Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

111-1.jpg

புதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை

முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது.

இந்த கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர் உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

மாவீர்களின் உறவுகளையும் முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

மேலும் முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் ‘விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை’ என்ற பெயர் உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிதாக-மலர்கிறது-விடுதல/

  • Replies 56
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் ! (இவர்கள் தடையால்  ........ரே போச்சு என்பது வேறு விடயம்).

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

9 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் !

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரையைப் பாவிப்பதில் ஒன்றும் குற்றமில்லையே. 😋

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

ஓ ! 😲

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

கட்சியும் பேரவையும் தான் கூடுகிறது பிரச்சினை தீர்ந்த பாடில்லை கூடித்தான் செல்கிறது 

இதில் கூத்தமைம்பும் இருந்தும் பலன் இல்லை  அப்படி இருந்தும் ஒன்றையும் செய்யமுடியல அவர்கள் மட்டும் சுகபோக வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்துவிட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இவர்கள் எல்லாம் சிறீலங்கா அரசின் கைக்கூலிகள்....

கூத்தமைப்பின் வாக்குகளை பிரிப்பதற்காக களம் இறக்கப்படுபவர்கள்

எவ்வளவு இலகுவாக இழிவு படுத்துகிறோம். உயிரை கொடுக்கத்துணிந்த போது விடுதலைப் போராளிகள், தற்போது கைக் கூலிகள் ?

உங்கள் கணிப்பு சரியாகவே இருந்தாலும் அவர்களை இழிவு படுத்தாமல் கூறுவதில் தவறேதும் இல்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எவ்வளவு இலகுவாக இழிவு படுத்துகிறோம். உயிரை கொடுக்கத்துணிந்த போது விடுதலைப் போராளிகள், தற்போது கைக் கூலிகள் ?

உங்கள் கணிப்பு சரியாகவே இருந்தாலும் அவர்களை இழிவு படுத்தாமல் கூறுவதில் தவறேதும் இல்லையே ?

தவறென்றால் 

மரியாதையும்  முன்னைய அர்ப்பணிப்புக்களும்  எவ்வாறு  கனம் செய்யப்படும்???

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

தவறென்றால் 

மரியாதையும்  முன்னைய அர்ப்பணிப்புக்களும்  எவ்வாறு  கனம் செய்யப்படும்???

நான் மீராவின் பார்வையில் சரியென்றாலும் என்ற அர்த்தத்தில் கூறினேன். மீராவின் கருத்துடன் நான் உடன்படுவதாக அல்லது எதிர்ப்பதாக கொள்ளவேண்டியதில்லை.

 நாகரீகமாக கருத்திடலாம் என்பதுதான் என் கூற்றின் சாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நான் மீராவின் பார்வையில் சரியென்றாலும் என்ற அர்த்தத்தில் கூறினேன். மீராவின் கருத்துடன் நான் உடன்படுவதாக அல்லது எதிர்ப்பதாக கொள்ளவேண்டியதில்லை.

 நாகரீகமாக கருத்திடலாம் என்பதுதான் என் கூற்றின் சாரம்.

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஒவ்வாத விடுதலைப்புலிகள் என்ற பெயரை வைத்து ஏதாவது செய்யலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

முன்னாளில் மதிப்புக்குரியவராக இருந்தவரை முன்னாள் போராளி என்று சொல்வதை ஏன் அபத்தம் என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முன்னாளில் மதிப்புக்குரியவராக இருந்தவரை முன்னாள் போராளி என்று சொல்வதை ஏன் அபத்தம் என்கிறீர்கள்?

வழி  தடுமாறினால் ?? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

இலங்கை அரசு இக்கட்சி பற்றி எந்த முடிவும் எடுக்கும் முன் இந்திய அரசு தடை செய்ய முனைவானே ! அதிலும் கட்சி உதயமாகும் முன்பே தடை பண்ண யோசிப்பார்கள் கிராதகர்கள் ! (இவர்கள் தடையால்  ........ரே போச்சு என்பது வேறு விடயம்).

வடகிழக்கு மாகாணங்களில் சகல நடைமுறைகளையும் இந்திய புலனாய்வுத்துறையே முன்னெடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, விசுகு said:

முதலில் உங்களது  கணிப்பு சரி என்றாலும் என்றே  எழுதியிருந்தீர்கள்?

மீராவின் எழுத்தில்  நாகரீகம்   எந்தளவிலும்  குறையவில்லை

போராளிகளாக  இருந்தால் போராளிகள்

வழி  தடுமாறினால் ??  முன்னாள் போராளிகள் என்றெல்லாம்    சொல்வது  தான் அபத்தம்

அவர்களை  மக்களுக்காக  போராடு என்று  எவரும்  தூக்கிவரவில்லை

அரசியல்  அல்லது  பொது வாழ்வு  என்று  வந்தால்  விமர்சனம்  வரும்

அதை  முன்னாள் மதிப்புக்குரியவர்  என்றெல்லாம்  தூக்கிச்செல்ல  முயல்வது  தவறான பாதைக்கு  வழி   அமைக்கும்

தயவுசெய்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். நாங்கள் அவர்களது தற்போதைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். நான் தெழிவாக இழிவுபடுத்தாமல் எழுதலாமே என்றுதான் வேண்டி நின்றேன். இதில் தவறொன்றும் இல்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

தயவுசெய்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம். நாங்கள் அவர்களது தற்போதைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். நான் தெழிவாக இழிவுபடுத்தாமல் எழுதலாமே என்றுதான் வேண்டி நின்றேன். இதில் தவறொன்றும் இல்லையே ?

