Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம்

train railway sri lanka

கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், (31) செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும்.
ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரைச் சென்றடையும்.

இந்த ரயில் தனது பயணத்தை மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து, காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையும் என்றும் ரயில்வேத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

-ஐ. ஏ. காதிர் கான்-

http://www.dailyceylon.com/194537/

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு, கொழும்புக் கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவைகளே, இலங்கை ரயில்வே திணைக்களம் இலாபகரமாக இயங்குவதற்குக் காரணமாக இருந்துவந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

முன்பு, கொழும்புக் கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவைகளே, இலங்கை ரயில்வே திணைக்களம் இலாபகரமாக இயங்குவதற்குக் காரணமாக இருந்துவந்தது.

Paanch, அது ஒரு கனாகாலம். இப்போ எல்லாமே A9ஊடாகத்தான்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kavi arunasalam said:

Paanch, அது ஒரு கனாகாலம். இப்போ எல்லாமே A9ஊடாகத்தான்

உண்மைதான். ஆனாலும் தற்போது எஞ்சின் மட்டுமே மிஞ்சியுள்ளதாம். பெட்டிகளைக் காணாமல்போனோர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்போல் உள்ளது.... 🤔👇

6 hours ago, nunavilan said:

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம்

train railway sri lanka

அப்படியானால் யாழ்பாணம் செல்ல  ஏ9  கொலைவெறி பாதை மட்டுமா? வேறு வழி இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, tulpen said:

அப்படியானால் யாழ்பாணம் செல்ல  ஏ9  கொலைவெறி பாதை மட்டுமா? வேறு வழி இல்லையா?

கதிர்காமத்துக்கு யாத்திரை போய் வாற பாதை இருக்கெல்லோ....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

அப்படியானால் யாழ்பாணம் செல்ல  ஏ9  கொலைவெறி பாதை மட்டுமா? வேறு வழி இல்லையா?

இருக்கே..!

(விருப்பமிருந்தால்.. 😋) நேரா சென்னைக்கு வாங்கோ, முடிந்தால் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு, மீனம்பாக்கம் வந்து அலையன்ஸ் ஏர் (Flight No: AI 9101) மூலம் யாழப்பாணம் செல்லுங்கள்..! பயண நேரம் ஒன்னேகால் மணி நேரம்தான்.

(வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே சென்னையிலிருந்து யாழப்பாணத்திற்கு நேரடி விமான சேவை தற்பொழுது உள்ளது.)

https://book.airindia.in/itd/itd/lang/en/travel/schedules

alliance-ATR-72-new.jpg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

அப்படியானால் யாழ்பாணம் செல்ல  ஏ9  கொலைவெறி பாதை மட்டுமா? வேறு வழி இல்லையா?

செய்தியை கவனமாக வாசியுங்கோ, 2 புகையிரத சேவை தான் நிறுத்தப்படுகிறது. மற்ற சேவைகள் தொடரும்.

https://imgur.com/kY42WzI

7 சேவையில் 2ஐ நிறுத்தி 5 தொடரும்.

https://eservices.railway.gov.lk/schedule/searchTrain.action?lang=en

  • கருத்துக்கள உறவுகள்

Colombo-Jaffna Direct Trains 

Your Station Arrival Time Departure Time Destination / Time End Station / Time Frequency Name Type
COLOMBO FORT 05:35:00 05:45:00 KANKESANTHURAI   12:17:00 JAFFNA   11:51:00 DAILY A.C. - INTERCITY A.C. - INTERCITY
Available Classes: 1st Class   Train No:  4021

COLOMBO FORT 06:17:00 06:35:00 KANKESANTHURAI   15:20:00 JAFFNA   14:35:00 DAILY YAL DEVI LONG DISTANCE
Available Classes: 2nd Class ,  3rd Class   Train No:  4077

COLOMBO FORT 08:50:00 08:50:00 JAFFNA   18:31:00 JAFFNA   18:31:00 DAILY   LONG DISTANCE
Available Classes: 2nd Class ,  3rd Class   Train No:  4080

COLOMBO FORT 11:50:00 11:50:00 KANKESANTHURAI   18:47:00 JAFFNA   18:15:00 DAILY uttara devi A.C. - INTERCITY
Available Classes: 2nd Class ,  3rd Class   Train No:  4017

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இருக்கே..!

