Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

வைகோ அண்ணாவின் தமிழ் தேசியம் சார்ந்த பேச்சு வரும் வரை சீமான் அவரை மரியாதையுடன் நடத்தினார் என்றே நினைக்கிறேன்

யாரையுமே மரியாதை இன்றி பேசுவது இல்லை என்ற நிலையில் இருக்கிறார்.

அரசியலை கிழித்து தொங்கவிடுவார்.

  • Replies 269
  • Views 26.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

அது சரி எப்ப இருந்து ஏனைய யாழ் கள உறுப்பினர்கள் தேசியத்திற்கு என்ன செய்யீனம் என்று பார்க்கும் இன்ஸ்பெக்ரரானீர்கள்? கன பேர் இருக்கீனமோ? 😂

ஓமோம்... ஜஸ்டின் ஐயா... நீங்கள் மரபணு லிங்க் எங்கப்பா எண்டு கேட்டு துரத்தினது போலை அவர் அதை கேட்கிறார் போலை கிடக்குது. 

சரி விடுங்க... சிறப்பான ஞாயிறு வாழ்த்துக்கள். 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஓமோம்... ஜஸ்டின் ஐயா... நீங்கள் மரபணு லிங்க் எங்கப்பா எண்டு கேட்டு துரத்தினது போலை அவர் அதை கேட்கிறார் போலை கிடக்குது. 

சரி விடுங்க... சிறப்பான ஞாயிறு வாழ்த்துக்கள். 😁

இரண்டு கேள்விகளுக்கும் இடையேயான வித்தியாசம் தெரியாதளவுக்கு இன்னும் இருக்கிறீர்களா?

உங்களிடம் நான் கேட்டு நீங்கள் பத்து வயதுப் பிள்ளை போல tantrum போட்டது ஒரு தரவு சம்பந்தப் பட்டது! உடையார் யாழில் நான் என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியாமல்  resume தனக்குகாட்ட வேண்டுமென்று கேட்டது புதிதாக யாழில் உருவாகியிருக்கும் தமிழ் தேசிய காவல் படையின் வேலை!😎

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

நான் சும்மா எல்லோ கேட்டனான்.... இதுக்குப்போய்... அய்யோ... அய்யோ..😁

இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தாலும், இரண்டுமே வை ஆதாரம் எண்டதுதானே எண்டு சொல்ல வந்தேன். 

டபபெக்கெண்டு பொல்லை தூக்கிருவியள் என்ன... ஆள் பயங்கர கோபக்காரரோ? 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இதை வாசித்து என்ன நடக்குது என்று சுருக்கமாய் சொல்லுங்கோ ...பள்ளியில் படிக்கும் போதே வரலாற்றை கண்ணில காட்டேலாது 🤔
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

யாராவது இதை வாசித்து என்ன நடக்குது என்று சுருக்கமாய் சொல்லுங்கோ ...பள்ளியில் படிக்கும் போதே வரலாற்றை கண்ணில காட்டேலாது 🤔
 
எண்னெண்டா, நான்... பண்டாரநாயக்காவை, தெலுங்கு நாயக்கர் எண்டு சொல்லிப் போட்டனாம் பழைய திரில.

கண நாளைக்கு பிறகு வந்த கோசன், அதெப்படி, சரியா வரும்.... செல்வநாயகமும் தெலுங்கரா இருக்கலாம் தானே எண்டு திரியை தொடங்கி.....

தெரியும் தானே..... காத்தடிச்சு ஓய்ந்து...சுபமா முடிந்தது....

அதுவே.... இடைக்ககில... எங்கண்ட ஜஸ்டின் அய்யாவும்... ஓடுப்பட்டவர்... அவரும் ஓகே தான்.

போற போக்கில எதையாவது சொல்ல மாட்டியள் தானே... ஏனெண்டா வரலாறு பிடியாது எண்டு சொல்லீட்டீங்க. 🤓

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

எண்னெண்டா, நான்... பண்டாரநாயக்காவை, தெலுங்கு நாயக்கர் எண்டு சொல்லிப் போட்டனாம் பழைய திரில.

கண நாளைக்கு பிறகு வந்த கோசன், அதெப்படி, சரியா வரும்.... செல்வநாயகமும் தெலுங்கரா இருக்கலாம் தானே எண்டு திரியை தொடங்கி.....

