Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகர சபையில் அநாகரீகமான வாய்த் தர்க்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

சாதி பேரை சொல்லி திட்டிய தர்சானந் கூட்டமைப்பு புங்குடிதீவு வெள்ளாளராம்😠...சாதியின் பெயரால் திட்டு வாங்கியவர் றெடிமிஸ் ...இவர் டக்ளசின் கட்சியாம் 

இப்ப சொல்லுங்கோ நீங்கள் யாற்றை பக்கம் 

சாதியைப்பற்றி எவர் கதைக்கின்றார்களோ அவர்களுக்கு அரபுநாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட அதிகமாக கொடுப்பவர்கள் பக்கம் நான் நிற்பேன்..
என்ன விசுகர் நான் சொன்னது சரிதானே? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனை இனத்துவேசி என்கிறது பிறகு தங்களுக்குள்ளே கேவலமாக சாதியை இழுத்து அடிபாடு. கோயில் ரதத்தை இயந்திரம் கொண்டு இழுத்த சமூகம்

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக எரிய ஆரம்பித்திருக்கும் சாதித்தீ 

யாழ் மாநகர சபை இப்ப நரக சபையாகி கிடக்கு போல

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சிங்களவனை இனத்துவேசி என்கிறது பிறகு தங்களுக்குள்ளே கேவலமாக சாதியை இழுத்து அடிபாடு. கோயில் ரதத்தை இயந்திரம் கொண்டு இழுத்த சமூகம்

இப்படியொரு சமூகம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சாதியைப்பற்றி எவர் கதைக்கின்றார்களோ அவர்களுக்கு அரபுநாடுகளில் கொடுக்கும் தண்டனையை விட அதிகமாக கொடுப்பவர்கள் பக்கம் நான் நிற்பேன்..
என்ன விசுகர் நான் சொன்னது சரிதானே? :cool:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை!

இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாடு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. எனினும் மக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியாக இது உள்ளது. இங்கே வாழ்பவர்களுள் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களுக்குத் தென்னிந்தியத் தமிழர்களுடன் விரிவான பண்பாட்டுத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்றன. அத்துடன் இலங்கையிலும் அந்நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு, தமிழ் நாட்டிலும், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உள்ள சாதியமைப்புக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பின் உருவாக்கத்திலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் இந்து சமயக் கோட்பாடுகளின் தாக்கம் முன்னணியில் இருந்தபோதும், அதன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றான பிராமண மேலாதிக்க நிலை யாழ்ப்பாணத்தில் முற்றாகவே இல்லாமல் இருப்பது கவனிக்கத் தக்கது. மதரீதியான பணிகளை செய்வதனால் பிராமணர்கள் உயர்வாகக் கருதப்பட்டாலும் சாதிய அமைப்பில் அவர்கள் நிலவுடமை சாதிகளில் தங்கி வாழ்பவர்களாகவே இருப்பதால் சாதியப்படி நிலையில் அவர்களுக்கு உயர்வுநிலை இல்லை. அதிகாரப் படிநிலையில் வெள்ளாளர் (வேளாளர்) சமூகத்தினரே உயர் நிலையில் உள்ளார்கள். யாழ்ப்பாண வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலின் படி, யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆரம்ப காலத்தில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட பிரபுக்களுள் மிகப் பெரும்பாலானோர் வெள்ளாளர்களே என்பதைக் காண முடியும். இது வெள்ளாளர்களின் உயர் நிலைக்குக் காரணம் அவர்களுடைய ஆரம்பகால அரசியல் பலமே என்பதைக் காட்டுகின்றது.

யாழ்ப்பாண வைபவமாலை பல்வேறு பட்ட சாதியினரின் யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிக் கூறுகின்றது. பிராமணர், வெள்ளாளர், நளவர், மள்ளர், சான்றார், கோவியர், சிவியார் ஆகிய சாதிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது பற்றி க. வேலுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில், ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப்பகுதியில் 1790 ஆண்டில் தலைவரி வசூலிப்பதற்காக எடுத்த சாதிவாரியான கணக்கெடுப்புப் பட்டியலொன்று தரப்பட்டுள்ளது இதில் 58 சாதிப் பிரிவுகளும் அச் சாதிகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களின் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளன.

Caste system in Jaffna1இப் பட்டியலிலுள்ள சில உண்மையில் சாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக, பரதேசிகள் (பிறதேசத்தவர்), பறங்கி அடிமைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். வேறு சில, தொழில் வேறுபாட்டால் உருவான சாதிகளின் உட் பிரிவுகளாக இருக்கின்றன.

