Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் ஒழுக்கம் பற்றி விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை -கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் ஒழுக்கம் பற்றி விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை -கருணா

புலிகளின் ஒழுக்கம் பற்றி  விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை -கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் 2004ஆம் ஆண்டு வெருகல் போரில் பெண் போராளிகள் விடயத்தில் ஒழுக்க ரீதியான தவறினை இழைத்திருந்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் கடந்த 10ஆம் திகதி கருத்தினைப் பதிவிட்டிருந்தார்.இதுகுறித்து விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)தெரிவிக்கையில் வெருகல் படுகொலை சம்பந்தமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிகழ்வை நடத்தியபொழுது விடுதலைப் புலிகளுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கட்சியின் மகளிர் அணியின் தலைவி விமர்சித்திருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அங்குள்ள பெண் போராளிகளை  பாலியல் வன்புணர்ந்து படுகொலை செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லியிருந்தார். உண்மையிலே இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அங்குள்ள போராளிகளை பாலியல் வன்புணர்ந்து படுகொலை செய்தார்கள் என்ற கருத்தைச் சொல்லியிருந்தார். உண்மையிலே இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனென்றால் இந்த விடுதலைப் போராட்டத்துக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இதங்களது உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். ஆகவே, இவ்வாறு இருக்கையில் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக கட்சியின் மகளிர் அணியின் தலைவி விமர்சித்திருந்தார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.ஏனென்றால் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு பகைமை இருந்தது உண்மை. அதனால் நான் அங்கிருந்து விலகி வந்ததுடன் பகைமை முடிந்துவிட்டது.அப்போது பிரிந்துசெல்கின்ற கட்டத்தில் தான் வெருகல் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலை நான் விரும்பவில்லை. அதனால் போராட்டத்தைத் தவிர்த்து போராளிகளை வீடுகளுக்கு அனுப்பியிருந்தேன்.

இவ்வாறு கருத்துச் சொல்வதற்கு அவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. ஏனென்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பவர்கள் நேரடியாக விடுதலைப் போராட்டத்தில் இருந்ததில்லை. இதனால் வரலாறு தெரியாத ஒரு குருட்டுத்தனமான கருத்தை இன்று செல்வி என்பவர் தெரிவித்துள்ளார். இதனை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மக்களும் புரிந்துகொள்வார்கள்.எனவே மகளிர் அணியின் தலையின் கொச்சைப்படுத்தும் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான பிழைகளை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.(15)
 
http://www.samakalam.com/செய்திகள்/புலிகளின்-ஒழுக்கம்-பற்றி/

பயங்கரவாதிகளுக்குள் யார் நல்ல பயங்கரவாதி என்னும் போராட்டம்.

இணையதள போராளிகள் பயங்கரவாதிகள் பற்றி கருது எழுத்துவதட்கு பயப்படுகிறார்கள் போல தெரிகின்றது। தமிழ் பயங்கரவாதிகள் பற்றி எப்படி எழுத முடியும் ? Blood is thicker than water.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Vankalayan said:

இணையதள போராளிகள் பயங்கரவாதிகள் பற்றி கருது எழுத்துவதட்கு பயப்படுகிறார்கள் போல தெரிகின்றது। தமிழ் பயங்கரவாதிகள் பற்றி எப்படி எழுத முடியும் ? Blood is thicker than water.

இன்றைய பொழுது உமதாகட்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை கிருபனார் இணைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை...கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் மு.பு சண்டை பிடிக்க அதை  தனது லாபத்திற்காய் கருணா அம்மான் அரசியலாக்கி இருக்கிறார் 

இங்கே சில லொக் டவுண்  பரிதாபங்கள் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நிற்கிறார்கள் ...ஜயோ பாவம் ! அவர்களுக்கும் பொழுது போக வேண்டும்😅 

17 hours ago, Vankalayan said:

இணையதள போராளிகள் பயங்கரவாதிகள் பற்றி கருது எழுத்துவதட்கு பயப்படுகிறார்கள் போல தெரிகின்றது। தமிழ் பயங்கரவாதிகள் பற்றி எப்படி எழுத முடியும் ? Blood is thicker than water.

