Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TRANCE - தன் நினைவிழந்த நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

  • Replies 58
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

விக்கியில் இருந்த கதையின் இறுதி பகுதி மட்டும் இங்கு போடுறேன் .

இதற்கிடையில், போதகரின் பெரிய ரசிகரான தாமஸ் என்ற ஏழை ஒருவர் தனது மகளின் காய்ச்சலை பிரார்த்தனை மூலம் குணப்படுத்த முயற்சிக்கிறார். அவர் ஒரு அதிசய குணத்தை எதிர்பார்க்கிறார், ஆனால் இறுதியில் அவரது மகள் காய்ச்சலால் இறந்துவிடுகிறார். இது யோசுவாவை அழிக்கிறது. எல்லாம் போலியானது என்று அவர் தாமஸ் முன் ஒப்புக்கொள்கிறார். எண்ட்கேமாக ஜோசுவா மேத்யூஸ் மூலம் உண்மையை விளம்பரப்படுத்த முயற்சிக்கிறார். சாலமன் மேத்யூஸைக் கொன்றான், ஆனாலும், யோசுவா கொடுத்த வீடியோவை ஒளிபரப்ப மேத்யூஸ் நிர்வகிக்கிறார். உண்மை விளம்பரப்படுத்தப்பட்டு, யோசுவா தனது மன ஆரோக்கியம் காரணமாக அவர் செய்த குற்றங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வீடியோ ஒளிபரப்பப்படும்போது பக்கவாதம் காரணமாக அவராச்சன் இறந்து விடுகிறார். தன்னை ஏமாற்றியதற்காக பழிவாங்குவதற்காக தாமஸ் சோலோமனையும் ஐசக்கையும் கொன்றுவிடுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Trance_(2020_film)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்து முடிந்தேன், ரதி சொன்னது மாதிரி நம் ஆட்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அல்லுலோய கூட்டம்

முழுப்படத்தையும் பார்க்க 

https://einthusan.tv/movie/watch/626r/?lang=malayalam

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா? மனிதனா?: முகநூல் கொண்டாடும் ‘ட்ரான்ஸ்’!

43.jpg

கிறிஸ்தவ மதத்திற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்று கூறி பல்வேறு விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட மலையாள திரைப்படம் ‘ட்ரான்ஸ்’(TRANCE). இந்தத் திரைப்படம் தமிழ் முகநூல் வாசிகள் இடையே கவனமும், வரவேற்பும் பெற்றுள்ளது. அப்படி என்ன இருக்கிறது அந்தத் திரைப்படத்தில்?

ஒரு விதமான மெய்மறந்த நிலை அதாவது தன்னை சுற்றி நடக்கும் எதிலும் கவனம் செலுத்தாத நிலையை ‘ட்ரான்ஸ்’ என்பார்கள். பள்ளிப்பருவத்திலேயே தாயின் தற்கொலையால் தனித்து விடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பியுடன் கன்னியாகுமரியில் வாழ்ந்து வருகிறார் விஜு பிரசாத்(ஃபகத் ஃபாசில்). வாழ்க்கை முழுவதும் துயரம் நிறைந்ததாக இருந்தும் கூட தினமும் கண்ணாடி முன் நின்று “Today my life will be eventful, fruitful, wonderful, beautiful and successful” என்று தனக்குத் தானே நம்பிக்கை ஊட்டும் அவர், அந்தத் தன்னம்பிக்கையை பிறருக்கும் ஊட்டியளிக்கும் மோடிவேஷனல் ஸ்பீக்கராகப் பணியாற்றி வருகிறார்.

