Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்லைன்(online)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனகரிடம் கிளாசை கொடுத்து

" அண்ணே எடுங்கோவன் என்றேன்",

"லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில்  சொல்லிபோட்டு வாரேன்"

 ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன்

 ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார்

"‍‍ஹலோ "

"லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்"

போனை கையால் பொத்திக்கொண்டு

"லட்சுக்கு பொர் அடிக்குதாம்   என்ன செய்ய" என்றார் .

அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன்.

"நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி"

"சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்"

"மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி

"‍ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்"

மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ...

"மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா.

"உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்கமுதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்"

போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார்.

"டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்"

என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை.

"உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்"

" ஏன் அப்படி சொல்லுறீயள்"

 வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன்

"வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை"

அவர் சொன்னமாதிரி செய்து போட்டு ..

""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்"

"இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை"

"சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்"

"அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..."

"அண்ணே  எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட  மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ"

"டேய்,  டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்"

 "சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால்  வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும்  அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்"

"இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...."

"இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே  மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ"

"டேய் டேய்"

மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது

"என்ன சத்தம் அங்க‌ ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்"

மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார்.

இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது

"இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்"

உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன்.

மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார்.

"‍ஹலோ மாமி" என்றேன்

எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழமையாக மாமியை அக்கா என  அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால் பாவனையின் எல்லைக்கு வந்திட்டார்   என நினைத்து கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும்.

" "‍ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ "

"ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்"

"ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கடவுள்தானே" என மாமா கேட்டார்

"கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்"

"இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?"

"நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே"

"ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கனசெலக்சன் இருக்கு"

"நாளைக்கு ஒடர் பண்ணி எடும்"

"ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா சூஸ் பண்ண இஸியாக இருக்கும்"

மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் .

"என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்"

"இன்றைக்கு பேத்தியின்ட  பேர்த்டெ "

"நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்"

"பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு  வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான்  அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்"

"வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி"

"நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்"

"சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்"

"கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை  பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்"

"ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார்.

"நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு"

"  கண்ணா நீ வெஸ்டியை எடு"

" தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?"

"தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில் பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?"

"கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை"

"இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ"

"நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ"

என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து

"இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது  இதை கொம்பூயுட்டருக்கு முன்னாலவையுங்கோ நான் வீட்டை போறன்"

"லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்"

ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு

"கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்"

"இருங்கோ பார்த்து சொல்லுறன் "

பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில  தொடங்கப்போயினம்.

"அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை"

சொல்லியபடியே  மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள்.

" என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா"

"இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்"

"அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்"

"நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன நினைக்கிறாய்"

"இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில் வைச்சு கூத்தடிக்குதுகள்"

"அதேன்ன இன்லைன்"

"உள்ளக் கமலத்தில்"

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்காலத்தில் பூசைகள் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு முன்னோட்டம்தான்....பூத்தட்டை கொம்யூட்டருக்கு முன்னாள் வைக்கலாம், ஐயர் பிரசாதத்தை எப்படித் தருவார்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

எதிர்காலத்தில் பூசைகள் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு முன்னோட்டம்தான்....பூத்தட்டை கொம்யூட்டருக்கு முன்னாள் வைக்கலாம், ஐயர் பிரசாதத்தை எப்படித் தருவார்.....!   😁

சுவியர், எதிர்காலம் இல்லை. பழைய காலத்திலேயே, எனக்கு தெரிந்து 12 வருசமா நடக்குதே.

எந்த கோவிலில, எந்த சாமிக்கு எண்டு செலக்ட் பண்ணி, என்ன பூசை வேணும் எண்டு, காசையும், பெயர் நட்ஷத்திரம் கொடுத்தால், பூசை செய்து, பிரசாதம் போஸ்டில் வருகிறது.

இன்னும் கொஞ்சம் கூட காசு கொடுத்ததால், அய்யர் பூசை பண்ணுவதை வீடியோ பிடித்து அனுப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

உண்மைதான் நாதம்ஸ்.....சில பிரபலமான ஆலயங்களில் முன் பதிவு செய்தால் அது மூன்று நான்கு வருடங்களுக்குப் பின்தான் திகதி குடுப்பினம். அதற்குள் முன் பதிவு செய்தவர் முன்னுக்கு போயிடுவார்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கல்லில் பல மாங்காய்கள்.இன்னும் பல விடையங்களை தொட்டு கிறுக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையான விடுப்புக்களோடை ஒரு தண்ணியடிக்கதைக்கு நன்றி புத்தன்.அது சரி தண்ணிக்கு என்ன ரேஸ்ற் எடுக்கிறனீங்கள்? 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

எதிர்காலத்தில் பூசைகள் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு முன்னோட்டம்தான்....பூத்தட்டை கொம்யூட்டருக்கு முன்னாள் வைக்கலாம், ஐயர் பிரசாதத்தை எப்படித் தருவார்.....!   😁

நான் டெய்லி லைவ்விலை பாத்து அரோகரா சொல்லிட்டுத்தான்  வேலைக்கு போறனான்.🙏🏿

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...சுவி..
விபூதியை ஒன்லைனில் முதலே ஓடர் பண்ணி கொம்பூட்டருக்கு பக்கத்தில் வைக்க வேண்டும் ....ஸ்பேசல் அப் ஒன்று உருவாக்கி ஐயர் "விபூதி பிரசாதம் நமக" என்றவுடன் பக்கற்றிலிருந்து சிறிது விபூதி வரும் ....

