Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில்

நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள்தான் கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களை காப்பாற்றுகிறவர்கள்.

இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கான உரிய பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள் என எதுவும் இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும்.

துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கொரோனாவுடன் போராட முடியாது. இதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதைப் போன்று, வைரஸுடன் சண்டையிட முடியாது.

கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினருக்கு இந்த தொற்று பரவியமைக்கான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்று பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். பாதுகாப்புத் துறையும், வைத்தியத் துறையும் இவ்வேளையில் பலமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு துறையும் பலவீனமடைந்த காரணத்தினால்தான் அமெரிக்காவின் நிலைமை தீவிரமடைந்தது. இதனை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நாம் இவ்வேளையில் ஒன்றிணைய வேண்டும்.

நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். இதனால், நாட்டை ஒரு மாதத்திற்கு முழுமையாக மூடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அடுத்து-வரும்-ஒரு-மாதத்த/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கொரோனாவுடன் போராட முடியாது. இதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதைப் போன்று, வைரஸுடன் சண்டையிட முடியாது.

யாரோ புலியை வென்ற எங்களுக்கு இந்த கொரானோ எல்லாம் சாதாரணம் என்றானுகள் இப்ப ஒரு மாத்திற்கு மூட சொல்கிறார்கள் 

நிவாரணம் கொடுங்கடா அரச ஊழியருக்கும் முடியல பொருட்கள் வேற கடைகளில் இல்ல குறைவாக இருக்கு ஒருமாதம் என்றால் ஏழைகள் வாழ்வு அதே கெதிதான் 😰

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாரோ புலியை வென்ற எங்களுக்கு இந்த கொரானோ எல்லாம் சாதாரணம் என்றானுகள் இப்ப ஒரு மாத்திற்கு மூட சொல்கிறார்கள் 

நிவாரணம் கொடுங்கடா அரச ஊழியருக்கும் முடியல பொருட்கள் வேற கடைகளில் இல்ல குறைவாக இருக்கு ஒருமாதம் என்றால் ஏழைகள் வாழ்வு அதே கெதிதான் 😰

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

எங்க அம்மா , மாமியார் குடும்பத்துக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கல நான் விடுங்கோ தேவையில்லை என்றேன் உடையார் ஆனால் நம்ம பெயரை பயன்படுத்தி யாரும் எடுத்துப்போவார்கள் என அம்மா சொல்கிறார் சுனாமியில் எங்கள் தந்தையின் பெயரை மாற்றியே கொள்ளையடித்தவர்கள் ஊரில் இருக்கிறார்கள் 

பிரதேச செயலாளரிடம் முறையிடுவோமென சொல்ல 1000 ரூபாவின் உணவு பொதி ஒன்று கிடைத்துள்ளது புலத்து தமிழர்கள் உதவிகள் சிலருக்கு  கிடைக்கிரது சிலருக்கு கிடைக்கல 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

“இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படையினர், பொலிஸார், என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

பாஞ்சர் பெற்றோல் விலை குறைவு என்டதுக்காக இப்படியா

30 minutes ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

நின்று கொன்ற அந்த தெய்வத்திற்கு  இந்த மக்கள் அழிப்பிற்கு கட்டளை கொடுத்தவர்களை தெரியவில்லை போலும். அதனால் தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சுவைப்பிரியன் said:

பாஞ்சர் பெற்றோல் விலை குறைவு என்டதுக்காக இப்படியா

விலை குறைவா...? சும்மாவே கிடைக்குமே நீச்சல் உடையில் சென்றால்! செய்தி ஒன்று பார்த்தேன் படத்துடன்.

BP_1_637097183333247905.-Then...-696x461.jpg 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய  குடும்பங்களை  தத்தெடுத்துள்ளேன்,
ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர்  உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது  ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

மிகப்பெரிய உதவி இது இந்த இக்கட்டான சூழ்நிலையில். உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றாக இருப்பீர்கள் குடும்பத்துடன்.