தெரியும் தானே..... காத்தடிச்சு ஓய்ந்து...சுபமா முடிந்தது....

போற போக்கில எதையாவது சொல்ல மாட்டியள் தானே... ஏனெண்டா வரலாறு பிடியாது எண்டு சொல்லீட்டீங்க.

நான் என்னத்த உதில சொல்ல இருக்கு தெரிஞ்சால் தானே சொல்லலாம் ....கடைசி முடிவுக்கு வந்திட்டிங்களோ? 
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

யாராவது இதை வாசித்து என்ன நடக்குது என்று சுருக்கமாய் சொல்லுங்கோ ...பள்ளியில் படிக்கும் போதே வரலாற்றை கண்ணில காட்டேலாது 🤔
 
ரதியின் கேள்வியை பார்க்க வடிவேலுவின் தீப்பொறி திருமுகம் பகிடிதான் ஞாபகம் வருது. வைக்கோலை பற்றவைக்கிறது!!

இப்போதுதான் புயலடித்து ஓய்ந்து சமாதானமாகி இருக்கிறார்கள் ரதி!!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

நான் என்னத்த உதில சொல்ல இருக்கு தெரிஞ்சால் தானே சொல்லலாம் ....கடைசி முடிவுக்கு வந்திட்டிங்களோ? 
 
ஓமோம்... எல்லாம் ஒண்டுக்கை ஒண்டு தான் எண்டு இப்போதைக்கு முடிவுக்கு வந்தாச்சு.

கடைசீல, அவரிட்ட ஒரு கேள்வி ஒண்டையெல்லே கேட்டுப் போட்டன்.

அவயள விடுங்க... நீங்கள், தமிழ் அறிந்த, தெலுங்கரா, சிங்களவரா, தமிழரா எண்டு...

உன்ன திருத்தேலுமே எண்ட மாதிரி...தலைல அடிச்சுப் போட்டு போனவர்....  காணேல்ல... 🤓

சரி, வந்தனியள்.... ஒரு புத்தி... சொல்லீட்டு போங்கோ...

இதே கேள்வியை, எண்ணட்ட திருப்பி கேட்டா...என்ன சொல்லலாம்... 🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

சிங்களவனுமில்ல ,தமிழனுமில்ல நீங்கள் ஒரு மனிதநேயமுள்ள மனிதன் என்று சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

சிங்களவனுமில்ல ,தமிழனுமில்ல நீங்கள் ஒரு மனிதநேயமுள்ள மனிதன் என்று சொல்லுங்கோ 

அப்படி போடுங்க, அக்கா! 🙏

1 hour ago, ரதி said:

சிங்களவனுமில்ல ,தமிழனுமில்ல நீங்கள் ஒரு மனிதநேயமுள்ள மனிதன் என்று சொல்லுங்கோ 

ரதி, கோஷானிடம் கேட்கப்பட்ட  கேள்விக்கு இனவெறியை பரப்பும் இந்த கும்பல்  வெட்கி தலை குனியும் விதமான பதிலை அவர் வழங்கி இருந்தால். இருந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல ..... கதை போகுது.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ரதி, கோஷானிடம் கேட்கப்பட்ட  கேள்விக்கு இனவெறியை பரப்பும் இந்த கும்பல்  வெட்கி தலை குனியும் விதமான பதிலை அவர் வழங்கி இருந்தால். இருந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல ..... கதை போகுது.  

இது தானே வேணாங்கிறது.....

நாம இரண்டு பேரும் இரவிரவா, ராமாயணம் வாசித்து, ஆ...கொட்டி...காலைல துரியோதனன், இராவணிடம் எனனத்த சொன்னான் என்ற  கதையா எல்லா கிடக்குது, உங்க பதிவு...

நேற்று சொன்னதையே மீண்டும், சொல்கிறேன்.... தயவு செய்து கோசனை பப்பாவில் ஏத்தாமல், உங்களிடம் விசயம் இருந்தால் மட்டும் பதியுங்கள், விவாதிப்போம்.

