Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் ;மஹிந்த தேஷப்பிரிய

  • Mathi
  • November 18, 202012:57 am

ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது எந்த வகையிலும் நியாயமானதல்ல எனவும்,இதனை தகர்த்து எறிய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் டொக்டர் அப்துல் காலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை.

எந்தவொரு தமிழ் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம் ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவிணைவாத சொல் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாக கருத முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எமது தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு காணப்படுகின்றதல்லவா? அதில் ஈழம் என்ற சொல் உள்ளது அல்லவா? ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது எனவும், அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறு எனவும், நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லை பிரிவிணையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
https://www.meenagam.com/தமிழீழ-விடுதலைப்-புலிகளி/

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்பது பிரிவினைவாதமல்ல – மாயைகள் தகர்க்கப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

desapriya-696x348.png
 40 Views

ஈழம் என்ற சொல் தமிழ்ப் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனை உடைத் தெறியவேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் எழுப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் இல்லை. ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதே போன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு.

ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவினைவாதத்துக்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் நியாயமானதல்ல. இதனை தகர்த்து எறியவேண்டும்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன். தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை. எந்தவொரு தமிழ்ப் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம். ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவினைவாத சொல் அல்ல. ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை. அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாகக்கருத முடியும்?

தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில், ஈழம் என்ற சொல் உள்ளது. ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது. இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை. அவர் தமிழீழத்திற்காக போராடினார். ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது. அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறாகும். நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லைப் பிரிவினையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தவே செய்வதாகும்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது. இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டும்” என்றார்.

https://www.ilakku.org/ஈழம்-என்பது-பிரிவினைவாதம/

மகிந்த தேசப்பிரியவின்  கருத்து சரியானதே. ஈழம் என்ற சொல் வரலாற்று ரீதியில்  முழு இலங்கை தீவையும் குறிப்பதாகவே இருந்தது.  

1976 ல் தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் உருவான பின்னர்  சிங்கள மக்களிடம் ஈழம் என்றால் பிரிவினைவாதம் என்ற கருத்து இனவெறியர்களால் விதைக்கப்பட்டது. 

1972 ல் வெளிவந்த ஈழத்து திரைப்படமான “குத்து விளக்கு” திரைப்படத்தில் கலைஞர் குலசீலநாதனின் பாடர் வரிகள். 

 ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch/?v=303384457398053

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சொறீலங்கா சிங்களவர்களுக்கே.. என்ற.. சிங்கள பெளத்த பேரினவாத சித்தாந்தவாதிகள்... சிங்களவர்களை மட்டும் குழப்பவில்லை.. அண்டையில் ஜெயலலிதா அம்மையாரும்.. தனது பங்கிற்கு.. தமிழருக்கு எதிரான விசத்தை கக்க.. ஈழத்தமிழரல்ல.. இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கனும் என்று சொல்லிட்டு.. மேல போய் சேர்ந்திட்டார்.

இதில்.. சிங்களப் பேரினவாதிகளும்.. திராவிட தமிழின விரோதிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் ஒரு கட்டத்தில் இருந்துள்ளனர்.

இலங்கை என்பதே.. ஈழநாடு தான். அது புவியியல் ரீதியிலும் தமிழ்நாட்டோடு ஒட்டிய தேசம் தான். அது ஒருபோதும் தூய.. சிங்கள பெளத்த தேசமாக இருக்க முடியாது. 

Edited by nedukkalapoovan

5 hours ago, nedukkalapoovan said:

இதில் சொறீலங்கா சிங்களவர்களுக்கே.. என்ற.. சிங்கள பெளத்த பேரினவாத சித்தாந்தவாதிகள்... சிங்களவர்களை மட்டும் குழப்பவில்லை.. அண்டையில் ஜெயலலிதா அம்மையாரும்.. தனது பங்கிற்கு.. தமிழருக்கு எதிரான விசத்தை கக்க.. ஈழத்தமிழரல்ல.. இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கனும் என்று சொல்லிட்டு.. மேல போய் சேர்ந்திட்டார்.

