Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’சம்பந்தன், சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்கமுடியுமா?’

Featured Replies

“ஜனநாயகவாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தன்னுடைய கட்சி சார்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தால், அது அவர் கட்சியின் பிரச்சினை என்று எனது கருத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஆனால் அவர் என்னையும் சுமந்திரனையும் ஒப்பிட்டு என்னை விட ஒரு மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் சுமந்திரன் கூறிய கருத்து வெளிப்படையானது, நேர்மையானது என்று சம்பந்தன் கூறியுள்ளார். அப்படியானால் குலநாயகத்தின் கூற்றுப்படி என்னைவிட மோசமான கருத்தைக்கூறிய சுமந்திரனின் கருத்தை சம்பந்தன் வெளிப்படையானது, நேர்மையானது என்று கூறுவாராயின், என்னுடைய கருத்தும் மிக வெளிப்படையானதும், மிக நேர்மையானதும் என்று சம்பந்தனே ஒத்துக்கொள்ள வேண்டும்.

2004ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆக இருந்த என்னை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பட்டியலை, விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் மறைந்த சு.ப.தமிழ்செல்வனிடம் கொடுத்து, எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்படி மிரட்டப்பட்ட நபர்களில் குலநாயகமும் ஒருவர்.

மிரட்டலுக்கு அடிபணியாது தன்னுடைய மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர், இன்றைய தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம்.

மிரட்டலுக்கு அடிபணிந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை குலநாயகம் கொண்டு வந்தார். உயிர் மீது ஆசை உள்ள சாதாரண மனிதர்களின் செயற்பாடு அது. அதற்காக அவர் மீது குற்றம் காணமுடியாது. 

ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து குலநாயகம் உட்பட மிரட்டலுக்கு அடிபணிந்த உயிருக்கு பயந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். 

துணிந்தவர்கள் தொடர்ந்தும் இன்று வரை என்னுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலேயே பயணிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ளாத படியால் தான் குலநாயகம் போன்றோர் விடுதலைப்புலிகளை திருப்திப் படுத்துவதற்காக நான் கூறாத பொய்யான தகவல்களை திரித்துக் கூறினார்கள். 

ஒரு ஜனநாயக நாட்டில் ஏக பிரதிநிதித்துவம் என்பது சர்வாதிகாரத்துக்கான சொற்களாகும். ஈழத்து காந்தி என்று அழைக்கப்பட்ட ஜனநாயக வாதியான தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட உன்னதமான கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணி.

அந்த கட்சியின் தலைவராகிய நானும் இன்றுவரை ஒரு ஜனநாயக வாதியாகவே இருந்து வருகின்றேன். என்னால் சர்வாதிகார கருத்துக்களை ஏற்றக்கொள்ள முடியாது. இருந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச வேண்டும். ஏனைய விடயங்களுக்கு அது பொருந்தாது என்ற கருத்தை அன்று நான் வலியுறுத்தி வந்தேன்.

இந்திய சுகந்திர போராட்ட நேரத்தில் மகாத்மா காந்தியையும், மூத்தறிஞர் இராஜாஜீ அவர்களையும் ஒப்பிட்டு குலநாயகம் இராஜாஜீயின் அரசியல் நாகரிகத்தை விளக்கியுள்ளார். 

அவ்வாறு தான் நானும் அரசியல் நாகரிகத்துடன் செயற்பட்டு வருகின்றேன். இந்தியாவின் சுகந்திர போராட்டத்தில் முக்கியமான மகாத்மா காந்தியின் தலைமையிலான அகிம்சை ரீதியிலான அணியும், நேத்தாஜீ சுபாஸ்சந்திரபோஸ் தலைமையிலான ஆயுதம் தாங்கிய அணியும் போராட்ட களத்தில் இருந்தன. 
சுபாஸ்சந்திரபோஸ் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், மகாத்மா காந்தியின் அணியிலுள்ளவர்கள் மீது  ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை. இருவரும் தனித்தனி வழியில் சுகந்திரத்திற்காக போராடினார்கள். அதனால் தான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற்றது.

சுமந்திரன் கூறிய கருத்தை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்வார் என எனக்கு தெரியும். அதனால்தான் நான் சமீபத்தில்  சுமந்திரன் கூறிய கருத்தை பாராட்டினேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகள் இருக்கும் வரை சம்பந்தன் உடைய கருத்திற்கு உடன்பாடானவர்களாக இருந்தும் தங்களுடைய கருத்துக்களை மூடி மறைத்து விட்டு புலிகளை அழிப்பதற்காக கூட இருந்தே குழிபறித்தார்கள். 

