Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவின் நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அப்பாவின் திதி 02/09/20 என்று ஐயர் கூறியதாக இங்கு நினைவு கூற சொன்னார்.

அப்பாவின் நினைவு தினம் 16-09-20. நேற்று அப்பாவின் திதியை மகளிர் இல்ல பிள்ளைகளுடன் நினைவு கூர்ந்தேன் அப்பாவின் ஆத்ம சந்திக்கு🙏

IMG-9181.jpg

Picture-3536-300x225.jpg

How our Sponsor Program Works

ஒரு பிள்ளையை தத்து எடுத்து படிப்பிக்க மாதம் - AUD 40/-

விசேட தினங்களில் சாப்பாடு கொடுக்க

விசேட உணவு - AUD 150/-

மரக்கறி உணவு  - AUD 120/-

DONATION DETAILS

Donations can be made by Direct Deposit, cheque or PayPal. Contribution forms are available for download via the links below. PayPal donation can be made online using the Donate button.

Postal address:

The Fund For Mahalir Illam (ABN 47 467 887 194)
P.O.Box 8072
Seven Hills West NSW 2147, Australia.

Bank account details:

Commonwealth Bank of Australia, Haymarket Sydney 2000.
BSB: 062 006
Account No: 1103 3596

https://mahalirillam.org/au/

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் உடையார்......!   🌹

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தந்தை என்னோடு நல்ல பழக்கம், சமாதான காலங்களில் அவரின் கடைக்கு பக்கத்து கடையில் தான் இரவு நண்பர்கள் ஒன்று கூடுவது வழக்கம். மிக்சர் சோடா வாங்குவோம். முன்பக்கத்தை கூட்ட தும்புத்தடியும் தருவார்.
அநியாயமாக கொல்லப்பட்டார். (ஊரில இரண்டு கடை முதலாளிகள் கொல்லப்பட்டனர், எதற்காக என்று இன்று வரை புரியவில்லை)
இறையடியில் மகிழ்ந்திருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பாராட்டுக்கள் உடையார்......!   🌹

நன்றி சுவி

41 minutes ago, விவசாயி விக் said:

மிகவும் நல்ல செயல்.  உங்கள் தந்தையை பெருமைப்படுத்த மிகவும் சிறந்த செயல்.  அவருடைய ஆத்மா கடவுளின் மடியில் திளைக்க பிரார்த்திக்கிறேன்.

நன்றி விவசாயி விக்

7 minutes ago, ஏராளன் said:

உங்கள் தந்தை என்னோடு நல்ல பழக்கம், சமாதான காலங்களில் அவரின் கடைக்கு பக்கத்து கடையில் தான் இரவு நண்பர்கள் ஒன்று கூடுவது வழக்கம். மிக்சர் சோடா வாங்குவோம். முன்பக்கத்தை கூட்ட தும்புத்தடியும் தருவார்.
அநியாயமாக கொல்லப்பட்டார். (ஊரில இரண்டு கடை முதலாளிகள் கொல்லப்பட்டனர், எதற்காக என்று இன்று வரை புரியவில்லை)
இறையடியில் மகிழ்ந்திருக்கட்டும்.

நன்றி ஏராளன், எங்களுக்கும் இதுவரை அதே கேள்விதான்??? 

உங்களுக்கு என் அப்பாவைப்பற்றி தெரிந்திருக்கும். ஒருத்தருக்கு கூட தீங்கு நினைத்திருக்கமாட்டர். தானும் தன் வேலையும் மட்டுமே. மற்றவர்களுடன் சிரித்துதான் பழகுவார், மற்றவர்களைப்பற்றி குறை கூட பேச மாட்டார்.

அப்போதைய போர் சூழலில் என்னால் வரமுடியவில்ல ஊருக்கு, கடைசிவரை உறுத்திக்கொண்டேயிருக்கும், ஆனா அப்பாவின் என்னிடம் சொன்ன சகல ஆசைகளையும் நான் நிறைவேற்றிவிட்டேன், நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றேன், அப்பாவிற்கு தெரியும்.