இதிலுள்ள பெரும்பாலான சாதிகள் தமிழ் நாட்டுச் சாதிகளை ஒத்தவை. நளவர், கோவியர் ஆகிய இரு சாதிப்பிரிவுகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் மட்டுமே காணப்படுபவை.

முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:

யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பட்டுள்ளன.

விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.

நளவர் மற்றும் பள்ளர் எனப்படும் சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.

மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.

துணி துவைப்பவர்கள் வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும் அழைக்கப்பட்டார்கள்.

வண்ணார், அம்பட்டர் சாதிகளிடையே அவர்களின் வாடிக்கையாளர்களின் சாதி அடையாளங்களை கொண்டு சாதி உட்பிரிவுகள் உண்டு.

உதாரணத்துக்கு சில சிகை அலங்கரிப்பாளர்களுக்கு வெள்ளாள சாதியிலிருந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் இருப்பார்கள், அதேநேரம் மற்றவர்கள் சிறப்புரிமை குறைந்த சாதியினருக்கு தமது சேவையினை பரிமாறுவார்கள்.

பல்வேறுபட்ட சாதிக்குழுக்களைக் கொண்ட சிறுபான்மைத் தமிழ் சமூகத்தினர் ஒவ்வொரு குழுவினருக்கும் இடையில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை, அவர்கள் தங்கள் தனித்தன்மையை பாதுகாத்து வந்தார்கள்.

சிறுபான்மைத் தமிழரிடையே படித்து கௌரவமான தொழில் செய்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை மறைத்து சிறப்புரிமை குறைந்த சிறுபான்மை தமிழ் சமூக அங்கத்தினரிடையே தங்களை உயர்ந்தவர்கள் போல காட்டிக் கொண்டார்கள்.

சிறுபான்மைத் தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக் கோவில்களில் உள்நுழைவதற்கோ,வழிபாடு செய்வதற்கோ வெள்ளாள சாதியினரால் அனுமதிக்கப் படவில்லை. சிறுபான்மைத் தமிழர் மகாசபை இதற்கு எதிர்ப்புகளையும் ஆலயப் பிரவேச ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்தது.

1956ல் சாதி ஒடுக்குமறையைத் தடை செய்வதற்காக சமூகக் குறைபாட்டுச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. எப்படியாயினும் அது முதன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது அதில் நிறைய ஓட்டைகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் 1950ன் பிற்பகுதியில் கோப்பாய் கிராமச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் கிராமச்சபைக் கூட்டத்தில் பங்கு பற்றியபோது அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலிகூட வழங்கப் படவில்லை பதிலாக ஒரு பழைய உரலின் மேல் அமரும்படி மற்றைய அங்கத்தவர்களால் அவர் கோரப்பட்டார்.

சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்கள் உயர்சாதியினரோடு சேர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.

தேனீர் கடைகளில் அவர்கள் உள்ளே போக முடியாது.

தேனீர் துருப்பிடித்த தகரப் பேணிகளிலும் சோடா போத்தல்களிலுமே வழங்கப் பட்டது.

கடைகளில் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது நிலத்தில் விரிக்கப்பட்ட வெற்றுச் சாக்குகளில் அமரும்படி அவர்கள் கேட்கப்பட்டார்கள்.

இந்தப் பழக்கம் 1960 வரை சுபாஷ் கபே போன்ற இடங்களில் கூட நீடித்தது.

1930 மற்றும் 1940 களில் தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சேலைகளுக்கு மேல் சட்டை அணிவதற்கு அனுமதி இருக்கவில்லை.

தங்கள் மார்பகங்களை மறைப்பதற்காக அவர்கள் ஒரு சிறு துணித் துண்டையே போர்த்த வேண்டியிருந்தது.

குடாநாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தலையை துப்பட்டாவால் போர்த்துவது தடுக்கப் பட்டிருந்தது.

உயர்சாதி மக்கள் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், தமிழ் ஆண்களின் தேசிய உடையான வேட்டியை அணிவதற்குக் கூட தடை போட்டிருந்தார்கள்.

அநேகமான பாடசாலைகளில் உயர்சாதி ஆசிரியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டினார்கள்.

இந்த மாணவர்களக்கு மேசையோ அல்லது கதிரையோ வழங்கப்படவில்லை.

அவர்கள் நிலத்திலேயெ அமரவேண்டியிருந்தது. அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும்கூட அவர்கள் கடைசி வரிசை ஆசனங்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது.

சிகை அலங்கரிப்பு நிலையங்களும் சாதிப் பாகுபாடுகள் அற்றவையாகவே உள்ளன.ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள அநேக ஆலயங்கள் தொடர்ந்தும் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக மூடப்பட்டனவாகவே உள்ளன.