அதனால் தான் யுத்தம் முடிந்த பின் சம்பந்தன் பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். புலிகளை கூண்டோடு அழித்து விட்டேன் என்று வீராப்பு பேசிய, சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவும் தெரிவித்தனர். 

இது தான் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உண்மையான நிலைமை, இதைத்தான் சுமந்திரன் அன்று கூறினார். காலம் தாழ்த்தியாவது உண்மையை ஒத்துக்கொண்டு, சம்பந்தனினதும் கூட்டமைப்பினதும் உண்மைத் தன்மையை தெளிவு படுத்தியதற்காக, சுமந்திரனை நான் பாராட்டினேன். 

இது மற்றவர்களால் வேறுவிதமாக பார்க்கப்பட்டு என் மீது விமர்சனங்கள் வந்தன. சுமந்திரன் கூறியது சரி என்று சம்பந்தனும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தன் மீது எந்த விதமான விமர்சனங்களும் இது வரை வரவில்லை. இது 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே' என்ற வரிகளுக்கு வலுவூட்டுவதாகும்.

சுமந்திரன் கூறிய கருத்துக்களும், அதை நியாயப்படுத்தி இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கைகளும், எவருடைய தனிப்பட்ட கருத்துக்களாக பார்க்க முடியாது. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தாகவே பார்க்க வேண்டும். 

ஏனெனில் இருவரும் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கின்றார்கள். துணிவிருந்தால் ஜனநாயக வாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அப்படி செய்தால் தமிழரசுக் கட்சி குலநாயகம் குறிப்பிடும், இன விடுதலை மற்றும் சுதந்திரத்தை நோக்காக கொண்டு செயற்படுகின்றது என்பதை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். 

அதை செய்து விட்டு அடுத்த அறிக்கைக்கு தயாராகுமாறு குலநாயகம் அவர்களை நான் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்” என, அந்த அறிக்கையில் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சம்பந்தன்-சுமந்திரனை-கட்சியில்-இருந்து-நீக்கமுடியுமா/175-250651

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ju.pngஇவுரு வேற நடுநடுவுல சிரிப்பு காமிச்சுகிட்டு..☺️

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நடைபெறுவது சம்பந்தன் + சுமந்திரன் எதிர் தீவிர தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சனையல்ல.

இந்துத்துவ இந்தியா vs கிறீத்துவ அமெரிக்க மேற்கத்தேய  போட்டி. அதில் பலியாகுவோர் ஈழத் தமிழர். 👍

சுமந்திரனைக் உள்ளே கொண்டுவந்தது மேற்கு. அவரை வெழியேற்றுவதினூடாக தமிழ்த் தரப்பை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர இந்துத்துவ (தற்போதைய நிலையில்) இந்தியா தனது அதீத பலத்தைப் பிரயோகிக்க முனைகிறது. அதில் சுமந்திரன் வாயைக் கொடுத்து எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார். ☹️

இவற்றை இந்த so called அரசியல் ஆய்வாளர்கள் வெழிப்படையாக எழுதப் போவதில்லை. காரணம் யாரிடம் தின்றார்களோ அவர்களுக்குத் தானே வாலை ஆட்ட முடியும். 😜

எலும்புத் துண்டைப்  போடுவது ஈழத் தமிழர்கள் இல்லையல்லவா 😜

சங்கரி ஐயா சொன்னது நல்ல கருத்தாக இருந்தாலும் , அவர் மக்களால் நிராகரிக்கப்படடவர் என்பதால் அதட்கு வலு இல்லாமல் போகின்றது. இவர்களால் சுமந்திரனை நீக்க முடியுமோ என்பது ஒரு கேள்விக்குரிய விடயம். அங்கு பல பிரச்சினைகளைக்குறித்து விவாதித்தால் அவரை நீக்க முடியாத நிலைமைதான் காணப்படுகின்றது. அவர் வெளியேறுகிறேன் என்று கூறினாலும் அவர்களாலும் விட முடியாத நிலைமை.