விடுதலைப்புலிகளின்   போராட்டம் பற்றி பல வேறு விமர்சனங்கள. குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் போராட்ட காலத்தில் அவர்களின் தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு  என்றும் பாரட்டுக்குரியதாகவே இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்புக்களாலும் வியந்து பாராட்டிய சம்பவங்கள் உண்டு.  இதில் இந்திய பெண் ஊடகவியலாளரான அனிதா பிரதாப் புலிகளின் கண்ணியமான நடத்ததையை  பல நேர்காணல்களில்    பாராட்டியுள்ளார். அவர்களுடன் களத்தில் நேரடியாக போரிட்ட பல ஶ்ரீலங்கா/ இந்திய தளபதிகள் பாராட்டியுள்ளனர். கைப்புண்ணுக்கு  கண்ணாடி  தேவையில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Vankalayan said:

இணையதள போராளிகள் பயங்கரவாதிகள் பற்றி கருது எழுத்துவதட்கு பயப்படுகிறார்கள் போல தெரிகின்றது। தமிழ் பயங்கரவாதிகள் பற்றி எப்படி எழுத முடியும் ? Blood is thicker than water.

கொஞ்ச காலம் பொறுங்கள். கோத்தபாயவின் ஆட்சி புலி வாசம் வீசுவது தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

இந்த செய்தியை கிருபனார் இணைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை...கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் மு.பு சண்டை பிடிக்க அதை  தனது லாபத்திற்காய் கருணா அம்மான் அரசியலாக்கி இருக்கிறார் 

இங்கே சில லொக் டவுண்  பரிதாபங்கள் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நிற்கிறார்கள் ...ஜயோ பாவம் ! அவர்களுக்கும் பொழுது போக வேண்டும்😅 

உங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் இணைக்க வேண்டுமா 😂😂

இன்னொரு திரியில் இந்துக்கள் ஊரடங்கை மீறி நல்லூர்க் குமரனை புதுவருட த்தில் வழிபட்ததை இணைத்ததும் தேவையில்லாதது. இங்கே இந்தத் திரியும் தெவையில்லாதது.😂😂😂😂😂😂😂

தனக்கு தனக் கென்றால் சுழகு படக்கு படக் கென்று அடிக்குதோ 🤔🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கொஞ்ச காலம் பொறுங்கள். கோத்தபாயவின் ஆட்சி புலி வாசம் வீசுவது தெரியும்.

அப்ப நாங்கள் சொல்வோம் "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் "என்று.....சொல்லி அடிவாங்குவோமல்ல......

சிவப்பு தாமரை மலர்கின்றது....என சிவப்பு சிந்தனையாளர்கள் அறிக்கை விடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த திரிக்குள்ளும் நல்லூர் கந்தன் வந்திட்டாரா......?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

அட இந்த திரிக்குள்ளும் நல்லூர் கந்தன் வந்திட்டாரா......?

அவர் இரு மனைவிகளுடன் லக்டவுனில் சந்தோஷமாக இருக்கும், அவரை கூப்பிடலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2020 at 19:20, கிருபன் said:

தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எனக்கும் ஒரு பகைமை இருந்தது உண்மை. அதனால் நான் அங்கிருந்து விலகி வந்ததுடன் பகைமை முடிந்துவிட்டது.அப்போது பிரிந்துசெல்கின்ற கட்டத்தில் தான் வெருகல் பகுதியில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலை நான் விரும்பவில்லை. அதனால் போராட்டத்தைத் தவிர்த்து போராளிகளை வீடுகளுக்கு அனுப்பியிருந்தேன்.