கடுமையான மன அழுத்தத்தால் தம்பியும் தற்கொலை செய்து கொள்ள விஜு தனித்து விடப்படுகிறார். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் எதற்கு என்றே தெரியாமல் மும்பைக்கு செல்கிறார். அவர், அங்கும் நிம்மதியும், தூக்கமும் இன்றி அலையும் அவருக்கு ஒரு வேலை கிடைக்கிறது. மோடிவேஷனல் ஸ்பீக்கராக விரும்பும் அவர் பிரார்த்தனையால் அதிசயங்கள் நிகழச்செய்யும் போலி பாஸ்டராக மாற்றப்படுகிறார். மக்களின் மத நம்பிக்கையை பணம் சம்பாதிக்கும் வழியாகப் பயன்படுத்தும் கெளதம் மேனனும், செம்பன் ஜோஸும் பயிற்சியும், பணமும் அளித்து பாஸ்டர் ஜோஷுவா கால்டனாக, விஜு பிரசாத்தை மாற்றுகிறார்.

43a.jpg

விஜு, தனது பேச்சுத் திறமையுடன் மதத்தைப் பிணைத்து மக்கள் மனதில் இடம் பெறுகிறார். மதம் என்னும் போதையை மக்களுக்கு ஊட்டி அதன்வழி பெரும் கோடீஸ்வரர்களாக அவர்கள் மாறுகிறார்கள். பெயரும் புகழும் கிடைக்க ஒரு கட்டத்தில் தன்னை உருவாக்கியவர்கள் மீதே விஜு அதிகாரம் செலுத்தத் தொடங்குகிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது, அவரது போலித்தனம் வெளியே தெரிந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும் கேரளா மாதிரியான ஒரு மண்ணில் மதத்தையும், மத போதகர்களையும் விமர்சிக்கும் விதமான ஒரு படைப்பை தைரியமாக திரையில் கொண்டு வந்ததற்காகவே இந்தப்படம் அத்தனை கவனம் ஈர்த்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ மதத்தை கேள்வி கேட்பதாக இல்லாமல், மதத்தை வைத்து சம்பாதிப்பவர்களை மட்டும் தான் ட்ரான்ஸ் தோலுரிக்கிறது. மதத்தையும், கடவுளையும் கருவிகளாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்களுக்கு எதிரான துணிச்சலான படைப்பாக ட்ரான்ஸ் பாராட்டுகளைப் பெறுகிறது. ‘மனிதனை மனிதன் தான் காப்பாற்றுவான்’என்ற கருத்திற்கு வலு சேர்ப்பதாக இந்தப்படம் உள்ளது. ஃபகத் ஃபாசிலில் துவங்கி கெளதம் மேனன், நஸ்ரியா, வினாயகன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

கதை, திரைக்கதை மட்டுமின்றி மயக்கநிலைக்குக் கொண்டு செல்லும் வித்தியாசமான இசை, கலர் கிரேடிங் போன்றவைகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். வலிமையான கருத்துக்கள் மூலமாகவும், வித்தியாசமான கதை அம்சத்தாலும் பொதுத் தளத்தில் பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்த மலையாள சினிமாவில் முக்கிய படைப்பாக ட்ரான்ஸும் இடம்பெறுகிறது.

43b.jpg

மலையாள திரை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்’ போன்ற திரைப்படங்களின் இயக்குநரும், தென்னிந்தியாவைத் திரும்பிப்பார்க்க வைத்த ‘பெங்களூர் டேய்ஸ்’, ‘பிரேமம்’ போன்ற படங்களின் தயாரிப்பாளருமான அன்வர் ரஷீத், ஃபகத் பாசிலுடன் கைகோர்க்கிறார் என்றதுமே ‘ட்ரான்ஸ்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தாங்கள் பார்த்து வியந்த இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தில் முக்கிய வேடத்தைக் கையாளுகிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது. இவை அனைத்திற்கும் மேல் வித்தியாசமான கதைக்களத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் ஃபகத், அவரது மனைவி நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை மேலும் பொறுமை இழக்கச் செய்து விட்டது.