நேற்று, நாம் இருவரும் மிக சிறப்பாக விவாதித்து, நன்றி சொல்லி பிரிந்து, இன்று இப்படி எழுதினால் உங்களை நீஙகளே குறைவாக மதிப்பிடுகிறீர்கள் என்றே தோன்றுகிறது.

ரதி மிக பொறுப்பாக, யார் வென்றது என்று கேட்கவில்லை, என்ன முடிவு என்று தானே கேட்டார். 
கேள்விக்கு, கோசனுக்கு உரிய கவரவத்தினை கொடுத்தே பதலலித்தேன். அதுவே விவாதத்தின் அறம்.

ஆனால் உங்கள் கருத்து..... உங்களுடன் சேர்ந்து களமாடியவர்களை சங்கடப்படுத்தும் மலினமானது.

கோசனிடம் நான் கேட்டது, கூல்டவுண் செய்யும் நகைச்சுவை நோக்கம் கொண்டது.

கோசனுக்கு புரிந்த விடயம்.....புரியாமல்..... என்னத்தை ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சிங்களவனுமில்ல ,தமிழனுமில்ல நீங்கள் ஒரு மனிதநேயமுள்ள மனிதன் என்று சொல்லுங்கோ 

இதைத் தான் கோசானும், நானும், சில இடங்களில் ருல்பனும் சொல்லி தமிழ் தேசியத்திற்கெதிரான ஆட்கள் என்று திட்டு வாங்கிக் கொன்டிருக்கிறோம்! இப்ப ஏன் உங்களுக்கு இட்லியை தோசையாக நாதம் திருப்பிப் போட்டிருக்கிறார் என்று யோசிக்கிறன்! 🤔

சில ஆய்வுகளை  சிங்களவர்கள் தெலுங்கரில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு ஆதாரமாக இணைத்தார் நாதம்! அவற்றை நோண்டிப் பார்த்ததில், சிங்களவர் மட்டுமல்ல, தமிழர் கூட தெலுங்கர் உட்பட்ட ஏனைய இந்தியக் குழுக்களில் இருந்து வந்திருக்கலாம் என்று தான் அவை நிறுவுவதாகத் தெரியவந்தது! இந்த நோண்டலுக்குப் பங்களித்ததால் எல்லாரும் வரிசையாக வந்து திட்டி விட்டு இப்ப கூல் ஆகி விட்டார்கள்!  😎

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

நீஙகளும், துல்பனும் கூல்டவுண் ஆகவில்லை போல தெரியுது....

திருப்பியும் இரண்டு பேரும், ஆளை கிளப்பி கொண்டு வந்து விட்டுப்போட்டு ஓடுவியள்.... பதவியுயர்வுக்கு தயாராகனும் எண்டு போடுவியள்.

அது மனிசன் பாவம் மாஞ்சு கொண்டு நிக்கும்.

அட விடுங்ககப்பா... கோசன் களைத்துப் போட்டார். உண்மையான கரிசனையுடன் தான் சொல்கிறேன். அதை தோசை, இட்டலி எண்டு குழப்பாதீங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

ரதி, கோஷானிடம் கேட்கப்பட்ட  கேள்விக்கு இனவெறியை பரப்பும் இந்த கும்பல்  வெட்கி தலை குனியும் விதமான பதிலை அவர் வழங்கி இருந்தால். இருந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல ..... கதை போகுது.  

நான் தமிழன் என்று சொல்வதில் எங்கே இனவெறி இருக்கின்றது?

இலங்கையில் தனிச்சிங்களம் என்ற அமைப்புகள் அரச உதவியுடன் அல்லது அரசே முன்னின்று செயல்படுத்துகின்றது. ஜனாதிபதியின் முதல் நாள் உரையே பல உள் நோக்கங்களை பறை சாற்றுகின்றது.
தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் வரை நான் வெறி பிடித்த தமிழனாகவே இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

நான் தமிழன் என்று சொல்வதில் எங்கே இனவெறி இருக்கின்றது?

இலங்கையில் தனிச்சிங்களம் என்ற அமைப்புகள் அரச உதவியுடன் அல்லது அரசே முன்னின்று செயல்படுத்துகின்றது. ஜனாதிபதியின் முதல் நாள் உரையே பல உள் நோக்கங்களை பறை சாற்றுகின்றது.
தமிழர்களின் உரிமைகள் கிடைக்கும் வரை நான் வெறி பிடித்த தமிழனாகவே இருப்பேன்.