இதில்.. சிங்களப் பேரினவாதிகளும்.. திராவிட தமிழின விரோதிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் ஒரு கட்டத்தில் இருந்துள்ளனர்.

இலங்கை என்பதே.. ஈழநாடு தான். அது புவியியல் ரீதியிலும் தமிழ்நாட்டோடு ஒட்டிய தேசம் தான். அது ஒருபோதும் தூய.. சிங்கள பெளத்த தேசமாக இருக்க முடியாது. 

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

ஒரு மீன் தொட்டியில் இரண்டு கப்பீசையும் நான்கு கோல்ட்பிஸ்ஸையும் விட்டு.. கப்பீச் பெருகித்தள்ளி.. 2 ஆனது 8 ஆனதற்காக.. அந்தத் தொட்டி கப்பீஸூக்கே சொந்தமானது என்று எப்படிச் சொல்ல முடியாதோ.. அதேதான்.. ஈழம் என்பது புவியியல் ரீதியில்.. தமிழகத்தின் ஒரு பகுதி என்பது அந்த மீன் தொட்டிக்கு ஒப்பானது. கப்பீஸ் போன்றது சிங்களச் சனத்தொகை என்பது. கோல்பிஸ் என்பது தமிழர்களின் குடித்தொகைக்கு ஒப்பதாகும்.

தூய தேசங்கள் இருக்க முடியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும்.. தேசிய இனங்களுக்கான தேசங்கள் இருக்க முடியும். அதேபோல்.. தமிழர்களுக்கான பூர்வீக தேசம் தமிழர்களுக்கே தான் சொந்தம். அவர்கள் அதனை சிங்களவர்களிடம் தட்டிப்பறிக்கவில்லையே. இலங்கைத் தீவில் சிங்களவர்களுக்கு என்று ஒரு தேசம் இருப்பதை தமிழர்கள் நிராகரிக்கவில்லையே. சிங்களவர்களைப் போல் தமிழர்களுக்கும் ஒரு தேசம் உண்டு என்பது தான் நிலைப்பாடு. மேற்குலக ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்படு சிங்களவர்களிடம் இனாமாக கையளிக்கப்பட்ட தமிழர் தேசத்தை.. அதை அடைவதற்கு தான் இத்தனை முயற்சிகளும்.

43 minutes ago, nedukkalapoovan said:

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நெடுக்கர், ஜதார்ததத்தில் சிங்களவர்களே 80 வீதத்திற்கு மேல் வாழ்கின்றனர். இருந்தாலும் தூய சிங்கள நாடாகவும் இருக்க முடியாது. தூய தமிழ் நாடாகவும் இருக்க முடியாது. இந்த தூய  என்பதே உலகில்  சாத்தியமற்ற ஒரு விடயம். 

தூய என்பது சாத்தியமற்ற விடயம் என்பது எல்லோருக்குமே, ஏற்கனவே தெரிந்ததுதான். இதில் புதிதாக சொல்வதற்கு ஏதுமில்லை.

ஆனால் சொல்லப்படும் விடயங்களைக் கணக்கில் கொள்ளாது ஏன் புறக்கணிக்கத்தக்க விடயங்களை தூக்கிப் பிடிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. 

🤥

1 hour ago, tulpen said:

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

உண்மை 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்பது தமிழர்கள் வாழும் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியது தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் என்று சொல்கிறார்கள்.
கலைஞர் குலசீலநாதனின் பாடல் வரிகளில் சைவமும் என்று வருகிறது குமாரசாமி மகிழ்ச்சி அடைவார்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

மகிந்த தேசப்பிரியவின்  கருத்து சரியானதே. ஈழம் என்ற சொல் வரலாற்று ரீதியில்  முழு இலங்கை தீவையும் குறிப்பதாகவே இருந்தது.  

1976 ல் தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானம் உருவான பின்னர்  சிங்கள மக்களிடம் ஈழம் என்றால் பிரிவினைவாதம் என்ற கருத்து இனவெறியர்களால் விதைக்கப்பட்டது. 