எனவே வருகிற தேர்தலில் மக்கள்தான் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இவர் சில வார்த்தைகள் கூறிவிடடார் என்பதட்காக இவரை நீக்க வேண்டுமென்றால், தமிழ் அரசியல்வாதிகளில் 75 % மானோர் கொலை, கொள்ளை, காட்டிக்கொடுப்பு போன்றவற்றிக்காக அரசியலில் இருந்து வெளியேற வேண்டும்.

இங்கு சுமந்திரன் தாக்கப்படுவதட்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அப்படி குறிப்பிடடால் என்னை மதவாதி என்பார்கள். விளங்கினால் சரி. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

இங்கு சுமந்திரன் தாக்கப்படுவதட்கு வேறு ஒரு காரணமும் உண்டு. அதை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அப்படி குறிப்பிடடால் என்னை மதவாதி என்பார்கள். விளங்கினால் சரி. 

அங்கு செல்வம் அடைக்கலநாதனும் சார்லஸ் நிர்மலநாதனும் உங்களால் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம்??? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

சும் கிறிஸ்தவராய் இருப்பதில் ஒரு பிரச்சனை இல்லை ...அவர் மனைவி மற்றவர்களை மதம் மாத்துகிறார் என்பது தான் பிரச்சனை 
 
14 hours ago, MEERA said:

அங்கு செல்வம் அடைக்கலநாதனும் சார்லஸ் நிர்மலநாதனும் உங்களால் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம்??? 

தாக்கவில்லை. அவர்களைப்பற்றிய உண்மையை சொன்னேன். சுமந்திரனின் விடயத்தில் அப்படி இல்லை. நீங்கள் பொதுவாக இங்கு இடப்படும் கருத்துக்களை பார்த்தால் எல்லா இடங்களிலும் சுமந்திரன் பெயர் இருக்கும். சுமந்திரன் இல்லை என்றால் இங்கு நியூஸ் இல்லை என்ற நிலைமை. முடிவுரை என்னவென்றால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே. 

6 hours ago, ரதி said:

சும் கிறிஸ்தவராய் இருப்பதில் ஒரு பிரச்சனை இல்லை ...அவர் மனைவி மற்றவர்களை மதம் மாத்துகிறார் என்பது தான் பிரச்சனை 
 
எல்லோருக்கும் சுய அறிவு இருக்குது. அவர்களாகவே தெரிவு செய்வதட்கும் சுதந்திரம் இருக்குது. எனவே யாரும் யாரையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு அவசியம் இருந்தால் அதை தடை செய்யலாம் அல்லது முடியுமென்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

சுமந்திரனின் விடயத்தில் அப்படி இல்லை. நீங்கள் பொதுவாக இங்கு இடப்படும் கருத்துக்களை பார்த்தால் எல்லா இடங்களிலும் சுமந்திரன் பெயர் இருக்கும். சுமந்திரன் இல்லை என்றால் இங்கு நியூஸ் இல்லை என்ற நிலைமை. முடிவுரை என்னவென்றால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே. 

இங்கு சுமந்திரன் கிறிஸ்தவர் என்பதோ, சைவர் இல்லை என்பதோ பிரச்சனை இல்லை. அவர் பேசிய கருத்துக்களே பிரச்சனையை தோற்றுவித்துள்ளது. இதை மாவை சொன்னாலும், இதுவேதான் நடந்திருக்கும். சும்மா மதத்தை இழுத்து மூடாதீர்கள். கிறிஸ்தவர்களும் சுமந்திரனின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை   வெளியிடுகிறார்கள். இது கிறிஸ்தவ, சைவ பிரச்சனையல்ல. ஒரு இனத்தின் வாழ்வுப் பிரச்சனை.  கிறிஸ்துவும், சமுதாயத்தில் நடந்த அனிஞாயங்களை தட்டிகேட்டார். கண்டு கொதித்தெழுந்தார்.

40 minutes ago, satan said:

அதாவது உண்மையை பேசக்கூடாது அல்லது தனது தனிப்படட கருத்தை சொல்லக்கூடாது என்பதா ? இப்போது அவரது மனைவியையும் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எதட்காக? எனவே இங்கு தனிப்படட தாக்குதலே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. சுமந்திரன் என்ன அநியாயத்தை செய்தார் என்று சொல்லுங்கள்? நேர்மையாக செய்யும்போது , அல்லது நீங்கள் நினைக்கிறபடி பேசாதபோது, செய்யாதபோது அது உங்களுக்கு அநியாயமாக தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை காட்டிலும், சிங்கள மக்களையும் அரசையும் மகிழ்விப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார். அரசு எமக்கு செய்த அழிவுகளை எடுத்துச் சொல்ல தயங்குகிறார். போராட்டம் ஏன் தொடங்கியது?, என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து அதை தான் விரும்பவில்லை  என்று கூறுவதன் பொருள் என்ன? சிங்களவன் நல்லவன், தமிழர் திமிர் எடுத்து ஆயுதம் தூக்கினார்கள் என்பதா?, எந்த முயற்சியும் கைகூடாத நிலையில் தலைவர்கள் கைவிரித்து அறை கூவியபடியாலேயே வேறு வழியின்றி இளைஞர் ஆயுதம் தூக்கினர்.  இவர் போன்ற அரசியல் வாதிகளாலேயே போராட்டம் ஆரம்பித்தது, அழிந்தது, இன்னும் தமிழர் அடிமைகளாக இருக்கிறார்கள். சிங்களவன் தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பிரச்சாரம் செய்யும் போது, நம்ம தலைவர்கள் எங்கே போனார்கள்? எம் பக்க நிஞாயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

Satan காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, மதம் பிடித்த வங்காலையனுக்கு மதம் தான் தெரிகிறது...

17 hours ago, MEERA said:

Satan காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல, மதம் பிடித்த வங்காலையனுக்கு மதம் தான் தெரிகிறது...

உண்மையை எழுதினால் அது மஞ்சளாகத்தான் தெரியும். நல்ல வேளை நீலமாகத் தெரியவில்லை

17 hours ago, satan said:

சுமந்திரன் தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை காட்டிலும், சிங்கள மக்களையும் அரசையும் மகிழ்விப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார். அரசு எமக்கு செய்த அழிவுகளை எடுத்துச் சொல்ல தயங்குகிறார். போராட்டம் ஏன் தொடங்கியது?, என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து அதை தான் விரும்பவில்லை  என்று கூறுவதன் பொருள் என்ன? சிங்களவன் நல்லவன், தமிழர் திமிர் எடுத்து ஆயுதம் தூக்கினார்கள் என்பதா?, எந்த முயற்சியும் கைகூடாத நிலையில் தலைவர்கள் கைவிரித்து அறை கூவியபடியாலேயே வேறு வழியின்றி இளைஞர் ஆயுதம் தூக்கினர்.  இவர் போன்ற அரசியல் வாதிகளாலேயே போராட்டம் ஆரம்பித்தது, அழிந்தது, இன்னும் தமிழர் அடிமைகளாக இருக்கிறார்கள். சிங்களவன் தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பிரச்சாரம் செய்யும் போது, நம்ம தலைவர்கள் எங்கே போனார்கள்? எம் பக்க நிஞாயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லாமல்.

ஏன் சுமந்திரன் மட்டும்தான் பேச வேண்டும். மற்றவர்களுடைய வாய்களுக்குள்ளே என்ன கொழுக்கடடயா வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்கள் எல்லாம் முடடால்களா? அது உண்மைதான். சுமந்திரன் தனி ஆளா அல்லது ஒரு அமைப்பிலிருந்து பேசுகிறாரா? அப்படி என்றால் அந்த அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளுகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

உண்மையை எழுதினால் அது மஞ்சளாகத்தான் தெரியும். நல்ல வேளை நீலமாகத் தெரியவில்லை

ஏன் சுமந்திரன் மட்டும்தான் பேச வேண்டும். மற்றவர்களுடைய வாய்களுக்குள்ளே என்ன கொழுக்கடடயா வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்கள் எல்லாம் முடடால்களா? அது உண்மைதான். சுமந்திரன் தனி ஆளா அல்லது ஒரு அமைப்பிலிருந்து பேசுகிறாரா? அப்படி என்றால் அந்த அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளுகிறதா? 

கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியில் இருப்பது யார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2020 at 01:07, satan said:

சுமந்திரன் தமிழ் மக்கள் சார்ந்த நலன்களை காட்டிலும், சிங்கள மக்களையும் அரசையும் மகிழ்விப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறார்.