(விருப்பமிருந்தால்.. 😋) நேரா சென்னைக்கு வாங்கோ, முடிந்தால் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு, மீனம்பாக்கம் வந்து அலையன்ஸ் ஏர் (Flight No: AI 9101) மூலம் யாழப்பாணம் செல்லுங்கள்..! பயண நேரம் ஒன்னேகால் மணி நேரம்தான்.

(வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே சென்னையிலிருந்து யாழப்பாணத்திற்கு நேரடி விமான சேவை தற்பொழுது உள்ளது.)

https://book.airindia.in/itd/itd/lang/en/travel/schedules

alliance-ATR-72-new.jpg

உங்கள் வழிகாட்டல் அபாரம்.... ஆனால் செலவுக்கு எங்கே போவது.? சென்னையில் எங்களுக்குக் கிடைத்ததுபோல் ஒரு ராசவன்னியர் எல்லோருக்கும் கிடைப்பாரா...?🤔

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் வழிகாட்டல் அபாரம்....

ஆனால் செலவுக்கு எங்கே போவது.? சென்னையில் எங்களுக்குக் கிடைத்ததுபோல் ஒரு ராசவன்னியர் எல்லோருக்கும் கிடைப்பாரா...?🤔

நன்றி.

அது நட்புக்கரம் நீட்டும்பொழுது, பற்றிக்கொண்டு தொடர்வதை பொருத்தது..! vil-donne5.gif

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

இருக்கே..!

(விருப்பமிருந்தால்.. 😋) நேரா சென்னைக்கு வாங்கோ, முடிந்தால் ஊரை சுற்றிப் பார்த்துவிட்டு, மீனம்பாக்கம் வந்து அலையன்ஸ் ஏர் (Flight No: AI 9101) மூலம் யாழப்பாணம் செல்லுங்கள்..! பயண நேரம் ஒன்னேகால் மணி நேரம்தான்.

(வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே சென்னையிலிருந்து யாழப்பாணத்திற்கு நேரடி விமான சேவை தற்பொழுது உள்ளது.)

https://book.airindia.in/itd/itd/lang/en/travel/schedules

alliance-ATR-72-new.jpg

ஆசைதான்,

ஆனால் இந்திய வீசா கட்டணம் ஆளுக்கு £100! மூன்று பேர் போனால் வீசாவுக்கு மட்டும் £400 செலவு.

12 hours ago, ஏராளன் said:

செய்தியை கவனமாக வாசியுங்கோ, 2 புகையிரத சேவை தான் நிறுத்தப்படுகிறது. மற்ற சேவைகள் தொடரும்.

https://imgur.com/kY42WzI

7 சேவையில் 2ஐ நிறுத்தி 5 தொடரும்.

https://eservices.railway.gov.lk/schedule/searchTrain.action?lang=en

ஒரு ரகசியம் சொல்லுறன் கேளுங்கோ,

 யாழ்-கொழும்பு பஸ் ஓடுவதில் மகிந்த குடும்பத்துக்கும் நல்ல வரவு உண்டு. ரெயினால் இது பாதிப்பு அடைந்ததால் -இப்போ ரெயினை குறைக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஆசைதான்,

ஆனால் இந்திய வீசா கட்டணம் ஆளுக்கு £100! மூன்று பேர் போனால் வீசாவுக்கு மட்டும் £400 செலவு.

பொந்திய விசா, அவ்வளவு கட்டணமா..?

சென்னையில் இடைதங்கி மறுநாள் செல்வதானால், லொட்டு லொசுக்கு செலவெல்லாம் சேர்த்து இலங்கை நாணயத்தில் அள்ளிக்கொண்டு செல்லுமே..?

அப்போ டிரான்ஸிட் விமான நிலையமாக பயன்படுத்ததான் சரிவரும்..!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

பொந்திய விசா, அவ்வளவு கட்டணமா..?

