Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

Edited by குமாரசாமி
பெண்

  • Replies 119
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா ரவிராஜ் தொடர்ந்து கூட்மைப்பிலிருந்தவாறு போராட வேண்டும்.

தவறு செய்வோர் திருத்தப்பட வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அபலைப்பெண்  அழுத கண்ணீர் சுமந்திரனை சும்மா விடாது.

உலகின் மேலிருந்து கீழ்வரை அராஜகவாதிகளின் காலம். சும் இன்னும் 5வருடம் இருந்து முடியேக்கை த.தே.கூ இருககாது. கூ என்ற ஓசைமட்டும்தான் கேட்கும் சம் சிலநேரம் விடைபெற்றிடுவர்.  கண்ணீரெல்லாம் இப்ப ஒன்றும் செய்யாது கு.சா ஐயா.  அப்பிடியென்றால் ராயபக்சயாக்கள் அப்படியே இருக்கிறார்கள். அத்தியடி  முரளீதரன் என்று நீண்ட பட்டியலே போடலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

மாஸ்க் போட்டு இருப்பது நல்ல வசதி ஆட்களுக்கு 😃யார் என்ன செய்தது ,சொன்னது என்று கண்டு பிடிக்கேலா tw_lol:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இது என்ன கும்மானின் இடமோ, கத்தியவனை கலைச்சு அடிக்க. 

சுத்துமாத்திரன் சற்று பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் 

வடக்கில் ஓர் அரசியல்வாதிக்கு எதிர்ப்புக் காட்டக் கூட தமிழனுக்கு இடம் இல்லையோ

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

கும்மான்  கலைத்து  அடித்ததற்கு ஆதாரம் இருக்குதா?...அப்பன் சொன்னான் ,சுப்பன் சொன்னான் என்று வந்து எழுத வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

இது ஆதாரமோ?...ஏன் வீடியோ எடுக்க முடியவில்லையாமா?...உங்களை பார்க்க அழுகை தான் வருது போய் படுங்கோ ...குட் நைட் 

எல்லாரும் கும்மான் மாதிரி விடியோவும் நாலு பேருமாகவா திரியினம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல்.
இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள்.
கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்?

எப்பிடி எங்கட சும்மின்  கேம் 
இப்படி Pawn காய்களை கொண்டு வந்து கேட்க வைத்ததே , தேவையான நேரம் தட்டி தூக்கத்தான் 
சும்மை நம்பி வந்து கேட்ட அவிங்களுக்கு  இதைவிட நல்லா வேணும் 
அம்பிகா இதைப்பார்த்து தப்பித்தது தலை Bloody Criminals  என்று அவுஸிற்கு ஓட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீருடன் விடைபெற்றார் மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி..! நீதி கோருவேன் என ஊடகங்களுக்கு கருத்து..

Tn-sasi.jpg

மாமனிதர் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 2ம் இடத்தில் இருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியானபோதும்,

அவர் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், வாக்கெண்ணும் நிலையத்திற்குள் இடம்பெற்ற குழப்பத்தினால் அவருடைய மருமகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அதிரடிப்படை தாக்குதல் நடத்தியிருந்ததை தொடர்ந்து,

அவரும் அவருடைய பிள்ளைகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் கண்ணீருடன் விடைபெற்று சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அங்கிருந்த பலருடைய மனங்களை உறுத்தும் சம்பவமாக அமைந்திருந்தது.

பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சசிகலா விருப்பு வாக்கில் 2ம் இடத்தில் உள்ளதாக வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து அறிவிக்கப்பட்டபோதும்,

பின்னர் தாம் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறியதுடன், இது குறித் கட்சி தலைவர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோரிடம் முறையிட்டு நீதியை கோரவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

https://jaffnazone.com/news/19779

6 hours ago, Dash said:

விகிதாசார வாக்கெடுப்பு தான் மிக சிறந்த முறை ; தொகுதி வாரி பிரதிநிதித்துவம் மிகவும் தவறானமுறை. இந்த முறையின் கீழ் ஒரு கட்சி பெற்ற வாக்குகளுக்கும் அதுன்பெற்ற ஆசனங்களுக்கும் நேரடி தொடர்புமிருக்கும்.

புதிதா அரசியலைப்பில் தொகுதிவாரியான பழைய முறைமை கொண்டு வரப்படும். புதிய அரசின் முக்கிய தீர்மானங்களில் இதுவும் ஒன்று. நிச்சயமாக இது மலையக தமிழர்களையும் , முஸ்லிம்களையும் பாதிக்கும். 

