Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போதைய அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு இலக்கானேன்.

எனவே தான் நான் இரட்டை குடியுரிமையை பெற்றேன். ஆதனால் நாட்டை விட்டு இரண்டாவது தடவையாகவும் சென்றேன்.

இருப்பினும் இலங்கையில் வசித்து, இறப்பதே எனது ஆசை. இப்போதும் அமெரிக்காவுக்கு செல்வோம் என்று என் குடும்பத்தார் கூறுகின்றனர். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.

நான் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக பத்திரிகை ஒன்றில் எழுதப்படுகின்றது. அப்படி சொல்லப்படும் போது சிங்கள மக்கள் அதை நம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மற்ற பக்கத்தில் தமிழர்கள் என்னை ஒரு தேசியத்திற்கு எதிரான ஒருவாராகவே பார்ப்பர். அப்படி எல்லோருக்கும் இடையில் அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டு வாழ்வது துக்கம். சுரியான துக்கம் எனவும் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/144967?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போதைய அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு இலக்கானேன்.

காரணத்தை நம்புகிறோம், ஏற்றுக்கொள்கிறோம்.

1 hour ago, உடையார் said:

விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன்.

விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குக் காரணம் என்ன? அதனையும் வெளிப்படுத்தினால்... நடந்ததை அறிந்து நாங்களும் ரென்சனின்றிக் கூலாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும்
உதை கேட்கும்போது எங்களுக்கு படு கூல் , 

ஒருவேளை மகிந்தவிற்கு பதிலாக மீண்டும் புலிகளை போடுவாரோ பேரா ..என்று பார்த்தால் தெளிவாக தான் இருக்கிறார்.
சட்ட கிழிஞ்சிருந்தா தைத்து முறையிடலாம் பனையே முறிஞ்சிருக்கு எங்க முறையிடலாம் ....? 

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இவர் எல்லாம் ஒரு போராசிரியர் 😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இவர் எல்லாம் ஒரு போராசிரியர் 😏

சரி, அவர் படிக்காத பாடங்கள் எவையென்று நீங்கள் சொன்னால் பலருக்கு உதவியாக இருக்கக் கூடுமல்லவா? சொல்லுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

உண்மையைக் கூறுங்கள்,

1) பேராசிரியரை நொந்தது உங்கள் பிரச்சனையா அல்லது

2) வரலாறு என்று நான் குறிப்பிட்டது உமக்குப் புரியவில்லையா 

எதுவென்று குறிப்பிட்டால் பலருக்குப் (😏) பாடமெடுக்க வசதியாக இருக்கும் 👍

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

கபிதான், இதில் ஒரு கேள்வி தானே இருக்கிறது? எங்கே பிரச்சினை இருப்பதாக எங்கே தெரிகிறது உங்களுக்கு? preconception? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கபிதான், இதில் ஒரு கேள்வி தானே இருக்கிறது? எங்கே பிரச்சினை இருப்பதாக எங்கே தெரிகிறது உங்களுக்கு? preconception? 

வரலாறு தொடர்பாக, உண்மையில் நான் என்ன கூறினேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

பதில்  மிக  மிகச்சுலபம்

கோடரிக்காம்புகளின்  இறுதி  நிலையும்  வாழ்வும்  இது  தான்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

வரலாறு தொடர்பாக, உண்மையில் நான் என்ன கூறினேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா ? 🤔

இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல்

பதில்  மிக  மிகச்சுலபம்

கோடரிக்காம்புகளின்  இறுதி  நிலையும்  வாழ்வும்  இது  தான்

உண்மைதான் விசுகு அவர்களே! ஆனாலும் அந்த நிலைக்கு வருவதற்குள் பல பசுமரங்களையும் வெட்டிச் சாய்த்துவிடுகின்றனவே இந்தக் கோடரிக் காம்புகள். 😲

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

இல்லை!