கிழக்கை காப்பாற்ற என்றுதானே இந்த எருமை குறுக்காலை  ஓடினது உண்மையிலே அண்ணை போட்ட    சோத்தை  திண்டவன்  என்றால் அந்த கிழக்கு மக்களுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளட்டும் அதை செய்யாமல் புலி எப்படி இருந்தது என்று மற்றவருக்கு பாடம் எடுக்கவேண்டாம் புலிகள் எப்படி இருந்தார்கள் வாழ்ந்தார்கள் என்பதை முழு உலகும் அறியும் .குறைந்தது கிழக்கு மக்களில் ஒரு 100 சனமாவது  கருணா அம்மான் நமக்கு நல்லது செய்தார் என்று சொல்லட்டும் பார்ப்பம் மிகுதியை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அட இந்த திரிக்குள்ளும் நல்லூர் கந்தன் வந்திட்டாரா......?

ஏன், நெருப்பின் மேல் நடப்பதுபோல் உள்ளதோ ? 😏

50 minutes ago, பெருமாள் said:

கிழக்கை காப்பாற்ற என்றுதானே இந்த எருமை குறுக்காலை  ஓடினது உண்மையிலே அண்ணை போட்ட    சோத்தை  திண்டவன்  என்றால் அந்த கிழக்கு மக்களுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளட்டும் அதை செய்யாமல் புலி எப்படி இருந்தது என்று மற்றவருக்கு பாடம் எடுக்கவேண்டாம் புலிகள் எப்படி இருந்தார்கள் வாழ்ந்தார்கள் என்பதை முழு உலகும் அறியும் .குறைந்தது கிழக்கு மக்களில் ஒரு 100 சனமாவது  கருணா அம்மான் நமக்கு நல்லது செய்தார் என்று சொல்லட்டும் பார்ப்பம் மிகுதியை .

பெருமாள்,

இன்றைய பொழுது உங்களுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஏன், நெருப்பின் மேல் நடப்பதுபோல் உள்ளதோ ? 😏

இளமை நாளில் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்கள் போர்க்களம் படைத்த தமிழர் இனத்தில் நெருப்பாற்றை கடந்தவர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

பெருமாள்,

இன்றைய பொழுது உங்களுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. 😂

ஏற்கனவே  பலமுறை சொன்னதுதான் தங்கை என்றவ  காலையில பார்த்திட்டு சன்னதமாடுவா உங்கடை பொட்டர்ர்ர்  செய்தது பிழை என்று அ  வில் தொடங்குவினம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

இந்த செய்தியை கிருபனார் இணைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை...கிழக்கு மாகாணத்தில் உள்ள சிலர் மு.பு சண்டை பிடிக்க அதை  தனது லாபத்திற்காய் கருணா அம்மான் அரசியலாக்கி இருக்கிறார் 

வெருகல் ஆறாரங்கரையில் பெரியவெள்ளியின்போது நடந்த சண்டையில் புலிகள் ஒழுக்கமில்லாமல் நடந்தார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை சிலர் 2004 இலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதனை  கருணா அம்மானே மறுப்பது முக்கியமானதில்லையா. இது கிழக்கின் அரசியலாக இருந்தாலும் உண்மை கருணா அம்மானின் வாயிலிருந்து வரும்போது ஒரு பெறுமதி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு கர்ணா அம்மான் ஜோக்கராகி போனார் இதே வாயால் வெருகலில் பாரிய மனித படுகொலை நடந்தது என பலவருடங்களுக்கு முன்னர் கூறியவர்.

ஆனால் வெருகலில் நடந்த சகோதர யுத்தத்தில் பல பேர் சாவை தழுவிக்கொண்டார்கள்  இரண்டு தரப்பிலும்  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்கு கர்ணா அம்மான் ஜோக்கராகி போனார் இதே வாயால் வெருகலில் பாரிய மனித படுகொலை நடந்தது என பலவருடங்களுக்கு முன்னர் கூறியவர்.

ஆனால் வெருகலில் நடந்த சகோதர யுத்தத்தில் பல பேர் சாவை தழுவிக்கொண்டார்கள்  இரண்டு தரப்பிலும்  

எங்களுக்கான குழியை நாங்களே வெட்டுவதில் எங்களை வெல்ல யாருமில்லை.😭😭

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்கு கர்ணா அம்மான் ஜோக்கராகி போனார் இதே வாயால் வெருகலில் பாரிய மனித படுகொலை நடந்தது என பலவருடங்களுக்கு முன்னர் கூறியவர்.

