Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு

by : Litharsan

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில். யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது. இதன்போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30இற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் 200இற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

யாழ். அரியாலைக்கு வந்த மதபோதகர் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது. வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்றுப் பரவவில்லை. உலகளாவிய ரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தொியவில்லை.

ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, அறிவுறுத்தல்களுக்குக் கீழ்படிந்து அனைவரும் செயற்பட வேண்டும்” என்றார்.

http://athavannews.com/யாழில்-17-நோயாளர்களுக்கும/

இந்த சுவிஸ் போதகரை ஒருவழி பண்ணாமல் விடமாடினம் போல இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

இந்த சுவிஸ் போதகரை ஒருவழி பண்ணாமல் விடமாடினம் போல இருக்கு. 

அவர் அதற்குத் தகுதியானவரே 😏

45 minutes ago, Kapithan said:

அவர் அதற்குத் தகுதியானவரே 😏

ஓம் ஓம் எல்லா தகுதியும் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அழைக்கிறார் எண்டு ஆட்களை கூப்பிட்டு.... வருத்தத்தினை கொடுத்துப்போட்டார்... 🙄
 
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

அவர் அழைக்கிறார் எண்டு ஆட்களை கூப்பிட்டு.... வருத்தத்தினை கொடுத்துப்போட்டார்... 🙄
 
அவரட்ட எது இருக்குதோ அத மட்டும்தானே கொடுக்கலாம் 😂.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kali said:

இந்த சுவிஸ் போதகரை ஒருவழி பண்ணாமல் விடமாடினம் போல இருக்கு. 

பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிறிலங்கா அரசு ஆகியோர் சார்பில், சுவிஸில் உள்ள சட்டத்தரணிகள் மூலம் இந்த போதகர் மேல் நட்டயீட்டுக்கான வழக்கு போட புலம்பெயர் அமைப்புகள் உதவலாமே? இவருக்கு நிறைய சொத்துகள் சுவிஸ், இலங்கை, இந்தியா மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக தெரிகிறது. நட்டயீட்டில் பங்கு பிரிப்பதற்காக சட்டத்தரணிகளும், சிறிலங்கா அரசும் முன்வரும் சாத்தியம் உள்ளது. பங்குதாரராக இணைய வேண்டிய பலம்பொருந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்றே மீதமான தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அவரட்ட எது இருக்குதோ அத மட்டும்தானே கொடுக்கலாம் 😂.

காசும் கணக்க வைச்சிருக்கிறதா அரசல் புரசலா  கதை அடிபடுது கபிதான் !  ஆனால் அதை மட்டும் கொடுக்கமாட்டார் !!😃

20 minutes ago, கற்பகதரு said:

பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிறிலங்கா அரசு ஆகியோர் சார்பில், சுவிஸில் உள்ள சட்டத்தரணிகள் மூலம் இந்த போதகர் மேல் நட்டயீட்டுக்கான வழக்கு போட புலம்பெயர் அமைப்புகள் உதவலாமே? இவருக்கு நிறைய சொத்துகள் சுவிஸ், இலங்கை, இந்தியா மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக தெரிகிறது. நட்டயீட்டில் பங்கு பிரிப்பதற்காக சட்டத்தரணிகளும், சிறிலங்கா அரசும் முன்வரும் சாத்தியம் உள்ளது. பங்குதாரராக இணைய வேண்டிய பலம்பொருந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்றே மீதமான தேவை.

எங்கடை துல்பனை ஒருக்கா கேட்டு பாப்பமோ?😜

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கற்பகதரு said:

பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிறிலங்கா அரசு ஆகியோர் சார்பில், சுவிஸில் உள்ள சட்டத்தரணிகள் மூலம் இந்த போதகர் மேல் நட்டயீட்டுக்கான வழக்கு போட புலம்பெயர் அமைப்புகள் உதவலாமே? இவருக்கு நிறைய சொத்துகள் சுவிஸ், இலங்கை, இந்தியா மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக தெரிகிறது. நட்டயீட்டில் பங்கு பிரிப்பதற்காக சட்டத்தரணிகளும், சிறிலங்கா அரசும் முன்வரும் சாத்தியம் உள்ளது. பங்குதாரராக இணைய வேண்டிய பலம்பொருந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்றே மீதமான தேவை.

