Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த‌மிழ‌ர்க‌ளின் க‌லாச்சார‌ம் எத‌ நோக்கி போகுது , யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் ப‌தில‌ எதிர் பார்த்து

Featured Replies

2 hours ago, nedukkalapoovan said:

மேற்கு மக்கள் கீழத்தேயத்தை விரும்ப.. கீழத்தேயம்.. குழப்பமயமாகிட்டு வருகுது.

Image may contain: Nthiran Krishnan, standing and outdoor, text that says "FaceApp"

நெடுக்கு நாமும் இந்த உலகத்தில் தான் வாழுகிறோம். ஐரோப்பிய மக்கள் தாம் போகும் நாட்டு உடைகளை அணிவது சர்வ சாதாரணம்    சீனாவுக்கு விடுமுறை  சென்றால் சீன உடையணிந்து போட்டோ எடுப்பதும், பிரேசில் சென்றால் தென் அமெரிக்க உடை அணிவதும் இந்தியா சென்றால் இந்திய உடை அணிவதும் மொரோக்கோ சென்றால் அரபு உடை அணிந்து போட்டோ எடுப்பதும்  ஐரோப்பிய மக்களின் பொதுவான நடைமுறை. இதை போய் யாராவது உலகம் தெரியாதவர்களிடம்  காட்டி ஏமாற்றுங்கள். அதுவும் இது face app foto. 

  • Replies 161
  • Views 13.3k
  • Created
  • Last Reply
39 minutes ago, nedukkalapoovan said:

நிகழ்ந்ததை எழுதினால்.. நம்பக் கூடியவர்கள் நம்புங்கள்.. நம்பாதாவர்கள் நம்பாதீர்கள். அது ஒரு பிரச்சனையே அல்ல. 

திருமணம் என்பது தனிப்பட்ட எளிமையான எமது பண்பாட்டு வெளிப்பாட்டுடன் அமைய வேண்டிய ஒரு மனதிரு நிகழ்வு. எமது நெருங்கிய உறவுகள்.. தற்கால நண்பர்களை தவிர வேறு எவரையும் அழைக்கவில்லை. 

மேலும் எங்கள் திருமணம் கடும் குளிர் காலத்தில் நிகழ்ந்த ஒன்று.. குளிர் நாட்டின் தன்மையையும் உள்வாங்க.  அதுவும் ஒரு புது அனுபவம் தான்.

நாங்கள் திருமண வரவேறுப்பு என்று திருமண நிகழ்வுக்கு அப்பாலான.. தனி நிகழ்வு எதனையும் செய்யவில்லை. 

யாழ் கள உறவுகளை அழைப்பது என்று முடிவெடுத்தால்... எல்லா உறவுகளையும் பாரபட்சமின்றி அழைக்கனும்.. அதற்கான வாய்ப்புக்களை செய்து கொடுக்கனும். ஒரு நாட்டில் ஒரு ஊர்காரரை மட்டும் அழைத்து மற்றவர்களுக்கு அதை விடுப்புக்காட்டுவதில் நமக்கு உடன்பாடில்லை. அது உறவுகளை பாரபட்சமின்றி மதிப்பளிப்பது ஆகாது. 

மேலும் யாழ் ஒரு பொதுவெளி. அங்கு எங்கள் தனிப்பட்ட நிகழ்வுக்குரிய விடயங்களை முழுமையாகவோ பகுதியாகவோ.. குறிப்பாக படங்களோடு பிரசுரிக்க முடியாது. அது எங்கள் கொள்கை.. யாழும் எமது தனிப்பட்ட பகிர்வுகளுக்கு நாமே தான் பொறுப்பும் என்று கூறியுள்ளது.. அதன் பொறுப்பை திறந்துள்ளது. ஆகவே இதுவிடயத்தில் எங்களிடம்.. நெகிழ்வுக்கு இடமில்லை. 

நீங்கள் எப்படி தான் தூண்டில் போட்டாலும்.. சிக்கக் கூடிய மீன்கள் மட்டும் தான் சிக்கும். 😀

மீளவும்.. யாழ் ஒரு குடும்பம்... போல. யாழ் கள உறவுகள்.. எங்கள் அன்பின் கள உறவுகள் தாம். அதில் மாற்றுக்கருத்தில்லை. கருத்தால் மோதிக் கொண்டாலும். கொள்ளா விட்டாலும். 

நெடுக்கு உங்கள் திருமண விழாவை நீங்கள் விவரித்ததில் மிக எளிமையாகவும் சிறப்பாகவும் நடந்ததாகவே எனக்கு படுகிறது. அதற்காக எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் வாழ்ததுக்களும்.

என்றும் இன்பமுடன் மனைவி பிள்ளைகளுடன் உங்கள் வாழ்க்கைப் பயணம் அமைய எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்   

10 hours ago, பையன்26 said:

பையன், 

கலாச்சாரம் என்ற மனிதசமுதாயத்தின் பரிணாம  Zivilisation ஐ வெறும் பெண்கள் மற்றும் பாலியல் உறவில் மாத்திரம் பார்க்கும்  மட்டகரமான வக்கிரமான  சிந்தனையையே உங்கள் அனைத்துக் கருத்திலும்  நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். உலகில் உள்ள அனைத்து கலாச்சாரத்திலும் குறைகளும்,  நிறைகளும், மாற்றங்களும் உண்டு  இதில் உயர்வு  தாழ்வு என்று எந்த கலாச்சாரமும்  இல்லை  என்ற  அடிப்படைப் புரிதல் கூட உங்களிடம் இல்லை. 

உங்கள் திரியில் ஆரோக்கியமான எதிர்வாதங்களை எதிர்பார்ப்பதாக சாட்டுக்கு  கூறிவிட்டு ஆமாம் சாமி  போடுபவர்களையே எதிர்பார்த்தீர்கள். 

 ஆமாம் சாமி போடுபவர்களைத் தான் அரசியலில் கூட பழைய நமது தமிழரசு கூட்டணி அரசியல் வாதிகளும் எதிர் பார்த்தார்கள் பின் வந்த ஆயுதப் போராளிகளும் (புலிகள் உட்பட) எதிர்பார்த்தார்கள்  அதன் தொடர்சசியாக இப்போதுள்ள கூட்டமைப்பும் அது தான் மக்களிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்.

70 வருடங்களாக தர்க்கரீதியான விவாதங்களை எதிர் கொள்ளும்  திராணி இல்லாத ஆமாம் சாமி கலாச்சாரத்தில் வாழ்ந்த நீங்களும் அதையே எதிர்பார்ப்பது இயல்பானதே.    

ஆகவே,  இனிமேல் நீங்கள் திரிகளை திறக்கும் போது,  இது கருத்து களமல்ல,   ஒரு வில்லுப் பாட்டை ஆரம்பித்துள்ளேன். ஆமா போட ஆட்கள் தேவை. வாருங்கள் என்று நேரடியாக அழைப்பதே பொருத்தமானது.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது நல்லதொரு கேள்வி. நெடுக்ஸ் விளக்கமென்ன / ஆதாரமெங்கே???

11 hours ago, nedukkalapoovan said:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

9 hours ago, ரதி said:

இப்படித் தான் அவருடைய திருமணம் நடந்ததிற்கு ஆதாரத்தை இணைக்க சொல்லுங்கோ😂🤩🤩 ...யாழ் தன்னுடைய குடும்பம் என்று சொல்லுறவர் ...தன்னுடைய சகோதர சகோதரிகளை ஏன் கூப்பிடவில்லை என்றும் கேளுங்கோ 🤣

அது நல்லதொரு கேள்வி. நெடுக்ஸ் விளக்கமென்ன / ஆதாரமெங்கே??

