Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Featured Replies

அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்?

எம்.எஸ்.எம். ஐயூப்
இன்று அமெரிக்க ஜனாதிபதி; தேர்தல் நடைபெறுகிறது. அதாவது இன்று அமெரிக்க மக்கள் தமது நாட்டுத் தலைவரை மட்டுமல்லாது உலகிலேயே பலம் வாய்ந்த அரசியல் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திகதியும் சட்டத்தாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் முதலாவது திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

அதாவது அது நவம்பர் 2 ஆம் திகதிக்கும் நவம்பர் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தான் அது நடைபெறும். அதில் தெரிவு செய்யபப்டும் நபர் அடுத்து வரும் ஜனவரி மாதத்தில் 20 ஆம் திகதி தான் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

இன்று அமெரிக்க மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்ய வாக்களித்தாலும் இலங்கையில் போல் அந்த வாக்குகளின் முடீவின் படி உடனே புதிய ஜனாதிபதி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்வாளர்களே (நடநஉவழசள) இன்றைய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவர். சகல மாநிலங்களினதும் அந்தத் தேர்வாளர்களின் மொத்த எண்ணிக்கை நுடநஉவழசயட ஊழடடநபந என்றழைக்கப்படுகிறது. இதற்கு 'தேர்தல் சபை' என்று ஒரு சராசரி அர்த்தத்தை வழங்கலாம்.

இந்தத் தேர்வாளர்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். அந்தத் தெரிவு டிசம்பர் மாதம் இரண்டாவது புதன்கிழமைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை நடைபெறும். ஆனால் இன்றைய தேர்தல் பெறுபேறுகளின் படி தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பெரும்பாலும் ஊகிக்கலாம்.

இலங்கையில் மாவட்ட வாரியாக நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதைப் போல் அமெரிக்காவில் 50 மாநிலங்களிலிருந்தும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அதேவேளை ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இருவர் வீதம் செனட் சபைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திருந்தும் தெரிவு செய்யப்படும் காங்கிரஸ் மற்றம் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையிலேயே அந்தந்த மாநிலத்திலிருந்து ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்வாளர்கள் நியமிக்கப்படுவர்.

உதாரணமாக கலிபோனிய மாநிலத்தின் கொங்கிரஸ் மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 55 ஆகும். எனவே ஜனாதிபதியை தெரிவு செய்யும் அம் மாநிலத்துக்கான தேர்வாளர்களின் எண்ணிக்கையும் 55 ஆகும். வயோமிங், அலஸ்கா மற்றும் நோத் டகோட்டா ஆகிய மாநிலங்களில் தலா மூன்று தேர்வாளர்களே நியமிக்கப்படுவர். காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இல்லாத கொலம்பியா மாவட்டத்தின் வொஷிங்டன் நகருக்காகவும் 3 தேர்வாளர்கள் நிமிக்கப்படுவர்.

மாநிலங்களின் சனத்தொகை இந்த எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். ஆயினும் ஏனைய காரணிகளின் தாக்கத்தினால் சில மாநிலங்களுக்கு அநீதியும் இழைக்கபப்ட்டு இருக்கிறது. உதாரணமாக, சிறிய வயோமிங் மாநிலத்தில் 193,000 பேருக்கு ஒரு தேர்வாளர் நியமிக்கப்படும் போது மிகப் பெரிய மாநிலமான கலிபோனியாவில் 718,000 பேருக்கு ஒரு தேர்வாளர் நியமிக்கப்படுகிறார்.

சகல மாநிலங்களுக்குமான தேர்வாளர்களின் எண்ணிக்கை 538 ஆகும். ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்காக 270 தேர்வாளர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு டொனலட் ட்ரம்ப் 304 வாக்குகளைப் பெற்றார்.