ஆனால், இத்தனை சிறப்புகள் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றும் ட்ரான்ஸ் படத்தைப் பார்க்க ரசிகர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2019 மார்ச் மாதம் முதல் கடந்த காதலர் தினம் வரை பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளிவருவதில் பல சிக்கல்களை சந்தித்தது. படத்தின் 17 நிமிட காட்சிகளை நீக்கக் கூறி தணிக்கைக் குழு அறிவுறுத்தியும், அதற்கு இணங்காத அன்வர் ரஷீத் மும்பை ரிவைஸிங் கமிட்டியில் படத்தைக் காண்பித்து தான் விரும்பியபடியே முழு வடிவில் தன் படைப்பை வெளியிட்டார். பிப்ரவரி 20ஆம் தேதி கேரளாவில் வெளியான திரைப்படம், பிப்ரவரி 28 அன்று பிற மாநிலங்களிலும் வெளியிடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் அமேசான் பிரைம் தளத்தில் படம் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களும் ட்ரான்ஸைக் கொண்டாடத் தொடங்கினர். குறிப்பாக முற்போக்கு சிந்தனை கொண்ட மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மதத்தின் பெயரில் நடக்கும் வியாபாரத்தைப் பற்றி துணிச்சலாகப் பேசிய விதத்திலும், முன்னணி நடிகர்களை வைத்து சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டதாலும் ட்ரான்ஸ் தனித்துத் தெரிகிறது. அதனால் தான் குறைகள் இருந்தும் ட்ரான்ஸ் கொண்டாடப்படுகிறது.

தயாரிப்பு, இயக்கம்: அன்வர் ரஷீத்

நடிப்பு: ஃபகத் பாசில், நஸ்ரியா, கெளதம் மேனன், வினாயகன்

திரைக்கதை: வின்சன்ட் வடக்கன்

ஒளிப்பதிவு: அமல் நீரத்

இசை: ஜாக்சன் விஜயன்

https://minnambalam.com/entertainment/2020/04/07/43/trance-malayalam-movie-review

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நிழலி said:

Netflix அல்லது Prime இல் வெளியாகியுள்ளதா?

prime ல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நந்தன் said:

prime ல் இருக்கு

பார்த்தவர்கள் அல்லுலோயா பக்கமே தலை வைத்து படுக்கமாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

பார்த்தவர்கள் அல்லுலோயா பக்கமே தலை வைத்து படுக்கமாட்டினம் .

படம் பார்க்க நேர்ந்தாலும் பொருள் விளங்க கூடிய அறிவும் இருந்தால்தான் 
அல்லேலூயா பக்கம் போக மாட்டார்கள் என்று சொல்ல முடியும் 

"ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா 
சுத்தியானந்தா என்று ஒரு கூட்டம் அலைமோதுகிறது என்றால் 
இனொரு கூட்டம்  திருப்பதியில் இருப்பவருக்குத்தான் சக்தி உண்டு 
சபரிமலை போனால்தான் எல்லாம் சரிவரும் என்று உழைத்த காசையும் அழித்து கொண்டு 
இன்னொரு கூட்டம் திரிகிறது.

"ட்ரான்ஸ்" இது வேறு வேறு வடிவில் எல்லா  மனிதரையும் ஆட்க்கொள்கிறது 
மதுவுக்கு அடிமையாதல்   மாதுவுக்கு அடிமையாதல் பணத்துக்கு அடிமையாதல் 
போதைவஸ்துக்கு அடிமையாதல் எல்லாம் ஒரு ட்ரான்ஸ் நிலையில்தான் சாத்தியமாகிறது 
மதத்துக்கு அடிமையாலும்  அவ்வாறுதான் இதை சைக்கோலஜி படித்தால் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

உண்மையிலேயே கடவுள் என்று ஒருவன் இருந்தால் கூட 
இப்போதிருக்கும் எந்த மதமும் உங்களை கடவுளிடம் சேர்க்காது மாறாக உங்கள் உழைப்பை 
மத போதகர் அட்ச்சகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவ்வளவுதான் ... கடவுள் ஒருவன் இருந்தால் 
நீங்கள் கடவுளின் படைப்பு என்றால் ....... நீங்கள் கடவுளின் ஒரு பாதிதான். உங்களை விட புனிதமான ஒன்று 
உங்களை கடவுளிடம் சேர்க்க கூடிய வேறு எதுவும் இந்த உலகில் இல்லை. இதை தமிழர்கள் 3000 4000 வருடம் முன்பு சொல்லி இருக்கிறார்கள். 