சென்னையில் இடைதங்கி மறுநாள் செல்வதானால், லொட்டு லொசுக்கு செலவெல்லாம் சேர்த்து இலங்கை நாணயத்தில் அள்ளிக்கொண்டு செல்லுமே..?

அப்போ டிரான்ஸிட் விமான நிலையமாக பயன்படுத்ததான் சரிவரும்..!

இலங்கை பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு குறைவுதான் (இலங்கை பணம் 5000 என நினக்கிறேன்). 

மேற்கு நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்போர்க்கே அதிக விலை.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும். 100 டொலர். பவுண்ஸ் அல்ல.

On 12/31/2019 at 11:59 AM, vanangaamudi said:

COLOMBO FORT 08:50:00 08:50:00 JAFFNA   18:31:00 JAFFNA   18:31:00 DAILY   LONG DISTANCE

இந்த டிரெயின் தான் நிறுத்தப்பட்டிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் தாயக விஜயங்களின் வீழ்ச்சி இதில் தொனிக்கிறது.

தமிழர்களின் வருவாயில் வயிறு வளர்த்துக் கொண்டு சிங்களம் தமிழர்களையே அழித்தொழித்தும் வருவது.. சொந்தச் செலவில் சூனியம் வைப்பதற்கு நிகர். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஆசைதான்,

ஆனால் இந்திய வீசா கட்டணம் ஆளுக்கு £100! மூன்று பேர் போனால் வீசாவுக்கு மட்டும் £400 செலவு.

கோசான் சே அவர்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போல் தெரிகிறது. யாழ்ப்பாணம் போய், நல்லெண்ணையுடன் நாலு சனிமுழுக்குச் சீயாக்காயும் தேய்ச்சுப் போட்டால் கணக்கில் புலியாகிவிடலாம்.😂 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Paanch said:

கோசான் சே அவர்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போல் தெரிகிறது. யாழ்ப்பாணம் போய், நல்லெண்ணையுடன் நாலு சனிமுழுக்குச் சீயாக்காயும் தேய்ச்சுப் போட்டால் கணக்கில் புலியாகிவிடலாம்.😂 

ஆஆஆ சீயாக்காய் இன்னும் இருக்கா?

மக்களும் பாவிக்கிறாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ சீயாக்காய் இன்னும் இருக்கா?

மக்களும் பாவிக்கிறாங்களா?

சீயாக்காய் இல்லாவிட்டால் இது எப்படிச் சாத்தியம் ஈழப்பிரியன் அவர்களே.!

On 12/28/2019 at 6:13 AM, தமிழ் சிறி said:

வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

கோசான் சே அவர்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போல் தெரிகிறது. யாழ்ப்பாணம் போய், நல்லெண்ணையுடன் நாலு சனிமுழுக்குச் சீயாக்காயும் தேய்ச்சுப் போட்டால் கணக்கில் புலியாகிவிடலாம்.😂 

கனம் ஐயா,

வீசா கட்டணம் மட்டும் 100x3=300. ஆனால் வீசாவை நேரில் பெறுவதாயின், அருகே உள்ள ஒரு பெருநகரில் உள்ள அலுவலுகத்துக்கு அத்தனை வீசா விண்ணப்பிப்பாளர்களையும் இழுத்துக்கொண்டு நேரில் போய் ஒரு நாள் பூராவும் தவம் கிடக்க வேண்டும். பயணச் செலவு, பார்கிங், வேலையில் விடுப்பு, சாப்பாடு, இதர செலவுகளையும் சேர்த்தால் - 400 என்பது குறைந்த பட்சமே.