அமெரிக்காவிலும் ஜனாதிபதித் தேர்தலின் போது பல வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் இரண்டு வேட்பாளர்களிடையே தான் உண்மையான போட்டி நடைபெறும். இன்று நடைபெறும் தேர்தலிலும் உண்மையான போட்டி தற்போதைய ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனல்ட் டரம்புக்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையிலேயே நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் ஒரு வேட்பாளரின்; பெயரில் ஆகக் கூடுதலான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கான சகல தேர்வாளர்களையும் நியமிக்கும் வாய்ப்பு அவரது கட்சியான குடியரசு கட்சிக்குக் கிடைக்கிறது. இந்த முறைமை றinநெச-வயமநள-யடட ளலளவநஅ (வெற்றி பெறுபவர் அனைத்தையும் பெறும் முறைமை) என்றழைக்கபப்டுகிறது.
அதன் படி கலிபோனியாவில் வெற்றி பெறும் கட்சிக்கு அந் மாநிலத்துக்கான 55 தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமை கிடைக்கிறது. டெக்ஸாஸில் வெற்றி பெறும் கட்சிக்கு அம் மாநிலத்துக்கான 38 தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமை கிடைக்கிறது.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் இலட்சக் கணக்கான வாக்காளர்கள் வாழும் பெரிய மாநிலமொன்றான புலொரிடாவில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 537 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அம் மாநிலத்தின் சகல தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமையை பெற்றுக் கொண்டார். நாடளாவிய ரீதியில் புஷ்ஷை விட சுமார் 5 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனநாயக கடசியின் வேட்பாளர் அல் கோர் அந்தத் தேர்தலில் தோல்வியடைய அதுவே காரணமாகியது.

ஆனால் மெய்ன் மற்றும் நெப்ரஸ்கா ஆகிய இரு மாநிலங்களில் இந்த றinநெச-வயமநள-யடட ளலளவநஅ முறைமை பின்பற்றப்படுவதில்லை. அந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரப் படி அவர்களது கட்சிக்ளுக்கு தேர்வாளர்களை நிமிக்கும் உரிமை வழங்கப்படும்.

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தமது தேசிய பட்டியல் வேட்பாளர்களை குறிப்பிட்டு ஒரு பட்டியலில் வைத்திருப்பது போல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தத்தமது மாநில மாநாட்டின் போது அல்லது தமது மைத்திய குழு முலமாக அந்தந்த மாநிலத்துக்கான தமது தேர்வாளர் பட்டியல்களை தயாரித்து வைத்துக் கொள்ளும். இன்றைய தேர்தலின் போது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் றinநெச-வயமநள-யடட முறைமைப் படி அக் கட்சியின் அம் மாநிலத்துக்கான தேர்வாளர் பட்டியலில் உள்ளவர்கள் தான் அம் மாநிலத்தின் சார்பில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்காளர்களாவர். இதே போல் மற்றொரு மாநிலத்தில் ட்ரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் அம் மாநிலத்துக்கான சகல தேர்வாளர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு சகல மாவட்டங்களிலும் தேர்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நுடநஉவழசயட ஊழடடநபந (தேர்தல் சபை) பூர்த்தியாகிவிடுகிறது. அந்தச் சபைத் தான் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வாக்களிக்கும். அதற்காக தேர்வாளர்கள் இன்றிலிருந்து ஆறு வாரங்களில் தத்தமது மாநிலத்தில் கூடி வாக்களிப்பர். அத்தோடு மற்றொரு வாக்குச் சீட்டின் மூலம் உப ஜனாதிபதியைத் தெரிவு செய்யவும் வாக்களிப்பர். எனவே எப்போதும் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த ஒருவரே உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இன்றைய தேர்தலில் கட்சி வாரியாக தெரிவு செய்யப்படும் தேர்வாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் ட்ரம்பா அல்லது பைடனா ஜனாதிபதியாகப் போகிறார் என்பது தெளிவாகும்.

ஆனால் சில வேளைகளில் தேர்வாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடும். இவ்வாறான தேர்வாளர்கள் 'கயiவாடநளள நடநஉவழசள' (நம்பிக்கையில்லாத தேர்வாளர்கள்) என்றழைக்கபப்டுகிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது குடியரசு கட்சியின் இரண்டு தேர்வாளர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கு வாக்களித்தனர். அதேவேளை ஜனநாயகக் கட்சியின் ஐந்து தேர்வாளர்கள் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு வாக்களித்தனர்.