அல்லேலூயா பக்கம் போகாத எல்லோரும் அறிவாளிகள் இல்லை 
உண்மையை பார்க்கப்போனால் அல்லேலூயா போய் மகிழ்ச்சியாக ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்  முன்பு ரவுடியாக  போதைவஸ்து மது அடிமையாக இருந்த பலர் அல்லேலூயா சென்று 
திருந்தி அடிமைநிலையில் இருந்து மீண்டு வாழ்கிறார்கள். அவர்கள் இன்னொரு ட்ரான்ஸ் நிலைக்கு ட்ரான்ஸ்பெர்  ஆகுகிறார்கள் என்றும் கொள்ளலாம். 

அல்லேலூயா போகாதவனும் இன்னொரு அலுக்கோசு மதத்துக்குத்தான் போக போகிறான் 
அல்லது ஏற்கனவே அங்கேயே இருந்து கொள்கிறான்.
ட்ரான்ஸ் நிலையில் இருந்து மனிதனை மீட்பது என்பது மிகவும் கடினமான ஒன்று 
புத்தர் நிலைக்கு நான் நீங்கள் கூட போக போவதில்லை ....... வாசிக்க நன்றாக இருக்கிறது 
நல்ல புத்தகம் என்றுவிட்டு கடந்துபோகிறோம் அவ்வளவுதான். 
இறுதி மரணம் என்பது உறுதியாக இருப்பதால் இந்த ட்ரான்ஸ் நிலைக்கு மனிதரை தள்ளுவது மிகவும் எளிது.
என்னுடைய உங்களுடைய பாட்டன் பூட்டிக்கு இருந்த சுதந்திர வாழ்க்கை 
எனக்கும் உங்களுக்கும் அமையப்போவதில்லை ......நாங்கள் முதலாளிகளின் அடிமையாக கிடக்கிறோம் 
அனால் வசதி பணம் என்று ஒரு மாய ட்ரான்ஸ் நிலைக்கு சென்று முதலாளித்துவ கடனாளியாகி உழைத்து கட்டிக்கொண்டு  இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

இனிமேல் பெருமாள் இந்தப் பக்கமே(Trance) பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2020 at 12:22, ரதி said:

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

இணைப்புக்கு நன்றி ரதியாக்க இதை பற்றி ஏற்கனவே எங்கோ வாசித்தேன் 
இங்கு யாழில் என்றுதான் ஞாபகம் பின்பு மறந்துவிட்டேன்.

வீட்டில் அடைபட்டு இருப்பதால் கொஞ்ச படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது 
நல்ல படங்கள் பார்க்க வேண்டும் ......நான் பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பதில்லை 
இப்படி யாராவது இணைத்ததால் நல்ல படம் என்றால் பார்ப்பேன். 

மலையாள படம் வைரஸ் நல்ல படம் பாருங்கள் 
நிப்பா வைரஸ் பரவலை பற்றிய உண்மை கதை 

"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"
நண்பர் ஒருவர் சொல்லி நேற்று பார்த்தேன் வித்தியாசமான திரைக்கதை 
நெட் பிலீக்ஸ் இல் உண்டு 

நண்பர்களே நீங்களும் ஏதும் நல்ல படம் டாக்குமெண்டரி பார்த்திருந்தால் அறிய தாருங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

அல்லுலோயா கூட்டத்தை துகில் உரித்து காட்டும் நல்ல மலையாள படம் , ஆனால் வாணிப ரீதியாக எதிர் பார்த்தளவு வெற்றி பெறவில்லை.
 அல்லுலோயா கூட்டம் மாத்திரம் ஊரை ஏமாற்ர  மாதிரி இங்கை சிலர் குத்தி முறியினம்.
இவர்களுக்கும், காவிக் கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இணைப்புக்கு நன்றி ரதியாக்க இதை பற்றி ஏற்கனவே எங்கோ வாசித்தேன் 
இங்கு யாழில் என்றுதான் ஞாபகம் பின்பு மறந்துவிட்டேன்.