27 minutes ago, தமிழ் சிறி said:

மக்கள், தன்னை நிராகரித்தால்....   அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதாக பலமுறை தெரிவித்த சுமந்திரன்...  மீண்டும், மீண்டும் குறுக்கு வழியால் பாராளுமன்றத்துக்குள் போவது கேவலம்.

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டேய் கள்ளா,டேய் கள்ளன் எண்டு கூப்பிட்டா பிறகும் ரோசம் வரேல்லையெண்டால் என்ன செய்யிறது? 😁

ரோசம் பாத்து விலகினால், எஜமானை யார்?  எப்படி பயங்கரவாதி பட்டத்தில் இருந்து விலத்தி மனித நேய காப்பாளனாய், இலங்கையின் பொக்கிஷமாய் தூக்கி நிறுத்துகிறது? சிங்களவனுக்கு எப்போதும்  கேடயமாக இருப்பது மானங்கெட்ட, சோரம்போன  தமிழனே. இதுக்கு மேல நல்லாய் வருகுது வாயில,  பெற்றோரின் வளர்ப்பு, கற்ற கல்வி தடுக்குது.  உது ஒரு ஊத்தை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இலங்கையில் எப்போதாவது இரண்டாவது முறை அதுவும் சாமம்  12 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது உண்டா ?  சுமத்திறனை வெறியாளர்  என்று அறிவிக்கினம் அவரும் வருகிறார் மாவையின்  மகனுக்கும் அடி விழுது எல்லாம் ஒரு நிகழ்ச்சி நிரலின்படி .

இனி என்ன வீட்டை இரண்டாய் உடைப்பது தானே 

அமாவாசை சிறீதரனும் மணிவண்ணன் மாவையும்..

samakaalamc-scaled.jpg

அமைதிப்படை தமிழ் நாட்டு அரசியலின் கேலிக்கூத்துக்களை தத்துருபமாக பதிவு செய்த திரைப்படம். இன்றும் தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் அமைதிப்படை வழியாக மீம் செய்யப்படுகின்றது. ஆனால் அவ்வளவு வேகமாக இது இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருந்திவிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழ் அரசியலிலும் அமாவாசை என்ற கச்சிதாமான பாத்திரம் ஒன்று உருவாகியிருக்கிறது.

இந்தப் பத்தியைப் படிப்பவர்களுக்கு நிச்சயமாக அந்த அமாவாசை இப்போதே கண்ணுக்குள் வந்துவிடுவார். அமைதிப்படைத் படத்தில், மணிவண்ணன் ஒரு அரசியல்வாதியாக ஒரு கோயிலுக்கு செல்லும் போது, அங்கே தேங்காய் பொறுக்கிக் கொண்டிருப்பார் அமாவாசையாக நடிக்கும் சத்தியராஜ். முதலில் கட்சி எடுபிடியாக சேர்த்துக்கொள்ளப்பட்ட வர், ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மணிவண்ணனுக்குப் பதிலாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கையைக் கட்டிக் கொண்டு அடிமை போல பம்மிக் கொண்டு இருந்த அமாவாசை, அந்த தேர்தலில் வெற்றி பெற மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருப்பார். அதாவது அமாவாசை நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ஆக உருமாற்றம் பெற மணிவண்ணன் அவருக்கு எடுபிடியாக மாறுவார். அப்படியொரு படம்தான் இலங்கை தமிழ் அரசியலிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மகாநடிகன் திரையில் இல்லை தரையில் நடிக்கிறார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்தான் அந்த அமாவாசை. ஆமாம். 2010ஆம் ஆண்டு கால கட்டம். அப்போது போர் முடிந்து மக்கள் நொந்துபோயிருந்த நேரம். எந்த நோவும் இல்லாமல் தர்மபுரத்துடன் அம்புலன்ஸில் ஏறி வவுனியாவுக்கு ஓடிய சிறீதரனுக்கு முள்ளிவாய்க்காலும் தெரியாது, முள்வேலி முகாமும் தெரியாது. ஆனால் மக்கள் முள்வேலி முகாங்களில் அடைக்கப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆசனத்திற்காக வவுனியாவில் அலைந்தார். அதாவது கோயிலில் தேங்காய் பொறுக்கும் அமாவாசை போல..

அப்போது ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கெஞ்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதும் தான் காணாத முள்ளிவாய்க்காலையும் தான் போகாத முள்வேலி முகாமையும் பற்றிப் பேசியதோடு, ஆர்பிஜியை தூக்கி அடித்தவர் போல புலிகளைப் பற்றியும் பேசி அதை வாக்குகளாக அள்ளும் நடிப்பில் ஈடுபட்டார். மட்டுமட்டான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வென்ற சிறீதரன் முதன் முதலில் அமாவாசை வேலையை காட்டியது சுரேஷ் பிரேமச்சந்திரனிடம்தான்.

