Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமீபகால சர்ச்சை சுமந்திரன் தன்னிலை விளக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people standing and outdoor

ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !!

நல்ல சமாளிப்புக்கேசன்.. சும் அங்கிள். 

உண்மையை சொல்லறதை விட்டுட்டு பொய் சொல்லி சிங்களவனை ஏமாத்த நினைக்கிறாராம் இந்த சுத்துமாத்து சுமந்திரன். எங்களுக்கு சிங்களமும் தெரியும். எனவே இங்க தமிழரை ஏமாத்த வேண்டாம்.

ஒற்றை ஆட்சியை சமஸ்டி தீர்வு என்டு ஏமாத்த முனைஞ்ச சுத்துமாத்து சுமந்திரன்.மீண்டும் ஒரு துரோகச் செயலில் இறங்கியுள்ளார். 

45 minutes ago, nedukkalapoovan said:

ஜே வி பி தூக்கினது என்ன பொல்லாங்கட்டையா.. அல்லது இரும்புக் கம்பியா..??! இதுக்கு தன்னிலை விளக்கம் என்ன சார்.. சும். !!

இப்பிடி சுமந்திரனின் சுயரூபங்களை வெளிப்படுத்தினா எப்பிடி?

96824794_2071473006332019_74644068483685

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவின் செவ்வியை ஜீவன் (யாழ் களத்தில் முன்னர் இருந்த அஜீவன் என்று நினைக்கின்றேன்) முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். 

அதை வாசித்தளவில், சுமந்திரன் ஐயா சமாளிக்கத்தான் இந்த  வீடியோவை  விட்டுள்ளார் என்று தெரிகின்றது. சிங்கள ஊடகரின் கடுமையான கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே சொதப்பலான விடைகளைக் கொடுத்து கொஞ்சம் எரிச்சல்பட்டிருப்பார். அதனால் நிதானமாக யோசித்து பதில் அளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்குக் கட்சியும் ஒன்றென்ற மாதிரி சுமந்திரன் ஐயா பதிலளிக்க ஆரம்பித்ததை ஊடகர் கேள்விக்குள்ளாக்கியபோதே சுதாகரித்து இருக்கவேண்டும்.😀

வீடியோவில் புலிகளின் அர்ப்பணிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றார். ஆனால் அதை செவ்வியில் சொல்லாமல் விட்டுவிட்டார்!☺️

போராட்டம் என்று மொழிபெயர்த்தது பிழை என்கின்றார். ஆயுத நடவடிக்கை/செயற்பாடு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கின்றார்.

சரி. அஹிம்சையை நம்பும் சுமந்திரன் ஐயா ஆயுத நடவடிக்கைகளை/செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கொடுத்து மாட்டுப்பட்டதற்குப் பதிலாக ஏன் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் போரிட்டார்கள், ஏன் தோல்வியைத் தழுவினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் புலிகளின் அரசியல்/ஆயுதச் செயற்பாடுகளை விரும்பாததால் சுருக்கமாக முடித்துவிட்டார்!

Quote

சமுதித்த : நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
சுமந்திரன்: இல்லை நான் ஏற்றுக் கொள்ளவில்லை
சமுதித்த :  ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை
சுமந்திரன்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன் . அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன.  அவர் எங்களுக்காக தானே போராடினார் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்கு காரணம் நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்ல

சமஸ்டியைப் பற்றி விளக்கம் கொடுத்தது ஒன்றுதான் உருப்படியான பதில். ஆனால் அது ஒருபோதும் தீர்வாக வராது. சமஸ்டி என்றாலே பிரிவினை என்று 90 வீதம் சிங்களவர்கள் நம்புகின்றாகள் என்று சுமந்திரன் ஐயாவே ஒத்துக்கொள்ளும்போது, சமஸ்டியைப் பற்றி சிங்கள அரசு இன்னும் 300 ஆண்டுகள் சென்றாலும் பேசாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சும்முக்கு வகுப்பெடுக்கும் சிவாஜி

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் ஐயாவின் செவ்வியை ஜீவன் (யாழ் களத்தில் முன்னர் இருந்த அஜீவன் என்று நினைக்கின்றேன்) முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். 