இலங்கையில் தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்தபோது ஐக்கிய தேசிய கட்சி நாடலாவிய ரீதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றும் ஆட்சிக்கு வர முடியாமல் போன சந்தர்ப்பங்கள் இருந்தன. அதேபோல் அமெரிக்காவில் நாடளாவிய ரீதியில் ஒரு வேட்பாளர் ஏனைய வேட்பாளர்களை விட கூடுதலாக பொது மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் அவர் நுடநஉவழசயட ஊழடடநபந வாக்களிப்பின் போது தோல்வியடையலாம். வாக்காளர்-தேர்வாளர் வீதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதும் 'கயiவாடநளள நடநஉவழசள' என்ற காரணியுமே அதற்குக் காரணமாகும்.

அமெரிக்க வரலாற்றில் ஒருவர் இவ்வாறு மக்கள் வாக்களிப்பின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றும் ஜனாதிபதி பதவியை இழந்த ஐந்து சந்தர்ப்பங்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் ட்ரம்பை விட நாடளாவிய ரீதியில் சுமார் 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார்.
வயோதிபர்களும் வெள்ளையர்களும் கல்லூரிக் கல்வி அறிவு இல்லாதவர்களும் அதிகமாக உள்ள மாநிலங்களில் பெரும்பாலும் குடியரசு கட்சிக்கு சாதகமான நிலைமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம் முறை தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் மூலம் தெரிய வருகிறது. அவர் ஜனாதிபதியானால்; தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, ஷியாமலா கோபாலன் என்ற தமிழ் தாய்க்கும் டொனல்ட் ஜே. ஹரிஸ் என்ற பிரிட்டிஷ் ஜமய்கன் தந்தைக்கும் மகளாக பிரந்த, இன்னமும் தமது தமிழக உறவினர்களை மறக்காத, தாயின் சகோதரியை இன்னமும் தமிழில் சித்தி என்றே அழைக்கின்ற கமலா தேவி ஹரிஸ் அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமெரிக்க-ஜனாதிபதி-எவ்வாறு-தெரிவு-செய்யப்படுகிறார்/91-258035

  • Replies 203
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஆனால் இது நடந்திருக்கிறது: வெள்ளைக் காரன் நாட்டில் நம் மண்ணிறத் தோலுக்கு சம அந்தஸ்து வேணுமென்று முழங்கும் ஆட்கள், ஒரே நாட்டில் பக்கத்து மாநிலத்தவன் மீது இனவாதம் சரியான வழியே என்று வாதிட்டு அதற்கு "அங்க வேற நிலை, இங்க வேற நிலை" எண்டு பின்பக்கமாக வளைந்து சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள்!

காவித்திரிவதென்றே முடிவெடுத்துவிட்டீர்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு பெரும் கடைகள் எல்லாம் கலவரம் வந்தாலும் என்று கடை முன்பகுதிகளை பலகைகள் வைத்து ஆணியடித்து பூட்டியுள்ளார்கள்.

6 hours ago, nunavilan said:

3 மில்லியனுக்கு  மேல் தபால் வாக்குகள் எண்ணாமல் உள்ளன. அது அநேகமாக ஜோவின் வாக்குகள் என்பதால் அதனை என்ண விடாமல் சட்டம் மூலம் தடைகளை கொண்டு வர முயல்கிறார்.

இதை எல்லாம் பார்த்தால்  அமெரிக்கா

6 hours ago, குமாரசாமி said:

இந்தியா இலங்கையை விட சுத்துமாத்துக்கள் எக்கச்சக்கம் போல....🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

பொன்ராசாவை வெள்ளைமாளிகையை விட்டு கலைப்பது சவாலாகவே இருக்கும்.