நல்ல ஆளய்யா நீவீர்,

லயன் எயார் விபத்து நட்ட ஈட்டு விடயத்திலேயே அக்கறை காட்டாத எங்கட ஆக்கள் இதில் மட்டும் அக்கறை காட்டுவினமோ ? 😂

நாங்கள் எவ்வளவோ செய்யலாம். தலுதி இருக்கு , உழைப்பு இருக்கு, மூளை வளம் உண்டு. ஆனால் முக்கியமான சரக்கு மட்டும் மிஸ்ஸிங். 😏

ஒற்றுமை. 😂😂

இது இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாதே ☹️

47 minutes ago, Eppothum Thamizhan said:

காசும் கணக்க வைச்சிருக்கிறதா அரசல் புரசலா  கதை அடிபடுது கபிதான் !  ஆனால் அதை மட்டும் கொடுக்கமாட்டார் !!😃

நல்லா ஓடுற பிஸ்னஸ்ஸ படு குழியில் தள்ள சரகுணம் என்ன முட்டாளோ ? 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

முன்னுக்கு பின் முரணான இவரது அறிக்கை??????

மீண்டும் கோகிலா। தொடருங்கள்।

யாழில் கோரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது? உறுதியான தகவலை வெளியிட்ட வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது. வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடைய வேண்டாம் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தி யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்படுகின்றனர். எனவே மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சமடையாமல், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும், அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறும் அவர் கேட்டிருக்கின்றார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கு நேற்று பரிசோதிக்கப்பட்டது. இதன் போது எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் இன்றைய தினம் 30ற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை பரிசோதனை நடாத்தப்பட்டது. அதில் 17 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

நோயாளர்கள் அனைவரும் விசேட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவார்கள். யாழ்.அரியாலைக்கு வந்த மதபோதகர் ஊடாகவே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியிருக்கின்றது.

வேறு வழிகள் ஊடாக மாவட்டத்திற்குள் தொற்று பரவவில்லை. உலகளாவிய ரீதியில் கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், இதன் எதிர்காலம் எப்படியிருக்கும் என தொியவில்லை. ஆனால் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார பிரிவினரும் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் அச்சப்படதேவையில்லை. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, அறிவுறுத்தல்களுக்கு கீழ்படிந்து நடவுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141398

  • கருத்துக்கள உறவுகள்

large.1907163077_Screenshot2020-04-18at11_38_09.png.3d0dacc0d748207d7cbf831203a447b1.png

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிறிலங்கா அரசு ஆகியோர் சார்பில், சுவிஸில் உள்ள சட்டத்தரணிகள் மூலம் இந்த போதகர் மேல் நட்டயீட்டுக்கான வழக்கு போட புலம்பெயர் அமைப்புகள் உதவலாமே? இவருக்கு நிறைய சொத்துகள் சுவிஸ், இலங்கை, இந்தியா மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக தெரிகிறது. நட்டயீட்டில் பங்கு பிரிப்பதற்காக சட்டத்தரணிகளும், சிறிலங்கா அரசும் முன்வரும் சாத்தியம் உள்ளது. பங்குதாரராக இணைய வேண்டிய பலம்பொருந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்றே மீதமான தேவை

அது நடக்கவாய்பில்லை ஆவிக்குரிய சபைகளின் மத மாற்று ஏமாற்று நடவடிக்கைகளை மதநல்லிணக்கம் என்ற பெயரில் கண்டும் காணமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் சில தமிழர்களிடம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது நடக்கவாய்பில்லை ஆவிக்குரிய சபைகளின் மத மாற்று ஏமாற்று நடவடிக்கைகளை மதநல்லிணக்கம் என்ற பெயரில் கண்டும் காணமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் சில தமிழர்களிடம் உள்ளது.