அதை வாசித்தளவில், சுமந்திரன் ஐயா சமாளிக்கத்தான் இந்த  வீடியோவை  விட்டுள்ளார் என்று தெரிகின்றது. சிங்கள ஊடகரின் கடுமையான கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே சொதப்பலான விடைகளைக் கொடுத்து கொஞ்சம் எரிச்சல்பட்டிருப்பார். அதனால் நிதானமாக யோசித்து பதில் அளிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்குக் கட்சியும் ஒன்றென்ற மாதிரி சுமந்திரன் ஐயா பதிலளிக்க ஆரம்பித்ததை ஊடகர் கேள்விக்குள்ளாக்கியபோதே சுதாகரித்து இருக்கவேண்டும்.😀

வீடியோவில் புலிகளின் அர்ப்பணிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றார். ஆனால் அதை செவ்வியில் சொல்லாமல் விட்டுவிட்டார்!☺️

போராட்டம் என்று மொழிபெயர்த்தது பிழை என்கின்றார். ஆயுத நடவடிக்கை/செயற்பாடு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கின்றார்.

சரி. அஹிம்சையை நம்பும் சுமந்திரன் ஐயா ஆயுத நடவடிக்கைகளை/செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கொடுத்து மாட்டுப்பட்டதற்குப் பதிலாக ஏன் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் போரிட்டார்கள், ஏன் தோல்வியைத் தழுவினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் புலிகளின் அரசியல்/ஆயுதச் செயற்பாடுகளை விரும்பாததால் சுருக்கமாக முடித்துவிட்டார்!

சமஸ்டியைப் பற்றி விளக்கம் கொடுத்தது ஒன்றுதான் உருப்படியான பதில். ஆனால் அது ஒருபோதும் தீர்வாக வராது. சமஸ்டி என்றாலே பிரிவினை என்று 90 வீதம் சிங்களவர்கள் நம்புகின்றாகள் என்று சுமந்திரன் ஐயாவே ஒத்துக்கொள்ளும்போது, சமஸ்டியைப் பற்றி சிங்கள அரசு இன்னும் 300 ஆண்டுகள் சென்றாலும் பேசாது!

பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து போட்டு ,எப்படி அவரால் புலிகள் ஆயுதம் ஏந்தியது சரி என்று சொல்ல முடியும் ?...புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்று அவருக்கே தெரியுமோ🤔 ,தெரியாது :unsure:...அவர் எப்படி சிங்களவர்களுக்கு விளங்கப்படுத்துவார் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் கூறுவது உண்மைதான். சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் அதனை அப்பட்டமாகக் வெளியே கூற முடியாது.

ஆனால் தமிழரது கோபம் தனியே இந்தப் பேட்டியை மட்டும் வைத்து வந்ததல்ல. அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய நாட்களிலிருந்தே இதே விதமான உணர்வை வெளிக்காட்டி வந்துள்ளார்.

இவரது பேட்டி இவரது முதிர்ச்சியற்ற தன்மையை புடம் போட்டுக் காட்டுகிறது.

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

நான் கூறுவது தவறென்றால் இவர் எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்திருப்பார்☹️

அரசியலில் இதெல்லாம் சகஜம் தோழர்களே।

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

☹️

இவரு கொழும்பிலை 5 வயது முதல் வளர்ந்தவர்....ரோயல் கல்லூரியிலை படித்தவர்.....

  • கருத்துக்கள உறவுகள்
நூருல் ஹுதா உமர்
வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், 

நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. 
 
எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் எங்கள் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
கடந்த சில நாட்களாக தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்க தன்னுடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் நேற்றிரவு தோன்றி பேசிய அவர். தன்னுடைய விளக்கத்தில்,
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் கொடுத்த செவ்வி ஒன்றை தமிழாக்கம் செய்து அதனுடாக பாரிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. சில நாட்களாக கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்தேன். அந்த செவ்வி எதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட செவ்வி என்பதை சிங்களம் நன்றாக அறிந்தவர்களால் அறிய முடியும்.
 
நீங்கள் செய்வது நாட்டை பிரிக்கவே, நீங்கள் நாட்டுக்கு எதிராகவே செயற்படுகிறீர்கள், கடந்த காலங்களில் விடுதலை புலிகள் செய்தவற்றை இப்போது வித்தியாசமாக நீங்கள் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தி நாட்டில் வாழும் சிங்கள மக்களிடம் அதை சேர்ப்பதையே இலக்காக கொண்டது என்பதை அந்த செவ்வியை பார்க்கும் எல்லோருக்கும் தெரியும். அப்படியான செவ்வியில் ஏன் நீங்கள் கலந்து கொண்டீர்கள்? தவிர்த்திருக்கலாம் என்று பலரும் கேட்கிறார்கள். தமிழ் மக்களுக்காக நாங்கள் அதிகமாக பேசுவது அப்படியானவர்களுடனையே தான். இது சில வேளைகளில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நாங்கள் மேசையில் அமர்ந்து பேசுவது எங்களை போன்று சிந்திப்பவர்களுடன் அல்ல.
 
