Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாரட்சியில் சற்று முன் இரண்டு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன! குற்றசாசனங்களும் வாசிக்கப்பட்டன!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன.

இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த இருவரது உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன.

சுமந்திரனின் சொந்த பிரதேசமான வடமாராட்சி முள்ளியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகே சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக சுமந்திரம் மற்றும் சிறிதரன் போன்றோர் பொது வெளிகளில் தெரிவித்துவருகின்ற பல்வேறு கருத்துக்கள் யாழ் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்வலைகளை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/politics/80/146234?ref=imp-news

இந்த றோவின் ibc யை யாழ் தடை பண்ணவேண்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, spyder12uk said:

இந்த றோவின் ibc யை யாழ் தடை பண்ணவேண்டும் 🤣

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதில் சிரிப்பு வேறு 😏

(RAW தொடர்பான விடயங்கள் பலருக்குப் புரிவதில்லை. ஏனென்றால் அது ஆறாம் அறிவினை பாவிக்கும் மக்களுக்கானது 😀)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இதுதான் தாயக மக்களின் முக்கிய தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

106084102_1870668123071359_6392124465137

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

106084102_1870668123071359_6392124465137

கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் சிங்கள வழக்கறிஞர்கள் கூட தோன்ற பயப்படும் நிலையில் இன்றுவரை தோன்றி வருபவர் சுமந்திரன். சுமந்திரனை தோற்கடிப்பதில் இராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் ஆர்வம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். போர்க்காலத்தில் இலங்கை அரசின் இரகசிய செயற்பாட்டு பிரிவுகள் மிகவும் சிறப்பான சக்திபடைத்த பிரிவுகளாக வளர்ந்து விட்டன. குறிப்பாக, உளவியல் யுத்தத்தில் அவர்கள்  சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இன்று இருப்பதாலேயே, ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான தலைவர்கள் கூட உருவாகாமல் இருக்கக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலேயுள்ள படங்கள் போன்றவை அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசியவாதிகள் போல தோன்றும் முகவர்கள் செய்து வெளியிடுபவை போன்றே தெரிகின்றன. இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

இந்த யாழ் களத்தில் கூட அப்படி சில “தமிழ் தேசியவாதிகள்” இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நிரூபிப்பது மிகவும் கடினமானது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் எப்படி குத்தி முறிஞ்சாலும், கடந்த கால பட்டறிவில் இருந்து சுமந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனேகமான  யாழ் வாக்காளர் அதிகம் பேசாதவர்கள்( Slient Majority), தேர்தல் அன்று அவர்கள்  தங்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

9 hours ago, Kapithan said:

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இதில் சிரிப்பு வேறு 😏

உலகத்தில் எந்த நாட்டில் கொடும்பாவி எரிப்பது குற்றம் என்று சொல்லி தடை செய்து இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, spyder12uk said:

உலகத்தில் எந்த நாட்டில் கொடும்பாவி எரிப்பது குற்றம் என்று சொல்லி தடை செய்து இருக்கிறார்கள்?

ஐயா பூச்சி, நாகரீகமடைந்த சமூகம் ஊக்குவிப்பதில்லை என்றால் அதன் அர்த்தம் தடை செய்தல் என்பதல்ல.🤥

உமக்குத் தெரிந்த ஒருவருடைய கொடும்பாவியை எரிக்க உமக்கு மனம் இடம் தருமா ? இல்லையல்லவா ? இங்கே சட்டத்திற்கு என்ன வேலை ? ஏனென்றால் நீங்கள் நாகரீகம் அடைந்தவர். எரிப்பதற்கு உமது மனம் இடம் கொடாது. 👍

இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன். 🙂

28 minutes ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

மிஸ்ரர் பெருமாள்,

நீங்கள் தமிழ் சாப்பாட்டுக் கடையிலா வேலை செய்கிறீர்கள். எப்போதும் வடை சுடுவதப் பற்றியே கதைக்கிறீர்கள். நீங்கள் என்ன வடை மாஸ்ரரா ? 😂

2 hours ago, zuma said:

யார் எப்படி குத்தி முறிஞ்சாலும், கடந்த கால பட்டறிவில் இருந்து சுமந்திரனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனேகமான  யாழ் வாக்காளர் அதிகம் பேசாதவர்கள்( Slient Majority), தேர்தல் அன்று அவர்கள்  தங்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.

இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான எதிர்ப்பை உங்கள் சுமத்திரனை  வேறு ஒருத்தர் கூட சம்பாதித்து இருக்கமாட்டார்கள் கனடா  காசுக்கு என்ன நடந்தது என்று கேள்வி கேட்டால் அந்த காசுக்கு கணக்கு காட்ட வேணும் அட பொதுமக்களுக்கு கூட வேண்டாம் உங்கடை  உறுப்பினர்களுக்காவது காட்டலாம் தானே ? அதை விட்டு கேள்வி கேட்டவர்களை அவரின் ஆள் இவரின் ஆள் தேர்தல் நேரத்தில் ஏதோ  சதி திட்டத்துடன் கேட்க்கினம் என்று சொல்லி கட்சியை விட்டு துரத்துவதுதான் முறையா?

