Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு ஒவ்வாமை; சிறுவன் பலி; நால்வர் வைத்தியசாலையில்

Featured Replies

கனகராசா சரவணன்

கணவாய் உணவு ஒவ்வாமையால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சே ர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், மட்டக்களப்பு - கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி, மாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் 11 வயதுடைய அன்புதாஸ் கோகுல் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இம்மாதம் 18ஆம் திகதி, வீதியால் வந்த மீன் வியாபாரி ஒருவரிடம் கணவாய் வாங்கி, உயிரிழந்த சிறுவனின் தாயார், சகோதரன் ஆகியோரைத் தவிர, குடும்பத்தவர்கள் ஐவர், அன்றையதினம் பகல் உணவு சாப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கணவாய் சாப்பிட்ட அனைவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. 

தனியார் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ள மேற்படி ஐவரும், நோய் குணமடையாத நிலையில் திங்கட்கிழமை குறித்த  சிறுவன், சிறுவனின் தாத்தா, பாட்டி ஆகியோர் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று (23) பகல் உயிரிழந்துள்ளான் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை, மாமா ஆகியோரும் தற்போது மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர் எனவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/உணவு-ஒவ்வாமை-சிறுவன்-பலி-நால்வர்-வைத்தியசாலையில்/73-249146

  • கருத்துக்கள உறவுகள்

பழுதாகாமல் இருக்க Formaldehyde மாதிரியான இரசாயனம் ஏதாவது போட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

பழுதாகாமல் இருக்க Formaldehyde மாதிரியான இரசாயனம் ஏதாவது போட்டிருப்பார்கள்.

ம் இருக்கும் என நினைக்கிறன் கணவாய் பல நாள் கணவாய்தான் விற்பார்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் போமலின் தூவிய மீன் என பல கிலோ மீன்களை  குப்பையில் வீசினார்கள் மீன் வியாபாரிகளுள் மொத்தமாக வாங்கி விற்பவர்கள் செய்யும் வேலைகள் அதிகம் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் இருக்கும் என நினைக்கிறன் கணவாய் பல நாள் கணவாய்தான் விற்பார்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் போமலின் தூவிய மீன் என பல கிலோ மீன்களை  குப்பையில் வீசினார்கள் மீன் வியாபாரிகளுள் மொத்தமாக வாங்கி விற்பவர்கள் செய்யும் வேலைகள் அதிகம் 

ஏனெனில் கணவாய் தின்று சாகும் அளவுக்கு வருவது சாத்தியமில்லை. Formaldehyde vapor ஏ கான்சரை தூண்டும். இவர்களுக்கு அவற்றைபற்றியெல்லாம் அறிவுமில்லை அக்கறையும் இல்லை. பள்ளிக்காலங்களில் வெள்ளவத்தை மற்றும் கொச்சிக்கடை போன்ற இடங்களில் வாங்கும் போது சிலவேளை ஒருவிதமான மணம் வரும். சிலவேளை வீட்டோட எல்லோருக்கும் ஒவ்வாமையும் வந்திருக்கு. அதற்கு பிறகு அப்பாவுடன் நானும் போய் வெள்ளவத்தை, தெகிவளை கடற்கரையில் அதிகாலை வந்திறங்கும் மீன் படகுகளில் இருந்து கடல் உணவுகளை வேண்டுவோம். இப்ப கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. அதிகாலை வேலை போய் ஆமைகளையும் பாப்போம். 

நாங்கள் ஐசில் வைத்த மீன்கள் சாப்பிடுவதில்லைஉடனே பிடித்த மீன் கடறகரை பக்கம் என்பதால் பிரச்சினை இல்லை மீனுக்கு ஆனால் தற்போது ஊரடங்கு என்ற படியால் பதப்படுத்திய மீனாக்கத்தான் இருக்கும் 

மாரிகாலங்களில் வரும்மீன் நம்ம பக்கம் ஒரு வாசமாக இருக்கும் மணம் வீசும் சமைத்து வைத்தாலும் பின்னர் சட்டியோட கொட்டினதா சில பேர் சொல்லக்கேட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மாரிகாலங்களில் வரும்மீன் நம்ம பக்கம் ஒரு வாசமாக இருக்கும் மணம் வீசும்

காரணம் தெரியுமா?