ரதி சாப்பிட கூப்பிட்டிருக்கிறா.
அப்போது எல்லா ஆதாரங்களும் காட்டப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர்க்கு அவரவர் கலச்சாரம் / மதம் உயர்வானது. மற்ற மதங்களையோ, கலாச்சாரத்தையோ விமர்சிப்பது தவறு. இஸ்லாமியர்கள் தங்கள் மதம்தான் உயர்ந்தது என்று வாதிடுவார்கள், மற்றவைகள் எல்லாம் சாத்தன் என வசைபாடுவார்கள். இதுபோல்தான் இந்த திரியும் நீளுகின்றது. be a Roman in Rome என்பது போல காலத்திற்கும் / சூழலுக்கும் எற்ப எம்மை மாற்றிக்கொள்வதே சிறப்பு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பையன், 

கலாச்சாரம் என்ற மனிதசமுதாயத்தின் பரிணாம  Zivilisation ஐ வெறும் பெண்கள் மற்றும் பாலியல் உறவில் மாத்திரம் பார்க்கும்  மட்டகரமான வக்கிரமான  சிந்தனையையே உங்கள் அனைத்துக் கருத்திலும்  நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். உலகில் உள்ள அனைத்து கலாச்சாரத்திலும் குறைகளும்,  நிறைகளும், மாற்றங்களும் உண்டு  இதில் உயர்வு  தாழ்வு என்று எந்த கலாச்சாரமும்  இல்லை  என்ற  அடிப்படைப் புரிதல் கூட உங்களிடம் இல்லை. 

உங்கள் திரியில் ஆரோக்கியமான எதிர்வாதங்களை எதிர்பார்ப்பதாக சாட்டுக்கு  கூறிவிட்டு ஆமாம் சாமி  போடுபவர்களையே எதிர்பார்த்தீர்கள். 

 ஆமாம் சாமி போடுபவர்களைத் தான் அரசியலில் கூட பழைய நமது தமிழரசு கூட்டணி அரசியல் வாதிகளும் எதிர் பார்த்தார்கள் பின் வந்த ஆயுதப் போராளிகளும் (புலிகள் உட்பட) எதிர்பார்த்தார்கள்  அதன் தொடர்சசியாக இப்போதுள்ள கூட்டமைப்பும் அது தான் மக்களிடம் இருந்து எதிர்பார்கிறார்கள்.

70 வருடங்களாக தர்க்கரீதியான விவாதங்களை எதிர் கொள்ளும்  திராணி இல்லாத ஆமாம் சாமி கலாச்சாரத்தில் வாழ்ந்த நீங்களும் அதையே எதிர்பார்ப்பது இயல்பானதே.    

ஆகவே,  இனிமேல் நீங்கள் திரிகளை திறக்கும் போது,  இது கருத்து களமல்ல,   ஒரு வில்லுப் பாட்டை ஆரம்பித்துள்ளேன். ஆமா போட ஆட்கள் தேவை. வாருங்கள் என்று நேரடியாக அழைப்பதே பொருத்தமானது.

துல்ப‌ன் உங்க‌ளுக்கு நான் எழுதின‌து எங்கையோ சுட்டு போச்சு அதுக்கு தான் என் மேல‌ இப்ப‌ எரிஞ்சு விழுறீங்க‌ள் ,

இந்த‌ திரியில் உங்க‌ட‌ முத‌ல் கேள்விக்கு என‌து ப‌தில‌ அளித்து இருந்தேன் , ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்காம‌ அத‌ க‌ட‌ந்து சென்று விட்டீங்க‌ள் ,

சில‌ ச‌மைய‌ம் உண்மையை எழுத‌ சில‌ருக்கு கோவ‌ம் வ‌ரும் , அந்த‌ கோவ‌ம் உங்க‌ளிட‌மும் இருக்கு , பொறுமை துல்ப‌ன் அண்ணா ,

இந்த‌ திரியில் சுவைப்பிரிய‌ன் அண்ணா என்ன‌ காமெடிக்கு ந‌க்க‌ல் அடித்தார் நான் ஏதாவ‌து  அவ‌ருக்கு இட‌க்கு முட‌க்காய் எழுதினேனா வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று சிரித்து விட்டு பெரிசா ஒன்றும் எழுத‌ வில்லை   , 

இந்த‌ திரியில் ப‌ல‌ர் உங்க‌ளின் அநாக‌ரிகாம‌ன‌ எழுத்த‌ க‌ண்டித்து இருக்கின‌ம் , எம் இன‌த்தில் பிற‌ந்து விட்டு எம் க‌லாச்சார‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தா என்று ,

நான் எழுதின‌து வேறு , நீங்க‌ள் என் கேள்விக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள் , 

என‌க்கு வேண்டிய‌வைக்கு நான் யாழில் ஜால்ரா அடிக்க‌ வில்லை , அது உங்க‌ட‌ க‌ண்ணுக்கு அப்ப‌டி ப‌ட்டால் நான் ஒன்றும் செய்ய‌ முடியாது ,

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் வெளிப்படையாய்  சொல்லுவேன் துல்ப‌ன் உங்ளுடைய‌ க‌ருத்து அருமை  👏,

யாழில் ஒரு சில‌ உற‌வுக‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி வ‌ருகிறேன் நீங்க‌ள் அத‌ ம‌ன‌சில் வைச்சு க‌ண்ட‌த‌ எல்லாம் எழுதுறீங்க‌ள் 😁 ,

க‌லாச்சார‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் எப்ப‌வும் த‌யார் , நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ இந்த‌ திரியிலே விவாதிப்போம் 💪

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

வெள்ளை இன‌த்த‌வ‌ன் உங்க‌ட‌ பெண்டாட்டிக்கு ரூட்டு போட்டா அவ‌ன் போட‌ட்டும் என்று பார்த்து கொண்டு சும்மா இருப்பிங்க‌ளா 😁

ஏன் தமிழர்களில் வாழும் நாடுகளில் மேல்குறித்த சம்பவங்கள் போல் நடக்கவில்லையா? கொலைவரை போயுள்ளதே... தமிழீத்தில் உள்ளவர்கள் அவ்வளவவு சுத்தமானவர்களா? 

கிட்டத்தட்ட ஒரு அடிப்படைவாத முஸ்லீமின் கருத்துபோல் உள்ளது. நான்மட்டும் உசத்தி மற்றெல்லம் சாத்தான்

அதே போல‌ தான் வெளி நாட்டில் நாம் வாழ்ந்தாலும் எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

ஏன் தமிழர்களில் வாழும் நாடுகளில் மேல்குறித்த சம்பவங்கள் போல் நடக்கவில்லையா? கொலைவரை போயுள்ளதே... தமிழீத்தில் உள்ளவர்கள் அவ்வளவவு சுத்தமானவர்களா? 

கிட்டத்தட்ட ஒரு அடிப்படைவாத முஸ்லீமின் கருத்துபோல் உள்ளது. நான்மட்டும் உசத்தி மற்றெல்லம் சாத்தான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் பலரின் கருத்தைப் பார்த்தால் அசல் தமிழ் தலிபான்களின் கருத்தாக இருக்கின்றது. ஆனால் காலம் மாறிவிட்டது.  உண்மையில் தமிழ் தலிபான்கள் ஒரு சிலர்தான். அவர்களும் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள்.