ஆனால் வெருகலில் நடந்த சகோதர யுத்தத்தில் பல பேர் சாவை தழுவிக்கொண்டார்கள்  இரண்டு தரப்பிலும்  

நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ளுக்கு ஒரு நாக்கு / க‌ருணா கும்மானுக்கு ப‌ல‌ நாக்கு / இவ‌ரின் பொய் புருடா எல்லாம் காணொளி ஆதார‌த்தோடு இருக்கு 😉🤞/

க‌ருணாவுக்கு ஜ‌ல்ரா அடிக்கிற‌வ‌ர் ஓவார‌ கூவினார் முக‌ நூலில் / ல‌ண்ட‌ன் நாட்டில் வ‌சிக்கும் என‌து தோழ‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் போய் சொன்னான் உன் ஊரில் தான் நிக்கிறேன் ஆம்பிளையா இருந்தா வெளியில் வா என்று / அந்த‌ துடை ந‌டுங்கி வீட்டை விட்டு வெளியில் வ‌ர‌ வில்லை /  இது மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் முனிவ‌ர் 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

வெருகல் ஆறாரங்கரையில் பெரியவெள்ளியின்போது நடந்த சண்டையில் புலிகள் ஒழுக்கமில்லாமல் நடந்தார்கள் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை சிலர் 2004 இலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். அதனை  கருணா அம்மானே மறுப்பது முக்கியமானதில்லையா. இது கிழக்கின் அரசியலாக இருந்தாலும் உண்மை கருணா அம்மானின் வாயிலிருந்து வரும்போது ஒரு பெறுமதி இருக்கும்.

என்ட அண்ணரது வார்த்தைக்கு இன்னும் மதிப்பும் ,மரியாதையும் இருக்குது என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.
 
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்கு கர்ணா அம்மான் ஜோக்கராகி போனார் இதே வாயால் வெருகலில் பாரிய மனித படுகொலை நடந்தது என பலவருடங்களுக்கு முன்னர் கூறியவர்.

ஆனால் வெருகலில் நடந்த சகோதர யுத்தத்தில் பல பேர் சாவை தழுவிக்கொண்டார்கள்  இரண்டு தரப்பிலும்  

தனி,அவர் இப்பவும் படுகொலை நடந்ததை மறுக்கேல்ல / மறக்கேல்ல...அங்கு புலிகள் ஒழுக்க கேடான விசயங்களில் ஈடுபடவில்லை  என்று தான் சொல்லியுள்ளார் 
 
On 16/4/2020 at 02:14, குமாரசாமி said:

கொஞ்ச காலம் பொறுங்கள். கோத்தபாயவின் ஆட்சி புலி வாசம் வீசுவது தெரியும்.

கோத்தாவின் ஆட்சி எங்களுக்கு பிரச்சினை இல்லை। தமிழருக்குத்தான் பிரச்சினையாக இருக்கப்போகின்றது।

தமிழ் அரசியல்வாதிகளுடன் நாங்கள் பேசி கதைத்து முடிந்து விட்ட்து। இனி நேரடியாக கோதாவுடன்தான் பேச்சு। கர்தினால் மால்கம் ரஞ்சித் இப்போது எங்களுடன்தான் இருக்கிறார்।

நீங்கள் உங்கள் உரிமையை பாதுகாத்துக்கொள்ள முயட்சியுங்கள்।

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சைவர்கள் / இந்துக்கள், கிருத்தவர்கள் என்று இனங்கள் இல்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Vankalayan said:

கோத்தாவின் ஆட்சி எங்களுக்கு பிரச்சினை இல்லை। தமிழருக்குத்தான் பிரச்சினையாக இருக்கப்போகின்றது।

தமிழ் அரசியல்வாதிகளுடன் நாங்கள் பேசி கதைத்து முடிந்து விட்ட்து। இனி நேரடியாக கோதாவுடன்தான் பேச்சு। கர்தினால் மால்கம் ரஞ்சித் இப்போது எங்களுடன்தான் இருக்கிறார்।

