Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒன்று தான் இது வரை missing in Canada.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒன்று தான் இது வரை missing in Canada.

எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தண்டிகைப்  பாடையும் பறை மேளமும் நன்றாகத்தான் இருக்கு......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, suvy said:

தண்டிகைப்  பாடையும் பறை மேளமும் நன்றாகத்தான் இருக்கு......!  👍

 இலங்கை போல் தெருவால் ஊர்வலம் போவதற்கு கனடாவில் அனுமதி உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 இலங்கை போல் தெருவால் ஊர்வலம் போவதற்கு கனடாவில் அனுமதி உள்ளதா?

பொடி வைத்திருந்த இடமும் அதை தகனம் / தாக்கும்  செய்யும் இடமும் ஒரே வளாகத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்......!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் தற்போதைய சூழ்நிலையில் நடந்திருக்க கூடிய சாத்தியங்கள் இல்லை.. கடந்த காலங்களில் நடை பெற்று இருக்கும்.

கடந்தசில மாதங்களாக இறுதி கணத்தில் பட்டன் அமர்த்தி (கொள்ளி வைப்பது என்று சொல்வார்கள்).

அதைக் கூட இந்த நிகழ்வை செய்யும் நிறுவன உறுப்பினர்களே செய்ய வேண்டிய சூழ்நிலை.இப்போ வழமைக்கு வந்திருக்கலாம்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காகத் தன்னும்... கனடாவுக்குப் போய், சாக வேணும் போலை கிடக்கு. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தணம் மிஞ்சினால் தடவடா பு......க்கில என்று கூறியது இவை போன்றவைக்குத்தானே ☹️

சாம்பலை ஆறு, ஏரிகளில் கரைத்துத் தண்டம் கட்டியவர்கள் பலர் என்று அறிந்திருக்கிறேன்.🤥

ஆனால் எல்லோரும் இப்படித்தான் என்று பொதுமைப்படுத்த முடியாது. அந்த அளவில் ஆறுதலடையலாம் 🙂

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் போட்டி... பலரையும், பலவகையில் சிந்திக்க வைக்கிறது.

கலியாண விடீயோக்களில், மாப்பிளை, பொம்பிளையை, சினிமா பாட்டுக்கு மரத்தை சுத்தி ஓட வைத்து படமெடுக்கினம் எல்லோ. 😀

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்ப கிட்டடியில் நடந்திருக்கு ...மாஸ்க் போட்டு இருக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதுக்காகத் தன்னும்... கனடாவுக்குப் போய், சாக வேணும் போலை கிடக்கு. :grin:

ஏன் இந்த விபரீத ஆசை சிறி ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது ஒன்று தான் இது வரை missing in Canada.

எனக்கு வாட்ஸ் அப்பிலை வந்தது. பழசோ புதிசோ தெரியாது.

எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . 

சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில்  ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி  ஒரு  கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

நில்மினி,  பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர்.

மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.😁

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி,  பிரான்சில் பல வருடங்களுக்கு முன்.... அறுபதாம் கலியாணத்துக்கு, அறுபது பவுணில் தாலிக்கொடி செய்து, கட்டினார் ஒருவர்.

மற்றொருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்கு, கேக் வெட்ட... 22 காரட்டில் உள்ள தங்கக் கத்தியை பாவித்தார்.😁

ஆசைக்கோர் அளவில்லை  என்பது இதைத்தான். என்ன செய்வது இவற்றையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல இருக்க வேண்டியிருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எனது தூரத்து உறவினர்கள் கூட ஒருவரும் இந்தமாதிரி கோமாளிக்கூத்து ஆடக்கூடாது என்று நினைத்திருந்தேன். இரு வருடங்களுக்கு முன் ஒரு உறவினர் ஒருவரின் இறுதி ஊர்வலம் இப்படித்தான் கனடாவில் செய்தார்கள். இறந்த மனுசி மிகவும் சாதாரணமான ஒரு பெண். மகன் ஆடம்பரம் அதிகம். மருமகள் மாமி சண்டையால் முதியோர் இல்லத்தில் தான் 7 வருடம் இருந்து அதுவும் Alzheimer's வருத்ததுடன். அம்மா சாகவும் மகன் ஒரு ஆடம்பர செத்தவீடு வைத்து கொண்டாடினார். மருமகள் அழுத்தமாதிரி மகள்மார் அழவில்லை . 

சிலபேர் செய்யிற வேலைகளை பார்த்தால் ஓரில இந்த ஆசைகள் எண்ணங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டுதான் பேசாமல் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கத்தோன்றும். பிரச்சனை கூடிய காலங்களிலேயே ஊருக்கோ போய் ஹெலிகொப்டரில்  ஏறி இறங்கி கொண்டாட்டங்கள் வைத்து ஊரில் உள்ளவர்களுக்கு புதினம் காட்டுவது என்று எத்தனை கோமாளித்தனம். எம் மக்களுக்கு இப்படி  ஒரு  கேவலமான ரசனையா என்று நினைத்து வெட்கப்பட வேண்டி இருக்குது. சில வீடியோக்களை பார்க்க நம்ப முடியாமல் இருக்கும். 30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

அகதியாக வந்தோம் என்ற எந்த கூச்சமோ குற்ற உணர்வோ இல்லமால் 
இப்படி பார்க்கும்போது அப்படியே பாடையிலே சேர்த்து வைத்து எரிக்க வேண்டும் போல் இருக்கும்.