சில தமிழர்களை கருத்திற் கொள்ளாமல் , ஆகக் குறைந்தது,  மத மாற்றத்தை ஊக்குவிக்காத அல்லது எதிரான தமிழர்கள் ஒன்று சேர்ந்தாலே இதனை இலகுவாகச் செய்து முடிக்கலாம். 👍

ஒரு வழக்குத்தானும் போடமுடியாதா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

சில தமிழர்களை கருத்திற் கொள்ளாமல் , ஆகக் குறைந்தது,  மத மாற்றத்தை ஊக்குவிக்காத அல்லது எதிரான தமிழர்கள் ஒன்று சேர்ந்தாலே இதனை இலகுவாகச் செய்து முடிக்கலாம். 👍

ஒரு வழக்குத்தானும் போடமுடியாதா ? 🤔

அவர்கள் மீது வழக்கு போடுவது இருக்கட்டும்.

புலத்தில் வாழும் எங்கள் குழந்தைகளுக்கு, சமய அறிவூட்ட என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லுங்க முதலில்.

தமிழ் மொழி படிப்பிப்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில், தமிழில் உள்ள சமய விடயங்களை எப்படி, வேறு மொழியில் படிக்கும், பிள்ளைகளுக்கு கொடுப்பது என்று சிந்திக்காமல், அலட்சியம் காட்ட, அந்த கப்பில் பூந்து விளையாடும் பலர் அதைக்காட்டி பணம் வாங்கி, இப்ப ஊருக்கும் போய் விளையாடுகின்றனர் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

எரியிறதைப் பிடுங்க, கொதிக்கிறது அடங்கும் என்பது பழமொழி.

மூலம் எங்கே என்று தேடி, அதை அடைப்பதே வழி.

இன்னும் தெளிவாக சொல்வதானால், நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால், தனது பிள்ளைகளுக்கு சமய அறிவு வழங்குவது குறித்துதான் அக்கறை படுவதில்லை என்று ஒரு பதிவில் சொன்னார்.

அவருக்கு வந்த பதில் பதிவில், சரி உங்களுக்கு அக்கறையில்லை, வேறு வெளியாட்கள் அக்கறைப்பட்டால் ஓகேயா என்று கேட்க, அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நிதர்சனம் உறைத்திருக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

உண்மையில் இந்த வழக்குப் போடும் Idea என்பதன் நோக்கம் வெளியில் பார்வைக்கு பணமாகத் தெரியலாம், ஆனால் அதனூடாக  சொல்லவரும் நோக்கம் பொறுப்புக் கூறல் என்பதை ஊக்குவித்தலே. பொறுப்புக் கூறல் என்பது மேற்கு நாடுகளுக்கு மட்டும் உரித்தா என்ன ? 🤔

இப்படி ஒரு முயற்சியை இலங்கையில் ஆரம்பித்து வைத்தாலே பல, அடிப்படைச் சமூக மாற்றங்களை ஏற்படுத்தலாம். 👍

3 hours ago, Nathamuni said:

அவர்கள் மீது வழக்கு போடுவது இருக்கட்டும்.

புலத்தில் வாழும் எங்கள் குழந்தைகளுக்கு, சமய அறிவூட்ட என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லுங்க முதலில்.

தமிழ் மொழி படிப்பிப்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில், தமிழில் உள்ள சமய விடயங்களை எப்படி, வேறு மொழியில் படிக்கும், பிள்ளைகளுக்கு கொடுப்பது என்று சிந்திக்காமல், அலட்சியம் காட்ட, அந்த கப்பில் பூந்து விளையாடும் பலர் அதைக்காட்டி பணம் வாங்கி, இப்ப ஊருக்கும் போய் விளையாடுகின்றனர் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

எரியிறதைப் பிடுங்க, கொதிக்கிறது அடங்கும் என்பது பழமொழி.

மூலம் எங்கே என்று தேடி, அதை அடைப்பதே வழி.

இன்னும் தெளிவாக சொல்வதானால், நிர்வாகத்தில் இருக்கும் ஒருவர், தனக்கு நம்பகத்தன்மை இல்லாத காரணத்தால், தனது பிள்ளைகளுக்கு சமய அறிவு வழங்குவது குறித்துதான் அக்கறை படுவதில்லை என்று ஒரு பதிவில் சொன்னார்.