 

9 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கா எண்டாலும் இந்தியா இலங்கையை விட சுத்துமாத்துக்கள் எக்கச்சக்கம் போல....🤣

 

8 hours ago, வாலி said:

நிவாடாவில் வாக்குப் பெட்டிகளை மாத்துறம் திரும்பவும் வெல்றம்✌️😂

அமெரிக்க தேர்தலில்.... இவ்வளவு, இழுபறி வரும் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை.
என்னவோ... யாழ். மத்திய கல்லூரி சம்பவங்கள்தான்...  கண் முன்னாலை  வந்து போகுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Bill Clinton.jpg  George-W-Bush.jpeg  Official portrait of Barack Obama.jpg  Donald Trump official portrait (cropped 2).jpg

கடந்த 30 வருடமாக... அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த,
கிளின்ரன், புஷ், ஒபாமா... எல்லோரும் இரண்டு முறை  ஜனாதிபதிகளாக இருந்ததை
பார்த்த... ட்ரம்பிற்கும், இன்னுமொருக்கால்... ஜனாதிபதியாக  இருக்க ஆசை வந்துட்டுது.

4 minutes ago, தமிழ் சிறி said:

Bill Clinton.jpg  George-W-Bush.jpeg  Official portrait of Barack Obama.jpg  Donald Trump official portrait (cropped 2).jpg

கடந்த 30 வருடமாக... அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த,
கிளின்ரன், புஷ், ஒபாமா... எல்லோரும் இரண்டு முறை  ஜனாதிபதிகளாக இருந்ததை
பார்த்த... ட்ரம்பிற்கும், இன்னுமொருக்கால்... ஜனாதிபதியாக  இருக்க ஆசை வந்துட்டுது.

தமிழ்சிறி  உங்களுக்கு ஒரு முறை முடிந்ததும்  இரண்டாம் தரத்திற்கு ஆசை வருவதில்லையா? 😂 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

தமிழ்சிறி  உங்களுக்கு ஒரு முறை முடிந்ததும்  இரண்டாம் தரத்திற்கு ஆசை வருவதில்லையா? 😂 

ருல்பன்... முந்தி இருந்தது, இப்ப இல்லை.  :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

Bill Clinton.jpg  George-W-Bush.jpeg  Official portrait of Barack Obama.jpg  Donald Trump official portrait (cropped 2).jpg

கடந்த 30 வருடமாக... அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த,
கிளின்ரன், புஷ், ஒபாமா... எல்லோரும் இரண்டு முறை  ஜனாதிபதிகளாக இருந்ததை
பார்த்த... ட்ரம்பிற்கும், இன்னுமொருக்கால்... ஜனாதிபதியாக  இருக்க ஆசை வந்துட்டுது.

நீங்கள் ரொனால்ட் றீகனனை விட்டு விட்டிர்கள், 40 வருட சாதனை முறியப்போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

100 days out: Biden faces crucial stretch of 2020 campaign - ABC News

பதவி மாற்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய ஜோ பிடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், தனது பதவி மாற்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் பதவி மாற்றத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘பெருந்தொற்றிலிருந்து பொருளாதார மந்தநிலை மற்றும் இன அநீதி என இந்த நாடு பல தீவிரமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பதவிமாற்ற தயாரிப்புக் குழு பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்ற முதல் நாளில் இருந்து தீவிரமாக செயற்பட்டு பணிகளை விரைவில் மேற்கொள்ளும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா புதன்கிழமையன்று, அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தனது முதல் நாள் பணியில், அமெரிக்கா பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும் என பிடன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இழுபறிநிலை காணப்பட்ட சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
வேட்பாளர் ஒருவிரின் வெற்றிக்கு 270 இடங்கள் தேவையென்ற நிலையில் தற்போது ஜோ பிடன் 264 இடங்களைக் கைப்பற்றி டொனால்ட் ட்ரம்பை விட மேலும் முன்னிலை பெற்றுள்ளார். ட்ரம்ப் 214 இடங்களை கைப்பற்றியுள்ளார்.

http://athavannews.com/பதவி-மாற்ற-வலைத்தளத்தை-அ/

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

காவித்திரிவதென்றே முடிவெடுத்துவிட்டீர்கள் போல.

