Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

  • November 19, 202012:13 pm

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை(18) இரவு பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது அம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்சியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த யுத்த சூழ்நிலையில் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த வன்செயல்கள் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை,  வளத்தாப்பிட்ட, சொறிக்கல்முனை அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் பாடசாலை வளவினுள்ளும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மர்மக் குழுவினரால் 400க்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

அத்துடன் இவ்வஞ்சலி செலுத்திய நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸார் பிரசன்னமாகி பாதுகாப்பினை வழங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது.

sis-229-300x169.jpg

sis-230-300x169.jpg

sis-231-300x169.jpg

??????

sis-222-300x169.jpg

IMG-2-300x169.jpg

IMG-5-300x169.jpg

IMG-1-300x168.jpg
 
https://www.meenagam.com/வீரமுனை-படுகொலை-நினைவிடத/

  • Replies 165
  • Views 18.4k
  • Created
  • Last Reply

இதன் முக்கிய சூத்திரதாரிகள் இஸ்லாமிய ஜிஹாத் படை பயங்கரவாதிகள். கிழக்கு மாகாண படு கொலைகளுக்கு முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் (?) ஜிஹாத் பயங்கரவாதிகளுமே தலைமையேற்று நடத்தினர். இதட்கு பலரும் உதவியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

இதன் முக்கிய சூத்திரதாரிகள் இஸ்லாமிய ஜிஹாத் படை பயங்கரவாதிகள். கிழக்கு மாகாண படு கொலைகளுக்கு முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் (?) ஜிஹாத் பயங்கரவாதிகளுமே தலைமையேற்று நடத்தினர். இதட்கு பலரும் உதவியிருக்கலாம்.

உண்மை. ஆனால் இன்றுவரை நாம் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று 30 வருடங்களுக்கும் மேலாக அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே? புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே? அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத்தானே கொல்லப்பட்டார்கள், அப்படியானால் அதுகூட இனச்சுத்திகரிப்புத்தானே?

8 hours ago, கிருபன் said:

அம்பாறை மாவட்டம் வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் புதன்கிழமை(18) இரவு பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கருணாவின் இச்செயல் சொல்லும் செய்தியென்ன? இம்மக்களைக் கொன்றது யாரென்று கருணாவுக்கு நன்கே தெரியும். கிழக்கின் தளபதியாக கருணா இருந்தபோதே இது நடந்தது. நிச்சயம் சிங்கள ராணுவத்தின் ஆதரவில்லாமல் முஸ்லீம்கள் இதனைச் செய்திருக்கமுடியாது. ஆனால், இன்று கருணா இருப்பதோ அதே சிங்கள ராணுவத்தின் ஆதரவில். சில உணர்வுகள் மனதில் இருந்து அழிக்கப்பட முடியாதவை. கருணா ஒரு காலத்தில் உண்மையாகவே தமிழரின் விடிவிற்காய்ப் போராடியிருந்தால், இன்று ஒரு துளியாவது தமிழர் பட்ட அவலங்கள் அவர் கண்ணில் தெரியும், கூடவே தனது தூரோகமும் அவரை உருத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

கருணாவின் இச்செயல் சொல்லும் செய்தியென்ன?

கருணா அம்மான் அடிப்படையில் மக்களுக்காகப் போராட புலிகளில் இணைந்து தளபதியாக பல வருடங்கள் இருந்தவர். தனது உயிரைக் காப்பாற்ற ராஜபக்‌ஷவினருடன் இப்போது இருந்தாலும், தமிழர்களின் அரசியல் நியாயங்கள், அழிவுகள், அவலங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம். 

இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ?