வீட்டில் அடைபட்டு இருப்பதால் கொஞ்ச படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது 
நல்ல படங்கள் பார்க்க வேண்டும் ......நான் பொதுவாக சினிமா படங்கள் பார்ப்பதில்லை 
இப்படி யாராவது இணைத்ததால் நல்ல படம் என்றால் பார்ப்பேன். 

மலையாள படம் வைரஸ் நல்ல படம் பாருங்கள் 
நிப்பா வைரஸ் பரவலை பற்றிய உண்மை கதை 

"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்"
நண்பர் ஒருவர் சொல்லி நேற்று பார்த்தேன் வித்தியாசமான திரைக்கதை 
நெட் பிலீக்ஸ் இல் உண்டு 

நண்பர்களே நீங்களும் ஏதும் நல்ல படம் டாக்குமெண்டரி பார்த்திருந்தால் அறிய தாருங்கள்.  

வைரஸ் &கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இரண்டும் நல்ல படங்கள். 

உன் சமையல் அறையில் நல்ல படம் (  எனக்கு மலையாள Salt N Pepper பிடித்திருச்சு)

  • கருத்துக்கள உறவுகள்

பகத் பாசிலை தமிழ் சினிமா இன்னமும் சரியாக உபயோகப்படுத்தவில்லை. நடிப்புச்சாத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இனிமேல் பெருமாள் இந்தப் பக்கமே(Trance) பக்கமே தலைவைத்து படுக்கமாட்டார். 😂

மிக சிறந்தவரே உங்கள் கருத்துக்களை பலவிடங்களில்  பார்ப்பது உண்டு மிக சிறப்பாகா கருத்தாடுவதில் வல்லவர் முதன் முதலாய் உங்களிடம் இருந்து தனிமனித தாக்குதல் அதுவும் என்னை நோக்கி அப்படியென்றால் மிகுதி விளங்குபவர்களுக்கு விளங்கும் .🙂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

மிக சிறந்தவரே உங்கள் கருத்துக்களை பலவிடங்களில்  பார்ப்பது உண்டு மிக சிறப்பாகா கருத்தாடுவதில் வல்லவர் முதன் முதலாய் உங்களிடம் இருந்து தனிமனித தாக்குதல் அதுவும் என்னை நோக்கி அப்படியென்றால் மிகுதி விளங்குபவர்களுக்கு விளங்கும் .🙂

மன்னிக்க வேண்டும் பெருமாள்.

இதனை நகைச்சுவையாகவே குறிப்பிட்டிருந்தேன். குரையிருப்பின் பொறுத்தருள்க.👏

Edited by Kapithan
பொருள் மயக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

வைரஸ் &கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், இரண்டும் நல்ல படங்கள். 

உன் சமையல் அறையில் நல்ல படம் (  எனக்கு மலையாள Salt N Pepper பிடித்திருச்சு)

நன்றி உடையார் 
   Salt & Pepper   படத்தில் இருக்கும்பாடு என்று எனக்கு மிகவும் பிடித்த பாட்டு விரும்பி கேட்பதுண்டு 
அது சில வருடங்கள் ஆகிறது. நல்ல படம் என்னால் பார்க்கலாம். 

உடையார் என்ன மலையாள பக்கம் அதிகமாக மினெக்கெடுகிறீர்கள்?
கலை ரசிப்பு தான் காரணமா? 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

மன்னிக்க வேண்டும் பெருமாள்.