சிங்கள மக்கள் தான் சொல்வதை  காது கொடுத்து கேட்க வேண்டும் என்று  சுமந்திரன்  விரும்புகிறார். விக்நேஸ்வரனை சிங்கள மக்கள் பயங்கரவாதி என்று ஒதுக்கி அவர் சொல்வது எதுவாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி தான் சொல்வதையும் சிங்கள மக்கள் காது கொடுத்து கேட்க மறுத்தால், தமிழர் சார்பில் சிங்கள மக்களுடன் பேச யாரும் இல்லாத நிலை வருமே என்று சுமந்திரன் கவலைப்படுவது தெரிகிறது. இந்த கவலைக்கு காரணம் சுமந்திரன் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பதே. அப்படி அக்கறை இல்லாவிட்டால் சுமந்திரன் இலகுவாக யு.என்.பி. யில் சேர்ந்து கொழும்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் போக முடியும்.

On 24/5/2020 at 01:07, satan said:

போராட்டம் ஏன் தொடங்கியது?, என்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்வதை விடுத்து அதை தான் விரும்பவில்லை  என்று கூறுவதன் பொருள் என்ன? சிங்களவன் நல்லவன், தமிழர் திமிர் எடுத்து ஆயுதம் தூக்கினார்கள் என்பதா?, எந்த முயற்சியும் கைகூடாத நிலையில் தலைவர்கள் கைவிரித்து அறை கூவியபடியாலேயே வேறு வழியின்றி இளைஞர் ஆயுதம் தூக்கினர்.  இவர் போன்ற அரசியல் வாதிகளாலேயே போராட்டம் ஆரம்பித்தது, அழிந்தது, இன்னும் தமிழர் அடிமைகளாக இருக்கிறார்கள். சிங்களவன் தமிழரின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனப் பிரச்சாரம் செய்யும் போது, நம்ம தலைவர்கள் எங்கே போனார்கள்?

இப்படி தமிழர்கள் நினைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் அனைவருக்கும் தாராளமாக தெரியும். சுமந்திரனும் அதையே திரும்பவும் சொல்லி என்ன பயன்? தாம் நல்லவர்கள் என்றும் தமிழர்கள் இந்திய அரசின் நலன்களுக்காக ஆயுதம் ஏந்திய துரோகிகள் என்றும் சிங்களவர்கள் நினைக்கிறார்கள். அதை பொய் என்று சுமந்திரன் சொன்னாற் போல சிங்களவர்கள் நம்பப் போவதில்லை. அது வீண்விரயமான செயற்பாடாக இருந்திருக்கும். விக்னேஸ்வரன் அதைத்தான் செய்கிறார். சிங்களவர்கள் அதை காது கொடுத்து கேட்பதில்லை.

On 24/5/2020 at 01:07, satan said:

எம் பக்க நிஞாயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லாமல்.

அமிர்தலிங்கம் முதல் அன்ரன் பாலசிங்கம், இன்று கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நெவி பிள்ளை ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை தமிழரின் பிரச்சினைகளை தாராளமாக விளக்கியுள்ளார்கள். ஆனால்  எந்த நாடும் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடு தீர்வு என்று ஏற்றுக்கொள்ளவில்லை. சுமந்திரனால் அந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாது. ஆகவே சர்வதேச நாடுகள் பொருத்தமான தீர்வு என்று நினைப்பதை சாத்தியமாக்க சுமந்திரன் முயற்சிக்கிறார்.  தமிழரின் நலன்களை பாதுகாக்க  இதை தவிர வேறு வழி இல்லை.

Edited by கற்பகதரு

On 22/5/2020 at 18:35, ampanai said:

இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற பின்னர் கொடுத்த வாக்குறுதிகளை மறந்த நயவஞ்சகர்கள் என்று தெளிவாகவே அடையாளம் காணப்பட்டுள்ள சம்மந்தன், சுமந்திரன் இருவருமே அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்.

இந்த இரண்டு நயவஞ்சகர்களும் 2009 இன் பின்னர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

சிங்கள மக்கள் தான் சொல்வதை  காது கொடுத்து கேட்க வேண்டும் என்று  சுமந்திரன்  விரும்புகிறார். விக்நேஸ்வரனை சிங்கள மக்கள் பயங்கரவாதி என்று ஒதுக்கி அவர் சொல்வது எதுவாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்பதில்லை. அப்படி தான் சொல்வதையும் சிங்கள மக்கள் காது கொடுத்து கேட்க மறுத்தால், தமிழர் சார்பில் சிங்கள மக்களுடன் பேச யாரும் இல்லாத நிலை வருமே என்று சுமந்திரன் கவலைப்படுவது தெரிகிறது. இந்த கவலைக்கு காரணம் சுமந்திரன் தமிழரின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பதே. அப்படி அக்கறை இல்லாவிட்டால் சுமந்திரன் இலகுவாக யு.என்.பி. யில் சேர்ந்து கொழும்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் போக முடியும்.

