Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையை தத்தெடுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை தத்தெடுத்தல்

நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/).   

அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி.  நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும்  உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). 

வந்த கடித்ததில் இருந்த படம் 

20200604-143654.jpg

பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த  மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம்.

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும்.  

மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு,

அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா

20200602-085620.jpg

  • Replies 53
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக வரைந்துள்ளா், நீங்கள் சி்ட்னியில் இருப்பவராயின் உங்களது மகளை, Tania Wursigவின் பயிற்சிப்பட்டறையிலோ அல்லது அவரது studioவிற்கு விரும்பினால் அழைத்துசெல்லுங்கள். அவரது paintings கூடுதலாக islanders, அவர்களது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாகும்.

https://www.google.com/search?q=tania+wursig&rlz=1C1CHBF_en-GBAU899AU899&oq=tania+wur&aqs=chrome.0.0j69i57j0l6.11325j0j7&sourceid=chrome&ie=UTF-8

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் அண்ணை.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் உங்கள் குடும்பப் பங்களிப்பு சிறப்பானது. இவ்வுதவியால் பல சிறார்களின் வாழ்வு பயனடையட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றிகள் பிரபா இணைப்பிற்கு . இல்லை நான் பேர்த்தில். அவா பாடசாலையில் மட்டும்தான் பட வரைதல் படிக்கின்றார், Tania Wursigவின் Paintings உயிரோடு உள்ள மாதிரி இருக்கின்றது👍

9 hours ago, ஏராளன் said:

வாழ்த்துகள் அண்ணை.

ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் உங்கள் குடும்பப் பங்களிப்பு சிறப்பானது. இவ்வுதவியால் பல சிறார்களின் வாழ்வு பயனடையட்டும்.

நன்றிகள் ஏராளன், உங்கள் பாராட்டிற்கு 

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உங்களை மாதிரி ஒவ்வொருவர் வடிவிலும் கடவுளைக் காண்கிறேன்.
வாழ்க பல்லாண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் உங்களை மாதிரி ஒவ்வொருவர் வடிவிலும் கடவுளைக் காண்கிறேன்.
வாழ்க பல்லாண்டு.

நன்றி ஈழப்பிரியன்ந நான் முன்னேற பல கடவுள்கள் உதவினார்கள் ஒருவர் அல் பலர். என்னால் இயன்றதை என் சக்திக்கு உட்பட்டு செய்கிறேன், அதையே பிள்ளைகளுக்கு பழக்குகின்றேன், பார்ப்போம். 

1 hour ago, தமிழ் சிறி said:

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

நன்றி சிறி, ஆமாம் எனக்கும் தான் நேற்று வியப்பாக இருந்திச்சு, வழக்கமாக நான் கொடுக்கும் பணங்களைதான் அவா யாருக்கும் கொடுப்பா ஊருக்கு போகும்போது. இப்ப ரியூஷனில்  உழைப்பதால் அவரின் வங்கிகணக்கில் கொஞ்ச காசிருக்கு. அதை நல்ல வழியில் செலவழிக்க பழுக்கனும்.. சின்னவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணமிருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

உடையார்.... உங்கள் பதினோரு வயது மகளின் சேவை மனப்பான்மையை, நினைத்து வியந்தேன்.
பொதுவாக... அந்த வயதில் உள்ள பிள்ளைகள், தம்மிடம் இருக்கும் பணத்தில்...
தமக்கு என்று ஏதாவது வாங்க, யோசிப்பார்களே தவிர, 
இப்படியான மனநிலையில் எல்லோரும், இருக்க மாட்டார்கள். 

அவர் வரைந்த ஓவியமும்... பயிற்சி பெற்ற ஒரு ஓவியர், வரைந்தது போல் அழகாக உள்ளது.👏

       “இதைத் தான் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு“ என்பதோ.

உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆசீர்வதிக்கப்படடவர், வாழ்த்துக்கள் உடையார்......ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது.....!   👏

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 08:45, உடையார் said:

அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். 

கனவு மெய்ப்பட வேண்டும்.

சுயநலம் நிறைந்தவர்கள் உள்ள உலகில் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை இளவயதிலேயே கொண்டுள்ள உங்கள் மகளின் கனவு ஈடேறவேண்டும்.

ஓவியம் மிக அழகாக உள்ளது.👍🏾

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

கனவு மெய்ப்பட வேண்டும்.

சுயநலம் நிறைந்தவர்கள் உள்ள உலகில் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை இளவயதிலேயே கொண்டுள்ள உங்கள் மகளின் கனவு ஈடேறவேண்டும்.

ஓவியம் மிக அழகாக உள்ளது.👍🏾

நன்றி கிருபன் உங்கள் வாழ்த்திற்கு, எனது ஆசையும் அதுவே, காலம்தான் பதில் சொல்லனும். நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்துவருகின்றேன் என்னால் முடிந்தவரை.