அவர்கள் சொல்லுற மனித நேயத்தை சிங்களவருக்கும் போதித்தால்,  அவர்கள் தமிழ் தேசியம் சார்பானவர்கள் என்று சொல்லலாம்.

3 hours ago, tulpen said:

ரதி, கோஷானிடம் கேட்கப்பட்ட  கேள்விக்கு இனவெறியை பரப்பும் இந்த கும்பல்  வெட்கி தலை குனியும் விதமான பதிலை அவர் வழங்கி இருந்தால். இருந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல ..... கதை போகுது.  

சந்தடிசாக்கில் விசமத்தனமான கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள். இலங்கையிலோ இல்லை தமிழ்நாட்டிலோ இல்லை தமிழர்கள் வாழும் வேறுநாடுகளிலோ தமிழன் கையில் நாடோ இல்லை அரசியல் அதிகாரமோ  கிடையாது. பிற இனங்களின் இனவெறிக்கு பலியாகும் நிலையிலேயே தமிழனம் இருப்பது வெளிப்படையான உண்மை. தமிழரின் தார்மீக உரிமைக்கான குரலை இனவெறிக்குரலாக திரிவுபடுத்துகின்றது உங்கள் கருத்து. 

இங்கே இந்த திரியில் அவரவர் தரப்பில் இருந்து அவரவர் கருத்துக்களை முன்வைத்தார்கள். அவ்வளவுதான்.  இந்தக் கருத்துக்கள் யதார்த்த களத்திற்கும்  செயற்பாட்டுத் தளத்திற்கும் பொருத்தமானது என்பதையோ இல்லை ஏற்றுக்கொள்ளவேணும் என்பதையோ  அந்தந்த தளத்தில் போராடும் மக்களே  அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனையின் அடிப்படையில் தீர்மானிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

அறிவுடைமையை விசிலடித்து வளர்க்க முடியாது என்பதால் தான் அதில் இருந்து பல காலமாக விலகியிருக்கிறேன்! தமிழரின் அறிவுப் பாரம்பரியத்தை வளர்க்க (பல சமயங்களில் அதைப் போலி அறிவியலாளரிடமிருந்து காக்க)  நான் என்ன துரும்பை அசைக்கிறேன் என்பது நீங்கள் இங்கேயே தேடியறியக் கூடியது தான்! இதற்கு வெளியே நான் செய்யும் பணிகள் உங்களுக்கு அவசியமற்றவை!

அது சரி எப்ப இருந்து ஏனைய யாழ் கள உறுப்பினர்கள் தேசியத்திற்கு என்ன செய்யீனம் என்று பார்க்கும் இன்ஸ்பெக்ரரானீர்கள்? கன பேர் இருக்கீனமோ? 😂

 அப்படி போடுங்க அரிவாளை. உங்கள் அறிவின் திறம் இப்ப விளங்குகின்றது 'விசிலடிப்பர்கள் அறிவு குறைந்தவர்கள்

" இதற்கு வெளியே நான் செய்யும் பணிகள் உங்களுக்கு அவசியமற்றவை"  தமிழ் தேசியத்தை வளர்க்க நீங்கள் வெளியே செய்யும் பணியை சொன்னால் தானே நாங்களும் அதை அறிவு பூர்பமாக பின் பற்றாலாம், கேட்டால் இப்படி சப்பை கட்டு கட்டுகின்றீர்களோ, ஒரு துரும்பையாவது கிள்ளி தருங்கோவன் இந்த சுப்பன் குப்பன்களின் (உங்கள் பார்வையில் அறிவற்றவர்கள்) பதிவுகளை பார்க்க தேவையில்லை. அல்லது யார்தான் அறிவாக செயற்படுகின்றார்கள் அறிவு பூர்பமாக தமிழ் தேசியத்தை வளர்க்க

பல வருடமாக விலகியிருப்பவர் தமிழ் அறிவுப்பாரம்பரியத்தை கதைப்பது எனோ இப்ப? 

