Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020.jpg

பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர்.

பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர்.

இந்தக் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-1-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-2-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-4-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-6-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-7-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-3-scaled.jpg

TNPF-Meeting-in-Pointpedro-parliament-Eelction-2020-5-scaled.jpg

https://athavannews.com/பருத்தித்துறையில்-தமிழ்/

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கூட்டங்களிலும்நிறைய சனம் தான் ஆனால் இதை வைத்து தேர்தல் முடிவை கணிக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

எல்லா கூட்டங்களிலும்நிறைய சனம் தான் ஆனால் இதை வைத்து தேர்தல் முடிவை கணிக்க முடியாது

பலருடனும் பேசிய போது இவர்களுக்கே இளைய தலைமுறையினரின் வாக்கு என்கிறார்கள்.

இன்னும் 4 நாட்களில் தெரியும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை கஜேந்திரகுமார் வெல்லுவார் என்று சொல்லினம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த முறை கஜேந்திரகுமார் வெல்லுவார் என்று சொல்லினம் 

அது அவரின் உங்களின் கனவு மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இந்த முறை கஜேந்திரகுமார் வெல்லுவார் என்று சொல்லினம் 

முதியவர்களின் வாக்கு விக்கியருக்கும்
இளையோரின் வாக்கு கஜேந்திரனுக்குமாக இருக்கலாம்.

30 minutes ago, பெருமாள் said:

அது அவரின் உங்களின் கனவு மட்டுமே 

பெருமாள் அப்ப யார் தான் வெல்லுவார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் தமிழின அழிப்பிற்கு எதிரான குரலாக கஜேந்திரகுமாரின் குரல் பாராளுமன்றில் இருக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் அப்ப யார் தான் வெல்லுவார்கள்?

யாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தமோ அவர்களே மீண்டும் வருவதுக்கு சந்தர்ப்பங்கள் கூடவாக  உள்ளன எங்களின்  விருப்பம் வேறு அங்குள்ள  கள கொதி  நிலை வேறு மக்களின் முடிவுகள் ஒரு கட்சிக்கு  ஆதரவாய் இருந்தால் அங்கு முடிவு எடுப்பவர்கள் கைகள் கட்டப்படும் ஆனால் இதையெல்லாம் எதிர்பார்த்து 300 க்கு மேல வாக்கு பிரிப்பு நடாத்துகிறார்கள் இப்படியான நேரத்தில் ஜனநாயக தேர்தலாக கணிப்பிட முடியாது பார்க்கலாம் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு இந்த முறை வாக்கு விகிதம் குறைவு என்பது மட்டும் உண்மை. ஆனால் டக்கியும் விஜயகலாவும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெல்ல சந்தர்ப்பம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

கூட்டமைப்புக்கு இந்த முறை வாக்கு விகிதம் குறைவு என்பது மட்டும் உண்மை. ஆனால் டக்கியும் விஜயகலாவும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெல்ல சந்தர்ப்பம் இருக்கு

இதற்கு காரணம்  கூட்டமைப்பின் பொய்பித்தலாட்டமும்

செயற்பாடற்ற  தன்மையுமே...

  • கருத்துக்கள உறவுகள்

daGK8l.jpg

இந்தப் பதிவு எனது நண்பரோடு   தேர்தல் தொடர்பாக  உரையாடிக்கொண்டிருந்தபோது  அவரால் அனுப்பப்பட்டது. இணைத்துள்ளேன். 

Edited by nochchi

4 hours ago, விசுகு said:

இதற்கு காரணம்  கூட்டமைப்பின் பொய்பித்தலாட்டமும்

செயற்பாடற்ற  தன்மையுமே...

நான் யோசிப்பதுண்டு கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற்று தரா விட்டாலும் கூட புலம்பெயர்ந்து வசிக்கும் 10 லட்சம் மக்களிடம் வருடம் 10 டொலராவது வாங்கி (அதாவது மொத்தம் 10 மில்லியன் டொலர் என்று பார்த்தால் 100 மில்லியன்) 10 வருடங்களுக்கு எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை செதற்படுத்தி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

முதலில் இப்படிப் பொதுநலமாகச் சிந்திக்கத் தெரிய வேண்டுமே. கதிரைகளையும் தமது நலன்சார்ந்த ஏகபோக சலுகைகளையும் சிந்தித்து சிந்தித்து கடைசியில்  கயிறும் உருவப்படப்போகிறது. அதன்பின்னாவது கூட்டமைப்பு ஓயுமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

முதலில் இப்படிப் பொதுநலமாகச் சிந்திக்கத் தெரிய வேண்டுமே. கதிரைகளையும் தமது நலன்சார்ந்த ஏகபோக சலுகைகளையும் சிந்தித்து சிந்தித்து கடைசியில்  கயிறும் உருவப்படப்போகிறது. அதன்பின்னாவது கூட்டமைப்பு ஓயுமா?

கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளன் நான். யாழில் கூட ஆரம்பத்தில் பலருடனும் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களிடம் சுயநலம் தவிர வேறு எந்த பொதுநலமோ இனம் சார்ந்த செயற்பாடோ இல்லாத போது?? இன்நிலைக்கே பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முழு முழு பொறுப்பும் கூட்டமைப்பே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

நான் யோசிப்பதுண்டு கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற்று தரா விட்டாலும் கூட புலம்பெயர்ந்து வசிக்கும் 10 லட்சம் மக்களிடம் வருடம் 10 டொலராவது வாங்கி (அதாவது மொத்தம் 10 மில்லியன் டொலர் என்று பார்த்தால் 100 மில்லியன்) 10 வருடங்களுக்கு எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை செதற்படுத்தி இருக்கலாம்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் அபிவிருத்தி செய்வதில்லை என்று.ஏன் என்றால் அது செய்யக்குடியது.தீர்வு என்பதை வைத்துத்தான் மக்களை ஏமாற்றி தாம் வாழலாம்.ஆனால் இம்முறை மக்கள் ஓரளவு விழித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளன் நான். யாழில் கூட ஆரம்பத்தில் பலருடனும் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களிடம் சுயநலம் தவிர வேறு எந்த பொதுநலமோ இனம் சார்ந்த செயற்பாடோ இல்லாத போது?? இன்நிலைக்கே பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முழு முழு பொறுப்பும் கூட்டமைப்பே. 

உண்மையிலே மிகவும் வெட்கமாக இருக்கிறது விசுகு அவர்களே. அண்மையில் ஒருவர் என்னைக் கேட்டார். என்ன வீட்டை விட்டு சையிக்கில்லை  ஏறீட்டியளோ என்று கேட்டார். என்னத்தைச் சொல்வது. எம்மை நாமே நொந்துகொள்வதைத் தவிர.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

உண்மையிலே மிகவும் வெட்கமாக இருக்கிறது விசுகு அவர்களே. அண்மையில் ஒருவர் என்னைக் கேட்டார். என்ன வீட்டை விட்டு சையிக்கில்லை  ஏறீட்டியளோ என்று கேட்டார். என்னத்தைச் சொல்வது. எம்மை நாமே நொந்துகொள்வதைத் தவிர.

நாம்  விரும்பிய தலைவர்களின் அமைப்பின் 

தமிழருக்கான தவறான போக்கை  கண்டித்தால்  அல்லது விமர்சித்தால்

நமக்கு வேறு அமைப்பின்  தொடர்பு என்றால் நாம்  என்ன  செய்வது??

விக்கி  ஐயாவிடம்  கூட  அபிவிருத்தியை மட்டுமே  எதிர்பார்த்தேன்

ஆனால்????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

கூட்டமைப்பின் முக்கிய ஆதரவாளன் நான். யாழில் கூட ஆரம்பத்தில் பலருடனும் முரண்பட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களிடம் சுயநலம் தவிர வேறு எந்த பொதுநலமோ இனம் சார்ந்த செயற்பாடோ இல்லாத போது?? இன்நிலைக்கே பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முழு முழு பொறுப்பும் கூட்டமைப்பே. 

எனக்கும் நீங்கள்  தீவிர ஆதரவாளர் என்பது தெரியும் அனைவரும் உருவாக்கிய கூட்டமைப்பு ஆயுதப்போராட்டம் மவனிப்பில் இலங்கைஅரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் மவுனிப்பு என்ற கருத்து வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் போருக்கு பின் அப்பனில்லாத வீட்டு பிள்ளைகள் போல் கூத்தமைப்பின் உறுப்பினர்கள் ஆடத்தொடங்கியதே இவ்வளவு சீரழிவுக்கு காரணம் மட்டும் அல்ல எங்களின்  சமூக ஊடகங்கள் கூட செல்லம் கொடுத்து கொண்டு இருந்ததன் விளைவே இது யாழில் கூட  கூத்தமைப்பின் பிழைகளை ஆரம்பத்தில் சுட்டி காட்ட முடியாது .