சரியுங்க

மீராவின்  எழுத்தில் மயிர்  புடுங்கியதால்  தான்  இது  வந்தது

மீராவின்  எழுத்தில்  எங்கே மரியாதைக்குறைவு  இருந்தது என்று  சொன்னால் தொடரலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சரியுங்க

மீராவின்  எழுத்தில் மயிர்  புடுங்கியதால்  தான்  இது  வந்தது

மீராவின்  எழுத்தில்  எங்கே மரியாதைக்குறைவு  இருந்தது என்று  சொன்னால் தொடரலாம்??

கைக்கூலி என்கின்ற சொல் உங்களுக்கு நியாயமானதாக தெரிகிறதா ? மனச் சாட்சியுடன் பதிலிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா ...அவர்கள் கைக்கூலிகள் என்பது உங்கள் அனுமானமா ? அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா?
அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதியதில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம்  மட்டுமே.

எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள்.
(பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா?
இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா?

பரந்த நோக்கோடு சில காரியங்களை பார்ப்பது கூட காலத்தின் தேவை தான்.
அவர்கள் ஜனநாயக அரசியலுக்கு தானே வருகிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

கைக்கூலி என்கின்ற சொல் உங்களுக்கு நியாயமானதாக தெரிகிறதா ? மனச் சாட்சியுடன் பதிலிடுங்கள்.

அதை நிரூபிக்கவேண்டியவர்கள் அவர்கள்

அதைவிட எனக்கு  மீராவைத்தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

அதை நிரூபிக்கவேண்டியவர்கள் அவர்கள்

அதைவிட எனக்கு  மீராவைத்தெரியும்

மீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. 

மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல.

கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

உங்களது குற்றச்சாட்டுக்கு  மீரா  பதில் தருவார் என நினைக்கின்றேன்

எனக்கென்று ஒரு  பார்வையும்   தெளிவும்  இருக்கிறது

அதன்படி அடுத்த  தலைவர்களுக்கு முன்னாள்கள்  என்ற அடைமொழி தேவையற்றது

அவர்கள் தம்மை  மக்களிடையே இனித்தான்  நிரூபிக்கணும் முன்னையைவிட  அதிகமாக...

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று? எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ? ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார்,  மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களது குற்றச்சாட்டுக்கு  மீரா  பதில் தருவார் என நினைக்கின்றேன்

எனக்கென்று ஒரு  பார்வையும்   தெளிவும்  இருக்கிறது

அதன்படி அடுத்த  தலைவர்களுக்கு முன்னாள்கள்  என்ற அடைமொழி தேவையற்றது

அவர்கள் தம்மை  மக்களிடையே இனித்தான்  நிரூபிக்கணும் முன்னையைவிட  அதிகமாக...

நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள் தங்களை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். ஆனால் எந்த மக்களுக்கு ? தாயகத்திலுள்ளோருக்குத்தானே ? அதுவரை நாங்கள் அவர்களை தூற்றாமல் இருக்கலாமல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இப்பொழுது சாதரணமக்களே. இவர்கள் காலத்தில் ஒரு ஆயுதம் தூக்கி போராடினார்கள் இப்பொழுது ஜானநாயக ரீதியாக ஒன்றிணைந்து ஏதோ தங்களால் முடிந்தளவு மக்களுக்கு ஏதுவும் செய்ய முயற்சிக்கின்றார்கள். பாரட்டுக்கள்.

இதேவேளை வெளி நாடுகளில் புலிகளின் பினாமி சொத்துக்களை ஆட்டையை போட்டவர்களை பற்றி யாரும் ஒன்றும் கதைக்க மாட்டார்கள். இத்தகையவர்கள் கோவில் தர்மகர்த்தாக்களாகவும், தொழில‌திபர்களாகவும் வலம் வருவார்கள்.  இவர்கள் சமுதாயத்தில் முக்கிய புள்ளிகள். ஏனென்றால் இவர்கள் செல்வந்தர்கள் இவர்களை கைக்கூலிகள் / கால் கூலிகள் என கூறமுடியாது. சீ என்ன உலகமிது!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து தமிழர்கள் நாங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சொற்பதத்தை தயாராக வைத்திருப்போம், அடுத்தவனை பேசவிடாமல், அடுத்தவனை சிந்திக்க விடாமல், தேவைக்கேற்ப தூக்கி அடிப்போம்... 
கைக்கூலி , 
சமூக விரோதி, 
காவடித்தூக்கி , 
செம்பு தூக்கி,
ஒட்டுக்குழு,
 
முட்டையில் மயிரை புடுங்கு, 
சொட்டையில எண்ணெய்யை தடவு..

இதில் மட்டுமே நாங்கள் கைதேர்ந்த கில்லாடிகள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.