 என்ன துரும்பை கிள்ளி போட்டீர்கள் என்ற திரியின் இணைப்பை தந்தால், அந்த துரும்பை நாங்களும் படிக்கலாமல்லவா🤔

 இது கருத்துக்களம் - கேட்பதற்கு யாரும் இன்ஸ்பெக்ரரா இருக்க தேவையில்லை, இந்த அடிப்படை அறிவு கூட உங்களிடமில்லையா?😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீஙகளும், துல்பனும் கூல்டவுண் ஆகவில்லை போல தெரியுது....

திருப்பியும் இரண்டு பேரும், ஆளை கிளப்பி கொண்டு வந்து விட்டுப்போட்டு ஓடுவியள்.... பதவியுயர்வுக்கு தயாராகனும் எண்டு போடுவியள்.

அது மனிசன் பாவம் மாஞ்சு கொண்டு நிக்கும்.

அட விடுங்ககப்பா... கோசன் களைத்துப் போட்டார். உண்மையான கரிசனையுடன் தான் சொல்கிறேன். அதை தோசை, இட்டலி எண்டு குழப்பாதீங்கோ.

கரிசனைக்கு நன்றி நாதம்!

யாரும் யாரையும் கிளப்பி விடுவதில்லை! களைத்துப் போய் போக இதொன்றும் முடிவு காணப்படாத விடயமும் இல்லை! ஆதாரங்கள் எங்கள் இனத்தின்  வரலாற்றிற்கே ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் என்று புலனான பின் அடங்கின என்பது தான் சரி! ஓடியதும் ஒழித்ததும்  யார் என்று அறிவது திரியை ஆறுதலாகப் பின்னோக்கிப் பார்க்கும் யாருக்கும் புரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர்தான் திருக்குறள் எழுதினார் என்பதுக்கு 
யாரிடமாவது ஆதாரம் இருக்கிறதா?? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எங்கிருந்து வந்தாலென்ன, சிங்களவர்கள் எங்கிருந்து வந்தாலென்ன, அவர்கள் எல்லோருமே இந்தியாவின் ஏதோவொரு இடத்திலிருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஒரு பிரச்சினையாக இப்போது மாறியிருப்பது ஏன்? குறைந்தது 2000 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கருதப்படும் இந்த இடம்பெயர்வுபற்றி இப்போது பேசப்படுவது ஏன்? 

கடந்த 100 வருடங்களில் சிங்களவர்களோ தமிழர்களோ வேறொரு இனம் ஒன்றிலிருந்து மாற்றம்பெற்றவர்களா? தமிழருக்கெதிரான இனவழிப்பினைச் சிங்கள செய்ய ஆரம்பித்தபோதும், இன்றும் அவர்கள் சிங்களவர்களாகவும், நாம் ஈழத்தமிழர்களாகவுமே இருக்கிறோம். ஆக, இனக்கொலை இன்றிருக்கும் ஈழத்தமிழர்கள்மேல் இன்றிருக்கும் சிங்களவர்களாலேயே நடத்தப்பட்டது. நடைபெற்ற இனக்கொலைக்கும் சிங்களவர்களினதோ, தமிழர்களினதோ பூர்வீகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

தமிழர்களினதும், சிங்களவர்களினதும் பூர்வீகத்தை ஆராய்கிறோம் என்கிற போர்வையில் இவர்கள் செய்ய நினைப்பது என்ன? தமிழர்களுக்கு சிங்களவர்களுக்கும் தெலுங்கு வழியில் தொடர்பிருப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் ஒன்றில் சிங்களவருக்கெதிராகப் போராடுவதை நிறுத்துங்கள், சிங்கள பெளத்தத்தினுள் விரும்பியே உள்வாங்கப்படுங்கள், தமிழர் எனும் அடையாளத்தை இழந்து தெலுங்குச் சிங்களவர்களாக மாறுங்கள் என்னும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறதா? 

அப்படியில்லை என்றால், இந்த ஆராய்ச்சியின்மூலம் ஆய்வாளர் அடையமுயற்சிப்பது என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

அப்படியில்லை என்றால், இந்த ஆராய்ச்சியின்மூலம் ஆய்வாளர் அடையமுயற்சிப்பது என்ன? 