தாழ்த்தப்பட்ட சாதியின் இளந் தலைமறையினர் இப்போது சாதிப் பாகுபாடு இல்லை என்றே எண்ணுகிறார்கள்.

அதேபோல உயர்சாதி மக்களும் சாதிப் பாகுபாடு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே எண்ணுகிறார்கள்.

ஆனால் சாதிப் பாகுபாடு பல வழிகளிலும் அடிப்படையாக இருந்து கொண்டே வருகிறது.

1995ல் யுத்தத்தின்போது யாழ்ப்பாண மக்கள் சாவகச்சேரிக்கு இடம்பெயாந்த போது உயர்சாதி கிணற்று உரிமையாளர்கள் பாவிக்கப்படாத காணிகளில் இருந்த கிணறுகளுக்குள் குப்பைகளையும் கழிவுகளையும் வீசி இடம்பெயர்ந்தவர்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதியினர் உபயோகிக்காதிருக்கும்படி செய்தனர்.

சமூக உறவுகளின் இறுதிக் காரணியாக சாதி தொடர்ந்தும் இருந்து வருகிறது.

எப்படியாயினும் யாழ்ப்பாணத்தில் சில சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்தேறியுள்ளன.

யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதிக்குள் பெரும்பாலான வீதியமைப்பு வேலைகளையும் துப்பரவுப் பணிகளையும் செய்பவாகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் குறைவான சம்பளமே வழங்கப் படுகிறது,அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மிகவும் ஆபத்தானதாக இருந்த போதிலும் கூட.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் பொழுது அவர்களின் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் உத்தரவாதப்படுத்துவதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

இந்தத் தொழிலாளர்களில் அநேகர் தங்கள் உரிமைகளையும் உயர் வேதனத்தையும் கோருவதற்கான தொழிற்சங்க அமைப்புகளை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஒடுக்கப்பட்ட சாதியிலிருந்து குத்தகைக்கு விவசாயம் செய்பவர்களும் கஷ்டங்களை எதிhகொள்கிறார்கள்.

நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறியுள்ள உயர்சாதி தமிழர்கள் தங்கள் நிலங்களை சிறுபான்மைத் தமிழர்களுக்கு விற்பனை செய்வதை விரும்பவில்லை.

மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் பல வழிகளினாலும் வறுமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள்.

காரைநகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சாதியினர் பயன்படுத்தி வந்த ஒரு பொதுக் கிணற்றுக்குள் அவர்களின் பயன்பாட்டுக்குத் தடங்கல் ஏற்படுத்தும் நோக்கில் உயர்சாதி ஆட்களினால் மனிதக் கழிவுகள் வீசி அசுத்தப் படுத்தப்பட்டது.அந்தப் பகுதியில் இயங்கி வந்த சில ஈபிஆர்எல்எப் அங்கத்தவர்கள் அந்தக் கழிவுகளை வீசியவர்களை இனங்கண்டு அவர்களைக் கொண்டே அந்தக் கிணற்றை சுத்திகரிக்க வைத்தார்கள்.

வட மாகாணத்திலுள்ள சனத்தொகை கொண்டிருப்பது சுமார் 40 விகிதமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை.

தாழ்த்தப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்த அநேக இளைஞர்கள் போராட்ட இயக்கங்களில் இணைந்து கொண்டதற்கு காரணம் அவர்கள் வீடுகளில் நிலவிய வறுமையே.மேலும் அவர்கள் எண்ணியது தாங்கள் தனியாக இயங்கக்கூடாது அப்படிச் செய்தால் அது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு குழி பறித்தது போலாகிவிடும் என்று.

இந்தக் குழுக்கள் உயர்சாதியினருக்கு நிகரான ஒரு சந்தர்ப்பத்தை தங்களுக்கு வழங்குவதையும் அவர்கள் கண்டார்கள்.

சிலவேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் இந்தக் குழுக்கள் மிகவும் தீவிரமாக இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் போலும். தாழ்த்தப்பட்ட தமிழர்கள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்த போதிலும் உயர்சாதி தமிழர்கள் மற்றும் உயர்சாதி தமிழர் தலைவர்களும் தமிழ் சமூகத்தினுள்ளேயிருக்கம் சாதி ஒடுக்குமுறையினை களைந்தெறியத் தவறி விட்டார்கள்.

http://worldtamilforum.com/eelam/caste-system-in-jaffna/

1 minute ago, nunavilan said:

யாழ்ப்பாணத்தில் செயற்படும் சாதி முறை!

தற்காலத்துக்கு பொருத்தமற்ற முறை!

