Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் நியூயோர்க்கில் கண்டுபிடிப்பு!

Featured Replies

நியூயோர்க்கின், புரூக்ளினிலுள்ள மலர்ச்சாலைக்கு வெளியே நான்கு லொறிகளில் 60 சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ZUg_A4xA.jpg

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறிகளிலிருந்து ஒரு வித திரவம் வடிவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகளினால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு சடலங்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புரூக்ளினிலுள்ள ஆண்ட்ரூ கிளெக்லி மலர்ச்சாலைக்கு வெளியிலேயே இவ்வாறு குளிரூட்டப்பட்ட லொறிகளில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமுலாக்க வட்டாரம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், குறித்த உடல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக லொறிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அழுகிய நிலையில் உள்ளமையினால் துர் நாற்றம் வீசுகின்றது.

அதேநேரம் இந்த உடல்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த அநேகமானோரின் உடல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/81068

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்கள் உடல்கள் எரிக்கபடுவதே எல்லோருக்கும் பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

உலக வல்லரசின் உண்மையான நிலை இதுதான். ☹️

உலகின் பேரரசுகள் அத்தனையும் வீழ்ந்தது , அந்த மக்கள் அவ்வரசுகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கை  சிறுகச் சிறுக அற்றுப் போனதாலேயே. 🙂

அமெரிக்காவும் அந்த வரலாற்றின் ஓட்டத்தில் மெது மெதுவாக தன்னையும் இணைக்கத் தொடங்கி பல காலமகிவிட்டது துரதிட்ட வசமானது 🤥

  • கருத்துக்கள உறவுகள்

Guru En Aalu - Tamil Movie | Vivek romancing MS Baskar | Madhavan ...

அமெரிக்காவை.... உலகின், பெரிய நாடு... 
என்று வியந்தது.... எல்லாம், வீணாகி.. போச்சே... கோபால். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

உலக வல்லரசின் உண்மையான நிலை இதுதான். ☹️

உலகின் பேரரசுகள் அத்தனையும் வீழ்ந்தது , அந்த மக்கள் அவ்வரசுகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கை  சிறுகச் சிறுக அற்றுப் போனதாலேயே. 🙂

அமெரிக்காவும் அந்த வரலாற்றின் ஓட்டத்தில் மெது மெதுவாக தன்னையும் இணைக்கத் தொடங்கி பல காலமகிவிட்டது துரதிட்ட வசமானது 🤥

Donald Trump Wearing Corona Virus Mask Stock Vector (Royalty Free ...

அதுக்கு... நெருப்பு பத்த வைத்தவன்,  இந்த பரட்டை  தலையன்... ட்ரம்பு . 😎 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்கள் உடல்கள் எரிக்கபடுவதே எல்லோருக்கும் பாதுகாப்பானது.

இங்கு சிறிய சிறிய பிரச்சனைகளை வைத்து கோடிக் கணக்காக நஸ்டஈடு கோருவார்கள்.இந்தியா இலங்கை போல அரசு நினைத்த உடன் செயல்படுத்த முடியாது.

இதற்கென்று புதிய சட்டங்கள் இயற்ற வேண்டும்.பாராளுமன்றைக் கூட்ட வேண்டும்.இப்போதைக்கு முடியாது.

நியூயோர்க் ஆஸ்பத்திரிகளைச் சுற்றியே நிறைய குளிரூட்டப்பட்ட பார்தஊர்திகள் நிறைய அடுக்கி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
என்ன தான் நடக்கப் போகுது என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Donald Trump Wearing Corona Virus Mask Stock Vector (Royalty Free ...

அதுக்கு... நெருப்பு பத்த வைத்தவன்,  இந்த பரட்டை  தலையன்... ட்ரம்பு . 😎 

உண்மையில் Trump அமெரிக்க வீழ்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தியவரே தவிர ஆரம்பித்தவரல்ல. அமெரிக்காவின் வீழ்ச்சியை வரலாற்றில் பதிவு செய்யும்போது, அமெரிக்க வரலாற்றில் விடப்பட்ட தவறுகள், தோல்விகள் எல்லாவற்றின் பழி முழுது Trump ன் மீதே விழும்..  ☹️

பாவம், இரக்கத்திற்குரிய மனிதர். 🤥

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kapithan said:

உண்மையில் Trump அமெரிக்க வீழ்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தியவரே தவிர ஆரம்பித்தவரல்ல. அமெரிக்காவின் வீழ்ச்சியை வரலாற்றில் பதிவு செய்யும்போது, அமெரிக்க வரலாற்றில் விடப்பட்ட தவறுகள், தோல்விகள் எல்லாவற்றின் பழி முழுது Trump ன் மீதே விழும்..  ☹️

பாவம், இரக்கத்திற்குரிய மனிதர். 🤥

இவரை ஐனாதிபதி ஆக்கியவர்களே முட்டாள்கள், தெரிந்துகொண்டே இந்த முட்டாளை தெரிவு செய்தார்கள், அனுபவிக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

