்டலுமான, வேறு எவரும் முதலீடாவிட்டால், சீனாவை  நாடுவதே ஒரே வழி என்பதும்.

கோத்தபாய அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டதை மீள்பரிசீலனை செய்வதாக கூறினார். (அது அமெரிக்காவுக்காகவே தவிர இந்தியாவுக்காக அல்ல.)

மற்றும்படி சீனாவின் பிரசன்னத்தை குறைப்பதோ, சீனாவிடம் முதலீடு எதையும் பெறாமல் இருப்பதோ கோத்தாவின் நோக்கமல்ல.

ஏனைய நாடுகளை விட சீனாவிடமிருந்து முதலீடுகள் கிடைக்கும் போது அதை யாராக இருந்தாலும் பயன்படுத்துவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.