தமிழர் மத்தியில் அழிய வேண்டியதில், அழிக்கப்பட வேண்டியதில்  நாட்டைவிட்டு தப்பியோடும் கேவலமான கலாச்சாரத்துடன் இந்த கேவலமான சாதிய கலாச்சாரத்திற்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதிகள் என்பது ..

யாழ்பாணத்தின் அடையாளம்...

இதை உடைதெறிய வேண்டும்...

எனது இனத்தை நாங்களே கூறு போட்டுவிட்டு  எப்படி சிங்களவனிடம் உரிமை கேட்க முடியும்?

அங்கேதான் எமக்கென்றொரு தலைவர் இருந்தார் ..

அவர் எமது இனம் அனைவருக்குமாகவே போராடினார்...மறைந்தும் போனார்.

பல  தரப்பட்ட சமூகங்களின் நீதிக்காய்  போராடிய  ஒருவர் என்பதினாலேயே...

பிரபாகரனை  ஈழ தமிழர்கள் வெறி தனமாய் நேசித்தார்கள்...

அவருக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும் கோப பட்டார்கள்...

நுணாவிலான்  இங்கு இணைத்த... பள்ளர்,நளவர் , வெள்ளாளர், பறையர், கரையார்..வண்ணான்..அம்பட்டன்...

என்ற செய்தியெல்லாம்...

தலைவர் இருந்திருந்தால்.. அப்படி பேசுவதற்கே தமிழன் பயபடுவான்..

அதனால்தான் அவர் எங்கள் தலைவர்..

தமிழன் என்றால் கேவலம் கெட்ட இனம் ,

 இவர்களை கடிவாளம் போட்டு  இழுத்து பிடித்து நாகரிகத்தை கற்று கொடுத்ததே...

எங்கள் தலைவன் பிரபாகரன்.!

  • கருத்துக்கள உறவுகள்

சாதி என்பது தொழிலைக் குறிப்பதாக இருக்கவேண்டும், தொழில் செய்பவரைக் குறிப்பதாக இருக்கக்கூடாது. உயர்வு தாழ்வு கொண்ட வேறு வேறு தொழில்களைச் செய்யும் உறுப்புகளைக் கொண்ட நாங்கள், அவற்றை ஒன்றாக்கி மனிதன் என்கிறோம். அதுபோலவே எத்தொழில் புரியினும் அனைவரும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். பிறப்பினால் வருவதல்ல சாதி.

‘பிறப்பினால் தகைமை அமைவதில்லை’ எனும் இதே கருத்தினைத்தான் திருவள்ளுவர், 

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ 
என்றார்.

‘பிறப்பினால் எவ்வுயிரும் ஒத்தவையே. செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வாது/ஏற்புடையதாகாது. ஆகவே, எத்தொழில் செய்யினும் யாவரும் ஒத்தவரே’ என்பது பொருள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, கற்பகதரு said:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அவர் மேல் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டது 100% உண்மை.

45 minutes ago, Paanch said:

சாதி என்பது தொழிலைக் குறிப்பதாக இருக்கவேண்டும், தொழில் செய்பவரைக் குறிப்பதாக இருக்கக்கூடாது. உயர்வு தாழ்வு கொண்ட வேறு வேறு தொழில்களைச் செய்யும் உறுப்புகளைக் கொண்ட நாங்கள், அவற்றை ஒன்றாக்கி மனிதன் என்கிறோம். அதுபோலவே எத்தொழில் புரியினும் அனைவரும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும். பிறப்பினால் வருவதல்ல சாதி.

‘பிறப்பினால் தகைமை அமைவதில்லை’ எனும் இதே கருத்தினைத்தான் திருவள்ளுவர், 

‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ 
என்றார்.

‘பிறப்பினால் எவ்வுயிரும் ஒத்தவையே. செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வாது/ஏற்புடையதாகாது. ஆகவே, எத்தொழில் செய்யினும் யாவரும் ஒத்தவரே’ என்பது பொருள்.

அப்படி ஒரு பகுப்பு ஏன் தேவை?

ஆங்கிலேயர்களிடமும் முன்னர் பொற் கொல்லர் பரம்பரையினர் கோல்ட்ஸ்மித், கொல்லர் பிளக் ஸ்மித் இவ்வாறு குடும்பங்களை தொழில் கொண்டு அழைக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்பே அது அருகி எந்த பெயர் கொண்டவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்றாகி விட்டது.