இப்படி தமிழர்கள் நினைக்கிறார்கள் என்று சிங்களவர்கள் அனைவருக்கும் தாராளமாக தெரியும். சுமந்திரனும் அதையே திரும்பவும் சொல்லி என்ன பயன்? தாம் நல்லவர்கள் என்றும் தமிழர்கள் இந்திய அரசின் நலன்களுக்காக ஆயுதம் ஏந்திய துரோகிகள் என்றும் சிங்களவர்கள் நினைக்கிறார்கள். அதை பொய் என்று சுமந்திரன் சொன்னாற் போல சிங்களவர்கள் நம்பப் போவதில்லை. அது வீண்விரயமான செயற்பாடாக இருந்திருக்கும். விக்னேஸ்வரன் அதைத்தான் செய்கிறார். சிங்களவர்கள் அதை காது கொடுத்து கேட்பதில்லை.

அமிர்தலிங்கம் முதல் அன்ரன் பாலசிங்கம், இன்று கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நெவி பிள்ளை ஆகியோர் உட்பட ஏராளமானவர்கள் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை தமிழரின் பிரச்சினைகளை தாராளமாக விளக்கியுள்ளார்கள். ஆனால்  எந்த நாடும் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடு தீர்வு என்று ஏற்றுக்கொள்ளவில்லை. சுமந்திரனால் அந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாது. ஆகவே சர்வதேச நாடுகள் பொருத்தமான தீர்வு என்று நினைப்பதை சாத்தியமாக்க சுமந்திரன் முயற்சிக்கிறார்.  தமிழரின் நலன்களை பாதுகாக்க  இதை தவிர வேறு வழி இல்லை.

சுமத்திரனுக்கு கூட்டமைப்பில் நின்று தான் பதவி  எடுக்கோணும் என்று இல்லை ...அவர் எந்த சிங்கள கட்சியில் சேர்ந்தாலும், அவருக்கு பதவி தயாராய் இருக்கும்...அதனால் தான் அவருக்கு தமிழர் நலன் மீது பெரிதாய் அக்கறையில்லை 
சிங்கள மக்கள் இவர் சொல்வதை கேட்பதற்கு தமிழர் நலன் சார்பாய்  இவர் எதுவும் கதைத்ததாய் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎05‎-‎2020 at 02:22, Vankalayan said:

தாக்கவில்லை. அவர்களைப்பற்றிய உண்மையை சொன்னேன். சுமந்திரனின் விடயத்தில் அப்படி இல்லை. நீங்கள் பொதுவாக இங்கு இடப்படும் கருத்துக்களை பார்த்தால் எல்லா இடங்களிலும் சுமந்திரன் பெயர் இருக்கும். சுமந்திரன் இல்லை என்றால் இங்கு நியூஸ் இல்லை என்ற நிலைமை. முடிவுரை என்னவென்றால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே. 

எல்லோருக்கும் சுய அறிவு இருக்குது. அவர்களாகவே தெரிவு செய்வதட்கும் சுதந்திரம் இருக்குது. எனவே யாரும் யாரையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு அவசியம் இருந்தால் அதை தடை செய்யலாம் அல்லது முடியுமென்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம்.