தான் தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்றார் சிறீதரன். ஆனால் ஈபிஆர்எல்எப் ஊடாக வந்தவர், முதல் துரோகத்தை அங்கே தொடங்கி வைத்தார். தேர்தலில் வென்றவுடன் சுரேஷை கட்டிப்பிடித்து அவருடன் நின்றவர் மெல்ல மெல்ல நகர்ந்தார் மாவையின் பக்கம்.. அந்த ஒருமுறைதான் தான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன் என்றும் பின்னர் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்குவதுதான் நல்ல பண்பு என்றும் வகுப்பெடுத்த சிறீதரனை 2009இற்கு முன்பு எவருக்கும் தெரியாது. சாதாரணமான ஒரு ஆசிரியர்தான்.

அதன் பிறகு, சதா புலிகளைப் பற்றி பேசி, கைகளை கட்டி, கைகளை நீட்டி வேடங்கள் தரித்து தலைவரின் உரையை வெட்டியும் ஒட்டியும் பேசினார். இன்னும் ஒருமுறை இருந்துவிட்டு போய்விடுவேன் என்று சொன்னவர், இப்போது மூன்றாவது முறையாகவும் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலுடன் அமாவாசையின் உச்ச ஆட்டத்தையும் சிறீதரன் தொடங்கியுள்ளார். இதற்காக சுமந்திரனுடன் ஒரு கூட்டையும் டீலையும் வைத்திருக்கிறார் சிறீதரன்.

மாவையை தோற்கடித்து, தமிழரசுக் கட்சியின் பதவியை கைப்பற்றுவதுதான் சிறீதரனின் அமாவாசை ஒப்பிரேசன். அத்துடன் அதேவேளையை தன்னைக் கொண்டு வந்த சம்பந்தனை தோற்கடித்து, கூட்டமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்ற சுமந்திரன் திட்டம் தீட்டியுள்ளார். ஒருமுறையுடன் போய் விடுவேன் என்றவர் இப்போது என்ன ஆட்டம் போடுகிறார் பார்த்தீர்களா?

இந்தப் பதவி ஆசை காரணமாகத்தான் தமிழினத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசியலை முன்னெடுத்துவரும் சுமந்திரனை சிறீதரன் ஆதரிக்கிறார். இந்த அமாவாசை ஓப்பிரேசனுக்காகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மோசமாக சித்திரித்து பரப்புரை செய்யும் சுமந்திரனை ஆதரிக்க சிறீதரன் தீர்மானித்துள்ளார். இதுவரை காலமும் புலிப் புராணம் பாடிவிட்டு, இப்போது புலிகளையும் அதன் தலைமையையும் பிழையாக காட்ட சிறீதரன் முற்படுகிறார். சுமந்திரனுக்காக இன்னொரு நடிப்பு. இன்னொரு படம் காட்டுகிறார்.

பதவிக்கும் சுகபோகத்திற்கும் சுமந்திரனை ஆதரிக்க தீர்மானித்த சிறீதரன், சாதாரணமான அமாவாசையல்ல. பதவிக்கும் சுகபோகத்திற்கும் பிரபாகரனை எதிர்க்கும் ஒரு சிங்கள மனநிலை கொண்ட சுமந்திரனை ஆதரிக்கும் சிறீதரன் நாளை சிங்கள அரசிடம் இணைந்தால்கூட ஆச்சரியமல்ல. இந்த அமாவாசையின் ஆட்டம் வெல்லுமா? வென்றால் பெரும் பாதிப்பு தமிழர்களுக்குத்தான். அமாவாசையின் திட்டத்தை தோற்கடிக்க மணிவண்ணன் நிலையில் இருக்கும் மாவை என்ன செய்யப் போகிறார்? அமாவாசை ஒப்பிரேசன் நிறைவேறினால் அடுத்த அமாவாசை ஒப்பிரேசன் சுமந்திரனுக்கு எதிராகத்தானாம்..

-ஆசைமுத்து சங்கரன்

https://thamilkural.net/thesathinkural/views/52456/

டிஸ்கி :

IMG-20200807-084348.jpg

தோழர் ..மிக சரியாக கணித்த தாங்கள் உண்மையிலே ஒரு தீர்க்க தரிசி..👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர் கேவலமானவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவிற்கு கேவலமாய் இறங்குவார் என்று தெரியாது 
 
நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது   குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது  பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார்  வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால்  இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய்  கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் .

இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா ? மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை  மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது  சனமும்  விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை  விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது  இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை  எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி  சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி  அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை  தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf  பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் .

இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை .

எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

பெருமாள் எல்ல இடமும் குத்தி பச்சை முடிஞ்சு போச்சு 
நாளைக்கு வந்து திரியை திறக்கிறன் ஒரு குத்து குத்துறன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.
 
ஈற்றில் இரண்டாவது இடத்தில் இருந்த,  சசிகலா ரவிராஜ் களத்தில் இருந்து வெளியேற்றி... சுமந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு மோசடி என்பதற்க்கப்பால்.
 
சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இது ஒரு பெரும் நெருக்கடியாக.. உருவெடுக்கும் சுமந்திரனின் இத்தகைய அடாவடி தமிழர்களை எத்தகைய நிலைக்கு தள்ளப்போகிறது என்பதை அல்லது சுமந்திரனின் வருகை சாதகமா பாதகமா என்பதை இன்னும் குறுகிய காலத்துக்குள் உணரமுடியும்.
 
சுமந்திரனின் வருகை தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் சந்தர்ப்பத்தில், தமிழ் இளைஞர்களின் கொந்தளிப்பு வன்முறையை நோக்கி நகரலாம்.
 
இங்கு நான் சுமந்திரனையோ கூட்டமைப்பையோ குறை சொல்வதை விட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும், விக்னேசுவரனையுமே குறை சொல்வேன்.
 
காலம் இவர்களுக்கு கொடுத்த சந்தர்ப்பத்தை தமது ஈகோக்களால் இட்டு நிரப்பிய இருவரும் மன்னிக்கப்பட முடியாதவர்கள் என்பது என்கருத்து. கூட்டமைப்புக்கான மாற்று என மக்கள் எண்ணியதை சீர்குலைத்தது கூட ஒரு வகையில் சமூகத் துரோகமே.

117403967_4011280208901530_4519314701381068350_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=KfojZ3pIAXAAX_WFChe&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e1d7eab687a92aedc96cb27027251b83&oe=5F51D363

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சசிகலா ரவிராஜின்... கண்ணீரைப் பார்த்து, நாமும் கலங்கி விட்டோம். 😥

பாவம்... அந்த மனிசி,  தேர்தல் பிரச்சாரத்துக்காக...  எவ்வளவு கஸ்ரப் பட்டிருக்கும்⁉️

அந்த உழைப்பை..... சுமந்திரன்  மொத்தமாக திருடியது,  ஏற்றுக் கொள்ள முடியாத செயல். 😯

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

2 hours ago, Robinson cruso said:

சடடப்படி நடவடிக்கை எடுக்க முடியாதா? அங்குள்ள மக்கள் அவ்வளவு மடயர்களா? உங்கள் கருது அங்குள்ள மக்கள் இப்படியான ஏமாற்று வேலைகளை அங்கீகரிக்கும் படிப்பறிவற்றவர்கள் என்பதுபோல இருக்குது.

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  உதவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

52 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை அரசின்.. ஊழியர்களால், அந்த அரசின் ஆசீர்வாதத்துடன்...
நடத்தப் பட்ட  ஒரு செயலுக்கு... நீதி  கிடைக்கும் என்று, எதிர் பார்க்கின்றீர்களா?
அப்படி.. என்றால், நீங்கள் சரியான அப்பாவி. :grin:

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கற்பகதரு said:

அதெப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் திருடியதென்று? வாக்குகளை எண்ணியவர்கள், ஏனைய அதிகாரிகள், கணணி, தட்டச்சு செய்பவர்கள் இப்படி எல்லாருமாக சேர்ந்து முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து விட்டார்களே? 🍊 அது சரி, பாராளுமன்றத்துக்கு நன்றாக அழக்கூடியவர்களை அனுப்பினால் நல்ல பயன்கிடைக்குமா? இப்பவிருந்தே முயற்சித்தால் அடுத்தமுறை பாராளுமன்றம் போய் அங்கேயே அழலாமே? 😰😒😩

சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி வேண்டும். சுமந்திரன் தானே இப்படியான பொது விடயங்களுக்கு முன்வந்து வென்று கொடுக்கும் சட்டத்தரணி? அவரிடமே போய் உங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க எங்கள் சட்டத்தரணியாக நீங்கள் இருந்து  ஷ தவிசெய்யுங்கள் என்று எப்படி கேட்பது என்று வெட்கப்பட்டு சசிகலா அழுது தீர்த்திருக்கலாம்.