            எனக்கும் புரியவில்லை.
அது பிழை இது பிழை என்கிறார்கள்.
ஆனாலும் சரியான வழி ஏதாவது இருக்கா?இருந்தால் வழி காட்டுங்கள்.
     யூத இனம் புலம் பெயர்ந்தவர்களால்த் தான் பலம் பெற்றார்கள் என்கிறார்கள்.அது ஏன் எங்களால் முடியாது.
      வீணாகிப் போன திரிகளை பார்க்க வேதனையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரி பிறந்த கதை

இந்த திரியில் நான் சற்று ஓய்வெடுத்த போது நடந்துள்ள விடயங்கள் தொடர்பாக.

1. இந்த திரியின் சாராம்சம் 

பண்டரநாயக்க தெலுங்கன் என்பதை நிறுவும் அதே எடுகோளால் - செல்வநாயகமும் தெலுங்கன் என நிறுவலாம். அதிலும் மேலாக, சிங்களவர்களை விட, இலங்கையின் ஏனைய பாகத்தில் இருக்கும் தமிழரை விட “தெலுங்கர்” தொடர்புகள் அதிகமாககவும், இந்த வரைவிலக்கணதுக்கு பெரிதும் பொருத்தமாக இருப்பவர்கள் யாழ்பாணத்த தமிழரே. இந்த சாராம்சத்தை இங்கே கருத்தாடிய எல்லாரும் ஏற்றனர். அல்லது எதிர்த்துரைக்க முடியாது போயினர். இது யாரின் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல. ஒரு கருத்தின் தர்கபூர்வ நியாயத்தின் உண்மைத்தன்மை.

2. இந்த திரி ஏன் தொடங்கபட்டது? 

பெளத்த சிங்கள பேரினவாதம் ஒரு போலி வரலாற்றுப்புலி. எங்கே எப்படி வரலாற்றை புனைய, புரட்ட முடியுமோ அங்கே எல்லாம் புரட்டி, புனைந்து எம்மை இந்த தீவின் வந்தேறிகளாக, அதுவும் தமக்கு பின் வந்தேறியவர்களா காட்ட மிக முனைப்புடன் செயல்படுகிறது. ஆனால், விஜயனையும் அதன் வழியே தம்மையும் ராஜ வம்சம் என காட்டும் முனைப்பில், லாடா நாட்டு வருகை பின்னர் பாண்டிய பெண்டிர் வருகை என்பதை ஏற்பதன் மூலம் தாம் வந்தேறிகள் என்பதை அவர்கள் ஏற்று கொண்டு விட்டார்கள். அவர்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய same side goal. 

ஆனால் இந்த பின்னடைவை நிரவும் பொருட்டு - எந்த சிறிய துரும்பு கிடைத்தாலும் - அதை பாவித்து எம்மை தம்மிலும் பிந்திய வந்தேறிகளாக காட்ட முனைகிறனர்.

இந்த பிண்ணனியில் நாம் புள்ளி 1இல் விளக்கப்பட்ட தியரியை முன் வைக்கிறோம். தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும்.

இது எமது பக்கத்தில் இருந்து அடிக்கப்படும் ஒரு பெரிய same side goal என்பது என் நிலைப்பாடு.

சில மாதங்கள் முன்பு ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி (note this point) அதை சிங்களத்தில் மொழி பெயர்கிறார்.

சும்மாவே வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்ததை போல, போலி வரலாற்று திரிபு, இன்னொரு இனத்தின் வரலாறை திருடுவதில் பெயர் போன பேரினவாதம் இந்த தியரியை இப்போ எடுத்தாண்டு, திரித்து, தமிழர்கள் தமக்கும் பின்னான தெலுங்கு வந்தேறிகள் என்பதை ஒரு வரலாறாக பதிவு செய்ய அட்சாரம் இட்டு விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதுதான் இந்த தியரியின் ஆபத்து.

இதை வெளியே இருந்து அவதானித்த நான் - துறைசார் தமிழ் வல்லுனர்களிடம் பேசிய போது, அவர்களும் நான் மேலே சுட்டிய ஆபத்தை இட்டு கவலை கொண்டார்கள்.

இந்த தியரின் ஊற்றுகண் சீமான் என்றாலும், இதை மீள, மீள மூன்று மொழிகளிலும் முந்தள்ளுவதில் யாழின் பங்களிப்பும் உண்டு என்பதால் - சீமானிடம் இதை நேரடியாக சொல்ல கூடிய பொறிமுறைகள் இல்லை என்பதாலும் - இந்த ஆபத்து பற்றிய எச்சரிக்கையை யாழில் எழுத தீர்மானித்தேன்.