தமிழர் கலாச்சாரத்தில் வேலி பாய்வதும், வேலிக்குள்ளால் பொட்டு வைத்து போய் வருவதும் இருந்ததுதான். இப்போதும் இருக்கின்றதுதான். ஆனால் பையன் சின்னப்பையனாக இருந்ததால் தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்காக வேலி பாய்வதெல்லாம் நல்ல கலாச்சாரம் என்று சொல்ல வரவில்லை. எல்லா சமூகத்திலும் ஒரு சிறு பகுதியினர் புறநடையாக இருப்பர். பெரும்பான்மையினர் பண்புகளுடன் இருப்பர்.

தாயகத்தில் உள்ள இளையோர்கள் எப்படியான மனநிலையில் வளர்கின்றார்கள் என்பதை அறியாமலும், புலம்பெயர் நாடுகளில் வளரும் இளையோர்கள் எப்படி அந்த நாடுகளின் நீரோட்டத்தில் ஒன்றிணைந்து வாழ்கின்றார்கள் என்று புரியாமலும் ஒரு மாயையில் சிலர் இருக்கின்றார்கள். அதற்காக இளையோர் சீரழிவுக் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றார்கள் என்று சொல்லவரவில்லை. அவர்கள் நவீன வாழ்வைப் புரிந்து நற்பிரஜைகளாக, ஆளுமையுடன் வளர்ந்து வருவதை தினமும் பார்க்கின்றேன். 

எமது கலாச்சாரம் என்னவென்று யாரும் எதையும் எழுதிவைக்கவில்லை. எமது முன்னோர்கள் என்ன செய்தார்களோ அதையே நாம் எமது கலாச்சாரம் என்று பின்பற்றுகின்றோம். ஒவ்வாதவற்றை தவிர்த்து, புதியனவற்றை உள்வாங்குகின்றோம். இதையே எமது சந்ததியினரும் செய்வார்கள்.

44 minutes ago, பையன்26 said:

துல்ப‌ன் உங்க‌ளுக்கு நான் எழுதின‌து எங்கையோ சுட்டு போச்சு அதுக்கு தான் என் மேல‌ இப்ப‌ எரிஞ்சு விழுறீங்க‌ள் ,

இந்த‌ திரியில் உங்க‌ட‌ முத‌ல் கேள்விக்கு என‌து ப‌தில‌ அளித்து இருந்தேன் , ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்காம‌ அத‌ க‌ட‌ந்து சென்று விட்டீங்க‌ள் ,

சில‌ ச‌மைய‌ம் உண்மையை எழுத‌ சில‌ருக்கு கோவ‌ம் வ‌ரும் , அந்த‌ கோவ‌ம் உங்க‌ளிட‌மும் இருக்கு , பொறுமை துல்ப‌ன் அண்ணா ,

இந்த‌ திரியில் சுவைப்பிரிய‌ன் அண்ணா என்ன‌ காமெடிக்கு ந‌க்க‌ல் அடித்தார் நான் ஏதாவ‌து  அவ‌ருக்கு இட‌க்கு முட‌க்காய் எழுதினேனா வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று சிரித்து விட்டு பெரிசா ஒன்றும் எழுத‌ வில்லை   , 

இந்த‌ திரியில் ப‌ல‌ர் உங்க‌ளின் அநாக‌ரிகாம‌ன‌ எழுத்த‌ க‌ண்டித்து இருக்கின‌ம் , எம் இன‌த்தில் பிற‌ந்து விட்டு எம் க‌லாச்சார‌த்த‌ கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌தா என்று ,

நான் எழுதின‌து வேறு , நீங்க‌ள் என் கேள்விக்கு ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள் , 

என‌க்கு வேண்டிய‌வைக்கு நான் யாழில் ஜால்ரா அடிக்க‌ வில்லை , அது உங்க‌ட‌ க‌ண்ணுக்கு அப்ப‌டி ப‌ட்டால் நான் ஒன்றும் செய்ய‌ முடியாது ,

நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் வெளிப்படையாய்  சொல்லுவேன் துல்ப‌ன் உங்ளுடைய‌ க‌ருத்து அருமை  👏,

யாழில் ஒரு சில‌ உற‌வுக‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி வ‌ருகிறேன் நீங்க‌ள் அத‌ ம‌ன‌சில் வைச்சு க‌ண்ட‌த‌ எல்லாம் எழுதுறீங்க‌ள் 😁 ,

க‌லாச்சார‌ம் ப‌ற்றிய‌ விவாத‌த்துக்கு நான் எப்ப‌வும் த‌யார் , நீங்க‌ள் த‌யார் என்றால் வாங்கோ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ இந்த‌ திரியிலே விவாதிப்போம் 💪

பையன்,

இந்த திரியில் எமது கலாச்சாரத்தை நான் என்றுமே கேவலப்படுத்தவில்லை. உலகின் எல்லா கலாச்சாரங்களில் உள்ளது போல் நிறைகளும் குறைகளும் எமது கலாசாரத்திலும் உள்ளது என்ற திரும்ப திரும்ப எழுதி வருகிறேன். எமது கலாசாரத்தில் உள்ள கேவலமான பல பழக்கங்களை வெளிப்படையாக ஒத்து கொள்ள மறுக்கும்,  எமது கலாச்சார ஓட்டைகளை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை போல மறைக்க நினைக்கும்   சிலர் என்ன திட்டுவதைப் பற்றி எனக்கு  எந்த கவலையும் இல்லை. தாராளமாக அதை செய்யட்டும். 

உங்கள் கருத்தில் பொண்ணுக்கு தேவை  பொறுமை என்று எழுதியிருந்தீருகள். ஏன் ஆணுக்கு அது தேவையில்லையா? 

தாலியை வாங்கியவுடன் கையெடுத்து கணவனை கும்பிட வேண்டும் என்ற கலாச்சசாரம் நடைமுறையை வலியுறுத்தி இருந்தீர்கள். அது பத்தாம் பசலி நடைமுறை என்றாலும் அதை அடுத்த‍டுத்த வரும்  தலைமுறையினர் மாற்றி அமைக்க வேண்டும். அப்படியானல் இருவரும் தமக்குக் தம்மை கும்பிட வேண்டும். அதென்ன ஒருவர் மட்டும் கும்பிடுவது என்று நீங்கள் சிந்திக்கவில்ல்லையா? 

 ஊரில் விஸ்கி, பிரண்டி திருமணங்களில் இல்லை என்று கூறியிருந்தீர்கள். உண்மை தான் ஆனால் 80 களில் நடைபெற திருமணங்களில் சாராயம் தாராளமாக பின் வளவுக்கும் பரிமாறப்பட்டதை அறிந்தவர்கள் நாம். 

பெண் திருமணத்தின் போது நடனமாறுவதை ஒரு குறையாக இப்பவே இந்த ஆட்டம் ஆடினால் பிறகு எப்படி ஆடுவா என்று கொச்சையாக கூறியிருந்தீர்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் ஆடுவதை பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை. 

கலாச்சாரம் குறித்து நீங்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எமது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான். ஆண் பிள்ளைகளுக்கு அல்ல.

ஒரு பெண் கணவனை இழந்து விட்டால் எந்ந சுபகாரியங்களுக்கும் முன்னே நிற்க கூடாது. அது தனது மகனின் அல்லது மகளின் திருமணத்திலும் கூட என்ற எமது முன்னோர்கள் கட்டிய வடிகட்டிய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ளுகின்றீர்களா?