அவருக்கு வந்த பதில் பதிவில், சரி உங்களுக்கு அக்கறையில்லை, வேறு வெளியாட்கள் அக்கறைப்பட்டால் ஓகேயா என்று கேட்க, அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

நிதர்சனம் உறைத்திருக்கும்.

மதம் மாறுபவர்கள் இங்கு பிறந்த பிள்ளைகள் அல்ல. நடைமுறையில் மதம் மாறுபவர்கள் எல்லோரும் இலங்கையில் சமய அறிவு ஊட்டப்பட்டவர்கள்தான். அதனால் தான் அவ‍ர்கள் மதம் மாறுகிறார்கள்.ஆகவே சமய அறிவு ஊட்டபடாத‍தால் தான் அவ‍ர்கள் மதம் மாறுகிறார்கள் என்பது தவறானாது.  இங்கு வாழும் சமய அறிவு ஊட்டபடாத பிள்ளைகளை மதம் மாற்றுவது  இலங்கையில் சமய அறிவு என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கபட்டவர்களை ம‍தம் மாற்றுவது போல் அவ்வளவு எளிதாக இருக்காது.  சமய அறிவு ஊட்டபடாத பிள்ளை தனது அறிவில் சிந்திக்கும் . அவ்வாறு தனது அறிவில் சி்ந்திக்கும் அந்த பிள்ளைக்கு  கர்த்தர் வந்து  தன்னை காப்பாற்ற முடியாது என்ற உண்மை தெரிந்திருப்பதால் அப்பிள்ளையைமதம் மாற்றுவது முடியாது. சுய அறிவு இல்லாது முழுக்க சமய நம்பிக்கையில் மூழ்கி கிடப்பவர்கள் தான் இவ்வாறான ஏமாற்று வித்தைக்கு பலியாகுபவர்கள். 

இங்கு வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி அறிவை வளர்ப்பதே முக்கியம். சமய அறிவு என்ற பெயரில் மூட புராண கதைகளை பயிற்றுவிற்பது ஏற்புடயது அல்ல.  தனது பிள்ளையை வெட்டி கறி சமைத்து சிவனடியாருக்கு பரிமாறிய சிறுத்தொண்டரின் மூட பக்தி குறித்தோ, சிவனடியார் கேட்டார் என்பதற்காக தனது மனைவியே அவருக்கு கொடுத்த இயற்பகையார்  கதையோ, பாண்டிய மன்னனுக்கு வந்த கொரோனாவை எப்படி திருநீறு கொடுத்து சம்பந்தர் சுகபடுத்தினார் என்பது பற்றியோ, சூலை நோயை கடவுளே திருநாவுகரசருக்கு கொடுத்தார்  பிறகு மதம் மாற்றிவிட்டு அதை தானே குணப்படுத்தினார் போன்ற  மூடக்கதைகள் புதிய தலைமுறைப் பிள்ளைகளுக்கு தேவையற்றது. வேண்டுமானால்  இவ்வாறெல்லாம் மூட நம்பிக்கைகள் மூலம் தான் மதங்கள் உருவானது என்ற உண்மை  வரலாற்றை சொல்லிக்கொடுக்கலாம்.  அத்துடன் மனித வரலாற்றில் மதநம்பிக்கை எவ்வாறு வந்த‍து பற்றியும் அது எவ்வாறு இவ்வுலகில்  பிரதேசத்திறகு பிரதேசம் வேறுபட்டு பல மதங்களாக பரிணமித்து  உள்ளது என்பது குறித்த அறிவூட்டல்  பிள்ளைகளுக்கு செய்யபடலாம்.  நீதி நெறி கதைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம். இவ்வாறு செய்தால் எதிர் காலத்தில் மதமாற்றம் என்று அலறிக்கொண்டு திரியவேண்டிய நிலை தமிழருக்கு இருக்காது. கோவிலையும் அளவோடு வைத்திருப்பராகள். மத‍மும் மாற மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

உங்கள் (Bold செய்யப்பட்ட) கருத்துக்களுடன் உடன்படுகிறேன். 👍

ஒழுக்க நியமங்களும் ""எது நீதி" " என்கின்ற அளவுகோலும் பண்பாடுகளுக்கும் கூட பிரதேசங்களுக்கும் ஏற்ப வேறுபடும்.  🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீஙகள் பெரியவர்கள் விடயத்தில் சொல்வது சரி.