யாழ்களத்தில் இப்படிப்பட்ட காவிதிரிபவர்களுக்கு ஏன் ஏச்சரிக்கை புள்ளி இல்லை?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, zuma said:

நீங்கள் ரொனால்ட் றீகனனை விட்டு விட்டிர்கள், 40 வருட சாதனை முறியப்போகுது.

Official Portrait of President Reagan 1981.jpg  George H. W. Bush presidential portrait (cropped).jpg 

ரொனால்ட் றீகன்... 1981´லிருந்து 1989 வரை இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தாலும், 
அவருக்குப் பின் வந்த... George H. W. Bush (George W. Bush´ன்  தகப்பன்) 
1989 ´ம் ஆண்டு ஒரேயொரு முறையே...
ஜனாதிபதியாக இருந்ததால்... அந்தத் தொடர், அறுந்து விட்டதால்..
40 ஆண்டுகாலம் என்று சொல்வது... சரியாக இருக்காது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

George H. W. Bush presidential portrait (cropped).jpg 

ரொனால்ட் றீகன்... 1981´லிருந்து 1989 வரை இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தாலும், 
அவருக்குப் பின் வந்த... George H. W. Bush (தகப்பன்) 1989 ´ம் ஆண்டு ஒரேயொரு முறையே...
ஜனாதிபதியாக இருந்ததால்... அந்தத் தொடர், அறுந்து விட்டதால்..
40 ஆண்டுகாலம் என்று சொல்வது... சரியாக இருக்காது. :)

தல, நீங்கள் சரி 👍

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு காட்சி! அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் ஈரான் உச்ச தலைவர் கிண்டல்

என்ன ஒரு காட்சி! அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் ஈரான் உச்ச தலைவர் கிண்டல்

தெஹ்ரான்

டிரம்பை இரண்டாவது முறையாக பதவியில் அமர்த்தலாமா அல்லது அவருக்கு பதிலாக பிடனை பதவியில் அமர்த்தலாமா என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வாக்களித்தனர். சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். பிடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.


ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.

இதனிடையே  வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த் நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வியாழக்கிழமை அமெரிக்காவில் தேர்தல் நாளின் பின்னர் ஏற்பட்ட மோசமான சம்பவங்களை கேலி செய்து உள்ளார். 

அவர் தனது டுவிட்டரில்  இந்த வாக்கெடுப்பு அமெரிக்க ஜனநாயகத்தின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 

ஆக என்ன ஒரு காட்சி!" "அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் மோசடியான தேர்தல் என்று ஒருவர் கூறுகிறார். யார் அதைச் சொல்கிறார்கள்? தற்போது பதவியில் இருக்கும் அதிபர் டிரம்ப் தேர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாக அவரது போட்டியாளர் கூறுகிறார்! #அமெரிக்க தேர்தல் & அமெரிக்க  ஜனநாயகம் இப்படித்தான் என அவர் கூறி உள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/05171549/Irans-Ali-Khamenei-mocks-US-democracy.vpf

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

அமெரிக்க தேர்தலில்.... இவ்வளவு, இழுபறி வரும் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை.
என்னவோ... யாழ். மத்திய கல்லூரி சம்பவங்கள்தான்...  கண் முன்னாலை  வந்து போகுது. 🤣

இன்னமும் ஏதாவது சுத்துமாத்து செய்யலாமா என்று முயற்சி நடக்குது.

சட்டத்தை வைத்து செய்யலாமா என்றும் முயற்சி நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

ட்ரம்பின் முன்னிலைக்கு காரணம்.... இனவாத நிலைப்பாடு தான்...