 என் மனைவியாக வருபவர் மீது அடுத்தவர் கை பட்டால் கூட என்னால் பொறுக்க முடியாது என்று  வரப்போகும் மனைவியில் கூட நம்பிகை இல்லாமல் அநாகரிகமான  கருத்தைக்கூறிவிட்டு  என்னிடம் என் மனைவிக்கு அடுத்தவன் ரூட்டு போட்டார் நீங்கள் விடுவீர்களா என்று என்னை பார்த்து கேட்டீர்கள்.  அப்படி நடந்தால் அதை என் மனைவி பார்த்து கொள்வார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுகு அந்த நம்பிக்கை இல்லாமல் விட்டால் அதற்காக அடுத்தவர் கலாச்சாரத்தின் மீது பழி போடாதீர்கள். 

வாழ்க்கைக்கு ஆயிரம் அறிவுரைகளை பெண்களுக்கு கூறும் நீங்கள் போராட்டத்திற்கு மட்டும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக வெள்ளைக்காரன் வடிவமைத்த இராணுவ உடையுடன் வெள்ளைகாரன் கண்டு பிடித்த  துப்பாக்கிகளுடன் பெண்பிள்ளைகள் போராட்டத்தை பற்றி எதுவும் கூறுவதில்லை.

வெடிகுண்களுடன்  தற்கொலை படையாக பெண்பிள்ளைகள் சென்றதை வரவேற்கிறீர்கள்.  உங்கள் சுயநலத்துக்காக போர்களம் சென்று  இறப்பதற்கு கலாசாரத்தில் எல்லா விட்டுக்கொடுப்பும் செய்வீர்கள். அவர்கள் மகிழ்வாக தமக்கு பிடித்த ரீதியில் வாழ்வதற்கு ஆயிரம் கட்டுபாடுகள் அறிவுரைகள் கூறுகிறீர்கள்

இது போன்ற எத்தனையோ ஆயிரம் கேள்விகளை இங்கு கேட்கலாம். கிருபன் கூறியது போல் தமிழ் தலிபான்கள் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிந்தாலும் புரியாத‍து போல் நடிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பையன்26 said:

எம் க‌லாச்சார‌ம் முக்கிய‌ம் , அடுத்த‌வ‌ன்ட‌ பெண்டாட்டிய‌ இவ‌ன் வைத்து இருக்கிற‌து இவ‌ன் பெண்டாட்டியை அவ‌ன் வைத்து இருப்ப‌து எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் நான் பார்த்த‌து இல்ல‌ , 

தமிழீழத்தில் நடந்த உண்மைக்கதை. கதாநாயகன் தமிழீழ பாடல்களை கணீர் என்ற குரலில் பாடி மக்களை எல்லாம் போர்க்கோலம் கொள்ள வைத்தவர். பின்னர் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின் சரணடைந்து மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து பாடி இசைத்தட்டு வெளியிட்டு ராஜபக்சவிடம் நேரில் கொடுத்தவர்: செய்திகளில் படத்துடன் வந்திருந்தது. இதெல்லாம் நடக்க முன்னர் அவர் தமிழீழ பாடல்களை பாடும் பாடகரான கதை இது.

ஒரு நாள் விடுதலைப் புலிகளின் முகாமுக்கு அழுதபடியே  தலைவிரி கோலமாக கண்ணகி போல நீதி கேட்டு இளம் பெண்ணொருவள் ஓடி வந்தாள். என் கணவன் இன்னுமொரு பெண்ணையும் கலியாணம் செய்து விட்டானே, நான் என்ன செய்வேன் என்று கல்லும் உருகும் வண்ணம் கண்ணீர் சிந்தினாள். இரக்கம் நிறைந்த புலிகளால் இதை தாங்க முடியவில்லை. எங்கே உங்கள் கணவர்? நாம் விசாரித்து நீதி வழங்குவோம் என்றார்கள். அவளும் அவர் இருக்கும் இடம் காட்டுகிறேன் என்று விடுதலைப்புலிகளை அழைத்து. சென்றாள். அவர்கள் போகும் இடத்தை நெருங்க, மிகவும் இனிமையான குரலில் கேட்பவர்களை மெய்மறக்க வைக்கும் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அவர் தான் பாடுகிறார் என்றாள் அவள். பாடகர் இருந்த இடம் எங்கள் பழந்தமிழ் கலாச்சாரத்தில் என்றும் இடம் பிடித்திருக்கும் கள்ளுத்தவறணை. தன் சக குடிகாரர் சூழ்ந்திருந்து இரசிக்க, இந்த அபார திறமை கொண்ட பாடகர் அவர்களுக்கு இனிய பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அவரை தம்முடன் அழைத்து சென்ற புலிகள் அவரை எச்சரித்துவிட்டு, இரு மனைவியரையும் ஒன்றாக வாழ உடன்பட செய்து, பாடகருக்கும் நல்ல வருமானத்துக்கு வழி செய்தார்கள். தமிழீழ பாடல்களை விடுதலைப்புலிகளின் விழாக்களிலும், ஒலிப்பதிவுகளிலும் பாடுவது தான் அந்த வேலை. சிறுது காலத்துலேயே பாடகர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். அவர் குரல் தமிழர் வாழும் நாடெல்லாம் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. உள்ளூர் சமுக நிகழ்வுகளிலும் அவர் பாடினால் மக்கள் வெள்ளம் அலை மோதும். அவருக்கு மாலைகளும் சூட்டுவர். அப்படி ஒரு நாளில் தான் அந்த மாணவி - அவரது குரல் கொள்ளை கொண்ட ரசிகை, அவருக்கு மாலை போட்டாள். சில நாட்களிலேயே திருமண மாலையும் மாற்றிக் கொண்டார்கள். எமது பாடகரின் மூன்றாவது மனைவி அவள். அப்பாவி விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததெல்லாம் பாடகருக்கு மேடைத்தடை போட்டு, ஒலிப்பதிவு நிலையத்தில் மட்டும் பாட வைத்தமை தான்.

இது தவிர எனது முன்வீட்டு பால்யபராயத்து நண்பர் இரவில் தினம்  தினம் வேலி பாய்ந்த கதை, அடுத்த தெரு ஆசிரியரின் அழகான மனைவி, தனது இரெண்டு பருவ வயது மகள்களையும் கூட விட்டுவிட்டு இருபது வயது இளைய பக்கத்து முகாம் போராளியுடன் ஓடி மறைந்த கதை - இப்படி பல கதைகள் தமிழீழ மண்ணில் எங்கள் காலத்து நிகழ்வுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல கதாசிரியர்கள் உருவாக்கம் 👏👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2020 at 17:49, பையன்26 said:

சிறு வ‌ய‌தில் நான் க‌ண்ட‌ திரும‌ண‌ நிக‌ழ்வு , தமிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் நட‌ந்த‌ திருமண‌ங்க‌ள் , மாப்பிளைக்கு பால த‌லைக்கு வைத்து குளிப்பாட்டி ம‌ன‌வ‌ரையில்  உக்கார‌ வைத்து திரும‌ண‌ பெண்ண‌ அமைதியாய் கூட்டி வ‌ந்து மாப்பிளைக்கு ப‌க்க‌த்தில்  உக்கார‌ வைத்து ஆலாத்தி எடுத்து பிற‌க்கு கோயிலில் வைத்து தாலி க‌ட்டுவ‌து தான் ஊர் திரும‌ண‌ முறை ,

புல‌ம்பெயர் நாட்டு திரும‌ண‌ம் மாப்பிளை ம‌ன‌வ‌ரையில் இருப்பார் , திரும‌ண‌ பெண்ண‌ பார்த்தா அவாவின் தோழிக‌ளுட‌ன் ஆட்ட‌த்துட‌ன் வ‌ருவா மாப்பிளையிட‌ம் 😁

