Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம் 

japan76-1586450820.jpg

ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது.

இடத்தை மாற்றுங்கள்

யப்பான் தனது பொருளாதார ஊக்க பேக்கேஜின் ஒரு பகுதியாக, தங்கள் உற்பத்தியாளர்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்றியமைக்க 2.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில், 220 பில்லியன் யென் (2 பில்லியன் டாலர்), உற்பத்தியை யப்பானுக்கு மாற்றும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியை மற்ற நாடுகளுக்கு நகர்த்த விரும்புவோருக்கு 23.5 பில்லியன் யென் மதிப்பிலான ஊக்கத் தொகையையும் அளிக்க உள்ளார்கள்.

லாக்டவுன்

பொதுவாக சீனா, யப்பானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி, ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால், சீனா லாக் டவுனை அமல்படுத்தியது. எனவே, பிப்ரவரியில் சீனாவிலிருந்து இறக்குமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிட்டது. கார் உற்பத்தி யப்பானிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதார வல்லுனரான ஷினிச்சி செக்கி, ஜப்பானிய நிறுவனங்கள் சீனாவை உற்பத்தி தளமாக நம்புவதை குறைப்பதாக ஏற்கனவே பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாகவும், வரும் நாட்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

சீன உள்நாட்டு சந்தைக்கு சப்ளை செய்வதற்காக உற்பத்தி செய்யும் கார் கம்பெனிகள், போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து சீனாவிலேயே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விருப்பம்

பிப்ரவரி மாதம் ரோக்கியோ ஷோகோ ரிசர்ச் லிமிடெட் ஆய்வு செய்த 2,600 நிறுவனங்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானவை, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் சீனாவைத் தவிர வேறு இடங்களுக்கு பரவலாக ஆலைகளை இடம் பெயரச் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தன. இப்போது அந்த விருப்பம் இன்னும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/international/japan-will-pay-its-firms-to-leave-china-382219.html

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடரும் ஜப்பான் முதலாவதாக வந்துள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

வருமுன் காக்க பல  நாடுகள் யோசித்த வண்ணம் உள்ள போது யப்பான் முதலடியை வைத்துள்ளது.

சீனா என்ன பதிலடியை வைத்துள்ளது என பார்க்கலாம்.

1. எங்கு போவது ? சீனாவின் உற்பத்தி பலத்தை வேறு எந்த ஒரு தனி நாடாலும் மாற்ற முடியாது

2. பல சிறிய நாடுகளுக்கு மாற்றினாலும், மேற்குலகம் தனக்குள் ஒற்றுமை இல்லாமலும், இலாபத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவதனாலும், சீனாவை தள்ள முடியாது 

3. மேற்குலகம், தன் நாட்டிற்குள் சில மருத்துவ மற்றும் அத்திவாசிய பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்

சீனா.. உலகத்துக்கு கொடுத்த, மனித உயிரிழப்பும்...
பொருளாதார இழப்பும்... ஈடு செய்ய முடியாதவை.

சீனாவுக்கு... யப்பான், கொடுத்த அதிர்ச்சி  வைத்தியத்தைப் போல...
மற்ற நாடுகளும், தமக்குரிய உச்ச  வலுவை பயன் படுத்தினால்... தான்,
சீனாவுக்கும்... மற்றைய பலம் மிக்க நாடுகளுக்கும் பயம் வரும்.
இல்லையேல்.... கொரோனாவைப் போன்ற, 
பல இன்னல்களை... மனிதகுலம் சந்திக்க நேரிடும்.

பிள்ளையார் சுழி போட்டது ஜப்பான்: என்ன செய்ய போகிறது இந்தியா?

கொரோனா பிரச்னையால் உலகமே துவண்டு போய் கவிழ்ந்து கிடக்கிறது. நித்தம் நித்தம் ஒரு பொருளாதார பிரச்சினை உருவாகி கொண்டிருக்க, இப்போது சீனாவுக்கு எதிராகவே சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.

கொரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டி இருக்கிறது. நியூயார்க் மும்பை, பெய்ஜிங் உள்பட பல்வேறு பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் இதை சாதகமாக பயன்படுத்தி சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள், உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு நிறுவனங்களின் பங்குகளை அதிகம் வாங்கி குவித்தன. இதனால் அந்த நிறுவனங்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீனாவுக்கு எதிராக சில காய்களை நகர்த்த துவங்கியிருக்கிறது ஜப்பான். உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா விளங்குகிறது உலகின் அதிகமான உணவு பொருட்களை அதுதான் உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த ஆண்டு சீனா கொரோனா வைரஸ்களை ஏற்றுமதி செய்து விட்டது என்று உலக நாடுகள் சந்தேகிக்கின்றன. இந்த சந்தேகத்தின் அடிப்படையில் முன்பே சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறிவிட்டன. சீனா செய்த வேலைக்கு பதிலடி தர வேண்டும் என்றும் ஒரு கருத்து ஏற்பட்டுள்ளது. சமூக விலகலை கடைப்பிடிப்பது போல் சீனாவிடம் பொருளாதார விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்நாடுகள் நினைக்கின்றன. சீனாவில் உள்ள பல வெளிநாட்டு நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளன. இனிமேல் சீனாவை நம்பி இருக்கக் கூடாது என்று அவை நினைக்கின்றன.

சீனாவுக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் முக்கிய நாடுகள் அமெரிக்காவும் ஜப்பானும். ஏனென்றால் வைரஸ் பிரச்சினையால் இந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.சீனாவை விட்டு பெரிய நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஜப்பான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் அதனால் இந்தியாவும் வியட்நாமும் பெரிய அளவில் பலனடையும். பெரிய நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கு நிவாரண நிதி தருவதற்காக, சுமார் 2.2 பில்லியன் டாலர்களை ஜப்பான் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.இது ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம். சீனாவை விட்டு வெளியேறி தங்கள் பொருட்களை தயாரிக்க நிறுவனங்களுக்கு 215 மில்லியன் டாலர்களையும் ஜப்பான் உள்ளதாக தெரிகிறது. அதாவது இதிலிருந்து உலகுக்கு ஜப்பான் தெரிவிக்கும் செய்தி சீனாவை விட்டு வெளியேறுங்கள் என்பது மட்டுமே.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2519361

வைரஸ் பிரச்சினையின் போது பல சீன நிறுவனங்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் பல பொருட்களின் விலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மற்ற நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சீனாவில் உற்பத்தி குறைந்தால் அதனால் பலனடையும் முக்கிய நாடு இந்தியா. ஏனென்றால் இந்தியாவில் ஏற்கனவே உற்பத்திக்கான கட்டமைப்பு மனித சக்தி கிடைக்கிறது. எனவே நிறைய பொருள்களை இந்தியாவால் ஏற்றுமதி செய்ய முடியும்.அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். இதனால் உற்பத்தி பொருள்களின் விலையும் குறையும்.எனவே இந்த வழிகளை தான் உலக நாடுகள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால் விலாங்குமீன் சிறிலங்காவிற்கு ஏதும் பாதிப்புகள் இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இதனால் விலாங்குமீன் சிறிலங்காவிற்கு ஏதும் பாதிப்புகள் இல்லைத்தானே?

மழையில உப்பு வித்தாலும் சரி  காத்தில மா வித்தாலும் சரி சேதாரம் இல்லாத அறுவடை மட்டும்தான்........!  🤔

43 minutes ago, ampanai said:

அடுத்து வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்த நாடுகள் எல்லாவற்றிலுமே குறைவான ஊதியத்திற்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். இதனால் உற்பத்தி பொருள்களின் விலையும் குறையும்.எனவே இந்த வழிகளை தான் உலக நாடுகள் இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

மேலே குறிப்பிட்ட நாடுகளில் ஏற்கனவே உற்பத்திகள் உண்டு. ஆனால், இங்கும் சீனாவை போன்று 'உண்ணும்' பழக்கங்கள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2020 at 13:55, தமிழ் சிறி said:

1) சீனா.. உலகத்துக்கு கொடுத்த, மனித உயிரிழப்பும்...
பொருளாதார இழப்பும்... ஈடு செய்ய முடியாதவை.