நீங்கள் உங்கள் உரிமையை பாதுகாத்துக்கொள்ள முயட்சியுங்கள்।

True Blood Cheers GIF - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Vankalayan said:

கோத்தாவின் ஆட்சி எங்களுக்கு பிரச்சினை இல்லை। தமிழருக்குத்தான் பிரச்சினையாக இருக்கப்போகின்றது।

தமிழ் அரசியல்வாதிகளுடன் நாங்கள் பேசி கதைத்து முடிந்து விட்ட்து। இனி நேரடியாக கோதாவுடன்தான் பேச்சு। கர்தினால் மால்கம் ரஞ்சித் இப்போது எங்களுடன்தான் இருக்கிறார்।

நீங்கள் உங்கள் உரிமையை பாதுகாத்துக்கொள்ள முயட்சியுங்கள்।

இவ்வளவு இலகுவாக மந்தையை பிரித்து வேட்டையாடுவோம் என  சிங்களமும் அதன் அடிவருடிகளும் நினைத்திருப்பார்களோ என்னவோ?  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சிங்கள பவுத்த வாக்குகளை அள்ளி குவித்தது. சைவ, கிறிஸ்தவ குரோதம்: சிங்களத்தின்  அடிவருடிகள் சைவ வாக்குகளையும்,  சிங்களம் கிறிஸ்தவ வாக்குகளையும் குறி வைத்து ஏற்படுத்தப் பட்டிருக்குமோ? மொத்தத்தில் ஏமாந்த தமிழன் வடையை பறி கொடுப்பானா? அல்லது அவனது திட்டத்தை உடைத்து வெளியேறுவானா?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, satan said:

இவ்வளவு இலகுவாக மந்தையை பிரித்து வேட்டையாடுவோம் என  சிங்களமும் அதன் அடிவருடிகளும் நினைத்திருப்பார்களோ என்னவோ?  உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு சிங்கள பவுத்த வாக்குகளை அள்ளி குவித்தது. சைவ, கிறிஸ்தவ குரோதம்: சிங்களத்தின்  அடிவருடிகள் சைவ வாக்குகளையும்,  சிங்களம் கிறிஸ்தவ வாக்குகளையும் குறி வைத்து ஏற்படுத்தப் பட்டிருக்குமோ? மொத்தத்தில் ஏமாந்த தமிழன் வடையை பறி கொடுப்பானா? அல்லது அவனது திட்டத்தை உடைத்து வெளியேறுவானா?

தமிழன் எப்போதும் இழப்பதுதான் வழக்கம். தமிழகத்தையும் ஈழத்தையும் பார்த்தாலே புரியும். ☹️

இதற்கு ஒரு கேள்வி வேறு கேட்கவும் வேண்டுமா ☹️

14 hours ago, MEERA said:

இலங்கையில் சைவர்கள் / இந்துக்கள், கிருத்தவர்கள் என்று இனங்கள் இல்லை.....

எங்களுக்கு மறதிக் குணம் அதிகம். மீரா கூறியது இடைக்கிடைதான் ஞாபகத்திற்கு வரும் . ☹️

22 hours ago, Vankalayan said:

கோத்தாவின் ஆட்சி எங்களுக்கு பிரச்சினை இல்லை। தமிழருக்குத்தான் பிரச்சினையாக இருக்கப்போகின்றது।

தமிழ் அரசியல்வாதிகளுடன் நாங்கள் பேசி கதைத்து முடிந்து விட்ட்து। இனி நேரடியாக கோதாவுடன்தான் பேச்சு। கர்தினால் மால்கம் ரஞ்சித் இப்போது எங்களுடன்தான் இருக்கிறார்।

நீங்கள் உங்கள் உரிமையை பாதுகாத்துக்கொள்ள முயட்சியுங்கள்।

நீங்கள் கூறுவது உண்மையாயின்  இது தமிழனின் அழிவில் அடுத்த அத்தியாயம்.😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.