இப்படி பணத்தை சுருட்டிவிட்டு கட்சிக்குள் கூட எதிரியை சம்பாதிப்பவர் ஒருகாலமும் வெல்லப்போவது கிடையாது 

20 minutes ago, Kapithan said:

ஐயா பூச்சி, நாகரீகமடைந்த சமூகம் ஊக்குவிப்பதில்லை என்றால் அதன் அர்த்தம் தடை செய்தல் என்பதல்ல.🤥

உமக்குத் தெரிந்த ஒருவருடைய கொடும்பாவியை எரிக்க உமக்கு மனம் இடம் தருமா ? இல்லையல்லவா ? இங்கே சட்டத்திற்கு என்ன வேலை ? ஏனென்றால் நீங்கள் நாகரீகம் அடைந்தவர். எரிப்பதற்கு உமது மனம் இடம் கொடாது. 👍

இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன். 🙂

முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பிதற்றிக்கொண்டு முன்னாள் போராளிகள் தன்னை கொல்லவந்தார்கள் என்று பொய்யாய் ஒரு புரளியை கிளப்பி ஆயுதப்படை காவலில் திரிகிற ஜனநாயகவாதி என்று சொல்பவருக்கு  அந்த மக்களின் சாதாரண ஜனநாயகத்துக்கு உட்பட்ட எதிர்ப்பு

இப்படி பாருங்கள் தனக்கு ஆயுதப்படை பாதுகாப்பு வேன்றுமென்பதுக்காக அநியாயமாய் குற்றம் சாட்டிய போராளிகளின் அடுத்த நேர சாப்பாட்டுக்கு யோசிப்பு  நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு அவரின் கொடும்பாவியை எரிக்க  மனம் இடம் கொடுத்து இருக்கும்தானே? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம் .

5 hours ago, கற்பகதரு said:

கோத்தபாயவுக்கு எதிரான வழக்குகளில் சிங்கள வழக்கறிஞர்கள் கூட தோன்ற பயப்படும் நிலையில் இன்றுவரை தோன்றி வருபவர் சுமந்திரன். சுமந்திரனை தோற்கடிப்பதில் இராஜபக்ச குடும்பத்தினருக்கு பெரும் ஆர்வம் இருப்பதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். போர்க்காலத்தில் இலங்கை அரசின் இரகசிய செயற்பாட்டு பிரிவுகள் மிகவும் சிறப்பான சக்திபடைத்த பிரிவுகளாக வளர்ந்து விட்டன. குறிப்பாக, உளவியல் யுத்தத்தில் அவர்கள்  சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இன்று இருப்பதாலேயே, ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான தலைவர்கள் கூட உருவாகாமல் இருக்கக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலேயுள்ள படங்கள் போன்றவை அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் தேசியவாதிகள் போல தோன்றும் முகவர்கள் செய்து வெளியிடுபவை போன்றே தெரிகின்றன. இறுதி யுத்தத்தில் தப்பிவந்த கனேடிய தமிழர் ஒருவர் சொன்னதன் படி, பல போராளிகளை சக போராளிகள் போன்று சில காலம் ஒன்றாக இருந்தவர்களே கைது செய்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த “போராளிகள்” போன்று தோற்றம் காட்டியவர்கள் சுனாமியின் பின் இணைந்த சிங்களம் பேசக்கூடிய தென்னிலங்கை   தமிழர்கள். 

இந்த யாழ் களத்தில் கூட அப்படி சில “தமிழ் தேசியவாதிகள்” இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். நிரூபிப்பது மிகவும் கடினமானது.

ம்... நான் நினைத்தது போலன்றி நிரூபிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

கொடும்பாவி எரிப்பதை நாகரீகம் அடைந்த சமூகங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை.

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டு வெட்டி சேட்டை வேஸ்ட் பண்ணி இருக்கிறானுகள் இதுகளுக்கு போட்டு எரிச்சு 😏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அப்ப  உங்கடை சுமத்திரனும் துரோகி என்று சொல்ல வருகிறீர்கள்களா ?

அவர்தான் தென்னிலங்கையில் சிங்களவர்களுடன் வாழுவது தனக்கு பிடிக்கும் என்று உளறினவர் .(பிறகு அதே வாயால் 83கலவரத்தில் சிங்களவனிடம் அடிவாங்கி கப்பலில் யாழ் வந்து இறங்கினது என்றும் சொன்னவர் )

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று வடகிழக்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கை தமிழர்களுக்கும் போற போக்கிலை  வாயால் வடை சுட்டு பிரிவினை உருவாக்க வேண்டாம் .தகுந்த ஆதாரமும் கிடையாது இருந்தால் கொண்டுவந்து போட்டு விட்டு உங்கள் பிரிவினையை தொடரலாம்

4 hours ago, கற்பகதரு said:

ம்... நான் நினைத்தது போலன்றி நிரூபிப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

கேள்விகளுக்கு பதில்கள்  இப்படியா ?