3.தொனி

இது ஒரு அபாயச் சங்கு. சுனாமி முன் எச்சரிக்கை போல - ஆகவே கருத்தை கவருவது அவசியம் என்பதால் shocking effect தேவை என்பதால் ஒரு முரண்படு தொனியில் எழுதப்பட்டது. அதற்கு கைமேல் பலனும் கிடைத்து திரி பற்றியும் ஏரிந்தது. செய்தி எட்ட வேண்டிய காதுகளை எட்டவும் செய்தது.

ஆனால் - இப்போ திரி வீணாக நீள்வது (யாழ் களமாச்சே) counter productive ஆக அமையவும் கூடும் (அதனால் தான் பல கிளை விவாதங்களை நானே முடித்து வைத்தேன்).

4. காலம்

இந்த திரியின் முதலாம் பதிவுக்கான எண்ணம்  சில மாதங்களுக்கு முன்னே கருக்கொண்டாலும் - எழுத்து ஒரு நடுநிசியில் ஒரு மணத்தியாலத்தில்தான் நிகழ்ந்தது. 

ஏன் இப்போ? தனிப்பட்ட காரணங்கள், கொரோனா, மற்றும் தேர்தல் ஆரவாரங்களுக்கு பின்னான ஆனால் மாகாணசபை, கொரோனா 2ம் அலைக்கு முன்னான இந்த அமாவாசை காலம் தாக்குதலுக்கு ஏற்ற தருணம் என குறிக்கப்பட்டது ( அட சும்மா ஒரு பில்டப்தான் 😂).

இதுதான் இந்த திரி பிறந்த கதை 

திரி அதன் நோக்கையும், இயற்கையான கால எல்லையையும் நேற்றே அடைந்து விட்டது, திரியின் கடைசி பக்கத்தில் வந்து, முதல் பக்கங்களை வாசிக்காமால் “ இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்படி - அடிச்சு யார் பலசாலி என்று காட்டுங்கள்” எனும் தொனியிலான கருத்துக்களை ஒரு சிரிப்போடு கடந்து செல்லவே உத்தேசம். 

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி, சுத்தி சுப்பரிண்ட கொள்ளைக்கில தான்.

இந்த திரி

1. நோக்கம் ஆழமானது, அபத்தமானது. ஆபத்தானது. கருத்துக்காக அல்ல, ஒரு கருத்தாளருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. பிசுபித்தாலும், முன்னரே திட்டமிடப்பட்டது. நான் சொன்னதுபோல, ஒவ்வொரு கருத்தாளர்களையும், தனித்தனியே மடக்கி ஆப் பண்ணும் நோக்கம் கொண்டது.
2. ஒரு வரலாறு சொல்பவர் ஆழ்ந்த அறிவினையும், எழக்கூடிய எதிர்க் கேள்விகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பதில் அளிப்பவராக இருக்க வேண்டும்.
3. கேள்விகள் கேட்பவரை, மட்டம் தட்டி, கேள்வியே முட்டாள்தனமானது என்பது போல நடக்க கூடாது.
4. கேட்கப்படும் எதிர் கேள்விக்கு ஒரு வரி விடை இருக்கும் போது, பக்கம், பக்கமாக அலம்பறை பண்ணுவது கூடாது.
5. மொத்தத்தில் இந்த திரி ஒரு விசயமே இல்லாத, வள, வள , கொள, கொள.... அறுவைகைகள் நிறைந்த திரி.
6. ஆரம்பித்த நோக்கம் நிறைவேறியதா, இல்லையா என்பது அவரவர் மனத்திருப்தி.

முக்கியமான ஒரு குறிப்பு: தமிழ் தேசியத்துக்காக ஆரம்பிக்க பட்ட ஒரு தளத்தினுள் வந்து, பேசுபவர்கள் இனவெறிக் கும்பல் (நேற்று சொல்லப்பட கருத்து) என்று சொல்வதற்கும் ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். 

சிரிப்போடு கடந்து செல்லவே உத்தேசம். 🙏

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.