பிகு: லண்டன் தமிழ் கடைகளிலேயே சீயாக்காய், அரப்பு, நல்லெண்ணை, சீப்பு, சுண்ணம் ஈறாக கிடைக்கிறது😂

ஆனால் இப்போ ஆன்லைன்னில் விண்ணபிக்கலாமாம். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

மழுப்பலுக்கும் ஒரு அளவுண்டு, ஆனாலும் ரசித்தேன்...🤩 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Paanch said:

மழுப்பலுக்கும் ஒரு அளவுண்டு, ஆனாலும் ரசித்தேன்...🤩 

அவர் ஒரு வக்கீல் ....எதிர்வாதம், அனல் வாதம், புனல் வாதம் எல்லாம்  ஸ்டாக்கில் உண்டு, அதை மறக்கக் கூடாது.....!  😁 

13 hours ago, goshan_che said:

கனம் ஐயா,

வீசா கட்டணம் மட்டும் 100x3=300. ஆனால் வீசாவை நேரில் பெறுவதாயின், அருகே உள்ள ஒரு பெருநகரில் உள்ள அலுவலுகத்துக்கு அத்தனை வீசா விண்ணப்பிப்பாளர்களையும் இழுத்துக்கொண்டு நேரில் போய் ஒரு நாள் பூராவும் தவம் கிடக்க வேண்டும். பயணச் செலவு, பார்கிங், வேலையில் விடுப்பு, சாப்பாடு, இதர செலவுகளையும் சேர்த்தால் - 400 என்பது குறைந்த பட்சமே.

பிகு: லண்டன் தமிழ் கடைகளிலேயே சீயாக்காய், அரப்பு, நல்லெண்ணை, சீப்பு, சுண்ணம் ஈறாக கிடைக்கிறது😂

ஆனால் இப்போ ஆன்லைன்னில் விண்ணபிக்கலாமாம். பார்க்கலாம்.

இங்குள்ளவர்கள்  (கனடா ) இணையம் மூலமாகவே பெற முடிகின்றது (online). ஒரு நாளிலேயே வீசா கிடைக்கின்றது. நீங்கள் இருக்கும் நாட்டில் இருந்து இணையம் மூலம் இந்திய வீசா பெற முடியாதா?

100 அமெரிக்க டொலர் என்பது வெளினாட்டினருக்கும் மிக அதிகம். 2018 இல் நானும் மகளும் போவதற்கு கனடிய டொலரில் 130 அளவு செலுத்த வேண்டி ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

மழுப்பலுக்கும் ஒரு அளவுண்டு, ஆனாலும் ரசித்தேன்...🤩 

6 hours ago, suvy said:

அவர் ஒரு வக்கீல் ....எதிர்வாதம், அனல் வாதம், புனல் வாதம் எல்லாம்  ஸ்டாக்கில் உண்டு, அதை மறக்கக் கூடாது.....!  😁 

வாய்மையே வெல்லும்😂

ஆனால் சத்தியமா மழுப்பல் இல்லை. எனக்கு கணக்கு கொஞ்சம் மக்கர்தான். ஆனால் 3x100=400 அளவுக்கு இல்லை😂.

41 minutes ago, நிழலி said:

இங்குள்ளவர்கள்  (கனடா ) இணையம் மூலமாகவே பெற முடிகின்றது (online). ஒரு நாளிலேயே வீசா கிடைக்கின்றது. நீங்கள் இருக்கும் நாட்டில் இருந்து இணையம் மூலம் இந்திய வீசா பெற முடியாதா?

100 அமெரிக்க டொலர் என்பது வெளினாட்டினருக்கும் மிக அதிகம். 2018 இல் நானும் மகளும் போவதற்கு கனடிய டொலரில் 130 அளவு செலுத்த வேண்டி ஏற்பட்டது.

நான் 2015இல் கடைசியாக போகும் போது லண்டன் சவுத்தோல்-ஹேய்ஸ் பகுதியில் உள்ள VFS அலுவலுகம் போய், பணத்தை அழுது, வரிசையில் நிண்டு, ஒருநாளை விரயம் பண்ணி லோல் பட்டே விசா எடுத்தேன். 

இப்போ ஒன்லைனில் எடுக்கலாமாம். ஆனால் கட்டணத்தில் மாற்றமில்லை (100 யூஎஸ்). 

ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு கட்டணம் யூகே, ரஸ்யா போன்ற சில நாடுகளுக்கே 100 டொலர். மற்றைய நாடுகளுக்கு 25-80.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.