கடலை ,அவல் பொங்கல் எல்லாம் இரண்டு மணித்தியாலத்தில் வீட்ட  கூறியர் செர்விஸில வரும்.....😃

16 hours ago, suvy said:

எதிர்காலத்தில் பூசைகள் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு முன்னோட்டம்தான்....பூத்தட்டை கொம்யூட்டருக்கு முன்னாள் வைக்கலாம், ஐயர் பிரசாதத்தை எப்படித் தருவார்.....!   😁

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...சுவி..
விபூதியை ஒன்லைனில் முதலே ஓடர் பண்ணி கொம்பூட்டருக்கு பக்கத்தில் வைக்க வேண்டும் ....ஸ்பேசல் அப் ஒன்று உருவாக்கி ஐயர் "விபூதி பிரசாதம் நமக" என்றவுடன் பக்கற்றிலிருந்து சிறிது விபூதி வரும் ....

கடலை ,அவல் பொங்கல் எல்லாம் இரண்டு மணித்தியாலத்தில் வீட்ட  கூறியர் செர்விஸில வரும்.....

16 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு கல்லில் பல மாங்காய்கள்.இன்னும் பல விடையங்களை தொட்டு கிறுக்கவும்.

நன்றி சுவைப்பிரியன் கிறுக்கல் தொடரும் உங்கள் உற்சாகமான வரவேற்பு இருக்கும் வரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

வழமையான விடுப்புக்களோடை ஒரு தண்ணியடிக்கதைக்கு நன்றி புத்தன்.அது சரி தண்ணிக்கு என்ன ரேஸ்ற் எடுக்கிறனீங்கள்? 😎

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கு.சா....அரசாங்கம் அனுமதித்தால் ஆட்டிறைச்சி பொரியல் மிளகுதூள் போட்டு பிரட்டினது...

சட்டவிரோதமாக அடிக்கும் பொழுது மிக்சர்,ரொஸ்டட் பிநட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கு.சா😃

  • கருத்துக்கள உறவுகள்

இங்க லண்டனிலும் எல்லாக் கோயில்களும் ஒன்லைன் பூசை நடக்குது ...திருவிழாக்கள் முடியும் மட்டும் கோயில்கள் திறக்கேலாமல் பண்ணினால் நிம்மதி 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 05:49, ரதி said:

இங்க லண்டனிலும் எல்லாக் கோயில்களும் ஒன்லைன் பூசை நடக்குது ...திருவிழாக்கள் முடியும் மட்டும் கோயில்கள் திறக்கேலாமல் பண்ணினால் நிம்மதி 😁

அப்படி சொல்லப்படாது சாமிக்குற்றமாகிவிடும்.....😃

முள்ளிவாய்க்கால் நிகழ்வும் ஒன்லைனில் புலம்பெயர்மக்கள் நடத்தும் பொழுது தாயக மக்கள் சிறிலங்கா கொரனா சட்டத்தை மதித்து அதற்கு ஏற்ற வகையில் நடத்துகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை நேரில் கண்டால் வெருண்டடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். இனி ஒன்லைனில்தான் வாழ்க்கையின் பெரும்பகுதி போகும்!

கடவுளரும் நைவேத்தியங்களை ஒன்லைனில் உண்பதில் பிரச்சினை இல்லையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 16:56, கிருபன் said:

ஆட்களை நேரில் கண்டால் வெருண்டடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். இனி ஒன்லைனில்தான் வாழ்க்கையின் பெரும்பகுதி போகும்!

கடவுளரும் நைவேத்தியங்களை ஒன்லைனில் உண்பதில் பிரச்சினை இல்லையே!

குடும்பம் நடத்திறதும் ஒன்லைனில் என்று வந்தால் தான் பிரச்சனை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, putthan said:

குடும்பம் நடத்திறதும் ஒன்லைனில் என்று வந்தால் தான் பிரச்சனை

வணக்கம் புத்தன்! இப்ப கன குடும்பம் ஒன்லைனிலைதான் நடக்குது கண்டியளோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வணக்கம் புத்தன்! இப்ப கன குடும்பம் ஒன்லைனிலைதான் நடக்குது கண்டியளோ :grin:

உண்மைதான் நேற்று.... கனடா, அவுஸ், இலங்கை, அமெரிக்க, 8 நணபர்கள்.... ஸசூமில் இணைந்து..... இராமாயணம் படித்தோம்.... ரேஸ்ட்.... மிக்சர்... பச்சத்தண்ணீயோட.... வித்தியாசமான அனுபவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயர்மார் புதுவழிகளை தேர்ந்தெடுக்கனும் வருவாய்க்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

வணக்கம் புத்தன்! இப்ப கன குடும்பம் ஒன்லைனிலைதான் நடக்குது கண்டியளோ :grin:

2வது   அலை வந்து ....ஒரு அறைக்குள் ஒரு ஆள் தான் என்ற  சட்டம் வந்தால் என்ன செய்யிறது

1 hour ago, Nathamuni said:

உண்மைதான் நேற்று.... கனடா, அவுஸ், இலங்கை, அமெரிக்க, 8 நணபர்கள்.... ஸசூமில் இணைந்து..... இராமாயணம் படித்தோம்.... ரேஸ்ட்.... மிக்சர்... பச்சத்தண்ணீயோட.... வித்தியாசமான அனுபவம்.