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

சாதிக்கும் தொழிலுக்குமான தொடர்பை அறுக்காமல் - சாதியை ஒரு போதும் அழிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

5 hours ago, கற்பகதரு said:

அரபுநாடுகளின் பண்பாட்டை எங்களுக்குள் கொண்டு வரவேண்டாம். பண்டைக்காலம் முதல் சைவ சமய ஆகமங்களின் படி, மனுதர்ம முறைப்படி சாதி அமைப்பு  எமது பண்பாட்டின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதை நாம் விட்டுக்கொடுத்தால், எமது பண்பாட்டில் மேலும் பலவற்றையும் அவரவர் கேட்கிறார்களே என்று விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஆறுமுக நாவலர் எமது பண்பாட்டில் சாதியின் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார். 

49 minutes ago, குமாரசாமி said:

ஒம் என்ன.....எல்லாரையும் வைக்கிற இடத்திலை வைக்க வேணும் என்ன? 🤣🤣🤣

என்னென்டாலும், எங்கட சமயம், கலாச்சராத்தை விடக்கூடாது தானே? அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் கலாச்சாரத்தையும் பேணக்கூடியதாக இருக்குமெல்லோ? ஏற்றதாழ்வுகள் எங்க தான் இல்லை? தாய் விபச்சாரி என்றதுக்காக பெற்ற தாயை நீ என் தாய் இல்லை என்று ஆக்கி விட முடியாது தானே? அப்படி தான் எங்கள் கலாச்சாரமும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

எத்தனயோ வேலை இருக்க ஏன் இந்த வேலையை இவையள் செய்யினம்? தெரிஞ்ச வேலை, அப்பர் மகனுக்கு பழக்கி விட்ட வேலை, தொழில் நுணுக்கம் புரிந்த வேலை - ஆகவே செய்யினம். மற்றவை என்னெண்டு செய்யறது? யார் எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்?

24 minutes ago, goshan_che said:

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். 

எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்? தெரியாத வேலையை எப்படி செய்யறது? எவரும் எந்த வேலையும் செய்யலாம் எண்டால்,  எல்லாரும் டாக்குத்தர் வேலை வேணும் எண்டு நிப்பினம்.

24 minutes ago, goshan_che said:

ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

வெளிநாட்டில் படிப்பிச்சு விடுறான் - செய்யக்கூடியதா இருக்கு. சாதியம் எங்கட கலாச்சாரம் - அதை பேசாமல் வேற எதை பேசுறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, கற்பகதரு said:

எத்தனயோ வேலை இருக்க ஏன் இந்த வேலையை இவையள் செய்யினம்? தெரிஞ்ச வேலை, அப்பர் மகனுக்கு பழக்கி விட்ட வேலை, தொழில் நுணுக்கம் புரிந்த வேலை - ஆகவே செய்யினம். மற்றவை என்னெண்டு செய்யறது? யார் எந்த பள்ளிக்கூடத்திலே இந்த வேலைக்கு படிப்பிச்சு விடுகினம்?

தேப்பன் டாக்குத்தர் எண்டால் மோனோ மோளோ டாக்குத்தராய் வந்தால் மரியாதை
எஞ்சினியர் எண்டாலும் அதே மாதிரித்தான்...
எக்கவுண்டன் எண்டாலும் அதே மாதிரித்தான்....
நடிகன் எண்டாலும் அதே மாதிரித்தான்....

ஆனால் மற்றத்தொழில்காரர் பரம்பரை பரம்பரையாய் செய்ய மாட்டினமாம்.
ஆக மிஞ்சினால் நாங்கள் தூரம் போன........முதலில் இவர்களும் திருந்த வேண்டும்.
சாரம் கட்டினாலே மரியாதை இல்லையெண்ட சமுதாயத்திலை வேறை என்னத்தை எதிர்பார்க்க ஏலும்?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அவர் மேல் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்டது 100% உண்மை.

அப்படி ஒரு பகுப்பு ஏன் தேவை?

ஆங்கிலேயர்களிடமும் முன்னர் பொற் கொல்லர் பரம்பரையினர் கோல்ட்ஸ்மித், கொல்லர் பிளக் ஸ்மித் இவ்வாறு குடும்பங்களை தொழில் கொண்டு அழைக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் பல நூற்றாண்டுக்கு முன்பே அது அருகி எந்த பெயர் கொண்டவரும் எந்த தொழிலும் செய்யலாம் என்றாகி விட்டது.

பறையர் மட்டுமே யாழில் மலம் அள்ளும் தொழில் செய்கிறார்கள்.

சோறில்லாமல் செத்தாலும் இதை வெள்ளாளர் செய்யாயினம். ஆனால் வெளிநாட்டில் போய் அதே வேலையை செய்து அனுப்பும் காசில் வாழ்ந்தபடி சாதியம் பேச ரெடி.