உறவினர்களுக்குள் இப்படி நடக்கும்போது 
வாய் சும்மா இருக்காது ..இதனால் தேவையில்லாத வாக்குவாதமாக 
மாறி வெறும் மன கசப்பு வருவதால் ... இப்போ நிறுத்தி விட்டேன் 
போனால் தானே வில்லங்கம் என்று போவதை குறைத்து விட்டென் 

இப்படியான கூத்துக்களை இங்கிருக்கும் மக்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?
இது எதோ கலாச்சாரம் என்று விட்டு ஒருவேளை போவார்கள் 
கெலி பிளேனில் ஏறி கும்மாளம் போட்டால் ...?
தேவையற்ற இன துவேஷங்களை இவர்கள்தான் தூண்டுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பாடையை நாங்களே கட்டலாம். செலவு ஒரு ஐநூறு டொலருக்குள் மட்டுப்படுத்தி.

அடிக்கும் மேள, தாளங்கள் ஆட்களிடம் இரவல் வாங்கலாம் கடையிலும் இரவல் எடுக்கலாம். அவற்றை சொந்தக்காரர்கள், நண்பர்களே தட்டலாம்.

கனடா என்றால் அங்கு நடப்பவற்றை தூக்கிப்பிடித்து நையாண்டி செய்வது சிலருக்கு பொழுதுபோக்கு. அது அறியாமையாகவும் இருக்கலாம். எரிச்சல், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

உலகத்தில் பெரிய லெவலில் மில்லியன்கள் டொலர் வீண் செலவுகளில் எவ்வளவோ கூத்துக்கள் நடக்கின்றன.

இங்கு சில பத்துப்பேர் பாடையில் ஒரு பிணத்தை கொண்டு செல்வது மகா தவறு போல் சித்தரிக்கப்படுகின்றது?

செத்தவீட்டை அமைதியான முறையில் செய்வதும் ஆரவாரமாக செய்வது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள்.

சட்டவிரோதமாக இங்கு ஏதும் நடைபெறவில்லையே?

இந்த வீடியோவில் புதினமாக ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

காரணத்துக்காக செய்துவந்ததை 
ஒரு காரணமும் இன்றி செய்வதால்தான் 
ஒரு கலாச்சாரமே கேலி கூத்தாகி போகிறது.

அடிக்கடி இங்கு பலரும் திரிக்கும் கயிறு "எம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" என்பது 
அவர்களை யார் முட்டால்கள் என்று சொல்கிறார்கள்? அவர்கள் தமக்கு இருந் அறிவுடன் 
இருந்த வசதிக்கு ஏற்ப சிலவற்றை செய்தார்கள் 
அதை ஒரு முன்னேறிய சமூகம் எந்த கேள்வியும் இன்றி செய்வதுதான் தவறானது.

பறை அடிப்பது என்பது ஒரு செய்தியை கூறுவதாகும் 
பறையில் பல வகை உண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வாக 
தமிழர்களுடன் சேர்ந்து பின்னி பிணைந்த ஒன்று 

இதை அதைப்பற்றியே தெரியாதவன் வீட்டு முன்னாள் நின்று நான் அடித்துக்கொண்டு இருந்தால் 
நான் அவனது சுதந்திரத்தில் தலை இட்டு கொண்டு இருக்கிறேன் என்பதுதான் பொருள். 

ஆட்டுக்குட்டி வெறும் $100 என்பதால் கோவிலில் கனடாவில் வைத்து வெட்டுவதா?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

30 ஆவது வருட கலியாண தினம் என்று 55 , 60 வயசு கணவனும் மனைவியும் துள்ளி ஆடி ஓடி பிடித்து விளையாடி ஒரு வீடியோ பார்த்தேன். என்னத்த சொல்லுறது 

தள்ளி. ஓடி, ஆடி விளையாடுவதற்கு, மனமும் உடல் கட்டுக் கோப்பும் வேண்டும். அவர்கள் அப்படியான உடல், மற்றும் மன நலத்தில் இருக்கிறார்கள். 

பப்ளிக் ஆக செய்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒருவகையில் தொழில் போட்டிதான்...இறுதி நிகழ்வு செய்கின்ற முகவர்கள்....அய்யர்மார் செய்கின்ற தில்லு  முல்லு....கொரனாகனடாவில் ஆரம்ப கட்டம்...இந்த இறுதிக்கிரியை முகவர்கள்   டடி.வியில் செய்த அட்டகாசம்..இது கனடாவில் சகஜம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kadancha said:

தள்ளி. ஓடி, ஆடி விளையாடுவதற்கு, மனமும் உடல் கட்டுக் கோப்பும் வேண்டும். அவர்கள் அப்படியான உடல், மற்றும் மன நலத்தில் இருக்கிறார்கள். 