2) சீனாவுக்கு... யப்பான், கொடுத்த அதிர்ச்சி  வைத்தியத்தைப் போல...
மற்ற நாடுகளும், தமக்குரிய உச்ச  வலுவை பயன் படுத்தினால்... தான்,
சீனாவுக்கும்... மற்றைய பலம் மிக்க நாடுகளுக்கும் பயம் வரும்.

3) இல்லையேல்.... கொரோனாவைப் போன்ற, 
பல இன்னல்களை... மனிதகுலம் சந்திக்க நேரிடும்.

1) எந்த ஆதாரத்தை வைத்து சீனா மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அல்லது சீனா மட்டும்தான் உலகத்தில் அழிவை உண்டுபண்ணியதா ? அல்லது இதற்கு முன்னர் அழிவே வரவில்லையா ? ☹️

2) தனியே தினமலரில் வந்த ஆக்கத்தை மட்டும் வைத்து கருத்துச் சொல்கிறீர்களோ ?சீனாவுக்கு முதலீடுகளும் தொழில் நுட்பங்களும் போவதற்குக் காரணம் மேற்குலகின் இரக்க குணமா ? இல்லவேயில்லை. அவர்களின் பேராசையே காரணம்.  சீனாவின் அதி குறைந்த மலிவான உழைப்பாளர்களே Cheep labour காரணம். சீனாவை விட வேறெங்கிகிகும் மலிவான உழைப்பு கிடைக்குமென்றால் மூலதனமும் தொழில் நுட்பமும் அங்கே போகும். ஏனென்றால் முதளாளித்துவத்தின் அடிப்படைக் கட்டுமானம் இலாபத்திலேயே ஆரம்பிக்கிறது. அதுவும் இந்த முதலாளித்துவமும் Democracy யும் ஒன்றாக இருக்கும்வரை இந்த இலாபத்திற்கு முன்னுரிமை  என்கின்ற கோட்பாடு மாற்றமடைய வெகு காலம் எடுக்கும்.🙂

3) கொறோனாவுக்கு முன்னரும் மனித குலம் கொள்ளை நோய்களால் அழிவை சந்தித்திருக்கிறது. இப்பொது சந்திக்கிறது. இனிமேலும் சந்திக்கும். அந்த அழிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆரம்பித்திருக்கிறது. இனியும் ஆரம்பிக்கும். மனிதகுலம் அழிவைச் சந்தித்தே தீரும். இதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அது சீனாவில் இருந்துதான் வரவேண்டுமென்கின்ற கட்டாயமல்ல. 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை போல் விரைவாக மலிவாக வேறு இடங்களில் சொய்ய முடியாது, அவர்களின் மனித வலு அப்படி. வேறு இடங்களில் செய்ய வெளிக்கிட விலைகள் தான் கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

சீனாவை போல் விரைவாக மலிவாக வேறு இடங்களில் சொய்ய முடியாது, அவர்களின் மனித வலு அப்படி. வேறு இடங்களில் செய்ய வெளிக்கிட விலைகள் தான் கூடும்

உயிரைப் பாதுகாப்பதைவிட விலை மலிவைப் பாதுகாக்க முனைந்தால் உலகில் மனித இனமே இல்லாது அழிந்துவிடும்.   