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

அத்துடன் அந்த ஐந்து பேரே  கூட  ஓராலே  செய்த்திருக்கணும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விளக்கம் எளிமையாக உள்ளது 👍
5 பேர் மட்டும் தான் அந்த வேலை செய்கிறார்கள்.

ஊரை எரிக்கிற அரசனுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கிற மந்திரி மாதிரி சிலர் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்களே ☹️

யான் என் செய்வேன் பராபரமே ☹️

5 hours ago, spyder12uk said:

முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பிதற்றிக்கொண்டு முன்னாள் போராளிகள் தன்னை கொல்லவந்தார்கள் என்று பொய்யாய் ஒரு புரளியை கிளப்பி ஆயுதப்படை காவலில் திரிகிற ஜனநாயகவாதி என்று சொல்பவருக்கு  அந்த மக்களின் சாதாரண ஜனநாயகத்துக்கு உட்பட்ட எதிர்ப்பு

இப்படி பாருங்கள் தனக்கு ஆயுதப்படை பாதுகாப்பு வேன்றுமென்பதுக்காக அநியாயமாய் குற்றம் சாட்டிய போராளிகளின் அடுத்த நேர சாப்பாட்டுக்கு யோசிப்பு  நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு அவரின் கொடும்பாவியை எரிக்க  மனம் இடம் கொடுத்து இருக்கும்தானே? 

எட்டுக்கால் பூச்சிக்கு இதற்கு மேல் விளக்கம் கொடுப்பது வீண் வேலை. I'm out. (Shark Tank பார்க்கிறதால வந்த வினை)😂

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்ச்சியிலும் ஏனைய பகுதிகளில் நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுகிறதா இலங்ககை என எண்ண தோன்றுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

வடமராட்ச்சியிலும் ஏனைய பகுதிகளில் நடக்கின்ற விடயங்களை பார்க்கும்போது இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுகிறதா இலங்ககை என எண்ண தோன்றுகிறது

வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு மானிலமாக மாற்றுவதற்கான செயற் திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 😡

ஞானம் உள்ளவர்களுக்குப் புரியும் 😎

Edited by Kapithan

1 hour ago, Kapithan said:

வடக்கு கிழக்கை இந்தியாவின் ஒரு மானிலமாக மாற்றுவதற்கான செயற் திட்டம் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. 😡

ஞானம் உள்ளவர்களுக்குப் புரியும் 😎

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

3 hours ago, Kapithan said:

எட்டுக்கால் பூச்சிக்கு இதற்கு மேல் விளக்கம் கொடுப்பது வீண் வேலை. I'm out. (Shark Tank பார்க்கிறதால வந்த வினை)😂

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு வெட்டி சேட்டை வேஸ்ட் பண்ணி இருக்கிறானுகள் இதுகளுக்கு போட்டு எரிச்சு 😏

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் .

4 minutes ago, spyder12uk said:

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

வேலைவெட்டி இல்லாத ஆக்கள் செய்த வேலையை

வேலைவெட்டி இல்லாத ஆள் செய்தியை இணைத்து விட

வேலைவெட்டி இல்லாத கருத்தாளர்கள் புடுங்குப்படுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

வேலைவெட்டி இல்லாத ஆக்கள் செய்த வேலையை

வேலைவெட்டி இல்லாத ஆள் செய்தியை இணைத்து விட

வேலைவெட்டி இல்லாத கருத்தாளர்கள் புடுங்குப்படுகினம்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, spyder12uk said:

ஹிந்தியர்கள் தான் இலங்கையின் வடகிழக்குக்கு சுமத்திரன் போன்றவர்கள் வரவேணும் என்று விரும்புது .

கருத்துகளின் வெறுமை சுறா தொட்டி பார்க்க வைக்கும் 

கவலைப்படாதீர்கள் தேர்தலுக்கு பிறகு வேட்டி  சட்டை  இல்லாமல்தான் யாழ் வீதிகளில் திருவோடு ஏந்தி திரியப்போகினம் .

பூச்சியருக்கு Shark Tank என்று ஒரு பிரசித்தி பெற்ற தொலைக் காட்சித் தொடர் இருப்பது தெரியவில்லை போலும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

4 வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள். ஏதாவது செய்து உழைக்கமால் சட்டத்தரணி சுமந்திரனுக்கு எதிர்ப்பு காட்டுகின்றார்களாம்.  அதென்ன குற்றப்பத்திரிக்கை வாசித்து, தண்டனை கொடுத்தல், இவர்கள் என்ன தலிபான? இதென்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடா?    

அவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல - ஏதோ ஒரு நிறுவனத்தின் ஊதியம் மற்றும் செலவுகளின் பொறுப்பில் தமக்கு தரப்பட்ட வேலையை செய்து இருக்கிறார்கள். சிறிலங்கா அரசு அல்லது மொட்டு கட்சியின் பின்னணியிலேயே அந்த நிறுவனம் இயங்குகிறது என்பதே எனது அபிப்பிராயம். பஸிர் காக்காவும் அந்த செயற்பாடுகளுள் அடக்கம். ஆனால் தமக்கு பின்னால் உள்ள உண்மையான பின்னணியை இவர்கள் அறியாமல் இருக்கக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.