ஒரு முன்னனி நாடான அமெரிக்காவின் இந்த இனவாத அரசியலுக்கு கண்டனம் தெரிவிக்க வர மாட்டார்கள்.... ஆனால், மூன்றாம் நாடொன்றில் இனவாத அரசியல் குறித்து பக்கம், பக்கமாக எழுதுவார்கள்.  🤦‍♂️

 

3 hours ago, உடையார் said:

யாழ்களத்தில் இப்படிப்பட்ட காவிதிரிபவர்களுக்கு ஏன் ஏச்சரிக்கை புள்ளி இல்லை?

மேலே வந்த கருத்துக்கு இதே கேள்வி வரவில்லையோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

பொன்ராசாவை வெள்ளைமாளிகையை விட்டு கலைப்பது சவாலாகவே இருக்கும்.

இது வெறும் பகிடி இல்லை 
வட கரோலினா  ஜோர்ஜ்யா  பென்சில்வேனியா 
மூன்றும் ட்ரம் வென்று ....
அரிசோனா தாபல் வாக்கு செல்லாது என்று ஸ்டேட் கோர்ட் அல்லது சுப்ரீம் கோட் தீர்ப்பு வந்தால் 
பைடன் வென்றாலும் ட்ரம்தான் ஜனாதிபதி.  

இதுதான் பிளோரிட்டாவில் அல்கோருக்கு நடந்தது 
அப்போது ஜார்ஜ் புஸ்தான் ஜனாதிபதி ஆகினார் 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Maruthankerny said:

இது வெறும் பகிடி இல்லை 
வட கரோலினா  ஜோர்ஜ்யா  பென்சில்வேனியா 
மூன்றும் ட்ரம் வென்று ....
அரிசோனா தாபல் வாக்கு செல்லாது என்று ஸ்டேட் கோர்ட் அல்லது சுப்ரீம் கோட் தீர்ப்பு வந்தால் 
பைடன் வென்றாலும் ட்ரம்தான் ஜனாதிபதி.  

இதுதான் பிளோரிட்டாவில் அல்கோருக்கு நடந்தது 
அப்போது ஜார்ஜ் புஸ்தான் ஜனாதிபதி ஆகினார் 

அரிசோனா குடியரசுகட்சி கவர்னர் என்பதால் இலகுவில் செய்யலாம்.
ஜேர்ஜியா ரம்புக்கு போனால் இதை செய்ய முனைவார்கள்.
அதனாலேயே அரிசோனைவை அமத்தி வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி யார் என தெரிவு செய்வது அமெரிக்க குடிமக்களின் தீர்ப்பு. இலங்கையின் பெரும்பான்மை மக்கள்  ராஜபக்சேக்களை தெரிவு செய்வது போல் அமெரிக்காவில் ட்ரம்ப் தெரிவு ஆகினால் நன்மையோ தீமையோ வெளியார் என்ன செய்வது?

எமக்கு ட்ரம்பை பிடிக்க இல்லை என்பதற்காக ஜனநாயகத்துக்கு விரோதமாக அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்க தேவை இல்லையே. இந்த விடயத்தில் உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பை ஏற்கவேவேண்டும். நம்பிக்கைத்தன்மை சீர்குலைந்துவிட்டால் அது எதிர்காலத்திற்கு பிழையான வழிகாட்டுதல் ஆகிவிடும். 

கடந்த தடவையும் அமெரிக்க குடிமக்கள்தானே அத்தனை மில்லியன் வாக்குளை டிரம்புக்கு அளித்தார்கள். அங்குள்ள மக்களின் மனநிலைக்கு ஏற்றவகையில் ஒருவர் தெரிவாகின்றார். இதற்கான பயன்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

123855342_4935399106477724_1015475519852286683_o.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=8tkKfRvNWKQAX9RjAm-&_nc_ht=scontent.fdoh1-2.fna&oh=132b8916badb8025067ec963708ab08c&oe=5FC7E4C2

 

என்னுடைய கவலைஎல்ல்லாம் இவர் அமெரிக்கவின் முதல் பெண்மணியாக வராமல் போய்விட்டாரே என்று
 