படுகொலை செய்யப்பட்டவர்களை ஆராதிப்பதற்கு நாங்கள் என்றுமே தடையாக இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை, நாங்கள் கொலை செய்த பயங்கரவாதிகளை ஆராதிப்பதையே  தடைசெய்கிறோம் என்று சிங்கள அரசு உலகை ஏமாற்றுவதற்கு அம்மான் ஒரு கூலிச் சாட்சி அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர் என்று 30 வருடங்களுக்கும் மேலாக அல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம்? அங்கிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அங்கு குடியேறியபின்னரும் புலிகள் மீதான வசைகள் நிறுத்தப்படவில்லையே? புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள் என்று ஓலமிடும் கனவான்கள் வீரமுனை, கல்முனை, வந்தாறுமூலை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான், கொக்கட்டிச்சோலை போன்ற முஸ்லீம் ஊர்காவல்ப் படையும் சிங்கள ராணுவமும் சேர்ந்து நடத்திய தமிழ்ப் படுகொலைகள் பற்றிப் பேசுவதில்லையே? அவர்கள் தமிழர்கள் என்பதற்காகத்தானே கொல்லப்பட்டார்கள்,

யாழ்ப்பாணத்திலிருந்தும் புலிகள் முசுலீம்களை வெளியேற்றாமல் கொன்றிருந்தால் அன்றுடன் அந்தக் கதை முடிந்திருக்கும்போல் தெரிகிறது. 30 வருடங்களுக்கும் மேலாகவும் பேசிக்கொண்டிருக்க வேண்டி வந்திருக்காதோ. அவர்கள் உயிருடன் இருப்பது எங்களின் இன்றைய சில அரசியல்வாதிகளுக்கும், அந்த முசுலீீம் இனத்திற்கும் பெரும் கவலையாக இருக்கிறதே....???

  • கருத்துக்கள உறவுகள்

அங்காலை மாவீரர் தினத்துக்கு கொரோனாவை சாட்டி தடை ஆனால் தங்களுக்கு வால்பிடிக்கிற கருணா செய்ய தடையில்லை. குறிப்பு அந்த படுகொலைகளைநினைவு கூர்வது அத்தியாவசியமானது ஆனால் அப்பிடியே வெளிப்படையாக செய்கிறார்கள் மெத்தப்படிச்ச யாரும் கேள்வி கேட்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ?

மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.

இந்த  கருத்தையெல்லாம் சீரழியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

கிருபன் ஐயாவுக்கே சிரிப்பு  வந்திடும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இவ்வளவு காலமும் இல்லாத அக்கறை இப்போ எழுவதன் நோக்கம் என்னவோ?

கருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்?

அவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம். 

கருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா?

35 minutes ago, விசுகு said:

மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம்.

இந்த  கருத்தையெல்லாம் சீரழியசாக எடுத்துக்கொள்ளாதீர்கள்

கிருபன் ஐயாவுக்கே சிரிப்பு  வந்திடும்

கருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்?

ஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்?

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்?

அவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம். 

கருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா?

கருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்?

ஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்?

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

இது ஒரு கொள்கையில்  நிற்பதற்கும்

நடுமதில் மீது நிற்பதற்குமான வேறுபாடு??

ரொம்ப ரொம்ப  கடினம்  ஐயா உங்கள்  போன்றோருக்கு புரிய  வைப்பது??

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை செய்யப் பட்டதமிழர்களுக்குத் தானே அஞ்சலி செலுத்தினார்? நல்ல விடயம் தானே நண்பர்களே? 

ஈழத்தில் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சில விடயங்களிலாவது ஒத்து வருகிறார்களே என்று திருப்தி கொள்ளாமல் ஏன் இந்த நொட்டை நொடிசல் வாதங்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படுகொலை.. முஸ்லிம் அடிப்படைவாத மதக் கும்பல்களாலும்.. ஊர்காவல் படையாலும்.. சிங்கள அதிரடிப்படையாலும் கூட்டிணைந்து நிகழ்த்தப்பட்ட படுகொலை.

இதில்.. இந்த ஓநாயார் எதற்கு கண்ணீர் வடிக்கிறார்..?!  ஓ முஸ்லீம்களின் பங்களிப்பு இதில் அதிகம் என்பதால் போலும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா?