ஆனாலும் இப்போது, 1983 July பின்னர் வந்தவர்களின் பிள்ளைகள், பிறமதங்களினால் கவரப்படுகிறனர் என்பதும் உண்மை.

மேலும், நீஙகள் இந்துமதம் என்ற பெயரில் சொல்லப்பட்ட பெரும் மூடநம்பிக்கைகைக் கதைகளை நமது பூர்வீக மதநம்பிக்கைகளுடன் கலக்கவேண்டியதில்லை.

சிவபெருமான் கைலாய மலையில் இருக்கிறார். அவர் அனுப்பித்தான் இறங்கி ஓடி வந்தோம்....

அதா... சமஸ்கிருதம், தேவ பாசை... அதில தானே நாமும், சிவனாரும் பேசிக்கொள்வோம். அந்த தேவபாஷையால பூசை செய்ய சொல்லி தான் எங்களை அனுப்பினர். உங்களிண்ட பாசை அவருக்கு விளங்காது பாருங்கோ..

எது, நீஙகள் சமஸ்கிருதம் படிப்பதா.... படித்தால், வாயால், தின்று, மலம் கக்கும்... ராட்சசனாய் பிறப்பீர்கள்...

ஆ... இவரே.... முருகன்...கைலாயத்தில அண்ணன் பிள்ளாயாரோட, குட்டிப் பயலா விளையாடிக் கொண்டிருக்கேக்க பாத்தமே.... சுப்பிரமண்யரு...இப்ப வளர்ந்திட்டார்...

இப்படி குளுசையல நம்பி வாங்கி விழுங்கினோம்..... இதில மூடநம்பிக்கை எண்டு தனியா பிரித்து ஆராய்வதால் என்ன பலன்?

நான் தான் சொன்னேனே, வெள்ளையர்கள் கூட, கொடூரமாக கொலை செய்யப்படட ஜேசு பிரான், மூன்றாம் நாளில் உயிர் கொண்டு எழுந்து வானகம் சென்றார் என்று நம்புகின்றனர். ஈஸ்டர் ஐ கொண்டாடுகின்றனர். மேலும் ஜேசு பிறந்ததாக ஒரு திகதியை குத்து மதிப்பாக டிசம்பர் 25 அன்று கொண்டாடுகின்றனர்.

நீங்கள் இப்படி... மன்னிக்க வேண்டும்..... முட்டையில்... மயிர் பிடுங்குதல் என்பார்கள்... புலம்பிக்கொண்டிராமல்... உங்களுக்கு இதில் நம்பிக்கையோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

பல நூறாண்டுகளுக்கு முன்னர் படிப்பறிவில்லா மக்களுக்கு சில விடயங்க்களை புரிய வைக்க, சில உதாரணங்களை சொல்லி இருப்பார்கள்.

அதனை இந்த படித்த, விஞ்ஞான காலத்தில் ஆய்வு செய்து குழம்புவதே தவறு.

உதாரணமாக சூரியன் 7 வேறு வேறு நிறங்கள் கொண்ட குதிரைகள் இழுக்கும் ரதத்தில் பவனி வருபவன் என்றார்கள் முன்பு.

நியூட்டன் அதனை, சூரிய ஒளியில் 7 நிறங்கள் உண்டு என்றார். அதனை அரியம் கொண்டு நிரூபித்தார்.

அரியம் கொண்டு நிரூபிக்க தேவை இல்லாதவர்களுக்கு முன்பு சொன்னவர்கள் பம்மாத்து என்று சொல்வீர்களா? இல்லைதானே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கற்பகதரு said:

பாதிக்கப்பட்ட நோயாளிகள், சிறிலங்கா அரசு ஆகியோர் சார்பில், சுவிஸில் உள்ள சட்டத்தரணிகள் மூலம் இந்த போதகர் மேல் நட்டயீட்டுக்கான வழக்கு போட புலம்பெயர் அமைப்புகள் உதவலாமே? இவருக்கு நிறைய சொத்துகள் சுவிஸ், இலங்கை, இந்தியா மற்றும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக தெரிகிறது. நட்டயீட்டில் பங்கு பிரிப்பதற்காக சட்டத்தரணிகளும், சிறிலங்கா அரசும் முன்வரும் சாத்தியம் உள்ளது. பங்குதாரராக இணைய வேண்டிய பலம்பொருந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்றே மீதமான தேவை.