ஏன் இந்த திடிர் மாற்ற‌ங்க‌ள் குறுகிய‌ காலங்க‌ளில்

On 14/6/2020 at 21:43, பையன்26 said:

ஊரில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌கால‌ திரும‌ண‌ விதிமுறைய‌ இப்ப‌வும் க‌டை பிடிக்கின‌ம் , ஆனால் புல‌ம்பெய‌ர் நாட்டில் அப்ப‌டி இல்ல‌ அக்கா ,  
இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் அவையின் விருப்ப‌த்துக்கு ஏற்ற‌ போல் திரும‌ண‌ நிக‌ழ்வை செய்யின‌ம் , அது சில‌ரின் பார்வையில் வெறுப்பு க‌ச‌ப்புபாக‌ கூட‌ இருக்க‌லாம் ,

இவ‌ர்க‌ளே இப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ளுக்கு பிற‌க்க‌ போர‌ பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வுக‌ள் 20வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா வெள்ளை இன‌த்த‌வ‌ர்க‌ளின்  திரும‌ண‌ நிக‌ழ்வுக்கு நிக‌ரா எம்ம‌வ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு அமையும்  😉 

த‌மிழ‌ர்க‌ளின் மொழி காலாச்சார‌ம் எல்லாம் மெது மெதுவாய் அழிந்துடும் கால‌ போக்கில் புல‌ம்பெய‌ர் நாட்டில்

பையன்

தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள்

தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள்

யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள்

ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான்.

ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள்.

இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து.

இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும்

ஆண்களில் தங்கியிருந்ததாலும்

மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக

கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள்.

அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம்

கலாச்சாரப்பிறழ்வில் நீங்கள் அதிகம் அக்கறை கொள்வது

இந்தத் திருமண நிகழ்வுகளும் அதன் நடைமுறைகளும் என்பதால்

புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் திருமண நிகழ்வுகளை சீரழிக்கவில்லை

இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களிலும் இப்படி இப்போது நடக்கின்றது

முன்னைய காலத்தில் பிராமணர் ஒருவர் வந்து மந்திரம் ஓதி தாலி கட்டினார்கள். அதன் பின்னர் சாப்பாடு. பின்னர் கால் மாறல் கை மாறல், நாலாம் சடங்கு, மஞ்சள் வாங்கக் கடைக்குப் போதல் இப்படிப்பல இத்யாதி இருந்தது.

சில காலங்களின் பின்னர் ஊர்ப்பெரியவர் ஒருவர் கூடுதலாக மணமக்களை வாழ்த்தி ஒரு பிரசங்கம் வைத்தார் .

அதன் பின்னர் காலத்தில்

மணமக்களை வாழ்த்திப் பாடல்களை படிக்கவென ஒரு பாடகர்அதைத் தொடர்ந்து ஒரு இசைக்குழு .... இப்படியே காலங்கள் ஓட ஓட தமிழர்களின் வித்தியாசமான சிந்தனையால்....... எல்லாமே மணமக்களின் மகிழ்விற்கும் விருந்தினர்களை மகிழ்விக்கவும் தானே.......

அதேதான் இப்போது புலம்பெயர்ந்தவர்களிடம்.....

சற்று வித்தியாசமாக இருக்கின்றது

40 c வெயிலில் கோட் சூட்டுடன் அங்கே வலம் வருகின்றார்கள்

வெள்ளைக்காரக் கலாச்சாரமாம் சாரம் வேட்டிதானே எங்கள் கலாச்சாரம்

இங்கே கடும் பனியிலும் குளிரிலும் பாவாடை தாவணி

சேலை எனப்பெண்களும் மேலாடையில்லாம

வெறும் வேட்டியுடன் ஆண்களும் கோவில்த் திருவிழாக்களுக்கு.......

,,,,,,,,, அது அங்கத்தைய கலாச்சாரமாம் .....

இப்படியே கலாச்சாரத்தை சாரத்திற்குள்ளும் வேட்டிக்குள்ளும் தாலிக்குள்ளும் அடக்கி வைத்திருக்கின்றான் தமிழன் உலகெங்கும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பையன்,

இந்த திரியில் எமது கலாச்சாரத்தை நான் என்றுமே கேவலப்படுத்தவில்லை. உலகின் எல்லா கலாச்சாரங்களில் உள்ளது போல் நிறைகளும் குறைகளும் எமது கலாசாரத்திலும் உள்ளது என்ற திரும்ப திரும்ப எழுதி வருகிறேன். எமது கலாசாரத்தில் உள்ள கேவலமான பல பழக்கங்களை வெளிப்படையாக ஒத்து கொள்ள மறுக்கும்,  எமது கலாச்சார ஓட்டைகளை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதை போல மறைக்க நினைக்கும்   சிலர் என்ன திட்டுவதைப் பற்றி எனக்கு  எந்த கவலையும் இல்லை. தாராளமாக அதை செய்யட்டும். 

உங்கள் கருத்தில் பொண்ணுக்கு தேவை  பொறுமை என்று எழுதியிருந்தீருகள். ஏன் ஆணுக்கு அது தேவையில்லையா? 

தாலியை வாங்கியவுடன் கையெடுத்து கணவனை கும்பிட வேண்டும் என்ற கலாச்சசாரம் நடைமுறையை வலியுறுத்தி இருந்தீர்கள். அது பத்தாம் பசலி நடைமுறை என்றாலும் அதை அடுத்த‍டுத்த வரும்  தலைமுறையினர் மாற்றி அமைக்க வேண்டும். அப்படியானல் இருவரும் தமக்குக் தம்மை கும்பிட வேண்டும். அதென்ன ஒருவர் மட்டும் கும்பிடுவது என்று நீங்கள் சிந்திக்கவில்ல்லையா? 

 ஊரில் விஸ்கி, பிரண்டி திருமணங்களில் இல்லை என்று கூறியிருந்தீர்கள். உண்மை தான் ஆனால் 80 களில் நடைபெற திருமணங்களில் சாராயம் தாராளமாக பின் வளவுக்கும் பரிமாறப்பட்டதை அறிந்தவர்கள் நாம். 

பெண் திருமணத்தின் போது நடனமாறுவதை ஒரு குறையாக இப்பவே இந்த ஆட்டம் ஆடினால் பிறகு எப்படி ஆடுவா என்று கொச்சையாக கூறியிருந்தீர்கள். ஆனால் ஆண்பிள்ளைகள் ஆடுவதை பற்றி  எதுவும் குறிப்பிடவில்லை. 

கலாச்சாரம் குறித்து நீங்கள் கூறும் அறிவுரைகள் எல்லாம் எமது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தான். ஆண் பிள்ளைகளுக்கு அல்ல.

ஒரு பெண் கணவனை இழந்து விட்டால் எந்ந சுபகாரியங்களுக்கும் முன்னே நிற்க கூடாது. அது தனது மகனின் அல்லது மகளின் திருமணத்திலும் கூட என்ற எமது முன்னோர்கள் கட்டிய வடிகட்டிய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ளுகின்றீர்களா?

 என் மனைவியாக வருபவர் மீது அடுத்தவர் கை பட்டால் கூட என்னால் பொறுக்க முடியாது என்று  வரப்போகும் மனைவியில் கூட நம்பிகை இல்லாமல் அநாகரிகமான  கருத்தைக்கூறிவிட்டு  என்னிடம் என் மனைவிக்கு அடுத்தவன் ரூட்டு போட்டார் நீங்கள் விடுவீர்களா என்று என்னை பார்த்து கேட்டீர்கள்.  அப்படி நடந்தால் அதை என் மனைவி பார்த்து கொள்வார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுகு அந்த நம்பிக்கை இல்லாமல் விட்டால் அதற்காக அடுத்தவர் கலாச்சாரத்தின் மீது பழி போடாதீர்கள். 