புலிகளின் போர்த் தந்திர யுக்திகளை எல்லாம் சிங்கள இராணுவத்துக்குத் தெரிவித்துப் புலிகளை அழிக்க உதவிய நன்றிக் கடனுக்காக சிங்களம் அம்மானுக்குப் பொன்னும், பெண்ணும், பதவியும் கொடுத்துச் சிறப்புச் செய்தது எல்லாம் வெளிப்படையாகவே செய்திகளாகவும், படங்களாகவும் மீடியாக்களில் வெளிவந்தவைகள் யாவையும் கிருபனுக்குத் தெரியாமல் போயிருக்கும் என்று நான் நம்பவில்லை.   

உண்மையில் கருணா காட்டிக்கொடுக்காது இருந்திருந்தால் இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என இங்கு தப்பிவந்த போராளிகள் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

படுகொலை செய்யப் பட்டதமிழர்களுக்குத் தானே அஞ்சலி செலுத்தினார்? நல்ல விடயம் தானே நண்பர்களே? 

ஈழத்தில் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சில விடயங்களிலாவது ஒத்து வருகிறார்களே என்று திருப்தி கொள்ளாமல் ஏன் இந்த நொட்டை நொடிசல் வாதங்களோ தெரியவில்லை!

அது நச்சுப் பாம்பு என்று தெரிந்த பின் புற்றுக்குள் ஏன் வருகிறது என்ற ரீதியில்????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

உண்மையில் கருணா காட்டிக்கொடுக்காது இருந்திருந்தால் இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என இங்கு தப்பிவந்த போராளிகள் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன். 

ஐயா, இந்த யாழ் களத்தில் பலர் பலதடவை எழுதியதை படித்திருந்தால் இறுதி நாட்களில் இராணுவம் பேரழிவைச் சந்தித்திருக்கும் என்று சொல்லமாட்டீர்கள்.

வியூகம் இறுக்கமாக வகுக்கப்பட்டு, வழங்கல் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்த காலத்தில் தொடங்கிய சண்டை எப்படி முடியும் என்று புலிகளின் இராணுவ வல்லுனர்களுக்குத் தெரிந்திருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத்தான் புரிந்திருக்கவில்லை.

கருணா அம்மான் 2004 இல் ஏற்படுத்திய பிளவு, தனி மனித பிரச்சினை என்று சொல்லிவிட்டு, இறுதி யுத்தத்தில் அழிவைச் சந்தித்ததற்கு அவரைக் காரணம் சொல்லுவது முரணாக இல்லையா?

4 hours ago, விசுகு said:

நடுமதில் மீது நிற்பதற்குமான வேறுபாடு??

நடுநிலைமை என்று ஒன்று கிடையாது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

அவர், தன்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் ...இங்குள்ளவர்களுக்கு ஏன் புகையுது 😉
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் அடிப்படையில் மக்களுக்காகப் போராட புலிகளில் இணைந்து தளபதியாக பல வருடங்கள் இருந்தவர். தனது உயிரைக் காப்பாற்ற ராஜபக்‌ஷவினருடன் இப்போது இருந்தாலும், தமிழர்களின் அரசியல் நியாயங்கள், அழிவுகள், அவலங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார் என்றில்லை. வீரமுனைப் படுகொலையை நினைவுகூர்வது அவரது அரசியல் தேவைக்காகவும் இருக்கலாம் அல்லது உண்மையான மக்கள் மீதான அக்கறையாகவும் இருக்கலாம். 

இதை சிறப்பாகக் கூறுவதென்றால் பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுதல் என்று கூறலாமா ? 

😂😂😂😂

உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்கள்... 🤥

6 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் மக்கள் மீது அக்கறை இல்லாமலா ஒரு போராளியாகி, தளபதியாகி புலிகளில் முக்கிய இடத்தில் இருந்தவர்?