பப்ளிக் ஆக செய்வது தவிர்க்கப்பட்டு இருக்கலாம். 

அதைத்தான் நானும் சொல்கிறேன் Kadancha. யார் என்ன செய்தாலும் எனக்கு என்ன கவலை? மற்ற கேலிக்குரிய பொதுகொண்டாட்டங்களில் எனது கருத்து  என்னவென்றால் இதுதான் எமது ஈழத்தமிழரின் கலாச்சாரம் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று. எனது அனுபவத்தில் இலங்கை தமிழர் யாழ்பாணத்தமிழர் என்றால் சிங்களவரோ இந்திய மக்களோ ஒரு மரியாதை மதிப்பு வைத்திருக்கிறார்கள். இது அவர்கள் மூலமாக நான் கேள்விப்பட்டது.  அந்த கருது எதிர்பார்பு கலைந்து விடுமே அன்று ஒரு கவலைதான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

1) இப்படி ஒரு பாடையை நாங்களே கட்டலாம். செலவு ஒரு ஐநூறு டொலருக்குள் மட்டுப்படுத்தி.

2) அடிக்கும் மேள, தாளங்கள் ஆட்களிடம் இரவல் வாங்கலாம் கடையிலும் இரவல் எடுக்கலாம். அவற்றை சொந்தக்காரர்கள், நண்பர்களே தட்டலாம்.

3) கனடா என்றால் அங்கு நடப்பவற்றை தூக்கிப்பிடித்து நையாண்டி செய்வது சிலருக்கு பொழுதுபோக்கு. அது அறியாமையாகவும் இருக்கலாம். எரிச்சல், பொறாமை, தாழ்வு மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

உலகத்தில் பெரிய லெவலில் மில்லியன்கள் டொலர் வீண் செலவுகளில் எவ்வளவோ கூத்துக்கள் நடக்கின்றன.

4) இங்கு சில பத்துப்பேர் பாடையில் ஒரு பிணத்தை கொண்டு செல்வது மகா தவறு போல் சித்தரிக்கப்படுகின்றது?

5) செத்தவீட்டை அமைதியான முறையில் செய்வதும் ஆரவாரமாக செய்வது அவரவர் தனிப்பட்ட தெரிவுகள்.

சட்டவிரோதமாக இங்கு ஏதும் நடைபெறவில்லையே?

இந்த வீடியோவில் புதினமாக ஒன்றும் இல்லை.

1) இலங்கையில் ஏன் பாடையில்  கட்டுகிறார்கள். கனடாவில் பாடையில் கட்டி காவுவதற்கான தேவை என்ன இருக்கிறது ? ☹️ 

2) இதே நண்பர்களும் உறவினர்களும் ஊருக்குப் போன இடத்தி இப்படியொரு சம்பவம் இடம்பெற்றால் பறை அறிவிப்பார்களா ?  🤥

3) கனேடியத் தமிழர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்கின்ற கோபமாக இருக்கலாம். 😜

4) தவறு அல்ல, பாடையில் கொண்டுபோவதற்கான தேவை இருக்கிறதா என்பதுதான் கேள்வி. அதற்கான தேவை இல்லையென்றால் ஏன் அவ்வாறு செய்கின்றனர். ☹️

5) மூப்படைந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை ஆரவாரமாகச் செய்யும் வழக்கு என்பது எமது சமூகத்தில் இருக்கிறதா ? இல்லை என்றே நம்புகிறேன்.  🤥

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உறவினர்களுக்குள் இப்படி நடக்கும்போது 
வாய் சும்மா இருக்காது ..இதனால் தேவையில்லாத வாக்குவாதமாக 
மாறி வெறும் மன கசப்பு வருவதால் ... இப்போ நிறுத்தி விட்டேன் 

உங்களை மாதிரி பிரச்சனை எனக்கும் இருக்கிறது வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டி கொண்டிருக்க முயற்சிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்களை மாதிரி பிரச்சனை எனக்கும் இருக்கிறது வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டி கொண்டிருக்க முயற்சிப்பேன்.

சொன்னால் என்ன கிடைக்கும் என்று தெரிந்ததால் சொல்லவே இல்லை. தவிர்க்கக்கூடிய கொண்டாட்டங்களை தவிர்த்து கொள்வதுதான் எனக்கு ஒரே வழி 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

தவிர்க்கக்கூடிய கொண்டாட்டங்களை தவிர்த்து கொள்வதுதான் எனக்கு ஒரே வழி 

👍

  • கருத்துக்கள உறவுகள்

வயது போன காலத்தில் அந்த அப்பாவிகளை வைச்சுப் பார்க்க்க முடியாத பிள்ளைகள்.அவர்கள் இறந்ததும் எதற்காக சோ காட்ட முயற்சிக்கிறார்கள்...என்ன இப்படி இடம் கிடைக்கும் இடத்தில் எமது ஆதங்கத்தை கொட்டுறம்.அவ்வளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.