Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

 

 

  by : Benitlas

Coronavirus-Worldwide-Update.jpg

வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/4000-கடற்படை-சிப்பாய்கள்-மற்/

  • Replies 82
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சைனா காரன் பிச்சையாய் குடுத்த சோதனை கருவிகள் தவறான முடிவுகளை காட்டுது போல் உள்ளது .

எங்க எங்கட ஊதுகுழல் மாமா ரம்புக்கல ....

எனது ""வீரர்கள்"" கொரோனாவை வென்று விடுவார்கள் என்கிறார் இப்ப .....

சத்தத்தையும் காணோம் !

இது பல்கி பெருகட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இது சொறீலங்கா முப்படைகளையும் கொடூரமாக தாக்கக் கடவ. மே 18 க்குள் இது உச்சமடைய வேண்டும்.

சர்வதேசம் வழங்க முன்வராத நீதியை குறைந்தது கொரானா கொடுக்கட்டும். 

( இது..சிங்கள அரசபயங்கரவாதத்தால் பதிக்கப்பட்ட ஒரு சராசரி தமிழனுக்குரியதான ஆதங்கப் பேச்சு மட்டுமே)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சைனா காரன் பிச்சையாய் குடுத்த சோதனை கருவிகள் தவறான முடிவுகளை காட்டுது போல் உள்ளது .

அவனுக்கு லாப நோக்கு மட்டுமே மலிவு விலையில்

20 minutes ago, nedukkalapoovan said:

இது சொறீலங்கா முப்படைகளையும் கொடூரமாக தாக்கக் கடவ. மே 18 க்குள் இது உச்சமடைய வேண்டும்.

சர்வதேசம் வழங்க முன்வராத நீதியை குறைந்தது கொரானா கொடுக்கட்டும். 

( இது..சிங்கள அரசபயங்கரவாதத்தால் பதிக்கப்பட்ட ஒரு சராசரி தமிழனுக்குரியதான ஆதங்கப் பேச்சு மட்டுமே)

இந்த சிங்கள இரத்த காட்டேரி இரணுவங்கள் இறந்தால் நன்று

மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி : இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி : இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/80676

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஸ்ட' வசமாக இன்னும் இலைங்கைத்தீவில் புலம் பெயர முடியாத தமிழ் மக்கள்ள வாழ்கிறார்கள்.

UPDATE – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரிப்பு

Coronavirus-Testing-Jaffna-.jpg

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 109 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

UPDATE – கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது.

மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு!

வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நேற்றும் 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்தநிலையில் இதுவரை மொத்தமாக 60 கடற்படை சிப்பாய்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/மேலும்-30-கடற்படையினருக்க/

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது சொறீலங்கா முப்படைகளையும் கொடூரமாக தாக்கக் கடவ. மே 18 க்குள் இது உச்சமடைய வேண்டும்.

சர்வதேசம் வழங்க முன்வராத நீதியை குறைந்தது கொரானா கொடுக்கட்டும். 

( இது..சிங்கள அரசபயங்கரவாதத்தால் பதிக்கப்பட்ட ஒரு சராசரி தமிழனுக்குரியதான ஆதங்கப் பேச்சு மட்டுமே)

உங்கள் துறை சார்ந்து இதை எழுத மனசாட்சி இல்லையா 😞

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான சிப்பாய்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு

வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை மொத்தமாக சிப்பாய்கள் 60 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

http://thinakkural.lk/article/39337

 

கடற்படை வீரர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடற்படையைச் சேர்ந்த 65 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த கடற்படை வீரர்களுடன் நெருக்கிப் பழகிய சகலரையும் பீ.சீ.ஆர் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடற்படை-வீரர்களுக்கு-பயணக்-கட்டுப்பாடு/175-249230

  • கருத்துக்கள உறவுகள்

70 சிப்பாய்களுக்கு கொரோனா

வெலிசர முகாமில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 70 சிப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து , அந்த முகாமில் உள்ள அனைத்து சிப்பாய்களையும் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பாதுகாப்பமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி நாலாயிரம் சிப்பாய்கள் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

ஒரே இடத்தில் கூடுதல் எண்ணிக்கையாளருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுவது இது முதற்தடவையாகும். இதன் முதற்கட்டமாக 400 பேருக்கு இன்று சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

http://thinakkural.lk/article/39359

கடற்படையினரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

1587751848-navy-logo-2.jpg

அனைத்து கடற்படையினரதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அனைத்து கடற்படை வீரர்களும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கூறியுள்ளார்.

குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/கடற்படையினரின்-விடுமுறை/

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

உங்கள் துறை சார்ந்து இதை எழுத மனசாட்சி இல்லையா 😞

 

நெடுக்ஸ் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை ☹️

எனது மனனிலையும் அதுதான். 😡

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

நெடுக்ஸ் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். உங்களுக்கு இதில் என்ன பிரச்சனை ☹️

எனது மனனிலையும் அதுதான். 😡

கொரோனா பரவினால் தனிய முப்படைகளோடு மட்டும் நின்று விடுமா😠 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கொரோனா பரவினால் தனிய முப்படைகளோடு மட்டும் நின்று விடுமா😠 
 

இது கேள்வி. 👍

ஆனால் நீங்கள் கேட்டது மனச்சாட்சி பற்றி. 🤥

ஆகவே இலங்கைப் படைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. 😡

  • கருத்துக்கள உறவுகள்

பேருவளையில் கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று

 

துசித குமார
வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி விடுமுறையில் பேருவளை-கனேஹரம்ப பங்களாவத்த பகுதிக்குச் சென்ற, கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (25) இரவு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை வீரர் சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பேருவளை பொதுச் சுகாதார அதிகாரி எச்.ஏ.டீ.சுரங்க தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய,இவருடன் நெருக்கிப் பழகிய குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட 50 பேர் வீடுகளிலேயே, சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (26) இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பேருவளை பொதுச் சுகாதார அதிகாரி எச்.ஏ.டீ.சுரங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பேருவளை பகுதியில் மாத்திரம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 48 பேர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பரவளயல-கடறபட-வரரகக-கரன-தறற/175-249262

  • கருத்துக்கள உறவுகள்

வெலிசறை முகாமுக்குள் மேலும் பலருக்கு கொரோனா: இராணுவத் தளபதி சொல்கிறார்

 

“வெலிசறை கடற்படை முகாமில் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டனர். இலங்கைக் கடற்படையின் பிரதான முகாம் இது. பல பகுதிகளில் இருந்தும் வந்து இங்கு பணியாற்றுகின்றனர். முதலில் அடையாளம் காணப்பட்ட சிப்பாயுடன் பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் பலர் அடையாளம் காணப்படக்கூடும்.எம்மால் முடிந்தளவுக்கு சிப்பாய்களைத் தனிமைப்படுத்தினோம்.”

இவ்வாறு தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா. நேற்றுக் காலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யார் என்றாலும் முப்படையினர் என்றாலும் நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.அதுவே நியதி. ஜா எல , சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையாளர்கள் பலர் கொரோனா தொற்றுடன் தப்பிச் செல்ல முயன்றபோது கடற்படைச் சிப்பாய்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர். சில போதைப்பொருள் பாவனையாளர்கள் மரத்தில் ஏறி இறங்காமல் இருந்து அவர்களைக் காப்பாற்ற மரத்தில் ஏறி இறங்கும் நிலை கூட சிப்பாய்களுக்கு இருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த முகாமில் இருந்து விடுமுறையில் வீடுகளுக்குச் சென்ற சிப்பாய்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். எனவே யாரும் அச்சப்படத் தேவையில்லை. போதுமானளவு சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

http://thinakkural.lk/article/39386

  • கருத்துக்கள உறவுகள்

சீதுவ இராணுவ முகாமில் கப்ரனுக்கு கொரோனா – முகாம் மூடப்பட்டது

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது.