நீங்கள் அவரைவிட அப்பாவியாக தெரிகிறது. சித்தார்த்தனும் சசிகலா அளவுக்கு வாக்குகளை பெற்றார். சுமந்திரன் இவர்கள் இருவரையும் விட 4000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். விஷயம் விளங்கிய சித்தார்த்தன் அமைதியாக தூங்கப்போய் விட்டார்.

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.//

//சுமந்திரனின் இந்த மோசடித் தெரிவு அரச ஆதரவுடன் மிகத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. எனவே சுமந்திரனின் அரசியல் இருப்பு என்பது இன ஒடுக்கு முறையாளருக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.//

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

சித்தார்த்தனுக்குத்தான்... முதலில், ஆப்படிக்க நினைத்தவர்கள்.
அதில்... சித்தார்த்தனின் ஆதரவாளர்கள்.. கொத்தளிக்க..

சசிகலா ரவிராஜை...  பகடைக்  காய், ஆக்கி விட்டார்கள்.

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

//ஆறாவது நிலையில் இருந்த சுமந்திரனை,  நாலாவது இடத்திற்கு உயர்த்தி... அங்கும் மீள்வாக்கு எண்ணி, மூன்றாவது இடத்தில் இருந்த சித்தார்த்தனை... அகற்றும் பேரமே நடந்தது.////

அப்படியா? எப்படி உங்களுக்கு பேரம் பற்றி தெரிந்தது? உங்களை போல இன்னொருவரின் கற்பனையை படித்ததில் இருந்தா? எங்கள் மக்களில் படித்தவர்கள், பெரியவர்கள் உங்களை போல சிந்திப்பவர்களாக இருந்தால், “இந்த இனத்தை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றொருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சுமந்திரனுக்கு மானிப்பாயில் கிடைத்த வாக்குகளில் ஒருபகுதி சரியாக எண்ணப்படாததால், சட்டப்படி மீள எண்ணப்பட்டதன் பின் அவருக்கு 4000 வாக்குகள் சித்தார்த்தனிலும் பார்க்க அதிகம் கிடைத்திருப்பது உறுதியானது. சசிகலாவுக்கு சித்தார்த்தனிலும் பார்க்க 700 வாக்குகளே குறைவு. தனது வாக்குகளையும் மீளவும் எண்ணவேண்டும் என்று கேட்க சட்டப்படி உரிமை இருந்தும், இதை செய்து சித்தார்த்தனை மேவி பாராளுமன்றம் போவதை விட்டு, 4000 வாக்குகளால் முன்னே நிற்கும் சுமந்திரனுக்கு எதிராக வீடியோவுக்கு ஒப்பாரி வைத்துவிட்டு வீட்டுக்கு போன சசிகலா, பாராளுமன்றம் போய் மக்களுக்கு என்னத்தை செய்திருக்க முடியும்? பரிதாபம்.
 
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்..  ஒரு பெண்ணை, கண்ணீர்  சிந்த வைத்து..
அதில் பாராளுமன்றம் போவதை விட....
நல்லூர் கோயில் வாசலில் இருந்து, பிச்சை எடுக்கலாம்.

உங்களுக்கு பாராளுமன்றம் என்றால் என்னவென்று தெரியவில்லை போல தெரிகிறதே? பாராளுமன்றம் என்றால் என்ன, அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து பாருங்கள். 

2 hours ago, தமிழ் சிறி said:

நேற்று இரவு... யாழ். மத்திய கல்லூரியில், நடந்த சம்பவங்கள்... 
செய்திகளாக, காணொளிகளாக...  உள்ளது தேடிப் பாருங்கள். :)

பார்த்தேனே? உங்களைப் போல சிலர் தமது அறிவுக்கு எட்டியபடி தேசிய விடுதலை போராட்டத்தில் ஈடுபட, சசிகலா ஒப்பாரி வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி தனது தேசிய கடமையை நிறைவேற்றியதை பார்த்தேன். நல்லவேளை, இவ வெற்றி பெறவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கற்பகம், இறுதிவரை கூட்டமைப்பில் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தது சித்தர் மட்டும்தான். 

வேட்பாளர்கள் உள்நுழையக் கூடாத இடங்களில் எல்லாம் STF பாதுகாப்புடன் நுழைந்தது சுத்துமாத்திரன்.

கூடவே அடியாட்கள் மூலம் அந்த அபலை பெண்ணை மிரட்டல் வேறு.

அரசியலில் புதிதான அவருக்கு உதவ யாருமில்லை. குறட்டை புகழ் சம் கடைசிவரை சசிகலாவினது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.