Keyne West என்னப்பா நடந்தது

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலைஎல்ல்லாம் இவர் அமெரிக்கவின் முதல் பெண்மணியாக வராமல் போய்விட்டாரே என்று
 
Keyne West என்னப்பா நடந்தது

கான்யே வெஸ்ற் ஒரு ட்ரம்ப் விசுவாசி. ஆபிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள் பைடனுக்கு போகாமல் பிரித்து விட்டால் தாம் வெல்லலாம் என்ற ட்ரம்ப் குழுவின் திட்டத்தில் இவர் இறக்கப் பட்டார். கொஞ்சம் நிதியுதவி கூட ட்ரம்பின் கட்சியில் இருந்து வந்தது. ஆனால் இவர் இறங்கிய போது பல மாநிலங்களில் வாக்குச் சீட்டு தயாராகி விட்டதால் சில மாநிலங்களில் மட்டும் தான் போட்டியிட்டார். 

 

காெராேனாவால் மரணமடைந்த வேட்பாளர் அமெரிக்க தேர்தலில் வெற்றி!

201104151852-david-andahl-super-169-960x540.jpg?189db0&189db0

 

கடந்த மாதம் 5ம் திகதி கொரோனா தொற்றினால் மணரமடைந்த டேவிட் அன்தல் (55-வயது) என்பவர் நடைபெற்று முடிந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வடக்கு டொகொடாவில் வெற்றி பெற்றுள்ளார்.

35.53% வாக்குகளை இவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/மரணமடைந்த-வேட்பாளர்-அமெர/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் ஜோ பிடன் வெற்றி: பாகிஸ்தான் கொண்டாட்டம்... இந்தியா கவலை...!! ஏன்?

அமெரிக்க அதிபர் தேர்தல் ஜோ பிடன் வெற்றி: பாகிஸ்தான் கொண்டாட்டம்... இந்தியா கவலை...!! ஏன்?

 

அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவர உலகமே காத்திருக்கிறது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் அதிபராக வெண்டும் என ஆவலாகக் காத்திருக்கும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. 

கடந்த நான்கு ஆண்டுகளில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் நேரடியான அணுகுமுறையால் பாகிஸ்தானுக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.


மறுபுறம், பிடன் ஒருமுன்னாள் தூதர் மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டவர். பிடனின் வெற்றியை பாக்ஸ்தான் விரும்புவதற்கான காரணம் இதுதான். இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய இராஜதந்திர சகாப்தத்தை பிடன் திருப்பித் தருவார் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் ஆதரவு எண்ணம் கொண்டவர். அவர் பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். இப்படி பல விஷயங்கள் காரணமாகத்தான் பாகிஸ்தான் அவருக்காக பிரார்த்திக்கின்றது.

2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கவுரவ விருதான 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' –ஐ வழங்கியது. ஜோ பிடன் மற்றும் செனட்டர் ரிச்சர்ட் லுகர் ஆகியோர், பாகிஸ்தானுக்கு, ராணுவ உதவியைத் தவிர 1.5 பில்லியன் டாலர் நிதி உதவியை அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தனர். லுகருக்கும் 'ஹிலால்-இ-பாகிஸ்தான்' கவுரவம் வழங்கப்பட்டது.

அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த ஆசிப் அலி சர்தாரி இருவருக்கும் "தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்ததற்காக" நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது ஜோ பிடன் அதிபர் ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய  உறவுகள் மீண்டும் மலரும் என்று பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

டிரம்ப்பின் நேரடியான முன்னோக்கு அணுகுமுறை மற்றும் வழக்கமான அணுகுமுறையை மேற்கொள்ளாத நிலைப்பாடு ஆகியவற்றால் பாகிஸ்தானுக்கு அவரை பிடிக்காமல் போனது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல பொது மன்றங்களில் பாகிஸ்தானை பலமுறை கண்டித்துள்ளார்.

டிரம்பின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.