இவரின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் இவருக்கும் தொற்று இருக்கக் காணப்பட்டது.

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 17:31, ரதி said:

உங்கள் துறை சார்ந்து இதை எழுத மனசாட்சி இல்லையா 😞

 

முள்ளிவாய்க்கால் அவலம் எப்படி உங்கள் மனச்சாட்சியைக் கடந்து போனதோ, அதுபோல் இதுவும் கடந்து போகும். 😌

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ கப்டனுக்கு கொரோனா; 150 பேருடன் சீதுவ முகாம் முடக்கம்!

நீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையிலேயே இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

  • IMG-20200426-WA0006-1024x576.jpg?189db0&
  • IMG-20200426-WA0007-1024x576.jpg?189db0&
  • IMG-20200426-WA0002-1024x576.jpg?189db0&
  • IMG-20200426-WA0005-1024x576.jpg?189db0&
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இது கேள்வி. 👍

ஆனால் நீங்கள் கேட்டது மனச்சாட்சி பற்றி. 🤥

ஆகவே இலங்கைப் படைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. 😡

அங்கே  புலிகள் போராடும் போது தப்பினால் காணும் என்று ஓடி வந்த உங்களால் வேறு எப்படி நினைக்க முடியும்?... சிங்களவனை எதிர்த்து நிற்க முடியாமல் அவன் வருத்தம் வந்தாவது சாகட்டும் என்று நினைப்பது கோழைத்தனம்...உண்மையான தமிழனுக்கு இது அழகல்ல 

54 minutes ago, Paanch said:

முள்ளிவாய்க்கால் அவலம் எப்படி உங்கள் மனச்சாட்சியைக் கடந்து போனதோ, அதுபோல் இதுவும் கடந்து போகும். 😌

மு.வாய்க்கால் அவலம் இலகுவில் கடந்து போகக் கூடியது இல்லை அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

மு.வாய்க்கால் அவலம் இலகுவில் கடந்து போகக் கூடியது இல்லை அண்ணா 

நன்றி ரதி அவர்களே! ஆதங்கம் அப்படி எழுதவைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

1) அங்கே  புலிகள் போராடும் போது தப்பினால் காணும் என்று ஓடி வந்த உங்களால் வேறு எப்படி நினைக்க முடியும்?.

.2)சிங்களவனை எதிர்த்து நிற்க முடியாமல் அவன் வருத்தம் வந்தாவது சாகட்டும் என்று நினைப்பது கோழைத்தனம்...

3)உண்மையான தமிழனுக்கு இது அழகல்ல 

4)  மு.வாய்க்கால் அவலம் இலகுவில் கடந்து போகக் கூடியது இல்லை அண்ணா 

1) ஆம் தாயே , நான் கோழைதான். கடைசிவரை அவர்களுடன் நின்று இறந்திருக்கலாம் என அடிக்கடி நினைப்பதுண்டு. ஆகக் குறைந்தது இந்த குற்றவுணர்ச்சியிலிருந்தாவது தப்பித்திருக்கலாம். 😢

2) நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன் அம்மணி. ஆனால் அந்தப் படைகளும்,  காட்டி கொடுத்தோர், கூட்டிக் கொடுத்தோர் மற்றும் இந்தியா அழிய வேண்டும் என என் மனம் நெடுனாளாய் யாசிக்கிறது. கோழையின் சாபம் பலிக்காது என்று ஒன்றும் இல்லையே. ☠️

3) நான் உண்மையான தமிழன் என்று கூறுகிறீர்களா அல்லது உண்மையான தமிழன் இல்லை என்கிறீர்களா ? உண்மையான தமிழன் அழகுபெற என்ன செய்ய வேண்டும் ? 🤔

(கவனம் வேண்டும். உங்கள் கருத்துக்களே உங்களுக்கெட்திராய் திரும்பக் கூடும்)

4) இதனால்தான் எல்லோரும் கூறுகிறோம். இந்தப் பேரவலத்திற்குக் காரணமானவர்கள் அழியவேண்டும் என. 😡

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.