வாழ்க்கைக்கு ஆயிரம் அறிவுரைகளை பெண்களுக்கு கூறும் நீங்கள் போராட்டத்திற்கு மட்டும் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக வெள்ளைக்காரன் வடிவமைத்த இராணுவ உடையுடன் வெள்ளைகாரன் கண்டு பிடித்த  துப்பாக்கிகளுடன் பெண்பிள்ளைகள் போராட்டத்தை பற்றி எதுவும் கூறுவதில்லை.

வெடிகுண்களுடன்  தற்கொலை படையாக பெண்பிள்ளைகள் சென்றதை வரவேற்கிறீர்கள்.  உங்கள் சுயநலத்துக்காக போர்களம் சென்று  இறப்பதற்கு கலாசாரத்தில் எல்லா விட்டுக்கொடுப்பும் செய்வீர்கள். அவர்கள் மகிழ்வாக தமக்கு பிடித்த ரீதியில் வாழ்வதற்கு ஆயிரம் கட்டுபாடுகள் அறிவுரைகள் கூறுகிறீர்கள்

இது போன்ற எத்தனையோ ஆயிரம் கேள்விகளை இங்கு கேட்கலாம். கிருபன் கூறியது போல் தமிழ் தலிபான்கள் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிந்தாலும் புரியாத‍து போல் நடிப்பார்கள். 

துல்ப‌ன் 1993ம் ஆண்டு  இந்த‌ கால‌ப் ப‌குதியில் உற‌வுக‌ளின் திரும‌ண‌ நிக‌ழ்வு சாம‌த்திய‌ வீட்டு நிக‌ழ்வுக‌ளுக்கு அதிக‌ம் போய் இருக்கிறேன் , என் க‌ண்ணால் நான் பார்த்த‌து இல்ல‌ ம‌து அருந்துவ‌தை , கொண்டாட்ட‌த்துக்கு பல‌கார‌ம் ம‌ற்றும் ப‌ல‌ வ‌கையான‌ க‌றிக‌ளுட‌ன் சோறு அத‌ற்கு முத‌ல் உற‌வுக‌ள் எல்லாருக்கும் சில்வ‌ர் க‌ப்பில் ம‌ஞ்ச‌ள் க‌ல‌ர் ரிங்ஸ் குடுப்பின‌ம் குடிக்க‌  ,   

துல்ப‌ன் நீங்க‌ள் த‌மிழீழ‌ ம‌ண்ணில் வாழ்ந்த‌ கால‌த்தில் த‌மிழீழ‌ காவ‌ல்துறை இல்லை என்று நினைக்கிறேன் ,

என‌க்கு நினைவு இருக்கு கோயில் திருவிழா கொண்டாட்ட‌ம் எல்லாம் முடித்து விட்டு அக்காட‌ தோழிக‌ள் நான் என‌து ந‌ண்ப‌ர்க‌ள் என்று எல்லாரும் ஒன்னா தான் வீடு திரும்புவோம் , அப்போது பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் த‌னியாக‌ எங்கும் பாதுகாப்பாய் போய் வ‌ரும் நிலையை த‌மிழீழ‌ காவ‌ல்துறை உருவாக்கினார்க‌ள் , 

இப்போது த‌மிழீழ‌த்தில் ஏதாவ‌து ஒரு ஊரில் த‌மிழ் பெண் இர‌வில் ந‌ட‌மாட‌ முடியுமா , உண்மையை சொல்ல‌னும் என்றால் இல்லை , முக‌ மூடி கொள்ளைக் கார‌ணில் இருந்து பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் கூட்ட‌ங்க‌ள் நாளுக்கு நாள் அதிக‌ரிக்குது த‌மிழீழ‌ ம‌ண்ணில் , 

எம்ம‌வ‌ர்க‌ள் த‌லைம‌றைவாய் யாழ்பாண‌த்தில் இருந்த‌ போது கூட‌ த‌மிழ் பெண்க‌ள் பாதுகாப்பாய் இருந்தார்க‌ள் , வ‌ன்னியில் சொல்ல‌த் தேவை இல்லை பெண்க‌ள தொட்டால் த‌மிழீழ‌ காவ‌ல்துறை என்ன‌ த‌ண்ட‌னை குடுப்பின‌ம் என்று வ‌ன்னியில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , 

1995ம் ஆண்டு யாழ்ப்பாண‌த்தை ஆமி கைப்ப‌ற்ற‌ முத‌ல்  யாழ்ப்பாண‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று நேரில் பார்த்த‌வைக்கு தான் தெரியும் , 

சின்ன‌ வ‌ய‌திலே பாட‌சாலை முடிந்தா பெண் பிள்ளைக‌ள் ம‌ற்ற‌ ப‌க்க‌த்தால் போக‌னும் ஆண் பிள்ளைக‌ள் இந்த‌ ப‌க்க‌த்தால் போக‌னும் , இது எல்லாம் 1993 ம‌ற்றும் 1994ளில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ,

எங்க‌ளை த‌மிழீழ‌த்தில் வ‌ள‌த்தெடுத்த‌ வித‌ம் வேறு ,  ம‌ணி 7 , 55க்கு பாட‌சாலையில் நிக்க‌னும் , 8ம‌ணிக்கு சாமி அறையில் சின்ன‌ பிள்ளைக‌ளில் இருந்து பெரிய‌ அண்ணா மார் அக்கா மார் என்று எல்லாரும் சாமி அறையில் நிக்க‌னும் , 8 ம‌ணிக்கு தேவார‌ம் எல்லாரும் பாட‌னும் , மூன்று தேவார‌ம்  பெரிய‌ அக்கா மார் பாடுவின‌ம் அவையுட‌ன் சேர்ந்து நாங்க‌ளும் பாட‌னும் , அத‌ற்கு பிற‌க்கு தான் வ‌குப்பில் எங்க‌ளுக்கு  ஆசிரிய‌ர்க‌ள் ப‌டிப்பிப்பின‌ம்  , இப்ப‌டித் தான்  சின்ன‌னில் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை  ,

பெண் போராளிக‌ள் சிங்க‌ள‌வ‌ன் கூட‌ போர் செய்து வென்ற‌த‌ நான் பெருமையாய் உண‌ருகிறேன் , பெண்க‌ள் போராட்ட‌த்தில் இணைந்தாலும் எம் கலாச்ச‌ர‌த்தில் இருந்து எல்லாம் பாதுகாக்க‌ ப‌ட்ட‌து , பெண் போராளிக‌ளின் திரும‌ண‌ங்க‌ளும் த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌முறையில் தான் ந‌ட‌ந்த‌து , 

த‌மிழீழ‌த்தில் நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி இல்ல‌ , 2009க்கு பிற‌க்கு ஜாதி மெது மெதுவாய் த‌லை தூக்குது ,

புல‌ம்பெய‌ர் வாழ் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளில் என‌க்கு பிடித்த‌ ஒரு விடைய‌ம் ஜாதி பார்ப்ப‌து இல்ல‌ அதில் அவ‌ர்க‌ளை பாராட்டி ஆக‌னும் , த‌மிழீழ‌ நாடு வேண்டி வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் விருப்ப‌ம் கூட‌ த‌மிழின‌த்தில் ஜாதி இருக்க‌ கூடாது என்று , 

நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் கோயில் திரு விழாவுக்கு யாரும் வ‌ர‌லாம் , அந்த‌ ஜாதி இந்த‌ ஜாதி என்ற‌ க‌தைக்கே இட‌ம் இல்லை , இப்ப‌ சிங்க‌ள‌வ‌ன் த‌மிழ‌னை எப்ப‌டி எல்லாம் பிரிக்க‌ முடியுமோ அத‌ அவ‌ன் த‌ந்திர‌மாய் துரோகிய‌லை வைத்து ச‌ரியாய் செய்யிறான் , 

த‌மிழ் க‌லாச்சார‌த்தோடு எப்ப‌டி ஒற்றுமையாய் இருந்த‌ இன‌ம் , இந்த‌ 11 வ‌ருட‌த்தில் இந்த‌ நிலைக்கு போயிட்டின‌மே என்று நினைக்க‌ க‌வ‌லையாய் தான் இருக்கு , என்ன‌ செய்ய‌ கால‌ம் செய்த‌ கோல‌ம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, tulpen said:

எங்கள் தமிழ் கலயாண வீடுகளில்  கிச்சினில் மேசைகளுக்கு அடியிலும் ஆங்காங்கே பார்க பண்ணி இருக்கும் கார் டுக்கிக்குள்ளும்  பெருமளவில் மதுபானங்கள் பரிமாறப்படும் 

சமீப காலங்களில் இங்கு  பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் திருமண விழாக்களில் தான் நேரடியாக Cocktail 🍹 உட்பட ஒழுங்கு முறையில் பரிமாறுகிறார்கள்.  

கிச்சினுக்குள்ளும் கார் டிக்குள்ளும்  ஒழித்து ஒழித்து குடித்து நிலை தடுமாறி வாந்தி எடுத்து வீடு செல்லும. கலாச்சாரத்தைக் கொண்டவர்களை  மேசையில் இருத்தி அளவோடு குடித்து  மரியாதையாக மனைவி பிள்ளைகளுடன் வீடு செல்ல வைத்தவர்கள் இங்கு  பிறந்த இளம் பிள்ளைகளே.  

எமது இனத்தில் ஒரு பழக்கம் இருக்கின்றது. அதாவது கூடாத பழக்கங்கள் என்பவற்றை சிறுவர்கள் முன்னிலையிலோ அல்லது பெரியவர்கள் முன்னிலையிலோ செய்ய மாட்டார்கள்.அது கூடாத பழக்கங்கள் என தெரிந்தும் அப்படி செய்பவர்களை கண்டிக்கின்றேன்.முக்கியமாக மது,புகைத்தல் போன்றவற்றை மரியாதை நிமித்தம்   வெளிப்படையாக செய்வதில்லை என நினைக்கின்றேன். அதே காரணத்தை வைத்து புலம்பெயர்நாடுகளிலும் செய்ய முனைகின்றார்கள், தவறுதான்,

அந்த தவறான செயலை நாகரீகமென நினைத்து குடும்பமே சேர்ந்திருந்து தண்ணியடிக்கும் நிலமைக்கு மாற்றிய இளம் சமுதாயத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

தமிழீழத்தில் நடந்த உண்மைக்கதை. கதாநாயகன் தமிழீழ பாடல்களை கணீர் என்ற குரலில் பாடி மக்களை எல்லாம் போர்க்கோலம் கொள்ள வைத்தவர். பின்னர் முள்ளிவாய்க்கால் தோல்வியின் பின் சரணடைந்து மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து பாடி இசைத்தட்டு வெளியிட்டு ராஜபக்சவிடம் நேரில் கொடுத்தவர்: செய்திகளில் படத்துடன் வந்திருந்தது. இதெல்லாம் நடக்க முன்னர் அவர் தமிழீழ பாடல்களை பாடும் பாடகரான கதை இது.

ஒரு நாள் விடுதலைப் புலிகளின் முகாமுக்கு அழுதபடியே  தலைவிரி கோலமாக கண்ணகி போல நீதி கேட்டு இளம் பெண்ணொருவள் ஓடி வந்தாள். என் கணவன் இன்னுமொரு பெண்ணையும் கலியாணம் செய்து விட்டானே, நான் என்ன செய்வேன் என்று கல்லும் உருகும் வண்ணம் கண்ணீர் சிந்தினாள். இரக்கம் நிறைந்த புலிகளால் இதை தாங்க முடியவில்லை. எங்கே உங்கள் கணவர்? நாம் விசாரித்து நீதி வழங்குவோம் என்றார்கள். அவளும் அவர் இருக்கும் இடம் காட்டுகிறேன் என்று விடுதலைப்புலிகளை அழைத்து. சென்றாள். அவர்கள் போகும் இடத்தை நெருங்க, மிகவும் இனிமையான குரலில் கேட்பவர்களை மெய்மறக்க வைக்கும் பாடல் காற்றில் மிதந்து வந்தது. அவர் தான் பாடுகிறார் என்றாள் அவள். பாடகர் இருந்த இடம் எங்கள் பழந்தமிழ் கலாச்சாரத்தில் என்றும் இடம் பிடித்திருக்கும் கள்ளுத்தவறணை. தன் சக குடிகாரர் சூழ்ந்திருந்து இரசிக்க, இந்த அபார திறமை கொண்ட பாடகர் அவர்களுக்கு இனிய பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அவரை தம்முடன் அழைத்து சென்ற புலிகள் அவரை எச்சரித்துவிட்டு, இரு மனைவியரையும் ஒன்றாக வாழ உடன்பட செய்து, பாடகருக்கும் நல்ல வருமானத்துக்கு வழி செய்தார்கள். தமிழீழ பாடல்களை விடுதலைப்புலிகளின் விழாக்களிலும், ஒலிப்பதிவுகளிலும் பாடுவது தான் அந்த வேலை. சிறுது காலத்துலேயே பாடகர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். அவர் குரல் தமிழர் வாழும் நாடெல்லாம் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. உள்ளூர் சமுக நிகழ்வுகளிலும் அவர் பாடினால் மக்கள் வெள்ளம் அலை மோதும். அவருக்கு மாலைகளும் சூட்டுவர். அப்படி ஒரு நாளில் தான் அந்த மாணவி - அவரது குரல் கொள்ளை கொண்ட ரசிகை, அவருக்கு மாலை போட்டாள். சில நாட்களிலேயே திருமண மாலையும் மாற்றிக் கொண்டார்கள். எமது பாடகரின் மூன்றாவது மனைவி அவள். அப்பாவி விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததெல்லாம் பாடகருக்கு மேடைத்தடை போட்டு, ஒலிப்பதிவு நிலையத்தில் மட்டும் பாட வைத்தமை தான்.

இது தவிர எனது முன்வீட்டு பால்யபராயத்து நண்பர் இரவில் தினம்  தினம் வேலி பாய்ந்த கதை, அடுத்த தெரு ஆசிரியரின் அழகான மனைவி, தனது இரெண்டு பருவ வயது மகள்களையும் கூட விட்டுவிட்டு இருபது வயது இளைய பக்கத்து முகாம் போராளியுடன் ஓடி மறைந்த கதை - இப்படி பல கதைகள் தமிழீழ மண்ணில் எங்கள் காலத்து நிகழ்வுகள். 