ஆனால் மாரியில் பிடிபடும் மீன்கள் தசைப்பிடிப்பானவையும், ருசியானவையும் என்பது எனது அனுபவம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்காலத்தில் இரசாயனம் கலக்காத உணவுப் பொருட்களே இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டது.

  • தொடங்கியவர்
6 hours ago, nilmini said:

பழுதாகாமல் இருக்க Formaldehyde மாதிரியான இரசாயனம் ஏதாவது போட்டிருப்பார்கள்.

ஒவ்வாமை என்பது allergic reaction? அப்படி என்றால் பெற்றோருக்கு முதல் முறை மகனுக்கு கணவாய் கொடுத்த பொழுதே தெரிந்திருக்க வேண்டும்? 

இல்லை நீங்கள் கூற வெறுப்பது போன்று வேறு இராசயன கலவை நஞ்சானதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

காரணம் தெரியுமா?

ஆனால் மாரியில் பிடிபடும் மீன்கள் தசைப்பிடிப்பானவையும், ருசியானவையும் என்பது எனது அனுபவம்.

நான் சொல்ல வந்தததை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை காரணம் மன்னார், கற்பிட்டி , சிலாபம் போன்ற பகுதிகளில் பிடிக்கின்ற மீன்களே வரும் வர நாட்கள் எடுக்கும் அப்படியான மீன்களை பழுதாகாமல் வைத்திருக்க மருந்து ஏதும் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறன் 

அது போக அப்படி கொண்டு வரும் மீன்களை இங்கு பொலிஷ் பண்ண ஒரு தண்ணியில் நுரையாக இருக்கும் அதற்குள் போட்டு அலசி எடுப்பார்கள்  ஒரு தொட்டியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் நுரையாக இருக்கும் 

நான் போமலின் கலந்த உணவு என்ற சொன்னது தமிழ்நாட்டிலே போமலின் கலந்த மீன்களை அரசு பறிமுதல் செய்தது செய்தியில் வந்தது 

சுகாதார பிரிவினர் விசாரணை செய்து மீன் விக்கிற ஆட்கள் மேல தவறிருந்தா கடும் தண்டனை குடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மாரிகாலங்களில் வரும்மீன் நம்ம பக்கம் ஒரு வாசமாக இருக்கும் மணம் வீசும் சமைத்து வைத்தாலும் பின்னர் சட்டியோட கொட்டினதா சில பேர் சொல்லக்கேட்டேன் 

மாரிகாலம் நல்ல ஓரா  மீன்கள் மழிவாக கிடைக்கும் கடற்கரையில், சமைத்து சாப்பிட நல்ல சுவை

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

பழுதாகாமல் இருக்க Formaldehyde மாதிரியான இரசாயனம் ஏதாவது போட்டிருப்பார்கள்.

நில்மினி..... நீங்கள் சொல்வதாய் ஏற்றுக் கொண்டாலும்,
அந்த மீன்காரர் விற்ற கணவாயில்... இவர்கள் ஒரு வீட்டில் மட்டுமே 
இந்தச் சம்பவம் நடந்துள்ளதை பார்க்கும் போது....
வேறு காரணிகளும், இருக்கலாம் என தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Rajesh said:

சுகாதார பிரிவினர் விசாரணை செய்து மீன் விக்கிற ஆட்கள் மேல தவறிருந்தா கடும் தண்டனை குடுக்க வேண்டும்.