சீனாவின் பலம் என்பது அதன் மக்கள் தொகை ஒன்றில் மட்டும் சார்ந்ததல்ல. வினைத்திறன் மிக்கதொரு தொலைதூர நோக்குள்ள அரச நிர்வாகம், தொழில்நுணுக்கமுள்ள நாட்டுப்பற்று மிக்க மக்கள் கூட்டம் அதன் தற்போதைய நிலைக்கு இவை முக்கிய காரணம்.

சீனா உலகின் பலமுள்ள நாடாகும் பாதையில் பலகாத தூரம் ஏற்கனவே சென்றுவிட்டது.

 

அப்பிள் இயக்குனர் இப்படி சீனா பற்றி சொல்கின்றார்.

https://www.inc.com/glenn-leibowitz/apple-ceo-tim-cook-this-is-number-1-reason-we-make-iphones-in-china-its-not-what-you-think.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானோ அல்லது வேறு யாரோ இப்படி தொழிற்றசாலைகளை வேறு இடத்திற்கு மற்ற உந்துவதற்காக பணம் கொடுப்பது இயற்கையான உலகமயமாதல்  வரலாற்று   பொருளாதார வட்டத்தையும் , அதன் சக்தியையும் மீறி தமது பொருளாதாரத்தினால் மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை சில வேளைகளில் அந்தந்த நாடுகளை பொருளாதாராப் படுகுழியில் தள்ளக் கூடியது.

அப்படி பார்த்தால், 1918 - 1919 இல்   நடந்த spanish flu (influenza) வில்,  உற்பத்தி மையம் மேற்கிலிருந்து, கிழக்கிற்கு மாறி இருக்க வேண்டும்.  

சீனா, இந்த மாற்றத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டே வந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். 2000 இல் wto சீனா இணைந்தாலும், 2005 இல் இதற்கான (அதாவது lower value production industry) ஐ தன்னிலும் குறைந்த விலையுள்ள நாடுகளிற்கு மாற்றுவது. 

ஆப்பிரிக்காவில் சீனாவின் முதலீடு, இந்த மாற்றத்திற்கான industrial base ஐ கட்டி எழுப்புவது.
   
2008 - 2009   நடந்த, பண நெருக்கடி பிருளாதா சரிவும், அதை மற்றோருக்கு financial discipline பற்றி போதித்த மேற்கு நாடுகளும், imf, world bank, europen bank, boe போன்றவை பணத்தை அச்சிட்டு கையாண்ட விதமும், சீனாவை இரவிரவாக சிந்த வைத்தது.    

சீன தனது பொருளாதாரத்தின் ஓர் பங்கை internal consumption economy ஆக மாற்றத்தை கொண்டு வந்தது 2008 இல் இருந்து. 

மேலும், production value chain இல், high value and advanced technological production நோக்கி தனது பொருளாதாரத்தையும் முடுக்கி விட்டுள்ளது.

இந்த production base நாடு விட்டு நாடு மாறும் போது, அநேகமானைவை சீனர்களே வேறு நாடுகளில் கூட தொழிற்சாலை அமைக்கிறார்கள். ஏனெனில், வேறு நாடுகளிடம், வளங்களோ, skill, டெக்னாலஜி, மற்றும் சிறப்புத்தேர்ச்சி இல்லை தொழிற்றசாலைகளை நடத்துவதற்கு. 

இந்த முறை (covid-19), சீனா இந்த மேற்கு நாடுகள் எதிர்பார்த்து, வேண்டி கேட்டும், QE (quantitative easing) செய்யவில்லை. மாறாக, பங்குகளை மலிவான விலையில் வாங்கி குவித்தது.  உண்மையில், யதார்த்தமான சந்தை பொருளாதாரத்தில் சீன தன்னை ஓர் சக்தியாக நிலை நிறுத்தி கொண்டது.

இது நீண்ட மற்றும் மத்திம கால போக்கில் சீனா  சந்தை பொருளாதாரத்தை கடைபிடிக்கும் நாடு என்பதை பாரிய முதலீட்டார்களை சீனாவை நோக்கி திரும்ப வைக்கும். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.