எங்கேயோ ஊரில்கேட்ட  குரலாக இருக்கே???🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எங்கேயோ ஊரில்கேட்ட  குரலாக இருக்கே???🤔

எல்லாம் உங்களுக்கு தெரிந்த சாந்தன் தான் 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

எல்லாம் உங்களுக்கு தெரிந்த சாந்தன் தான் 
 
நாம 

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

அதுக்குள்ளேயே கிடந்து வந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

நாம 

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

அதுக்குள்ளேயே கிடந்து வந்தவர்கள்

நீங்களெல்லாம் உண்மை சொன்னால் ஏத்துக்க மாட்டீர்கள் என்று தெரியும் ...அதற்காக நடந்த உண்மையை பொய்யாக மாத்தி விட முடியாது.
போய் கற்பனையில் கோடு கீறி அதில் வாழுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நீங்களெல்லாம் உண்மை சொன்னால் ஏத்துக்க மாட்டீர்கள் என்று தெரியும் ...அதற்காக நடந்த உண்மையை பொய்யாக மாத்தி விட முடியாது.
போய் கற்பனையில் கோடு கீறி அதில் வாழுங்கோ 

உங்களுக்கு உண்மையை  கிரகிக்கவே தெரியவில்லை

பிரச்சினை அது தானே  தவிர எனது  கோடில்லை

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

என்பதே உண்மையை  ஒத்துக்கொள்வது  தான்  சகோதரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ண‌ , அந்த‌ பாட‌க‌ர் க‌ண் மூடி விட்டார் இனி அவ‌ரை ப‌ற்றி எழுத‌ வேண்டாம் , அவ‌ர் பாடின‌ பாட‌ல்க‌ளை சின்ன‌னில் நேரில் பார்த்து இருக்கிறேன் ,

யூட் ஜ‌யா ம‌ற்றும் ர‌தி அக்கா சொல்லித் தான் என‌க்கே தெரியும் ,

அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ( எம்மை நினைத்து யாரும் க‌ல‌ங்க‌க் கூடாது )

பின்னாளில் ம‌கிந்தாவுக்கும் பாட்டு பாடினார் என்று நினைக்கும் போது வேத‌னையாய் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களுக்கு உண்மையை  கிரகிக்கவே தெரியவில்லை

பிரச்சினை அது தானே  தவிர எனது  கோடில்லை

செமிக்கக்கூடியதை சாப்பிட்டு

தேவையற்றவற்றை வாந்தி  எடுத்து விட்டு

என்பதே உண்மையை  ஒத்துக்கொள்வது  தான்  சகோதரி

விசுகு அண்ணாவின் இந்த கருத்து மட்டும் கருத்துக்கள நியதிக்கு உட்பட்டு இருக்கிறதா நியாணி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, வாத்தியார் said:

தமிழர்களின் கலாச்சாரம் எப்படித் தோன்றியதுமலை காடு கடற்கரை வேளாண்மை நிலங்களில் தொடர்ந்து தான் தமிழரின் கலாச்சாரம் மண்ணுக்கும் மக்களிற்கு ஏற்றதாகவே தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் அனுசரித்து வந்தார்கள்

தமிழர்களின் மிக மூத்த குடிகள் கோவணத்துடன்தான் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தார்கள்

யார் யாருடன் குடித்தனம் செய்கின்றோம் எனத் தெரியாமலே வாழ்ந்தார்கள் தங்கள் இனத்தைப் பெருக்கினார்கள்

ஒருவன் இன்னொருவனுடைய சோடியாக இருந்தவளைக் கவர்ந்து சென்றான்.

ஒருத்தி இன்னொருத்தியின் சோடியுடன் கலப்பு செய்தாள்.

இதனால் யார் யாருடைய சோடி என்ற பிரச்சனைக்கு அடையாளம் தேவைப்பட்ட்து.

இயல்பாகவே பெண்கள் அடக்கப்படக்கூடியவர்களாகவும்

ஆண்களில் தங்கியிருந்ததாலும்

மாடுகளுக்கு குறி சுடுவதுபோல பெண்களுக்கு அடையாளமாக

கழுத்தில் எதோ ஒன்றால் மாலை போன்று கட்டிவிட்டார்கள்.

அது தான் இப்போது எங்கள் தாலிக்கலாச்சாரம்

உலகத்தில் இருக்கும் எல்லா மனித இனங்களும் கோவணத்துடன் தான் காடுகள் மலைகளில் வாழ்ந்து படிப்படியாக முன்னேறினார்கள். தமிழன் மட்டுமல்ல. தமிழனுக்கு மட்டும் கோவணம் சொந்தமல்ல. உங்கள் கருத்தின் படி பார்த்தால் வெள்ளைக்காரன் பிறக்கும் போதே நாகரிகமாக கோட்டு சூட்டுடன் பிறந்த மாதிரி அல்லவா இருக்கின்றது.

ஒவ்வொரு மனித இனங்களும் வளர்ந்த பின் நாட்டுக்கு நாடு இது தான் தமது கலாச்சாரம் என நிறுவி விட்ட வேளையில் தமிழினம் மட்டும் இன்னமும் பிற கலாச்சாரங்களை பொறுக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் பலரின் கருத்தைப் பார்த்தால் அசல் தமிழ் தலிபான்களின் கருத்தாக இருக்கின்றது. ஆனால் காலம் மாறிவிட்டது.  உண்மையில் தமிழ் தலிபான்கள் ஒரு சிலர்தான். அவர்களும் காலவோட்டத்தில் கரைந்துபோவார்கள்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுகள்,ஒழுங்கங்கள்மற்றும் குற்றச்செயல் தண்டனைகளை சகிக்க முடியாதவர்கள் அவர்களையும் தலிபான்கள் என்றார்கள். அவர்கள் இன்று மௌனித்த நிலையில் அங்கு நடக்கும் செயல்கள் யாரும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிங்களவர்களே புகழ்ந்த பின்னர்தான் எம்மவருக்கும் அவர்கள் அருமை தெரிகின்றது.

இப்போது தமிழர் கலாச்சாரம் கலைந்து போகின்றது.கட்டுப்பாடு வேண்டும் என்கிறோம். தமிழ் தலிபான் என்கிறார்கள்.

இஸ்ரேல் முன்னேறிய நாடு. வளங்கள் ஏதுமில்லை.அவர்களும் புலம் பெயர்ந்து வாழ்கின்றார்கள்.ஆட்டம் பாட்டம் போடுகின்றார்கள். ஆனால் தமது கலாச்சாரத்தை மாற்றவில்லை.பண்பாட்டை மாற்றவில்லை.பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற போர்வையில்  உதறித் தள்ளவில்லை.

 தமிழன் வெள்ளைக்காரனுக்கு சமனாக இருக்கத்தான் வேணும்.ஆனால் எந்த விசயத்திலை எண்டதிலை தான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது கலாச்சாரம் என்று அலட்டிக்கொள்ளும் பையன் & கோ , தயவு செய்து எவை எவை எல்லாம் தமிழ் கலாசாரத்திற்குள் வருகிறது என்று பட்டியலிட்டு சொன்னால் , பிறழ்கிறவர்கள் தம்மை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிட்டுமே.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று யாரோ வேலை வெட்டி இல்லாத எவரோ சொல்லி சென்றதை சிறிய வயதில் படித்த ஞாபகம் .

புலம் பெயர்ந்த இடத்து இளவல்களைப் பார்த்து தமிழ் அப்பிராணிகள் கெட்டுப் போகிறார்கள் என்ற  அறிவியலின் கூற்று புல்லரிக்க வைக்கின்றது .

கூடவே , 15 வயது தமிழ் நாட்டு பெண் ஒருத்தி , தனது தாயின் மூன்றாவது திருமணத்திற்க்கு பகிரங்கமாக தனது வாழ்த்துச் செய்தியினை இணைய தளங்களில் தெரிவித்திருப்பதும் மனதின் ஒரு மூலையில் வந்து போகிறது ….

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.