சாதிக்கும் தொழிலுக்குமான தொடர்பை அறுக்காமல் - சாதியை ஒரு போதும் அழிக்க முடியாது.

வெளிநாடுகளில் தொழிற்பிரிவுகளின் அடிப்படையில் எமதாட்கள் வேலை செய்வதில்லை. அதிக வருமானம் தரும் தொழில் எதுவானாலும் எமதாட்கள் செய்வதற்கு தயங்கியதில்லையே. 

கருவாடு விற்ற காசு மணக்கவாபோகிறது என்கின்ற நிலை வெளிநாடுகளில். 

என்னைப் பொறுத்தவரை ஒருவரது இறுதிப் பண்டார வெடிதான் சாதிப் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

என்னென்டாலும், எங்கட சமயம், கலாச்சராத்தை விடக்கூடாது தானே? அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் கலாச்சாரத்தையும் பேணக்கூடியதாக இருக்குமெல்லோ? ஏற்றதாழ்வுகள் எங்க தான் இல்லை? தாய் விபச்சாரி என்றதுக்காக பெற்ற தாயை நீ என் தாய் இல்லை என்று ஆக்கி விட முடியாது தானே? அப்படி தான் எங்கள் கலாச்சாரமும். 

பெற்ற தாயைக் கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறானது. கலாலாச்சாரமானது, காலத்துக்குக் காலம் மாறக்கூடியது, மாற்றக்கூடியது. தவறான சாதிக் கலாச்சாரத்தையும் மாற்றலாம், மாற்றமுடியும். சாதியில் உயர்வு, தாழ்வு கொண்டிராத ஒரு பெரும் மக்கள் படை, முப்பது வருடங்களாக ஒரு தலைவன்கீழ் பணிசெய்தது எங்கள் காலத்தில்தான். மனிதர்களை நல்ல மனிதக் கலாச்சாரத்தோடு வாழவைக்க முயற்சிசெய்வோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் தொழிற்பிரிவுகளின் அடிப்படையில் எமதாட்கள் வேலை செய்வதில்லை. அதிக வருமானம் தரும் தொழில் எதுவானாலும் எமதாட்கள் செய்வதற்கு தயங்கியதில்லையே. 

கருவாடு விற்ற காசு மணக்கவாபோகிறது என்கின்ற நிலை வெளிநாடுகளில். 

என்னைப் பொறுத்தவரை ஒருவரது இறுதிப் பண்டார வெடிதான் சாதிப் பெருமை.

உண்மைதான்,

ஆனாலும் வெளிநாட்டில் சாதிக்கும்-தொழிலுக்குமான தொடர்பு இல்லை என்பதால் பல தொழில்களை ( மக்டொனால்டில் நின்றால் ஷிப்ட் வரும் போது  சுத்தம் செய்யத்தான் வேண்டும், நான் வெள்ளாளன் என்னால் முடியாது என சொல்ல முடியாது😂) செய்ய எம்மவர் முன்வந்தாலும் இதிலும் சில நுணுக்கங்கள் உண்டு.

சாதாரணமாக் எல்லா சாதியினரும் கடையில் வேலை செய்வார்கள். கொஞ்சம் நிலைத்ததும் சொந்தமாக கடை வைப்பார்கள் ஆனால் - சில்லறை உடன்-மீன்   விற்பனையில் எத்தனை வெள்ளாளர்கள் ஈடுபடுகிறார்கள்? எனக்கு தெரிய இல்லை.

தமிழ் கடைகளில் கூட, மீன் விக்கும் கவுண்டர் தனியே, தனி ஒரு சிப்பந்தியிடம் இருப்பதேன்? ஆனால் பக்கெட்டில் அடைத்த மீனை எல்லாரும் விற்பார்கள்.

லண்டனில் செயின்ஸ்பெரிஸ், டெஸ்கோ, அஸ்டா இப்படி பல சூப்பர் மார்கெட்டுகளில் எல்லா பகுதிகளிலும் தமிழர்கள் நீக்கமற நிறைந்திருந்தாலும் fish counter ல் ஒருவரை இன்னும் நான் காணவில்லை.

இதை நானே கற்பனை செய்கிறேனே அல்லது இதில் ஏதும் உண்மை இருக்கிறதா தெரியவில்லை.

நான் லண்டன் வந்த புதிதில் - உடன் இந்து-சமுத்திர மீன் வாங்க 30 நிமிடம் காரில் போய் வாங்குவோம். அது ஒரு கரீபியனின் கடை. அவனே பிலிங்கேட்ஸ் மார்கெட் எனும் கிழக்கு லண்டனில் இருக்கும் பெரும் மீன் சந்தையில் போய் வாங்கி விற்பது. 