85- 90 வீதமானோர் சமஷ்டி என்றால் பிரிவினைவாதம் என்று நினைக்கிறார்கள். அதைத்தான் அந்த செவ்வியில் சொன்னார். அப்படியான பல சிந்தனைகள் அவர்களுடன் ஊறிப்போகி இருக்கிறது. அவர்களுடன் பேசும் போது அதை மனதில் கொண்டு பேச வேண்டும். நான் பேசியதாக இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) ஒன்று செய்தியொன்றை வெளியிட்டது. அந்த செய்தியில் சிங்கள சொற்களுக்கான தங்களின் மொழிபெயர்ப்பை கொடுத்த உடனையே எங்களின் தரப்பிலிருந்து பலரும் அது தொடர்பில் பேச தொடங்கிவிட்டனர்.
 
அந்த செவ்வியில் சிங்கள மொழியில் என்ன பேசப்பட்டது என்பதை அறியாமலும், அந்த செய்தியை முழுமையாக பார்க்காமலும் அறிக்கை விட்டவர்களே அதிகம். அந்த செய்தியை முழுமையாக மொழிபெயர்த்து இரண்டு பத்திரிகைகள் வெளியிட்டுள்ளது. அதிலும் தவறுகள் இருக்கிறது. அவர் என்னிடம் ஒரே மூச்சில் கேட்ட விடுதலை புலிகளின் அரசியல் இலக்கு அல்லது அரசியல் நடவடிக்கை, ஆயுத நடவடிக்கைகளுடன் உடன்பாடு உண்டா எனும் கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியிருக்கிறேன். பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன்.
 
வியாபாரய எனும் சிங்கள சொல்லின் அர்த்தம் போராட்டம் அல்ல நடவடிக்கை என்பதையே குறிக்கும். நேற்றைய தினமும் தேர்தல் அலுவலகத்தில் இந்த சொல் அதிகமாக பயன்படுத்தியதை நான் அவதானித்தேன். அரகள அல்லது சட்டன எனும் சொற்களே போராட்டத்தை குறிக்கும் சொற்கள். கேள்விக்கு இல்லை என்று பதில் கூறியது மாத்திரமின்றி பிறகு தொடர்ந்தும் காரணத்தையும் சொல்லியிருக்கிறேன். எப்போதும் நான் வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை. அந்த கருத்தில் என்னிடம் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. அது பற்றி எங்கும் நான் முரண்பாடாக பேசியதுமில்லை.
 
அப்படி இல்லாது வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், நம்பவேண்டும் அப்படி இல்லது போனால் நீ தமிழின துரோகி என்பது எனக்கு புரியாத விடயமாக இருக்கிறது. எங்களுடைய கட்சி அஹிம்சை கட்சி. எங்கள் கட்சி ஸ்தாபகர் தந்தை செல்வா "ஈழத்து காந்தி" என்று அழைக்கப்பட்டவர். எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட அறிக்கையில் இந்திய போராட்டத்தை பற்றி பேசியுள்ளார். அதிலே அந்நாட்டின் வீரர்களுக்காக நேரு வாதாடிய போது காந்தியவர்கள் இங்கிலாந்துக்கு எழுதிய கடிதத்தை பற்றி சொல்லியிருக்கிறார். இவர்களுடைய வழிமுறையில் எனக்கு உடன்பாடு இல்லது விட்டாலும் அவர்களின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன் என காந்தி அக்கடிதத்தில் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நானும் அதைத்தான் காலாகாலமாக கூறிவருகிறேன்.
 
அந்த முறைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றும் ஆயுதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கண்டன அறிக்கை விடும் எவராவது ஆயுதத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக வாய்திறந்து சொல்வார்களா? எனக்கு நம்பிக்கையில்லை என்று சொல்வது எப்படி குற்றமாக முடியும். த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆயுதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை, நம்பவில்லை என்ற என்னுடைய கருத்து மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார்.
 
தமிழரசு கட்சி தலைவர்களாக இருந்த தர்மலிங்கம், ஆளால சுந்தரம் ஆகியோரை கொலைசெய்ததை மன்னித்தது ஒரு குற்றமா என த.தே.கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்க விரும்புகிறேன். இது எப்படி மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் சொல்ல முடியும்? எல்லோரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டுவந்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். கண்டன அறிக்கைகளை வெளியிட முன்னர் அறிக்கை வெளியிட்ட த.தே.கூட்டமைப்பின் ஒருவர் கூட என்னிடம் இது தொடர்பில் பேச வில்லை.
 
எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கூட அறிக்கை வெளியிட்டு இரண்டாம் நாள்தான் என்னுடன் பேசினார். ஏன் இவர்களுக்கு என்னுடன் பேச முடியாமல் போனது. இப்போதைய ஆட்சியாளர்களின் ஊடகம் (கேப்பிடல் நியூஸ் அலைவரிசையின் பெயரை குறிப்பிட்டார்) 21 நிமிடம் கொடுத்த செவ்வியின் துண்டுகளை மட்டும் மொழிபெயர்த்து செய்தியாக அறிவித்ததை கண்டு கொதித்தெழுந்து அறிக்கை விடுகின்றவர்கள் கடந்த 10 வருடங்கள் இந்த கட்சியில் நான் பணியாற்றுகிறேன். எனக்கு பல தேவைகளுக்காகவும் அழைப்பை மேற்கொள்வார்கள். பதிலில்லாவிட்டால் 10 தடவைக்கு மேலும் அழைப்பார்கள். ஆனால் இவ்விடயம் தொடர்பில் ஒருதடவையாவது அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க முடியும்.
 
என்னுடைய செய்திகள் என்றாலே வழமையாக திரிவுபடுத்தப்படுவதை சகல எம்.பிக்களும் அறிந்து வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஒருவர் கூட உண்மைகளை அறிய என்னை அழைக்கவில்லை என்பது மிக கவலையான விடயம். நான் சொன்னதில் தவறில்லை என்பதை யார் முன்னிலையிலும் கட்சி முன்னிலையிலும் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு.
 
சிங்கள மக்களை நீ வெறுப்பவன் அல்லவா எனும் கேள்விக்கு நான் சிங்கள மக்களுக்கு மத்தியில் வாழ்வது நல்ல விடயம் என்று கூறியதை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். அதில் குழம்பும் படியாக ஒன்றுமில்லை. எங்களின் அரசியல் இலக்கை அடைய ஆட்சியாளர்களுடன் பேசுகிறோம். பெரும்பாலான சிங்கள மக்கள் நாம் கேட்பது நியாயமான ஒன்று என்பதை நம்ப வேண்டும். நாங்கள் நாட்டை துண்டாட போகிறோம் என பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்தால் எமக்கு தீர்வே கிடைக்காது. சமஸ்டி என்றால் பிரிவினை என்ற அவரின் குற்றச்சாட்டுக்கு ஒரு நாட்டினுள் ஒரு சமஷ்டி தீர்வு என்பதை நான் அவருக்கு விளக்கமாக சொன்னவுடன் வாயடைத்துவிட்டார். அது அவரின் கருத்து மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் 90 வீதமான சிங்கள மக்களின் கருத்து அது. அதற்க்கு நாம் தெளிவாக பதில் கூற வேண்டும். எங்களுடைய கருத்துக்களை நோக்கும் போது பிரிவினைவாதிகள் அல்ல நியாயமாக பேசுகிறார் எனும் எண்ணம் சிங்கள மக்களுக்கு வர வேண்டும்.
 
பேச்சுவார்த்தை மேசைக்கு புலிக்கொடியுடன் சென்று அமர்ந்து பேச முடியுமா? எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, colomban said:
நூருல் ஹுதா உமர்
வன்முறையை, ஆயுதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும், 

பேச்சுவார்த்தை மேசைக்கு புலிக்கொடியுடன் சென்று அமர்ந்து பேச முடியுமா? எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 
இரண்டு நாக்கு, முதலில் வேஷம் போடுவதை நிறுத்துங்கள். போராடியவர்களை இழிவு படுத்திவிட்டு,  இப்ப போரட வந்தால் மதிப்பீர்களா, மூளைக்கு முண்ணானுக்கும் இடையில் தொடர்பு அறுத்துவிட்டதா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people sitting, table and indoor

பாவம் சும்.. அவருக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது தானே. அப்ப அவர் எங்க கிடந்தாரோ..??! 

அவருக்கு வால்பிடிக்கும்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கும் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த உமர் ஊத்தைகளுக்கு எல்லாம் இதாவது தெரியுமா..??! 

hakeem_pirapa_2_130402.jpg

hakeem_pirapa_3_130402.jpg

hakeem_pirapa_1_130402.jpg

இதெல்லாம் தெரியாமல் தான் சிலர் இனச்சுத்திகரிப்பு பாடம் சொன்னவை. அவைக்கு வக்காளத்து வாங்கத்தானே வேணும்.. உமர் வாப்பா.

"Mr Pirapaharan has agreed to invite all displaced Muslims to return to their own places in the northeast," Mr. Hakeem said. Likewise, it was decided that a suitable environment should be created for people displaced from villages in the east to resettle in their homes, SLMC sources said.