இவரை ஐனாதிபதி ஆக்கியவர்களே முட்டாள்கள், தெரிந்துகொண்டே இந்த முட்டாளை தெரிவு செய்தார்கள், அனுபவிக்கட்டும்

இனி வருபவர் இவரைவிட முட்டாளாக அடையாளப்படுத்தப்படுவார். இந்த வீழ்ச்சி வேகமெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.  ஏனென்றால் இது ஒரு சங்கிலித் தொடர்(?) (Dominos effect) போன்றது.  ஆரம்பித்து வைத்தவராக  Trump தூற்றப்படுவார், அமெரிக்கர்களால். ☹️

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவே நாறி விட்டது..........

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு தெரிந்த எதிரி என்றால் இந்நேரம் அடித்து நொறுக்கி இருப்பார்கள்.....இது எதிர்பாராமல் ஏற்பட்ட  விபத்து ....யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இப்படி நடந்தது நடந்துதான் இருக்கும்.அமெரிக்கா மட்டுமல்ல பாதிக்க பட்ட அத்தனை நாடுகளும் இந்தக் கொரோனாவின் கோரத்தை எதிர்பார்த்திருக்க வில்லை.  இந்நேரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சுமத்தாமல் எல்லோரும் சேர்ந்துதான் கொரோனாவை ஒழிக்க வேண்டும்......!  

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாகவே வெள்ளையள் என்றால் கிராம பகுதியில் படித்தவர் , நுனி நாக்கு ஆங்கிலம் , நாலும் தெரிந்தவர் ,  புதுப்புது ஆராய்ச்சி எல்லாம் அவர்களால் தான் முடியும் ..

DjhaAiUU0AI3hGR.jpg

அதுகும் அமெரிக்கா போனால் மாநகராட்சியில் இடத்தை வாங்கி போட்டு கல்யாண மண்டபம் , வியாபார கொம்பளக்ஸ் கட்டி போட்டு வாழ்க்கையில் செற்றில் ஆகலாம் என நினைத்த கனவு எல்லாத்தையும் சல்லி சல்லியா ஒடச்சுட்டெளே..! ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் விம்பமே இந்த குரோனாவுடன் உடைந்து போயிட்டுது 

  • தொடங்கியவர்

அமேரிக்கா தான் கோவிட் 19க்கு மருந்தும் செய்யும் / கண்டுபிடிக்கும் . காரணம், உலகிலேயே அதிக பணம் ஆய்விற்கு செலவழிக்கும் நாடு. 

உலக சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்க நாடு தான் அதிக பணம் தருகின்றது. 

அமெரிக்க நாட்டின் வர்த்தக  கட்டமைப்பு மிக மிக மிக மிக பலமானது. 

எல்லாமே ரிமோட்டில் செய்ய நினைச்ச அமெரிக்கர் இப்ப நிறையவே குழம்பிப்போய் இருக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

அமேரிக்கா தான் கோவிட் 19க்கு மருந்தும் செய்யும் / கண்டுபிடிக்கும் . காரணம், உலகிலேயே அதிக பணம் ஆய்விற்கு செலவழிக்கும் நாடு. 

உலக சுகாதார அமைப்பிற்கும் அமெரிக்க நாடு தான் அதிக பணம் தருகின்றது. 

அமெரிக்க நாட்டின் வர்த்தக  கட்டமைப்பு மிக மிக மிக மிக பலமானது. 

ஆனால் சுகாதாரக் கட்டமைப்பு மூன்றாம் உலகக் நாடுகளைவிடப் பலவீனமானது 🙂

  • தொடங்கியவர்
4 hours ago, Kapithan said:

ஆனால் சுகாதாரக் கட்டமைப்பு மூன்றாம் உலகக் நாடுகளைவிடப் பலவீனமானது 🙂

உலகிலேயே மிக சிறந்த மருத்துவ வசதிகள் அமெரிக்காவிலேயே உண்டு. ஆனால், அவற்றை பெற பணம் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உலகிலேயே மிக சிறந்த மருத்துவ வசதிகள் அமெரிக்காவிலேயே உண்டு. ஆனால், அவற்றை பெற பணம் வேண்டும். 

இதைச் சொல்வது ஒப்பறேசன் சக்சஸ்  பேசன்ற் டெட் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/5/2020 at 17:47, ரதி said:

அமெரிக்காவின் விம்பமே இந்த குரோனாவுடன் உடைந்து போயிட்டுது 

அமெரிக்கா எல்லாத்துக்கும் பிரமாண்டம் தானே...😁

எங்கடை சனம் அங்கை என்னெண்டுதான் சீவியம் நடத்தினமோ??? எனக்கெண்டால் ஒண்டுமே விளங்கேல்லை 🤣🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.