படிப்பு ஒரு புறம் ஓட - ஒரு சின்ன ஓடை கடையை எடுத்து, தமிழர் நிறைந்த பகுதியில் இதே வேலையை நாம் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாமே என என் மனதில் ஓடியது.

இதை என்னை சூழ இருந்தவர்களிடம் தெரிவித்த போது இது நல்ல ஐடியா என அத்தனை பேரும் சொன்ன போதும் - அத்தனைபேரும் “மீன் கடையே வைக்கப்போறாய்” என தடுக்கவே செய்தார்கள்.

(எனக்கே உரித்தான ஊக்கமின்மையால் இதை நான் செய்யவில்லை என்பது வேறு 😂).

ஆனால் பலசரக்கு கடை, சிக்கன் கடை போடும் ஐடியாக்களுக்கு அநேகரின் பதில் “படிப்பை முடித்து விட்டு செய்” என்பதாகவே இருந்தது.

பிகு: அதென்ன பண்டாரவெடி?

54 minutes ago, Paanch said:

பெற்ற தாயைக் கலாச்சாரத்துடன் ஒப்பிடுவது தவறானது. கலாலாச்சாரமானது, காலத்துக்குக் காலம் மாறக்கூடியது, மாற்றக்கூடியது. தவறான சாதிக் கலாச்சாரத்தையும் மாற்றலாம், மாற்றமுடியும். சாதியில் உயர்வு, தாழ்வு கொண்டிராத ஒரு பெரும் மக்கள் படை, முப்பது வருடங்களாக ஒரு தலைவன்கீழ் பணிசெய்தது எங்கள் காலத்தில்தான். மனிதர்களை நல்ல மனிதக் கலாச்சாரத்தோடு வாழவைக்க முயற்சிசெய்வோம்.  

கற்பகதருவை நீங்கள் இன்னமும் விளங்கி கொள்ளவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

சாதிகள் என்பது ..

யாழ்பாணத்தின் அடையாளம்...

இதை உடைதெறிய வேண்டும்...

எனது இனத்தை நாங்களே கூறு போட்டுவிட்டு  எப்படி சிங்களவனிடம் உரிமை கேட்க முடியும்?

அங்கேதான் எமக்கென்றொரு தலைவர் இருந்தார் ..

அவர் எமது இனம் அனைவருக்குமாகவே போராடினார்...மறைந்தும் போனார்.

பல  தரப்பட்ட சமூகங்களின் நீதிக்காய்  போராடிய  ஒருவர் என்பதினாலேயே...

பிரபாகரனை  ஈழ தமிழர்கள் வெறி தனமாய் நேசித்தார்கள்...

அவருக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும் கோப பட்டார்கள்...

நுணாவிலான்  இங்கு இணைத்த... பள்ளர்,நளவர் , வெள்ளாளர், பறையர், கரையார்..வண்ணான்..அம்பட்டன்...

என்ற செய்தியெல்லாம்...

தலைவர் இருந்திருந்தால்.. அப்படி பேசுவதற்கே தமிழன் பயபடுவான்..

அதனால்தான் அவர் எங்கள் தலைவர்..

தமிழன் என்றால் கேவலம் கெட்ட இனம் ,

 இவர்களை கடிவாளம் போட்டு  இழுத்து பிடித்து நாகரிகத்தை கற்று கொடுத்ததே...

எங்கள் தலைவன் பிரபாகரன்.!

நீங்கள் தேசியம் கதைத்துக் கொண்டு , தேர்தல் நேரம் பிரபாகரனை வைத்து வோட் கேட்டு கொண்டு சாதியை அவமதிப்பதன் மூலம், பிரபாகரனையும் சேர்த்து அவமதித்து உள்ளீர்கள் என்று றெடிமியஸ் சொல்லி இருக்கிறார் . 

கஞ்சா,வாள் வீட்டுக் குழுக்களுக்காய் தான் றெடிமியஸ் கோட்டில் ஆஜராகின்றவர்...இவரது சாதியை இழுத்து கதைத்தால் இவர் நல்லவாயிட்டார்.

தமிழனை அழிக்க இனி மேல் யாரும் தேவையில்லை ... இந்த சாதியாலே இனி மேல் அழிவான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

Remidius ஒரு குற்றவியல் (Criminal) வழக்குரைஞர். அவரின் தொழிலை எப்படி குறை சொல்ல முடியும். மிகப்பெரும்பாலான தமிழ் வழக்குரைஞர்கள் தேர்ந்தெடுப்பது Civil Law.

உண்மையில் அனேகருக்கு Civil , Criminal Law Practicing இரண்டுக்கும் இடையேயுள்ள  வேறுபாடு தெரியாது. 