1972 ல் வெளிவந்த ஈழத்து திரைப்படமான “குத்து விளக்கு” திரைப்படத்தில் கலைஞர் குலசீலநாதனின் பாடர் வரிகள். 

 ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா
 
ஈழத்துணவும் காளகத்தாக்கமும் - பட்டினப்பாலை, ஈழமணித்திருநாடெங்கள் நாடே இனியவுணர்ச்சி பெற்றால் இன்ப வீடே -புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, இஞ்வேலியின் மஞசளில் வீழ்ந்திடும் ஈழமண்டல நாடெங்கள் நாடே-சின்னத்தம்பிப் புலவர்.  இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, karu said:

இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

Tulpen குலசீலநாதனின் பாடலை இங்கே போட்டபடியால் தான் இப்படி பாடல்  இருப்பது எனக்கு தெரிய வந்தது. நீங்களும் மற்ற பாடல்களை போட்டால் நாங்கள் படித்து மகிழுவோமே

23 hours ago, karu said:

ஈழத்துணவும் காளகத்தாக்கமும் - பட்டினப்பாலை, ஈழமணித்திருநாடெங்கள் நாடே இனியவுணர்ச்சி பெற்றால் இன்ப வீடே -புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, இஞ்வேலியின் மஞசளில் வீழ்ந்திடும் ஈழமண்டல நாடெங்கள் நாடே-சின்னத்தம்பிப் புலவர்.  இப்படி எண்ணற்ற புலவர்கள்  ஈழம் என்னும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்க ஒரு கவிஞரியற்றிய ஈழம் பற்றிய பாடலை மட்டும் குறிப்பிடுவது நியாயமா?

ஈழம் என்ற சொற்றொடர் நீண்டகாலமாக வரலாற்றில்  இருக்கிறது. பல புலவர்களின் பாடல்களில் இருக்கலாம். என்றாலும்  வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு  சில வருடங்களுக்கு  முன்பு இயற்றப்பட்ட பாடலில் கூட ஈழம் என்பது முழு இலங்கை தீவையும் அழைக்க பயன்படுத்தப்பட்டும் அதன் பின்னர்  மிக விரைவாக இனவெறி கருத்துக்கள் அந்த சொல்லையே பிரிவினைவாதமாக விளங்கிக்கொள்ளும்படி சிங்கள மக்களை மாற்றி உள்ளது. இனவெறி என்பது அவ்வளவு கொடூரமானது என்பதை சுட்டிக்காட்டவே அந்த பாடலைக் குறிப்பிட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம்  என்பது... தமிழருக்கு சொந்தமானது.
அதில்... சிங்களவன், கொண்டாட எந்த உரிமையும் இல்லை.

மகா வம்சத்திலேயே.... விஜயன், ஈழத்திற்கு... 
வெள்ளரச மரத்துடன், வந்துள்ளான் என தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
அதற்கிடையில்... ஏன், இந்த பித்தலாட்டம் என்பது விளங்கவேயில்லை.

தமிழர்... இளகிய, மனது படைத்தவர்கள் என்பதால்...
கங்கையிலிருந்து... கடாரம் வரை, ஆண்ட தமிழன்..
இன்று... கேவலமாக, இருக்கின்றான்.

ஒரு, ஆறுதலுக்காக... பாஞ்ச்  அண்ணை இணைத்த பாடலையும்,
⬇️ கீழே... உள்ள இணைப்பில் , கேட்டுப்  பாருங்கள்.  ⬇️ :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 18:57, tulpen said:

உங்களது கோல்ட்பிஷ், கப்பீச் உதாரணத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஏற்றுகொள்கிறேன். என்ன செய்வது இந்த தலைமுறை தனது முட்டாள்தனத்தால் அதைக் கோட்டை விட்டுவிட்டது. எதிர்கால சந்த‍தியாவது தனது சுய சிந்தனையுடன் போராடி அதை அடையட்டும். 

தமிழர்கள் என்ற தேசிய இனத்திற்கு நாடுகள் உள்ளன.  

இந்தியாவில் அது கிந்தியர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது.

இலங்கையில் அது சிங்களவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது.