நானும் என்னால் இயன்ற உதவியை மகளிர் இல்லத்திற்கு செய்தேன் நில்மினி தந்தார் https://mahalirillam.org/au/ , இன்னும் மூன்று கிழமையில் அடுத்த கட்டம் உதவனும் , உங்களுக்கு கஷ்டப்படும் நேர்மையான காப்பகங்கள் இருந்தால் பதிவிடுங்கள், பலர் உதவலாம் விரும்பிய காப்பகங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க அம்மா , மாமியார் குடும்பத்துக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கல நான் விடுங்கோ தேவையில்லை என்றேன் உடையார் ஆனால் நம்ம பெயரை பயன்படுத்தி யாரும் எடுத்துப்போவார்கள் என அம்மா சொல்கிறார் சுனாமியில் எங்கள் தந்தையின் பெயரை மாற்றியே கொள்ளையடித்தவர்கள் ஊரில் இருக்கிறார்கள் 

பிரதேச செயலாளரிடம் முறையிடுவோமென சொல்ல 1000 ரூபாவின் உணவு பொதி ஒன்று கிடைத்துள்ளது புலத்து தமிழர்கள் உதவிகள் சிலருக்கு  கிடைக்கிரது சிலருக்கு கிடைக்கல 

 உங்களுக்கு தெரிந்த நல்ல நேர்மையான அமைப்புகள் தெண்டு நிறுவனங்கள் விபரம் தெரிந்தால், இதில் பதிவிட்டுவிடுங்கள்,  பத்து பேரவது உதவுவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நின்று கொன்ற அந்த தெய்வத்திற்கு  இந்த மக்கள் அழிப்பிற்கு கட்டளை கொடுத்தவர்களை தெரியவில்லை போலும். அதனால் தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.   

நீஙகள் ஏதோ ஒரு காரணமாக மிஸ்டர் கடவுள் மீது செம கடுப்பில் இருக்கிறீர்கள்.

ஒரு சரித்திர புத்தகம் வாசிக்கிறேன்.

ரோஜாக்களின் யுத்தம் என்பது இரு பிரபுக்களின் குடும்பத்தாருக்கு இடையே, யார் இங்கிலாந்து மன்னராவது அல்லது நீடிப்பது என்ற சண்டை.

முப்பது வருட சண்டை இறுதியாக, மூன்றாம் ரிட்சட் மன்னர் 1485ல் கொல்லப்பட, கென்றி மன்னராகிறார்.

தப்பும் மரணித்த அரசரின் படைவீரர்கள், எங்கேயோ அரசனை புதைத்து விட்டு ஓடுகிறார்கள். அந்த மன்னனின் உடலெச்சம் 529 ஆண்டுகள் பின்னர் கார்பார்க் தரிப்பிடம் ஒன்றை, கட்டிடம் அமைக்க தோண்டிய போது கிடைக்கிறது.

ஒரு மன்னனை எப்படி, ஒரு சாதாரண பிரபுவால் வீழ்த்த முடிந்தது என்று பார்த்தால், மன்னரின் கொடுமையான வேலை தெரிய வருகிறது.

அரசனாக இருந்த அவரது அண்ணன் இறந்து போக, குழந்தைகளாக இருந்த அண்ணன் பிள்ளைகள், குட்டி இளவரசர்கள் பெரியவர்கள் ஆகும் வரை தம்பி மன்னராகிறார்.

ரவர் ஆப் லண்டணில் தங்கி வளர்ந்து கொண்டிருந்த இளவரசர்கள், எங்கே என்று தெரியாமல் காணாமல் போகின்றார்கள்.

மன்னனும் முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிகிறார்.

நீண்டகாலத்தின் பின்னர், ரவர் ஆப் லண்டன் கோட்டை விஸ்தரிப்பின் போது, ஓரே பெட்டியில், சிறுவரின் எச்சம், கச்சிதமாக, சுவரினுள் வைத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

இன்றும், ரவர் ஆப் லண்டன் சரித்திரத்தில், அந்த சிறுவர்களின் அவல ஓலம் இரவு நேரத்தில் வருவதாக சொல்வார்கள்.

அந்த சிறுவர்களின் அவல கொலைகள், உடல் மறைப்பை, அதே மன்னரின் உடல் 529 ஆண்டுகள் கழித்தே 2014 ல் எடுக்கப்பட்டதையும், பின்னரே முறையான மரணசடங்குகள் நடந்ததையும் சேர்த்து, பறவைப்பார்வை (birds eye view) பார்த்தால், ஏதோ ஒன்று புரிகிறது.

ஆனாலும் அந்த முப்பதாண்டு காலத்தில், ஒரு துல்பன் இருந்து, கடவுளுக்கு கண் இல்லை  என்று நிச்சயமாக சொல்லி இருப்பார்.

அதன் பின்னர் , இங்கிலாந்து  அரச வரலாறில், இறந்துபோகும் மன்னரின் வாரிசு, ஒரே நாள் வயதாக இருந்தாலும் முடிசூட்டப்பட்டு, அந்த குழந்தை பெயரில் ஆட்சி நடக்கும் சம்பிரதாயம் வந்தது.