அப்பாவிற்கே மகனாக பிறக்கனும் அடுத்த பிறவியிலும்🙏

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அப்பாவின் ஆன்மா எப்போதும் கடவுளுடன் சங்கமித்து இருக்கும். அப்பாவின் திதியன்று இந்த சிறுமியரின் மனதையும் உடலையும் குளிர வைத்திருக்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உடையார் அத்தனை குழந்தைகளையும் மகிழ்வித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள் உடையார் 
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள்  உங்களுக்கும் குடும்பத்தருக்கும் . உங்கள் பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் . நீங்கள்   மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரி . அழியாத செல்வம் கல்வி   

7 hours ago, உடையார் said:

உங்களிற்குள் இப்படி ஒரு சோகம் என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.இனிவரும் காலங்கள் உங்களிற்கு நல்லதாகவே அமையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

உங்கள் அப்பாவின் ஆன்மா எப்போதும் கடவுளுடன் சங்கமித்து இருக்கும். அப்பாவின் திதியன்று இந்த சிறுமியரின் மனதையும் உடலையும் குளிர வைத்திருக்கிறீர்கள் 

நன்றி நில்மினி

11 hours ago, ஈழப்பிரியன் said:

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

உடையார் அத்தனை குழந்தைகளையும் மகிழ்வித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி ஈழப்பிரியன்

6 hours ago, Maruthankerny said:

நினைவாஞ்சலிகள் உடையார் 
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் 

நன்றி மருதங்கேணி

6 hours ago, நிலாமதி said:

நினைவாஞ்சலிகள்  உங்களுக்கும் குடும்பத்தருக்கும் . உங்கள் பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் . நீங்கள்   மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரி . அழியாத செல்வம் கல்வி   

நன்றி நிலாமதியக்கா

4 hours ago, nige said:

உங்களிற்குள் இப்படி ஒரு சோகம் என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.இனிவரும் காலங்கள் உங்களிற்கு நல்லதாகவே அமையும்

நன்றி நிகே... என்னைபோல் பலர் இருக்கின்றார்கள் எமது விடுதலை போராட்டத்தால், வலியை மட்டுமே தந்துவிட்டு முடிந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, உடையார் said:

... என்னைபோல் பலர் இருக்கின்றார்கள் எமது விடுதலை போராட்டத்தால், வலியை மட்டுமே தந்துவிட்டு முடிந்துவிட்டது

நீங்கள் கூறுவது உண்மைதான் உடையார்.எவ்வளவோ இழப்புகள்,எவ்வளவோ அழிவுகள்,இருந்தும் எந்தவிதமான ஆக்கமும் இல்லை எம் இன விடுதலைப் பாதையில்.இழப்பிருந்தால் ஏற்பும் இருக்குமாம் என்பர்.ஆனால் எம் இன விடுதலை வரலாற்றில் இது முரணாகிறது.எனது உறவில் ஒரு பெண்ணுக்கு நேற்றுத்தான் சத்திரசிகிச்சை நடைபெற்றது.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பதினைந்து வயதிலிருந்த போது இராணுவத்தின் செல் தாக்குதலில் வெடித்துச்சிதறிய 2” நீளமான உலோகப்பகுதி இடது தோள் பாகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.உங்கள் தந்தை போல் ஏன் இறக்கிறோம் என்றே தெரியாமல் இறந்த உன்னத உயிர்கள் பலப்பல.எது எப்படியோ உங்கள் தந்தையின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.உங்களின் முன்மாதிரி பலருக்கும் ஊக்குவிப்பாக அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நந்தி said:

நன்றி ந ந்தி. இன்னும் நம்பிக்கையிருக்கு, எம் மக்களுக்கு விடுதலை கிடைக்குமென்று. எவ்வளவோ இழந்துவிட்டோம், அதற்கு பலன் இல்லாமல் போகாது.

என் நண்பருக்கும் சிறு துண்டுகள் இன்னுமிருக்கு, அகற்றவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரின் அப்பாவிற்கு.... நினைவஞ்சலிகள்.
உங்களின்  செயலைப் பார்த்து, அப்பா  நிச்சயம்  மகிழ்ச்சி  அடைவார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உடையாரின் அப்பாவிற்கு.... நினைவஞ்சலிகள்.
உங்களின்  செயலைப் பார்த்து, அப்பா  நிச்சயம்  மகிழ்ச்சி  அடைவார். 

நன்றி தமிழ்சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள்.
நீங்கள் முன்னெடுக்கும் நல்லெண்ண சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள்.
நீங்கள் முன்னெடுக்கும் நல்லெண்ண சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நன்றி குமாரசாமி 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாதவூரான் said:

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள்

நன்றி வாதவூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள் . அப்பாவின் நினைவுக்கான உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள் உடையார் அண்ணா.
நீங்கள் செய்துவரும் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிற்கு அஞ்சலிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

நினைவஞ்சலிகள் . அப்பாவின் நினைவுக்கான உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.

நன்றி நுணாவிலன்

18 hours ago, தமிழினி said:

உங்கள் அப்பாவிற்கு நினைவஞ்சலிகள் உடையார் அண்ணா.
நீங்கள் செய்துவரும் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!

நன்றி தமிழினி

16 hours ago, நந்தன் said:

அப்பாவிற்கு அஞ்சலிகள் 

நன்றி நந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.