5 hours ago, Nathamuni said:

அவர்கள் மீது வழக்கு போடுவது இருக்கட்டும்.

புலத்தில் வாழும் எங்கள் குழந்தைகளுக்கு, சமய அறிவூட்ட என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லுங்க முதலில்.

என்னுடைய நோக்கம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் அடுத்த நேர உணவுக்கு தங்கி இருக்கும் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட அரச மருத்துவ ஊழியர்களுக்கும் தேவையான பொருளாதார நிவாரணத்தை பெற்றுக்கொடுத்தல். இது சாத்தியமானதும் கூட. 

உங்கள் நோக்கம் கொரோனா வைரசின் பாதிப்பு பற்றியதோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் பற்றியதோ அல்ல. உங்கள் கருத்தாடலுக்கு வேறு திரி திறப்பதே பொருத்தமானது. மட்டுறுத்துனர் கவனத்தில் கொள்ளவும்.

2 hours ago, Nathamuni said:

நீஙகள் பெரியவர்கள் விடயத்தில் சொல்வது சரி.

ஆனாலும் இப்போது, 1983 July பின்னர் வந்தவர்களின் பிள்ளைகள், பிறமதங்களினால் கவரப்படுகிறனர் என்பதும் உண்மை.

மேலும், நீஙகள் இந்துமதம் என்ற பெயரில் சொல்லப்பட்ட பெரும் மூடநம்பிக்கைகைக் கதைகளை நமது பூர்வீக மதநம்பிக்கைகளுடன் கலக்கவேண்டியதில்லை.

சிவபெருமான் கைலாய மலையில் இருக்கிறார். அவர் அனுப்பித்தான் இறங்கி ஓடி வந்தோம்....

அதா... சமஸ்கிருதம், தேவ பாசை... அதில தானே நாமும், சிவனாரும் பேசிக்கொள்வோம். அந்த தேவபாஷையால பூசை செய்ய சொல்லி தான் எங்களை அனுப்பினர். உங்களிண்ட பாசை அவருக்கு விளங்காது பாருங்கோ..

எது, நீஙகள் சமஸ்கிருதம் படிப்பதா.... படித்தால், வாயால், தின்று, மலம் கக்கும்... ராட்சசனாய் பிறப்பீர்கள்...

ஆ... இவரே.... முருகன்...கைலாயத்தில அண்ணன் பிள்ளாயாரோட, குட்டிப் பயலா விளையாடிக் கொண்டிருக்கேக்க பாத்தமே.... சுப்பிரமண்யரு...இப்ப வளர்ந்திட்டார்...

இப்படி குளுசையல நம்பி வாங்கி விழுங்கினோம்..... இதில மூடநம்பிக்கை எண்டு தனியா பிரித்து ஆராய்வதால் என்ன பலன்?

நான் தான் சொன்னேனே, வெள்ளையர்கள் கூட, கொடூரமாக கொலை செய்யப்படட ஜேசு பிரான், மூன்றாம் நாளில் உயிர் கொண்டு எழுந்து வானகம் சென்றார் என்று நம்புகின்றனர். ஈஸ்டர் ஐ கொண்டாடுகின்றனர். மேலும் ஜேசு பிறந்ததாக ஒரு திகதியை குத்து மதிப்பாக டிசம்பர் 25 அன்று கொண்டாடுகின்றனர்.

நீங்கள் இப்படி... மன்னிக்க வேண்டும்..... முட்டையில்... மயிர் பிடுங்குதல் என்பார்கள்... புலம்பிக்கொண்டிராமல்... உங்களுக்கு இதில் நம்பிக்கையோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

பல நூறாண்டுகளுக்கு முன்னர் படிப்பறிவில்லா மக்களுக்கு சில விடயங்க்களை புரிய வைக்க, சில உதாரணங்களை சொல்லி இருப்பார்கள்.