Edited by Nathamuni

7 hours ago, தமிழ் சிறி said:

இதனால், நாட்டை ஒரு மாதத்திற்கு முழுமையாக மூடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்

நாடு பட்ட கடன் சுமைகளையும் அரசியல்வாதிகள் கட்டிவிடல் வேண்டும். 

7 hours ago, தமிழ் சிறி said:

நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய  குடும்பங்களை  தத்தெடுத்துள்ளேன்,
ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர்  உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது  ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே 

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

20 minutes ago, நிழலி said:

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

நிழலி யாழ் இணையத்தின் மூலமாக ஒரு பொதுவான உதவித்திட்டத்தை தொடர்சசியாக நடைமுறைப்படுத்த முடியாதா?( விரும்பியவர்கள் வருட சந்தா செலுத்துவதன் மூலம்)

10 minutes ago, tulpen said:

நிழலி யாழ் இணையத்தின் மூலமாக ஒரு பொதுவான உதவித்திட்டத்தை தொடர்சசியாக நடைமுறைப்படுத்த முடியாதா?( விரும்பியவர்கள் வருட சந்தா செலுத்துவதன் மூலம்)

யாழ் இணையத்திற்கு விளம்பரம் மற்றும் அறிவித்தல்களை வழங்கும் போது செலுத்தப்படும் பணம், தாயகத்தில் உள்ள நலிவற்றவர்களுக்கே போய்ச் சேருகின்றது. இவ்வாறு அறிவித்தல்கள் விளம்பரங்கள் போட அவசியம் ஏற்படாமல் அதே நேரம் யாழினூடாக தாயகத்துக்கு உதவி செய்ய விரும்புவர்களுக்கான மாற்று வழி  இன்னும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு மனித வலு, முகாமைத்துவம், நிறைய நேரம், சட்ட ரீதியிலான சவால்கள் போன்ற நிறைய விடயங்கள் தேவைப்படும்.

இவற்றுக்கும் அப்பால் 'கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த மனிதர்கள்' அதிகம் இருக்கும் சமூகத்தில் இவற்றை செய்ய வெளிக்கிட்டு இருக்கும் நிம்மதியையும் தொலைக்க வேண்டி மோகனுக்கும் எமக்கும் வரலாம்.
 
15 minutes ago, நிழலி said:

நீங்கள் கூறுவதை விளங்கிக் கொள்ளுகிறேன். பல நடைமுறைச்சிக்கல்கள் உண்டு. ஆனால் விரும்பியவர்கள் பங்களிப்பு கொள்ளும் வகையில் வங்கிக்கணக்கை பிரசுரிப்பதன் முலம் தாங்கள் தற்போது செய்துவரும் உதவியை அப்படியே மேம்படுபடுத்தலாம் தானே. உ+ம் smartphone ல் share the meal app மூலம் விரும்பும் நேரத்தில் அழுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது.  அதைப் போல விரும்புபவர்கள் பங்கடுக்கலாம் தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

ம்ம்ம்....

இரதியின்ர வாய்க்கு அவல்....😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

நிச்சயமாக.... இதனை மட்டுவில் இருக்கும் எனது நண்பனுடன் சேர்ந்து ஒரு குழுவாக செய்கிறோம்..

அதாவது பொருட்களை  மொத்தமாக விற்பனை செய்யும் இரு நல்ல உள்ளங்கள் அவர்களது முழு இலாபத்தையும் தவிர்த்து கொள்முதல் விலைக்கே பொருட்களை தந்துதவுவதால் 1000 ரூபாய் பொதியை தயார் படுத்த எங்களுக்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
ஆகவே உதாரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பொதிகளை தயார் செய்தால் எங்களுக்கு மிஞ்சும் பணத்தை வைத்து மொத்தமாக 11 பொதிகளை தயார் செய்ய முடியும்.

2500 பொதி என்னும்போது மொத்தமாக ஒரு பொதியில் 250 ரூபாய் மிஞ்சும் 10 பொதி என்னும்போது மிஞ்சும் 2500 ஐ வைத்து 
மொத்தமாக 11 பொதிகளை செய்யலாம்.