ஒருவருக்கு அல்லது ஒரு கொள்கைக்குத்தான் விசுவாசமாக இருக்கமுடியும்.  

அல்லது

ஒரு அரசாங்கத்திற்கு அல்லது மக்களின் ஒரு பகுதியினருக்கு மட்டும்தான் சேவகம் செய்ய முடியும். 

வரலாறு இதைத்தான் சொல்லி நிற்கிறது.

ஒருவருக்கும் நம்பிக்கையாக இல்லாவிடின் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டி ஏற்படும்.

Dr. Hoolலின் நிலை இதனை திரும்பவும் ஒருமுறை நிரூபித்து நிற்கிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்கள் இந்த ஒரு பக்கத்தை ஒருவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு உடன் பட முடியவில்லை! இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால் மகிந்த , புலிகள் மட்டுமன்றி, ஏனைய குழுக்களாலும் தூசிக்கப் படுவோராகினர்.

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

மிகவும் உண்மையான கருத்து. தான் கொண்ட கொள்கைக்கு என்றும் விசுவாசமாக இருக்கும் ஒரு போராளியான நீங்கள் வாழ்ந்து வருவதையே சொல்லி இருக்கிறீர்கள்.

25 minutes ago, Justin said:

இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால்

இவர்களும் தாம் தேர்ந்து கொண்ட மனிதத்துக்கான போராட்டத்துக்கு விசுவாசமான போராளிகளாகவே இன்றும், என்றும் இருக்கிறார்கள். இராஜினியின் கொலையோ, ஏனைய அச்சுறுத்தல்களோ இவர்களை பின்னடைய வைக்கவில்லை. ஒரே கொள்கையான, மனிதத்துக்கு முதலிடம் என்ற கொள்கைக்கே இவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள்.

இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுத்து, மனிதம் அதற்கான விலையாகும் போது இவர்களுக்கும் இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது. இனரீதியான தேசியத்துக்கு முதலிடம் கொடுப்பவர்கள் தமது நோக்கத்துக்காக மனிதர்கள் மடிவதை தேவையானதாக கருதுகிறார்கள். மனிதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களோ, ஒவ்வொரு மனித உயிரும் தனது முழுமையான வாழ்வை அனுபவித்து இயற்கை எய்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மண்டைக்கனமே தவிர.. உண்மையான தமிழ் மக்கள் அக்கறை கிடையாது. தனது தனிப்பட்ட செல்வாக்கை மக்கள் மத்தியில் நிறுவி ஆதாயம் தேட விளைவதையே கூல் செய்கிறார்.

இவரை விட இவரது மனைவிக்கு தமிழ் மக்கள்.. தமிழ் கலை பண்பாடு கலாசாரத்தில் நல்ல ஈடுபாடும்.. உண்மையான அக்கறையும் உண்டு. 

இவர்கள் இருவரையும் அவர்களோடு தொடர்பில் இருக்கக் கூடிய காலத்தில் அறிந்த வகையில் இதையே சொல்ல முடியும்.

இதெல்லாம் கூலின் நீலிக்கண்ணீர் அவ்வளவே. 

51 minutes ago, Justin said:

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். 

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர் போலி மனித உரிமைப் போராளி.

இலங்கையிலும், இந்தியாவிலும், படித்த மண்டைக்கனம் பிடித்த பலர், அந்த கணத்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்ய முடியாத நிலையில், சர்வதேச தொண்டுநிறுவணங்கள் நிதியை பெறும் நோக்கத்துடன், மனிதஉரிமை என்று அலம்பறை பண்ண தொடங்கி விடுவார்கள்.

இவர் அமெரிக்கா ஓடியது, புலிகளால் அல்ல. மகிந்தா சார்பில் டக்கியர் எச்சரித்ததால்.

இந்த முறை, தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து கொண்டு, சுயாதீனமான தேர்தல் என்று அலம்பறை பண்ண, எரிச்சல் அடைந்த மகிந்தர் ஏற்பாட்டில், இப்போதும் டக்கியர் முதல் எச்சரிக்கை செய்துள்ளார்.