அதனை இந்த படித்த, விஞ்ஞான காலத்தில் ஆய்வு செய்து குழம்புவதே தவறு.

உதாரணமாக சூரியன் 7 வேறு வேறு நிறங்கள் கொண்ட குதிரைகள் இழுக்கும் ரதத்தில் பவனி வருபவன் என்றார்கள் முன்பு.

நியூட்டன் அதனை, சூரிய ஒளியில் 7 நிறங்கள் உண்டு என்றார். அதனை அரியம் கொண்டு நிரூபித்தார்.

அரியம் கொண்டு நிரூபிக்க தேவை இல்லாதவர்களுக்கு முன்பு சொன்னவர்கள் பம்மாத்து என்று சொல்வீர்களா? இல்லைதானே.

என்ன நாத முனி எனக்கு பதில் சொல்ல வெளிக்கிட்டு கடைசியில் நான் சொன்னதையே சொல்லுகின்றீர்கள். பழைய அறிவுக்கு ஒவ்வா விடயங்களை கற்பிக்க வேண்டிய அவ‍சியம் இல்லை என்று தானே குறிப்பிட்டேன்.  நீங்களும் அதை தானேகூறுகின்றீர்கள். பல நூற்றாண்ட்டுகளுக்கு முன்னர் படிபறிவில்லாத எமது மக்களுக்கு  கூறிய மூட கதைகளை அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழும்  எங்களுக்கோ எமது அடுத்த தலைமுறைக்கோ சொல்ல தேவையில்லை என்று தானே நான் கூறினேன். இங்கு நான் முட்டையில் மயிர் புடுங்கவில்லை நாதமுனி.  எனது கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாவிட்டால் வேறு மதங்களை இங்கு இழுக்கின்றீர்கள். மற்றய மதங்களில் மூட நம்பிக்கைகள் இல்லை என்று நான் கூறவில்லையே. மருதங்கேணி ஒரு முறை கூறியது போல் மற்றய மதங்களில் மூடத்தனங்கள் உள்ளது. இந்து மத‍த்தில் தான் மதமே மூடத்தனமாக உள்ளது. இந்து மத‍த்தால் பரப்பட்ட மூடத்தனங்களை எ ழுதினால் யாழ் சேர்வர் தாங்காது. அவ்வளவு அறிவுக்கு ஒவ்வா பித்தலாட்டங்கள் திரும்பும் இடம் எல்லாம் கொட்டி கிடக்கின்றது என்பது உங்களுக்கும் தெரியும்.  இவையெல்லாம் மூடதனங்கள் என்பதை எமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து அறிவூட்டினாலே போதும். எவரும் மதம் மாற மாட்டார்கள். மத வழிபாட்டை ஒரு கலாச்சார அடையாளமாக மாத்திரம் மக்கள் பார்ப்பார்கள். கண்மூடித்தனமாக கடவுள் எல்லாம் தருவார் என்று நம்பமாட்டர்கள். அப்படியான மக்களை உருவாக்கினால் மதமாற்றம் என்ற  பிரச்சனையே இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

நான் சொல்ல வருவது புரியவில்லையா அல்லது புரியாத மாதிரியே பேசுகிறீர்களா?

இந்து சமய மூட நம்பிக்கைகள் குறித்து கவலைப்பட நாம் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் என்று வெள்ளையர்களால் குறிக்கப்பட்டவர்கள் என்பது எனது பார்வை.

அல்லாடும் சிறிய கொம்பனிகளை பெரிய கொம்பனிகள் அப்படியே விழுங்குவது போல தமிழர்களது மத பழக்க வழக்கங்களை இந்து மதம் விழுங்கியது.

நீங்கள் இந்து மதத்தில் இருந்து விலகி வேறு ஒன்றினை பின் தொடரலாம். அது உங்கள் உரிமை. 