எந்த பாரபட்சமும் பார்க்காமல்  பிழைகளை உடனுக்குடன் விமர்சனத்துக்கு உட்படுத்தி இருந்தால் இவ்வளவு மோசமான விளைவு வந்திருக்காது .நாளைய முடிவு எப்படி என்று தெரியாது எதுவும்  நடக்கலாம் .

1 hour ago, விசுகு said:

நாம்  விரும்பிய தலைவர்களின் அமைப்பின் 

தமிழருக்கான தவறான போக்கை  கண்டித்தால்  அல்லது விமர்சித்தால்

நமக்கு வேறு அமைப்பின்  தொடர்பு என்றால் நாம்  என்ன  செய்வது??

விக்கி  ஐயாவிடம்  கூட  அபிவிருத்தியை மட்டுமே  எதிர்பார்த்தேன்

ஆனால்????

தீர்வென்பது மறந்து போய்  அபிவிருத்தி நடந்தால் காணும் என்ற நிலைக்கு கொண்டு வந்து வீட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

28 minutes ago, பெருமாள் said:

எனக்கும் நீங்கள்  தீவிர ஆதரவாளர் என்பது தெரியும் அனைவரும் உருவாக்கிய கூட்டமைப்பு ஆயுதப்போராட்டம் மவனிப்பில் இலங்கைஅரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் மவுனிப்பு என்ற கருத்து வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் போருக்கு பின் அப்பனில்லாத வீட்டு பிள்ளைகள் போல் கூத்தமைப்பின் உறுப்பினர்கள் ஆடத்தொடங்கியதே இவ்வளவு சீரழிவுக்கு காரணம் மட்டும் அல்ல எங்களின்  சமூக ஊடகங்கள் கூட செல்லம் கொடுத்து கொண்டு இருந்ததன் விளைவே இது யாழில் கூட  கூத்தமைப்பின் பிழைகளை ஆரம்பத்தில் சுட்டி காட்ட முடியாது .

எந்த பாரபட்சமும் பார்க்காமல்  பிழைகளை உடனுக்குடன் விமர்சனத்துக்கு உட்படுத்தி இருந்தால் இவ்வளவு மோசமான விளைவு வந்திருக்காது .நாளைய முடிவு எப்படி என்று தெரியாது எதுவும்  நடக்கலாம் .

தீர்வென்பது மறந்து போய்  அபிவிருத்தி நடந்தால் காணும் என்ற நிலைக்கு கொண்டு வந்து வீட்டினம்.

நான் முதன்முதல்  அவர்களுடன்  முரண்பட்டது

பிரான்சில் நடந்த  கூட்டமைப்புக்கருத்தரங்கில்  தான்.

நான்  கூட்டமைப்பைக்காண,  பேச, உதவத்தான்  கருத்தருங்குக்கு சென்றிருந்தேன்

ஆனால்  அங்கு வந்திருந்த மாவை, சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட அனைவரும்  தத்தமது கட்சி  சார்ந்தும்  அவர்களது  கட்சிகளுக்கு பிரான்சில் கிளை  திறப்பது  சம்பந்தமாக  எடுத்துக்கொண்ட அக்கறை  எதனையும் கூட்டமைப்பு சார்ந்து எடுக்கவுமில்லை  பேசவுமில்லை

அந்த  கருத்திருங்கிலேயே  கூட்டமைப்பு  சார்ந்து பேச மட்டுமே இங்கு  நாங்கள்  பேச  வந்தோம்

அது  சார்ந்து மட்டுமே  இங்கு நீங்களும் பேசவேண்டும்

இனி மேலும் அதற்கு  மட்டுமே நீங்கள்  இங்கு  வருவதாக  இருக்கவேண்டும்  என்று  விட்டு  வந்து  விட்டேன்

அதன்  பின்னர்  தான் யாழிலும் இவர்களது  கபடங்களை  எழுதத்தொடங்கினேன்

நஞ்சு என்று  தெரிந்தபின்  பருகமுடியாது

வேறு வழிகளை  நாடுவது  தவறல்ல

ஆனால் யார்  என்பதை  தாயக  மக்கள்  தான் தெரிவு  செய்யணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Dash said:

நான் யோசிப்பதுண்டு கூட்டமைப்பு அரசியல் தீர்வை பெற்று தரா விட்டாலும் கூட புலம்பெயர்ந்து வசிக்கும் 10 லட்சம் மக்களிடம் வருடம் 10 டொலராவது வாங்கி (அதாவது மொத்தம் 10 மில்லியன் டொலர் என்று பார்த்தால் 100 மில்லியன்) 10 வருடங்களுக்கு எத்தனையோ அபிவிருத்தி திட்டங்களை செதற்படுத்தி இருக்கலாம்.

நல்ல கருத்து மாபெரும்; ஆதரவு இருந்திருக்கும் - இந்த இந்திய சிங்கள நாய்களிடம் பிச்சை எடுத்திருக்க தேவையில்லை, மாற்று தலமையாக உருவெடுத்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
On ‎02‎-‎08‎-‎2020 at 22:24, பெருமாள் said:

அது அவரின் உங்களின் கனவு மட்டுமே 

கஜேந்திரகுமார் வரோணும் என்று எனக்கு விருப்பம் இல்லை ...ஆனால் கட்டாயம் சும்tw_lol: வரோணும் என்று ஆசை இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கஜேந்திரகுமார் வரோணும் என்று எனக்கு விருப்பம் இல்லை ...ஆனால் கட்டாயம் சும்tw_lol: வரோணும் என்று ஆசை இருக்கு 

சும்  வந்தால் கிழக்கில் உள்ள தமிழர்கள் தான் முதலில்  பாதிக்கப்படுவார்கள் .

இன்னும் குழப்பகரமாய் தமிழ் அரசியல் நகரும் இலங்கைத்தமிழ்க்காங்கிரஸின் ஏகபோக தலைவர் அவராவார் அவரை எதிர்த்து கணக்கோ கேள்வியோ கேட்க்க முடியாது . யாழ் மக்களின் நிலை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு போகும் களவு கொள்ளை வழிப்பறி அனைத்தும் பெருகும் விதி யாரை விட்டது இந்த நிமிடம் வரை அவர் வருவத்துக்குரிய சூழ்நிலைகள் தான் உள்ளது கவலை வேண்டாம்.

சிலவேளை நாளை வோட்டு போடும் மக்களின் மனம்களில்  ஏதாவது அதிசயம் நடந்தால் முடிவுகள் மாறலாம்.இம்முறை சைக்கிள் வரும் உங்கள் விருப்பத்துக்கு எதிரானது ஆனால் கள  யதார்த்தம் என்று உண்டு விக்கியர்  குறைந்தது இரண்டாவது எடுப்பார் .

இங்கு வெல்வது யாரென்றால் சிங்களவர்கள்தான் நாங்கள் அல்ல . 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை யாழில் ஒருவரோடு உரையாடினேன். சாதாரன தொழிலாளியான அவரிடம் தேர்தல் குறித்துக் கேட்டேன். அவர் சொன்னவை: இந்த முறை மாற்றம் வேண்டும். நான் சையிக்கிலுக்கு என்றார்.  ஆனால் தமிழரது தற்போதைய மனநிலையை  யாரறிவார்.  அரசியற் குழப்பம். பல்கிப்பெருகிய கூட்டுகள். சாதிகள் சார்ந்த பிரிப்புகள். போதாக்குறைக்கு சமயங்களையும் வேறு காவுகிறார்கள். கட்டற்ற சுயேச்சைகள் என்று..............

நாளை யாழ் முடிவுகள் வெளியிடப்படும் என அரச அதிபர் கூறியுள்ளார். எனவே முடிவுகள் தெரிந்துவிடும். இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-1 அல்லது 2, தமிழ்   மக்கள் தேசியக் கூட்டணி-2 ,  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-1,  கூட்டமைப்பு 2,  சிலவேளைகளில் தமிழ்க் கட்சிகளைக் கடந்து சிங்களக் கட்சிக்கு 1கிடைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nochchi said:

அங்கயன் பின்தங்கிய இடங்களில் இந்திய பாணியில் வெல்ல முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

116343227_306437930558267_53927743893542

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.