சமமாக இருக்க வேண்டும் என்று, மகிந்தா  உடன் இல்லாத புலிகளையும் சேர்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

ராஜன் ஹூல் முக்கிய பங்காற்றிய யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைகளுக்கான அமைப்பின் (மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்) அறிக்கை எல்லாமே நேர்மையற்றதாகவே இருந்தன. அந்த அறிக்கைகள் எப்படி இருந்தனவென்றால் பத்து பக்க அறிக்கையில் ஒன்பதரைப் பக்கங்கள் புலிகளின் மனிதவுரிமை மீறல்கள் என்று பட்டியலிட்டுவிட்டு இலங்கை அரசினதும், இலங்கைப் படையினரதும் அட்டூழியங்களை அரைப்பக்கத்தில் எழுதியிருப்பர். அவற்றில் விமானப்படையின் குண்டு வீச்சில் அகப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகளில் இருந்து பாலியல் வல்லுறவுகள் வரைக்கும் இருந்ததில்லை. யாழ் பல்கழகம் என்று போட்டது கூட நேர்மையற்ற செயல்; ஏனெனில் ராஜன் ஜூலும் சரி, அவரது பரிவாரங்களும் சரி யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கவில்லை. விட்டு விலகி வேறு இடங்களுக்கு பெயர்ந்த பின்னும் அதே பெயரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருந்தனர். 

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

இவரை மனிதவுரிமைவாதி என்று குறிப்பிடுவதே மிகப்பெரும் அவலம்.
 
UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்கள் இந்த ஒரு பக்கத்தை ஒருவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு உடன் பட முடியவில்லை! இந்த ஹூலும் சரி, ராஜன் ஹூலும் அவரது கூட்டாளிகளும் சரி, மனித உரிமைகள் முக்கியம் என்ற நிலைப்பாடு எடுத்தமையால் மகிந்த , புலிகள் மட்டுமன்றி, ஏனைய குழுக்களாலும் தூசிக்கப் படுவோராகினர்.

இப்படியானவர்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாமல் பாதுகாக்க மிகவும் தேவை என நினைக்கிறேன்! இவர்களை அடக்க முனைவதால் எமக்கு ஒரு நன்மையும் இல்லை, தீமைகள் வேண்டுமானால் வரலாம்!

நீங்கள் கூற விரும்புவது சரிதான் ஜஸ்ரின். ஆனால் இவற்றுக்கு முன்னால் பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. 

1) மனித உரிமை என்கின்ற எண்ணக்கரு உண்மையில் நன்மையான விடயமே. ஆனால் யாரால் மனித உரிமைகள் என்கின்ற எண்ணக் கரு முன்வைக்கப் படுகிறது 🤔

1.1) இந்த எண்ணக்கரு யாருக்காக முன்வைக்கப் படுகிறது 🤔

1.2) எத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் முன்வைக்கப் படுகிறது 🤔

1.3) மனித உரிமை என்கின்ற எண்ணக் கருவை முன்னிறுத்துவோர் உண்மையிலேயே அதனை நடைமுறைப் படுத்துகின்றனரா 🤔

2) அழிப்பவனுக்கும் அழிக்கப்படுபவனுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் மனித உரிமை பேசுவோரின் பங்களிப்பு எத்தகையது 🤔

3) எமது தமிழ்ச் சமூகத்தில் மனித உரிமை பேசியவர்கள் எமது சமூகத்திற்கு, குறிப்பாக போராட்ட காலத்தில் ஏற்படுத்திய தாக்கம் நன்மையானதா தீமையானதா 🤔

4) ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில்,  மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் தற்போதைய செயற்பாடு அழிக்கப்பட்ட எம் சமூகத்திற்கு எவ்வகையில் அமைகிறது 🤔