மற்றொரு பாகிஸ்தான் ஆய்வாளர் கூறும் போது 

டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் பாகிஸ்தான் விஷயத்தில் இன்னும் உறுதியுடன் பல நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் தொடர்பாக டிரம்ப் ஏற்கனவே பல சட்டங்களை இயற்றியுள்ளார். எனவே, டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே பாகிஸ்தானின் ஒரே விருப்பமாக உள்ளது.

மேலும், ஜோ பிடன் தனி காஷ்மீர் கேட்கும் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். அவர், காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் அவல நிலையை வங்காள தேச ரோஹிங்கியாக்கள் மற்றும் சீனாவில் உள்ள யுகர் முஸ்லிம்களுடன் ஒப்பிட்டார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய்த சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2020 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காஷ்மீரிகளின் உரிமைகளை மீட்டெடுக்குமாறு பிடன் இந்தியாவை கேட்டுக் கொண்டார்.

"காஷ்மீரில், காஷ்மீர் மக்கள் அனைவரின் உரிமைகளையும் மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்க வேண்டும். அமைதியான போராட்டங்களைத் தடுப்பது அல்லது இணையத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்” என்று அவர் வெளிட்ட அறிக்கையில் கூறி இருந்தார்.

பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை தீவிரமாக கவனித்து வரும் வல்லுநர்கள், ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் பதவியேற்றால் அது பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஜோ பிடன் தனது வெளியுறவுக் கொள்கையில் பாகிஸ்தானுடனான உறவுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், பிடனின் ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் இப்போதிருப்பதை விட சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என கூறி உள்ளார்.

இதனால் இந்தியா அமெரிக்க இடையிலான உறவுகளில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/06140438/US-elections-2020-As-Joe-Biden-inches-towards-victory.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/11/2020 at 12:52, உடையார் said:

என்ன ஒரு காட்சி! அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் ஈரான் உச்ச தலைவர் கிண்டல்

ஈரான் மட்டுமில்லை உலகமே அமெரிக்காவை பார்த்து சிரிக்குது....😁

  • கருத்துக்கள உறவுகள்
Quote

என்ன ஒரு காட்சி! அமெரிக்க ஜனநாயகம் இப்படித்தான் ஈரான் உச்ச தலைவர் கிண்டல்

ஆமாம், ஈரானில் தேர்தல் முடிய முன்னரே முடிவுகள் கிடைத்துவிடும். மக்களால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படடாலும் உச்ச(சா) கட்டட  தலைவர்  தான் இறுதி முடிவு எடுப்பார், அப்படிப் பட்ட சனநாயக 
நாடு. 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தரம் பற்றிய உலகநாடுகளின் பார்வை குறைந்து விட்டது என்பது உண்மை! ஆனால், இந்த சத்தம் சந்தடிகளுக்கிடையே கூட ஒரு செயல்படும் ஜனநாயக நாட்டின் இயல்புகள் தான் வெளித்தெரிகின்றன. 

நேற்று "தேர்தலில் மோசடி" என்று ட்ரம்ப் வெள்ளைமாளிகையிலிருந்து பேசியதை உடனே சகல பிரதான ஊடகங்களும் offline ஆக்கி விட்டார்கள்! கடந்த மூன்று நாட்களில் நான்கிற்கு மேற்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள், ட்ரம்ப் குழுவின் வழக்கு முயற்சியை தடுத்து எல்லா வாக்குகளையும் எண்ண வேண்டும் என்ற நிலையை எடுத்திருக்கின்றன! 

அரசியல் யாப்பின் படி, தேர்தல் என்பது மாநிலங்களின் பொறுப்பு. தேர்தல் முடிவுகளை மாநில உள்துறைச் செயலாளர் (Secretary of State)வெளியிட்ட பிறகு, ஏதாவது அரசியலமைப்பு மீறல், சமஷ்டிச் சட்ட மீறல் இருந்தால் மட்டும் தான் உச்ச நீதிமன்றம் போக முடியும்! இது தான் என் சட்ட விளக்கம்!

(கோசான், சட்ட அபிப்பிராயம் சொல்ல எங்கிருந்தாலும் வரவும்!😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.