நீங்க  அந்த இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை தூக்கி பிடித்து, அதிலும்பார்க்க வேறு மதங்கள் மூட நம்பிக்கை இல்லாதவை போன்ற ஒரு நிலைப்பாட்டில் இருப்பது போல காட்டிக் கொள்வதால் தான், உங்களுக்கு பிடித்த வேறு நம்பிக்கையினை நீங்கள் தொடருங்கள் என்றேன். 

நான் இந்து இல்லை என்று நம்புகிறேன். ஆனால் அதற்காக தான் இந்து என்று கருதும் அடுத்தவர்களின் இந்து மதம் மூட நம்பிக்கை கூடுதலாக கொண்டது என்று கொச்சைப் படுத்தும் உரிமை நமக்கு இல்லை என்று அழுத்தமாக கூற வந்தேன். 

உங்களுக்கு பிடிக்காவிடில், அதனை கொச்சை படுத்தாமல், பிடித்ததை பற்றி மட்டுமே பேசுவது நன்று.

26 minutes ago, Nathamuni said:

ரியாத மாதிரி  பேசுவது நீங்கள் தான் நாதமுனி. நான் இந்து இல்லை என்று இங்கு வாதாடுவதற்கு வசதியாக நீங்கள் கூறினாலும் தமிழர்களின் மீது தனது மூடத்தனங்களை திணித்த இந்து மத‍ ஆக்கிரமிப்புக்குள் தான் நீங்களும் நானும் உள்ளோம்.  அது உங்களுக்கும் தெரியும். தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள். அப்படி இல்லை என்றால்  நான் இந்து மத மூடநம்பிக்கைகளை  சுட்டிக்காட்டும் போது உங்களை அறியாமல் அதற்கு வக்காலத்து வாங்குவது ஏன்?  இந்து மத மூடத்தனங்களை கேள்வி கேட்கும் உரிமை  எனக்கு இல்லை என்று எப்படி நீங்கள் கூற முடியும்?

இந்து மத‍த்தில் இருந்து நான் விலகுவது அல்லது நீங்கள் விலகுவது பற்றி நாம் இங்கு உரையாடவில்லை. எமது எதிர் கால பிள்ளைகளுக்கு அவர்கள் பரப்பிய அறிவுக்கு ஒவ்வா பித்தலாட்டங்களை கூறுவது பற்றி தான் இங்கு விவாதிக்கிறோம்.  அந்த உரிமை எனக்கும் உங்களுக்கும் உண்டு. அவை மூடநம்பிக்கைகள் என்று ஒப்புக்கொள்ளுகின்றீர்கள். ஆனால் அவற்றை கொச்சைப்டுத்துவதாக  முன்னுக்கு பின் முரணாக கூறுகின்றீர்கள். இந்து மதம்  மக்கள் மீது திணித்த மூட பக்தி தான் இன்று அந்த மக்களை மதம் மாற்றுபவர்களின் மூலதனம்.  ஆகவே தொடர்ந்து இந்து மத‍த்தின்  மூடத்தனங்களை தோலிரித்து ஒவ்வொன்றாக காட்டுவதே மக்களை மத‍மாற்றதில் இருந்து காப்பாற ஒரே வழி. மக்கள் தாமாக சிந்திக தொடங்கினால் இந்து மத கும்பலும் அவர்களை ஏமாற்றி தனது வருமானத்தை பெருக்க முடியாது அல்லோயா கும்பலும் அதை செய்ய முடியாது.

தலைவா, எனக்கெண்டா,

மூடநம்பிக்கை பத்தி வகுப்பெடுத்து, வகுப்பெடுத்து, அலுலோயா கோஸ்டிகளுக்கு உதவுறமோ எணடல்லோ சனம் நினைக்கப்போகுது எண்டு யோசணையா கிடக்குது.

இல்லையெண்டு நினைக்கிறியளோ?

நான் இலண்டண் விளம்பரம் பத்தி கதைச்சா, ஓடியாந்து கட்டுக்கத எண்டுறியள்... சற்குணம் அய்யாவா, எனக்கு தெரியாதே எண்டுறியள்....

தீட்சை எடுத்தனான் எண்டுறியள், மண் ஜயர் பத்தி தெரியாமல் இருக்கிறியள்

குழப்பமா கிடக்குதே...

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.