நீங்கள், சுமத்திரன் கிறிஸ்தவர் என்பதனால்  தான் பதவி கொடுக்க மறுக்கிறார்கள் என்று எழுதினீர்கள் ...நான் அதுவல்ல பிரச்சனை ...அவருடைய மனைவி தான் பிரச்சனை என்று எழுதினேன் ...சுமத்திரனை மக்கள் ஆதரிக்க வேண்டுமானால் அவர் தான் திருந்த/மாற  வேண்டுமேயொழிய எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை ...தவிர , நீங்களும் சும்மா இங்கே வந்து அவர் கிறிஸ்தவர் என்பதால் ஒதுக்கி விட்டார்கள் என புலம்ப வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியினை ஆரம்பித்த தந்i செல்வா கிறிஸ்தவர்.அந்தக்கட்சியில் வேறுபல கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் கிறிஸ்தவப் பின்னணி உண்டு. உலகத்தமிழாராய்சி மகாநாட்டை தெடக்கிய தனிநாயகம் அடிகளாiர் ஒரு கிறிஸ்தவர் மக்கள் அவர்கள் எல்லோரையும் தமிழர்களாகவே பார்த்தார்கள். இங்கு சுமத்திரன் விமர்சிக்கப்படுவது அவர்சார்ந்த மத்தினால் அல்ல தமிழ்மக்கள் உரிமைப் போராட்டம். அவர்களின் நலன்கள் தொடர்பாக அக்கறையற்று அவர்களைச் சீண்டும்விதமாகப் பேசுவதும் செயற்படுவதும்தான் சுமத்திரன் மீதான விமர்சனங்களுக்குக் காரணம். தமிழ்மக்கள் ஒருபோதும் மதம் பார்த்து வாக்களிப்பதில்லை. முஸலிம்கள் விடயத்தில் அவர்கள் தமிழர்களைப் பிரித்துப்பார்பதால் தமிழர்களுக்கு அவர்கள் மீது விமர்சனம் உண்டு ஆனால் கிறிஸ்தவர்கள் விடயத்தில் அப்படியான பாகுபாடு இல்லை. அனால் அண்மைக்காலங்களாக மன்னார் தீருக்கேதீஸ்வரவளைவு செதமாக்கப்பட்டது.மற்று; தமிழர் பகுதிகளில் சிவசேனா அமைப்பு உருவானது சம்பந்தமாக ஏதோ ஒரு மறைகரம் தலைநடு;டுவது தெரிகிறது. இவை முறியடிக்கப்படவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நன்றி புலவர் தாங்கள் தமிழரிடையே கிறீத்துவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லையென்று கூறியதற்கு. அது உங்கள் நல் மனதைக் காட்டுகிறது. 🙏

எனது நண்பர்களில் 99%மானோர் சைவ சமயத்தவர்களே. எங்களிடையே எந்த விதமான சமயம் சார்  வேறுபாடுகளோ சாதி சார்பான வேறுபாடுகளோ எதனையும் நானும் எனது சகோதரர்களும் உணர்ந்ததேயில்லை என்பதை பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்திக் கூறுவேன். 😀

யாழ் மாநகர சபைக்குட்பட்ட சைவக் கோவில் ஒன்றின் நிர்வாக சபை தெரிவுக் கூட்டமொன்றிற்கு நானும் எனது சகோதரர்களும் நண்பர்கள் அனைவரும் ஒருமுறை போயிருந்தோம்.  என்னையும் எனது சகோதரர்களையும் அடையாளம் கண்டு கொண்ட தர்மகர்த்தா கூட்டத்தின் இடையில் எழுந்து நின்று எல்லோர் முன்னிலையிலும் எங்களை நோக்கி தம்பிகள் நீங்கள் வேதக்காறர் நிர்வாக சபைத் தெரிவில் வாக்களிக்க முடியாது என்று கூறினார். நான் கூறினேன் இல்லை அண்ணர் சும்மா பொடியங்களோட வந்தனாங்கள் என்று கூறி மண்டபத்திலிருந்து வெளியேற முற்பட்டோம்.  அப்போது அவர் எங்களை மறித்து, தம்பிமார் நீங்கள் போகத் தேவையில்லை. வாக்களிக்காவிட்டால் சரி என்றார். 😀

நாம் தமிழராய் இருந்த காலம் அது 😀

ஆனால் 

இது உண்மையான நிலவரத்தைக் காட்டபில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். ☹️

கிறீத்துவர்கள் தாங்கள் வேறுபாட்டை உணர்வதாகக் கூறும்போது உடனே நிராகரிக்காமல் ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போதுதான் இருபகுதியினருக்கும் இடையேயான புரிந்துணர்வு உண்டாகும் என நம்புகிறேன். 👍

இங்கே மேலும் ஒன்ரைத் தெளிவாகக் கூறுகிறேன். பெரும்பாலான கிறீத்துவர்கள் தங்களைத் தமிழராகத்தான் உணர்கிறார்கள். ஆனால் பாகுபடு காட்டப்படுவதும் அதை உணரும் சந்தர்ப்பங்களும்  சாதாரண நடுத்தர மக்களிடையே வெகு அரிதான சந்தர்ப்பங்கள். ஆனால் சமூகத்தின் வகுப்புப் பிரிவு நிலைகளின் உயரத்திற்குச் செல்லும்போது அந்த வேற்றுமையை உணரலாம். ☹️

இவை எனது அனுபவங்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.