Saturday, 13 April 2002,

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

15 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

எந்த முதிர்ச்சியை சொல்கிறீர்கள்? வயதில் முதிர்ச்சியா, அனுபவத்தில் முதிர்ச்சியா அல்லது அரசியல் அறிவில் முதிர்ச்சியா? இதில் சம்பந்தன் ஐயாவைத்தவிர மற்றவர்களிடம் எல்லா முதிர்ச்சியும் இல்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, colomban said:

என்னிடம் விளக்கம் கோராமல், சரியான தகவல்களை பெறாமல் எங்கள் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட சகலரும் கண்ட அறிக்கை விட்டது தவறு.

இதுவே முதற் தடவை அல்லவே விளக்கம் கோருவதற்கு. அவரே இவரின் அதிகப் பிரசங்கித்தனத்தால்  திண்டாடிக்கொண்டிருக்கிறார். அதுவும் தேர்தல் நேரமும் அதுவுமாய். மீனும் தூண்டிலுக்கு தப்பும் தன் வாயை மூடிக்கொண்டிருந்தால். 

On 13/5/2020 at 23:06, Kapithan said:

நீங்கள் கூறுவது உண்மைதான். சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் அதனை அப்பட்டமாகக் வெளியே கூற முடியாது.

ஆனால் தமிழரது கோபம் தனியே இந்தப் பேட்டியை மட்டும் வைத்து வந்ததல்ல. அவர் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய நாட்களிலிருந்தே இதே விதமான உணர்வை வெளிக்காட்டி வந்துள்ளார்.

இவரது பேட்டி இவரது முதிர்ச்சியற்ற தன்மையை புடம் போட்டுக் காட்டுகிறது.

இவர், வடக்கு கிழக்குத் தமிழரை காலத்திற்கேற்ப  நாகரிகமடையாத காட்டான்களாகக்  கருதுகிறார் என நான் உறுதியாக  நம்புகிறேன். 😡

நான் கூறுவது தவறென்றால் இவர் எமது உணர்வுகளுக்கு மதிப்பளித்திருப்பார்☹️

மிகச்சரியான வார்த்தைகள் உண்மையில் கொழும்பிலேயே வாழ்ந்ததும் தனக்கு தான் முன்று மொழி தெரியும் என்ற திமிரும் தான் மட்டும் தான் தீரமானிபவன் என்ற மாயை

17 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழத்து  முதிர்ச்சியுள்ள தமிழ் அரசியல்வாதிக இருக்க வேண்டும் என்றால் செல்வம் அடைக்கலநாதன், விக்னேஷ்வரன் , மாவை சேனாதிராஜா, சம்பந்தர் போன்று மாற வேண்டும் 😂

நீங்கள் சொல்ல வருவது சிங்களத்துக்கு அடிமையான அனுபவசாலிகள் என்றா??

Image

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

எந்த முதிர்ச்சியை சொல்கிறீர்கள்? வயதில் முதிர்ச்சியா, அனுபவத்தில் முதிர்ச்சியா அல்லது அரசியல் அறிவில் முதிர்ச்சியா? இதில் சம்பந்தன் ஐயாவைத்தவிர மற்றவர்களிடம் எல்லா முதிர்ச்சியும் இல்லை। 

உணர்ச்சிபூர்வமாக பேசி மக்களை தொடர்ந்து ஏமாற்றிவரும் அவர்கள் முதிர்ச்சியை சொன்னேன்.

2 hours ago, மார்த்தாண்டன் said:

நீங்கள் சொல்ல வருவது சிங்களத்துக்கு அடிமையான அனுபவசாலிகள் என்றா??

ஆம்

சிங்களத்துக்கும் இந்தியனுக்கும் அடிமை சேவகம் செய்து அதுல முதிர்ச்சியடைந்த ஒரே நீண்ட கால அனுபவசாலினா அதுல சம்பந்தனை அடிச்சுக்க ஆளே இல்லை.

மற்ற  செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், டக்கி, சங்கரி எல்லாம் சம்பந்தனுக்கு பின்னால தான்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 17:29, colomban said:
எங்களின் உரிமைகளை பெற இன்று ஆயுதம் ஏந்தி போராட ஒருவன் முன்வந்தால் அவனை நான் மதிப்பேன். 
 
உதாருது? சுமந்திரனா சொன்னது? இருக்காது. அவருக்கு உப்பிடி மாத்திப் பேசத் தெரியாது.. யாரோ மூளை தொழிற்படாததுகள் சொல்லியிருப்பினம்.  அவர் எந்தப் பெரிய ராஜ தந்திரி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.