அவர் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியதற்கும் தேவையில்லாமல் போராளிகளைப் பலிகொடுக்கவேண்டாம் என்பதுதானே காரணம். 

கருணா அம்மான் விலகியிருக்காவிட்டால் முள்ளிவாய்காக்கால் அவலம் நடக்காமல் விட்டிருக்குமா?

கருணா அம்மான் இப்போது சுயநலவாதியாக இருக்கலாம். ஆனால் அவரை அப்படி மாற்றியது யார்?

ஒளித்து இலண்டன் வந்தபோதும் திரும்பப் போகக் செய்தது யார்?

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

இதை இன்னும் சிறப்பாகக் கூறுவதென்றால் .... மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுதல் ...என்று கூறலாம் இல்லையா.

😀

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரதி said:

அவர், தன்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார் ...இங்குள்ளவர்களுக்கு ஏன் புகையுது 😉
 
அஞ்சலி செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியே.... ஆனால் அதனைச் செய்வது முரளீதரனல்லவா ? 

அதுதான் சிறிய நெருடல்....🤥

ஏனென்றால் தனது சொந்த நலனுக்காக தனது சொந்த மக்களையே காட்டிக் கொடுத்தவரல்லோ....

அஞ்சலி உண்மையாக இருக்குமா என்கின்ற ஐயம்தான்...

🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இதை சிறப்பாகக் கூறுவதென்றால் பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுதல் என்று கூறலாமா ? 

கருணா அம்மான், கேபி போன்றவர்கள் தங்களைக் காப்பாற்ற ராஜபக்‌ஷக்களுடன்  சேர்ந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் மக்கள் மீது துளியும் இரக்கம் இல்லாத கொடூரர்கள் என்று சித்தரிப்பதும், ஒரு படுகொலையை நினைவுகூர கருணா அம்மானுக்கு அருகதை இல்லை என்று சொல்வதும் வெறும் உணர்ச்சி அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

கருணா அம்மான், கேபி போன்றவர்கள் தங்களைக் காப்பாற்ற ராஜபக்‌ஷக்களுடன்  சேர்ந்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால்

1) அவர்கள் மக்கள் மீது துளியும் இரக்கம் இல்லாத கொடூரர்கள் என்று சித்தரிப்பதும்,

2) ஒரு படுகொலையை நினைவுகூர கருணா அம்மானுக்கு அருகதை இல்லை

என்று சொல்வதும் வெறும் உணர்ச்சி அரசியல்.

1) அப்படி ஒருவரும் கருதியதாகத் தெரியவில்லை

2) தாராளமாக நினைவு கூரலாம். படுகொலையை நிகழ்த்திய இராணுவமே அதற்கு அனுசரணை எனும்போது யாம் எப்படி குறைகூறலாம் ?

அவரின் கடந்த கால செயற்பாடுகளை நினைவில் நிறுத்தி அவருடைய செயற்பாடு உண்மையாக இருக்குமா என்பதில் ஐயம் கொள்வது இயல்பானதுதானே ?

🤥

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்குத்தான் அதிகூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்கள் இணையத்தில் கத்திட்டு படுக்கவேண்டியதுதான்.. அங்கு நிலமை மாறிக்கொண்டு வருது.. தமிழ்நாட்டு தேர்தல் அரசியல்தான் இனி அங்கும்.. நாங்கள் வெளிநாட்டுக்கு வந்த காலங்களில் காவிவந்த நினைவுகளில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறோம்..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை தாயகத்தில் வசிக்கும் கள உறவுகளின் கருத்துக்களை இங்கு கானோம்.இந்த லட்ச்சத்தினில் ஊர்ப்புதினம் என்ற தலைப்பு வேறை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நடுநிலைமை என்று ஒன்று கிடையாது என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு!

சில காலமாக நீங்கள் அதிலிருந்து முற்றிலும் மாறிவிட்டதை யாழ் கள நண்பர்கள் சொல்லியே வருகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.