Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

you are as beautiful

as a rose and with

petals in place of

your cheeks.

You are a perfect beauty.

One in billion!

SO PRACTICE KAJALISM 

அடங் கொய்யால.... காஜலிசம், இங்கிலீசிலையும்... வந்துட்டுது.
போற போக்கைப் பார்த்தால்... ஜேர்மன், பிரான்ஸ் மொழிகளிலும் வரும் போல் உள்ளது.

  • 2 weeks later...
  • Replies 266
  • Views 33.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையான காதலால்,

வாழும்போதே சொர்க்கத்தை பார்க்கலாம்....

பொய்யான காதலால்,

வாழும்போதே நரகத்தை பார்க்கலாம்.....

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம்...

உன் மீது வைத்த கண்களை தான்

என்னால் திருப்பவே முடியவில்லை...

ஒருவேளை... உன்னை காதலிக்கும்படி...

நீயே எனக்கு.... செய்வினை வைத்திருப்பாயோ..?

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடியேல்லயா...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, யாயினி said:

இன்னும் முடியேல்லயா...

திண்ணையில பாக்கேல்லையோ…

மறுமை வரை போகுமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வாலின் முதல் முடிவு!

spacer.png

 

திருமணத்துக்கு முன்பு வரை கொத்துக்கொத்தாகப் படங்களில் நடிக்கும் நடிகைகள், திருமணமாகிவிட்டால் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகுதான் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார் என்பது ஆரோக்கியமான விஷயமே.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் புதிதாக ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். பிரபு தேவா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் காஜல். பிரபு தேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர் கல்யாண். இவர் இயக்கும் அடுத்த படத்தில்தான் காஜல் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபு தேவாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதோடு, திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் முதலாவதாக ஒப்பந்தமாகும் படம் இது .

 

படம் குறித்து விசாரித்தால், ரொமான்டிக் காமெடி ஜானராக இருக்கும் என்று சொல்கிறார்கள். விரைவிலேயே அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். முன்னதாக, யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டீகே இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருந்தார்கள். ஆனால், ஹாரர் த்ரில்லராக உருவாக இருந்த அந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் அதன் பிறகு வரவில்லை.

காஜலுக்கு இறுதியாக ஜெயம் ரவியுடன் கோமாளி ரிலீஸானது. தற்பொழுது கைவசம் ‘ஹே சினாமிகா’, ‘ஆச்சார்யா’, ‘மும்பை சகா’, ‘இந்தியன் 2’ மற்றும் ‘பாரிஸ் பாரிஸ்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த வரிசையில் பிரபு தேவாவுடன் நடிக்கவிருக்கும் படமும் இணைகிறது.

பிரபு தேவா நடிப்பில் உருவாகும் 50ஆவது படமான ‘பொன்.மாணிக்கவேல்’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வெளியாகலாம். அதோடு, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘பஹீரா’ மற்றும் ‘ஊமை விழிகள்’ படங்கள் இவருக்கு கைவசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/entertainment/2021/01/21/1/Kajal-Agarwal-first-decision


டிஸ்கி: மருதரின் காஜலிசம் கிறுக்கல்களை வாசிக்க தமிழ் படிக்கப் போகின்றார் என்று நினைத்தேன்.
spacer.png

வாய்ப்பில்லை ராஜா!😂😂🤣🤣

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ இருக்கிறாள்

ஆனாலும் என்னிலிருப்பதைப்

போல உணர்கிறேன்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 
உலக அழகிகள் யாரும் 
உந்தன் 
பாதி அழகு 
கூட இல்லை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் மருதகாசியானார் காஜலால்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

மருதர் மருதகாசியானார் காஜலால்.

மருதகாசியும் கூட மருதரளவு காதலைக் கடைந்து காஜல் என்னும் முத்தைக்  கண்டடையவில்லை.....!  😂

male-chimpanzee-in-business-clothes-pict

எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஆதிவாசி said:

male-chimpanzee-in-business-clothes-pict

எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊

அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பாதி பெண்கள் வைரமுத்துவை அல்லவா காதலித்திருக்கவேண்டும் 
கவிதையில் என்ன இருந்தாலும் எழுதுபவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது எண்ணத்தில் 
தெறிக்கும்போது காஜலிசத்தின் கண்களின் ஊடக காதல் சாம்ராஜ்ஜியத்தின் கதவுகள் திறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப்

பற்றி எழுத

நினைத்தால் போதும்

என்னுள் சிக்கிக்

கொள்வது வார்த்தை

மட்டுமல்ல

நீயும் தான்..

