Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை பஸ் தரிப்பு நிலையம்; இரவில் சென்று ஆராய்ந்தார் கருணா

(பாறுக் ஷிஹான்)

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மான், “அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன்  நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன்.

நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும்  குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும்  என்னால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
 
http://www.tamilmirror.lk/செய்திகள்/கலமன-பஸ-தரபப-நலயம-இரவல-சனற-ஆரயநதர-கரண/175-242446

  • Replies 162
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பகலில் ஆய்வு செய்ய படாதா.?  அதென்ன.. ஒரே நைற் ரூட்டி .. ஓவர் ரைம்..?  😊

நல்லது நடந்தால் சரி ; வாழ்த்துக்கள்..💐

37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஏன் பகலில் ஆய்வு செய்ய படாதா.?  அதென்ன.. ஒரே நைற் ரூட்டி .. ஓவர் ரைம்..?  😊

நல்லது நடந்தால் சரி ; வாழ்த்துக்கள்..💐

நைற்ரைம்ல  பஸ் ஸ்ராண்ட் சைற் போய் பழக்கத்திலை வந்த பழக்க தோசமா இருக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

பகலில் ஆய்வு செய்தால் இரண்டு மனுசி மாரும்  சிங்கனை பிச்சு எடுத்து போடுங்கள் என்ற பயமாக்கும் தலைக்கு  மேல் பிள்ளைகளை வளர்ந்துவிடடன இனித்தானே இருக்கு அக்கினி நட்ச்சத்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் தரிப்பு நிலைய புனரமைப்பு பணிகளுக்கு பில்லியன் கணக்கில் காசு புரழுதென்றால் நம்பமுடியுமா? சரி இவர் யார் இது எல்லாம் செய்வதற்கு? மந்திரியா நாடாளுமன்றத்தில் பிரதிநிதியா எங்கோ ஊழல் நடக்கப் போவது என்பது மட்டும் உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

பகலில் ஆய்வு செய்தால் இரண்டு மனுசி மாரும்  சிங்கனை பிச்சு எடுத்து போடுங்கள் என்ற பயமாக்கும் தலைக்கு  மேல் பிள்ளைகளை வளர்ந்துவிடடன இனித்தானே இருக்கு அக்கினி நட்ச்சத்திரம் .

ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வழவு நேரமாகும். ?

ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து அழித்தவருக்கு தன்ணுடைய குடும்பத்தை அழிக்க எவ்வழவு நேரமாகும். ?

ஆதலால் பொண்டாட்டிகள்மார் ஒண்ணுமே செஞ்ஞப்போறதில்ல ஓய்.

நீங்கள்  களத்துக்கு  புதுசு நாங்க எழுதி களைத்த விடயத்தை தொடங்கிறின்கள்  பின்னேரம் அவரின் தங்கை என்று ஒரு பாசமலர் வேலையால்  வந்து அண்ணனுக்கு வக்காலத்து வாங்குவா பாருங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராசா .😃

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் கருணா அம்மான் என்றாலே கருத்துக்கள் தெறிக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் என்பதே  அவரது பெயர்  

தற்போதைய  முகவரி  எல்லாமே...

அதிலிருந்தே அவரைப்பற்றி  பேசவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்களத்தில் கருணா அம்மான் என்றாலே கருத்துக்கள் தெறிக்கிறது 

ஒட்டுமொத்த இனத்தயும் வித்தவனெல்லோ. அதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

ஒட்டுமொத்த இனத்தயும் வித்தவனெல்லோ. அதுதான் .

ஒருவந்தானா விற்றான்???

  • கருத்துக்கள உறவுகள்

சான்றோர்களே சிலசமயம் ஊரைக் காப்பாற்ற சண்டியர்களை தேடி அலைய நேர்ந்துவிடுகிறது. சமூக அரசியல் வரலாற்றின் புதிர்களை முழுமையாக விடுவித்தவர் யாருமில்லை.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒருவந்தானா விற்றான்???

துரோகம் தமிழரின் இரத்தத்தில் ஊறியுள்ளது . அதன் உச்சம் தொட்டவர் வினாயகமூர்த்தி முரளீதரன். 

(ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு 🤔 ?)