இதனை நகைச்சுவையாகவே குறிப்பிட்டிருந்தேன். குரையிருப்பின் பொறுத்தருள்க.👏

மிகசிறந்தவரே இப்படியான திரிகளை விட்டு நீங்கள் எழுதும்  கருத்துக்கள் சிறப்பானவை இனி இந்த திரியில் உங்களுடன் தர்க்கிக்க விரும்பவில்லை .மன்னிக்கவும் மனதை புண் படுத்தியத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

"ட்ரான்ஸ்" இந்த நிலையிலும் இல்லாத ஒரு விசர் நிலையில்தான் சாய்பாபா  நித்தியானந்தா 
சுத்தியானந்தா

மருதர், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி எம் குருநாதர் நித்தியானந்தாவை நிந்திப்பீர்கள்? கைலாசா வந்தீர்களா? நித்தியானந்தம் பெற்றீர்களா? அல்லது சுவாமிகளின் சிஷ்யைகளிடம் யோகாசனம் பயின்றீர்களா?இவை எதுவுமே செய்தறியாமல் சுவாமிகளை நிந்திக்கலாமா? ஜெய் நித்தியானந்தம்!💞💃

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பெருமாள் said:

மிகசிறந்தவரே இப்படியான திரிகளை விட்டு நீங்கள் எழுதும்  கருத்துக்கள் சிறப்பானவை இனி இந்த திரியில் உங்களுடன் தர்க்கிக்க விரும்பவில்லை .மன்னிக்கவும் மனதை புண் படுத்தியத்துக்கு .

நிச்சயமாக நீங்கள் என்னைப் புண்படுத்தவில்லை. ஆதலால் மன்னிப்புகேட்பதும்  தேவையற்றது. 👍

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Maruthankerny said:

நன்றி உடையார் 
   Salt & Pepper   படத்தில் இருக்கும்பாடு என்று எனக்கு மிகவும் பிடித்த பாட்டு விரும்பி கேட்பதுண்டு 
அது சில வருடங்கள் ஆகிறது. நல்ல படம் என்னால் பார்க்கலாம். 

உடையார் என்ன மலையாள பக்கம் அதிகமாக மினெக்கெடுகிறீர்கள்?
கலை ரசிப்பு தான் காரணமா? 

கலையை மட்டும்தான் ரசிக்கின்றேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

மருதர், உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி எம் குருநாதர் நித்தியானந்தாவை நிந்திப்பீர்கள்? கைலாசா வந்தீர்களா? நித்தியானந்தம் பெற்றீர்களா? அல்லது சுவாமிகளின் சிஷ்யைகளிடம் யோகாசனம் பயின்றீர்களா?இவை எதுவுமே செய்தறியாமல் சுவாமிகளை நிந்திக்கலாமா? ஜெய் நித்தியானந்தம்!💞💃

இவற்றை மேலோட்ட்மாக நான் எழுதுகிறேனே தவிர ...
தனிப்பட உண்மையில் எனக்கு நித்தியானந்தா  சாயிபாபா அல்லேலூயா ஜெஹோவா போன்றவற்றில் 
மிகுந்த ஈடுபாடு உண்டு. இவற்றில் நாம் சொந்த அறிவை இழந்து முட்டல்களாக ஆகுவதுதான் தப்பு 
எங்களை போன்ற சாதாரண மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி நாம்தான் அவர்களை மேலும் மேலும் 
தப்பு செய்ய தூண்டுகிறோம். ஆயிரகணக்கான மூடர்கள் அவர்களை கடவுள் என்று நம்பும்போது ... ஏதாவது 
பிராட்டுதனம் செய்து கடவுளை போல நடிக்க வேண்டிய தேவை அவர்களுக்கும் வருகிறது. 