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்.... வைரலாகும் புகைப்படம்

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் கௌதம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்.... வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

காஜல் அகர்வால்

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்? என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/05205306/2321217/Tamil-cinema-Kajal-Aggarwal-photos-viral.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலையைத்தான் சிங்கன் சைட் அடிக்கிறான்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்

ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்
 
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சினைகள் இருப்பதாக காஜல் அவர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டேன். இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். உடனே வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும்'' என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

மாவோஜிசம், ட்ரொக்கியிசம் போல,
காஜலிசம் தந்த தேவதையே!

அப்ஸருகளின் வரிசையில்,
இடம் பிடிக்கும் அழகு உனக்கு...!

எனது  கனவுக்கோட்டையின்...,
இளவரசியாயென வரித்திருந்தேனே...!

இப்போது  ஆஸ்த்மா எனக்கென்று...,
இடியொன்றைப் போடுகின்றாய்?

ஏனம்மா?
உன் இதயம் இரும்பினால்  ஆனதா?

 

யாழ் வாசகன் ஒருவனின் புலம்பல்..!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

spacer.png

 

மாவோஜிசம், ட்ரொக்கியிசம் போல,
காஜலிசம் தந்த தேவதையே!

அப்ஸருகளின் வரிசையில்,
இடம் பிடிக்கும் அழகு உனக்கு...!

எனது  கனவுக்கோட்டையின்...,
இளவரசியாயென வரித்திருந்தேனே...!

இப்போது  ஆஸ்த்மா எனக்கென்று...,
இடியொன்றைப் போடுகின்றாய்?

ஏனம்மா?
உன் இதயம் இரும்பினால்  ஆனதா?

 

யாழ் வாசகன் ஒருவனின் புலம்பல்..!

இரும்பினால் ஆன இதயத்தை 

ஆஸ்துமா தீண்டாது - இது

துரும்பினால் ஆன இதயமாதலால் 

ஆஸ்துமாவும் தோஸ்த்தாகிப் போனதே ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

நீ மகிழ்ந்திரு

அதில் கொஞ்சமாய்

என் காயங்கள்

ஆறிக்கொள்ளும்...!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள் 
மனிதர்களிடம் அழகென்று 
எதை காண்கிறார்களோ 
அதுவே காஜலிசம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறவுகள்

திகில் கதையில் நடித்ததால் காஜல் அகர்வாலை தொடரும் பேய் பயம்

திகில் கதையில் நடித்ததால் காஜல் அகர்வாலை தொடரும் பேய் பயம்

 

பேய் கதையம்சம் உள்ள படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன. நடிகர்-நடிகைகளும் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நடிகை காஜல் அகர்வால் வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப் தொடரில் பேயாக நடித்த பயங்கர அனுபவங்கள் பற்றி பேசி உள்ளார். 

அவர் கூறும்போது, “இந்த தொடருக்கான படப்பிடிப்பை நடத்த மலை உச்சியில் இருந்த ஒரு வீட்டை தேர்வு செய்தனர். அந்த வீடு தனியாக பயங்கரமாக இருந்தது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்குதான் நடந்தது. அந்த இடம் என்னை பயமுறுத்துவதாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் திகில் படத்தில் நடித்த அச்சத்தினால் என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை. 

படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது போன்ற பிரமை என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குலை நடுக்கமாக உள்ளது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் இந்த பயம் வரும்'' என்றார்.
 

 

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/12114745/Kajal-Agarwal-is-haunted-by-ghosts-for-starring-in.vpf

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்தலை உயிர்ப்புடனும்

இரசனையுடனும்

எந்த வயதிலும் குழந்தைதனத்தை மீட்டு

இளமையுடனும் பேரன்புடனும்

வாழ வைப்பதும் காதலே.

காதலிக்கும் போதெல்லாம்

உலகம் பேரழகாகி விடுகிறது.

நாம்கூட நமக்கே பேரழகாகிவிடுகிறோம்.

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோத்துக்கடையில் கஜால்.....:cool:

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்கிறார்கள்?... ஆத்திரம் வருகிறது - காஜல் கோபம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து கைவசம் படங்கள் இருக்கிறது. 
 
திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது. வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள். 
 
திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் வருகிறது.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சோத்துக்கடையில் கஜால்.....:cool:

Bild

சோத்துக் கடைக்காரர்  பொறுமை சாலி போல கிடக்குது...!

எல்லாக் கலண்டர்களும் சரியான திகதியைக் காட்டுது!😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.