ஒன் லைனில் ஒசியில் தண்ணியடிக்க ஏலாது 😀

56 minutes ago, உடையார் said:

ஜயர்மார் புதுவழிகளை தேர்ந்தெடுக்கனும் வருவாய்க்கு

அவையளுக்கு தெரியாத வழிகளா

  • கருத்துக்கள உறவுகள்

10 வருடத்துக்கு பிறகு வர பழக  அனுபவிக்க வேண்டிய தொழில் நுட்பம் இப்பவே வந்து துலைத்து விட்டது . இனி virtual reality goggles மூலம் மீட்டிங்குகள்  படிப்புக்கள் . வீடுகள் வாங்குவது ,சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங் செய்வது போன்ற பல வேலைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்  போதாக்குறைக்கு அவுஸ் காரர் இப்ப இருக்கும் இணைய வேகம் போல் ஒரு லட்ஷம் மடங்கு வேகம் கொண்ட இணைய பொறிமுறையை கண்டு பிடித்து உள்ளனர் .https://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/internet-speed-world-record-fastest-download-a9527236.html?utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR3t9GRRSjVzlfB3PAh24YbmrPqV-wAI4ev_XxHa-t7AL-4G7FBnlxPNMqs#Echobox=1590138481

இது வந்த பின் ரொபோ மூலம் ஊரில் இருந்தபடி லண்டனில் உள்ள வீட்டில் சுமோ அண்டி  தோட்டம் போட்டு பராமரித்து  அதை யாழில் எழுதி குமராசாமியாரிடம் எழுத்து எறி  வாங்குவா .😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

குமாரசாமியார் சும்மாவே இருப்பார்.

வேர்சுவலா, யாழ்பாணத்து கள்ளு கொட்டடிலி தண்ணிய போட்டுக்கொண்டு, சுமே அக்காவிண்ட ரெசிப்பிக்கு விளப்பம் சொல்லிக்கொண்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 02:40, putthan said:

அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்"

இப்போ பக்திப் படங்கள் வெளிவருவதில்லை.
முன்னர் அப்பப்ப வரும்.அந்த படங்கள் பார்க்கும் போது சிலபேர் தலையில் கை வைத்து கும்பிட்டதையும் பார்த்திருக்கிறேன்.அதே போல எண்ண வேண்டியது தான்.

6 hours ago, குமாரசாமி said:

வணக்கம் புத்தன்! இப்ப கன குடும்பம் ஒன்லைனிலைதான் நடக்குது கண்டியளோ :grin:

என்ரை குடும்பமும் அப்படி தான் நடக்குது.ஒருக்கா நியூயோர்க் போட்டுவருவம் என்றா பிள்ளைகள் விடுறாங்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒன்லைனில கல்யாணம் நடக்கிறது ஐயர் வீடியோ கோலில் மந்திரம் சொல்கிறார் புத்தன் ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ பக்திப் படங்கள் வெளிவருவதில்லை.
முன்னர் அப்பப்ப வரும்.அந்த படங்கள் பார்க்கும் போது சிலபேர் தலையில் கை வைத்து கும்பிட்டதையும் பார்த்திருக்கிறேன்.அதே போல எண்ண வேண்டியது தான்..

அந்த காலத்தில் ரேடியோவில் நல்லூர்தேதிருவிழாவை வர்ணனை செய்து ஒலிபரப்புவார்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபணம் ,எனது பாட்டி அரோகரா சொல்லிக்கொண்டு கும்பிட்டுகொண்டிருப்பா...நாங்கள் சத்தம் போட்டால் எங்களுக்கு திட்டு விழும்...

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப ஒன்லைனில கல்யாணம் நடக்கிறது ஐயர் வீடியோ கோலில் மந்திரம் சொல்கிறார் புத்தன் ஐயா

முதலிரவு எப்படி ஒன்லைனில் 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

முதலிரவு எப்படி ஒன்லைனில் 😀

இது பேசாப்பொருள் இல்லையோ? WebCam என்று கேள்விப்பட்டதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

முதலிரவு எப்படி ஒன்லைனில் 😀

இந்த கொரானோ காலத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டுமாம் கட்டிப்பிடிக்க தடையாம் புத்தரே

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சுடச் சுட எல்லாத்தையும் அலசியிருக்கிறியள் கதையினூடாக. நான் ஒருநாளும் ஒன்லைனில் உடைகளோ சேலையோ எடுக்கேல்லை எண்டால் நம்புவியளா ????😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.