1 hour ago, poet said:

சான்றோர்களே சிலசமயம் ஊரைக் காப்பாற்ற சண்டியர்களை தேடி அலைய நேர்ந்துவிடுகிறது. சமூக அரசியல் வரலாற்றின் புதிர்களை முழுமையாக விடுவித்தவர் யாருமில்லை.

உண்மைதான் கவிஞரே

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு இரவில எல்லோரும் தூங்கின பிறகு  சாதிச்சுதான் பழக்கம் பாருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க  நடவடிக்கை  மேற்கொள்ள உள்ளேன்.

ஒரு பஸ் தரிப்புக்கே இவ்வளவு எனில் ..................... அல்லது தமிழ்மிரருக்கு மில்லியன், பில்லியன் தெரியாமல் போனதா?

  • கருத்துக்கள உறவுகள்

 நிதியின் தொகை தான்   நேரம் காலம்  தெரியாமல் ஆளை சுத்த வைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

துரோகம் தமிழரின் இரத்தத்தில் ஊறியுள்ளது . அதன் உச்சம் தொட்டவர் வினாயகமூர்த்தி முரளீதரன். 

(ஏன் இந்த சந்தேகம் உங்களுக்கு 🤔 ?)

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள்.

முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களுக்கு விநாயகமூர்த்தி மூர்த்தி முறளிதரன் என்ற ஒருத்தரை மட்டுமே தெரியும் இன்னும் பலர் பெயர தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் உங்களுக்கு தெரியாது போல

ஐயா,  

உங்களுக்கு தெரியும்தானே. வெளிப்படையாக கூறுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

முரளிதரன் என்பதே  அவரது பெயர்  

தற்போதைய  முகவரி  எல்லாமே...

அதிலிருந்தே அவரைப்பற்றி  பேசவேண்டும்

தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்!

கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் வரலாற்றில் இருப்பார் ஆனால் புலியாக அல்ல. வரலாற்றில் பெரும் தவறுகளை இழைத்தவர்களை வரலாறு மறக்காமல் பதிந்து வைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் என் கருத்தை எதற்காக நீக்கினார்கள் என்று சொன்னால் நியாயமாய் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைவர் பிரபாகரன் கருணாவின் படங்களை அழிக்க வேண்டாம் என்றும் கருணா அம்மானின் வரலாறும் போராட்டத்தின் வரலாற்றின் ஒரு அங்கம் என்றும் சொன்னதாக செந்தமிழன் சீமான் கூட அவரது அட்டகாசமான பேச்சு ஒன்றில் சொல்லியிருந்தார்!

கருணா அம்மான் ஜெயந்தன் படைகளோடு வந்து வன்னியில் ஜெயசுக்குறுவை நிறுத்தியிருக்காவிட்டால் போராட்டம் 2000 க்கு முன்னரே முடித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனையிறவு பெரும் தளத்தை புலிகள் வென்ற வரலாறும் இல்லாமல் போயிருக்கும்!!!

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டால் இவ்வளவு அழிவும் வந்திருக்காது ......

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பொடியள உசுப்பபேத்தியிருக்காவிட்டால் போராட வேண்டியிருந்திருக்காது .....

சிங்களம் நியாயமாக நடந்திருந்தால் அப்பாப்பிள்ளை உசுப்பேத்தியிருக்கமாட்டார் ........

வெள்ளயள் ஒட்டுமமொத்த நாட்டயும் சிங்களத்திடம் மட்டும் கொடுக்காதிருந்தால் இனப்பிரச்சனையே வந்திருக்காது .......

சங்கிலியன் போரில் தோற்காதிருந்திருந்தால் நாடு வெல்ள்ளயளிடம் போயிருக்காது........

...........................து......து ......து...

நாஞ் சொல்ரது ச்சரிதானே . ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கும் கோபம் வருவது புரிகிறது தனி. அவர் மட்டுமே துரோகம் இழைக்கவில்லை, இன்னும் பலர் இருக்கிறார்கள்.

முரளி துரோகம் இழைத்தவர்தான் என்று நீங்கள் நினைக்கவில்லையோ?

தான் துரோகம் செய்தாலும் பல ஆயிரம் போராளிகளை வெளியேற்றினார் இன்று பலர் உயிரோடு இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தான் துரோகம் செய்தாலும் பல ஆயிரம் போராளிகளை வெளியேற்றினார் இன்று பலர் உயிரோடு இருக்கிறார்கள் 

பிரபாகரன் ஒரு துரோகி என கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.