கட்டுப்பாடுகள் அவசியம். சுகதப்பிரிவு இப்ப அடிக்கடி சோதனை செய்வதும் கஷ்டம். மீன்காரர்களும் பாவம் அவன்களும் நாட் கூலிகள், அவர்களுக்கு தெரியாமல் மொத்த வியாபரிகள் செய்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நில்மினி..... நீங்கள் சொல்வதாய் ஏற்றுக் கொண்டாலும்,
அந்த மீன்காரர் விற்ற கணவாயில்... இவர்கள் ஒரு வீட்டில் மட்டுமே 
இந்தச் சம்பவம் நடந்துள்ளதை பார்க்கும் போது....
வேறு காரணிகளும், இருக்கலாம் என தோன்றுகின்றது. 

சில மீன் விற்பவர்கள் பெட்டியில் ஒரு வீட்டுக்கு தேவையான அளவுதான் கணவாய்  நண்டு வகைகள் இருக்கும். இவர் வேற வீடுகளுக்கும் விற்றிருந்தால் நீர் சொன்னமாதிரித்தான் யோசிக்கவேணும் சிறி. அதிலயும் சிறுவர்களுக்கு தாக்கம் கூட. ஏனென்றால் சிறிய உடல் நிறைய நச்சு. கொஞ்சம் கூடவும் சாப்பிட்டிருப்பார். கணவாய் வீட்டோடு allergy ஆக்குவது சந்தேகமே . 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஒவ்வாமை என்பது allergic reaction? அப்படி என்றால் பெற்றோருக்கு முதல் முறை மகனுக்கு கணவாய் கொடுத்த பொழுதே தெரிந்திருக்க வேண்டும்? 

இல்லை நீங்கள் கூற வெறுப்பது போன்று வேறு இராசயன கலவை நஞ்சானதா ? 

சிறுவன் என்றபடியால் allergy ஆக இருந்தாலும் formaldehyde ஆக இருந்தாலும் பாதிப்பு அதிகம். ஏனென்றால் உடலுக்கும் நச்சுக்கும் உள்ள விகிதம் பெரியவர்களிடம் பார்க்க கூட. நிச்சயமாக allergy வந்துதான் இறந்துபோயிருந்தால் ( மூச்சுத்திணறி)  கணவாயால் தான் வந்திருக்கும் (உணவு ஒவ்வாமையால் வரும் allergy சிலபேருக்கு கடுமையாக்கி Anaphylactic shock வரும்- மூச்சுக்குழாய்கள் சுருங்கி விடும். Epinephrine ஊசி போட்டால்  பிள்ளை பிழைத்திருக்கும். அதற்குரிய வசதி இருந்திருக்காது. மேலை நாடுகளில் Epipen என்று pharmacy களில்  வாங்கலாம். அத்துடன் பல பொது கட்டடங்களிலும் சுவர்களில் பொருத்தி இருப்பார்கள் ). Formaldehyde நச்சு ஆனால் சாகிற அளவுக்கு allergy வராது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது தனிய கணவாய் சாப்பிட்டதால் மட்டும் இருக்காது...சேர்த்து சாப்பிட்ட ஏதோவொன்று ஒத்து வரவில்லை என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

மாரிகாலம் நல்ல ஓரா  மீன்கள் மழிவாக கிடைக்கும் கடற்கரையில், சமைத்து சாப்பிட நல்ல சுவை

மாரிகாலம் இங்கே கடலுக்கு செல்வதில்லை ஆட்கள் கடல் கொந்தளிப்பால் உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மாரிகாலம் இங்கே கடலுக்கு செல்வதில்லை ஆட்கள் கடல் கொந்தளிப்பால் உடையார்

மாரிகாலம்தான் நாங்கள் வாங்குவது கூட, மலிவாக கிடைக்கும் நம்மூர் கடல் கொந்திளிப்பதில்லை, காரைநகர் பாலத்தில் போய் நின்றால் எப்பவும் வாங்கலாம்

Jaffna-Manipay-Karainagar road,2018 - YouTube

Images of Sri Lanka on blogspot.com: Karainagar to Keerimalai ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

மாரிகாலம்தான் நாங்கள் வாங்குவது கூட, மலிவாக கிடைக்கும் நம்மூர் கடல் கொந்திளிப்பதில்லை, காரைநகர் பாலத்தில் போய் நின்றால் எப்பவும் வாங்கலாம்

ம் ஒரு தடவை சுற்றியுள்ளேன் காரை நகர் அழகிய கடற்கரைகள் உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கப்போன, அங்க இருந்து, உங்க வருற மீன் பாதுகாப்பானது போலை கிடக்குது.... இவர்கள் செக் பண்ணுவதால்... உந்த ரசாயணங்கள் இருக்காது.