எனது நண்பன் மட்டுநகரை சேர்ந்தவன் , அவனும் அவனது குழுவும் பணம் சேகரித்து ஒவ்வொரு தடவையும் குறைந்தது 250- ஆயிரம் ரூபாய் பொதிகளாவது செய்வார்கள்

எனது வதிவிடம் கல்முனை என்பதாலும் ,மற்றும் பொதியின் கனதி அதிகம் அத்துடன் நான் 20 பொதிகளை மட்டுமே கேட்டிருந்ததாலும் இந்த 20  பொதிகளை தனியாக செய்து வீட்டில் கொடுத்துவிடுவார். மிஞ்சும் 5000 ரூபாயில் 5 -ஆயிரம் ரூபாய் பொதிகளை செய்து அவர் விநியோகிக்கும் ஆயிரம் ரூபாய் பொதிகளுடன் சேர்த்து மட்டுவில் விநியோகம் செய்வார்.
மிகுதி விடயங்கள்,மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு தனி மடலில் தெரிவிக்கிறேன்

2 hours ago, tulpen said:

நீங்கள் கூறுவதை விளங்கிக் கொள்ளுகிறேன். பல நடைமுறைச்சிக்கல்கள் உண்டு. ஆனால் விரும்பியவர்கள் பங்களிப்பு கொள்ளும் வகையில் வங்கிக்கணக்கை பிரசுரிப்பதன் முலம் தாங்கள் தற்போது செய்துவரும் உதவியை அப்படியே மேம்படுபடுத்தலாம் தானே. உ+ம் smartphone ல் share the meal app மூலம் விரும்பும் நேரத்தில் அழுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது.  அதைப் போல விரும்புபவர்கள் பங்கடுக்கலாம் தானே. 

முகப்பில் மேலுள்ள பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாத்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக.... இதனை மட்டுவில் இருக்கும் எனது நண்பனுடன் சேர்ந்து ஒரு குழுவாக செய்கிறோம்..

அதாவது பொருட்களை  மொத்தமாக விற்பனை செய்யும் இரு நல்ல உள்ளங்கள் அவர்களது முழு இலாபத்தையும் தவிர்த்து கொள்முதல் விலைக்கே பொருட்களை தந்துதவுவதால் 1000 ரூபாய் பொதியை தயார் படுத்த எங்களுக்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
ஆகவே உதாரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பொதிகளை தயார் செய்தால் எங்களுக்கு மிஞ்சும் பணத்தை வைத்து மொத்தமாக 11 பொதிகளை தயார் செய்ய முடியும்.

2500 பொதி என்னும்போது மொத்தமாக ஒரு பொதியில் 250 ரூபாய் மிஞ்சும் 10 பொதி என்னும்போது மிஞ்சும் 2500 ஐ வைத்து 
மொத்தமாக 11 பொதிகளை செய்யலாம்.

எனது நண்பன் மட்டுநகரை சேர்ந்தவன் , அவனும் அவனது குழுவும் பணம் சேகரித்து ஒவ்வொரு தடவையும் குறைந்தது 250- ஆயிரம் ரூபாய் பொதிகளாவது செய்வார்கள்

எனது வதிவிடம் கல்முனை என்பதாலும் ,மற்றும் பொதியின் கனதி அதிகம் அத்துடன் நான் 20 பொதிகளை மட்டுமே கேட்டிருந்ததாலும் இந்த 20  பொதிகளை தனியாக செய்து வீட்டில் கொடுத்துவிடுவார். மிஞ்சும் 5000 ரூபாயில் 5 -ஆயிரம் ரூபாய் பொதிகளை செய்து அவர் விநியோகிக்கும் ஆயிரம் ரூபாய் பொதிகளுடன் சேர்த்து மட்டுவில் விநியோகம் செய்வார்.
மிகுதி விடயங்கள்,மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு தனி மடலில் தெரிவிக்கிறேன்

நன்றி பகிர்வுக்கு,  அக்னியஷ்த்ரா நானும் உங்களுடன் பங்கு கொள்ளாமா? எனக்கும் தனிமடலில் விபரத்தை தரும், என் உதவி தொகையை உமக்கு அனுப்பிடுகின்றேன் அல்லது தாயக கணக்கிற்கு

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 15:32, உடையார் said:

 உங்களுக்கு தெரிந்த நல்ல நேர்மையான அமைப்புகள் தெண்டு நிறுவனங்கள் விபரம் தெரிந்தால், இதில் பதிவிட்டுவிடுங்கள்,  பத்து பேரவது உதவுவார்கள் 

அமைப்புக்கள் உதவுகிறது சிலது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும்  சிலது நேர்னையற்றது முடிந்தால் சொந்தக்காரர் ஊடாக செய்யுங்கள் அதுவும் அவர்களுக்கு தெரிந்தவ்ர்களுக்கு மட்டும் அப்படி உதவி செய்ய போனாலும் கிராமசேவகர் நான் தரும் பெயர் லிஸ்டுக்குத்தான் கொடுங்கள்  என்ற கதையும் போகிறது உடையார் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.