றெமீடியஸ் கூறியதில் என்ன பிழை உள்ளது ?

சாதியை பேசுவதினூடாக பிறருக்காக உயிர் கொடுத்தோர், உயிர் கொடுக்கத் துணிந்தோர், மற்றும் அவர்தம் உறவுகளை நாம் கொச்சைப் படுத்துகிறோம் என்பது உண்மையே. 

எங்களை அழிப்பது சாதி, சமயம், பிரதேசவாதம் ஆகிய மூன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மைதான்.

சாதாரணமாக் எல்லா சாதியினரும் கடையில் வேலை செய்வார்கள். கொஞ்சம் நிலைத்ததும் சொந்தமாக கடை வைப்பார்கள் ஆனால் - சில்லறை உடன்-மீன்   விற்பனையில் எத்தனை வெள்ளாளர்கள் ஈடுபடுகிறார்கள்? எனக்கு தெரிய இல்லை.இதை நானே கற்பனை செய்கிறேனே அல்லது இதில் ஏதும் உண்மை இருக்கிறதா தெரியவில்லை.

பிகு: அதென்ன பண்டாரவெடி?

எனக்குத்  தெரிந்த அளவில்  வட அமெரிக்காவில் நேரெதிராக உள்ளது உண்மை நிலவரம். அங்கே பணத்திற்குத்தான் முதலிடம்.  எந்தத் தொழிலில் அதிக  வருமானம் வருகிறதோ அதற்குத்தான் முன்னுரி. பணம் வந்தபின்னர் சாதி முதலிடமாக மாறும் 😀

பண்டாரவெடி = குறி தவறும் / தவறிய வெடி. அதாகப்பட்டது, குறி பார்த்து சுடத் தெரியாத துப்பாக்கியாளன் அல்லது வேட்டைக்காறன். ஆனால் அவனிடம் துப்பாக்கி (அதிகாரம்) இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎12‎/‎2020 at 1:28 PM, Kapithan said:

Remidius ஒரு குற்றவியல் (Criminal) வழக்குரைஞர். அவரின் தொழிலை எப்படி குறை சொல்ல முடியும். மிகப்பெரும்பாலான தமிழ் வழக்குரைஞர்கள் தேர்ந்தெடுப்பது Civil Law.

உண்மையில் அனேகருக்கு Civil , Criminal Law Practicing இரண்டுக்கும் இடையேயுள்ள  வேறுபாடு தெரியாது. 

றெமீடியஸ் கூறியதில் என்ன பிழை உள்ளது ?

சாதியை பேசுவதினூடாக பிறருக்காக உயிர் கொடுத்தோர், உயிர் கொடுக்கத் துணிந்தோர், மற்றும் அவர்தம் உறவுகளை நாம் கொச்சைப் படுத்துகிறோம் என்பது உண்மையே. 

எங்களை அழிப்பது சாதி, சமயம், பிரதேசவாதம் ஆகிய மூன்றும்.

ரெடிமியஸ் குற்றவியல் வக்கீல் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் போன்றவர்கள் வாள்  வெட்டு குழுக்கள் கஞ்சா கடத்துகின்றவர்கள் போன்றவர்களுக்காக உடனே ஆஜராவதால்தான் குற்றவாளிகள் யாழில் பல்கிப் பெருகி உள்ளார்கள் 
நான் மற்றவருக்கு வக்காலத்து வாங்கவில்லை அவர் சாதியை இழுத்து கதைத்தது முழுப் பிழையும் ,அவரது இயலாமையும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ரெடிமியஸ் குற்றவியல் வக்கீல் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் அவர் போன்றவர்கள் வாள்  வெட்டு குழுக்கள் கஞ்சா கடத்துகின்றவர்கள் போன்றவர்களுக்காக உடனே ஆஜராவதால்தான் குற்றவாளிகள் யாழில் பல்கிப் பெருகி உள்ளார்கள் 
நான் மற்றவருக்கு வக்காலத்து வாங்கவில்லை அவர் சாதியை இழுத்து கதைத்தது முழுப் பிழையும் ,அவரது இயலாமையும் 

நீங்கள் அக்கறைப்படுவதில் உண்மை உள்ளது. ஆனால் கிரிமினல் வழக்குரைஞர் கிரிமினல்களைதானே பிரதிநிதித்துவப் படுத்தமுடியும் வழக்காடு மன்றங்களில். 

சாதியை கதைப்பது பிழை அல்ல. அது கடுமையான கண்டனத்திற்குரியதுடன் மனித நாகரிகத்திற்கெதிரானது, மனிதத் தன்மையற்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.