திருமணம் ஆகி பிள்ளைகளுடன் இருக்கும் 40-50 வயது பெண்களுக்கு எல்லாம் 
நித்தியானந்தாவின் மடம் அல்லேலூயா போன்றவை மிகுந்த ஆறுதல் கொடுக்கும் என்றுதான் 
நான் எண்ணுகிறேன். இந்தவயதில் அவர்களுக்கு நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும் தவிர உடல் ரீதியாக பல 
மாறுதல்கள் இருக்கும் ........ அந்த நேரத்தில் இப்படியான இடங்களுக்கு சென்று பஜனைகள் பாடி 
அமைதியாக இருந்துவிட்டு வந்தால் மன ரீதியாகவும் உடல் ரீதியாவும் ஒரு அமைதி கிடைக்கும் என்றுதான் நம்புகிறேன். 

முன்பு 99-2000 ஆண்டில் ஒரு இரண்டு வருடம் நான் மாமிசம் சாப்பிடுவது மது அருந்துவது எல்லாம் நிறுத்திவிட்டு பகவத்கீதை வாசித்துக்கொண்டு இருந்தேன் எனது வீட்டுக்கு அருகில் ஒரு ஹரே கிருஸ்ணா கோவில் இருந்தது  அங்கு அடிக்கடி செல்வேன் பஜனை பாடுவேன் மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும் 
உடலும் மிகவும் சுறுசுறுப்பு பெறுவதை உணர்ந்தேன் .... காமம் பற்றிய எண்ணங்கள் சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக  குறைய தொடங்கும் அது பெண்களுடன் நட்ப்பு ரீதியான உறவை பேண வழிவகுக்கும். 
பின்பு போதிய வருமானம் இல்லை என்று அந்த கோவிலை மூடி விட்டார்கள் ... பின்பு நானும் கொஞ்சம் கொஞ்சமாக  முருங்கை மரத்தில் ஏற தொடங்கிவிட்ட்டேன். அப்படி ஜெகோவாவின் சாட்ச்சிகளுடனும் சில காலம் கழித்து இருக்கிறேன்  என்னை ஜானஸ்தானம் எடுக்க தூண்டுவார்கள் ... நான் ஜேசுவின் பிள்ளை பிறக்கும்  முன்பே நான் ஜானஸ்தானம் எடுத்துவிட்ட்டேன் என்று கூறுவேன் .. அவர்கள் உன்னுடைய போக்கு சந்தேகமாக இருக்கிறது என்பார்கள். நான் உங்களுடைய போக்குதான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்பேன்  உங்களுக்கு கத்தர் மீது போதிய நம்பிக்கை இல்லை அவர்தான் எங்களை எல்லாம் படைத்தார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருப்பதால்தான்  இப்படியான சடங்குகளில் அதிக கவனம் செலுத்த்துகிறீர்கள்  ......நான் ஜெசுவிடம் கவனம் செலுத்துவதால் இவை எனக்கு தேவை இல்லை என்பேன். 

பாடுவதும் ஆடுவதும் மனதுக்கு மிகவும் தேவையான ஒன்று 
எங்களுடைய பெண்கள் பாவம் இது எதுவுமே இல்லாமல் போலி காலச்சாரம் எனும் 
மாயைக்குள் கட்டுண்டு ஆண்களுக்கும்  பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதிலேயே முழு ஆயுளையும் 
கழிக்கிறார்கள் ..... ஆதலால் உண்மையிலே எமது பெண்கள் இப்படி நித்தியானந்தா ஜக்கி போன்றவர்களின் மடங்களுக்கு சென்று  ஆறுதலடைய வேண்டு அவர்கள் அவர்களாக ... அவர்களுக்கு என்றும் கொஞ்சம் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

இங்கு அமெரிக்காவில் அழிந்துபோன ஓசோவின் ஆச்சிரமங்கள் 
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட தொடங்குகிறது  
போர்லாண்டிலும்   டெக்ஸாஸில்  சொல்ல கூடிய அளவில் ஓரளவு இயங்குகிறது 
அவர்களுடன் தொடர்பை பேணிக்கொண்டு இருக்கிறேன் .. இந்த கோடை விடுமுறைக்கு 
போர்ட்லான்ட் செல்வது என்று இருந்தேன் இந்த கொரோனா வைரஸால் போக முடியாது என்று எண்ணுகிறேன் 
நீங்களும் தேடி பாருங்கள் ஒரு வித்தியாசமான பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2020 at 12:22, ரதி said:

எல்லாரும் இந்த படத்தை பாருங்கள் என்று சொன்னதால் இன்று இருந்து இப் படத்தை பார்த்தேன் ...இன்றைய கால கட்டத்தில் வட,கிழக்கில் உள்ள தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ...இப்ப எல்லோருக்கும் நேரம் இருக்கும்....பொறுமையாய் இருந்து இப் படத்தை  பாருங்கள்.

பகத் பாசில் இந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்...எப்படி இப்படி ஒரு படத்தை சென்சார் வெளியில் விட்டார்களோ தெரியவில்லை ...படத்தை இயக்கியது ஒரு முஸ்லீம்...நம்மட கெளதம்மேனனும் படத்தில் இருக்கிறார் .

அநேகமாய் இப்படியான படங்கள் வந்தால் அபராஜிதன் வந்து எழுதுவார் ...ஆளைக் காணவில்லை ...EINTHUSANல் பார்க்கலாம்  See the source image

இந்த படத்தை பார்த்து முடித்தேன் 
இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும் 

இங்கு நீங்கள் குறிப்பிடுவதுபோல அல்லேலூயாவை அவர் சாடவில்லை 
படத்தின் பெயருடன்தான் தனது திரைக்கதையை நகர்த்துகிறார் 

"ட்ரான்ஸ்" நிலை என்பதுதான் மனிதனை வாழவும் வீழவும் வைக்கிறது 
உலகில் உள்ள மத அடிமைத்தனம்  பண அடிமைத்தனம்  ட்ராக்ஸ் அடிமைத்தனம் என்று கொண்டு வந்து  
பெண் அடிமைத்தனதில் கொண்டுவந்து கதையை முடிக்கிறார்.
இது ஒரு சைக்கோலஜி ரீதியான கருவை கொண்ட கதை. மனிதன் வாழ்க்கையில் ஓரிடத்தில் வீழ நேர்ந்தால் 
இவ்வாறான ஒரு ட்ரான்ஸ் நிலைதான் அவனுக்கு கூடுதலாக மீண்டும் எழுந்துநிற்க கை கொடுக்கிறது.
அதுவே வாழ்க்கையின் மொத்தமும் வீழ வழிவகுப்பதை "தன்னிலை மறந்த நிலை" உணர்விப்பதில்லை 

இங்கு பலருக்கும் இருக்கும் ஆதங்கம்போல இந்த படத்தைப்போல 
அல்லலூயாவின் உண்மையான பித்ததாலாட்ட்ங்களை கருவாக கொண்டு 
ஒரு சினிமா படத்தை உருவாக்கி மக்களை விழிப்படைய செய்யமுடியும் 
இன்னொருவர் செய்வார் என்று பார்த்துக்கொண்டு இருக்காமல் .. வெளிநாடுகளில் இருக்கும் 
கோவில் கதவுகளை தட்டியே அதற்க்கான செலவை பெற்றுக்கொண்டு தமிழகத்தில் இருக்கும் ஒரு சிறப்பான  
இயக்குனரை நாடி அதை செய்யமுடியும். குறைந்தபட்ஷம் இது ஒரு ஏமாற்று வேலை என்பதையாவது 
மக்களுக்கு புரியவைக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிற்பிகளும் ஓவியர்களும் பெண்ணை நிர்வாணமாகவே சிலையும் ஓவியமும் வடிக்கிறார்கள்?
அடையாளங்களை அகற்றினால்தான் ஒரு "பெண்"ணை காணமுடியும் 

அதுபோல தன்னிலை மறந்தால் .........

  • கருத்துக்கள உறவுகள்

டவுன் லோட் பண்ணியாச்சு இனிதான் பார்க்கணும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.