இந்தியாவில் இருந்து வந்த மாம்பலத்தில் இருந்தது எண்டு ஒரு வருசம் இந்திய மாம்பழம் வர தடை. பாகிஸ்தானில் இருந்து மட்டுமே வந்தது.

தாங்கள் அங்கேயே கவனமாக இருப்போம் என்று இந்தியா சொல்லி, அனுமதி கிடைத்துள்ளது.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

இது தனிய கணவாய் சாப்பிட்டதால் மட்டும் இருக்காது...சேர்த்து சாப்பிட்ட ஏதோவொன்று ஒத்து வரவில்லை என்று நினைக்கிறேன் 

கொஞ்சம் சர்சைக்கு உரியதுதான்

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2020 at 08:45, nilmini said:

பழுதாகாமல் இருக்க Formaldehyde மாதிரியான இரசாயனம் ஏதாவது போட்டிருப்பார்கள்.

கணவாயில் உள்ள மை நஞ்சாக மாறலாம் என்று சிறிய வயதில் கேள்விப்பட்டுள்ளேன்.
மேலதிகமாக எதுவும் தெரியாது.
வயது போனவர்களைக் கேட்டால் விபரமாக சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கணவாயில் உள்ள மை நஞ்சாக மாறலாம் என்று சிறிய வயதில் கேள்விப்பட்டுள்ளேன்.
மேலதிகமாக எதுவும் தெரியாது.
வயது போனவர்களைக் கேட்டால் விபரமாக சொல்வார்கள்.😀

கணவாய் கழுவும் போது மை போய்விடும், அத்துடன் அம்மம்மா சமைக்கும்போது முருங்கை பட்டைகள் சில சேர்த்துதான் சமைப்பா, ஏனென்று இதுவரை தெரியா, இலகுவாக சமிபாடு அடைவதற்காக இருக்கலாம், சிலருக்கு கணவாய் சாப்பிட்டபின் வயிற்றுவலி வருவதுண்டு. நானும் முருங்கை இலையை கணவாயுடன் சேர்த்து சமைப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

கணவாயில் உள்ள மை நஞ்சாக மாறலாம் என்று சிறிய வயதில் கேள்விப்பட்டுள்ளேன்.
மேலதிகமாக எதுவும் தெரியாது.
வயது போனவர்களைக் கேட்டால் விபரமாக சொல்வார்கள்.

நிச்சயம் இருக்கலாம். இப்பதான் கணவாய்  கோரோனோ வுக்கு எதிராய்  செயற்படலாம் என்று எனது இந்திய ஆய்வாளர்களுடன் ஆலோசித்திகொண்டிருகிறேன் 

23 minutes ago, உடையார் said:

கணவாய் கழுவும் போது மை போய்விடும், அத்துடன் அம்மம்மா சமைக்கும்போது முருங்கை பட்டைகள் சில சேர்த்துதான் சமைப்பா, ஏனென்று இதுவரை தெரியா, இலகுவாக சமிபாடு அடைவதற்காக இருக்கலாம், சிலருக்கு கணவாய் சாப்பிட்டபின் வயிற்றுவலி வருவதுண்டு. நானும் முருங்கை இலையை கணவாயுடன் சேர்த்து சமைப்பேன்

முருங்கை இலை  மருத்துவ தன்மை நிறைந்தது . அதனால் தான் உங்கள் அம்மம்மா அதனை பாவித்திருப்பா 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.