55 minutes ago, suvy said:

நீங்கள் ஆசீர்வதிக்கப்படடவர், வாழ்த்துக்கள் உடையார்......ஓவியம் மிகவும் அழகாக இருக்கின்றது.....!   👏

நன்றி சுவி பாராட்டிற்கு, மகளிடம் சொல்கின்றேன்

1 hour ago, ஜெகதா துரை said:

உங்கள் மகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

நன்றி ஜெகதா துரை பாராட்டிற்கு, மகளிடம் தெரியப்படுத்துகின்றேன்

நன்றிகள் ரதி, நிழலி & நந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடையார் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
பிள்ளைகள் நல்லதையே சிந்திக்கவும் செயல்படவும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.இதற்கு ஆன்மீகமும்  துணையாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடையார் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்......
பிள்ளைகள் நல்லதையே சிந்திக்கவும் செயல்படவும் பெற்றோர்களும் ஒரு முக்கிய காரணம்.இதற்கு ஆன்மீகமும்  துணையாக இருக்கின்றது.

நன்றி குமாரசாமி, நீங்க சொன்னது மிகச்சரி மனைவி ரெம்ப ஆன்மீகத்தில் ஊறியவர், பிள்ளைகளை நல் வழியில் வழி நடத்தியவரும் அவரே. 

நன்றி மீரா 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை ஊரில் தத்தெடுக்கலாம். ஆனால் இங்கே கொண்டு வந்து வளர்ப்பதிலும் இங்கே தத்தெடுப்பதில் பாரிய பிரச்சனைகள் உள்ளன.

தத்தெடுப்பதாக சொல்லி, வீட்டு வேலைக்கும், சிறுவர் மீதான துஸ்ப்பிராயரோகத்தினை தடுப்பதற்க்கும் லைசென்ஸ் முறைமையினை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகள் எப்படி தத்து பிள்ளையினை நடத்துகின்றனர், தத்து எடுத்தவர்கள் கனிவுடன், கவனிப்புடன் நடத்துகின்றனவா. உணவு, உடை, கல்வி எல்லாம் சரிவர கிடைக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய அந்த பிள்ளையினை, பாடசாலையில் ரகசியமாக சந்திப்பது, வீட்டில் தீடீரென வந்து பார்ப்பது, அறை சோதிப்பது என்று பல சங்கடங்கள் உள்ளன.

ஒரு தமிழர் மரணத்தினை தொடர்ந்து, மனைவி மனநலம் குன்ற, அவர்கள் பிள்ளையினை கவுன்சில் எடுத்து, தத்துக்கு கொடுக்க முனைய, சோமாலி குடும்பம் தத்து எடுக்க முனைவதை கேள்வி பட்டு, அந்த தமிழரின் சகோதரி தானே அந்த மருமகனை தத்து எடுத்து, பட்ட அனுபவமே அவை.

சில பிள்ளைகள் இறந்து போனதால், அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளை பெற்ற பொழுது  பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால்
சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது   பெற்றோருக்கு கிடைக்கும்
 பெரு மகிழ்ச்சி  அளவிட முடியாதது .

மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற  வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர்..💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2020 at 22:03, Nathamuni said:

நன்றி நாதமுனி, அங்குதான் தத்தெடுப்பது, இங்கு கொண்டு வர பல சிக்கல்கள் இப்ப, 6-7 வருடங்களின்பின் யோசிக்கலாம்

On 7/6/2020 at 00:47, நிலாமதி said:

குழந்தைகளை பெற்ற பொழுது  பெற்ற மகிழ்வைக் காட்டிலும் மற்றவர்களால்
சிறந்தவர்கள் . என் பாராடடப படும் போது   பெற்றோருக்கு கிடைக்கும்
 பெரு மகிழ்ச்சி  அளவிட முடியாதது .

மகளின் எதிர்காலக் கனவு நிறைவேற  வாழ்த்துக்கள்

நன்றி அக்கா, ஆமாம் மகிழ்ச்சியாக இருக்கு

On 7/6/2020 at 01:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர்..💐

நன்றி சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள் 

உடையார், உங்களினதும் உங்கள் மகளினதும் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகளின் கனவு நிறைவேற வேண்டும் .

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள் 

நன்றி நீர்வேலியான்

4 hours ago, Kaalee said:

உடையார், உங்களினதும் உங்கள் மகளினதும் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மகளின் கனவு நிறைவேற வேண்டும் .

நன்றி காளி, எங்களுக்கும் அதே ஆசைதான்

1 hour ago, Knowthyself said:

வாழ்த்துக்கள் உடையார், சிறப்பாக வளர்த்துளீர்கள்

நன்றி Knowthyself

நன்றி சுமே & பையன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ளை நினைக்க‌ பெருமையா இருக்கு உடையார் ஜ‌யா ,

உங்க‌ளுக்கும் உங்க‌ குடும்ப‌த்தின‌ருக்கும் வெள்ளை ம‌ன‌சு ,

வாழ்த்துக்க‌ள் ஜ‌யா 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

உங்க‌ளை நினைக்க‌ பெருமையா இருக்கு உடையார் ஜ‌யா ,

உங்க‌ளுக்கும் உங்க‌ குடும்ப‌த்தின‌ருக்கும் வெள்ளை ம‌ன‌சு ,

வாழ்த்துக்க‌ள் ஜ‌யா 🙏

நன்றி பையா, என்னால் முடிந்ததை செய்கிறேன், கடமைப்பட்டவன் பலருக்கு. 

பிள்ளைகளையும் பழக்கி எடுக்கனும், மற்றவர்களுக்கு உதவினால் அது ஒரு தனி மகிழ்ச்சி, அவர்களுக்கும் விருப்பம், இதுதான் முதல் தொடக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

மகள் அருமையாக வரைந்துள்ளார். வாழ்த்துக்கள் உடையார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.