அன்று மேலை நாட்டவரின் அடிமைத் தளைக்குள் சிக்கியிருந்த தமிழர்களின் நாடுகள் விடுபட்டு, இன்று தமிழர் தங்கள் சொந்த மண்ணிலேயே, சனநாயகம் என்ற போர்வையால் தங்களை மூடியுள்ள வேற்று இனங்களின் அதிகாரங்களுக்குள் சிக்கியுள்ளமைதான் உண்மை. இந்த நிலையும் கடந்து போகும். 

ஆளப்போறான் தமிழன் கவியின் பாட்டுத் தீர்க்க தரிசனமானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2020 at 23:58, விளங்க நினைப்பவன் said:

ஈழம் என்பது தமிழர்கள் வாழும் பகுதிகள் என்ற தோற்றத்தை உருவாக்கியது தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் என்று சொல்கிறார்கள்.
கலைஞர் குலசீலநாதனின் பாடல் வரிகளில் சைவமும் என்று வருகிறது குமாரசாமி மகிழ்ச்சி அடைவார்

அட ஏன் சார் நீங்க வேறை..?

1983 கொழும்பு கலவரம் வரை "ஈழம்"னு ஒரு வார்த்தை இருக்குறதே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு தெரியாது.

இலங்கையில், இயக்கங்களின் பெயர்களின் நீட்சியில் ஒட்டியிருந்த "ஈழம்" என்ற சொல்லுக்கு அப்போதைய காலங்களில், இலங்கையின் வரைபடத்தில் இயக்கங்கள் கோரும் தமிழீழ எல்லைகளை கோட்டிட்டு விளக்கமாக காட்டியிருந்தார்கள். அதில் பொத்துவில் முதல் புத்தளம், சிலாபம் வரை அடங்கிருந்தன. அதுவே பின்னர் நிலையாயிற்று.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

1983 கொழும்பு கலவரம் வரை "ஈழம்"னு ஒரு வார்த்தை இருக்குறதே இங்கே இருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு தெரியாது.

இலங்கையில், இயக்கங்களின் பெயர்களின் நீட்சியில் ஒட்டியிருந்த "ஈழம்" என்ற சொல்லுக்கு அப்போதைய காலங்களில், இலங்கையின் வரைபடத்தில் இயக்கங்கள் கோரும் தமிழீழ எல்லைகளை கோட்டிட்டு விளக்கமாக காட்டியிருந்தார்கள். அதில் பொத்துவில் முதல் புத்தளம், சிலாபம் வரை அடங்கிருந்தன. அதுவே பின்னர் நிலையாயிற்று

நீங்கள் சொன்னது சரியே. இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். புலிகள் தமிழர்கள் பகுதிகளை தமிழீழம் என்றே சொன்னார்கள். eprlf- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி epdp, ஈரோஸ் என்று இயக்கங்கள் பெயரை குழப்பியடித்து தமிழ்நாட்டு பத்திரிக்கைகளுக்கு தவறாக தகவல் தெரிவித்து இப்போது இலங்கையர் ஒருவரையே ஈழம் என்பது தமிழருக்கு சொந்தமானது என்று சொல்ல வைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 13:57, தமிழ் சிறி said:

ஈழம்  என்பது... தமிழருக்கு சொந்தமானது.
அதில்... சிங்களவன், கொண்டாட எந்த உரிமையும் இல்லை.

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம்.

ஈழம் என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் ஹெல என்பார்கள். சிங்கபாகுவின் மகனான சிங்க வம்சத்தை சேர்ந்த விஜயனுடன் வந்த மக்கள் பேசிய மொழி, ஈழ மக்கள் பேசிய மொழியுடன் கலந்து சிங்க ஹெல = சிங்கள மொழி உருவானது. 

இலங்கை என்ற சொல்லை, பாளி, சமஸ்கிரதம், சிங்களம், ஹெல பாஷை (ஈழ மொழி) ஆகியவற்றில் லங்கா என்பார்கள். ஶ்ரீமாவோ அதனை ஶ்ரீலங்கா ஆக்கிவிட்டார்.

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.