தங்களிடமிருந்து நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

1) ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம்,

2) இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

1) பாதிக்கப்பட்டு நெருப்பின் மீது நின்ற எம் மக்களுக்கு காவலாக இருந்தவர்கள் மீது சேறடித்தவர்கள் என்கின்ற கோபம்தான். (மிகவும் மேலோட்டமாகச் சொன்னால்)🙂

2) இந்தியாவிலுள்ல PETA க் காறர்கள் ஏனோ நினைவிற்கு வந்து தொலைக்கிறார்கள் 🤥

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

ஐயா, புலிகள் மீதல்ல.... மகிந்தர் மீதான உரிமை மீறல்களை தான் வெறுக்கிறேன்.

எங்கண்ட தலை மகிந்தர்.... அவரை பத்தி குறை சொன்னா விடேலாது. 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின்,

Hoole மிக விரைவில் ""தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தனக்கு இன் நிலை ஏற்பட்டதாக"" கூறுவார் இருந்து பாருங்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்.

http://www.uthr.org/

4 hours ago, நிழலி said:

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

வட இலங்கையில் உதாரணம் காட்டக்கூடியதாக ஏன் எவருமே இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

UTHR (J) இன் அறிக்கைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால், 9 பக்கத்தில் இருந்த புலிகள் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையானவையா என்று தான் நாம் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் ஒரு தரப்பை அதிகம் குற்றம் சாட்டும் ஒருவராக இருந்தாலும் மனித உரிமைகள் சார்ந்து தான் அது இருந்திருக்கிறது என்பது மறுக்க இயலாதல்லவா? 

ஹூல் மீது ஆட்கள் அள்ளிக் கொட்டும் வசைகளைப் பார்க்கையில் நான் யோசிப்பது என்னவென்றால், மண்டையன் குழுவை நடத்தியவர்களும், வவுனியாவிலும் கொழும்பிலும் புலிகளின் போராளிகளை ராணுவத்திடம் போட்டுக் கொடுத்தவர்களும் கூட  தமிழர்களால் டீசன்டாக நடத்தப் படுகிற தற்காலத்தில், புலிகளின் மனித உரிமை மீறல்களை எழுதியவர்களை ஏன் இப்படி வெறுக்க வேண்டும்? 

நாதம்:  பட்டம் பெறாமலே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளுகிற காலத்தில் இருக்கிறோம், இரண்டு ஹூல்களுமே தங்கள் துறைகளில் மிகுந்த கெட்டிக் காரர்கள்! மனித உரிமையை முன் வைத்து எதையும் தேட வேண்டிய அவசியம் இல்லை எனவே நான் நினைக்கிறேன்! 

ஹூலிற்றை படிச்சிருந்தால் அவற்றை உள்நோக்கம் தெரிஞ்சிருக்கும். அதைவிட்டுட்டு அவற்றை அறிக்கையைப்படித்தால் உந்தமாதிரியான எண்ணம்தான்வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:
18 hours ago, நிழலி said:

இலங்கையில் தென்னிலங்கையில் சுனந்த தேசப்பிரிய, சுனிலா, சார்ள்ஸ் அபேசேகர போன்ற உண்மையான மனிதவுரிமை வாதிகள் புலிகள் /அரசு என்று இருபக்கமும் செய்த மனிதவுரிமை மீறல்களை நேர்மையாக வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். இவர்கள் தான் மனசாட்சியை கொள்கைகளால் நசுக்கி விடாதவர்களாக இருந்தனர். அவர்களும் ராஜன் ஹூல் போன்றவர்களும் ஒன்றல்ல. 

வட இலங்கையில் உதாரணம் காட்டக்கூடியதாக ஏன் எவருமே இல்லை?

சுதந்திரமான நாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களே தமிழ்நாட்டில் உள்ள ஒரு இனவெறியன் வீடு புகுந்து அடிப்பேன் என்று உளறியதற்கு விசில் அடித்து மகிழும் நிலையில் தான் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.